இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரல் 2008 இதழ் 100  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சமூகம்!
மக்கள் நடத்துவது போராட்டமா, கலவரமா?

- சந்தியா கிரிதர் (புது தில்லி) -


இந்திய நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களின் கோரிக்கைகள் நிறைவேறாததால், மக்கள் கூட்டமாக கூடி தங்கள் கோபத்தையும் ஆவேசத்தையும் காட்டும் வகையில் போராட்டங்களையும் மறியல்களையும் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் மதம், ஜாதியின் பெயரால் கலவரமாக மாறி அடிதடியிலும் சண்டையிலும் முடிவடைகிறது. இந்தியாவின் ஒவ்வோரு மாநிலத்திலும் இந்த போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன.

Ciurtesy: http://radicalhypocrite.wordpress.com/குவஹாத்தியில் (Guwahati) பழங்குடியினர்கள் கூட்டமாக கூடி அமைதியான முறையிலே போராட்டத்தை நிகழ்த்த வேண்டும் என்ற தருணத்தில் திடீரென்று இந்தக் கூட்டம் அடிதடியில் முடிந்தது. கூடியிருந்த மக்கள் கோபம் கொண்டு வெறித்தனமான செயல்களில் ஈடுபட்டனர். அமைதியான சூழ்நிலை கோபக்கணலில் சிக்கித் தவித்தது. அது போன்று ஜார்க்கண்ட் காட்டுப் பகுதியில் வாழும் மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும்படி கோரிக்கையை முன் வைத்தார்கள். இதற்காக போராட்டமும் நடத்தினார்கள். இந்தப் போராட்டம் பல அப்பாவி மக்களின் உயிர்களோடு விளையாடியது. கூட்டம் கூட்டமாக வந்திருந்த மக்களின் கைகளில் கத்தி, வாள், அரிவாள் போன்ற ஆயுதங்கள் தோன்றின. வெறித்தனமாக செயல்பட்டு பல உயிர்களை பழிவாங்கினர். கூட்டத்தில் தெரியாத்தனமாக சிக்கிய பத்து வயது சிறுவனை கொடு்ரமாக கொல்லப்பட்ட காட்சியை தனியார் தொலைக்காட்சியில் பார்த்து நாடே வேதனை அடைந்தது.

பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் உயிரை காப்பாற்றிக் கொள்ள இங்கு தஞ்சமடைந்துள்ளார். அவரை எதிர்த்து குவஹாத்தியில் போராட்டம் நடந்தது. பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் உயிரை காப்பாற்றிக் கொள்ள இங்கு தஞ்சமடைந்துள்ளார். அவரை எதிர்த்து குவஹாத்தியில் போராட்டம் நடந்தது. இதே நெருப்பு கொல்கத்தாவிலும் எரிந்தது. அதன் விளைவுதான் நந்தி கிராமத்தின் கொடூரமான சம்பவம். நந்தி கிராமத்திற்கு செல்லும் பாதைகள் ரத்தக் கறை படிந்த வண்ணம் காட்சி தருகின்றன. பொதுமக்கள் கொந்தளிப்பால் வாகனங்களை எhpத்து சாம்பலாக்கினர். பொது உடமைகளை சேதம் செய்தனர். இதனை தடுக்க காவல் துறை நந்தி கிராமத்தை குறிபார்த்து அப்பாவி மக்களின் வாழ்க்கையோடு விளையாடியது. இதற்கு அரசியல்வாதிகளும் துணை சென்றனர். இந்தக் கலவரத்தை வேறு திசை திருப்ப பழியை தஸ்லிமா நஸ்ரின் மீது சுமத்தினர். இந்தியா இப்படியொரு கேவலமான சம்பவத்தை காண நேர்ந்தது.

மதுரை: பிரபல பத்திரிகையில் வெளிவந்த செய்தியால் சென்னை அரசியல் குடும்பத்தில் குழப்பம் உருவாகி பொதுமக்கள் கூட்டம் அந்தப் பத்திரிகை அலுவலகத்தை சேதம் செய்தது மட்டுமில்லாமல் அங்கு பணிபுரியும் மூன்று ஊழியர்களின் உயிர்களோடு விளையாடியதுபிரபல பத்திரிகையில் வெளிவந்த செய்தியால் சென்னை அரசியல் குடும்பத்தில் குழப்பம் உருவாகி பொதுமக்கள் கூட்டம் அந்தப் பத்திரிகை அலுவலகத்தை சேதம் செய்தது மட்டுமில்லாமல் அங்கு பணிபுரியும் மூன்று ஊழியர்களின் உயிர்களோடு விளையாடியது. ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள குஜஜர் பிரிவினர்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளும்படி கோரிக்கையை முன்வைத்தனர்கள். மேலும் இதனை நிiவேற்றுவதற்கு தில்லி-ஜெய்பூர் செல்லும் பாதையை வழிமறித்து போராட்டம் செய்தார்கள். ஆனால் இந்தப் போராட்டமே சில நொடிகளில் அங்கு செல்லும் போக்குவரத்து வாகனங்களை கற்களால் சேதம் செய்து, தீ வைத்து கொளுத்தினர். அன்றhட சாமான்களை கொண்டு செல்லும் லாhpகளை வழிமறித்து சேதம் செய்தனர்கள். இதனால் பொதுமக்கள் ஒரு வாரம் அத்தியாவசியமான பொருட்கள் கிடைக்காமல் பட்ட கஷட்டம் கொஞ்ச நஞ்சமில்லை.

சின்ன சின்ன பிரச்சனைகளை இந்திய மக்கள் கட்டமாக கூடி அதனை பெரிது படுத்தி போராட்டத்திலும் கலவரத்திலும் மாற்றி அமைப்பதில் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுகின்றனர். இந்த மாதிரிச் சம்பவங்கள் இந்தியாவில் சர்வ சாதாரணமாகி விட்டன. உப்புச் சப்பில்லாத விஷயத்திற்கு பொதும்க்கள் போராட்டத்தில் ஆரம்பித்து அதையே மதம் ஜhதி மீது வைத்திருக்கும் மோகத்தால் பெரிதாக்கி விஸ்வரூபம் கொண்டு கட்டுக்கடங்காமல் நடக்கிறது. இதனை தடுக்க அரசு தவறிவிட்டது. மேலும் காவல் துறையும் சட்டமும் இதனை கண்டு கொள்ளாமல் இயங்கி வருகிறது.

இப்படிப்பட்ட வெறித்தனமான செயல்கள் தனியார் தொலைக்காட்சி படம் பிடித்து காட்டி டி.ஆர்.பி. பட்டியலில் முதலிடம் பெறுகின்றது. எங்கோ நடக்கும் வன்முறை செயல்களை படம் பிடித்து காட்டி பொதுமக்களின் மனதில் இடம் பிடித்து விட்டது.

பற்றாக்குறை பஞ்சம் நிறைந்த மக்கள், நாட்டை தங்கள் பக்கம் திசை திருப்ப மேற்கொள்ளும் வெறித்னமான செயல்கள் என்று மனோதத்துவ நிபுணர்கள் சொல்லுகின்றனர். இந்த மாதிhp போராட்டம், கலவரம், வன்முறை நிகழ்வதற்கு யாரைக் குற்றம் சாட்டுவது? பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யமுடியாமல் இயங்கும் அரசியல்வாதிகள் இதற்கு காரணமா? அரசு தீட்டிய திட்டங்கள் சாpவர அமுல்படுத்த முடியாமல் தடுமாடும் அரசு அதிகாhpகளின் குற்றமா? மக்கள் கிடைக்கும் வாய்ப்பை ஒழுங்காக பயன்படுத்த முடியாமல் இருக்கும் நிலவரத்தின் மீது குற்றமா? தனியார் தொலைக்காட்கிகள் மக்களின் போராட்டத்தில் குளிர்காய்வது குற்றமா? சிறந்த ஜனநாயக நாடு எங்கள் இந்திய நாடு என்று மார் தட்டிக் கொள்ளும் இந்திய பிரஜைகள் நிலமையை இனிவரும் நாட்களில் பொன்னான காலமாக மாற்றுவதில் நம்பிக்கையோடு செயல்படுவோம்.
 

மனிதம் தழைக்க வேண்டும்!

- சந்தியா கிரிதர், (புது தில்லி) -


பூமி தோன்றி முதல் மனிதன் தோன்றினான். முதலில் மனிதன் காட்டில் வாழ்ந்தான். மிருகங்களை அடித்துக் கொன்றான்.பூமி தோன்றி முதல் மனிதன் தோன்றினான். முதலில் மனிதன் காட்டில் வாழ்ந்தான். மிருகங்களை அடித்துக் கொன்றான். இலைகளை உடையாக உடுத்திக் கொண்டான். காட்டுமிராண்டியாக வாழ்ந்து வந்த மனிதன் கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்கினான். இதனால் அன்பையும் பாசத்தையும் அறிந்து கொண்டான். கூடவே அறிவையும் பயன்படுத்தினான். பயிர், செடி, கொடி, மரம் என்று வளர்க்கத் தொடங்கினான். இதிலிருந்து விவசாயத்தை முன்னோடியாக வைத்துக் கொண்டான். விவசாயம் அவனுக்கு தானியங்கள், பழங்கள், உணவுப் பொருட்கள் என்று கொடுத்தது. இவைகளை ருசியாக சமைத்துச் சாப்பிடலானான். ஆடைகளை உடுத்தினான். இருக்க குடிசையை அமைத்துக் கொண்டான். வாழ்க்கை வரலாற்றை மாற்றிக் கொண்ட மனிதன், கருவிகள், இயந்திரங்கள் என்று படைத்தான். விஞ்ஞானத்தை வளர்த்தான். தொழிற்சாலைகள் கட்டினான். உற்பத்தி பெருகியது, வியாபாரம் வளர்ந்தது, பொருளாதாரம் முன்னேறியது.

விஞ்ஞான வளர்ச்சியோடு சமூகத்தையும் முன்னேற்றினான். கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்கிய மனிதன் குடும்பத்தை படைத்தான். பல குடும்பங்களை இணைத்து கிராமம் தோன்றியது. இதனால் சமுதாயம் உருவாகியது. சமுதாயத்திற்கு தகுந்தாற்போல் கொள்கைகளை தீட்டினான். இதற்கு முரண்பாடாக நடப்பவனுக்கு தண்டணையும் விதித்தான். இந்த கொள்கைகள், திட்டங்கள் ஒழுங்காக நடைமுறையில் பயிலுவதற்கு அரசாங்கம் ஒன்றை அமைத்தான். அதன் மூலம் சட்டங்களை உருவாக்கி அமல்படுத்தினாhன்.

சட்டவிரோதமான செயல்களை தடுப்பதற்கு அரசாங்கம் பெரிதும் பாடுபடும் என்ற நல்லெண்ணத்தோடு அமைத்தான்.

சமூகம் வளாந்து கொண்டே சென்றது. இந்த சமூகம் மூலம் நல்ல பலன்களும் கிடைத்துள்ளன. இதே சமூகம் ஏழை பணக்காரன் என்ற இடைவெளியை விரிவுப்படுத்தியது. இதே சமூகம் மதங்கள் ஜாதிகள் என்று உருவாக்கின. நன்றாக வாழ்ந்து வந்த மனிதன் ஜாதி என்ற பெயரால் கூட்டிலிருந்து பிரிந்தான். ஜாதியில் தோன்றிய சின்ன சின்ன சண்டைகள் சச்சரவுகள் விஸ்வரூபம் எடுத்து கலவரம், வன்முறை போன்றவற்றில் தலை தூக்கியது. ஜாதி பிரச்சனை, மனிதனிடையே பெரும் பிளவை ஏற்படுத்தியது. மனிதநேயம், அன்பு, பாசம், அக்கறை போன்றவைகள் மறைந்து, வெறுப்பு, வஞ்சகம், பழி, கொலை போன்றவற்றில் முடிவடைந்தது.

இத்தகைய சம்பவங்களை; சமூக விரோதிகள் என்று சொல்லலாம். இதனால் மனித குலம் தழைப்பதற்கு பதிலாக சிதைந்து போகின்றது. அரசாங்கம் மனித குலம் தழைப்பதற்கு சிரமப்படும் என்று நினைத்தது தப்பாகிவிட்டது. ஊழல் நிறைந்த அரசாங்கம் என்ன செய்ய முடியும்? மனிதனே மனிதனை புரிந்து கொண்டு நன்னலம் கருதி மனிதம் தழைக்க பாடுபட வேண்டும்.

இனி வரும் காலங்ளில் மனிதம் சிதைந்து போகும் நிலையில் உள்ளது என்பது சிந்தனைக்குரியது. கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்த குடும்பம் நாளடைவில் சின்னக் குடும்பமாக மாறி இன்று மனிதன் தனது விருப்பத்திற்கும், ஆசைக்கும் ஏற்றது போல வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான். கணவன் மனைவி என்ற அருமையான உறவு, இன்று தேவையுள்ள சமயத்தில் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்கிறார்கள். வெளிநாடுகளில் இதனை லிவ்-இன் உறவு (live-In Relationship அல்லது Common- Law) என்று சொல்லுகிறார்கள். நோக்கமற்ற வாழ்க்கையை வாழும் மனிதம் தான் இன்று நடமாடிக் கொண்டிருக்கிறது. மனிதன் வாழ்ந்து முடிந்த அதே கற்கால வாழ்க்கையை இன்றைய மனிதம் நாடிச் செல்லுகிறது.

தாவணி, புடவை போன்ற பழக்கவழக்கம் அழிந்து சல்வார் கமீஸ் ஆடைகளை அணிந்து வந்த புதுமை பெண் ஜீன்ஸ் சட்டை என்று மேல்நாட்டு பாணியை பெரிதும் விரும்புகிறாள்.பெண்களுக்கு சிறந்த படிப்பை கொடுக்க வேண்டுமென்ற எண்ணமுடைய சமூகம் மிகவும் போற்றத்தக்கது. இன்று புதுமைப் பெண்கள் எட்ட முடியாத இடத்தை பிடித்து விட்டார்கள் என்று சொல்லும் போது பெண் குலத்திற்கு பெருமை சேர்கிறது. பழைய பாணியில் வாழ்ந்து வந்த பெண்ணின் தன்மை அல்லது இயல்பு புதுமைப் பெண்ணிடம் காண முடியாது. தாவணி, புடவை போன்ற பழக்கவழக்கம் அழிந்து சல்வார் கமீஸ் ஆடைகளை அணிந்து வந்த புதுமை பெண் ஜீன்ஸ் சட்டை என்று மேல்நாட்டு பாணியை பெரிதும் விரும்புகிறாள். இந்த மேல்படிப்பு புதுமைப் பெண்களின் வாழ்க்கையை எந்த திசையில் கொண்டு செல்லுகிறது என்பது கேள்விக்குறியாகி விட்டது. அந்நியர்களை ஈர்த்த இந்தியக் கலாசாரம், பண்பாடு இன்று சிதைந்து காணப்படுகின்றது.

இளைய சமுதாயம் வேலையில்லாமல் திண்டாடுகிறது. அப்படியே வேலை கிடைத்தாலும் அவர்கள் படித்த படிப்பிற்கு ஏற்றது போல வேலை அமைவதில்லை. இந்தப் பிரச்சனை இளைய சமுதாயத்தை நாளைய திருடனாகவும், கொள்ளையனாகவும் மாற்ற வழி வகுக்கிறது. வேலையிலிருந்து ஓய்வு பெறும் வயது வரம்பை அதிகரிப்பதால், இளைய சமுதாயத்திற்கு வேலை வாய்ப்பில்லாமல் அவர்கள் வெளிநாடு சென்று பிழைக்கிறார்கள். நாட்டின் பொன்னான காலம் இளைய தலைமுறையின் கைகளில் உள்ளது என்ற பொன்மொழிகள் சொற்களோடு நின்று விடுகின்றன. இதனை செயலாக்க தவறிய இன்றைய மனிதம் பெரும் இழப்பை பெற்றுள்ளது.

பண்டைக்கால சந்தையில் பொருட்கள் விற்கப்பட்டு வந்தன. இன்று சந்தையில் அதாவது மார்கெட்டில் மனித உறுப்புகளும் விற்கப்படுகின்றன. இப்படிபட்ட இழிவான செயலை செய்யும் மனிதனின் மனம் கூசவில்லையா. இன்றைய மனிதம் பெற்றவர்களையும் கூர்போட்டு விற்கவும் தயங்க மாட்டார்கள். புனிதமான மருத்துவ சேவையை மாசு படிந்த சேவையாக மாற்றிய மனிதனை என்ன வார்த்தைகளால் சொல்லிப் பாராட்டுவது என்று தெரியவில்லை.

பூமி ஒரே பாதையில் சூரியனைச் சுற்றி வருவதால் இரவும், பகலும் மாறி மாறி வருகின்றது. இந்த பூமி வேறு பாதையை அமைத்துக் கொண்டால் அதனுடைய அதிர்வுகள் பூமியில் வாழும் உயிரினங்கள் மீது படுகின்றன. அது போல ஒரு கொள்கையில் இயங்கி வந்த சமூகம் மாறுபட்ட கொள்கையில் இயங்கினால் அதனுடைய விளைவுகள் மனிதம் வாழும் முறைகளில் தென்படுகின்றன. இந்த தத்துவத்தை சற்று சிந்தித்து பார்த்தால் நம்மைப் போன்றவர்கள் மனிதம் தழைக்க வழி வகுக்கலாம்.

மனிதம் தழைக்க வேண்டும்.
சமூகம் மலர வேண்டும்
நாடு வளர வேண்டும்
இன்னல்கள் எதுவாயிருந்தாலும்
கடைசி மூச்சுவரை போராட வேண்டும்
வெற்றியும் தோல்வியும்
எது கிடைத்தாலும் மனப்பக்குவத்தோடு
ஏற்றுக் கொள்ள வேண்டும்
மனிதம் தழைக்க வேண்டும்
மனித குலம் வளர வேண்டும்.

sandhya_giridhar@yahoo.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner