இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூன் 2010 இதழ் 126  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நூல் அறிமுகம்!
பொன்னாடை போர்த்தப்படாத ஒரு கவிஞர் – ஸ்ரீரங்கம் வி. மோஹனரங்கன்

- வெங்கட் சாமிநாதன் -


ஸ்ரீரங்கம் வி. மோஹனரங்கன்வெங்கட் சாமிநாதன்“நாம் தான் கவிதை என்றால் என்னவென்று ஒரு முடிவுக்கு வந்தோமா என்றால், கொஞ்சம் பார்த்துவிட்டுத் தான் சொல்லவேண்டும் என்ற அளவில் இருக்கிறோம். ஆனால் கவிதை எது என்பதை நம் ரசனை நன்கு தெரிந்து வைத்திருக்கிறது. “இது கவிதை” என்று நம் உணர்வுக்குச் சொல்ல கோட்பாடுகள் தேவையில்லை. ஆனால் நம் அறிவுக்குச் சொல்லிக்கொள்ள எந்தக் கோட்பாடும் நமக்குப் போதவில்லை.
யாப்பில் நன்கு பூட்டி வைத்துவிட்டு, அப்பாடா இனி தொல்லைப் படுத்தாது என்று நினைத்தோம். ஆனால் பூட்டு அப்படியேதான் இருக்கிறது. இது தான் அடங்காமல் வெளியே வந்து மறுபடியும் நம் முன் நிற்கிறது.”

இப்படி எழுதுகிறவர் தான் உண்மையாக உணர்ந்ததைத் தான் எழுதியிருக்கிறார், மொழியைத் தன் அனுபவங்களைப் அனுபவித்தவாறே பதிப்பிக்கத் தான் பயன்படுத்துகிறார் என்பது தெரிகிறது. கவிதை என்று அவருக்குச் சொல்லப்பட்டவை, அல்லது முன் வைக்கப்பட்டவை எதையும் அவர் கவிதையாக உணராதபோது அவற்றைக் கவிதை என் அவர் ஏற்றுக்கொள்வதில்லை என்று தெரிகிறது. இம்மாதிரியான ஒரு குரல் கேட்பது மிக அபூர்வமாகி வருகிறது.

இன்னும் ஆச்சரியம் தரும் விஷயம், ஸ்ரீரங்கம் மோஹனரங்கன் கவிஞராகத் தெரிய வந்தவர் இல்லை. அறியப்படுபவரும் இல்லை. அவர் என்னேரமும் தமிழ், சமஸ்ருத ஆங்கில இலக்கியங்களிலும், தத்துவ நூல்களிலும் ஆழ்ந்திருப்பவர். அவற்றில் ஆழ்ந்திருப்பதே அவருக்கு நிறைவு தரும் ஒன்று. வேறு ஏதும் வேண்டாதவர். இப்படி ஒரு ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவரிடம் சாதாரணமாக நாம் காண்பது வெற்றுப் பாண்டித்யம். இலக்கியப் படிப்பு மூலம் தமிழ்க் கவிதை முழுதுமே தெரிந்திருக்கலாம். ஆனால் ஸ்ரீரங்கம் மோகன ரங்கனே சொல்வது போல, ‘எதுகை, மோனை, அடி, தளை யாப்பு என்ற செங்கல் ஜல்லி வேலையாகவே கவிதையைப் புரிந்து கொண்டிருப்பது அத்தகைய இலக்கிய அறிஞரிடம் கவிதை பற்றிய உணர்வை எதிர்பார்ப்பது தவறு. ஆனால் இன்றைய தமிழ் இலக்கிய உலகம் இந்தத் தவற்றைத் தான் எதுகை, மோனையாகவே கவிதையைக் கண்ட காலத்திலும் சரி, அவற்றைத் துறந்த இன்றைய புதுக்கவிதைக் காலத்திலும் சரி, புது ரக செங்கல் ஜல்லிகளில் கவிதையைக் காணும் அவலத்திலேயே தொடர்ந்து வருகிறோம்.

இந்த செங்கல், ஜல்லி, காரைப் பூச்சு வேலைகள் இன்னும் சுலபமாக நிறைவேறி வருகின்றன. கவிஞர் தொகைப் பெருக்கம் இப்போது பெருகியிருப்பது போல் தமிழ் இலக்கிய வரலாற்றில் எப்போதாவது இருந்ததுண்டா என்பது தெரியவில்லை. தெருவுக்குத் தெரு கவியரசுகள், கவி வேந்தர்கள், பொற்கவிக்கோக்கள், பொன்னாடைகள், மூக்கு நுனி துடிக்கும்போதெல்லாம் தன் நாளிதழில் தவறாது கவிதைகளை என எழுதி தம் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ளும் பெருந்தகைகளே கூட அக்கவிதைகளை திரும்பிப் பார்ப்பதில்லை.. அன்றைய ஆத்திரம் தீர்ந்த்தோடு அவை மறக்கப்பட்டு
விடுகின்றன. கவிஞர்கள் என பொன்னாடையோடு பவனி வரும் இவர்களை மேற்கோள் காட்டவேண்டியதில்லை. நாற்பது வருடங்களுக்கும் மேலாக கவிஞர்களாக உலா வருகிறவர்கள், விருதும் பாராட்டு விழாக்களுமாகத்தான் உலா வருகின்றனர்.. கவிதை எனச்சொல்லத் தக்க எதுவும் எழுதியறியாதே. அவை கவிதை இல்லை என்று நான் தர்க்கித்து நிறுவ முடியாது. தர்க்கித்தல் விதிகள் சார்ந்தது. அறிவு சார்ந்தது. வாதங்கள் சார்ந்தது.  விருதுகள், பட்டங்கள் விளம்பரங்கள் சார்ந்தவை அரசவை உறவுகள் சார்ந்தவை ஆனால் கவிதை உணர்வுகள் சார்ந்தது. என் உணர்வுகளில் கவிதை எனப் ப்ளிச்சிடு வதை நான் இனங்காட்டத்தான் முடியும். வாதிட்டு நிறுவ முடியாது. செங்கல் ஜல்லி களை கவிதை என்று சொல்பவர்கள் வாதிட்டுக்கொண்டே இருக்கலாம். என் உணர்வுகளில் அந்த வாதங்கள் பதியாது. ஸ்ரீரங்கம் மோகனரங்கன் வேறோரிடத்தில் சொல்லியிருப்பது போல், “வெற்று நுரைகளாக இவர்கள் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள்”

ஆனால், கவிதை தன்னைத் தானே இனங்காட்டிக்கொள்ளும். இளம் கனக சுப்புரத்தினமோ அல்ல்து நாமக்கல் ராமலிங்கமோ பாரதியார் கேட்க கவிதை ஒன்றைச் சொல்ல ”நீ கவிஞனடா!” என்று பரவசத்துடன் உரக்க ஆர்ப்பரித்தார் என்று படித்த ஞாபகம். கவிதை அப்படித்தான் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும்.

யாரும் பேசாத, சர்ச்சைகளில் இடம்பெறாத, இது கவிதை ஐயா என்று யாரும் சுட்டிக்காட்டாத ஒன்றை, எனக்குக் கவிதை என சட்டென என் உணர்வுகளின் கதவுகளைத் தட்டும் ஒன்றைச் சொல்லலாம். உதாரணத்திற்கு.

பறவையே போகுமிடம் எங்கே என்றேன்
உணவுக்கான நேரம் போகும்
ஒரு நிமிஷம் தேடிவிட்டு
திரும்பி வந்தால் பொழுது போகும்
ஒற்றையடி ஓரத்தில்,
ஓரால நிழலம்ர்ந்து,
ஒரு நால்வர் நடுவமர்ந்து
ஒன்றும் பேசாதீர்
ஒரு நொடியில் திரும்பிடுவோம்
உம் கேள்வி எங்கு போகும்?
என்றந்தப் புள்ளும்
எதிர்வான் முட்டிலெங்கோ
இரைதேடிச் சென்றதுவால்
ஆலின் இலை கிடந்தால்
துயிலும் சுகம் தோன்றிடுமால்,
பயிலும் பகற்கனவில்
பள்ளிகொண்டேன்
பல்லூழிப் பாழின்
பள்ளியறைத் துயில்வேனை
பறவை வந்திங்கே பள்ளியெழுப்பும்வரை.

இக்கவிதை நம் சிந்தனைகளை எங்கோ இழுத்துச் செல்கிறது. ஒரு சிறு பொழுதை அதன் சாத்திய எல்லைக்கு நீட்டுச் செல்கிறது. ஜென் பௌத்த கருத்தாக்கத்தில் செயலும் செயலின்மையும் துயிலும் விழிப்பும் நொடியும் எல்லையற்ற காலமும் பேதம்ற்றுப் போகின்றன.

இதை ஒரு அனுபவமாகச் சொல்லும்போது, ஒரு அனுபவம் இத்தகைய சிந்தனைகளுக்கு இட்டுச் செல்லும்போது, அந்த அனுபவ்மும் சிந்தனையும் ஒரு (Unspoken rhythm) இசை ஒழுங்கோடு, சொல்லப்படாத, விதிக்கப்படாத இசை ஒழுங்கோடு மாற்றம் பெற்று கவிதையாகின்றது. இத்தகைய அனுபவமும் மொழிமாற்றமும் இசை ஒழுங்கோடு கவிதையாதல் ஸ்ரீரங்கனிடம் சாத்தியமாகியுள்ளன என்று எனக்குத் தோன்றுகிறது. இவ்வாறு இக்கவிதையை நான் புரிந்துகொண்டது எனக்கேயானதாகவும் இருக்கக் கூடும். நுரைப் பெருக்கமாக வார்த்தைகளைக் கொட்டிவிடுவோர் தாம் கவிதை எனச்சொல்லிக் கொண்டாடுவதையெல்லாம் நாம் ஏற்கிறோமா என்ன? இன்னுமொரு கவிதை, ஸ்ரீரங்கனின் கவிதை உலகத்திற்கான இன்னொரு உதாரணமாய்.

”கட்டடங்கள் நிலையாக நிற்பதில்லை
குட்டிச் சுவர்கள் நெடுங்காலம் மறைவதில்லை.
வக்கணையாய் காப்பார்றும் வயலும்
வறண்டு விடுகிறது
குட்டிச் சுவரில் முளைத்த செடி,
காலத்திற்கும் நிற்கிறது
வெளிகரையில் வந்துவிழும் கால அலை
வழித்தெடுத்த வடிவுக்க்ப்பால்
வானத்தில் விரைந்து
வற்றும் விமானப்புள்ளி
வடிவற்ற ஓசையாய்”.

இரண்டு விஷயங்கள் ஒன்று, தனித்த அனுபவமே பிரபஞ்ச உண்மையாக ( from the Particular to the Universal) விரிகிறது. கட்டிடங்கள் சிதைய, குட்டிச் சுவர்கள் நிலைத்து நிற்கும் இயற்கையின் விடம்பனம். இப்படி ஒரு கருத்து அதன் கருத்தளவில் கவிதையாகாது தான். ஆனால் அது அனுபவமாக நம் கண்முன் நம்மைத் தாக்கி நிற்கும் போது அந்த அனுபவ சித்தரிப்பு கவிதையாகிறது.

இம்மாதிரியான் எளிமையான சொல்லாக்கமும், அனுபவங்கள் கனத்த சிந்தனைகளை தம்முள் கொண்டிருத்தலும் கவிதைகளில் காண்பது மிக அபூர்வம் தான். ஸ்ரீரங்கனின் கவிதைகளில், அது சாத்தியமாகியுள்ளது

இவையெல்லாம் கவிஞனாக உலா வருவதற்கு எழுதப்பட்டவை அல்ல. தமிழோ, ஆங்கிலமோ, வடமொழியோ அல்லது ஆங்கிலம் வழி கிடைத்த எம்மொழிக் கவிதையையும் தானே ஈடுபாட்டோடு படித்து வரும்போது தமிழில் எழுதிப் பார்க்கத் தோன்றியது. எழ்தி வைத்துக்கொண்டது. மற்ற மொழிக்கவிதைகளையும் தமிழில் கவிதையாக எழுதிப் பார்த்துக்கொண்டது, எழுதி வைத்துக்கொண்டது. அத்தோடு அவ்வீடுபாடு நிறைவு பெற்றது. அதற்குமேல் அவற்றை வெளி உலகம் பார்த்ததில்லை. இது தொடங்கியது கல்லூரி நாட்களில். அந்நாட்களின் ஆரம்பப் பதிவுகளுக்கு ஒரு உதாரணம்:

“இருப்பதா...இறப்பதா?... இது தான் கேள்வி
கொடுமையின் உருவாம் வெவ்விதி துறக்கும்
குண்டையும் அம்பையும் தாங்கித் தலைவணங்கி
அவதிப்பட்டே இருப்பது சிறப்பா?
அன்றெனில்
துன்பவெள்ளத்தை எதிர்த்து எழுந்தே
விதித்து அவைகளை முடிப்பது சிறப்பா?
இறப்பு....உறக்கம்....வேறென்ன்?

சொல்லவேண்டியதில்லை. ஹாம்லெட்டின் புக்ழ்பெற்ற “தன்க்குள்”

போதும். இது அந்நாட்களின் குறிப்பேட்டிலிருந்து எடுக்கப் பட்டதாயினும், இது இப்போது தமிழினி வசந்தகுமாரின் தூண்டுதலில் புத்தகமாகத் தொகுக்க்ப ப்ட்ட காற்றுகளின் குரல் என்னும் 100 உலகக் கவிதைக்ளின் தொகுப்பில் சேர்க்கப்படவில்லை. காரணம், ஸ்ரீரங்கம் மோகனரங்கன் இன்று மொழிபெயர்ப்பதாக இருந்தால் வேறுவிதமாகத் தான் எழுதப்பட்டிருக்கும் என்று நினைப்பதால்.மொழிபெயர்ப்பு பற்றிய அவரது பார்வைகள் இப்போது வெகுவாக மாறிவிட்ட காரணத்தால். இதிலும் அவரது கொள்கைகள் ஏதும் இறுதி உருப்பெற்றவை அல்ல. நிர்ணயிக்கப்பட்டு விதியாகிவிட்டவை அல்ல. மொழிக்கு மொழி, கவிதைக்கு கவிதை மாறுகிறவை. தொடர்ந்து வழிகாட்டுவது கவிதை உணர்வுகள் தாம்.அவை தானே வளர்த்துக்கொண்டவை. கொடுக்கப்பட்டவை அல்ல்.

கவிதை பற்றியே பேசும் ஒரு வடமொழிக்கவிதை, ( மோகனரங்கனின் தமிழாக்கத்தில்) சொல்கிறது:

”காற்றில் படபடத்து பட்டுத் துகில் விலகும் ஒரு கணக் காட்சியில்
தெரியும் முலைத் தடம் போன்று தீக்கொளுத்துவது......”

கவிதை என்கிறார் வல்லணன் என்னும் கவிஞர்.

ஆண்ற்றியாஸ் ஓகோபெங்கோ வின் கவிதை ஒன்று எந்த நாடு என்று தெரியவில்லை. ஆப்பிரிக்காவில் ஏதோ ஒன்றாக இருக்கக் கூடும்.

”தெருவில் அங்கே நீச்சல் குளத்தில் துவட்டும் துணியெனக்
கிடக்கிறது வெய்யில்
தென்பக்கம் சன்னல்கள் விளையாடும்
சுற்றி எங்கணும் தெருவில் எவரும் இல்லை.

பல கட்டிடங்கள் தாண்டி ஒரு கார் மேயும்
யந்திரம் வெளிப் போந்தொரு சிறு நாயுடன் பேசும்
காலையில் தன் வெள்ளிய காலடி மடக்கிக் கிடக்கும் சிறுநாய்
அன்றேல், துள்ளிக் குதித்துச் சற்றே சுற்றி வந்தயரும்”

சுட்டெரிக்கும் வெயிலும், வெறித்துக் கிடக்கும் சூழ்லும் நீண்டு அயர்ந்து கிடக்கும் அமைதியும் கவிதையாகியுள்ளன.
பல்கேரிய நாட்டுப் பாடல் ஒன்று. நம் சங்ககாலப் பாடல்களை நினைவூட்டும்.

”இடையனைக் காதலிக்கும்
அந்தப் பெண் அய்யோ பாவம்
அவளுக்கு அவனால் பெருந்துயராகும்
வடக்கில் அவனுடைய வேனில்
தெற்கில் அவனுக்கு மழைக்கால்ம்
க்ருந்த்ரையில் அவனுடைய மஞ்சம்
கல்லொன்று தலையணையாய் ஆகும்
போர்வைக்கோ முகிலற்ற வானம்
இரும்புத் துரட்டியே கைப்பிடித்த மனைவி”

அய்யோ பாவம் யார்? இடையனா? அவன் மனைவியா? எனக்கு மிகவும் பிடித்த ஒன்றைச் சொல்ல வேண்டும்.
யாராய் இருந்தால் என்ன? என்பது அதன் தலைப்பு

”என் பெயர் என் நாடு இவையெல்லாம் உனக்கென்ன?
என் வம்சம் கௌரவமா? கீழ்த்தரமா? எதுவானால் என்ன?
ஒரு வேளை நான் மனிதரில் மிக்குயர்ந்து திகழ்ந்தவனோ
ஒரு வெளை அனைவரிலும் தாழ்ந்து திரிந்தவனோ.
என்ன இப்போழுது?
அந்நியனே இது போதும், கல்லறை ஒன்றைப் பார்க்கின்றாய்
அத்ன் பயன் எதுவென் அறிவாய் நீ.
மூடும் அஃது.
யாரென்று எதுவும் பொருட்டில்லை”

(பவுலூஸ் ஸைலென்ஷ்யாரியஸ் – இக்கவிஞர் எந்த நாட்டினராக இருந்தால் என்ன?)

கவிதையில் வாழும் ஜீவன் ஸ்ரீரங்கம் மோகனரங்கன். கவிஞர் என உலகம் போற்றும் இச்சைகளும், கனவுகளும் இல்லை. கவிதைகளும் அன்றாடம் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கவும் இல்லை. தான் எதுவாக வாழ் விரும்புகிறோமோ அவ்வாறு வாழ்வதிலா அல்லது வாழ்வதைப் பறையறிவிப்பதிலா அக்கறை?

எனக்குத் தெரிந்து தினம் கவிதையென எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் ஒருவர். தமிழகமே அவர் வாய் முத்து உதிர்வுக்கு ஏங்கிக் கிடக்கிறது. அவரைச் சுற்றிப் பெருங்க்விஞ்ர் கூட்டம். ஆனால் அவரை கவிஞர் எனச் சொல்ல அக்கூட்டத்தில் ஒருவரும் இல்லை வியப்பென்ன வெனில் அவருக்கும் சரி அவரைச் சுற்றிய கூட்டத்துக்கும் சரி, கவித்வம் இன்றளவும் கிட்டியபாடில்லை.

கவிஞர் என்று தெரியப்படாத மோகனரங்கனின் கவிதை ஒன்று கடைசியாக.

”நால் வீதிக்குள்ளே பல நூற்றாண்டுகள்
சிந்திக் கிடக்கின்றன
பொறுக்குவாரின்றி நேரமின்றி
புவனத்தின் புள்ளியில்
போகின்றது வருவது எல்லாம்
பதித்துவிட்டுப் போகும்
காலத்தின் முது கரங்கள்
கைதொட்ட கருங்கற்கள்
கதைசொல்லிப் பரந்து நிற்கும்
வாழ்கின்ற தலைமுறைக்குள்
வாழ்ந்த தலைமுறைகள்
வழிவழியாய் நினைவில் படிவமாகி
வீதிவழி போகின்ற உருவமாகும்
வற்றாத நினைவுகள்
வன்ங்கொழிக்கும் வயலரங்கம்
தூக்கத்தில் தொடர்கதையாய்
திகழும் உயிரரங்கம்”

உணர்வின் உயிர்ப்பு: (கவிதைகள்)
காற்றுகளின் குரல் (உலகக் கவிதைகள் ஒரு நூறின் தமிழாக்கம்)
ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன்; - தமிழினி வெளியீடு, 342 டி.டி.கே சாலை, சென்னை-14

13.4.2010
vswaminathan.venkat@gmail.com.


 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்