இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவம்பர் 2009 இதழ் 119  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இதழ் அறிமுகம்!

தினமணி.காம்
நகர்வலம்: இரு நட்சத்திரங்கள்!

- சாருகேசி -

அழகழனான எழுத்துக்குச் சொந்தக்காரர் ஆர்வியைப் பற்றி எழுத நினைக்கையிலேயே, மனசுக்குக் குஷியாக இருக்கிறது. ஆர்ப்பாட்டமில்லாத அர்த்தமுள்ள நடையழகு; கொஞ்சம் கூடச் சலிப்பேற்படுத்தாத, வழுவழுப்பான பாதையில் பயணிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும் வார்த்தை லாகவம்; கிளுகிளுப்பைப் பூசிக்கொண்டு புன்முறுவல் பூக்கவைக்கும் சொல்லாடல்கள்; சுருக்கமாகச் சொன்னால், தமிழ்மொழியின் சகல சிறப்புகளையும் பளீரிடும் மின்னல்கொடி போல அங்கங்கே வீசிக்காட்டும், பாசங்கற்ற பளிங்கு நடையழகுக்குச் சொந்தக்காரர் எழுத்தாளர் ஆர்வி.சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி மாணவர்களுக்காக வெளிவந்த இரண்டு பிரபல இதழ்கள் "கல்கண்டு', "கண்ணன்'. முன்னதற்கு ஆசிரியர் தமிழ்வாணன். பின்னதற்கு ஆசிரியர் "ஆர்வி'. "ஆர்வி' மறைந்து சரியாக ஒரு வருடம் ஆன தினத்தன்று (ஆகஸ்ட் 29), அவர் குடும்பத்தார் இரண்டு எழுத்தாளர்களுக்குப் பொற்கிழி அளித்துப் பாராட்டுத் தெரிவித்தார்கள். அந்த இரு எழுத்தாளர்களும் இரண்டு நட்சத்திரங்களின் பெயரை தங்களின் புனைப் பெயராகக் கொண்டு எழுதியது விநோத ஒற்றுமை!

ஒருவர் "பூரம்' என்ற பெயரில் எழுதிய சத்தியமூர்த்தி. புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் பணியாற்றியவர். கணித மேதை ராமானுஜன் பணிபுரிந்த நாற்காலியில் அமர வாய்ப்புக் கிடைத்ததாலோ என்னவோ,"பூரமு'ம் கணிதத்தில் ஆர்வம் மிகுந்தவராக இருந்தார்.

அறை எண் 12, 302 திருவல்லிக்கேணி ஹை ரோடு முகவரி கொண்ட சீசன் லாட்ஜ்தான் "பூரம்' அப்போது தங்கியிருந்த இடம். அந்த அறையில் இருந்தபடி அவர் எழுதிய பல சிறுகதைகள் கண்ணன் இதழில் வெளியாகியிருந்தன. ஒரு சிறுவர் நாவலுக்குப் பரிசும் பெற்றார். இதற்குப் பிறகு "பூரம்', சுதேசமித்திரன் வார இதழ், கல்கி, கலைமகள் என்று பெரியவர்கள் பத்திரிகைகளில் எழுதத் தொடங்கினார். கலைமகள் வர்ணக் கதைப் போட்டி நடத்தியபோது, இவரது "கருவளை' என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது.

"கண்ணன்' இதழ் மூலம் ஏராளமான இளம் எழுத்தாளர்களை உருவாக்கினார் ஆர்வி. கண்ணன் இதழ் ரொம்பவும் குழந்தைத்தனமாக இல்லாமல், பள்ளிக்கூட மாணவ-மாணவியரின் தரத்துக்கும் வயதுக்கும் ஏற்றதாக இருந்தது. சிறுகதைகளும், நாவல்களும் அந்த வயதுச் சிறுவர் - சிறுமியரின் வாழ்க்கையை ஒட்டி அமைந்திருந்தன.

இலக்கியவீதி இனியவன், ஜே.எம்.சாலி, ஜோதிர்லதா கிரிஜா, வாதூலன், தே.பார்த்தசாரதி, "சுறாமீன்', இரா.முகி,மண.ரங்கசாமி, ரமணீயன், மாயூரன், ரேவதி என்று ஆர்வி பட்டறையில் தயாரான "கண்ணன்' எழுத்தாளர்கள் பலர் இருக் கிறார்கள்.

பூரம் எழுதிய "கண்ணன்' சிறுகதைகள் ஒரு தொகுப்பாக வெளியாகி இருக்கிறது. சிறுகதைகள் மீது அவருக்கு அளவு கடந்த ஆர்வம் இருந்த காரணத்தாலேயே "பூரம் சிறுகதை ரசிகர்கள் மன்றம்' தொடங்கி, பல எழுத்தாளர்களை அதில் கலந்து கொள்ளச் செய்தார்.

சமீபத்தில் சில ஆண்டுகளாக அவர் பார்வை இழப்பு ஏற்பட்டு, புதிதாக எதுவும் எழுத இயலவில்லை என்பதற்காகவே ரசிகர் மன்றம் அமைத்து, அவற்றைப் படிக்கக் கேட்டு மகிழ்ந்தார் என்றும் கூறலாம். வேதங்களில் அவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக, பலருக்கு அவற்றை இலவசமாகக் கற்பித்தார். இதற்காக அவரை காஞ்சி மடத்தில் கவுரவித்தார்கள்.

பாராட்டுப் பெற்ற இன்னொருவர், "ரேவதி' என்ற பெயரில் சிறுவருக்காக எழுதி வந்த ஈ.எஸ்.ஹரிஹரன். அழ.வள்ளியப்பாவுக்குப் பின்னர் இவர் கோகுலம் மாத இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். தினமணியின் "சிறுவர் மணி'க்கும் ஆலோசகராக இருந்து சிறுவர் இலக்கியத்தை வளர்த்திருக்கிறார்.

இவர்ஆர்வியின் சிறுவர் இலக்கியத்தை ஆய்ந்து உருவாக்கிய"சிறுவர் இலக்கியத்தில் ஆர்வி படைத்த கண்ணன் நாவல்கள்' என்ற நூல் இவரது மிக முக்கியப் பணி. இதை உருவாக்க ரேவதிக்கு மூன்று ஆண்டுகளாயினவாம்.

ஆர்வி "கண்ணன்' இதழில் சமூகக் கதைகள் எழுதியது தவிர, "ஜனா' என்ற புனைபெயரில் சரித்திரக் கதைகளும் எழுதியிருக்கிறார். (சந்திரகிரி கோட்டை, காளிகோட்டை ரகசியம்).

அசட்டுப் பிச்சு,நகைச்சுவை கலந்த துப்பறியும் கதை. சைனா - சூசூ, ஜக்கு , ஜக்கு துப்பறி கிறான், ஜம்பு, புதியமுகம், காலக் கப்பல் (விஞ்ஞானக் கதை), ஒருநாள் போதுமா,லீடர் மணி என்று மொத்தம் 11 நாவல்களை அவற்றின் கதையம்சம், நடைச் சிறப்பு, பாத்திரப் படைப்பு, என்று பலகோணங்களில் அலசியிருக்கிறார் ரேவதி. ஆர்வியின் படைப்புகளில் இயல்பான வர்ணணை இழையோடும்.

அதிலும் கிராமப்புறத்தை வர்ணிக்கும்போது நேரே பார்ப்பதுபோல் இருக்கும். சிறுவர் இலக்கியத்தில் "ஆர்வி படைத்த கண்ணன் நாவல்கள்' வெறும் விமர்சனப் படைப்பு அல்ல. நாவலில் அத்தனை அம்சங்களையும் வாசகனுக்கு விளக்கிச் சொல்லும் முழுமையான படைப்பு. ரேவதியின் உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் வெளிப்படும் நூல்.

ஆர்வி மறைந்த முதலாண்டு நிகழ்வில், அவர் உருவாக்கிய இரண்டு எழுத்தாளர்கள் பாராட்டுப் பெற்றது மகிழ்ச்சி தருகிறது.

நன்றி: http://www.dinamani.com/

மீள்பிரசுரம்: பூவனம் வலைப்பதிவிலிருந்து..
பெரியவர் ஆர்வி!

- ஜீவி -

அழகழனான எழுத்துக்குச் சொந்தக்காரர் ஆர்வியைப் பற்றி எழுத நினைக்கையிலேயே, மனசுக்குக் குஷியாக இருக்கிறது. ஆர்ப்பாட்டமில்லாத அர்த்தமுள்ள நடையழகு; கொஞ்சம் கூடச் சலிப்பேற்படுத்தாத, வழுவழுப்பான பாதையில் பயணிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும் வார்த்தை லாகவம்; கிளுகிளுப்பைப் பூசிக்கொண்டு புன்முறுவல் பூக்கவைக்கும் சொல்லாடல்கள்; சுருக்கமாகச் சொன்னால், தமிழ்மொழியின் சகல சிறப்புகளையும் பளீரிடும் மின்னல்கொடி போல அங்கங்கே வீசிக்காட்டும், பாசங்கற்ற பளிங்கு நடையழகுக்குச் சொந்தக்காரர் எழுத்தாளர் ஆர்வி.அழகழனான எழுத்துக்குச் சொந்தக்காரர் ஆர்வியைப் பற்றி எழுத நினைக்கையிலேயே, மனசுக்குக் குஷியாக இருக்கிறது. ஆர்ப்பாட்டமில்லாத அர்த்தமுள்ள நடையழகு; கொஞ்சம் கூடச் சலிப்பேற்படுத்தாத, வழுவழுப்பான பாதையில் பயணிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும் வார்த்தை லாகவம்; கிளுகிளுப்பைப் பூசிக்கொண்டு புன்முறுவல் பூக்கவைக்கும் சொல்லாடல்கள்; சுருக்கமாகச் சொன்னால், தமிழ்மொழியின் சகல சிறப்புகளையும் பளீரிடும் மின்னல்கொடி போல அங்கங்கே வீசிக்காட்டும், பாசங்கற்ற பளிங்கு நடையழகுக்குச் சொந்தக்காரர் எழுத்தாளர் ஆர்வி.

மயிலாப்பூர் அருள்மிகு முண்டக்கண்ணி அம்மன் கோயில் தெருவில் 'கலைமகள்' காரியாலயத்தில் உதவியாசிரியராய் முப்பதாண்டுகாலத்திற்கு மேலான பணி. கலைமகள்-கி.வா.ஜ, மஞ்சரி-தி.ஜ.ர., கண்ணன்-ஆர்வி என்கிற முக்கூட்டு, கலைமகள் பத்திரிகை அதிபர் நா.ராமரத்தினம் தலைமையில் தமிழ் பத்திரிகை உலகில் சாதித்த சாதனை அளப்பரியது.

சிலருக்கு நிரந்தர வருமானம் கொடுக்கக்கூடிய வேறு தொழில்கள் இருக்கும். பொழுது போக்குக்காகவும், அல்லது மொழிமேல் இருக்கும் ஆளுமைக்காகவும் எழுத்தாளர் ஆனவர்கள் உண்டு. ஆனால் ஆர்வி அவர்கள் அப்படிப்பட்டவர் இல்லை. பாரதி சொன்னது போல, 'எழுத்து எமக்குத் தொழில்' என்று ஒரு குடும்பத்தையும் நடத்திக்கொண்டு எழுத்தை நம்பியே வாழ்ந்து காட்டியவர். முப்பத்துமூன்று ஆண்டுகளுக்கு மேலாக 'கலைமகள்' பத்திரிகைக் குழுமத்தில் ஒருவராய் இருந்ததோடு, கலைமகள் வெளியீடான 'கண்ணன்' சிறுவர் பத்திரிகைக்கு ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். தமது ஆசிரியர் பணியில் எத்தனை எத்தனை இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து, உற்சாக மூடடி, தட்டிக்கொடுத்து, பாராட்டி எழுத்துலகத்திற்கு அறிமுகப்படுத்தி ஆசிர்வதித்திருக்கிறார்?...எழுதினால், என் நினைவில் இருப்பவர்கள்--இளையவன், மாயூரன் குருமூர்த்தி, அம்பை, சரஸ்வதி ராமநாதன், ஜெயலஷ்மி, லெமன், ஜே.எம்.சாலி, இலக்கியவீதி இனியவன், ரமணீயன், டாக்டர் ஹரிஹரன் (ரேவதி), ஜோதிர்லதாகிரிஜா,தங்கமணி, அம்பை, தே.பார்த்தசாரதி, டி.கே.ஜெயராமன என்று பட்டியல் நீளும். இதில் இன்று பல்வேறு துறைகளில் கால்பதித்திருப்பவர்களும் ஏராளம்!

ஆர்வி அவர்களின் எழுத்தை இன்று படித்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. அறுபது ஆண்டுகளுக்கு முன்னால், அழகு தமிழில் இப்படி ஒரு எழுத்து நடையழகா?..மென்மையான உரையாடல்கள் மூலம் கதைகளை நகர்த்திச் சென்ற பாங்கை வியப்பதா, கொஞ்சம் கூட சுருதி பேதமற்ற அந்த ஆற்றோட்டமான நடையழகைப் புகழ்வதா, நறுக்குத் தெரித்தாற்போல் அங்கங்கே அளவாக வந்து விழுந்த சொல்லாடல்களின் சொகுசைக் கண்டு சொக்கி நிற்பதா?--எல்லாம் கலந்து செம்மாந்த தமிழில் ஒன்றுபோல் இன்னொன்று இல்லை என்று சொல்லும்படி, வெவ்வேறு நிலைக்களன்களில் எத்தனை நாவல்கள்?..

அவர் எழுத்து 'தமிழால் எதையும் சாதிக்கமுடியும்' என்று சாதித்த எழுத்து. அரைநூற்றாண்டுக்கு முன்னால் ஒரே நேரத்தில் நாலைந்து பத்திரிகைகளில் தொடர்கதை எழுதிய ஒரே எழுத்தாளர் ஆர்வியாகத்தான் இருக்க முடியும். "கண்ணன்" சிறுவர் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து சிறுவர் இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்கு மகத்தானது. இன்று பிரபலமாகத் திகழும் பலருக்கும் குழந்தைக் கவிஞர் பலருக்கும் ஆரம்பப்பள்ளிக்கூடம் "கண்ணன்" தான்!

தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 1918-ம் ஆண்டு டிசம்பர் மாதம்,6-ம் தேதி ராமையா-சீதாலஷ்மி தம்பதியருக்குப் பிறந்த ஆர். வெங்கட்ராமன் என்கிற சுட்டிக் கண்ணன், பிற்காலத்தில் தனது இளம் வயதில், ஆர்வி என்று அன்புடன் தமிழ் பத்திரிகை உலகால் அழைக்கப்பட்டு "கண்ணன்"என்கிற சிறுவர் பத்திரிகைக்கு ஆசிரியாவார் என்று யார் கண்டார்கள்?..

போனவாரம் ஆர்வி அவர்களை அவரது மாம்பலம் வீட்டில் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். (*ஆர்வி அவர்கள் 29/08/2008 அன்று சென்னையில் காலமானார். ) முகத்தில் அந்த மலர்ச்சியும் குறுஞ்சிரிப்பும் இப்பொழுதும்.பதினாறு வயதில் கதராடைக்கு மாறியது இன்றும் தொடர்கிறது. மடிப்பு கலையாமல் வெள்ளைவேளேரென்று இவர் கதராடை அணிவது கண்டு அன்றைய எழுத்தாளர் வட்டத்தில் ஏகப்பட்ட வியப்பு. 1941-ல் தனிநபர் சத்தியாகிரத்தில் பங்கு கொண்டு கைதாகி, பாபநாசத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் ஆர்வி.

இவரும்,'மோகமுள்' தி.ஜானகிராமனும் பால்ய காலத்திலிருந்து சிநேகிதர்கள். ஆர்வியின் எழுத்து லாகவத்தைக் கண்டு தி.ஜா.வுக்கு மோகம். தி.ஜா. சென்னை தவிர்த்து வேறு எந்த ஊரில் இருந்தாலும், பிற்காலத்து தில்லியில் வாசம் செய்த போதும், ஆர்வியின் ஒவ்வொரு நாவலையும் பாராட்டி உடனுக்குடன் கடிதம் எழுதிவிடுவாராம்.

பெரியவர் ஆர்வி அவர்களின் முதல் நாவல் 1942-ல் சுதேசமித்திரனில் பிரசுரமாகியிருக்கிறது. நாவலின் பெயர்: 'உதயசூரியன்' எததனை வருஷங்களுக்கு முன்னால், எவ்வளவு அழகான பெயர்! இதெல்லாம் விட்டு என்னுடைய பிரமிப்பு என்னவென்றால், அத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் அழகு தமிழ் உரைநடையில் எப்படி இவ்வளவு அழகாக இவரால் எழுதமுடிந்தது என்பதுதான். அது ஒரு வரம்; அவ்வளவுதான் சொல்லமுடியும்.

ஆர்வி ஐயா எழுதியதில், கல்கியில் தொடராக வந்த 'தேன்கூடு', 'காணிக்கை', சுதேசமித்திரனில் தொடராக வந்த 'திரைக்குப்பின்', 'அணையாவிளக்கு', மேம்பாலம், முகராசி, சொப்பனவாழ்க்கை, பனிமதிப்பாவை', 'மனிதநிழல்கள்', சந்தனப்பேழை','யெளவனமயக்கம்','வெளிவேஷங்கள்','அலை ஓய்ந்தது' மற்றும் காவிரிபூம்பட்டினம் தொடர்பாக எழுதிய 'இருளில் ஒரு தாரகை', பல்லவ பிற்கால சோழர் காலத்தை ஒட்டி எழுதப்பெற்ற 'ஆதித்தன் காதலி'-- ஆகிய நாவல்கள் என் நினைவில் நிற்கின்றன.

'வெள்ளிக்கிழமை' என்று ஒரு சிறுகதைத் தொகுப்பும் ஞாபகத்தில் இருக்கிறது. பதினெட்டுக்கு மேற்பட்ட நாவல்கள், பதினாங்கு சிறுகதைத் தொகுப்புகள், சிறுவர்களுக்காக பத்துக்கு மேற்பட்ட புதினங்கள்,பதினைந்துக்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு மொழிபெயர்பு நூல்கள், பதினைந்துக்கு மேலான ரேடியோ நாடகங்கள் -- கட்டுரைகள் என்று நிறைய எழுதிக்குவித்திருக்கிறார்.

தொடர்ந்து பெரியவர் திருநாவுக்கரசுவின் வானதிப் பதிப்பகம் இவரது நூல்களை வெளியிட்டிருக்கிறது. விசாரித்ததில் ஆர்வி அவர்களிடம் அவர் எழுதியதில் ஒரு நாவல் கூட அவரிடம் தற்போது இல்லை என்பது மனசைக் கலக்கும் ஒரு விஷயம். ஆனால் இதைப்பற்றியெல்லாம் எந்த சலனமும் இல்லாமல், நித்யானுஷடானங்களைச் செய்து கொண்டு அவர் உண்டு -- அவர் குடியிருப்பின் முன் இருக்கும் அவர் கட்டிய பிள்ளையார் கோயில் உண்டு என்று அவர் கதராடையைப் போலவே, வெள்ளை மனத்துடன் அவருக்கே உரித்தான புன்முறுவல் பூக்க மகிழ்ச்சியுடன் நம்மிடம் உரையாடுகிறார் இந்த தொண்ணூறு வயதுப் பெரியவர்.

இவரது 'குங்குமச்சிமிழ்' சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ் வளர்ச்சிக் கழகம் சார்பாக தமிழ்நாடு அரசு பரிசளித்துப் பெருமைப்பட்டிருக்கிறது. 'இலக்கிய சிந்தனை' பரிசு, கம்பன்விழாவில் பொற்கிழி என்று நினைவில் நிற்கிற, மற்றும் நினைவில் நில்லாத எத்தனை பரிசுகள், பாராட்டுகள்!

ஒரு எழுத்தாளருக்கு ஒரு நூல் 'மாஸ்டர்பீஸ்' என்று குறிப்பிடுவார்களே, அந்த அர்த்தத்தில் ஆர்வி என்றவுடன் விமர்சகர்கள் குறிப்பிடும் நூல்,'அணையாவிளக்கு'. " 'கலைமகள்' எனக்கு முழுச்சுதந்திரம் கொடுத்திருந்தது. எல்லா பத்திரிகையிலும் நான் எழுதினேன். அப்பொழுது நான் குடியிருந்த மயிலாப்பூர் வீடு எப்பொழுதும் 'கலகல'வென்று எழுத்தாளர்கள் எல்லோரும் கூடும் ஸ்தலமாக இருக்கும்.." என்று பழைய நினைவுகளைத் திரட்டி சிரித்துக் கொண்டே சொல்கிறார் ஆர்வி. இவர் ஆசிரியராய் இருந்த 'கண்ணன்' பத்திரிகையில் எழுத்துலக ஜாம்பவான்கள் கிட்டதட்ட அத்தனை பேரும் குழந்தைகளுக்காக எழுதியிருக்கிறார்கள்.... திருவாளர்கள் இராஜாஜி, சி.சுப்ரமணியம், பக்தவத்சலம், ஆர்.வெங்கட்ராமன், மு.வ., தெ.பொ.மீ., கவிமணி, கி.வாஜ.,கி.சந்திரசேகரன், வாரியார் பெ.நா.அப்புஸ்வாமி, அழ.வள்ளியப்பா, அம்பை, ஆதவன், தி.ஜ.ர., சபாநாயகம், சுறாமீன் ராமநாதன், சுகி சுப்ரமணியன், ச.கு.கணபதி, சரஸ்வதி, குகப்பிரியை,கொத்தமங்கலம் சுப்பு, தம்பி சீனிவாசன், ராஜ சூடாமணி, கவிஞர் தமிழ் ஒளி, கே.பி.நீலமணி, மண.அரங்கசாமி, கிருஷணன் நம்பி, ராது, கி.ரா., ஜே.எம்.சாலி, புவனைக்கலைச்செழியன் என்று லிஸ்ட் நீண்டு கொண்டே போவதைப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. தமிழை முழுமூச்சுடன் வளர்த்தவர்களை நினைக்கையில் மிகுந்த பெருமிதமாகவும் இருக்கிறது.

1946-ல் கல்கி தலைவராய், ஆர்வி செயலாளராருமாய் தமிழ் எழுத்தாளர் சங்கம் துவக்கியது-

1960-ல் தி,ஜானகிராமன், கி.ரா., ந.சிதம்பர சுப்ரமணியன், தி.ஜ.ர., க.சோமசுந்திரம், நாரண துரைக்கண்ணன் ஆகியோரைக் கூட்டி தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கத்தை உருவாக்கியது--

குழந்தை எழுத்தாளர் சங்கத் தலைவராக மூன்று ஆண்டுகள் பணியாற்றி அன்றைய துணை குடியரசுத் தலைவர் மேதகு ஜாகிர்ஹூசேன் அவர்களைக் கொண்டு மூன்றாவது குழந்தை இலக்கிய மாநாட்டைத் தொடங்கச் செய்தது--

சென்னையில் தேசிய பத்திரிகையாளர் சங்கத்தை அரும்பாடுபட்டுத் தொடங்கியது--

இந்திய எழுத்தாளர் அமைப்பின் சென்னைக்கிளை உருவாக செயல்பட்டு, அதன் செயல் உறுப்பினராய் பணியாற்றியது---

என்று எழுத்து, மொழிவளர்ச்சி தொடர்பாக எத்தனையோ பணிகள்....

எல்லாவற்றையும் தன் துறைசார்ந்த பணிக்கடமைகள் என்று செய்து முடித்து, இன்று வெகுசாதாரணமாய் இருக்கும் பெரியவர் ஆர்வி அவர்களைப் பார்த்தால்----

'நிறைவான வாழ்க்கை என்றால் வாழ்ந்து பார்க்க வேண்டும்' என்று சொல்வார்களே, அந்தச் சொற்றொடரின் முழு அர்த்தம் புரிகிறது.

http://jeeveesblog.blogspot.com
Monday, April 21, 2008

மீள்பிரசுரம்: அப்புசாமி.காம்!
ஆர்வி ஒரு சகாப்தம்!

- டாக்டர். ரேவதி
-

அழகழனான எழுத்துக்குச் சொந்தக்காரர் ஆர்வியைப் பற்றி எழுத நினைக்கையிலேயே, மனசுக்குக் குஷியாக இருக்கிறது. ஆர்ப்பாட்டமில்லாத அர்த்தமுள்ள நடையழகு; கொஞ்சம் கூடச் சலிப்பேற்படுத்தாத, வழுவழுப்பான பாதையில் பயணிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும் வார்த்தை லாகவம்; கிளுகிளுப்பைப் பூசிக்கொண்டு புன்முறுவல் பூக்கவைக்கும் சொல்லாடல்கள்; சுருக்கமாகச் சொன்னால், தமிழ்மொழியின் சகல சிறப்புகளையும் பளீரிடும் மின்னல்கொடி போல அங்கங்கே வீசிக்காட்டும், பாசங்கற்ற பளிங்கு நடையழகுக்குச் சொந்தக்காரர் எழுத்தாளர் ஆர்வி.''சிறுவர்களுக்காக எத்தனையோ இதழ்கள் வந்திருக்கலாம். ஆனால், 'கண்ணன்' போல் சிறுவர் இலக்கியத்தைச் செழிக்க வைத்து, 22 ஆண்டுகள் விழுது பரப்பிச் சிறப்போங்கி நிலைத்த ஓர் இதழ் நேற்றும் வந்ததில்லை; இன்றும் வரவில்லை!''
நவீன அச்சு வசதிகள் இல்லாத காலத்தில், இப்படிப் பலரும் பாராட்டும் சாதனையைச் செய்தவர், திரு.ஆர்வி! தொண்ணூறு வயதை நெருங்கிக்கொண்டிருக்கிற சூழலிலும், அதே புன்னகையுடன் அனைவரையும் பெருமிதம் பொங்கப் பார்த்தவண்ணம் இருக்கிறார், ஆர்வி!

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தைந்து முதல் எழுபத்தைந்துக்கு இடைப்பட்ட முப்பதாண்டுக் காலத்தைச் சிறுவர் இலக்கிய வரலாற்றில் சிறுவர் பத்திரிகைகளின் பொற்காலம் எனலாம். ஏராளமான, தரமிக்க சிறுவர் பத்திரிகைகள் இந்தக் காலகட்டத்தில்தான் தோன்றி மறைந்தன. இந்த முப்பதாண்டு காலத்தில் தமிழ் படிக்கும் சிறுவர் மனத்தைக் கொள்ளை கொண்ட இதழ்களுள் சிறப்பான இடத்தை வகித்த பெருமைக்குரியது, கலைமகள் குடும்பத்திலிருந்து வெளிவந்த கண்ணன் ஆகும். தமிழ்க்குழந்தைகளின் உள்ளத்தில் தன்னிகரில்லாத பெருமையோடு கோலோச்சிய கண்ணன் இருபத்திரண்டு ஆண்டுகள் வலம் வந்து, சிறுவர் இலக்கியத்தின் எல்லாப் பிரிவுகளையும் பொலிய வைத்துச் சிறுவர் இலக்கிய வரவாற்றில் மார்க்கண்டடேயனாகிவிட்டது.

தன்னிகரில்லாத கண்ணன் இதழைத் தோற்றுவித்த பெருமை கலைமகளுக்குரியது எனில், அதற்குத் தாயாக இருந்து கவனத்தோடு வளர்த்து அதைச் சிறுவர் உள்ளத்தில் நிலைக்க வைத்த பெருமை ஆர்வி என்கிற ஆர்.வெங்கட்ராமன் அவர்களையே சாரும்.

ஆர்வி அவர்கள் குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் தலைவராய் இரண்டு ஆண்டுகள் இருந்துள்ளார். அது, சங்கம் பதிவு செய்யப்பெறாது இயங்கி வந்த காலம். அதனால் தலைவர் அல்லது பொதுச் செயலாளருக்குச் சங்க அலுவல்களைக் கவனிக்க வசதியாக அவ்வப்பொழுது சங்கம் இடம் மாறிக் கொண்டே இருந்த காலகட்டம். திருவல்லிக்கேணியில், ஈஸ்வரதாஸ் லாலா தெரு, எண்49இல் நான் குடியிருந்த ஒண்டுக் குடித்தனத்திலுங்கூட சில காலம் சங்கம் செயல்பட்டது! எனவே, ஆர்வி தலைவரானதும் சங்க அலுவலகம் சென்னை, இராயப்பேட்டை வெஸ்லி பள்ளிக்கு எதிரேயிருந்த சர்வென்ட்ஸ் ஆப் இந்தியா சொசைட்டி கட்டடத்திற்கு மாறியது. ஆர்வி அவர்கள் குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் தலைவரான ஆண்டில் (1964) ஐந்தாவது குழந்தை இலக்கிய மாநாட்டை மிகச் சிறப்பாகச் சென்னையில் நடத்தினார். அன்றைய குடியரசுத் துணைத் தலைவர் ஜாகீர் ஹ¤சேன் அவர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்துக் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களுக்கும், ராஜி என்ற நடேசன் அவர்களுக்கும் கேடயம் வழங்கினார். இராஜாஜி மண்டபத்தில் இரண்டு நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற்ற இம்மாநாட்டின் வரவேற்புக்கு குழுத் தலைவராகச் சுதந்தரப் போராட்ட வீரர் திருமதி.எஸ்.அம்புஜம்மாள் அவர்கள் சிறப்பாகச் செயலாற்றி மாநாட்டின் சிறப்புக்கு உறுதுணையாக இருந்தார். இந்திய அளவில் குழந்தை எழுத்தாளர் சங்கம் அறிப்பட்ட இந்த மாநாடு பெரிதும் உதவியது.

ஆர்வி அவர்கள் சிறுவர் இலக்கியத்திற்கு ஆற்றிய அரிய தொண்டைப் பாராட்டி, 1981 ஆம் ஆண்டு காரைக்குடியில் நடந்த மாநாட்டில் கேடயம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

http://www.appusami.com/

காமிக்ஸ் பூக்கள் வலைப்பதிவிலிருந்து...
தமிழ் காமிக்ஸ் முன்னோடிகள் - ஆர்.வி!

- அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் -


அழகழனான எழுத்துக்குச் சொந்தக்காரர் ஆர்வியைப் பற்றி எழுத நினைக்கையிலேயே, மனசுக்குக் குஷியாக இருக்கிறது. ஆர்ப்பாட்டமில்லாத அர்த்தமுள்ள நடையழகு; கொஞ்சம் கூடச் சலிப்பேற்படுத்தாத, வழுவழுப்பான பாதையில் பயணிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும் வார்த்தை லாகவம்; கிளுகிளுப்பைப் பூசிக்கொண்டு புன்முறுவல் பூக்கவைக்கும் சொல்லாடல்கள்; சுருக்கமாகச் சொன்னால், தமிழ்மொழியின் சகல சிறப்புகளையும் பளீரிடும் மின்னல்கொடி போல அங்கங்கே வீசிக்காட்டும், பாசங்கற்ற பளிங்கு நடையழகுக்குச் சொந்தக்காரர் எழுத்தாளர் ஆர்வி.நீண்ட...... நெடுங்காலத்திற்கு பின் மீண்டும் சந்திக்கிறேன். இனி இந்த தொய்வு இருக்காது. இடைப்பட்ட காலத்திற்குள் நண்பர்கள் எவ்வளோவோ சாதித்துள்ளார்கள். நான் சற்றே பின் தங்கி விட்டேன். இருப்பினும் உங்களை தொட்டு விட முயற்சிக்கிறேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! அன்பு நண்பர் விஸ்வா-விற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! தமிழ் காமிக்ஸ் படைப்புகளில் பெரும்பான்மையான படைப்புகள் பிற மொழிகளில் இருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டவையே! நமது லயன் குடும்ப வெளியீட்டாளர்களின் பங்கு குன்றில் இட்ட விளக்கு போல யாவரும் அறிந்ததே. இவர்களுக்கும் முன்னால் ஒரு சில படைப்பாளர்கள் தமிழ் கலாச்சார பின்னணி கொண்ட கதைகளை உள்ளூர் ஓவியர்களை கொண்டு காமிக்ஸ் வடிவில் படைத்துள்ளனர். அவர்களில் முதன்மையானவர் 'ஆர். வி.' என்று அழைக்கப்பட்ட ஆர். வெங்கட்ராமன். ஆயிரம் பிறைகள் கண்ட ஆர். வி 20 நாவல்கள், 500 -க்கும் மேற்பட்ட சிறுகதைகளை படைத்துள்ளார். 1950-70 - களில் 'கண்ணன்' என்ற சிறுவர் இதழில் ஆசிரியராக பணிபுரிந்தார்.

குழந்தைகளுக்காக 25-க்கும் மேற்பட்ட நாவல்களையும் 15-க்கும் மேற்பட்ட காமிக்ஸ்-களையும் ஆர். வி. படைத்துள்ளார். சிறுவர் இலக்கியப் பணிக்காக பல்வேறு விருதுகளை பெற்றவர் ஆர். வி. கண்ணன் சிறுவர் இதழ் 1930-களில் தமிழுக்கு பெருந்தொண்டாற்றிய கலைமகள் குழுமத்தால் வெளியிடப்பட்டது. ஆர். வி. படைத்த 'இரு சகோதரர்கள்' என்ற சித்திரக்கதையை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். எண்பதுகளில் பூந்தளிர், கோகுலம் போன்ற இதழ்களில் ஒரு சில பக்கங்களில் வந்த கதைகள் போன்றதுதான் இந்த கதை.

சித்தியால் கொடுமைப் படுத்தப்பட்ட இரு இளவரசர்கள் அரண்மனையை விட்டு வெளியேறுகிறார்கள். போகும் வழியில் ஒரு பாறை மேல் இளைப்பாறும்போது ஒரு பூதம் தோன்றி மூத்தவன் (குமார்) மன்னன் ஆவான் என்றும் இளையவன் (சுகுமார்) மந்திரி ஆவான் என்றும் கூறி மறைகிறது. வழியில் தம்பியை பிரியும் குமார் யானையால் ஒரு நாட்டின் மன்னனாக தேர்ந்தெடுக்கப் படுகிறான். தொலைந்து போன தம்பியை தேட முனைந்து அதில் தோல்வி காண்கிறான். இதற்கிடையே பாம்பால் தீண்டப்பட்டு மரணம் அடையும் சுகுமார் ஒரு மந்திரவாதியால் காப்பற்றப்பட்டு ஒரு கிழவியை சந்திக்கிறான். அரக்கனை கொன்றால் நாட்டில் பாதியும், தனது மகளையும் தருவதாக அந்த நாட்டின் மன்னன் அறிவித்து இருந்தான். கிழவியும் அந்த அரக்கனால் கஷ்டபடுவதை அறிந்து அரக்கனை கொல்கிறான். ஆனால் ஒரு ஏமாற்று பேர்வழி சுகுமாரை ஏமாற்றி அரசை அடைகிறான். சுகுமாரை கொல்லவும் முனைகிறான். தப்பிய சுகுமார் கப்பலில் நாடுகளை சுற்றுகிறான். திறமையான சிற்பியாகவும் மாறுகிறான். ஒரு நாள் ஒரு நாட்டின் மந்திரி தனது மகளுடன் கப்பலுக்கு வர அவளிடம் காதல் வயப்படுகிறான் சுகுமார். மந்திரி சுகுமாரை கொல்ல முனைய அவன் மன்னனிடம் நீதி கேட்க போகிறான். அப்போது மன்னன் தனது அண்ணன்தான் என்பதை அறிகிறான். மந்திரி தனது மந்திரி பதவியையும் மகளையும் சுகுமாருக்கு அளிக்கிறான். முன்பு ஏமாற்றியவனை வென்று அவனது ராஜ்யத்தை அண்ணனின் ராஜ்யத்துடன் இணைக்கும் சுகுமார் மன்னனின் மகளை அண்ணனுக்கு மணம் முடிக்கிறான். பிறகு என்ன? சுபம்தான்!

ஸ்ரீ என்பவர் சிறப்பாக சித்திரங்களை தீட்டியுள்ளார். இருபது பக்கங்களில் கருப்பு வெள்ளையில் வானதி பதிப்பகத்தால் இந்த காமிக்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. 1973 -ல் ஐந்தாம் பதிப்பாக வெளிவந்த இந்த காமிக்ஸ் மிக நேர்த்தியாக பதிக்கபெற்றுள்ளது. சிறுவர் இலக்கியத்தில் வானதி நிறுவனம் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததை இதன் மூலம் நம்மால் அறிய முடிகிறது.

ஆர்.வி., வானதி பதிப்பகம், ஸ்ரீ, தினமணி-சிறுவர்மணி, கிங் விஸ்வா மற்றும் இணைய நண்பர்கள்

செவ்வாய், 14 ஏப்ரல், 2009
நன்றி: http://ayyampalayam.blogspot.com/2009/04/blog-post.html

கலைச்சோலை வலைப்பதிவிலிருந்து...
இலக்கியம் பேசும் இதயம்

- பாரதிமோகன் -


அழகழனான எழுத்துக்குச் சொந்தக்காரர் ஆர்வியைப் பற்றி எழுத நினைக்கையிலேயே, மனசுக்குக் குஷியாக இருக்கிறது. ஆர்ப்பாட்டமில்லாத அர்த்தமுள்ள நடையழகு; கொஞ்சம் கூடச் சலிப்பேற்படுத்தாத, வழுவழுப்பான பாதையில் பயணிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும் வார்த்தை லாகவம்; கிளுகிளுப்பைப் பூசிக்கொண்டு புன்முறுவல் பூக்கவைக்கும் சொல்லாடல்கள்; சுருக்கமாகச் சொன்னால், தமிழ்மொழியின் சகல சிறப்புகளையும் பளீரிடும் மின்னல்கொடி போல அங்கங்கே வீசிக்காட்டும், பாசங்கற்ற பளிங்கு நடையழகுக்குச் சொந்தக்காரர் எழுத்தாளர் ஆர்வி.இலக்கியம் என்பது பன்முகம் கொண்டது. அந்தந்த கால கட்டத்தின் பதிவுகளை, எந்த காலத்து மக்களும் படித்து தெரிந்து, தெளிந்து கொள்ளும் படியான படைப்பே இலக்கியம் எனலாம். இவ்வாறான இலக்கியங்களுள் சிறுவர் இலக்கியம் என்பது குறிப்பிடதகுந்த ஒன்று. சிறுவர் இலக்கியம் என்பது சிறுவர்களுக்காக எழுதப்படும் வரையப்படும் இலக்கியம் ஆகும். பொதுவாக 12 வயதுக்கு உட்பட்டோருக்காக இது எழுதப்படுகிறது. விடலைப் பருவத்தினராக எழுதப்படும் நூல்களும் சிறுவர் இலக்கியம் என்று சில வேளைகளில் வகைப்படுத்தப்படுவதுண்டு. சிறுவர் கல்வியில் மட்டுமல்லாமல், அன்றாட வாழ்விலும் சிறுவர் இலக்கியம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது.

சிறுவர் இலக்கிய வரலாற்றில் 1945முதல் 1975க்கு இடைப்பட்ட முப்பதாண்டுக் காலத்தைச் சிறுவர் பத்திரிகைகளின் பொற்காலம் எனலாம். ஏராளமான தரமிக்க சிறுவர் பத்திரிகைகள் இந்தக் காலக்கட்டத்தில்தான் தோன்றி மறைந்தன. இந்த முப்பதாண்டு காலத்தில் தமிழ் படிக்கும் சிறுவர் மனதைக் கொள்ளை கொண்ட இதழ்களுள் சிறப்பான இடத்தை வகித்த பெருமைக்குரியது 'கண்ணன்' இதழ் ஆகும்.  'கண்ணன்' இதழை சிறுவர் உள்ளங்களில் நிலைக்க வைத்த பெருமை ஆர்வி என்கிற ஆர். வெங்கட்ராமன் அவர்களையே சாரும்.அந்தளவிற்கு 'கண்ணன்' இதழில் அறிஞர் பெருமக்கள், புகழ் பெற்ற கல்வியாளர்கள், நாடு போற்றும் தலைவர்கள்,பெயர் பெற்ற கதாசிரியர்கள், பல துறையைச் சேர்ந்த கலைஞர்கள், பள்ளியாசிரியர்கள் என்று பலரையும் குழந்தைகளுக்காக எழுத வைத்து கண்ணனுக்கு அழகுக்கு அழகு சேர்த்த பெருமை இவரையே சாரும்.

ஆர்வி, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் தரமான சிறுகதைகள், நாவல்கள் ஆகியவற்றை எழுதி தனக்கென தனிபாணியை உருவாக்கி நடைப்போட்டவர். நாடறிந்த கதாசிரியர்: நாவலாசிரியர்; 'கண்ணன்' சிறுவர் இதழை நடத்தியவர். அன்று இளம் எழுத்தாளர்களை இனம் கண்டு அவர்களின் படைப்பாற்றலை வளர்த்தவர் என்ற பெருமைப் பெற்றவர்.

தேசிய இயக்கத்தில், சுதந்தரப் போராட்டத்தில், காந்தீய சித்தாந்தங்களில் பற்றும் ஈடுபாடும் கொண்டு விளங்கியவர் ஆர்வி. அன்று வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் தனிநபர் சத்தியாகரகத்தில் ஈடுபட்டதால் இரு மாதம் சிறை வாசம் கண்டவர்.

'கண்ணன்' சிறுவர் இதழ் தொடங்குவதற்கு முன்பு 'கலைமகள்' பத்திரிகையில் ஆசிரியர் குழுவில் பணியாற்றிக் கொண்டிருந்தார் ஆர்வி. அன்றைய காலக்கட்டத்தில் பெரியவர்களுக்கான இதழ்களும் அதிகளவில் வெளிவந்துக் கொண்டிருந்தன. குழந்தைகளுக்காக அதிக அளவில் பத்திரிகைகளில் வராத நிலையில் சிறுவர்களுக்கான இதழ் ஒன்றை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் ஆர்வி மனதில் உதயமாக, அதன் விளைவு 'கண்ணன்' என்ற பெயரில் சிறுவர்களுக்கான இதழ் உருவானது.

'கண்ணனில்' ஆர்வி ஏராளமான சிறுகதைகளையும், சித்திரக்கதைகளையும், தொடர்கதைகளையும் மற்றும் நாவல்களையும் எழுதினார். இவரின் எழுத்துக்கள் வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

''சிறுவர்களுக்காக எத்தனையோ இதழ்கள் வந்திருக்கலாம். ஆனால், 'கண்ணன்' போல் சிறுவர் இலக்கியத்தைச் செழிக்க வைத்து, 22 ஆண்டுகள் விழுது பரப்பிச் சிறப்போங்கி நிலைத்த ஓர் இதழ் நேற்றும் வந்ததில்லை; இன்றும் வரவில்லை!'' என்று ஆர்வியின் 'கண்ணன்' இதழுக்கு புகழாரம் சூட்டுகிறார் இலக்கியவீதி இனியவன்.

நவீன அச்சு வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில், இப்படிப் பலரும் பாராட்டும் வண்ணம் சாதனைப் படைக்கச் செய்தவர் ஆர்வி. புகழ் நிறைந்த எழுத்தாளர்களை நம்பிப் பத்திரிகை நடத்தாமல், புதிய புதிய எழுத்தாளர்களை இனம் கண்டு வளர்த்தெடுத்தவர் ஆர்வி.

அந்த வகையில் இளம் படைப்பாளிகளின் வளர்ச்சி இதழுக்கும், இதழின் வளர்ச்சி இளம் படைப்பாளிகளுக்கும் வளம் சேர்த்தது என்றால் அதுமிகையல்ல.

எந்த சபையில் அமர்ந்திருந்தாலும், ஆர்வியிடம் ஒரு தனித்துவம் இருக்கும் . வெற்றிலைச்சிவப்புடன் கூடிய இதழ்களினூடே எப்போதும் உயிர்ப்புடன் துலங்கும் அழகிய புன்னகை; இதமான பேச்சு; சாதி மதப் பாகுபாடில்லாத பண்பு. இதுதான் ஆர்வி.

http://www.blogger.com/profile/01875344044795058144


 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்