இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரில் 2007 இதழ் 88 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
சினிமா!

சாபமும், வீழ்ச்சியும்! சதாம்ஹுசைனை முன் வைத்து மூன்று படங்கள்!

- சுப்ரபாரதிமணியன் -

'கிலோமீற்றர் சீரோ' திரைப்படத்திலிருந்து...சமகால அரசியல் நிகழ்வுகள் இந்தியப் படங்களில் வெளிப்படுவது சமீப இந்தியப் படங்களுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கிறது.
சோனாலிபோஸ’ன் 'அம்மு', கோவிந்த் நிகாலினியின் 'தேவ்" போன்ற படங்கள் இந்திராகாந்தியின் கொலை, குஜராத் வன்முறைகளை முன் வைத்து வெளிவந்திருக்கும் திரைப்படங்கள். சரிகா, நசுருதின்ஷா நடித்து வெளி வந்திருக்கும் "பர்சானியா.." குஜராத் கலவரத்தை முன் வைத்த படம். இப்படத்தில் ஆலன் என்ற அமெரிக்கன் அகமதாபாத்திற்க்கு வருகிறான். இந்தியா மற்றும் காந்தி பற்றின அக்கறையும் நேசமும் இந்தியாவிற்க்கு அவனை அழைத்து வந்திருக்கிறது. கோத்ரா சம்பவங்களில் நிகழ்வு அப்பூமியை கொலைக் களமாக்கியதை நேரிடையாகக் காணுகிறான் இதில். ( இப்படம் குஜராத்தில் திரையிடப்படமுடியாமல் நரேந்திர மோடி செய்த தடைகள் சமீபத்தியவை).

மேற்கத்தியத் திரைப்படங்களில் சமகால அரசியல் நிகழ்வுகளும் அரசியல் தலைவர்களின் பிண்ணணியும் வெகு சாதாரணமாக முன் வைக்கப்படுவதுண்டு. என்றாலும் விமர்சனமும் கலந்த தன்மை அவ்வகைபடங்களை இன்னொரு நிலைக்கு கொண்டு செல்கின்றன. ஈரான் ஈராக் பிரான்ஸ் கூட்டுத் தயாரிப்பில் சதாம் ஹுசேனின் ஆட்சிப் பற்றியும் அதன் பின்புலம் வெளிப்படும் படங்கள் வெளியாகியிருக்கின்றன. சதாம் ஆட்சியின் கொடுமைகளும் அது பற்றின விமர்சனத்தையும் "கிலோமீட்டர் ஜ“ரோ" என்ற படம் கொண்டிருக்கிறது. அக்கோ என்ற குர்திஸ் இனத்தைச் சார்ந்தவன் சதாம் ஹுசேனின் ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்படுகிறான். அவனின் கனவு அந்த நாட்டை விட்டு ஓடிப் போவதுதான்.ஆனால் அது நிறைவேறுவதில்லை. அக்கோவின் மனைவி நாட்டைவிட்டு ஓட சம்மதிப்பதில்லை. படுக்கையில் கிடக்கும் அவளின் அப்ப'வை நிர்கதியாக்கிவிட்டு ஓடுவது அவளுக்கு உடன்பாடில்லை. ஈராக் ராணுவத்தில் கணவன் கட்டாயமாக்கப்பட்டு தள்ளப்படுவதை விட ஓடிப் போவது ஆறுதல்தான். ஆனால் படுக்கையில் கிடக்கும் தகப்பன் சுமையாகிறான். தேவதூதர்கள் அவனுக்காக, கிழவனுக்காக வந்து கொண்டிருக்கிறார்கள் என்று கிழவனிடம் எரிச்சலுடன் சொல்லிக்
கொண்டிருப்பது அவனின் பொழுது போக்காகிறது. கட்டாயமாக்கப்பட்டு, அடி உதைக்குள் தள்ளப்படும் சக மனிதர்களின் அவஸ்தையூடே அவனும் ராணுவத்தில் சேர்க்கப்படுகிறான். ஈரான் ஈராக் போர்முனைக்கு செல்கிறான். அங்கு மேல் அதிகாரிகளின் அதிகார வன்முறையும், சாதாரண சாப்பாட்டிற்கும் சிரமப்பட வேண்டிய சூழலும், குர்திஸ் இனத்தவன் என்பதாலான அவமானங்களும் அவனை அங்கிருந்து ஓடச் செய்ய எத்தனிக்கின்றன. நிர்பந்தத்தால் அவனுடன் இருக்கும் வேறு ஒருவனின் அனுபவங்கள் வேறு வகையிலானது. பெருத்த உடம்பைக் கொண்ட ஒருவன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஓடுவது, பதுங்குக்குழிக்குள் ஒளிவது போன்றவற்றுக்குக் கூட சிரமப்பட்டு மேலதிகாரிகளால் உதைபட வேண்டியிருக்கிறது. அற்ப உணவை பகிர்ந்து கொள்வதிலும் ரொட்டித் துண்டின் மிச்சம் கையிலிருக்கும் போது பறக்கும், குண்டு வீசும் விமானங்களின் போக்கால் அதையும் தவற விட வேண்டியதாகிறது. தப்பி ஓடுகிற கனவை அக்கோ மனதில் தேக்கி வைத்துக் கொண்டே இருக்கிறாள். செத்துப் போன ஈராக்கியன் ஒருவனின் சவப்பெட்டியை அவனின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணி அக்கோவிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவனுக்கு ஆறுதல் தான் போர் சூழலில் இருந்து தப்பித்துவிடலாம். அங்கு சென்ற பின் எப்படியாவது தப்பித்து குர்தீஸ் எல்லைக்குள் தஞ்சமடைவது அவனின் லட்சியமாகிறது. சவப் பெட்டியை எடுத்துச் செல்லும் ராணுவ வண்டியோட்டி குர்தீஸ் இனமக்கள் மீது பகைமை கொண்ட அராபியன். பயணம் தொடர்கிற போது சதாம் ஹுசேனின் சிலையொன்று வாகனம் ஒன்றில் இணையாகவும், நாடு முழுவதும் ஹுசேனின் புகழ் பாடிய படி தொடர்ந்து செல்கிறது. வண்டியோட்டியுடன் அக்கோவிற்கு வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன.குர்தீஸ் மக்கள் மீதான வெறுப்பு , அவர்கள் ஈரான் ஆட்சிக்கு விசுவாசமானவர்கள் அல்ல, அல்லா அவர்களை தண்டிப்பார், ஹுசேன் அல்லாவின் தூதன் என்பது பற்றின வாக்குவாதங்களாய் அவை அமைகின்றன. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் அபாயங்களும் நிகழ்கின்றன.

'கிலோமீற்றர் சீரோ' திரைப்படத்திலிருந்து...சவப்பெட்டிகளை தாங்கிய பல ராணுவ வண்டிகள் வெவ்வேறு திசைகளுக்குச் செல்கின்றன. அவை மலைப் பகுதி சாலைகளில் கொண்டு செலவ்து மேலதிகாரிகளால் வலியுறுத்தப்படுகிறது." சவப்பெட்டிகளை பிரதான சலைகளில் கொண்டு சென்றால் ஈராக்கியனின் மனது புண்படும். நாமென்ன கோழைகளா." ஆனால் சவப்பெட்டியைச் சுற்றிய ஈராக் கொடி மீதான அவமதிப்பை அக்கோ நிகழ்த்திக் கொண்டே இருக்கிறான். துடைக்க கொடியை பயன்படுத்துவது, அலைந்து திரியும் எருமை சவப்பெட்டியின் மீது சாணம் இடுவது, சவப்பெட்டியின் நாற்றத்தை மிகைப்படுத்துவது என. இறந்த ராணுவ வீரனின் வீட்டை கண்டுபிடிக்கிற சில நாட்களின் தேடலில்பின் அந்த வீட்டின் உள்ளிலிருந்து எழும் சிரிப்பலைகள் பெட்டியை ஒப்படைக்க மனம் இசையாமல் , அனாதையாக விடப்பட்ட நிலப்பரப்பில் சவப்பெட்டியை வைத்துவிட்டு அக்கோவும் வண்டியோட்டியும் மறைகிறார்கள். அக்கோ வீடு வந்து குர்தீஸ் பிரதேசத்திற்கு மனைவியையும், மாமாவையும் வண்டியொன்றில் அழைத்து வந்துவிடுகிறான். ஊமையாக்கப்பட்ட ஒருவன் அத்துவான வீடு ஒன்றை அக்கோவிற்கு தருகிறான். அக்கோ பாலுறவுக்கு கிழட்டு மாமா படுத்திருக்கும் கட்டில் தேவைப்படுவதால் அவர் கீழிறக்கப்பட்டு கட்டில் பயன்படுத்தப்படுகிறது வெட்ட வெளியில். விமானங்கள் வீசும் குண்டுகளின் பொழிவு அவர்களை நிர்கதியாக்குகிறது. பாக்தாத்தை அமெரிக்கா கைப்பற்றினச் செய்தியை கேட்கிறார்கள். குர்திஸ்தான் வாழ்க என்று அக்கோவும் அவன் மனைவியும் கூச்சலிடுகிறார்கள். பாடல்களால் தங்களின் மகிழ்ச்சியை தங்களின் சொந்த குர்திஸ் மண்ணில் தனிமையில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இப்படத்தில் வரும் குழந்தை எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கிறது.எங்காவது தப்பி ஓடிவிடத்துடிக்கும் அப்பாவோ, படுக்கையில் கிடந்து கொண்டு எதையாவது அரற்றிக் கொண்டிருக்கும் தாத்தாவோ, எல்லாவற்றையும் எரிச்சலாகப் பார்க்கும் அம்மாவோ, மரத்தடியில் ஒதுங்கி நிற்கையில் வெடிக்கும் குண்டோ எல்லாம் வேடிக்கைப் பொருட்கள்தான். மிரட்சியுடன் அவற்றைப் பார்க்கிறது. குழந்தைத்தனம்
மேலிட எல்லாவற்றையும் வியப்பாய் பார்த்துக் கொண்டிருக்கிறது.

குழந்தைத்தனம் இழந்து போய் கன்னி வெடிகளுக்கும், அகதி முகாம்களுக்கும், உயிர் ஊசலாட்டத்திற்கும் இடையில் மிரட்சியானப் பார்வையைத் தள்ளி விட்டு எந்த கணமும் சாவை எதிர்நோக்கும் குழந்தைகளை " Turtles can fly "என்ற படத்தில் காணலாம். கிழக்கத்திய நாடுகளின் குழந்தைத்தன்மையை இழந்து விட்ட குழந்தைகளை இதில் காணலாம். நவீன் அரசியலின் குரூரங்களும் மனிதத் தன்மை இழந்து போன மனிதர்களின் மத்தியில் வெறும் பிண்டமாய் திரிகிறவர்களாய் குழந்தைகளைப் பார்க்க வேண்டி இருக்கிறது. குழந்தைகளின் ஆதிக்க சக்திகளின் வன்முறையை சுலபமாகக் காண முடிகிறது. சிவில் யுத்தங்களுக்கு நடுவில் அகப்பட்டுக் கொண்ட மனிதர்களின் காலோரங்களில் குழந்தைகள் நடை பயில்வதை பார்க்க நேரிடுகிறது.

ஈரான் ஈராக் எல்லையோர குர்திஸ் அகதிகள் முகாமை இப்படம் மையமாகக் கொண்டிருக்கிறது.அமெரிக்க யுத்தம் ஆரம்பிப்பதற்கு சற்று முந்தைய கால கட்டம். அவ்வகை யுத்தம் பற்றினச் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளவும் அவற்றை தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கவும் அகதி முகாமிலும் சுற்றிலும் இருப்பவர்கள் ஆயத்தப்படுத்திக் கொள்கிறார்கள். மேகங்களிடையே பறந்து திரியும் விமானங்களைக் அடையாளம் கண்டு தங்கள் மீட்சிக்கானவை அவை என்று முதியவர்கள் நம்புகிறார்கள்.குர்திஸ் அகதி முகாமில் இருக்கும் குழந்தைகளுக்கு ஒரு பையன் குழுத்தலைவனாக இருக்கிறான்.பதிமூன்று வயதினான அவனின் பெயர் மறந்து போய் " சாட்டிலைட் " என்ற பட்டப் பெயரே நிலைத்து விடுகிறது. பக்கத்து கிராமத்திலிருந்து வந்து அகதி முகாமில் தங்கியிருக்கும் ஹென்கோவ் கன்னி வெடி விபத்தில் ஒரு கையை இழந்தவன். அவன் ஒருவகையில் ஆருடம் சொல்கிறவனாகவும் இருக்கிறான். இந்தப் பகுதி அபாயகரமானது, இங்குள்ள டேங்க் வெடிக்கும் , இங்குள்ள கன்னி வெடிகள் அபாயகரமானவை என்பதையும் அவனின் ஆருடம் ஏகதேசம் யதார்த்தமாக்குகிறது. "சேட்டலைட்டுக்கு " இது அதிர்ச்சி தருகிறது. ஊரும் அகதிமுகாமும் அவனை வழிபட்டுக் கொண்டிருக்க அவன் ஹன்கோவை ஆராதிக்கிறான். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைத் திரும்பத் திரும்ப கேட்கிறான். அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்யப்போவது உறுதி என்கிறான். அகதிகளின் வாழ்க்கை ஒரு நிலைக்கு வருகிற கனவு ஊர் பெரியவர்களுக்கு உண்டாகிறது. ஆண்டானாக்களைத் திருப்பி வைத்து யுத்த செய்திகளை காண்பிக்க முயல்கிறான். ஆனால் செய்திகள் கிடைப்பதில்லை. டிஸ் ஆண்டனா தேடி ஆயுத சந்தைக்கு தன்னுடன் இருக்கும் அகதி முகாம் சிறுவர்களுடன் செல்கிறான். காய்கறிக்கூறுகள் போல் ஆயுதங்கள் கிடக்கின்றன. டிஸ் ஆண்டனா வாங்கி வந்து பொருத்துகிறான். அமெரிக்கா போர் நிகழ்த்தப்போவது
உறுதியாகிறது. அகதிகள் உயிரோடு இருக்க சாத்தியங்களை நினைத்துக் கொள்கிறார்கள். குர்தீஸ் அகதி முகாமில் இருக்கும்
துருக்கியர்கள், ஈராக்கியர்கள் வன்மத்துடன் பார்க்கிறார்கள்.குர்தீஸ் அகதிகள் நாடற்றவர்களாக அலைகிறார்கள். குழந்தைகளும் இளம்
சிறுவர்களும்ம் அவர்களின் மத்தியில் அனாதைகளாகத் திரிகிறார்கள்.

அந்த அனாதை குழந்தைகளுக்கு வேலை வாங்கிக் கொடுப்பவனாகயும் 'சாட்டலைட்' இருக்கிறான். கன்னி வெடிகளை அகற்றுவது அந்த அகதிக் குழந்தைகளுக்கு வேலையாகிறது.என்ன கூலி என்பது பற்றி பேரம் நடத்துகிறான். மீட்டகன்னி வெடிகளை ஆயுத சந்தைக்கு குழந்தைகளுடன் எடுத்துப் போய் விற்கவும் செய்கிறான். சதாம் ஹ’சேனின் ராணுவத்தினரால்
புதைக்கப்பட்டவை அந்தக் கன்னி வெடிகள்.குழந்தைகள் கன்னி வெடிகளை அகற்ற வேண்டியிருக்கிறது. கைகள் இல்லாத சிறுவர்கள் வாயினால் கன்னிவெடிகளை திறக்க வேண்டியிருக்கிறது.செயலிழக்கச் செய்ய வேண்டியிருக்கிறது. இவ்வகையில் கைகளை இழந்த ஒரு பையன் 'சட்டிலைட்' போலவே ' பையன்' என்ற பெயருடன் உலா வருகிறான். 'சாட்டிலைட்டுக்கு அக்ரின் என்ற பெண் மீது ஈர்ப்பு.
அவளுக்கு சிறு சிறு உதவிகள் செய்து நற்பெயர் எடுக்க முயல்கிறான்.ஆனால் அவள் நிராகரித்தபடியே இருக்கிறாள் . அவளுடன் நடக்கத் தடுமாறும் குழந்தை உள்ளது. அக்குழந்தை ஈராக் ராணுவ வீரர்களின் பாலியல் வன்முறை காரணமாக அவள் பெற்றது. அக்குழந்தையை அவள் வெறுக்கிறாள். கல்லைக் கட்டி குழந்தையை குளத்தில் எரிகிறாள். மண்ணெண்ணையை ஊற்றி மூச்சு திணறச் செய்கிறாள். இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறாகவும் இருக்கிறாள். டிஸ் ஆண்டெனா, 'சாட்டலைட்' இவர்கள் அமெரிக்கப் போரை அறிவிக்கிறார்கள்.ஊர் பெரியவர்கள் அமெரிக்கர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். குர்தீஸ் இன மக்கள் சதாம்ஹ’சேனை எதிர்த்துப் போரிட்டபோது அமெரிக்கா ஆதரவு அளித்திருக்கிறது. அமெரிக்கர்களின் வருகை ஆறுதாலாகக் கணிக்கப்படுகிறது. அமெரிக்கர்கள் அகதி முகாமில் நுழைழந்து முன்னேறுகிறார்கள். குழந்தையை மீட்கும் முயற்சியில் கால்களை இழந்த 'சாட்டிலைட்'  வலியால் அரர்றிக் கொண்டிருக்கிறான். ஆருடம் சொல்கிற 'பையனின்' கைகள் இல்லாத உடம்பின் மீது குழந்தை பலமாக இறுக்கிக் கொள்கிறது. கன்னி வெடிகளை வாயின் மூலம் அகற்றி பணம் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது. சதாமின் ஆட்சியின் வன்முறைகளிலிருந்து தப்பும் கனவுகளில் பெரியவர்கள் மூழ்குகிறார்கள் அமெரிக்கர்கள் கதாநாயகர்களாக்கப்படவில்லையென்றாலும்
சதாமிற்கு முன் ஆறுதல் தருகிறவர்களாக இருக்கிறார்கள்.சதாம் சிலை உடைபடுகிறது.ஒரு பையன் தன்னிடமிருந்த கன்னி வெடிகளை விற்று உடைந்த சதாம் உசேனின் சிலையிலிருந்த கையை வாங்கி வருகிறான். கைகள் இல்லாத பையன் சொல்கிறான்: " 275 நாட்களுக்குப் பிறகு நிலமை மாறும்.'. கன்னி வெடிப்பில் ஊனமுற்ற 'சாடிலைட்' அமெரிக்க ராணுவத்தினர் முகாமைக் கடந்து போவதைக்காணச் சகிக்காதவன் போல் முகத்தைத் திருப்பிக் கொள்கிறான்.

குர்தீஸ் குழந்தைகளின் அவலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஈராக் ஆட்சி அதிகாரத்தில் குர்தீஸ் இனத்தவர் சில முக்கிய பதவிகளில் இருந்தாலும் அதிகாரமற்றவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.நாடற்றவர்களாய் அகதி முகாம்களில்
இருக்க வேண்டியதுமாகிறது. துருக்கியர்கள், இராக்கியர்களுக்கெதிரான அவர்களின் போராட்டமும் தொடர்கிறது.
தங்களின் சொந்த நிலத்தில் இருந்து விரட்டப்பட்டு ஈரான் ஈராக் துருக்கி சிரியா ஆர்மினியா என் சிதறின் வாழ்க்கையைக்
கைக்கொண்டிருப்பவர்கள் குர்தீஸ் மக்கள்.

சதாமிற்கு எதிராக கொமேனி ஈராக்கியகுர்துக்களுகு உதவியிருக்கிறார். கொமேனிக்கு எதிராக சாதம் ஈரானிய குர்துக்களுக்கு உதவியிருக்கிறார். துருக்கிய அரசை எதிர்த்த குர்தீஸ் போராளி ஒச்சலனுக்கு சிரியா இடமளித்து உதவி செய்தாலும் பின்னால் துர்ருக்கி, இஸ்ரேல், சிரியா ஒன்று சேர்ந்து கொண்ட போது ஒச்சலன் சிரியாவை விட்டு வெளியேற்றப்பட்டார்.அமெரிக்கா ஒச்சல்லனின்
இயக்கத்தைத் தடை செய்து பயங்கரவாதி என முத்திரை குத்தி மரண தண்டனை விதித்தது. ஒச்சல்லனை விடுதலை செய்ய வேண்டும் என்றக் குரலை எழுப்பியவர்களில் முக்கியமானவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற ஹெரால்ட் பிண்டர். குர்தீஸ் மக்களின் சித்திரவதி அனுபவங்களின் அடிப்படையில் அவர் இரண்டு நாடகங்களை உருவாக்கியிருக்கிறார்.

ஹெரால்டுபிண்டர் குறிப்பிடும் குர்தீஸ் மக்களின் அனுபவங்களை இப்படம் காட்டுகிறது எனலாம். அவர்களின் பிரச்சினைகளும்,
வாழ்வியலும் மாறாமல் -தீர்வை நோக்கிச் செல்லாமல்- ஒரு வகையில் அமெரிக்காவைப் பார்த்து ஆசுவாசம் கொள்ளும்
காலகட்டத்திற்குள் தள்ளி விட்டதை இப்படங்கள் காட்டுகின்றன் அது மாயை என்பதையும், அமெரிக்காவின் வேடமும் 275 நாட்களுக்குப் பின்னால் நிலமை மாறும் என்று ஆருடம் சொல்லும் 'பையனை' நினைவுபடுத்துபவையும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அங்கு அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

'Maroaned in Iraq" என்ற படத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் சதாமின் மீது கடுமையான விமர்சனங்களை முன்
வைக்கிறவர்களாகவும் அவன் வாழ்வு நாசமாகப் போகட்டும் என்று சபிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள் வளைகுடாபோருக்குப்
பின்னதான காலகட்டத்தை இப்படம் கொண்டிருக்கிறது.ஈரான் குர்தீஸ்தானத்தில் மக்கள் போரினால் வீடு, உடமைகளை இழந்து
அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மிர்சா என்ற பாடகன் தனது மனைவி ஒருத்தி சாகக் கிடக்கிறாள் என்பதை அறிந்து தனது இரண்டு வளர்ந்த மகன்களுடன் பயணமாகிறார். ( அவர்கள் இருவரும் மகன்களும் பாடகர்கள்தான். ஒருவனுக்கு இன்னொரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது விருப்பம். இன்னொருவன் தன் மனைவிகள் =7 மனைவிகள்,
11 குழந்தைகள்=ஆண் குழந்தையைப் பெற்றுத் தராததால் இன்னொரு திருமண்ம் தேவை என்று நினைப்பவன்) ஈராக் குர்தீஸ்தான் பகுதிக்குச் செல்கிறார்கள். இடையில் கொள்ளைக்காரர்களால் இரட்டைச் சக்கர வாகனம், உடமை என பறி போகிறது. மிர்சாவின் மூத்த மனைவியைத் தேடுகிறார்கள். அவள் மிர்சாவை விட்டு வேறொருவனுடன் சென்று இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. ஈரானில்
பெண்கள் பாடக் கூடாது என்ற நிர்பந்தம் அவளை அப்படி துரத்தியிருக்கிறது. பயணத்தி மூத்த மகன் தனக்குப் பிடித்தமான ஒரு பெண்ணை அகதி முகாமில் சந்திக்கிறான். ( அவளின் பாடல் அவனை உருக்குகிறது) இரண்டாவது மகன் அகதி முகாமில் இருக்கும் இரு ஆண் குழந்தைகளி தத்தெடுக்க விரும்புகிறான். மிர்சா தன் மூத்த மனைவியின் இருப்பிடத்தைக் கண்டறிகிறான். அவள் ரசாயன ஆயுதங்களின் பாதிப்பில் குரலை இழந்து செத்துப் போயிருப்பது தெரிகிறது. அவளின் குழந்தையை எடுத்துக் கொண்டு திரும்புகிறான் மிர்சா. சதாமின் போரால் லாபடடைகிற வியாபாரிகள் அவனைப் புகழ்வதும், பின்னால் கொள்ளைக்காரர்களால் அவற்றை இழக்கிற
போது அவனை இகழ்வதும் , சாபமிடுவதும் இப்படத்தில் சாதாரணமாக இடம் பெறுகிறது. ரசாயன ஆயுத பாதிப்பால் குரல்களை இழந்த பாதிப்பில் அலறும் பெண்கள், ஒட்டு மொத்தமாக பிணங்களை புதைக்கையில் எழும் பெண்களின் ஓலங்கள் சதாமிற்கு எதிரான சாட்சியங்களாக அமைந்துள்ளன.

ஒரு புறம் நீதிமன்றத்தில் அமெரிக்காவை எதிர்த்து சதாம் எழுப்பிய கேள்விகளும் இன்னொரு புறம் அவனின் வன்முறைக் கொலைகளும் , அமெரிக்காவை வெளியேறச் சொல்லி நடக்கும் போராட்ட வன்முறைகளும் அதனை ஒட்டிய பதில்களும் என் இப்படங்களின் வெவ்வேறு பரிமாணங்கள் அமைந்துள்ளன. சதாமிற்கு தூக்கு நிறைவேற்றப்பட்ட சூழலில் குர்தீஸ் இன மக்களை கொன்ற குற்றத்திற்காக இப்படங்கள் அவருக்கு எதிரான சாட்சிப் பதிவுகளாக அமைந்துள்ளன.

சுப்ரபாரதிமணியன்
srimukhi@sancharnet.in

© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner