இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மார்ச் 2009 இதழ் 111  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
அரசியல்!
ஈழத்தமிழர்களின் போராட்டமும், பிராந்திய , பூகோள அரசியலும், கிழக்குத் தீமோரின் ஆலோசனையும்!
ஈழத்தில் நடைபெறும் போர் நடவடிக்கைகளால் அப்பாவித் தமிழ் மக்கள் நாளாந்தம் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்த வண்ணமிருக்குமிச் சூழலில்.. ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையெடுத்து யுத்தத்தை உடனடியாக நிறுத்துவதைவிட்டுச் சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறது. விடுதலைப் புலிகளை முற்றுமுழுதாக அழிக்கிறோமென்று கொக்கரித்தபடி மகிந்த ராஜபக்ஷவின் இலங்கை அரசு இராணுவ நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி நிற்கிறது. விடுதலைப் புலிகள் மக்களை மனித கேடயமாகப் பயன்படுத்துகின்றார்களென்று குற்றஞ்சாட்டினை முன்வைத்து ஒவ்வொரு நாளும் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கிறது. இதன் மூலம் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா அரசு கூறுவதென்ன? புலப்படுத்துவதென்ன? உண்மையில் முழு இலங்கை மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துமொரு ஜனநாயக அரசென்றால் இலங்கை அரசு தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளித்திருக்க வேண்டும். மாறாகப் பாதுகாப்பு வலயங்களினுள் வைத்தே தமிழ் மக்களைக் கொன்று குவித்துள்ளது. இதற்குப் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களான செஞ்சிலுவைச் சங்கம் போன்றவையே சாட்சிகளாக விளங்குகின்றன. இதனால்தான் இன்று இத்தகைய நிறுவனங்களையெல்லாம் யுத்தம் நடைபெறும் இடத்தைவிட்டு வெளியேற்றி விட்டு, தமிழ் மக்களின் அழிவின் மேல் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியிருக்கும் பகுதியையும் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதற்காக இலங்கை அரசு முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. இதற்கு சர்வதேச நாடுகளும் மறைமுகமாக உதவி வருகின்றனவென்றெ கூறவேண்டும்.

இன்றைய நிலையில் சில உண்மைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவும், இலங்கையும்....
இந்தியாவும், இலங்கையும்....இந்திய அரசைத் தனக்குச் சார்பாக வைத்திருப்பதற்கு இலங்கை அரசு கைக்கொள்ளும் தந்திரங்களில் முக்கிய்மானது இந்தியாவின் எதிரிகளுடன் சேர்ந்து விடுவதுபோல் ப்யமுறுத்துவதாகும். அண்மையில்கூட இலங்கைக்கு இந்திய அதிகாரிகள் வருகை தந்தவுடன் , இலங்கை ஜனாதிபதியின் சகோதரரான் கோத்தபாய ராஜபக்ச பாகிஸ்தானில் அவர்களது உதவிகளுக்காக நன்றி தெரிவித்துக் கொண்டிருந்ததைக் கவ்னித்தாலே இது விளங்கும். பிராந்தியரீதியில் இந்திய அரசினைத் தன் கைகளுக்குள் வைத்திருப்பதற்கு மகிந்த ராஜபக்ஷவின் அரசு ஆடும் தந்திரமான அரசியல் நடனம் இதுவரையில் அவர்களுக்கு வெற்றியினையே அளித்து வந்திருக்கின்றது. அதே நேரத்தில் இந்திய அரசு விடுதலைப் புலிகளை மிகவும் கடுமையாக எதிர்ப்பதற்குரிய காரணமாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவததைக் காரணமாக அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் இந்திய அரசியல்வாதிகள் பலர் முன்வைத்தாலும் உண்மையில் ஆழ்ந்து நோக்கினால் அது முக்கியமான காரணமாக இருக்க முடியாதோவென்று ஐயமுற வேண்டியிருக்கிறது. ஏனெனில் இந்திரா காந்தியைக் கொன்ற சீக்கியர்களைக் காரணமாக வைத்து பஞ்சாப்பைப் பழிவாங்காத இந்தியா இலங்கைத் தமிழர்களைப் பழி வாங்குவதேன்? காரணம்: பஞ்சாப் இந்தியாவினொரு அங்கம். பஞ்சாப்பைப் பழிவாங்குவது அதனைப் பிரிவினையை நோக்கி விரைவாகத் தள்ளிவிடும். அதனால்தான் பஞ்சாப்பை அரசியல்ரீதியாக அரவணைத்து அங்குள்ள சூழலை மாற்ற வேண்டிய தேவையிருந்தது. இலங்கையோ இந்தியாவினொரு மாநிலமல்ல. மேலும் விடுதலைப் புலிகளின் வெற்றி காலப்போக்கில் தமிழகத்தில் பிரிவினைக் கோசத்தை எழ
வைத்துவிடுமென்று இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் கருதியிருக்க வேண்டும். அதுவேதான் இந்தியாவின் புலிகள் மீதான் கடுமையான நிலைப்பாட்டிற்குக் காரணமாகவிருக்க வேண்டும். அதே சமயம் பிராந்தியரீதியில் தன் பாதுகாப்புக் கருதி இலங்கை அரசு தனது எதிரிகளான பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளின் பக்கம் முழுதாகச் சாய்ந்துவிடாமல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய தேவையும் இந்தியாவுக்குள்ளது. இது இவ்வாறிருக்க பாகிஸ்தான் , சீனா போன்ற நாடுகள் எதற்காக இலங்கைக்கு உதவ வேண்டுமென்றொரு கேள்வி எழலாம்?  முற்று முழுதாக இலங்கை இந்தியாவின் கட்டுப்பாட்டில் போய்விடாமல் வைத்திருக்க வேண்டிய தேவை அந்நாடுகளுக்குள்ளன. மேலும் பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் இலங்கை அரசுக்கு உதவி செய்வதன்மூலம் இலங்கைப் பிரச்சினையைத் தொடர்ந்து பற்றியெரிய வைப்பதால் இன்னுமொரு நன்மையுமுண்டு. அதுவென்ன? காலப்போக்கில் இந்தியாவைப் பிளவு படுத்தும் நடவடிக்கையினை கொந்தளிக்கும் இலங்கைப் பிரச்சினை ஏற்படுத்தும் வாய்ப்புகளுள்ளது. இதே சமயம் சீனா எதற்காக இலங்கைக்கு உதவ முனைய வேண்டும். பிராந்தியத்தில் மட்டுமல்ல , இன்றைய சர்வதேச அரசியற் சூழலில் ஆசியாவில் சீனாவுக்கெதிராக வளர்ந்துவரும் நாடு இந்தியாதான். இந்நிலையில் இந்தியாவைத் தன்கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டிய தேவை சீனாவுக்குண்டு. அதன் காரணமாக இலங்கை அரசுக்குதவ வேண்டிய நிலைப்பாட்டினை அது எடுக்க வேண்டிய தேவையிருப்பதையும் புறக்கணிப்பதற்கில்லை.

மேற்கு நாடுகளும், ஆசியாவும், இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையும்......

மேற்கு நாடுகளும், ஆசியாவும், இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையும்......பிராந்திய அரசியற் சூழலைப் பொறுத்தவரையில் எதிரிகளாகவிருந்தாலும், சர்வதேச அரசியற் சூழலைப் பொறுத்தவரையில் மேற்கு நாடுகளுக்கெதிரானதொரு கூட்டணியினை மறைமுகமாக சீனா, இந்தியா, ரஷியா போன்ற நாடுகள் வைத்திருக்கின்றார்கள்போல்தான் படுகிறது. இதனை உடைப்பதற்காகத்தான் மேற்குநாடுகள் குறிப்பாக அமெரிக்கா இந்தியாவுடன் கூடி நிற்க விரும்புகிறது. அதனால்தான் மேற்குநாடுகளால் இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஆரம்பிக்கப்படும் தீர்வுத்திட்டங்களை வெற்றியடைய விடாமல் தடுப்பதற்கு மேற்படி நாடுகள் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றன. அண்மையில் மெக்சிகோ ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கெதிராகக் கோண்டுவரவிருந்த பிரேரணையை ரஷியா முழு மூச்சுடன் எதிர்த்து நின்றதற்கான காரணம் இதனால்தான். இதனால்தான்போலும் சிங்களத் தீவிரவாதிகள் அண்மையில் கொழும்பில் இந்தியா, சீனா மற்றும் ரஷியாவுக்கு ஆதரவாகக் குரலெழுப்பியதன் காரணம். மேற்கு நாடுகளின் கைகளிலிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை மூலம் மேற்கு நாடுகள் இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு, அமைதியைப் படையொன்றினைக் கொண்டு வந்தால், அது எஞ்சியுள்ள தெற்காசியாவையும் மேற்கு நாடுகளின் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து விடுமென்று ரஷியா, இந்தியா மற்றும் சீனாவின் கொள்கை வகுப்பாளர்கள் கருதுவதாகத் தெரிகிறது.

இவ்விதமாகப் பிராந்திய மற்றும் சர்வதேச் அரசியல் சூழலுக்குள் சிக்கி இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை திணறிக்கொண்டிருக்கும் சூழலில் பாதிக்கப்படுவது ஈழத்தமிழ் மக்கள்தான். தற்போதுள்ள சூழலில் இலங்கை அரசின் இராணுவத் தீர்வு ஒருபோதுமே வெற்றியளிக்கப் போவதில்லை. படை பலத்தைப் பாவித்து அடிமைகளாக மக்களை அடக்கி வைத்துக் கொண்டு திணிக்கும் தீர்வுகளால் ஒருபோதுமே நிரந்தர சமாதானம் ஏற்பட்டு விடப்போவதில்லை. இன்று ஈழத்தமிழர்கள் செறிந்து வாழும் புலிகளின் கட்டுப்பாட்டிலில்லாத ஏனைய பகுதிகளில் அரசியற் செயற்பாடுகள் பெரிதாக முன்னெடுக்கப் படாததன் காரணங்களில் முக்கியமானது அவை திறந்தவெளிச் சிறைச்சாலைகளாக விளங்குவதுதான். அங்குள்ள அமைதி மயான அமைதி. தற்போதுள்ள சூழலில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள அனைத்தையும் பிடித்ததுமே புலிகள் அழிந்து விட்டார்களென்று இலங்கை அரசு நினைத்தால் அது முட்டாள்தனமானது. அவர்கள் புலிகளைப் பற்றித் தவறாகக் கணக்குப் போட்டுள்ளார்களென்பதே அதன் அர்த்தமாகும். புலிகளைப் பொறுத்தவரையில் தேவைக்கேற்ப தலையயும், வாலையும் காட்டுவதில் வல்ல்வர்களெளென்பதைத்தான் கடந்த கால வரலாறு காட்டி நிற்கிறது. வன்னி நிலப்பரப்பு தம் கையை விட்டுப் போகப் போகிறதென்றதொரு நிலை வருமென்று தெரிந்தால், இந்நேரம் நாடு முழுவதும் பரந்து கரந்தடித் தாக்குதல்களுக்குத் தயாராகியிருப்பார்கள். எனவே மகிந்த அரசின் இராணுவத் தீர்வு இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையத் தீர்த்து விடபோவதில்லை. மாறாக இன்னும் கொழுந்து விட்டெரிய வைத்து விடப்போகின்றது. ஏற்கனவே ஈழத்தமிழர்களின் போராட்டம், உலகத் தமிழர்களின் போராட்டமாகப் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளதோ என்றொரு ஐயத்தினைத் தான் தமிழகத்தில் , மலேசியாவிலெல்லாம் தமிழர்கள் இலங்கைத் தமிழர்களுக்காதரவாக அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பது ஏற்படுத்தியுள்ளது.

சிங்களவர்களும், தமிழர்களும்..
அதே சமயம் இலங்கைத் தம்ழர்கள் பிரச்சினை பற்றி மிகவும் தெளிவான பார்வையினைக் கொண்ட தென்னிலங்கைச் சிங்கள மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது ஆரோக்கியமானதொரு சூழல். இதற்காகவே தனனைப் பலி கொடுத்துள்ள லசந்தா விக்கிரமதுங்கவையும் ம்றந்து விட முடியாது. இந்நிலையில் , உடனடியாக யுத்த நிறுத்தமேற்படுத்தப்பட்டு, சமாதான முன்னெடுப்புகள் முன்னெடுக்கப்பட வேண்டும். சர்வதேச மத்தியஸ்துடன் கூடியதொரு சகலரும் ஏற்கத்தக்க தீர்வொன்றே தற்போதுள்ள சூழலில் நல்லதெனினும், அதற்கான சாத்தியம் அரிதே. ஏனெனில் இராணுவ வெற்றிகளால் மகிழ்ந்திருக்கும் மகிந்தரின் மனோநிலை அத்ற்கிடங்கொடுக்காதென்பதே யதார்த்தம். இந்நிலையில் தொடரும் வெற்றிகரமான ஈழத்தமிழர்களின் போராட்டத்திற்கும், நிரந்தரமான தீர்வுக்கும் பினவருவன முக்கியமான அமசங்களாகவிருக்க வேண்டுமென்பதுவே சரியானதாகப் படுகிறது.
1. அப்பாவி மக்கள் அழியும் வகையிலான தாக்குதல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
2. சிங்கள, தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்த அரசியற் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
3. பிளவுண்டு கிடக்கும் தமிழ அமைப்புகளுக்கிடையிலான முரண்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பொதுவான நட்புரீதியிலானதொரு அரசியற் கூட்டணி ஏற்படுத்தப்பட்டு, அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். கடந்தகால அரசியல் வரலாறு சுய விமர்சனம் செய்யப்பட வேண்டும். தவ்றுகள் களையப் பட வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்தும் தமிழரின் உட்பகை தென்னிலங்கை இனவாத அரசியற் சக்திகளால் பாவிக்கப்படுவது தொடரும்.
4. மக்களின் அடிப்படை உரிமைகளுக்குப் பங்கம் வராத வகையில் அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். போராட்டத்தைக் காரணமாக வைத்து இதுவரையில் இவ்விதமான உரிமைகளுக்குப் போடப்பட்ட கட்டுப்பாடுகளெல்லாம் இதுவரையில் முரண்பாடுகளை அதிகரிக்க வைக்கவே உதவியிருக்கின்றன; அத்துடன் ஒற்றுமையிழந்து பலமிழக்கவே உதவியிருக்கின்றன. இத்தவறினைத் தொடர்ந்தும் விடுவது புத்திசாலித்தனமாகப் படவில்லை.
5. உலகத்தமிழர்கள் ஒன்றிணைந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இதற்கு இதுவரைக் காலமும் நிலவிய, நிலவும் முரண்பாடுகள் இனங்காணப்பட்டு, நட்புரீதியில் அவை அணுகப்பட்டுக் களையப்பட வேண்டும். அல்லாவிட்டால் தொடர்ந்தும் கட்சியடிப்படையில் , எடுக்கப்படும் நடவடிக்கைகளால் மக்களின் முழுமையான பங்களிப்பு அரசியல் நடவடிக்கைகளுக்குக் கிடைக்காமல் போய்விடும் அபாயமுண்டு.

இத்தகையதொரு சூழலில் கிழக்குத் தீமோர் ஜனாதிபதியின் கூற்றும் ,இத்தகையதொரு சூழலில் கிழக்குத் தீமோர் ஜனாதிபதி ஜொஸ் ரமோஸ் ஹோர்ட்டாவின் கூற்றும் , வேண்டுதலும் கவனத்திற்குரியன. ஏற்கனவே பெற்ற அனுபவத்தின் விளைவாக.அவர் தன் அறிவுரையினைக் கூறியுள்ளார். மோதலில் ஈடுபட்டுள்ள இரு பகுதியினரும் உடனடியாக யுத்த நிறுத்தம் செய்ய வேண்டுமென்று வேண்டியுள்ள அவர் தான் மத்தியஸ்தம் செய்யத்தயாராகவிருப்பதாகவும் அறிவித்துள்ளார். இப்போரானது கசப்பான முடிவுவரை இறுதிவரை முன்னெடுக்கப்படுமானால் நீண்ட காலத்திற்கு இலங்கையில் அமைதி இருக்கப்போவதில்லை எனவும் எச்சரித்துள்ளார் அவர். மேலும் இவ்விதமான யுத்தமானது பழிவாங்கும் மற்றும் பயங்கரமான வெறுப்புணர்வுகளை ஏற்படுத்துமெனவும், அவை மிகுந்த அழிவுகளை உருவாக்குமெனவும் எச்சரித்துள்ள அவர் தற்போதுள்ள இலங்கையின் நிலைமையானது 1975இல் கிழக்குத் தீமோரில் நிலவிய நிலையினை ஒத்ததென்றும் நினைவு படுத்தியுள்ளார். உடனடியாக விடுதலைப் புலிகளையும், இலங்கை அரசையும் யுத்தநிறுத்தம் செய்யும்படியும், ஜெனிவா அரசியல் சாச்னத்தை மதித்து நடக்கும்படியும், சகல மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்புகளையும், சுயாதீன ஊடகங்களையும் பாதிப்படைந்துள்ள பகுதிகளுக்குள் அனுமதிக்க வேண்டுமெனவும், ஏற்கனவே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அவர்களது விருப்பத்திற்கு மாறாக இருக்கவோ அல்லது வெளியேற்றவோ முனையக் கூடாதெனவும், இராணுவ நோக்கங்களுக்காக மக்களைப் பாவிப்பதோ, அவர்களை நோக்கிக் குறி வைப்பதோ தவிர்க்கப்படவேண்டுமெனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

ஏற்கனவே பிராந்திய மற்றும் சர்வதேச அரசியலுக்குள் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் நிலைக்குத் தற்போதுள்ள சிறந்ததொரு தீர்வாக கிழக்குத் தீமோர் ஜனாதிபதியின் அறிக்கை விளங்கி நிற்கின்றாலும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியங்கள் மிகவும் அரிதானவையாகவே தென்படுகின்றன. ஆனால் இத்தகைய வேண்டுகோளொன்றுக்காகக் குரல் கொடுப்பதே சரியானதொரு நிலைப்பாடாகவும் விளங்குகிறது. அது ஒன்றே போரின் உக்கிரத்தினுள் வதங்கிக் கொண்டிருக்கும் அப்பாவி ஈழத் தமிழர்களுக்குக் கொஞ்சமாவது நிம்மதியினைத் தருமொரு செயலாகவும் தெரிகிறது.

- நந்திவரமன் -


© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner