இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவம்பர் 2007 இதழ் 95  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
புவியியல்!
தினக்குரல்:பயனுள்ள மீள்பிரசுரம்!
சேதுத் திடல்கள்!

- மறவன்புலவு க.சச்சிதானந்தன் -

சேற்றுக் கரைசலாக, கலக்கல் நீராக, வளைந்து பாய்ந்து, கடலை நோக்கி ஓடுகிறது ஆறு.ஓடும் வழியில் வளைவுகளில் மணல் திட்டுகள் உருவாகின்றன. வெளிவளைவுகளில் நீர் ஓடும். உள் வளைவுகளில் மணல் சேரும், திடலாகும். கடலுடன் ஆறு கலக்கும் முகத்துவாரத்திலும் சேற்றுக் கலக்கல் நீரின் மணல் குவிந்து திடல்களாகும், தீவுகளுமாகும். அக்கரைசலைக் கொணர்ந்த ஆற்று நீரோ கடலுடன் கலந்துவிடும். வெள்ளப் பெருக்குக் காலத்தில் இந்த மணல் திடல்களையும் தன்னுடன் இழுத்துச் சென்று கடலுக்குள்ளே ஆற்று நீர் புகும். முகத்துவாரத் திடல்களும் கரைந்துவிடும். உள்வளைவுத் திடல்களும் கரைந்துபோகும். வைகாசி, ஆனியில் பெய்யும் பெரு மழையால் பெருகி ஓடும் ஆறுகளே யமுனையும் கங்கையும் மகாநதியும் கோதாவரியும் கிருஷ்ணையும் காவிரியும் வைகையும் தாமிரபரணியும்.

தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காற்றின் வேகம் தணிந்ததும் புரட்டாதியில் இந்த ஆறுகளில் வெள்ளப்பெருக்கு இராது. அக்காலத்தில் இவை பாயும் உள்வளைவுகளில் மணல் சேர்ந்து திடல்களாகும். சோழமண்டலக் கரையோரமெங்கும் வங்காள விரிகுடாவை ஒட்டிய முகத்துவாரங்களிலும் மணல் சேர்ந்து திடல்களாகும். பின்னர் கார்த்திகையில் தொடங்கும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காலத்தில் சோழமண்டலக் கரைநெடுகிலும் தை வரை புயலும் மழையும் வெள்ளமுமாய் இந்த நதிகளில் நீர் கரைபுரண்டு ஓட, மணல்திடல்களும் கரைந்து கடலோடு சேர்ந்துவிடும். வாடை ஓய்ந்ததும் ஆறுகளில் வெள்ளம் குறைய, மெல்லெனப் பாயும் ஆற்றுடன் வரும் சேறும் கரைசலும் கலக்கலும் வழியெங்கும் வளைவெங்கும் அங்கங்கே மணல் சேர்ந்து திடல்களாகும். ஆற்று முகத்துவாரங்களிலும் இவ்வாறே
மணல் சேரும், திடல்கள் தோன்றும்.

இயல்பான நிகழ்வுகள், இயற்கையின் நிகழ்வுகள். நீரில் கலந்த மணலுக்குத் திடல்கள் சேர்விடங்கள். ஆழம் குறைந்த நீர்நிலைகளுக்கும் ஆழம் கூடிய கடலுக்கும் இடையே சேர்கின்ற திடல்கள், புவியின் தனித் தன்மைகள். சோழமண்டலக் கரையைக் கிழக்கெல்லையாகவும் அந்தமான் நக்காவரத் தீவுக் கூட்டத்தை மேற்கெல்லையாகவும் கங்கை, பிரமபுத்திரை, ஐராவதச் சமவெளிகளை வடக்கெல்லையாகவும் விரிந்த இந்துப் பெருங்கடலைத் தெற்கெல்லையாகவும் கொண்டது வங்களா விரிகுடா.

இந்தக் கடலில் பல இடங்களில் 3,000 மீற்றருக்கு மேல் ஆழமான பகுதிகள் உள்ளன. எதிரெதிராக வீசும் பருவப் பெயர்ச்சிக் காற்றுகளை ஒட்டி வங்காள விரிகுடாவின் நீரோட்டம் அமைகிறது. மணிக்கூட்டுக் கம்பி ஓடும் அதே திசையில், இடம் வலமாக வங்காள விரிகுடாவில் ஓடுவது இடசை நீரோட்டம். தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காலத்தில் வைகாசி தொடங்கி ஆடி வரை கடும் வேகத்துடன் நீடிப்பது இடசை நீரோட்டம். எதிர்த் திசையில் வலம் இடமாக ஓடுவது வலசை நீரோட்டம். வாடைக் காற்றுக் காலத்தில் கார்த்திகை தொடங்கித் தை வரை இந்த நீரோட்டம் கடும் வேகத்துடன் நீடிக்கும். சைபீரியப் பறவைகள், கலிங்கம் முதலாகக் கூடங்குளம் ஈறாக வலசை வருவதும் இந்த வலசை நீரோட்டக் காலத்திலேதாம். கூடுதலான ஆழமுள்ள கடலெங்கும் இந்த இரு எதிரெதிர் நீரோட்டங்களின் வேகங்கள் கடுமையாக இருக்கும். ஆழம் குறைந்த கரையோரமெங்கும் இந்த நீரோட்டங்களின் வேகங்கள் குறைவாக இருக்கும்.

வங்காள விரிகுடாவின் தெற்கெல்லையில் உள்ள ஆழமற்ற (ஆகக் கூடிய ஆழம் 16 மீ.) சிறுகடல் பாக்கு நீரிணை. நாகபட்டினம் முதலாக இராமநாதபுரம் ஈறாகத் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களை மேற்கெல்லையாகவும் இலங்கைத் தீவின் வடபகுதியைக் கிழக்கெல்லையாகவும் கொண்ட பாக்கு நீரிணையின் தெற்கெல்லை 31 கி.மீ.நீளமான சேதுத் திடல் தொடராகும்.

சேதுத் திடல் தொடருக்குத் தெற்கே இருப்பன மன்னார்க்குடாவும் அதன் நீட்டமான அரபிக் கடலுமாகும். மன்னார்க் குடாவின் ஆழங்கள் பல இடங்களில் 1,000 மீற்றருக்கு மேலாகும். பாக்கு நீரிணையையும் மன்னார்க் குடாவையும் தெற்கே சேதுத் திடல் தொடர் பிரிப்பது போல, பாக்கு நீரிணையையும் வங்காள விரிகுடாவையும் வடக்கே கோடிக்கரையிலிருந்து தென்கிழக்காக மாதகல் வரை நீளும் கோடித் திடல் தொடர் பிரிக்கின்றது. நில எல்லைகளும் மணல் திடல் தொடர்களுமாகப் பாக்கு நீரிணையை 8 மீ.-16 மீ.வரை சராசரி ஆழமும் 10,000 சதுர கி.மீ.பரப்பளவுமுள்ள கடல்நீரேரியாக, நிலமேடை மேலுள்ள உவர் நீர்த்தொகுதியாக்கி உள்ளன. ஆழம் குறைந்த இக்கடலின் வட மற்றும் தென் விளிம்புகளான இவ்விரு திடல் தொடர்கள்,1,000 மீற்றர் வரை சடுதியாக ஆழக் கடல்களைச் சந்திக்கின்றன. அந்தச் சந்திப்பில் ஆறுகள் முகத்துவாரத்தைச் சந்திக்கும் அதே புவித் தன்மை அமைகிறது. உள்வளைவில் குவியும் மணலில் புவித்
தன்மை அங்கும் சூழ்கிறது.

வங்காள விரிகுடாவின் இடசை மற்றும் வலசை நீரோட்டங்கள் கடலோர மேற்பரப்பு நீரோட்டங்களைப் பாக்கு நீரிணையின் வட
விளிம்பிலும் தென் விளிம்பிலும் ஏற்படுத்துகின்றன. அதற்கிசைவான நீரோட்டங்கள் அதே காலங்களில் மன்னார்க் குடாவிலும் அதன் நீட்டமான அரபிக் கடலிலும் நிகழ்கின்றன. இந்த எதிரெதிர் நீரோட்டங்களால், ஆழமற்ற பகுதியிலிருந்து ஆழமான பகுதிக்கு நீர் பாய்கையில் ஏற்படும் மணல் சேர்க்கை, பாக்கு நீரிணையின் வட விளிம்பிலும் தென் விளிம்பிலும் நிகழ்கிறது. இந்த நிகழ்வு இயற்கை நிகழ்வு. மணல் படிப்படியாகச் சேர்ந்து சேர்ந்து திடலாவதால், சேர்வது காலப்போக்கில் சேது ஆயிற்று. இந்தத் திடல்களை ஆள்வோரின்
குலப்பெயர் சேர்வை. அவர்களே சேதுபதிகளாயினர்.

கடல் மட்டம் இப்பொழுது உள்ளதைவிட 120 மீற்றர் வரை குறைந்திருந்த முற்காலங்களிலும் அதற்கமைவாக இந்தத் திடல்களின் மட்டமும் குறைந்திருந்ததாக நிலவியலாளர் கருதுவர்.பல இலட்சம் ஆண்டுகளாக நீரோட்டத்தின் விளைவாகப் பாக்கு நீரிணையின் விளிம்புகளில் மணல் சேர்ந்து திடல்களாகும் நிகழ்வு இப்பொழுதும் தொடர்வதாகத் தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரி நிலவியல் துறைத் தலைவரும் பேராசிரியருமான முனைவர் என்.இராமாநுஜம் தெரிவித்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழக இயற்கைப் பேரிடர் ஆய்வகப் பேராசிரியர் இராம்மோகன், சென்னைப் பல்கலைக்கழக கடலியல் பேராசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, அண்ணா பல்கலைக்கழகத்தில் கடலியல் பேராசிரியராக இருந்தவரும் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான பேராசிரியர் எஸ்.இராமச்சந்திரன் ஆகியோர் இந்தியக் காப்பிய மரபுகளையும் சிந்தனை மரபுகளையும் அறியாதவர்களல்லர். அத்தகைய அறிவியலாளரின் புலத்துறை முற்றிய, கற்றுத் துறைபோகிய கருத்துகளை நுணுகி வாசிப்போரும் நுணங்கிச் செவிமடுப்போரும் பாக்கு நீரிணையின் வட மற்றும் தென் திடல் தொடர்களான கோடித் திடல் தொடரும் சேதுத் திடல் தொடரும் இயற்கை நிகழ்வுகள் என்பதை ஏற்பர்.

நன்றி: தினக்குரல் 03 - October - 2007

சேது கால்வாய் தமிழரின் வளர்ச்சிக்கு வாய்க்கால்!!

-மறவன்புலவு க. சச்சிதானந்தன்-

சேது கால்வாய் தமிழரின் வளர்ச்சிக்கு வாய்க்கால்!!

இலங்கைத் தீவைச் சுற்றிய நெடிய, கால நீட்டமான கப்பல் தடத்துக்கு மாற்றுத் தடம் இந்தியக் கரையோரமாக உள்ளதா என்ற தேடல் கடந்த 200 ஆண்டு வரலாறுடையது. ஆங்கிலேயர் காலத்தில் 9, விடுதலைக்குப்பின் 7 ஆக, 16 வல்லுநர் குழுக்கள் தந்துவந்த பரிந்துரைகளின் திரண்ட தெளிவே இன்றைய சேதுக் கால்வாய்த் திட்டம்.

வங்காள விரிகுடாவுக்கும் அரபிக் கடலுக்கும் இடைப்பட்ட கடல் தரையானது, 1000 மீ. ஆழத்திலிருந்து செங்குத்தாக உயர்கிறது.
தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே 916 மீ. சராசரி ஆழமுள்ள, 10,000 சதுர கி.மீ. பரப்புள்ள மேடையாகிப் பாக்கு நீரிணையைத் தாங்கி நிற்கிறது. பாக்கு நீரிணையின் அயல்கடல் நீரோட்டங்கள் அதன் வட-தென் விளிம்புகளை நீள் திடல்களாக்கின. கப்பல் பயணத்துக்கு அத்திடல்கள் இடையூறாயின. 30 கி.மீ.க்கும் கூடுதலாக நீளும் அவ்விரு திடல் தொடர்களில் 300 மீ. அகலத்துக்கு 12 மீ. ஆழத்துக்குத் தூர்வாருவதால் அமைவதே சேதுக் கால்வாய். திடல் தொடர்களுள்ள விளிம்புகளைக் கடந்து பாக்கு நீரிணையுள் புகின்
கப்பல் பயணத்துக்குரிய ஆழம் உண்டு.

300 மீ. அகலக் கால்வாயாதலால் சமகாலத்தில் இருவழிப் பயணம் சாத்தியமாகிறது. 12 மீ. ஆழமுள்ளதால் உலகின் பயண, சரக்கு
மற்றும் பன்முகச் சேவைக் கப்பல்களுள் 84% கப்பல்கள் இக்கால்வாய் வழி பயணிக்கலாம். 11 மீ. அமிழ் அளவுக்கும் 40,000 தொன் தாங்கு எடைக்கும் கூடுதலான அளவுகளுள்ள கப்பல்களின் எண்ணிக்கை 16% மட்டுமே.

* ????U P??-??? B? 12 ?.; AP?? 32 ?.; }? 82 Q.?.; ??n ?|?? 8 10 ?o.

* சூயஸ் கால்வாயின் ஆழம் 21 மீ. அகலம் 70 மீ. நீளம் 163 கிமீ. பயணநேரம் 11 ,16 மணி.

* சேதுக் கால்வாயின் ஆழம் 12 மீ. அகலம் 300 மீ. நீளம் 168 கிமீ. பயண நேரம் 10 -11 மணி.

சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்குக் கடல்வழி இலங்கையைச் சுற்றி வர 1400 கி.மீ. தூரமும் 65 மணி நேரமுமாகும்; சேதுக்
கால்வாய் வழியாகப் பயணிக்கின் 753 கிமீ. தூரமும் 35 மணி நேரமுமாகும்.

ஆண்டுக்கு 4,000 கப்பல்கள் சேதுக் கால்வாயைப் பயன்படுத்தத் தொடங்கும். அடுத்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு
மடங்காகலாம். வாடை மற்றும் தென்றலின் கடுங்காற்று வீசும் நாட்களைத் தவிர, ஆண்டுக்கு 330 நாட்களுக்குக் கப்பல்கள் கால்வாயில் பயணிக்கலாம்.

இன்றைய இந்தியாவில் 12 பெருந் துறைமுகங்கள். கிழக்குக் கரைக்கும் மேற்குக் கரைக்குமிடையேயும், கிழக்கிலிருந்து செங்கடல் வழியாக ஐரோப்பாவிற்கும் மேற்கிலிருந்து மலாக்கா நீரிணை வழியாகத் தூர கிழக்கிற்கும் பயணிக்கும் கப்பல்களுக்குச் சேதுக் கால்வாயூடான பயணமானது, தூர, கால, எரிபொருள், மனித ஆற்றல் செலவுகளில் 35% 50% சேமிப்பைத் தரும்.

மொத்த உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சி, 1980களில் 5.7%ஆக இருந்தது, 6.5%ஆக, எட்டாம், ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்ட காலங்களில் சராசரியாக உயர்ந்து வருகிறது. வேகமாக வளரும் பொருளாதாரக் கட்டமைப்புள்ள நாடாக இந்தியா மாறிவருகையில் ஒவ்வொரு செயல் அலகிலும் செலவினங்கள் குறைந்து, உற்பத்தி பெருகி, எரிபொருளை விரயமாக்காது, மனித ஆற்றலை முழுமையாக முடுக்கிவிட வேண்டிய கட்டாயத்தால், சேதுக்கால்வாயில் கப்பல் பயணம் தரும் 35%, 50% சேமிப்பு, இவ்வளர்ச்சிக்கு உறுதுணையாகும்.

வங்காள விரிகுடாவுக்கும் அரபிக் கடலுக்கும் இடைப்பட்ட கடல் தரையானது, 1000 மீ. ஆழத்திலிருந்து செங்குத்தாக உயர்கிறது. திருப்பூர்ப் பின்னலாடைத் தொழில் கடந்த 10,15 ஆண்டுகளில் முடுக்கிய வேகத்தில் வளர்ந்து, உற்பத்திப் பொருட்களில் பெரும் பகுதி தூத்துக்குடி மற்றும் கொச்சித் துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதியாகி, செங்கடல் சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்கச் சந்தைகளை அடைகிறது. 1854இல் சூயஸ் கால்வாய்க்குக் கால்கோள் இட்டோர் திருப்பூரை நேரடிப் பயனாளியாகச் சுட்டியிருக்க மாட்டார்கள். ஆனாலும் சூயஸ் கால்வாய் வெட்டியதன் நோக்கமான மேலை நாட்டவரின் மேலாட்சி மறைந்து, வளரும் ஆசிய நாடுகளின் ஏற்றுமதிக்குச் சூயஸ் கால்வாயின் பங்களிப்பு சொல்லொணா ஆக்கம் தருகிறதே!

தில்லிக்கு அருகே குர்கோவான் சாலை அமைக்கத் திட்டமிட்டபொழுது வீண்செலவு எனக் கூறியோர் இன்று அந்தச் சாலை திறந்தபின், நெரிசலாகப் பயணிக்கும் வாகனத் தொகையால் வியப்படைவர். திட்டமிடுக, அமைக்க, திறந்து விடுக, பயனாளிகள் நாமிருக்கிறோம் எனப் புதிது புதிதாய்ப் பூவிதழ் விரியத் தேன் தேடும் வண்டுகளாக நுகர்வோரும் பயனாளிகளும் புதிது புதிதாகக் குவிவது இயற்கை. சேதுக் கால்வாயைத் திறந்தபின், திட்டமிட்ட பயனாளிகள் மட்டுமன்றி, எதிர்நோக்காத் திட்டமிடாப் பயனாளிகள் மிகுந்து மொய்க்கக்
காத்திருக்கின்றனர் என்பதே மெய்நிலை.

கால்வாயை அமைப்பதாலும் கப்பல்கள் பயணிப்பதாலும் சுற்றுச் சூழலுக்கு, மீனவருக்கு, கனிம வளங்களுக்கு, பாதுகாப்புக்கு, புனித
நம்பிக்கைகளுக்கு அச்சுறுத்தலும் கேடும் ஊறும் வருமெனக் கூறுவதுடன் பொருளாதார மேம்பாடும் இல்லை என்ற வாதங்கள்
ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அணிகலன்கள். அவ்வாறு எழும் ஐயங்களும் மாற்றுக் கருத்துரைகளும் திட்டமிடுவோரின் வழிகாட்டிகளாம்.

பவளப் பாறைகள் அகழ்வுத் தடத்தில் உள்ளன. பவளப் பாறைகளைச் சுற்றி அரிய உயிரினங்கள் உள்ளன எனக் கூறுவது பொருத்தமல்ல, வடக்கே கோடித் திடல் தொடரிலிருந்து தெற்கே சேதுத் திடல் தொடர் வரை நீளும் 168 கிமீ. தடத்தில் பவளங்கள் பாறைகளாக நிலைகொள்ளவில்லை. அகழ்வதால் அரிய உயிரினங்கள் அழிய வாய்ப்பில்லை. கால்வாய்த் தடத்திலிருந்து 20 கிமீ. அப்பால் தொடங்கும் மன்னார் வளைகுடாக் கடல்வனக் காப்பு வலையத்தில் பவளப் பாறைகளும் அரிய உயிரினங்களும் உள்ளன.

சாலைகளில் வாகனங்கள் கக்கும் கரிய வாயு அளவுக்கு உலகத் தரக் கட்டுப்பாடு இருப்பது போலக் கப்பல்களுக்கும் கடுமையான உலகத் தரக் கட்டுப்பாடுகள் உள்ளதால், எரிபொருள் கப்பல்களின் அதீத பெருக்கத்தின் பின்னரும் நெடுங்கடல் மாசின்றித் தொடர்கிறது.

சேதுக் கால்வாயை ஒட்டிய தமிழக மாவட்டங்களின் 3,00,000 மீனவர்களுள் பலர், சேதுக் கால்வாய்வழி அரபிக் கடலுக்கும் வங்காள விரிகுடாவுக்கும் சென்று நீண்ட காலம் கடலில் தங்கி மீன்பிடிக்கும் பெரிய மீன்பி டிக் கப்பல்களை ஏற்கும் புதிய வளமான மீன்துறைகளும், கப்பல் திருத்தகங்களும் இந்த 5 மாவட்டங்களை ஒட்டி அமையவுள்ளன. 10,000 சதுர கி.மீ. பரப்பளவுக்குள் முடங்கி, எல்லைதாண்டியதாக இலங்கைக் கடற்படையின் கொடுமைகளுக்கு ஆளாகும் இந்த மீனவருக்கு சேதுக் கால்வாயுடன் வரும் மீனவ வளர்ச்சித் திட்டங்கள் புதிய மீன்படிப் பரப்பெல்லைகளைத் தரவுள்ளன. அங்குள்ள 225 மீனவ ஊர்களை ஒட்டிய உள்கட்டமைப்பு வசதிகளும் பெருகவுள்ளன.

சேது சமுத்திரத் திட்டம்...

சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரும் புகழ்பூத்த கடலியலாளருமான இராமச்சந்திரன், கடலியல் பேராசிரியர்
கிருஷ்ணமூர்த்தி, இயற்கைப் பேரிடர் மேலா ண்மைத் துறைப் பேராசிரியர் இராம்மோகன், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி நிலவியல்
பேராசிரியர் இராமாநுஜம் போன்ற அறிஞர் பலர், சேதுத் திடல் தொடர் இயற்கை நிகழ்வே எனத் தீர்த்துள்ளனர். இந்தியக் காப்பக
மரபுகளை அறியாதவர்காளா இவர்கள்?

நெய்வேலிக்குச் சாலை அமைத்தால் நிலக்கரியை எடுக்கமுடியாது எனக் கூறுவோரே, சேதுக் கால்வாய் அமைத்தால் அங்கு இருப்பதாகக் கூறும் தோரியம் போன்ற கனிம வளங்கள் அழிந்துவிடும் என்போர்! பாக்கு நீரிணையில் 10,000 சதுர கி.மீ. பரப்பளவு, மன்னார் வளைகுடாவில் 20,000 சதுர கி.மீ. பரப்பளவு, மொத்தமாகத் தூர்வாருவதோ ஒரு கன கி.மீ.க்கும் குறைவான, 80 மில்லியன் கன மீ. மணல் மட்டுமே! தூர்வாரிய மணலையும் அயலிலே ஆழமான கடலுள் கொட்டுவர்.

பாம்பன் தீவு மீனவரும், அங்கு குவியும் வழிபாட்டாளரை நம்ப வாழ்வோரும், பாம்பன் தீவின் நிலப்பகுதிக்கு அப்பால் கிழக்கே,
வழித்தடத்தை அமைக்குமாறு நெடுங்காலமாகக் கோரி வருகின்றனர். சுற்றுச் சூழலாரும் கடல்வனக் காப்பு எல்லைத் தீவான செங்கால் தீவுக்குக் கிழக்கே 30 கி.மீ.க்கு அப்பால் வழித்தடத்தை அமைக்க வலியுறுத்துகின்றனர்.

மீனவர், வணிகர், தொழில் முனைவோர் யாவரும் தமிழரின் 150 ஆண்டு காலக் கனவு நனவாகும் நாளை எதிர்நோக்கிக் காத்து ள்ளனர்.

நன்றி: தினக்குரல் 04 - October - 2007

சேது சமுத்திரத் திட்டம் பற்றிய மேலும் சில பன்முகப் பார்வைகள்...
Palk Bay Issues and Security Concerns: An Analysis.. http://www.saag.org/%5Cpapers14%5Cpaper1355.html
Indian canal project angers Hindus.... http://oproject.wordpress.com/2007/09/22/indian-canal-project-angers-hindus/
Sethusamudram project and impending Tsunami devastation of Kerala.... http://www.haindavakeralam.org/PageModule.aspx?PageID=3052
Sethusamudram Canal - 150 Years Dream project of the tamilars in Tamilnadu and Sri Lanka ... http://sethusamudram.tamilar.org/
SETHUSAMUDRAM SHIP CANAL PROJECT - http://www.tamilinfoservice.com/manitham/environment/sscp/ir.htm
Sethusamudram Shipping Canal Project : A Good Thing Done Badly! ... http://www.ivarta.com/columns/OL_070508.htm
Sethusamudram canal project discussed in Kilinochchi workshop... http://www.tamilnet.com/art.html?catid=13&artid=15202
Burning our Bridges with the Sacred Environment... http://www.hinduhumanrights.org/India/Bridge.htm
Sethusamudram kick-starts TN poll battle ... http://www.dancewithshadows.com/pub/sethusamudram-project-tamil-nadu.asp
Sethu project hits political rock bottom... http://www.sundaytimes.lk/070916/International/international00001.html
Ram Sethu: Should Religion be left out of the Domain of Science?..... http://desicritics.org/2007/09/19/031619.php
Sethusamudram Canal Dredging ... http://www.sangam.org/taraki/articles/2006/12-31_Sethusamudram.php?uid=2152
Ram sethu project... http://ecofin.wordpress.com/2007/09/19/rama-sethu-and-the-sethusamudram-project-mired-in-controversies/


© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner