இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரல் 2008 இதழ் 100  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!

சுஜாதா என்னும் சுடரொளி!

- சக்தி சக்திதாசன் -

சுஜாதாஇன்று பெப்பிரவரி மாதம் 29ம் திகதி. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை தான் காலண்டர்களில் தனது முகத்திரையைக் காட்டி சிரிக்கும் இந்தத் திகதி. 2008ம் ஆண்டு இந்தத்தினத்தில் யுகங்களுக்கு ஒருமுறை தம்மை இனங் காட்டும் மாபெரும் எழுத்தாளனின் மறைவைக் குறித்து என் விரல்கள் எழுதப் போகின்றன என்று என்றுமே எண்ணிப் பார்த்தவனில்லை. இன்று காலை எழுந்ததுமே ம்னதில் இரு கனம்,  நெஞ்சில் ஏக்கம். என் இதயத்தின் ஒரு கோணத்தில் எதையோ பறிகொடுத்து விட்டேன், எதோ எனக்கு இல்லாதது போல ஒரு உணர்வு. நிச்சயமாக தமிழ் வாசகர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் சினிமா இலாகாவினர், தமிழ் இலக்கிய அறிஞர்கள், ஆர்வலர்கள் அனைவரின் மனதிலும் பெரும்பான்மையாக இதே போன்ற ஒரு உணர்வு தான் மேலோங்கி நிற்கும் என்பதில் ஒரு எள்ளளவும் சந்தேகமேயில்லை. மாண்புமிகு அமரர் சுஜாதா இல்லாத தமிழ் எழுத்துலகமா ? எண்ணிப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. ஏதோ வெறுமையான உணர்வு உள்ளத்தை ஊசலாட்டுகின்றது.

எனது நெஞ்சில் இன்றுகூட பசுமையாக ஒரு எண்ணம் நினைவில் இருக்கிறது. அப்போது நான் ஈழத்தில் 8வதோ, 9வதோ படித்துக்
கொண்டிருந்தேன். வகுப்பில் தமிழ் இலக்கியத்தைப் பற்றி ஓர் சர்ச்சை எழுந்தது ஆசிரியரின் கேள்வி ஒன்ருக்கு பதிலளிக்கையில் ஒரு
மாணவன், "சுஜாதா" என்னும் ஆசிரியையின் கதைகள் எனக்குப் பிடிக்கும் என்றான். சிரித்து விட்டார் ஆசிரியர். அப்போதுதான்
வகுப்பிலிருந்த பலருக்கும் புரிந்தது அவர் ஒரு ஆண் எழுத்தாளர் என்று.

இத எதற்கு சொல்ல வந்தேன் என்றால், அவரைப்பற்றி அறிவதற்கு முன்னாலேயே அவரது எழுத்துக்களை ரசிக்கத் தொடங்கி அவரது
பெயர் வீட்டுக்கு வீடு உச்சரிக்கப்பட்டது அனைத்து தமிழ் நெஞ்சங்களிலேயும் என்பதைச் சுட்டிக்காட்டவே.

அவரது எழுத்தின் நடை தனியானது, அவரது கருத்துக்கள் கூர்மையானவை. தமிழ் புதுமைகளை உள்வாங்கி , விஞ்ஞானபூர்வமாக வளர்க்கப் பட வேண்டும் என்பதில் அவர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

" அம்பலம் " இணையத்தளத்தில் அவரது பதில்களை படித்தாலே அவரின் அபூர்வ சிந்தனை, ஆக்கபூர்வமான அறிவு புலப்படும்.
பதில்கள் மட்டுமல்ல அவரின் பலவிதமான கட்டுரைகள் அவரின் தமிழ் ஆளுகையையை, தமிழ் அறிவை எளிமையாகப் பரப்பிடும்
வித்தையை மிகவும் தில்லியமாக எடுத்துக்காட்டி நிற்கும்.

சிறுகதைகள் எழுதுவது என்பது சுலபமல்ல. இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகளை மக்கள் ஏற்றுக்கொள்லும் வகையில் எளிமையாக
அற்புதமான கருத்துக்களைக் கலந்து அளிப்பதில் ஈடு இணையற்றவராக விளங்கினார் சுஜாதா அவர்கள்.

எழுதவேண்டும் என்னும் எண்ணம் மேலோங்கி இருப்போரின் மனங்களின் அந்த எண்ணம் விதையாகப் புதைந்து தளிர்விடும் போது அதைப் பாராமரித்து நீருற்றி தமிழுலகிற்கு பயன்படும் வகையில் எழுத்தாளர்களாக பரிணமிக்க வைப்பதில் முன்னனி எழுத்தாளர்களுக்குப் பங்குண்டு என்பதைத் தீர்க்கமாக நம்புகிறவன் நான். அந்த வகையில் பல எழுத்தாளர்கள் எழுத்தாளர்களாக பரிணமிப்பதற்கு திரு. சுஜாதா என்னும் ரங்கராஜன் அவர்கள் முக்கியமானவராக இருந்திருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது.

முழுநேர எழுத்தாளராக இருப்பதை விட, முழுநேர ஊழியம் செய்து கொண்டு தமிழ் மீது, எழுத்து மீது கொண்ட காதலுக்காக எழுதுவது
என்பது மிகவும் கடினமான காரியம் என்பது மறுக்கமுடியாத உண்மை.

அப்படியான ஒரு சூழலில், விஞ்ஞானத்துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதோடு இலக்கியத்தில், தமிழில், எழுத்தில் உள்ள தனது காதலை வளர்த்து அந்தத்துரையிலும் இறுதிவரை முன்னனியில் இருந்தவர் என்பது ஒன்றே அவரது ஆற்றலை உலகெங்கும் பறைசாற்றுகின்றது.

தமிழிலக்கிய உலகில் ஒரு பேரிழப்பு ஏற்பட்டதும், உலகம் முழுவதும் வாழும் அனைத்துத் தமிழர்களின் மனதிலும் ஒரு தாக்கத்தை
ஏற்படுத்து நிகழ்வுகள் சொற்பமானவையே. அவற்றுள் இது மிகவும் முக்கியமானதாக உலகெங்கும் உணரப்படுகிறது.

அரசியல் பொருளாதார நாட்டு எல்லைகளுக்கு அப்பாற்பட்டு தமிழ் என்னும் சொந்ததினால் இணைக்கப்பட்ட அனைவரும் இந்தத்துரில் தம் விழிகளை நனைத்திருப்பார்கள் என்பது உண்மை.

இவரது கணனித் திறமை அலாதியானது. இதற்கு ஒரு சிறு இவரது உதாரணம் வலைப்பக்கத்திலேயே உள்ளது. அம்பலம் என்னும்
மின்னிதழில் சுஜாதா பக்கம் என்னும் இழையில் "ஓரிரு எண்ணங்கள்" என்னும் தலைப்பில் இவர் நடைமுறைச் செயற்பாடுகள் தன்
கருத்துக்கள் என்பவற்றை பகிர்ந்து கொள்வதுண்டு.

அதிலே ஒருமுறை அவர் தனது மின்னஞ்சல் முகவரியை யாரோ ஒருவன் குறுக்கிட்டு கடவுச் சொல்லை மாற்றிக் குளறுபடி செய்ததைப் பற்றிக் குறிப்பிட்டு, மேலும் அதைப்பற்றிக் கூறுகையில்,

"பிரபலமாக இருப்பதன் விபத்துக்களில் இதுவும் ஒன்று. இதன் ஆதாரனமான உந்து சக்தி பொறாமை, அழுக்காறு. மேலும் இணையத்தில் கிடைக்கும் பொறுப்பற்ற சுதந்திரம். இந்த முகமூடித் திருடர்களை ஒன்றுமே செய்ய முடியாது. செய்யும் காரியத்தின் அற்பத்தனத்தை அவர்களே உணர்ந்து கொண்டு அலுத்துப்போய் நிறுத்தினால் தான் உண்டு. அதுவரை இவர்களை பசித்த புலிகள் தின்னட்டும். " என்று மிகவும் தெளிவாக இணையத்தின் அழுக்கான கோணத்தையும் சுட்டிக் காட்டினார்.

மேலும் காணணி தனது கையெழுத்தை கிரகித்து அவருக்காகா அவரது பாணியிலே தயாரித்துக் கொடுத்த எழுத்துரு மூலம் ஒரு சிறு பத்தியை எழுதியிருந்தார். அதிலே, " மார்ஷல் மக்துஷேன் என்னும் அறிஞர் கூற்றுப்படி பழைய டெக்னாலஜியை புதிதாக வந்த
டெக்னாலஜி இடம்பெயர்க்கும், ஆனால் மீண்டும் அந்தப் புதிய டெக்னாலஜியின் மூலம் பழைய டெக்னாலஜி திரும்ப வரும்" என்பதற்கு உதாரணமாய் இந்தப் பத்தியை காட்டினார்.

அதாவது எழுபதுகளில் தான் கைப்பட தனது கையெழுத்தில் பிரதிகளை எழுதி விட்டு, பின்பு தட்டச்சு இயந்திரத்தின் மூலம் எழு அனுப்பி, அதன் பின்பு கணணி மூலம் பொதுவான எழுத்துருவில் எழுதி, மீண்டும் கணணி மூலம் தனது கையெழுத்து வடிவிலேயே எழுதக்கூடிய ஒரு கட்டத்தை அடைந்திருப்பதை தெட்டத்திளிவாக விளக்கி தமிழின் விஞ்ஞான வளர்ச்சியைப் புடம் போட்டுக் காட்டினார். ஆமாம் எழுத்துக்களில் மட்டுமல்ல கணணித் துறையிலும் அவர் தன்னிகரற்று விளங்கினார் என்பதுவே உண்மை. இந்திய முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம், தமிழக முன்னனிக் கவிஞர், பாடலசிரியர் திரு.வாலி, திரு.வைரமுத்து ஆகியோரின் நண்பார்கவுமிருந்தார்.

"ஸ்ரீரங்கத்து தேவதைகள்" என்பதில் ஆரம்பித்து சிறுகதைகள், நாவல்கள், சிமா கதைவசனம் என அனைத்துத்துறைகளிலும் தன்க்கென ஒரு தனிமுத்திரையைப் பதித்துக் கொண்ட தமிழ்விளக்கு அணைந்து விட்டதா ? இல்லை தமிழ் இலக்கிய உலகில் உள்ல அனைவரது உள்ளங்களிலும் சுடரொளியாய் ஒளி வீசிக் கொண்டிருக்கும் எனபதுவே உண்மை. அனாரின் ஆத்மசாந்திக்காவும், அவரது குடும்பம் மற்றும் ஊரவினர், நண்பர்கள் அனவரின் மன அமைதிக்காகவும் பிரார்த்திக்கிறேன். பாரதியாரின் பாடல் நினைவுக்கு வருகிறது

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி -
கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போல - நான்
வீழ்வே நென்று நினைத் தாயோ?

வாழ்க சுஜாதா புகழ்.

ssakthi@btinternet.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner