இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
பெப்ருவரி 2008 இதழ் 98  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சினிமா: நூல் மதிப்புரை!!

'திரைவெளி': சுப்ரபாரதிமணியனின் திரைப்படக் கட்டுரைகள்!
- சத்தியானந்தன் (சென்னை) -
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்திரைப்படம் பார்த்து விட்டு அந்தக் கதையை ஒருவர் சொல்ல மற்றொருவர் கேட்டு வியப்பது வகுப்பு வித்தியாசமற்று எல்லா இடங்களிலும் காணப்படுவது. அதை ஒரு வரிக் கதையாகச் சொல்லாமல் எந்த இடத்தில் பாட்டு வந்தது, சண்டை வந்தது இடைவேளை வந்தது என சஸ்பென்ஸ் குறையாமல் சொல்பவரையும் அவரது முகபாவங்களையும் கவனிக்க ரசனை மிகுந்ததாக இருக்கும். 1992லிருந்து 2006 வரை பதினைந்து வருடங்களாக பல்வேறு சிறு பத்திரிக்கைகளில் சுப்ரபாரதிமணியன் எழுதிய நாற்பது கட்டுரைகள், ஏறத்தாழ 108 படங்கள் பற்ரி 176 பக்கங்களில் வெளிவந்துள்ளன. விரிந்த பயணம், ஆழ்ந்த கவனம், ரசனையும், கடுமையான உழைப்பும் வாசகனுக்குக் கண்கூடாகின்றன.

கட்டுரைகளின் தொனி எத்தகையது. அசோகமித்திரன் கட்டுரைகள் தனது கோணத்திலிருந்து உரையாடுவது போல ஒரு நிகழ்ச்சி பற்றிய கருத்தை அல்லது விவரத்தை முன் வைப்பது போல கட்டமைக்கப்பட்டிருக்கும். வாசகனுக்குச் சென்றடைய வேண்டிய பல்வேறு விடயங்களை , பல்வேறு பரிமாணத்தில் நெய்து அளித்திருப்பார். அதை உன்னிப்பாக வாசிக்கும் போதே உள்வாங்க இயலும். இந்நூலின் கட்டுரைகளின் பெரும்பகுதி நேரடியாக விடயத்திற்குச் சென்று திரை விமர்சனம் செய்து, அந்த மொழிப் படங்கள் பற்றிய மேலும் சில விபரங்களைச் சொல்லி அமைபவை. அவ்வாறெனில் சுப்ரபாரதிமணியனின் அசல் தொனி இதுதானா என்றால் இல்லை என்று இருபதாவது கட்டுரை " ஒரு பயணம் இரு படங்கள் ' என்னும் கட்டுரை விடையளிக்கும். பிரான்சிலிருந்து ஜெர்மனி செல்லும் பயணத்தில் அவர் காணும் இரு படங்கள் பற்றியும் அந்தப் பயணம் தொடர்பாக அவர் தரும் விவரங்கள் அய்ரோப்பாவின் நிலை அங்கு வாழும் இந்தியர் பற்றிய அய்ரோப்பியர் கண்ணோட்டம் , தமிழரின் இருப்பு, இலங்கைத் தமிழரின் நிலை என பல கோணங்களில் நம் அறிவை வளப்படுத்துகிறது. மிகவும் சகஜமான தொனியில் நீளமே தெரியாத வண்ணம் விரியும் கட்டுரை.

எனவே இக்கட்டுரைகள் பெரிதும் சிறு பத்திரிக்கைகளில் வெளியானதால் இடப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு சுருக்கமாக ஆனால் முக்கியமான எந்த விவரமும் விட்டுப் போகாத கவனத்துடன் எழுதியிருக்கிறார். .

லெபனான் நாட்டில் குண்டு வீச்சு நடக்கும் போது நிலவ€றையில் தொடுகையும், நெருக்கமுமாய் ஒருத்தி மீது காதல் கொள்கிறான் ஒருவன் வெளியே வந்த பின் அவளைத் தேடுகிறான். பெயர் மட்டுமே தெரியும்.

புத்தபிட்சுகள் கிரிக்கெட் வெறியில் என்ன ஆனார்கள். ஒரு சர்வாதிகாரி தன் மீது நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்கள் எச்சில் துப்ப ஏன் சம்மதிக்கிறான்? எழுத்தாளர் பžரின் இளம் வாசகி, பள்ளி மாணவியின் கசப்பான திருமண அனுபவம் எதை வெளிப்படுத்துகிறது? மால்கம் என்னும் அரசியல் கலைஞனின் போராட்டங்கள் என்ன? இந்திய சூழலில் அடூர் கோபால கிருஸ்ணன், டி வி சந்திரன், நரசிங்கராவ், கிரிஸ் கர்நாட், மீரா நாயர், அபர்ணா சென், சத்தியஜித்ரே ஆகியோரின் சாதனை என்ன?

இந்த நூலின் பணி இந்த ஆளுமைகள் முன் வைக்கும் மாற்று திரைபடம் பற்றிய அறிமுகமேனும் வாசகனுக்கு ஏற்படுத்துவது. திரைப்படம் மிக முக்கியமான ஊடகம் ஆகி இருப்பது என்னும் சாதகமான சூழலை குறும்பட , கலைப்பட., இணைப்பட கலைஞர்கள் பயன்படுத்த நடத்தும் போராட்டங்கள் மிகவும் கொடுமையானது. தொலைக்காட்சி தாயாரிப்பாளர் நாகாவுடன் பேசிக் கொண்டிருந்த போது எனெப்டிசியே பரிட்சார்த்தமான படங்களுக்கு நிதி தர தயங்குகிறது என்று குறிப்பிட்டார்.

சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தமது வீடு, சந்தியா ராகம் ஆகிய படங்களின் நெகட்டிவ்கள் அழிந்து விட்டன எனக் கண்­ருடன் பாலு மகேந்திரா கூறினார். நல்ல திரைப்படத்தை கலை ஆர்வமும் பண்பாட்டு விழுமியங்களும் உள்ளோர் ஆதரிக்க வேண்டும் என்னும் கோரிக்கை கட்டுரைகளின் ஊடாக நம் மனதுள் பதிகிறது.

வெறும் விமர்சனம் மட்டுமின்றி உள்நோக்கம் உள்ள படங்களையும் இனங்காட்டுகிறார். சிருங்காரம் என்னும் தமிழ்ப் படத்தில் தேவதாசி முறையைக் கையாண்டுள்ள விதம் உள்நோக்கத்துடன் தென்படுகிறது. சாம்பலின் நிழல்கள் என்னும் படம் இலங்கைப் போராளிகளின் நிலையை எதிர்மறையாய் மட்டுமே அணுகுகிறது. எனவே தனது நிலைப்பாட்டை அல்லது விழுமியங்களை கூர்மையாகவே அலசியிருக்கிறார் சுப்ரபாரதிமனீயன்.

இதைத் தவிர இயக்குனர் பெர்க்மெனின் கடிதம் மற்றும் அப்பாஸ் கியராஸ்டமி (ஈரான்) போன்றோரின் குறும் பேட்டிகள் மிகவும் சிந்தனையைத் தூண்டுபவை..

தமிழில் கொண்டாடப்படும் இயக்குனர்களுக்குக்கூட திரைப்படம் ஒரு விசுவல் மீடியம் என்னும் அறிவோ அதன் சாத்தியக்கூறுகளைப் பயன்படுத்தும் கலையோ அன்னியமானது. அவர்கள் பயன்படுத்தும் நடிக நடிகையர் நிறைய சம்பளம் வாங்கும் நட்சத்திரமாக உயர்ந்ந்தால் போதும் நாலு பேர் காலில் விழத்தயார்.

பெரிதும் சமகால இந்தி உலக திரைப்படம் பற்றிப் பேசும் கட்டுரைகளில் நமக்கு எத்தனை திரைப்படங்கள் பற்றி, இயக்குனர்கள் பற்றி அறிமுகமும் அவர்கள் கலையின் பல்வேறு பரிமாணாங்கள் பற்றிய விபரமும் காணக் கிடைகிறது என்பது பற்றிய யோசிப்பை இக்கட்டுரைகள் கிளப்புகின்றன. நல்ல திரைப்பட ரசிகர்களின் நூலகத்தில் இந்த புத்தகம் இடம் பெறும் தகுதி கொண்ட முக்கியத்துவம் கொண்டதாகும்.

'திரைவெளி' - சுப்ரபாரதிமணியனின் திரைப்படக் கட்டுரைகள். விலை: ரூ80/ . அமிருதா பதிப்பகம் வெளியீடு, சென்னை/

ramtongauler@gmail.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner