இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூன் 2006 இதழ் 78 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
கிடைக்கப்பெற்றோம்...!
உயிர்மெய் (பெண்கள் காலாண்டிதழ்)!

உயிர்மெய் (பெண்கள் காலாண்டிதழ்)
இதழ்-1 ; தை-பங்குனி 2006
தொகுப்பாசிரியர்கள்: பானுபாரதி, தமயந்தி
வருடச் சந்தா: 200 குரோணர்கள்; ஏனைய நாடுகள்: 20யூரோ.
வங்கிக் கணக்கிலக்கம்:
0539 4365272 Postbank
தொடர்புகளுக்கு:
UYIRMEI, P.Boks - 2114, 6028 Alesund, NORWAY
மின்னஞ்சல்:
editor.uyirmei@hotmail.com

'உயிர்மெய்' பெண்கள் காலாண்டிதழ்; நோர்வேயிலிருந்து தை-பங்குனி 2006 இதழாக வெளிவந்திருக்கிறது.பெண்கள் காலாண்டிதழாக 'உயிர்மெய்' சஞ்சிகை பானுமதி, தமயந்தி ஆகியோரைத் தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு நோர்வேயிலிருந்து வெளிவந்திருக்கிறது. சஞ்சிகையில் பெண்கள் விடுதலை, அவர்கள் பல்வேறு சமூக, அரசியல், பொருளாதாரச் சூழல்களில் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்களைப் பற்றிய கட்டுரைகள், கதைகள், கவிதைகள் காணப்படுகின்றன. கட்டுரைகள் நோர்வேயில் பெண்கள் இயக்க வரலாறு பற்றிய, மற்றும் இன்றைய நோர்வேயில் பெண்கள் மீது இடம்பெறும் வன்முறைகள் பற்றிய பானுபாரதியின் மொழிபெயர்ப்பு மற்றும் சுய கட்டுரைகள், உள்நாட்டு யுத்தம், வறுமை, சுனாமி போன்ற இயற்கை அழிவுகளால் இலங்கையின் கிழக்கு மாகாணத்துப் பெண்கள் படும் துயர் பற்றிய சமுத்திரனின் கட்டுரை, நோர்வேயில் ஆணாதிக்கத்திற்கெதிராகக் குரல் கொடுத்த பெண் கவி இங்கர் ஹாகருப் பற்றிய சியாமளாவின் கட்டுரை, சகியின் 'பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்களின் பலியெடுப்புக்கள்' கட்டுரை, மற்றும் ஆர்த்தியின் கொலைப்பட்டியலின் முதலிடத்தில்
Ayaan Hirshi Ali என்னும் நெதர்லாந்துப் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கும் சோமாலியப் பெண் பற்றிய கட்டுரையெனக் காணப்படும் கட்டுரைகள் பல்வேறு நாடுகளில் வாழும் பெண்களின் நிலைகளை விளக்கும் வகையில் அமைந்துள்ளது சிறப்பான விடயம் (மேற்படி சோமாலியப் பெண்ணான Ayaan Hrshi Aliயின் குடியுரிமையினை அந்நாட்டுக் குடிவரவு, குடியகழ்வு அமைச்சரான இன்னுமொரு பெண்மணி அண்மையில் அகதி விண்ணப்பத்தில் தவறான தகவல்களைத் தந்ததன் காரணமாகப் பறித்ததானது காலத்தின் கோலம்).

இதுதவிர சஞ்சிகையில் காணப்படும் சிறுகதைகளைச் சாரங்கா தயாநந்தன் ('சிறகு'), கவிதா ('துன்பம் நேர்கையில்..') ஆகியோர் எழுதியிருக்கின்றனர். கவிதாவின் சிறுகதை புலம்பெயர்ந்த சூழலில் ஒரு தம்பதியினரின் வாழ்வைப் பற்றியும், கருக்கலைப்புப் பற்றியும் கூறினால் சாரங்காவின் 'சிறகு' சிறகு வெட்டப்பட்ட பறவையாக வளைய வரும் ஒரு பிராமணப் பெண்ணைப் பற்றி வீட்டு வளர்ப்புக்காக வாங்கப்பட்ட புறாவினூடு ஆராய்கிறது. கவிதைகளில் இரண்டினை நோர்வேப் பெண்கவியான இங்கர் ஹாகருபின் கவிதைகளிரண்டினை தமிழில் சியாமளா வழங்கியிருக்கின்றார். இதுதவிர திலகபாமாவின் 'தாலி கட்டாத தாமரை', சாரங்கா தயாநந்த்தனின் 'சிறு சோடிப் பாதங்களுக்கு ஒரு சலங்கை' ஆகிய கவிதைகள் வெளியாகியுள்ளன. எல்லாப் பருவத்துக் குளத்து நீருடனும் உறவாடி, சம்போகித்துப் புதிய வேர்களையும், மொட்டுக்களையும் பிரசவிக்கும் தாலி கட்டிக் கொள்ளாத தாமரைகளின் புத்துயிர்ப்புப் பற்றித் திலகபாமாவின் கவிதை பேசுகிறது. சஞ்சிகையின் இறுதிப் பக்கத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் பற்றிய ஆதாரபூர்வமான குறிப்புகள் சிலவற்றை ஆர்த்தி தொகுத்துத் தந்துள்ளார். அவற்றில் சில: சுமார் 20 இலட்சம் பெண்கள் பால் உறுப்புகள் சிதைவுக்கு வருடாவருடம் ஆளாகின்றார்கள்; ஏழு இலட்சம் பெண்கள் உள்ளூர்ப் பால்வினைத் தொழிற் சந்தையில் விற்கப்படுகின்றார்கள்; நோர்வேயில் மட்டும்
8000-9000 வரையில் பெண்கள் வருடாவருடம் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகின்றார்கள்; 40 இலட்சம் பெண்கள் பால்வினைத் தொழிலுக்காகவோ அல்லது திருமணத்துக்காகவோ விற்கப்படுகின்றார்கள்; வருடத்தில் 5000 பெண்கள் சொந்தக் குடும்பத்தினரால் புனிதக் கொலை செய்யப்படுகின்றார்கள்; உலகம் முழுவதும் மூன்றிலொரு பகுதி பெண்கள் வன்முறைக்கு ஆளாகின்றார்கள்.

இதுதவிர அண்மையில் மறைந்த புஷ்பராஜனின் 'விடைபெறக் காத்திருக்கின்றேன்' என்னும் ஆனந்தவிகடன் கட்டுரையும், 'பழி சுமந்த மண்' என்னும் கவிதையும் மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளன. குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டாமல் பெண்கள் பிரச்சினைகள் பற்றிய கட்டுரைகள் எல்லைகளைக் கடந்து ஆராயப்பட்டுள்ளமையானது சஞ்சிகையின் முக்கியமான சிறப்பியல்பெனலாம். இப்பொழுதுதானே வெளிவந்திருக்கின்Raது. வரும் இதழ்கள் மேலும் காத்திரமானதாக அமையுமென எதிர்பார்ப்போம். ஆயினும் 'உயிர்மெய்'யின் உயிர்ப்பு மெய்மையுடன் பெண்கள் பெண்கள் பற்றிய விடயங்களை முன்வைக்கிறதென்பதில் எந்தவிதச் சந்தேகமுமில்லை. வாழ்த்துகிறோம்.

- ஊர்க்குருவி -

 

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner