இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவம்பர் 2008 இதழ் 107  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
அரசியல்!
மீள்பிரசுரம்: தினமணி.காம்!
இலங்கைப் பிரச்னை: தமிழக எம்.பி.க்கள் ராஜிநாமா
சென்னை, அக் 14: இலங்கையில் நடைபெறும் போரை 2 வாரத்துக்குள் நிறுத்த, மத்திய அரசு முயற்சி எடுக்காவிட்டால் தமிழக எம்.பி.க்கள் ராஜிநாமா செய்வார்கள் என்று தமிழக அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதிசென்னை, அக் 14: இலங்கையில் நடைபெறும் போரை 2 வாரத்துக்குள் நிறுத்த, மத்திய அரசு முயற்சி எடுக்காவிட்டால் தமிழக எம்.பி.க்கள் ராஜிநாமா செய்வார்கள் என்று தமிழக அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைப் பிரச்னை குறித்து விவாதிக்க, தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. 27 கட்சிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தின் முடிவில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம்:-

இலங்கையில் நடைபெற்று வரும் போரால், ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் விழி கலங்கி வழி பார்த்து நிற்கின்றனர்.

போர் நிறுத்தப்பட்டு ஈழத்தில் அமைதியும் சக வாழ்வும் திரும்புவதற்கேற்ற நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுத்து அதனை நிறைவேற்ற வேண்டும்.

ராஜிநாமா செய்வார்கள்... இலங்கை அரசுக்கு மத்திய அரசு ஆயுத உதவி வழங்கி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அண்டை நாடு என்ற முறையில் நல்லெண்ண அடிப்படையில் மத்திய அரசால் வழங்கப்படும் இவ்வகை உதவிகள் இனப் படுகொலையைத் தீவிரப்படுத்தி தமிழர்களை அழித்திடவே இலங்கை அரசால் பயன்படுத்தப்படுகிறது. எனவே, அந்த வகையான உதவிகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

ஆயுத உதவி,போர் நிறுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகள் ஆகியன செயல்வடிவம் பெறவும், இலங்கையில் இரண்டு வாரத்துக்குள் போர் நிறுத்தம் செய்யவும் மத்திய அரசு முன்வர வேண்டும். இல்லாவிட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும்.

போர் நிறுத்தம் செய்யப்பட்டு, போரினால் பாதிக்கப்பட்டோர் உடனடியாக இடம் பெயர்ந்து வாழ்வதற்கு இந்திய அரசு உதவ வேண்டும். உணவு, உறைவிடம், மருந்து போன்றவற்றையும் வழங்கவேண்டும்.

மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் செய்வதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும்.

மனிதாபிமான முறையில் பல்வேறு உதவிகளை வழங்க முன்வரும் தொண்டு நிறுவனங்களின் முயற்சிகள் வேறு வழிகளில் திருப்பி விடப்படாமல் பாதிக்கப்பட்டோருக்கு செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகளின் உதவியை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: தீர்வு காண வேண்டுகோள்

சென்னை, செப். 14: தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, உடனடியாக நீடித்த நிலையான தீர்வை எட்டி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 6-வது தீர்மானமாக இது குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், ""வாழ்வாதாரம் தேடி கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்குகின்றனர். மீனவர்களை சிறைப் பிடித்து மனித நேயமற்ற முறையில் நடத்துகின்றனர். கருணை துளியுமின்றி சுட்டுக் கொல்கின்ற கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தச் செயல்களை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கண்டிக்கிறது. மனித நாகரிகமற்ற, மனித உரிமைகளை முழுவதும் மீறுகின்ற இந்தச் செயல்களுக்கு மத்திய அரசு உடனடியாக நீடித்த நிலையான தீர்வை எட்டி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.'' இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

சகோதர யுத்தத்தால் பாழ்பட்டோம்: முதல்வர் கருணாநிதி

சென்னை, அக். 14: ""இலங்கையில் நடைபெறுகின்ற அக்கிரமங்களை இன்னும் பார்த்துக் கொண்டிருப்பதற்குக் காரணம், சகோதர யுத்தத்தினால் பலவீனப்பட்டு, பாழ்பட்டது தான்'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தலைமையேற்று அவர் பேசியது:-

சில கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிருப்தியின் காரணமாகத் தான் வரவில்லை. ஆனால், இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் அனைவரையும் போல ஒத்தக் கருத்து உடையவர்கள் தான். அந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வராத காரணத்தால் அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்று நினைத்து விடக் கூடாது.

யார் நம்மிடமிருந்து விலகிச் சென்றாலும் கூட, இந்தப் பிரச்னையில் அவர்களை அழைத்து வைத்து, இழுத்து ஓரணியில் நாம் திரண்டு மத்திய அரசை வலியுறுத்தி தமிழ் மக்களை காப்பாற்றும் முயற்சியில் வெற்றியடைவோம்.

சகோதர யுத்தத்தால்... நீண்டகாலமாக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குள் சகோதர யுத்தம் கூடாது என்பதை வலியுறுத்தி வருகிறேன். அத்தகைய சகோதர யுத்தத்தால் ஏற்பட்ட விளைவுகளை நன்கு அறிந்து இருக்கிறோம்.

இந்திரா காந்தியால் கிடைத்த உதவிகளைக் கூட சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் அந்தச் சகோதர யுத்தம் நமது இலக்கைப் பாழ்படுத்தி விட்டது. மதுரையில் "டெசோ' மாநாடு நடத்தினோம். அந்த மாநாட்டில் ஒரு செய்தி கிடைத்தது. "டெலோ'வின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தைக் கொல்லப் போகிறார்கள் என்று. அவரைக் கொன்று விடாதீர்கள் எனக் கூறினேன். ஆனால், ஸ்ரீ சபாரத்தினம் கொல்லப்பட்டார். இப்படி சகோதர யுத்தத்தினால் நாம் பலவீனப்பட்டு விட்டோம்.

இன்று இலங்கையில் நடைபெறுகின்ற அக்கிரமங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றால், அதற்குக் காரணம் நாம் பலவீனப்பட்டது தான்.

இதேபோன்று, விடுதலை இயக்கத் தலைவர் பத்மநாபாவுடன், 10 பேர் கொல்லப்பட்டனர். இப்படி சகோதர யுத்தத்தால் பாழ்பட்டு விட்டோம் என்பதை மறந்து விடாமல், அந்தச் சகோதர யுத்தங்கள் காட்டிய பாடத்தை இப்போதாவது உணர்ந்து, இலங்கைத் தமிழர்களுக்கு ஒற்றுமையாக இருந்து உதவிகள் செய்ய வேண்டும்.

இயன்ற முயற்சிகளை மேற்கொள்வேன்... தமிழ் இனத்தைக் காப்பாற்ற ஈழத் தமிழகத்தில் நடைபெறுகின்ற போரை நிறுத்த அனைவரும் (அனைத்துக் கட்சிகளும்) ஒன்றாக வந்து ஒருமித்த கருத்தை வழங்கி, இந்திய அரசுக்கு ஓர் உந்துதலையும், இலங்கை அரசுக்கு எச்சரிக்கையையும் வழங்கியுள்ளீர்கள். இந்தத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த என்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வேன். அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஒத்துழைப்பைப் பெற்று அந்த முயற்சியிலே வெற்றி பெறுவோம் என்றார் முதல்வர் கருணாநிதி.

நன்றி: தினமணி.காம்

© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner