இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரல் 2008 இதழ் 100  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!
கனடா!
மகாஜனா முத்தமிழ் விழா 2008!
- த.சிவபாலு எம்.ஏ. -

மகாஜனா முத்தமிழ் விழா 2008!யாழ் மாவட்டத்தில் கொடிகட்டிப் பறந்த பாடசாலைகளில் முன்னணியில் வைத்து மதிக்கப்படும் பாடாசலைகளில் மகாஜனாக் கல்லூரியும் ஒன்று. முகாந்திரம் துரையப்பா பிள்ளையினால் ஆரம்பிக்கப்பட்டு அவரது புதல்வன் ஜெயரட்டம் அவர்களால் கட்டி எழுப்பப்பட்டு பிரபலமாகத் திகழ்ந்தது அந்தக் கல்விக்கூடம். தெல்லிப்பழையில் அமைந்த அந்தப்பாடசாலை தனது சூழலில் உள்ள மாணவர்களை மட்டுமன்றி மட்டக்களப்பு, மலையகம், மன்னார், முல்லைத்தீவு, தீவகம் எனப் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்களை உள்வாங்கிக் கல்விப்பசியை தீர்த்துவைத்த பெருமைக்கு உரியது.

உலகின் நாலாபாகங்களிலும் பரந்து வாழுகின்ற மகாஜனாகவின் செல்வக் குழந்தைகள் தங்களின் அறிவுப்பசிக்கு அமுதூட்டிய
அன்புத் தாயை மறந்துவிடாது ஆண்டுதோறும் விழா எடுத்துவருகின்றனர். அந்த வரிசையில் கனடிய மண்ணில் வாழுகின்ற மகாஜனாக் புதல்வர்கள் இணைந்து ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். இவ்வாண்டு வின்சன்ற் சேர்ச்சில் உயர்கலைக் கூட மண்டபத்;தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது முத்தமிழ் விழா. விழா பழைய மாணவர் சங்கக் கனடாக் கிழையின் தலைவர் திரு. நந்தீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

திருமதிகள் எஸ். சுப்பிரமணியம், வி. நந்தீஸ்வரன் ஆகியோர மங்கல விளக்கேற்றி விழாவை ஆரம்பித்துவைத்தனர். தேசிய கீதத்தினை
மகாஜனாவின் புதல்வர்களின் வாரிசுகள் இசைத்தனர். தொடர்ந்து நிருவாக சபை உறுப்பினர் கல்லூரிக் கீதத்தை இசைத்ததைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைதி வணக்கமும் இடம்பெற்றபின்னர் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.

முதல் நிகழ்வாக அளவையூர் இசைஞான பூபதி எஸ். கேசவமூர்த்தி;யின் தயாரிப்பில் அதிரும் நரம்பில் உதிரும் சுரங்கள்’ என்னும் பல்லிய இசை நிகழ்வு இடம்பெற்றது. கல்யாணி சுதர்சனின் மாணவர்கள் வீணை இசையைத்தர அதற்கு ஈடாக கேசவமூர்த்தியின்
மாணவர்கள் வயலினிசையையும், திருமதி சசிரேகா ரகுபதி அவர்கள் வேணுகான இசையையும், மிருதங்க வித்துவான் ரதிரூபன்
மிருதங்கத்தையும் ரி. நாகேந்திரா தபேலாவையும், ஸ்ரீகாந்தன் முகர்சிங்கையும் இசைக்க இன்னிசை நிகழ்ச்சி களைகட்டியது.
தொடர்ந்து வரவேற்புரை நிகழ்த்தினார் பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன். அனைவரையும் வரவேற்று அவர் மிக இரத்தினச்
சுருக்கமாகத் தனது உரையை நிகழ்த்தினார். பாடசாலை கல்வியை மட்டுமன்றி கலை கலாச்சாரத்தையும் வளர்து வந்துள்ளது. அந்தப்
பணியை இங்கு நாம் மேற்கொள்வது குறிப்;பிடத்தக்கது. இந்தப் பனிக்குளிரிலும் முத்தமிழ் விழாவைக் கண்டு களிக்க வந்துள்ளவர்களையும், போட்டிளில் கலந்து பரிசில்களைப் பெற வந்துள்ளவர்களையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து நிவேதா இராமலிங்கத்தின் உருவாக்கத்தில் FUSION இடம்பெற்றது. இதல் பல மகாஜனாவின் வாரிசுகள் பங்குபற்றிச் சிறப்பாக நிகழ்த்தினர். இதனைத் தாயாரித்திருந்தது அர்ஜன் பியூட்டி சென்ரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து நாட்டிய
இசையோட்டம் நிகழ்வினை நடன ஆசிரியை நடனக்கலாவித்தகர் தேவகி குலோத்துங்கபாரதியின் மாணவியர் தந்திருந்தனர்.
மிகவம்விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்ட நாடக அமைப்பு சபையோரை வைத்த கண்வாங்காது பார்த்துக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. அதனைத் தொடர்ந்து நினைவுகளின சங்கமம் என்னும் நடன நிகழ்ச்சியை ஆடலரசி செந்தூர்ச்செல்வி சுரேஸ்வரன்
தந்திருந்தார். 30 மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கு கொண்டிருந்தனர். மிகவும் சுறுசுறுப்பாக மாணவியர்கள் ஆடியதோடு அவர்கள்
மேடையை நீங்குவதும் தொடர்வதற்கும் இடையே இடைவெளியே தெரியாத படி நடன அமைப்பு அமைக்கப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.

தலைவர் வேலுப்பிள்ளை நந்தீஸ்வரன் அவர்கள் தலைமையுரை யாற்றும்போது மகாஜனாக் கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின்
கனடிய கிளை கடந்த ஆண்டு மேற்கொண்ட செயற்பாடுகள் பற்றி விரிவான ஒரு விளக்கத்தைத் தந்தார். கல்லூரிக்கு அனுப்பட்ட நிதி
உதவிகள், கணினி ஆய்வுகூடப் புனரமைப்பு, நூல் நிலையப் புனரமைப்பு என்பன உட்பட பல்வேறு செயற்றிட்டங்கள் பற்றி அவர்
குறிப்பிட்டு உரை நிகழ்த்தியதோடு, அண்மையில் கனடாவிற்கு உதயன் அகில உலகப் பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ள வந்த
கொழும்புப்பல்கலைக் கழகத்தின் கல்வித்துறைத் தலைவரும் பேராசிரியருமான சந்திரசேகரத்திற்கு மேற்கொண்ட வரவேற்பு உபசார
விருந்துபற்றியும் குறிப்பிட்டு மகாஜனாவின் மாணவர்கள் உலகெலாம் புகழ்கொடி பரப்புவதனையும் குறிப்பிட்டார்.

உன்னையே நீ அறிவாய் என்னும் நாடகக நிகழ்வு ஒரு கோர்வையில் இரண்டு நிகழ்வுகள் தரப்பட்டன. முதலாவது நிகழ்வு மாவை
நித்தியானந்தனின், மூலம் நாகமுத்து சாந்திநாதனால் தயாரிக்கு நெறிப்படுத்தப்பட்டிருந்தது. உடைந்த முட்டையைக்கருவாகக் கொண்டு
தயாரிக்கப்பட்ட நாடக அமைப்பு சிறப்பாக அமைந்திருந்தது. பண்பட்ட நடிகர்களை வைத்துத் தயாரித்து மேடையேற்றப்பட் நிகழ்வு
சிறப்பாக அமைந்திருந்தது. பார்வையாளர்களின் பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டனர் நடிகர்கள் என்பது அவர்களை அணுகி அவர்கள்
தெரிவித்த கருத்துக்கள் படம்பிடித்துக்காட்டின.

ஊனக்காக எல்லாம் உனக்காக என்னும் வில்லிசை பல நல்ல கருத்துக்களை முன்வைத்திருந்தது. இதனை கதர் துரைசிங்கம் அவர்கள் தயாரித்திருந்தார். இதில் வைரமுத்து திவ்வியராசன், ஸ்ரீ முருகன், கலகலப்பத்தீசன், நர்த்தனன், சிவாநந்தன் ஆகியோருடன் அழகையன் உடுக்கையும், திவ்விய ராஜன் கீர்த்தனன் தபேலாவையும் தந்து சிறப்பித்தனர்.

Dating அவசியமா? ஏன்னும் ஒரு நேர்காணல் நிகழ்வை நடத்திவைத்தார் கனடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன இயக்குனர் இளையபாரதி இதில் அதிபர் பொ. கனகசபாபதி, கவிநாயகர் வி. கந்தவனம், பிரணவன் நந்தீஸ்வரர், சுமுதினி சக்திவடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு முன்னர் ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்து தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு விரும்பினால் வாழ்க்கை ஒப்பந்தத்தைத் தொடலாம் அல்லது விடலாம் என்னும் கருத்தில் அதனை சரியானது என அதிபர் கனகசபாபதி அவர்கள் கருத்துத் தர கவிநாயகர் வி. கந்தவனம் அதற்கு மறுப்பான கருத்துக்களைத் தந்தார். மணவாழ்க்ககைக்கு முன்னர் ஒரு ஆடவனும் பெண்ணும் தனிமையில் சந்திப்பது கரந்தொழுகும் தன்மையைக் கொண்டது இதனால் சமூகத்தில் பல பிரச்சினைகள் தோன்றுகின்றன என்றார். பிரணவன் பக்குவப்பட்ட நிலையில் உள்ளவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையைத் தொடர முன்னர் சந்தித்து கலந்தரையாடுதல் ஏற்புடையது ஆனால் பாடசாலைக்காலத்திலோ அல்லது திருமணத்திற்கன்றி பாலியல் தொடர்பான நோக்கத்தோடு சந்திப்பது வரவேற்கத்தக்கதல்ல என்ற கருத்தை முன்வைத்தார். சுமுதினி அது ஏற்றுக்கொள்ளப்படத்தக்கது. ஆணும் பெண்ணும் சந்தித்துக் கதைப்பதோ தனிமையில் இருப்பதோ தவறு அல்ல என்றவர். பொருத்தம் பார்ப்பது போன்றதுதான் என்று Dating ஐக் குறிப்பிட்டார். பொருத்தம் பார்ப்பதும் தனிமையில் சந்திப்பதும் ஒன்றுதான் என அவர் அடித்துக் கூறியமை கருத்திற் கொள்ளத்தக்கது. பொருத்தம் பார்க்கும்போது ஆண் பெண் இருவருக்கும் தெரியாமல் பார்க்கப்படும் நிலையே அதிகமாக நடைமுறையில் உண்டு என்னும் கருத்தை அவர் மறுதலித்துக் குறிப்பிட்;டிருந்தமை சபையோரால் எற்கப்பட்டதா இல்லையா என்பது கேள்விக்குறியே?

இயல் இசை நாடகம் அனைத்தையும உள்ளடக்கிய ஒரு சிறந்த இலக்கியக் கலை இரவாக நிறைவுற்றது மகன விழா.

thangarsivapal@yahoo.ca

© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner