இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜனவரி 2010  இதழ் 121  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சினிமா!
மீள்பிரசுரம்: தினமணி
நடிகர் விஷ்ணுவர்த்தன் மறைவு!

நடிகர் விஷ்ணுவர்த்தன்பெங்களூர், டிச.30: பிரபல கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன் (59) மாரடைப்பால் மைசூரில் புதன்கிழமை (டிச.30) அதிகாலை மரணமடைந்தார். பெங்களூருக்கு கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு கன்னடத் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். "சாகச சிம்ஹா' என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டுவந்தவர் விஷ்ணுவர்த்தன். மறைந்த நடிகர் ராஜ்குமாருக்கு அடித்தபடியாக கர்நாடகத்தில் புகழ்பெற்று விளங்கியவர். ஓய்வுக்காக மைசூர் சென்றிருந்த அவர், அங்குள்ள கிங்க்ஸ் கோர்ட் ஹோட்டலில் தங்கியிருந்தார். செவ்வாய்க்கிழமை அவர் மைசூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து கொண்டார். பிறகு அவர் ஹோட்டலுக்குத் திரும்பினார். புதன்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் மாரடைப்பால் 2.30 மணியளவில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அப்போது விஷ்ணுவர்த்தனின் மனைவியும் நடிகையுமான பாரதி, மருமகன் அனிரூத் ஆகியோர் உடனிருந்தனர். பிறகு அவரது உடல் மைசூரிலிருந்து புதன்கிழமை காலை 6.30 மணிக்கு பெங்களூரில் ஜெயநகரில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முதல்வர் எடியூரப்பாவும், அமைச்சர்களும், திரையுலங்கினரும் அஞ்சலி செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து விஷ்ணுவர்த்தனின் உடல் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக

காலை 9.45 மணிக்கு பசவனகுடியில் உள்ள நேஷனல் கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டது. அங்கு அவருக்கு ஏராளமான ரசிகர்களும், பொதுமக்களும் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். விஷ்ணுவர்த்தனுக்கு கீர்த்தி, சந்தனா என்ற 2 தத்தெடுக்கப்பட்ட மகள்கள் உள்ளனர்.

சிறந்த நடிகர்...

விஷ்ணுவர்தனின் இயற்பெயர் சம்பத்குமார். அவர் 18-9-1950-ல் மைசூர் சாமந்திபுரத்தில் பிறந்தார். அவரது தந்தை எச்.எல். நாராயணராவ், திரைக்கதை ஆசிரியர் ஆவர். பிரபல இயக்குநரும் ஞானபீட விருதுபெற்றவருமான கிரீஷ் கர்நாட், 1972-ல் தான் இயக்கிய வம்சருகா என்ற திரைப்படத்தின் மூலம் கன்னடத் திரையுலகிற்கு விஷ்ணுவர்த்தனை அறிமுகம் செய்துவைத்தார். அப்போது சம்பத்குமார் என்ற பெயரை விஷ்ணுவர்தன் என்று மாற்றினார்.

1973-ல் புட்டண்ணா கனகல் இயக்கிய நாகரஹாவு என்ற படத்தின் மூலமும், ராமாச்சாரி ஆகிய படத்தின் மூலமாகவும் அவர் பிரபலமானார். நாகரஹாவு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக விஷ்ணுவர்த்தனுக்கு மாநில அரசு விருது வழங்கியது. அவர் இதுவரை பல்வேறு கதாபாத்திரங்களில் 200 படங்களில் நடித்துள்ளார். அவர் கடைசியாக ஆப்த ரக்ஷகா என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் இன்னும் திரைக்குவரவில்லை. அது அவரது 200-வது படமாகும்.

தமிழ்ப் படங்கள்:

விஷ்ணுவர்த்தன் நடித்து கடைசியாக வெளியவந்த படம் பெல்லாரி நாகா என்ற திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. கன்னடத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிப் படங்களிலும் விஷ்ணுவர்த்தன் நடித்துள்ளார். விடுதலை மற்றும் ஸ்ரீ ராகவேந்திரா ஆகிய தமிழ்ப் படங்களில் ரஜினி காந்துடனும், கெüரவர் என்ற மலையாளப் படத்தில் மம்முட்டியுடன் நடித்தார்.

மறைந்த இயக்குநர் ஸ்ரீதர், அலைகள் என்ற படத்தின் மூலம் இவரை அறிமுகப்படுத்தினார். தமிழிலிருந்து கன்னடத்துக்கு டப் செய்யப்பட்ட எஜமானா படத்திலும் முங்காருமழை படத்திலும் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். விஷ்ணுவர்த்தன் ஒரு பாடகரும் ஆவார். சாயாத்ரிய சிம்மா படத்தில் நடித்தன் மூலம் விஷ்ணுவர்த்தனை சாகச சிம்ஹா என்று ரசிகர்கள் அன்போடு அழைத்தனர். அமைதியான சுபாவமுடைய அவர் திரையுலகினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடன் அன்புடன் பழகியவர். திரையுலகிற்கு பெரும் சேவையாற்றிதற்காக விஷ்ணுவர்த்தனுக்கு கடந்த 2005-ம் ஆண்டில் டாக்டர் பட்டம் வழங்கி பெங்களூர் பல்கலைக்கழகம் கெüரவித்தது. கடந்த 37 ஆண்டுகளாக நடித்து அனைவரது உள்ளத்திலும் நீங்கா இடம்பிடித்த விஷ்ணுவர்த்தன், தீடீரென மரணமடைந்தது கன்னடத் திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


நன்றி: http://www.dinamani.com

மீள்பிரசுரம்: றேடியோஸ்பதி வலைப்பதிவு
நடிகர் விஷ்ணுவர்த்தன் மறைவு!

நடிகர் விஷ்ணுவர்த்தன்சில கலைஞர்களின் தோற்றத்தைப் பார்த்ததுமே எடைபோடக் கூடிய கதாநாயகக் களை இருக்கும், கூடவே கண்ணியமும் தோன்றும் அப்படி ஒரு நடிகராகத் தெரிந்தவர் தான் இன்று அதிகாலை காலமான நடிகர் விஷ்ணுவர்த்தன். தலைசிறந்த நடிகர்கள் பலருக்கு நல்ல இயக்குனர்கள் முதலில் வாய்த்திருப்பார்கள். அந்த வகையில் விஷ்ணுவர்த்தனின் முதற்படமான "வம்சவிருக்ஷா" (1972) படத்தினை இயக்கி இவரை கன்னட சினிமா உலகில் அறிமுகப்படுத்தியவர் இந்திய அளவில் பேசப்படும் க்ரீஷ் கர்னாட்.

கல்யாண்குமாரை கன்னடத்தில் தேடிப் பிடித்து "நெஞ்சில் ஓர் ஆலயம்" படைத்த ஸ்ரீதர், விஷ்ணுவர்த்தனைத் தேடிப் பிடித்து "அலைகள்" படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுலகுக்கும் அறிமுகப்படுத்தியிருந்தார். நடிகை லட்சுமி இயக்கிய (கே.பாலசந்தர் மேற்பார்வையில்) 1980 ஆம் ஆண்டு குழந்தைகள் தின ஆண்டுப் படமாக "மழலைப்பட்டாளம்' வந்தபோது அதில் ஐந்து பிள்ளைகளை வைத்துக் கொண்டு அல்லற்படும் கெளரி மனோகரி என்ற எழுத்தாளராக வந்து நகைச்சுவையான நடிப்பிலும் கலக்கினார். சமீபத்தில் கூட நண்பர்களோடு சேர்ந்து அந்தப் படத்தைப் பார்த்து ரசித்தேன். "குர்பானி" ஹிந்தித்திரைப்படம் தமிழுக்கு பாலாஜி மூலம் "விடுதலை"யாக தயாரிக்கப்பட்ட போது அதில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் ஆகியோரோடு முக்கிய பாத்திரத்தில் நடித்தவர் இவர். இவரின் சிறந்ததொரு கன்னடத்திரைப்படம் (பெயர் ஞாபகம் வரவில்லை) தமிழில் சிவகுமார் நடித்த "பிரேம பாசம்" என்று மீள எடுக்கப்பட்டது. விஷ்ணுவர்த்தன் தமிழில் நேரடியாகப் படங்கள் செய்தது குறைவு என்றாலும் கன்னடத்தில் இருந்து இவரின் படங்கள் சில மொழி மாற்றம் கண்டிருக்கின்றன. மசாலாப்படங்கள் மட்டுமன்றி கதையம்சமுள்ள படங்களையும் தேடி எடுத்து நடித்தது இவரின் சிறப்பு.

தமிழில் வெற்றி கண்ட சில படங்களை கன்னடம் சுவீகரிப்பது என்பது காலத்தின் கட்டாயம். அந்த வகையில் "வானத்தைப் போல" படம் "எஜமான" என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு விஷ்ணுவர்த்தன் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்தப் படம் கொடுத்த நம்ப முடியாத வெற்றியால் படத்தினைத் தயாரித்த விஷ்ணுவர்த்தனின் உறவினர் மாரடைப்பால் இறந்ததாக அப்போது பரபரப்பான செய்தி கூட வந்திருந்தது."மணிச்சித்ரதாளு" மலையாளத்தில் இருந்து கன்னடத்துக்குத் தாவியபோது "ஆப்தமித்ரா"வாகி கன்னட சினிமா உலகையே புரட்டிப் போட்ட வெற்றியைக் குவித்ததில் விஷ்ணுவர்த்தனின் பங்கும் கணிசமானது. அதுவே பின்னர் "சந்திரமுகி" ஆனது பலரும் தெரிந்த செய்தி. தமிழ் தவிர மலையாளத்தில் மம்முட்டியோடு இவர் இணைந்து நடிக்க ஜோஷி இயக்கத்தில் "கெளரவர்" என்ற திரைப்படம் வெளியானது.

"எனக்கு அரசியல் பிடிக்காது, அரசியலுக்கும் என்னை பிடிக்காது" என்று சமீபத்தில் ஆனந்த விகடனில் தன் மனம் திறந்த பேட்டியை வழங்கியிருந்தார். சினிமா நடிகை பாரதியை கைப்பிடித்துக் கொண்டவர். நடிகராக மட்டுமன்றி பாடகராகத் திரைப்படங்களில் மட்டுமன்றி பக்தி ஆல்பங்களிலும் பாடியவர். தேசிய மட்டத்திலும் மாநில அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞன் "விஷ்ணுவர்த்தன்"

நன்றி: http://radiospathy.blogspot.com/2009/12/blog-post_30.html -


 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்