இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசம்பர் 2009 இதழ் 120  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நேர்காணல்!
மீள் பிரசுரம்: உயிர்நிழல், புகலி.காம்
'ரொனி மொரிசனுடன் ஒரு நேர்காணல்
இனவாதம் என்பது இயற்கையானதொன்றல்ல, அது சகல பொறி முறைகளாலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது

ரொனி மொரிசன்: நியூயோர்க்கின் கலப்பின மக்கள் செறிந்து வாழ்கின்ற சைனா ரவுனில் இவருடைய வீடு அமைந்திருக்கிறது. இவர் வசிக்கின்ற கட்டிடத்தில்நியூயோர்க்கின் கலப்பின மக்கள் செறிந்து வாழ்கின்ற சைனா ரவுனில் இவருடைய வீடு அமைந்திருக்கிறது. இவர் வசிக்கின்ற கட்டிடத்தில் மன்ஹாட்டனின் பழைய பொலிஸ் இலாகா இயங்கி வந்தது. 25 வருடங்களிற்கு முன்பு இது ஒரு குடியிருப்பாக மாற்றப்பட்டது. இவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். இந்தப்பணியின் இறுதி வருடம் இதுவாகத்தான் இருக்கும் என்று கூறுகிறார். அமெரிக்காவில் ரோனி மொரிசன் ஒரு சூப்பர் ஸ்ரார். இவர் ஒரு பிரசித்தமான பாடகி. இவர் பொதுமக்கள் முன்னிலையில் பிரசன்ன மாகும்போது சனத்திரள் குவிந்துவிடும். இவருக்கு இப்போது 78 வயதாகின்றது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒரேயொரு கறுப்பினப் பெண் இவராவார். நோபல் பரிசு கிடைத்த அமெரிக்கர்களில் இன்னும் வாழ்ந்துகொண்டிருப்பவர்.

இவர் மீண்டும் ஒரு முறை தன்னுடைய நாவலில் (A Myth) அடிமைத்தனம் குறித்துப் பேசுகிறார். சமூகப் பிரிவினைக்கான எத்தனங்களைத் தொடர்ந்து எதிர்த்து வருபவர். சகலவிதமான பாரபட்சங்களுக்கும் எதிராகக் குரல் கொடுத்து வருபவர்.

அடிமைத்தனம்பற்றி நீங்கள் நீண்ட காலமாக எழுதவில்லை. 1987இல் நீங்கள் ‘Beloved’ நாவலில் எழுதியதன் பிற்பாடு.... இந்த நாவல் A  Mercyயின் தோற்றம் பற்றி...?

ரொனி மொரிசன்: நியூயோர்க்கின் கலப்பின மக்கள் செறிந்து வாழ்கின்ற சைனா ரவுனில் இவருடைய வீடு அமைந்திருக்கிறது. இவர் வசிக்கின்ற கட்டிடத்தில் இந்த விடயமானது, அதாவது அடிமைத்தனம் என்பது, எப்போதுமே இல்லாமற் போகப் போவதில்லை என்று நான் நம்பியபோதிலும்கூட, என்னால் திரும்பவும் இதுபற்றி எழுதமுடியாது என்றுதான் நான் எண்ணி இருந்தேன். அத்துடன் நான் இது குறித்து உணர்வு பூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் நிறையவே பேசிவிட்டேன் என்ற வகையிலும். பின்பு சில காலமாக, எங்களுக்கு முந்தைய காலத்தில் நடந்த விடயங்கள் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினேன். இனரீதியான பிரிப்பு இந்த நாட்டில் சட்டரீதியாக வருவதற்கு முன்பு என்ன நடந்தது என்று பின்நோக்கிப் பார்த் தேன். நாங்கள் அடிமையாக இருக்கும்போது எதை உணர் கிறோம் என்ற கேள்வியை என்னை நானே கேட்டுப் பார்த்தேன். ஆனால் இனத்தால் பிரிக்கப்பட்டு, அந்தரீதியில் அடிமையாக இருப்பதால் அல்ல் அனைவரையும்போல இருந்து கொண்டு ஒரு அடிமையாக இருக்கும்போது எதை உணர்கிறோம்!

இந்த நாவலின் களமாக ஏன் நீங்கள் 17ம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் இருக்கும் அமெரிக்காவைத் தெரிவு செய்தீர்கள்?

ரொனி மொரிசன்: நியூயோர்க்கின் கலப்பின மக்கள் செறிந்து வாழ்கின்ற சைனா ரவுனில் இவருடைய வீடு அமைந்திருக்கிறது. இவர் வசிக்கின்ற கட்டிடத்தில் அந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா உண்மையில் ஒரு ‘புதிய உலகம்’ ஆக இருந்தது. அங்கு சுவீடன்காரர்கள், ஆங்கிலே யர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஸ்பானியர்கள், ஒல்லாந்துக் காரர்கள்... இப்படி எல்லாரும் இருந்தார்கள். நகரங்களின் பெயர்கள்கூட அங்கு எந்த நாட்டவர்கள் அதிகம் வசிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து மாறியது. எல்லாமே மாறிக்கொண்டு வந்தது. என்னை ஈர்த்தது எதுவென்றால், அந்தக் காலத்தில் வெள்ளையினத்தைச் சேர்ந்தவர்களும் வீட்டு வேலைக்காரர் களாக அமெரிக்காவுக்கு வந்தார்கள். இந்த வீட்டு வேலைக் காரர்கள் உண்மையில் அடிமைகள். இவர்களும் கறுப்பின அடிமைகளைப் போலவே இருந்தார்கள். ஆனால் இந்த வெள்ளையின அடிமைகள் என்ன நிலைமையில் இங்கு வந்து சேர்ந்தார்கள் என்பதை அவதானிக்க வேண்டும். இவர்களில் அநேகமானவர்கள் இங்கு வந்து சேர்ந்ததும் இறந்தார்கள் அல்லது வரும்வழியிலேயே இறந்துபோனார்கள். இவர்களின் மீதான அடிமை நிலை அவர்களின் மனைவி, பிள்ளைகளுக்கும் கடத்தப்பட்டது. இந்த வெள்ளையின அடிமைகள் கறுப்பின அடிமைகளுடன் பக்கத்துக்குப் பக்கமாக புகையிலைத் தோட்டங்களில் வேலை செய்தார்கள். இவர்களுக்கிடையில் ஒரேயொரு வித்தியாசம் மட்டும்தான் இருந்தது. அது என்ன வென்றால், வெள்ளையினத்தவர்கள் இந்த அடிமைத்தளையை அறுத்துக்கொண்டு தப்பியோடி சனங்களுடன் கலந்துவிட முடிந்தது. அதேசமயம் கறுப்பினத்தவர்களால் அப்படிச் செய்ய முடிந்திருக்கவில்லை. அதற்கு அவர்களுடைய தோலின் நிறம் தடையாக இருந்தது. இந்தக் காலங்கள் இந்த நாட்டின் உண்மையான ஆரம்ப காலங்களாக இருந்தது. அதாவது இது நடந்தது, ஐக்கிய அமெரிக்காவின் தோற்றத்திற்கு வெகுகாலத்திற்கு முன்பு. இன்னும் காலனிய ஒழுங்குமுறைகள் வருவதற்கும் முன்பாக. இது எங்களுக்கு மிகவும் அரிதாகத் தெரிந்த எங்களுடைய சரித்திரத்தின் ஒரு பகுதி. அத்துடன் இது மிகவும் அடிப் படையான ஒரு விடயம் என்று எனக்குத் தோன்றுகிறது.

இந்த அமெரிக்கா ஒரு தொலைந்துபோன சொர்க்கத்தை பிரதிபலிக்கின்றது என்று நீங்கள் சொல்வீர்களா?

ரொனி மொரிசன்: நியூயோர்க்கின் கலப்பின மக்கள் செறிந்து வாழ்கின்ற சைனா ரவுனில் இவருடைய வீடு அமைந்திருக்கிறது. இவர் வசிக்கின்ற கட்டிடத்தில் தொலைந்தது என்பது நிச்சயமானது. சொர்க்கமா என்பது நிச்சயமில்லாதது. அந் தக் காலத்தில் சூனியக்காரிகளை தீயில் இட்டுக் கொழுத்தினார்கள். இந்தியர்களை வேரோடு அழித்தார்கள். இதை நீங்கள் ஒரு சொர்க்கம் என்று பேசுகிறீர்களா..! அது மாறாக ஒரு காட்டுமிராண்டிக் காலம். உலகமே தொடர்ந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக் கொண்டிருந்த காலம். வாழ்க்கை என்பது மிகவும் கடினமாக இருந்த காலம். ஆனால் இயற்கை மிகப் பெருந்தன்மை யுடையதாக இருந்தது. அந்த வகையில் நாங்கள் ஒரு சொர்க்கம் என்பதுபற்றிப் பேசலாம். காடுகள் செழித்திருந்தன. ஆற்றில் போகும்போது மீன்கள் பாய்ந்து வந்து உங்களுடைய தோணிக்குள் விழுந்தன. அது ஒரு உண்மையான புதையல்தான்! ஆனால் என்னுடைய அக்கறை எதுவென்றால் அது சாதாரண மனிதர்கள் பற்றியது. அதாவது, திருடர்கள், ‘விபச்சாரிகள்’, விரோதிகள்... இப்படியானவர்கள். இவர்கள் எல்லோரும் அவர்களின் குடும்பங்களில் இருந்து பிடுங்கி எடுக்கப்பட்டு வியாபாரிகளுடனும் மதப்பிரிவுக் குழுக்களுடனும் இந்த அமெரிக்க மண்ணிற்கு நாடு கடத்தப்பட்டார்கள். இந்த மனிதர்கள் எந்த வரலாற்று நூல்களிலும் இடம்பெறவில்லை. அவர்களுக்கு எந்தத் தெரிவிற்கும் இடம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் தங்களது விருப்பத் திற்கு மாறாகவும் பலவந்தமாகவும் கொண்டு வரப்பட்டார்கள். இவர்கள் ஒருவகையில் நினைவுகளில் இருந்து அழிந்து போனவர்கள். நான் அவர்களை மீண்டும் வாழ்விக்க விரும்பினேன்.

2009ம் ஆண்டில் வாழுகின்ற அமெரிக்கர்களுக்கு 1690ம் ஆண்டில் கறுப்பினத்தவர்கள் மட்டுமல்ல வெள்ளை இனத்தவரும் இந்தியர்களும் அடிமைகளாக இருந் தார்கள் என்பது தெரியுமா?

ஏதென் நகரமும் ரோமாபுரியும் அடிமைத்தனத்தின் மீதுதான் கட்டமைக்கப்பட்டது என்பதை நாங்கள் மறந்துவிடக்கூடாது. ரஷ்யாகூட அடிமைத்தனத்தில் இருந்துதான் கட்டமைக்கப் பட்டது. ஆனால் இவைகள் எல்லாம் ‘அடிமை’ என்ற பதத்தை எப்போதும் பாவித்திருக்கவில்லை. அவர்கள் இதற்குப் பதிலாக, ஊழியன், சேவகன் என்ற பதங்களைப் பயன்படுத்தினார்கள். ஆனால் சகல அதியுயர் மனித நாகரிகங்களும் இந்த மனிதர்களில் தங்கியே இருந்திருக்கின்றன. இவர்களின் உழைப்புக்கு எப்போதும் ஊதியம் வழங்கப்படவில்லை. அந்த உழைக்கும் மனிதர்கள் வசதி படைத்தவர்களின் உடைமைகளாக இருந்தார்கள். இந்த அர்த்தத்தில் பார்த்தால் அடிமைத்தனம் என்பது ஒரு வழக்கத்துக்கு மாறான விடயமாக இருந்திருக்கவில்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இது எங்கும் எப்போதும் இருந்து வந்திருக்கின்றது.

அமெரிக்காவில் உள்ள அடிமைத்துவத்தில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாக என்ன இருக்கின்றதென்றால், அங்கு இனம் என்பது ஒரு அளவு கோலாயிற்று. இதுதான் இனவாதத்தின் ஆரம்பம். இதுதான் எனக்கு ஆத்திரமூட்டியது.

அடிமைத்துவம் பற்றிப் பேசுதல் என்பது உலகம் முழுவதும் எங்கும் எப்போதும் இருந்து வந்த ஒரு யதார்த்தநிலை பற்றிப் பேசுதலாகும். அதற்கு நாங்கள் எப்படியும் பெயரிட்டழைத்திருக்கலாம். உதாரணத்திற்கு, நாட்டுப்புற ஆங்கிலேய விவசாயிகள் பற்றி நினைத்துப் பாருங்கள். அவர்கள் தாங்கள் வேலை செய்கின்ற நிலத்தைவிட்டு வெளியே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் அடிமைகளாக இருந் தார்கள். அவர்கள் கூட.

அமெரிக்காவில் அடிமைத்துவத்தில் இருந்து எப்படி இனவாதத்திற்கு வந்து சேர்ந்தார்கள்?

ரொனி மொரிசன்: நியூயோர்க்கின் கலப்பின மக்கள் செறிந்து வாழ்கின்ற சைனா ரவுனில் இவருடைய வீடு அமைந்திருக்கிறது. இவர் வசிக்கின்ற கட்டிடத்தில் இனவாதம் என்பது லாபம் தரும் ஒன்றாக இல்லாவிட்டால் அது நிலைத் திருக்க முடியாது. இது வெறும் அரசியல் லாபங் களுக்கு மட்டுமன்றி, ஏனைய வறுமையான சனங்களுக்கும், கீழ்மட்டத்தில் உள்ள வெள்ளையினத் தவருக்கும் பயன்பாடுடையதாக உள்ளது. இதனைச் சிறிது பின்னோக்கிப் பார்த்தால், 1676இல் வேர்ஜினியா மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்வைக் குறிப்பிடலாம். அதாவது இந்த நாவல் ஆரம்பிக்கின்ற காலகட்டத்திற்கு கொஞ்சக்காலத்திற்கு முன்பு. அன்றைய ‘பேக்கனின் கிளர்ச்சி’யை எடுத்துக்கொண்டால், அன்றைய அதிகாரத்தைக் கவிழ்ப்பதற்கு கிட்டத்தட்ட 4000 தொடக்கம் 5000 பேர் ஒன்றுகூடி முயன்றார்கள். இவர்களில் சிற்றுடமையாளர் களுடன் கறுப்பின, இந்திய, வெள் ளையின அடிமைகளும் இருந்தார் கள். அதிகாரத்தைக் கவிழ்த்தார்கள். அது சில காலங்களுக்கு மட்டுமே நீடித்தது. பின்பு இவர்கள் அனைவரும் சிறைப்பிடிக்கப்பட்டுத் தூக்கிலிடப் பட்டார்கள். இதன் பின்னர் புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டு படிப்படியாக அமுலாக்கப்பட்டன. அது கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. எப்படி என்றால். குறிப்பாக, எந்த ஒரு கறுப்பினத்தவரும் ஆயுதம் வைத்திருக்க முடியாது. அப்போதிருந்து எந்த ஒரு வெள்ளை யரும் ஒரு கறுப்பரைக் கொல்ல முடியும். அது எந்தக் காரணத்திற்காகவும் இருக்கலாம். இது கறுப்பினத் தவரிடம் இருந்து வெள்ளை இனத்தவரைப் பிரித்தது. அவர்களுக்கு இப்படி ஒரு அந்தஸ்தை வழங்கியதன்மூலம் அவர்கள் வசதி படைத்தவர்களாக வரவில்லை. அவர்கள் ஏழைகளாகவே இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு அதிகாரம் வழங்கப்பட்டது. அது தங்களைப் போன்ற ஏழைகளையே மேலிருந்து நோக்குவதற்கு. அதாவது, அவர்களைத் தாழ்வாகப் பார்ப்பதற்கு. இப்படித்தான் எல்லாமே ஆரம்பித்தது.

அடிமைத்துவத்தையும் இனவாதத்தையும் வெவ்வேறாகப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்களா?

மிகச் சரியாகச் சொன்னீர்கள். இனவாதம் என்பது ஒரு வரலாற்றினதும் ஒரு கல்விய+ட்டலினதும் விளைபொருளாகும். இனவாதம் என்பது அடிமைத்துவம் என்பதுடன் மிகவும் இறுக்கமாகப் பிணைந்திருக்கின்றது. ஆனால் அடிமைத்துவம் என்பது இனவாதத்தை இன்றியமையானதாகக் கொண்ட ஒன்றல்ல.

உங்களுடைய நாவலில் வருகின்ற ஒரு இளம் கறுப்பின அடிமையான புளோரன்ஸ் மிகவும் வேதனையான அனுபவங்களை எதிர் கொள்கிறாள்....

ரொனி மொரிசன்: நியூயோர்க்கின் கலப்பின மக்கள் செறிந்து வாழ்கின்ற சைனா ரவுனில் இவருடைய வீடு அமைந்திருக்கிறது. இவர் வசிக்கின்ற கட்டிடத்தில் புளோரன்ஸ்தான் என்னுடைய நாவலின் மையக் கதாபாத்திரம். அவள் ஒரு அடிமை. ஆனால் அவள் அதை அறியாதிருக்கிறாள் அல்லது உணர்ந்து கொள்ளாதிருக்கிறாள். இந்த நிலைமைகளில் ஒருவர் எதை யோசிக்கலாம் என்று நான் எப்போதும் என்னை வினவிக் கொண்டிருந்தேன். இவ்வளவு பலவீனமாக இருப்பதென்பதை எதனோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.... பிறகு ஒரு நாள் எனக்கு அவளுடைய குரல் கேட்டது. அது எப்படி வந்ததென்று எனக்குத் தெரியாது. ஆனால் அவள் என்னோடு பேசினாள். எனக்குச் சொன்னாள் ‘பயப்படவேண்டாம்’ என்று. நான் எனது எழுத்தைத் தொடர்ந்தேன். அவள் எப்போதும் நிகழ்காலத்திலேயே பேசுகிறாள் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். அதுதான் இந்தப் பழைய சரித்திரத்துக்கு இன்றைய காலத்திற்கு நெருக்கமாயிருக்கின்ற ஒரு தன்மையைக் கொடுத்தது. இன்னும் சொல்லப்போனால், அவள் ஏதோ ஒரு இடத்தை நோக்கிப் போகிறாள். அவளு டைய பயணம் இந்த நாவலின் குரலாக இருக்கப் போகின்றது. அவளுடைய எழுதப்பட்ட பாவ மன்னிப்பு, அவளுடைய பேச்சின் வடிவமாக இருப் பதில் இருந்து, அவளுடைய வாழ்நிலைகள் மீதான வியாக்கியானங்கள் எங்களுக்குக் கிடைக்கிறது. இந்தக் கதையின் ஏனைய பிரதான கதாபாத்திரங் களைப் பொறுத்தவரையில், அவர்கள் படர்க்கை நிலையில் ஒருமையில் இருப்பதாக இருக்கட்டும் என்று நான் முடிவு செய்தேன். ஆனால் உண்மை யில் இவள்தான் முக்கியமான கதாபாத்திரம். இவளுக்குள் மட்டும் நான் புகுந்துகொண்டு இதை விட மிகநீள மான ஒரு நாவலை என்னால் எழுதி யிருக்க முடியும்.

அவள் தன்னுடைய அடிமைநிலைபற்றிப் புரிந்து கொள்ளாமல் இருப்பதை நீங்கள் எப்படி விளக்குவீர்கள்?

ரொனி மொரிசன்: நியூயோர்க்கின் கலப்பின மக்கள் செறிந்து வாழ்கின்ற சைனா ரவுனில் இவருடைய வீடு அமைந்திருக்கிறது. இவர் வசிக்கின்ற கட்டிடத்தில் அவள் உண்மையில் மற்றவர்களை விடத்தான் தாழ்ந்தவள் என்பதை உணர்ந்துகொள்ளவில்லை. வெள்ளை இனத்தவரில் இருந்து தாழ்நிலையில் இருப்பதை, ஏன் இன்னும் மற்றைய கறுப்பர்களைவிடத் தாழ்நிலையில் இருப்பதை. நிச்சயமாக அவள் தன்னுடைய சருமத்தின் நிறத்தைப் பார்க்கிறாள். ஆனால் நிறையப் பேர் அவளைப் போல இருக்கிறார்கள். போர்த்துக்கேயர் ஒருவரின் கண்காணிப்பில் உள்ள புகையிலைத் தோட்டமொன்றில் அவள் வாழ்கிறாள். அவளுடைய வாழ்க்கையின் மிகப்பெரும் சோகம் அவள் தனது தாயினால் கைவிடப்பட்டதுதான். அவள் தனது முதலாளியை மாற்றும் போது, அவளது இருப்பிடம் மாறுகின்றது. மேரிலாண்டில் இருந்த அவள் இப்போது வேர்ஜினியாவுக்குப் போகிறாள். புதிய மனிதர்களைச் சந்திக்கிறாள். அவளுக்குப் பிடித்த ஒருத்தியாக ஒரு இந்தியச்சி இருக்கிறாள்.

நீங்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும், அந்தக் காலத்தில் அடிமைகளுக்கிடையில் ஒரு படிநிலை மரபு இருக்க வில்லை. கறுப்பினத்தவர், இந்தியர்கள், வெள்ளை இனத்தவர் எல்லோருமே ஒரே படிநிலையில் இருந்தார்கள். இன்றைக்கு அப்படி ஒரு நிலைமையைக் கற்பனை செய்து பார்க்க முடியாதல்லவா? அப்படி இப்போது எங்கேயும் இல்லை... ஒரு வேளை, நிய+யோர்க் போன்ற இடங்களில் அது சாத்தியமாகலாம். அங்கு மனிதர்கள் வித்தியாசங்கள் பற்றிக் கேள்விகள் எழுப்புவ தில்லை. முக்கியமாக இளைஞர்கள். இந்தச் சமநிலை ஏன், எப்படி உடைந்தது? ஏனெனில், இந்த நிலைமை குறிப்பிட்ட சிலருக்கு ஆதாயத்தைத் தேடித் தருகின்றது. நாவலின் ஓட்டத்தில் என்னுடைய கதாபாத்திரங்கள், இனவாதம் என்பது இயற்கையான ஒன்றல்ல என்றும் அது சகல பொறிமுறைகளாலும் உருவாக்கப்பட்ட ஒன்று என்பதையும் உணருகிறார்கள்.

நீங்கள், பெண்கள் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்பது என்பதை அதிகம் வலியுறுத்துகிறீர்கள்....!

ரொனி மொரிசன்: நியூயோர்க்கின் கலப்பின மக்கள் செறிந்து வாழ்கின்ற சைனா ரவுனில் இவருடைய வீடு அமைந்திருக்கிறது. இவர் வசிக்கின்ற கட்டிடத்தில் இந்தக் கதை நடைபெறுகின்றகளம் ஒல்லாந்துக் காரருக்குச் சொந்தமான ஒரு தோட்டத்தில். அவர்தான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவர். அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இந்தப் பெண்களுக்கு அதிர்ஷ்டம்தான். ஏனெனில் அவர் நல்லவர். பிரச்சினை எங்கிருந்து வருகின்றதென்றால் இந்தச் சின்னக் கூட்டமானது எந்த ஒரு தேவாலயத்திற்கும் சொந்தமானதல்ல. எந்த ஒரு அமைப்பினாலும் இந்தக் கூட்டத்தைக் காப்பாற்றி இருக்க முடியாது. அது வெறும் ஒரு குடும்பம். ஒரு தம்பதியும் அவர்களின் பிள்ளைகளும் அவர்களுடைய வேலைக்காரர்களும். அந்தக் காலத்தில் வேலைக்காரர்களும் கிட்டத்தட்ட குடும்பத்தினு டையதாகவே இருந்தார்கள். அது எதைக் குறிக்கிறதென்றால் அவர்கள் எல்லோரும் ஒருமித்து இருக்க வேண்டும் என்பதை. ஆனால் அந்தக் குடும்பத்தில் ஒரு ஆண் இல்லையென்றால் எதுவும் நடக்கலாம்! இந்தக் காட்டுமிராண்டி சமூகத்தில் ஒரு பெண் அதுவும் தனியாளாக வேலைக்காரியாக இருப்பது, எல்லோருமே பெண்களாக இருப்பது, நிறைய சோதனை களைச் சந்திக்க வேண்டி இருக்கும். ஜேக்கப் இறந்த பின்பு அவருடைய மனைவி இப்படியான ஒரு சூழ்நிலையில் விடப்படுகிறாள். அவளுடைய வேலைக்காரிகள் ஒரு இந்தியப் பெண்ணும் கறுப்பினப் பெண்களுமாவர். அவர்களுக்கு எந்தக் குடும்பப் பெயரும் இல்லை. இப்போது ரெபேக்கா இறந்தால் இந்தப் பெண்களின் நிலை என்னவாகும்? அது நினைத்துப் பார்க்கவே அச்சம் தருவது! அந்தப் பெண்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அந்தப் பெண்கள் அடிமைகளாக இருப்பதால் ஒரு ஆண் செய்யும் தவறுகளுக்காக அவர்கள் அந்த ஆணின்மேல் குற்றம் சுமத்த முடியாது. ஒரு நிலத்துக்குச் சொந்தமில்லாத ஒருவருடைய குரலுக்கு நீதிமன்றிற்கு முன் எந்த வலுவும் இல்லை. அப்படி ஒரு பெண்ணினுடைய குரல் நீதிமன்றத்தில் கேட்கப்படவேண்டு மென்றால் அதற்காகக் காத்திருக்கவேண்டிய காலம் மிக நீண்டது.

உங்களுடைய நாவல்கள் எல்லாவற்றிலும் முக்கிய மானது என்னவென்றால், ஒருவர் சோதனைகளைச் சந்திக்கும் போது நிகழுகின்ற விடயங்கள்...

ரொனி மொரிசன்: நியூயோர்க்கின் கலப்பின மக்கள் செறிந்து வாழ்கின்ற சைனா ரவுனில் இவருடைய வீடு அமைந்திருக்கிறது. இவர் வசிக்கின்ற கட்டிடத்தில் அது கண்கூடானது. எல்லாமே நன்றாக நடக்கின்றபொழுது அவை என்னுடைய கவனத்தைப் பெறுவதில்லை. யார் தப்பிப் பிழைக்கிறார்கள்? யார் சறுக்கி விழுகிறார்கள்? யார் பிழைத்து எழுகிறார்கள்? ஏன்? எப்படி? இவைகள்தான் நான் ஒரு கதையைத் தொடங்கும்போது என்னைச் சுற்றி வட்டமிட்டபடி இருக்கும் கேள்விகள். இங்கு இளம் கறுப்பின அடிமையான புளோரன்ஸ் தான் பிழைத்து வாழ்பவளும் பிழைத்து எழுபவளும். நாவலின் ஆரம்பத்தில் அவள் வாசகனுக்குச் சொல்கிறாள்: “பயப்படாதே” என்று. நாவலின் முடிவில் சொல்கிறாள்: “நீ பயப்படுகிறாயா? நீ பயப்படத்தான் வேண்டும்” என்று. புளோரன்ஸ் தொடர்ந்து அவளது முன்னாள் காதலனுடன் உரையாடுகிறாள். ஆனால் அவளுடைய பயணத்தின் தொடர்ச்சியில் அவள் இன்னொருத் தியாக உருவெடுக்கிறாள்.

மேலும் உங்களுடைய நாவல்களில் பொதுவாகக் காணப் படுகின்ற ஒரு விடயம். முக்கியமாக ஆண்களினால் கை விடப்படுகின்ற பெண்களாக இருக்கின்றார்கள். அப்படி இல்லையா?

அது ஒரு வாசகனின் பார்வை. ஒரு வெள்ளை பிரெஞ்சு ஆண் வாசகனுடைய பார்வை. மேலும் இது ஆர்வத்தைத் தூண்டு கின்ற ஒரு புள்ளி. ஆண் கறுப்பின எழுத்தாளர்கள், பொதுவாக வெள்ளையின ஆண்களைப்பற்றி எழுதுவார்கள் - அதாவது தாங்கள் எதிர்நிலையில் வைத்திருக்கின்றவர்கள்பற்றி அல்லது தங்களுக்குத் தோள்கொடுத்தவர்கள் பற்றி. வெள்ளையின ஆண்கள் தங்களைப் பற்றியே பெரும்பாலும் எழுதுகிறார்கள். வெள்ளையினப் பெண்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் வெள்ளையின ஆண்களைப் பற்றி, அதா வது தங்கள் தந்தையர், தங்கள் புத்திரர்கள் அல்லது தங்கள் காதலர்கள் பற்றி எழுதுகிறார்கள்.

நீண்ட காலமாக, கறுப்பினப் பெண்கள் மட்டும் தான் வெள்ளை இன ஆண்களைப்பற்றி எழுத வில்லை. ஏனென்று தெரியவில்லை. ஆனால் நீங்கள் உங்களுடைய படைப்பில் இருந்து வெள்ளையின ஆண் கதாபாத்திரத்தைத் தூக்கிவிட்டீர்கள் என்றால் எல்லாமே திறந்துவிடுகிறது! அங்கு உங்களுக்கு ஒரு வகையான சுதந்திரம் இருக் கின்றது. அதாவது, அங்கு உங்களை நிரந்தரமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஒரு மேலாதிக்கம் இல்லாமற் போகிறது. ஆனால் உங்களுடைய கேள்வி பொதுவாக ஆண்களைப் பற்றியது, அப்படி யல்லவா? என்னுடைய இரண்டு அல்லது மூன்று நாவல்களில் உண்மையில் மூன்று கறுப்பின ஆண் களை உலவ விட்டிருக்கிறேன். அவர்கள் விரும்பத் தக்கவர்களோ இல்லையோ.

டோஸ்ரோவ்ஸ்க்கி என்ன காரணத்துக்காக ரஷ்யக் கலாச்சாரத்தைப் பற்றி எழுதினாரோ அதே காரணத்திற்காகத்தான் நானும் அமெரிக்கக் கறுப்பினக் கலாச்சாரத்தைப் பற்றி எழுதுகிறேன். அவர் இப்படிச் சொன்னார்:

“அதுதான் எனக்குத் தெரிந்தது. எனக்குத் தேவையானது. என்னுடைய சிந்தனையைக் கிளர்த்துவது” என்று.

1969இல் வில்லியம் ஸ்ரைறனின் ‘நாற் ரேணரின் பாவநிவேதனங்கள்’ என்ற நாவலுக்கு புலிட்சர் பரிசு கிடைத்தது. ஒரு வெள்ளையின எழுத்தாளர் கறுப்பினத்தவரின் சருமத்தினுள் புகுந்துகொண்டு எழுதிய ஒரு தனித்துவமான விடயமாக இருக்கின்றது. இந்த நாவல் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இது சுவையானது. ஆனால் ஸ்ரைறன் கறுப்பினக் கலாச்சார மொழியைப் பாவிப்பது அங்கு சரிப்பட்டு வரவில்லை. அவர் அதனை புலமைசார் ஆங்கிலத்துக்கு மாற்றி இருக்கிறார். அவர்களுடைய மொழியை அவர் பாவிக்க வில்லை. நான் அவர்களுடைய மொழியை மிகவும் மெச்சுகிறேன்.

நீங்கள் ஏன் இந்த மொழியைப் பயன்படுத்துகிறீர்கள்? இது புலமைசார் ஆங்கிலத்துடன் அவ்வளவாகப் பொருந்திப் போவதில்லை?

ஏனெனில் அது ஒரு இலகுத் தன்மையை ஏற்படுத்துகிறது, இலக்கண விதிகளைக் கடந்து செல்வதனூடாக.

இந்த நாவல் ஒரு சிக்கலான வடிவமாக உள்ளது. இந்த நாவலை ஏன் பல குரல்கள் கொண்டு கட்டமைத்தீர்கள்?

ரொனி மொரிசன்: நியூயோர்க்கின் கலப்பின மக்கள் செறிந்து வாழ்கின்ற சைனா ரவுனில் இவருடைய வீடு அமைந்திருக்கிறது. இவர் வசிக்கின்ற கட்டிடத்தில் அது அவ்வளவு எளிமையானதாக இருக்கவில்லை. இந்தக் கட்ட மைப்புடன் அதாவது ஒவ்வொரு கதாபாத்திரம் பேசிய பின்னும் புளோரன்;ஸ் பேசுவது என்பதனூடாக இந்நாவல் ஒரு பாய்ச்சலை எடுக்கிறது. புளோரன்;ஸ்; எங்கோ பயணிக்கிறாள்? அவள் அந்தப் பயணத்தின் முடிவை எட்டுவாளா? அந்தப் பயணத்திற்கு என்ன நடக்கும்? அவளுடைய பயணம், அவள் கடக்கும் இடங்கள், அவள் சந்திக்கும் மனிதர்கள் ஆகியவற்றால் எல்லாமே இழுத்துச் செல்லப்படுகிறது. அதே சமயத்தில் மற்றைய கதாபாத்திரங்களின் குரலும் அவளுடைய குரலுடன் கலக்க வேண்டும். ஆனால் மிகவும் குறைந்த அள வில் அது இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதாவது அவர்கள் படர்க்கை நிலையில் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். ஒரு நாவலைக் கட்டமைக்கும்போது அங்கு வரும் விவரணைகள் எனக்கு மிக முக்கிய மானவை. அதிகப் பிரசங்கமும் கூடாது. எனவே அதற்கேற்றவாறு அளவான ஒரு கதைசொல்லல் முறையைக் கொண்டிருக்கவேண்டும். ஒரு நாவலில் துடிப்பைத் தக்க வைத்துக் கொள்வது மிக முக்கியம்.

நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள்? நீங்கள் ஒரு நாவலை எழுதத் தொடங்கும்போது அதன் முடிவு உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கின்றதா?

முதலில் அது எதைப்பற்றிப் பேசுகின்றது என்பது தெரிந்திருக்கும். இந்த நாவலை எடுத்துக் கொண்டால், அது பேசுவது இனவாதமில்லாத அடிமைத்துவம் பற்றி. சில வேளைகளில் பேசுபொருளும் கதாபாத்திரமும் ஒரே நேரத்தில் தோன்றும். இங்கு அது புளோரன்;ஸ். பிறகு ஏனைய கதாபாத்திரங்கள் திடீர் திடீரெனத் தோன்றுகிறார்கள். அவர்கள் என் கைகளைப் பற்றிக் கொள்கிறார்கள். அவர்கள் பிடியைக் கழற்றுவது மிகவும் கடினமானது. அவர்கள் என்னுடன் பேசும்போது என்னால் வேறெதுவும் செய்ய முடிவதில்லை. புளோரன்;ஸ் ஒரு கனவு காணும் பிறவி. அவள் எக்கச் சக்கமாக யோசனை செய்வாள். அவள் தன்னுடைய அப்பாவித்தனத்தில் இருந்து அறிவு பெறும் நிலைக்குப் பயணிக்கிறாள். இது ஒரு ஆக்கபூர்வமான அறிதலா? நான் அதுபற்றிக் கணக்கெடுக்கவில்லை. மறுபுறத் தில் என்னுடைய நாவல்களின் முடிவு எனக்கு எப்போதும் தெரிந் திருக்கும். எனக்கு முடிவு தெரியாமல் ஒருபோதும் என்னால் ஒரு நாவலை எழுதத் தொடங்க முடியாது. இந்த நாவலிற்கான கருவும் பிறகு புளோரன்ஸ் கதாபாத்திரமும் என்னுள் தோன்றிய போது, முதலாவதாக எனக்குள் முதற்காட்சி, அதாவது முதலா வது அத்தியாயம் விரிந்தது. அது புளோரன்;ஸ் தனது தாயை நினைக்கிறாள். அந்தத் தாயிடம் இருந்து அவள் பிரிக்கப் பட்டிருந்தாள். அடிமைத்துவத்தில் மிகமோசமானதாக இருந்தது இந்த குடும்பங்களில் இருந்து பிரித்தெடுத்தல் என்பதுதான். குடும்பங்கள் மிகவும் கிலிய+ட்டும் வகையில் பிரிக்கப்பட்டன. நான் முதலில் நினைத்தேன், புளோரன்;ஸ் முதலில் தனது தாயைத் தேடிக் கண்டடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஏன் அவளு டைய தாய் அவளைக் கைகழுவி விட்டாள் என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று. பிறகு நான் எனக்குச் சொல்லிக் கொண்டேன், அவளால் ஒருபோதும் அது முடியாது. ஏனெனில் அதுதான் இந்த அடிமைத்துவப் பொறியினால் ஏற்படுகின்ற விளைவு என்று. எனவே புளோரன்;ஸ் தன்னைத்தானே கேட்டுக் கொள்ளும் கேள்விகளுக்கு அவளுடைய தாயிடம் இருந்து எப்போதுமே பதில்களைக் கேட்கப்போவதில்லை.

உங்களுடைய கதாபாத்திரங்களில் ஒன்று சொல்கிறது| அடிமைநிலை என்பது ஒருவருடைய எண்ணத்தில் இருந்துதான் வருகின்றது என்று. நீங்கள் என்ன சொல்ல வந்தீர்கள்?

ரொனி மொரிசன்: நியூயோர்க்கின் கலப்பின மக்கள் செறிந்து வாழ்கின்ற சைனா ரவுனில் இவருடைய வீடு அமைந்திருக்கிறது. இவர் வசிக்கின்ற கட்டிடத்தில் இந்த வாக்கியத்தைப் பேசுகின்றவர் ஒரு கறுப்பினத்தவர். அவர் எப்போதும் ஒரு அடிமையாக இருந்ததில்லை. இன்னொரு புறத்தில் நான் கேட்கிறேன், அவருக்கு அடிமைத்தனத்தைப் பற்றி என்ன தெரியும் என்று. ஆனால் அன்றைய காலகட்டத்தில் இருந்த பலரையும்போலவே, திணிக்கப்பட்ட ஊழியம் என்பதோ, குடும்பங்களுக்கிடையேயான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதோ என்பது அடிமைத்தனம் அல்ல என்றும், உங்களுடைய சிந்த னைக்குள் இயங்கிக் கொண்டிருப்பதே அந்த அடிமைத்தனம் என்றும் நினைத்தான். இந்த நாடு கண்டிருந்த மூன்று நூற்றாண் டுகள் காலமான மிலேச்சத்தனமான அடிமைத்தனமும் அது ஏற்படுத்திய விளைவுகளும் பாரதூரமானவை. எந்த ஒரு நிலை மையிலும் அடிமைத்தனம் என்பது ஒரு நல்ல விடயம் என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் சில வேளைகளில் அது உங்களை மேம்படுத்துகிறது. எப்படி என்றால், நீ உன்னுடைய எஜமானனைப் போன்ற ஒரு அரக்கனாக வரமாட்டாய். அப்படி வருவதை மறுக்கிறாய். அந்த வகையில்.

பராக் ஒபாமா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர்| 2009ம் ஆண்டில் ஒரு கறுப்பராக அமெரிக்காவில் இருப்பதென்பது எதைக் காட்டுகின்றது?

ரொனி மொரிசன்: நியூயோர்க்கின் கலப்பின மக்கள் செறிந்து வாழ்கின்ற சைனா ரவுனில் இவருடைய வீடு அமைந்திருக்கிறது. இவர் வசிக்கின்ற கட்டிடத்தில் ஒரு புறத்தில் அது முன்பிருந் ததைவிடச் சிக் கல் நிறைந்ததாக வந்துவிட்டது. இன்னொருபுறத்தில், இது ஒரு நிஜமான முன்னேற்றமாக இருக்கின்றது. அர சியல்ரீதியாக கறுப்பினத்தவர்கள் முன்பிருந்தததைவிட அதிக மான அதிகாரங்களைக் கொண்டிருக்கிறார்கள். நான் கடைசித் தடவை பிரான்சிற்கு வந்திருந்தபொழுது ஒருவர் என்னிடம் வந்து கேட்டார், அமெரிக்காவில் ஏன் கறுப்பினத்தவர்கள் வாக்களிப் பதில்லை என்று. நான் அவருக்கு இவ்வாறு பதிலளித்தேன். “எல்லாக் கேள்வியுமே அதற்குள்தான் இருக்கின்றது” என்று. உதாரணத்திற்கு, தெற்குப் பகுதியினுள் இருந்த கறுப்பர்களைத் தோலுரித்து அவர்கள் வாக்களிப்பதைத் தடுத்தார்கள். சிவில் உரிமைகளுக்காக இங்கு நடந்த போராட்டங்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? தங்களைப் பதிவு செய்து வாக்களிக்க முடியாமற்போன இந்த மக்கள், 2008ம் ஆண்டு அமெரிக்காவின் வரலாற்றில் வியக்கத்தக்க அளவில் வாக்களிக்கச் சென்றார் கள். எல்லாரும்தான். கறுப்பர்களும் வெள்ளையர்களும். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக கறுப்பர்கள். என்னுடைய வாழ்நாளில் ஒருபோதும் 2 கிலோமீற்றருக்கும் அதிகமான மக்கள் வரிசையை ஒரு வாக்குச் சாவடிக்கு முன்பாக நான் நினைத்துக்கூடப் பார்த்த தில்லை. மக்கள் ஒரு நாள் முழுவதும் வரிசையில் காத்திருந் தார்கள். காலை ஆறுமணி தொடக்கம் மாலை சூரியன் மறையும் வரை. அவர்கள் கதிரைகள், போர்வைகள், குடிநீர் சகிதம் வந்து காத்திருத்தார்கள் அங்கு வாக்குச் சாவடியில் தங்கள் வாக்கு களைப் போடுவதற்காக. அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்று வதற்கு உந்தப்பட்டிருந்தார்கள். அது அவர்களுடைய திமிரி னால் அல்ல. ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் இருக்கின்ற நீதியை அடைவதற்காக. வாக்களிக்க உந்தப்பட்டிருந்தார்கள். அல்லேலூயா!

இப்போது 10 வருடங்களிற்கு முன்பு நீங்கள் “அமெரிக் காவின் முதலாவது கறுப்பு ஜனாதிபதி” என்று பில் கிளின் டனைக் குறிப்பிட்டுச் சொன்னீர்கள். அங்கு நீங்கள் என்ன சொல்ல வந்தீர்கள்?

ரொனி மொரிசன்: நியூயோர்க்கின் கலப்பின மக்கள் செறிந்து வாழ்கின்ற சைனா ரவுனில் இவருடைய வீடு அமைந்திருக்கிறது. இவர் வசிக்கின்ற கட்டிடத்தில் அந்தச் செய்தி ஒரு மோசமான தப்பெண்ணத்தைத் தோற்று வித்திருந்தது. ஏன்? ஏனெனில் என்னுடைய கட்டுரையில் நான் எழுதியதை முழுதாகப் படிக்க யாரும் முயற்சித்திருக்கவில்லை. அந்தக் கட்டுரை நேறலுழசமநச பத்திரிகையில் வெளிவந்தி ருந்தது. லெவின்ஸ்கி விவகாரத்தில் பில் கிளின்ரனுக்கு எதிரான குற்றச்சாட்டு வழக்குத் தொடுக்கப்பட்டிருந்த காலத்தில் இது வெளிவந்திருந்தது. இப்படி நான் எழுதியதன் மூலம் என்ன சொல்ல வந்தேன் என்றால், கறுப்பர்களைக் காவல்துறை நடத்தியதுபோல, அமெரிக்க ஜனாதிபதியை ஒரு குற்றவாளியைப் போல நடத்தினார்கள் என்றுதான்.

எதற்காகக் குற்றவாளி? எங்களுக்குத் தெரியாது. ஏனெனில் எந்த நிரூபணமும் இல்லை. வெள்ளை மாளிகையில் பயிற்சியாளராகச் சேர்ந்த ஒருவரின் கூற்றின் அடிப்படையில் கிளின்டன் விவகாரம் உருவாக்கப்பட்டு இருந்தது. மேலும் கிளின்ரன் கறுப்பின மக்களுடன் மிகவும் நல்லுறவைக் கொண்டிருந்தவர். அவருடைய இளமைக்காலத்தில் அவர் ஒரு வறுமையான சூழ்நிலையில் வாழ்ந்தவர். அவர் தகப்பன் இல்லாது வளர்ந்தவர். கறுப்பர்களின் குடும்பங்களில் பெரும்பாலும் இருக்கக் கூடிய விடயங்கள் மற்றும் கறுப்பர்களை இழிவுபடுத்துவதற்கு எதையெல்லாம் சொல்வார்களோ அவற்றை எல்லாம் பில் கிளின்ரன் கொண்டிருந்தார்.

இன்று நீங்கள் பராக் ஒபாமாவிடம் இருந்து எதை எதிர் பார்க்கிறீர்கள்?

மாறாத கொள்கை, ஆற்றல், தெளிவு, எல்லாவற்றுக்கும் மேலாக நேர்மை. எனக்கு ஒபாமா ஒரு பூரணமானவராகத் தெரிகிறார். நாங்கள் இருவரும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இதனைச் சொல்லவில்லை என்பதை உண்மையாக நம்புங்கள். அதற்கும் என்னுடைய அபிப்பிராயத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர் தெரிவு செய்யப்பட்டிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்பதனை நான் கற்பனை செய்துகூடப் பார்க்க விரும்பவில்லை. அது ஒரு மிகமோசமான அழிவாகத் தான் இருந்திருக்கும்.

இருந்தும்| அவருக்கான உங்கள் ஆதரவை பொதுமக்கள் முன்னிலையில் தெரிவிப்பதற்கு நீங்கள் சிலகாலம் எடுத்தீர்கள்? ஏன் இந்தத் தாமதம்?

ரொனி மொரிசன்: நியூயோர்க்கின் கலப்பின மக்கள் செறிந்து வாழ்கின்ற சைனா ரவுனில் இவருடைய வீடு அமைந்திருக்கிறது. இவர் வசிக்கின்ற கட்டிடத்தில் ஏனெனில் அவர்பற்றிய நிச்சயம் எனக்கு அப்போது இருந்திருக்கவில்லை. பெரும்பாலான அமெரிக்கர்களைப் போலவே, எனக்கு அவரை இரண்டு வருடங்களுக்கு முன்பு தெரிந்திருக்கவில்லை. எனக்கு ஹிலாரி கிளின்டன்மீது மிகப் பெரிய மதிப்பு இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக குடியரசுக் கட்சியினரின் ஆட்சி நீடிப்பதை நான் விரும்பவே இல்லை. எனவே நான் ஹிலாரி பக்கம்தான் இருந்தேன். பிறகு ஒபாமா தோன் றினார். அவருடைய பேச்சுக்களை நான் படித்தேன். தனிப்பட்ட முறையில் நான் வேறு வேட்பாளர்களைத்தான் மனதில் எண்ணி இருந்தேன். அவர் ஒரு கறுப்பராக இருப்பதுமட்டும் அவரை ஆதரிப்பதற்குப் போதுமானதாக எனக்கு இருக்கவில்லை. ஒரு நாள் அவர் என்னைத் தொடர்புகொண்டு, தன்னுடைய நிலைப்பாடுகளில் எனக்கு உடன்பாடிருக்குமாயின் அவரை ஆதரிக்குமுகமாக பொதுக்கூட்டத்தில் பேச முடியுமா என்று கேட்டார். நான் இப்படியான பிரச்சாரங்களைச் செய்ததில்லை என்று அவரிடம் சொன்னேன். அதுதான் நிஜம். ஒரு தடவை நீங்கள் இப்படியான விடயத்தில் ஈடுபட்டால் தொடர்ந்து உங்களைக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். உங்களுடைய எழுத்தாளர் வாழ்க்கையை நீங்கள் இழந்துவிடுவீர்கள். நீங்கள் ஒரு பொதுமனிதராகி விடுவீர்கள். என்னைப் பொறுத்தவரையில் நான் ஒரு எழுத்தாளராகவே இருக்க விரும்புகிறேன். நான் யோசித்துப் பார்க்கிறேன் என்று அவரிடம் கூறி சம்பாஷணையை நிறைவு செய்தேன்.

பிறகு நிய+யோர்க்கில் இருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. இவர்களை ஏற்கனவே நான் எனது பதிப்பாளரின் இடத்தில் சந்தித்திருக்கிறேன். இவர்கள் தேர்தற் பிரச்சாரக் குழுவில் இருந்தார்கள். ஒபாமாவின் திட்டங்களின் வரைபுகளை ஒரு தடவை என்னைப் பார்க்கும்படி கூறினார்கள். அப்போதுதான் அவருடைய பண்பாட்டுத் தளத்தையும் அறிவுக் கூர்மையையும் கண்டுகொண்டேன். அவருடைய பேச்சு வன்மை, விவாதம் செய்யக்கூடிய வல்லமை, தீர்வுகளை முன்வைத்தல், முன்பிருந்தவர்கள் சொல்லியதைத் திரும்பவும் ஒப்புவிக்கா திருத்தல் போன்ற தன்மைகளைக் தொடர்ந்து அவதானித்துக் கொண்டு இருந்தேன். பிறகு அவருடைய சுயசரிதமான ‘எனது தந்தையின் கனவுகள்’ புத்தகத்தை வாசித்தேன். அது ஒரு நேர்த்தியான புத்தகம். மிகவும் ஆழமானதும், நன்கு கட்டமைக் கப்பட்டதும், உண்மையான ஒரு உணர்வைக் கொடுக்கின்ற வகையிலானதுமான எழுத்து.

இங்கு எழுத்தாளரைவிட| பதிப்பாளரே அதிகம் பேசுவது போல் தோன்றுகிறது....

இல்லை. அதை நான் உறுதிப்படுத்துகிறேன். இறுதியில் நான் பராக் ஒபாமாவுடன் விவாதிக்க முடிந்தபோது, என்னுடைய ‘சலோமனின் பாடல்’ தன்மீது எவ்வளவு தாக்கத்தைச் செலுத்தி இருக்கின்றதென்று அவர் சொன்னார். நாங்கள் எழுத்தாளர் களாகவும் வாசகர்களாகவும் எங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். நான் என்னுடைய முடிவை ஏற்கனவே எடுத்து விட்டேன். அதற்காக நான் வருத்தப்படவில்லை. ஒபாமாவை ஒரு இறைதூதராகக் கருதுகின்ற வழிபாட்டுக் கலாச்சாரமான ஒபாமாமேனியாவுக்குள் என்னை நான் இழக்கவில்லை. ஒபா மாவை சிரத்தை கொண்ட ஒருவராகவும் பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்ற ஒரு நாட்டை நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தி சரியான பாதையை நோக்கி வழிநடத்தக் கூடிய ஒருவராகவும் கருதுகின்றேன்.

உங்கள் எழுத்தை நீங்கள் ஒரு அரசியற் செயற்பாடாகக் கருதுகிறீர்களா?

ரொனி மொரிசன்: நியூயோர்க்கின் கலப்பின மக்கள் செறிந்து வாழ்கின்ற சைனா ரவுனில் இவருடைய வீடு அமைந்திருக்கிறது. இவர் வசிக்கின்ற கட்டிடத்தில் எழுத்தாளர் என்ற வார்த்தைக்கு மதிப்புத் தருகிற ஒவ்வொரு எழுத்தாளரும் தன்னைச் சுற்றிய உலகு பற்றிப் பேசுகிறார்கள். அது ஒரு ஷேக்ஸ்பியராகவோ அல்லது வேறு யாராகவோ இருக்கட்டும். கலை என்பது அரசியலில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கப்படக் கூடியது என்ற எண்ணக்கருவே ஒரு மாபெரும் புரட்டு. இந்தக் கருத்துருவாக்கம் கம்ய+னிச நாடுகளுக்குத்தான் சரிப்பட்டு வரும். அங்கு கலை என்பது அரசுக்குச் சொந்த மானதாகக் கொள்வதும், மற்றும் சென்சாருக்கு உட்படுவதுமாக இருக்கின்றது. இந்த அரசுடைமைக்கு எதிராகப் போராடுகின்ற சில கலைஞர்கள் ஒரு கொள்கையை உருவாக்கினார்கள். இன்றைய உலகில் நாவல்களையோ கவிதைகளையோ ஊட்ட மளிப்பதற்கு எதுவும் இல்லை. அந்தவிதத்தில், ‘அரசியல்’ என்ற பதம் அது கொண்டிருக்கக்கூடாத ஒரு எதிர்மறையான கருத்து நிலையை எடுத்துக் கொண்டது.

உங்களைப் பொறுத்தவரை இலக்கியத்தின் பாத்திரம் என்னவாக இருக்க வேண்டும்?

ஏனைய எழுத்தாளர்களின் பேரால் நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. எதையும் நான் ஒரு கோட்பாடாக்க விரும்ப வில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் எழுத்துக்கும் தீர்ப்புக்கும் இடையில் ஒரு தொடர்பு நிச்சயமாக இருக்கிறது. எழுத்துக்கும் நீதிக்கும் இடையில். எங்களை ஒரு மனிதராகப் புரிந்து கொள்வதற்கு எழுத்து என்கின்ற இடைவிடாத முயற்சி துணைபுரிகின்றது. என்னுடைய கட்டாயங்கள் என்ன? ஏனைய வர்கள் மரணிக்கும்போது இந்தப் பூமியில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். இந்தக் கேள்விகளுக்கு ஒரு எழுத்தாளர் பதில் சொல்லியாக வேண்டும் என்றுதான் எனக்குப்படுகின்றது. என்னுடைய எழுத்துகள் எனக்கு எப்போதும் நிறையக் கற்பித்துக் கொண்டே இருக்கின்றன. நான் எழுதும்போது நிறையக் கற்றுக் கொள்கிறேன். இன்னும்கூடத்தான்.

நீங்கள் ஒரு நாவலாசிரியராக வருவீர்கள் என்று எந்தக் கட்டத்தில் நீங்கள் உணர்ந்தீர்கள்?

ரொனி மொரிசன்: நியூயோர்க்கின் கலப்பின மக்கள் செறிந்து வாழ்கின்ற சைனா ரவுனில் இவருடைய வீடு அமைந்திருக்கிறது. இவர் வசிக்கின்ற கட்டிடத்தில் தாமதமாகத்தான். அது என்னுடைய இரண்டாவது நாவலை எழுதிக்கொண்டிருக்கும்பொழுது. அப்போது எனக்கு நாற்பது வயது தாண்டிவிட்டது. முன்பு எழுத்தென்பது எனக்கு ஒரு விளை யாட்டாக இருந்தது. என்னுடைய முதலாவது நாவல் ஐந்து வருட காலங்களை எடுத்தது. அதற்கான காரணம் மிகவும் எளிமையானது. ஏனெனில் எழுதிக் கொண்டே இருப்பது எனக்குப் பிடித்திருந்தது. எழுதுவதை நான் பெரிதும் விரும்பினேன். எழுதுவதை நிற்பாட்டுவதற்கு விருப்பம் இருக்கவில்லை. ஆனால் அது புத்தகமாக வெளிவரும்போது நான் முற்றாக மனநோய்க் காளாகிப் போனேன். எந்தச் சரியான காரணமும் இருக்கவில்லை. உலகம் அப்படியேதான் இருந்தது. ஆனால் நான் அந்த உலகத்திற்கு வெளியே இருப்பதுபோல உணர்ந்தேன். எனவே நான் இன்னொரு கதைக்கான கருவைத் தேடினேன். அந்தக் கணத்தில் எல்லாமே சரியாகிப் போனது.

இன்னும் பின்னுக்குப் போய்ப் பார்த்தால்| நீங்கள் எப்போது எழுதுவதற்கு ஆரம்பித்தீர்கள்?

நான் நினைக்கிறேன். எனக்கு எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கவில்லை. சிறுபிள்ளையாக இருந்தபொழுது வாசித் தேன். எந்த நேரமும் வாசித்தேன். எப்போதும் வாசிப்பதற்கு அற்புதமான விடயங்கள் கிடைத்துக் கொண்டிருக்கும் என்று எனக்குள் சொல்லிக் கொள்வேன். நான் ஒரு பத்திரிகை ஆசிரி யையாக வந்தபொழுது, அதுவும் ஒரு வகையில் வாசிப்பவளாக இருப்பதுதான், சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்களைப்பற்றி யாரும் எழுதி இருக்கவில்லை என்று கண்டுபிடித்தேன். அதாவது இளையோர், கறுப்பர்கள், பெண்கள் இப்படி. பாடசாலைக் காலத் தில் அநேகமாகக் கட்டுரைகளைத்தான் படித்தேன். மிகக் குறைந்தளவில் கதைகள் படித்திருக்கிறேன்;. நான் ஏன் எழுத ஆரம்பித்தேன் என்றால், நான் எவற்றை வாசிக்க விரும்பி னேனோ அவற்றை என்னால் வாசிக்க முடியவில்லை. எனவே நான் அவற்றை எழுத ஆரம்பித்தேன்.

நீங்கள் ஃபோல்க்னரைப் பற்றிய ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி இருக்கிறீர்கள்? ஐம்பதுகள்| அறுபதுகளில் இருந்த சிறந்த கறுப்பின எழுத்தாளர்கள் உங்களைப் பாதித்தி ருக்கிறார்களா?

ரொனி மொரிசன்: நியூயோர்க்கின் கலப்பின மக்கள் செறிந்து வாழ்கின்ற சைனா ரவுனில் இவருடைய வீடு அமைந்திருக்கிறது. இவர் வசிக்கின்ற கட்டிடத்தில் ஓம். முக்கியமாக ஜேம்பால்ட்வின்னால். குறிப்பாக அந்த நேரத்தில் அவருடைய கட்டுரைகள் மிக முக்கியமானதாகப் பட்டன. அந்தக் காலத்தில் பெரும்பாலான கறுப்பர்கள் கூச்ச லிட்டுக் கொண்டிருந்தார்கள் அல்லது கண்ணீர்விட்டுக் கொண்டிருந்தார்கள். பால்ட்வின் இலக்கியச் சூழலுக்கு வந்தார். அவர் உன்னதமான கருத்துகளைச் சொல்லிய அதேவேளை, உங்களை ஈர்க்கக்கூடிய ஒரு தனித்துவமான நடையைக் கொண்டிருந்தார். நான் நிறைய ஆபிரிக்கக் கவிஞர்களையும் படித்திருக்கிறேன். கறுப்பின அமெரிக்கக் கவிஞர்களைவிட அதிகமானவர்களைப் படித்திருக்கிறேன். கறுப்பின அமெரிக்கக் கவிஞர்கள் முதலில் வெள்ளையினத்தவரை நோக்கிப் பேசினார் கள். அவர்களுக்கு பிரச்சினைகளை விளங்கப்படுத்த முனைந் தார்கள். அதிகாரத்தில் இருந்த வெள்ளையினத்தவர்களின் கண்களுக்கு, இவர்கள் தங்கள் நியாயத்தைச் சொல்ல முனை கிறார்கள் என்று பட்டது. இதனால்தான் நான் எழுத ஆரம்பிக்கும் போது கறுப்பின அமெரிக்க மக்களிடம் சென்றடையக் கூடிய வகையில் எனது எழுத்து அமைந்தது. என்னுடைய எழுத்தில் விவரணமும் கதை சொல்லலும் இருக்கவேண்டும் என்று எப்போ தும் தேடுகிறேன். எதையும் விளங்கப்படுத்துவதற்கல்ல. இப்படி யோசித்ததனால், நான் சில தவறுகளை இழைத்திருக்கிறேன். ஆனால், அதேசமயம் முக்கியமான சில தடைகளை இல்லா தொழிக்க என்னால் முடிந்திருக்கின்றது.

பிரெஞ்சுச் சஞ்சிகை ஒன்றிற்காக சென்ற ஏப்ரல் மாதத்தில் ரோனி மொரிசன் அளித்த நேர்காணல்

நன்றி : உயிர்நிழல், புகலி.காம்


 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்