இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2008 இதழ் 103  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இணையத்தள அறிமுகம்!
இணையத்தள அறிமுகம்: இரு எழுத்தாளர்களின் வலைப்பதிவுகள்!

எழுத்தாளர் தேவகாந்தன்எழுத்தாளர் சுப்பிரபாரதிமணியன்.எழுத்தாளர்களான தேவகாந்தனையும், சுப்பிரபாரதிமணியனையும் அறிமுகப்படுத்தபட வேண்டிய தேவையில்லை. தமிழ் இலக்கியவுலகில் நன்கறியப்பட்டவர்களில் இருவர். அண்மையில் பல படைப்பாளிகளைத் தொடர்ந்து இவர்களிருவர் கவனமும் வலைப்பதிவின் பக்கம் திரும்பியுள்ளது. 'கதாகாலம்' என்னும் தனது நாவலொன்றின் பெயரினைத் தனது வலைப்பதிவுக்குமிட்டு இணையத்தில் தன் படைப்புகளை, எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்திருக்கின்றார் தேவகாந்தன். தனது ஜூன் மாதப் பதிவில் அண்மையில் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுடனான தனது அனுபவப்பதிவுகளை, இயல் விருது பற்றிய தனது எண்ணங்களையெல்லாம் பகிர்ந்து கொண்டிருக்கின்றார். இவை தவிர சினிமா விமரிசனம், நாடக விமரிசனம், தொடர்கதை, பதிவுகளில் இவர் தமிழகத்திலிருந்த பொழுது எழுதிய ஆக்கங்களின் மீள்பிரசுரமென விரிந்திருக்கும் இவரது 'கதாகால'த்திலிருந்து 'இயல்விருது' பற்றி இவர் எழுதிய கட்டுரையினைப் பிரசுரிப்பதன் மூலம் பதிவுகளுக்குக் 'கதாகால'த்தினை அறிமுகம் செய்து வைக்கின்றோம். 'கதாகாலத்தின்' இணைய முகவரி: http://devakanthan.blogspot.com

எழுத்தாளர் சுப்பிரபாரதிமணியனின் வலைப்பதிவு!
எழுத்தாளர் சுப்பிரபாரதிமணியன் தனது பெயரிலேயே தனது வலைப்பதிவினை ஆரம்பித்துள்ளார். இவரது வலைப்பதிவினை சுந்தர கண்னன் பராமரிக்கின்றார். 'கனவு' சிற்றிதழின் ஆசிரியரான திருப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர் சுப்பிரபாரதிமணியன் நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதையென இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் தன்னை வெளிப்படுத்தும் படைப்பாளிளிலொருவர். 'கதா' விருது, 'குமுதம் - எயார் இந்தியா' விருது உட்படப் பல்வேறு இலக்கிய விருதுகளைப் பெற்றவரான சுப்பிரபாரதிமணியன் , பல்வேறு உலகநாடுகளுக்கெல்லாம் பிரயாணம் செய்தவர்; அப்பிரயாண அனுபவங்களையெல்லாம் எழுத்தாக்கி வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டவர்.  அவரது வலைப்பதிவின் இணையத்தள முகவரி: http://rpsubrabharathimanian.blogspot.com 'துவக்குகளின் சப்தங்களிடையில்...' என்னும் சுப்ரபாரதிமணியனின் ஈழத்துச் சமகாலத் தமிழ்/ சிங்களத் திரைப்படங்கள் பற்றிய பதிவுகளைத் தனது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவரது வலைப்பதிவினையும் தனது வாசகர்களுக்குப் பதிவுகள் அறிமுகம் செய்து வைக்கின்றது.

இயல் விருது

1.

எந்தப் பரிசின் பின்னணியிலும் ஒரு அதிகார நுண்ணரசியல் உள்@ர ஓடியிருக்கும் என்பது சரியான வார்த்தைதான். மிகப்பெரும் இலக்கியப் பரிசாகக் கருதப்படும் நோபல் பரிசு வழங்கலின் பின்னணியிலும், அதன் தௌ;ளத் தெளிவான நுண்ணரசியலின் வெளிப்பாட்டை ஒருவரால் உணர முடியும். பல்வேறு தருணங்களிலும் கம்யூனிச நாடுகளாயின் அவ்வரசியல் கட்டமைப்புக்கு எதிராகவும், முஸ்லிம் நாடுகளாயின் இஸ்லாத்தின் இறுகிய சமூக அரசியல் தீவிரப் போக்குகளை மறுதலித்தும் எழுந்த இலக்கிய மயப்படுத்தப்பட்ட எழுத்துக்களே பரிசுக்குரியதாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன என்பது இவ் அமைப்பின் 1901ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்துவரும் நூற்றாண்டுக் கால வரலாறு தெரிவித்து நிற்கின்றது.
புலிச்சர் (Pரடவைணநச ), புக்கர் (டீழழமநச), க்ரொஸ் வேர்ட்(ஊசழளளறழசன) என்பவை மட்டுமல்லாது, கனடாவின் அதிகூடிய பரிசுத் தொகையை (ஒரு லட்சம் கனடா டொலர், தேர்வு ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை) பிரெஞ்சுமொழியில் படைக்கும் எழுத்தாளருக்கு அவரின் வாழ்நாள் சாதனையை முன்வைத்து வழங்கும் கில்-கொர்பெய்(புடைடநள-ஊழசடிநi) விருது, இருபத்தையாயிரம் டொலர்களை ஆண்டுதோறும் அவ்வாண்டின் சிறந்த ஆங்கில இலக்கிய ஆக்கத்துக்காக வழங்கும் கில்லர்(புடைடநச)அமைப்பின் பரிசளிப்புகள்கூட இந்த நுண்ணரசியலின் பிடியிலிருந்து தப்பித்துக்கொண்டதாகச் சொல்லமுடியாதேயுள்ளது.

இலங்கை சாகித்திய மண்டல அமைப்பானாலும் சரி, இந்திய சாகித்திய நிறுவனமானாலும் சரி, வேண்டப்பட்டவர்களுக்கான அரசியல்வாதிகளின் பரிந்துரைப்பிலேயே பல காலமும் பரிசுகள் வழங்கப்பட்டு வந்திருப்பதை நாம் நிதர்சனத்தில் கண்டிருக்கிறோம். எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம், சு.வில்வரத்தினம் போன்ற சிறந்த படைப்பாளிகள் இலங்கையில் பரிசு பெறாது போனதற்கும், அதுபோல் இந்தியாவில் சிறந்த இலக்கியப் படைப்பாளியான சுந்தர ராமசாமி போன்ற பலர் தாம் வாழும்காலத்திலேயே பரிசுபெறாது போனதற்கும் வேறு காரணங்களை நாம் கண்டுவிடமுடியாது. ஐந்து முறை மகாத்மா காந்தியின் பெயர் சமாதான விருதுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தும் அவரது பெயர் தெரிவாகாமலே போனமை, நோபல் பரிசுத் தேர்வாரள்களின் மேற்கத்தியச் சிந்தனைக் குறைபாடு காரணமான பெரும் அவமானமாய் இன்றும் அதன்மேல் படிந்தேயிருக்கிறது. தமிழ்நாட்டில் ராஜராஜன் பரிசு, இலக்கியச் சிந்தனைப் பரிசுகளிலும் இந்தப் பின்னணியின் குறைந்த நிலைச் செயற்பாடுகள் இருக்கவே செய்கின்றன.

ஒரு படைப்பு எந்தச் சமூகத்துக்குத் தரப்படுகிறதோ அந்தச் சமூகத்திலிருந்து அந்தப் படைப்பிற்கான அங்கீகாரத்தை ஒரு படைப்பாளி எதிர்பார்ப்பது இயல்பானது. படைப்பு எந்தச் சமூகத்தில் முகிழ்க்கிறதோ, அந்தச் சமூகம் பரிசு கொடுக்கும் தகுதியோடும் இருக்கவேண்டும். பரிசின் பின்னால் நுண்ணரசியல் இயங்குகிறது என்பது பரிசே தேவையில்லையென்பதாக ஆகிவிடக்கூடாது. பரிசு ஒரு சிறந்த படைப்புக்கான கவுரவம்.

2.

கனடா இலக்கியத் தோட்டம் கடந்த ஏழு ஆண்டுகளாக ஒரு நிறைவை நோக்கிய பாதையில் தன்னைச் செலுத்தி வந்திருக்கிறது என்பது ஓரளவேனும் அந்த அமைப்பின் இயங்குமுறையைத் தெரிந்திருப்பவர்களுக்கு புரியப்கூடிய சங்கதி. இதையே விருதுபெற்றோரின் பட்டியலும் சுட்டிநிற்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கவிதை, சிறுகதை, நாவல் போன்ற படைப்பிலக்கியப் பரிசுகளையும், மற்றும் தமிழ்க் கணினித் தொழில்நுட்பம் சார்ந்த பரிசினையும் இலக்கியத் தோட்டம் அறிவித்து வரினும், அதன் முதன்மையான பணி இயல் விருது வழங்கலாகவே எனக்குப் படுகிறது. அது தமிழ்மொழி சார்ந்த ஒருவரின் வாழ்நாள் சாதனைக்கானது. இயல்விருது என்ற பதச்சேர்க்கையே ஒரு ஸ்தூலக் கனதியடைந்து தன் உன்னதத்தின் அவாவுகையை வெளிப்படுத்தி நிற்பதும் கவனிக்கப்படவேண்டும்.

2001 ஆம் ஆண்டில் அமைப்பாகிச் செயற்பட ஆரம்பித்த இலக்கியத் தோட்டம், தன் முதல் இயல் விருதை திரு. சுந்தர ராமசாமிக்கு அறிவிக்கிறது. பாரதி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமியென்ற இலக்கிய அடுக்கு ஒவ்வாமையுள்ளதெனினும், சுந்தர ராமசாமியின் படைப்பிலக்கிய ஆற்றல் சந்தேகத்துக்கு இடமற்றது. அவரது சிறுகதைகளையும், பசுவய்யா என்ற பெயரில் எழுதிய கவிதைகளையும் நீக்கிவைத்துப் பார்த்தால், அவரது நாவல்கள் ஒரு காலகட்டத்தின் சிறந்த படைப்பாளியாக அவரை நிறுத்திவைக்கப் போதுமானவை. ஜே.ஜே. சில குறிப்புக்கள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள், ஒரு புளியமரத்தின் கதை ஆகிய மூன்றும் இந்த வரிசைத் தரத்திலேயே தமிழின் சிறந்த படைப்புக்கள்தான். அவரது கட்டுரைகளும் நாவல்கள் அளவுக்கு முக்கியமானவை. காற்றில் கலந்த பேரோசையிலுள்ள கட்டுரைகள், கட்டுரைத்தனத்தை மீறி கலைத்துவம் மிக்க படைப்புக்களாகவே இருக்கும். இந்த வகையில் இயல்விருதுக்கான இலக்கியத் தோட்டத்தின் தேர்வு மிகச் சரியானதாகவே இருந்தது. அடுத்த இயல்விருது பெற்றவர் இலங்கையைச் சேர்ந்த திரு. கே.கணே~;. திரு.கே.கணே~; பிரச்சினைக்குரிய மனிதரல்ல என்றபடியாலும், அவர் மலையகத்தைச் சேர்ந்தவரானபடியாலும் ஒரு இடஒதுக்கீட்டில்போல அவருக்கான பரிசு கேள்விகளைக் கிளர்த்தவில்லை. ஆனால் அவர் பரிசுக்குரியவர்தானா என்பது ஐயத்துக்கிடமாகவே இருந்தது.
இதையடுத்து பரிசு பெறுகிறவர் வெங்கட் சாமிநாதன். தமிழகத்திலிருந்து தெரிவாகும் அடுத்தவரும் பிராமணர் என்றமாதிரியான ஒரு சலசலப்பு வெ.சா. வி~யத்தில் எழுந்தது. அதுவல்லாமல் அவருக்கான பரிசை அப்போது கேள்விப் படுத்தியவர்களில் முக்கியமான ஒருவர் கலாநிதி எம்.ஏ. நுஃமான். படைப்பிலக்கியத்துறை சாராதவராயினும், அவரது கடும் விமர்சனம் புதுக்கவிதையின் வளர்ச்சிக் காலத்தில் முக்கியமாகவே கருதப்பட்டது. அக்கிரகாரத்தில் கழுதைபோன்ற அற்புதமான திரைப்படப் பிரதியாக்ககாரரும் அவர்தான். இந்தவகையிலும் அந்தப் பரிசு தகுதியானவருக்கே போய்ச் சேர்ந்தது என எடுக்கலாம்.

அடுத்து திரு.இ.பத்மநாபஐயர். ஐயர் என்று பெயரிலேயே அடையாளம் வைத்துக்கொண்டுள்ளது தவிர இவர் என்ன செய்தார் பரிசுக்கு? என்று அப்போதும் பரவலான கேள்விகள் பிறந்தன. இதற்கெதிரான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. மற்றது சிற்றிதழ் வெளிப்படையாகவே தன் எதிர்ப்பைத் தெரிவித்தது. ஆனால் பத்மநாபஐயர் இலங்கை, இந்தியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தமிழ் இலக்கியம் குறித்துச் செய்த சேவை ஒப்புமிக்கு இல்லாதது என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. அவர் ஒருவகையில் தமிழ்க் கொண்டோடியாகவே இருந்தார்.

அடுத்து ஜோர்ஜ் எல். ஹார்ட். ஏறக்குறைய சங்கத் தமிழை ஆங்கில மாணவர்களுக்கும், ஆங்கிலத்தில் பயிலும் மாணவர்களுக்கும், ஆங்கில இலக்கியவாதிகளுக்கும் முன்னால் எடுத்துவைத்த பெரும்பணியினைச் செய்தவர் திரு.ஹார்ட். இது ஏறக்குறைய ‘மால்குடி’ திரு. ராமானுஜத்தின் பணிக்கிணையானது.

ஈழ அரங்காடலில் தனித்துவமும் புதுமையும் புகுத்திய திரு.தாசீஸியஸ_க்கு அடுத்த இயல்விருது வழங்கப்பட்டது. இப்போது 2007ஆம் ஆண்டுக்கான இயல் விருது திருமதி. லட்சுமி ஹோல்ம்ஸ்ரோமுக்கு என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பின் மூலம் தமிழின் நவீன இலக்கியத்தை அவர் ஆங்கில இலக்கிய உலகத்துக்கு அளித்திருப்பதின் வாழ்நாள் சாதனைக்காக இத் தேர்வு நடந்ததாய் அறிவிப்புத் தெரிவிக்கிறது.

3.

ஆங்கிலத்தில் புதுமைப்பித்தனையும், மௌனியையும், சுந்தர ராமசாமியையும், அம்பையையும், அசோகமித்திரனையும், பாமாவையும் இன்று தமிழ் அறியாத உலகம் அவரது மொழிபெயர்ப்புக்களின் ஊடாகவே அறிந்துகொள்கிறது என்பது முக்கியமானது. தமிழ்ச் சிறுகதையின் மகாஉச்சம் தொட்டவன் புதுமைப்பித்தன். தமிழில் பெண்ணிய எழுத்தின் வகைமாதிரிக்கு முன்னெடுக்கக்கூடியது அம்பையின் எழுத்து. தலித்திய இலக்கியத்தில் பேசப்படும் படைப்பு பாமாவினது. நவீன தமிழின் பல்வகை இலக்கியங்களின் வகைமாதிரியை திருமதி. லட்சுமியின் மொழியாக்கத்தின் மூலம் ஒருவர் அடையமுடியும்.

தமிழும் செம்மொழியாகிவிட்டது. அதன் இலக்கியவளத்தை பிறமொழி பேசுவோர் எவ்விதம் கண்டுகொள்வது? உலகின் மூத்த மொழிகளில் ஒன்றானதும், செவ்வியல் இலக்கியங்கள் நிறைந்ததுமான தமிழ் மொழியை அவர்கள் எவ்வாறு தெரிந்துகொள்வது? சீகன் பால்குஐயர் போலவும், வின்ஸ்லோ போலவும், போப்ஐயர் போலவும் தமிழ் மக்கள் மத்தியில் வந்திருந்து தமிழ்மொழியைக் கற்று அறிந்துகொள்ளச் சொல்லலாமா? மொழிபெயர்ப்புக்கள் காலத்தின் அவசியம். நம் மெய்யான அக்கறைகள் இங்கிருந்தே தொடங்கப்படவேண்டுமென நான் எதிர்பார்க்கிறேன்.

மெய்யான தமிழ்ப் புலமையை வெளிநாட்டார் வணக்கஞ் செய்யச் செய்வதற்கான வழியும் இதுவாகவே இருக்கிறது. மட்டுமில்லை. புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமுதாயத்தின் நாளைய வழித்தோன்றல்கள் தம் மொழி இலக்கியத்தை ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலமாகவேதான் அறிந்துகொள்ளப் போகிறார்கள். திரு.ஜோர்ஜ் எல்.ஹார்ட்டும், திருமதி. லட்சுமி ஹோல்ம்ஸ்ரோமும் இலக்கியத் தோட்டத்தினரின் மிகச் சிறந்த தேர்வுகள் என்பதில் எனக்கு உடன்பாடு.

ஜெயமோகன் பதிவுகள்.கொம் கட்டுரையில் தெரிவித்ததுபோல் திருமதி. லட்சுமி ஹோல்ம்ஸ்ரோமைவிட இத்துறையில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் இருக்கக்கூடும். ஆனால் அமைப்பாளர்களுக்குச் செய்யப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் ஒரு தேர்வு நடந்திருக்கிற பட்சத்தில் அமைப்பினரையும் குறைசொல்ல முடியாதேயிருக்கிறது. அமைப்பினரில் சிலரோடு உரையாட நேர்ந்த ஒரு சந்தர்ப்பத்தில் நான் இதுபற்றி விசாரித்தபொழுது, அவர்களில் ஒருவர் இதுவரை காலத்தில் தகுதியான ஒருவரை நான் பரிந்துரை செய்திருக்கிறேனா? ஏன்று கேட்டார்.

பங்காளியாக இருக்க முடியாதபொழுதில், அம்மாதிரியான பார்வையாள தளத்தில் நின்றான குற்றஞ் சுமத்தல்கள் மட்டும் சரியான அணுகுமுறையாக இருக்குமென எனக்குத் தோன்றவில்லை. சர்வதேசம் அளாவி இடம்பெறும் ஒரு விருது வழங்கலில் பல்வேறு குறைகள் இருக்க வாய்ப்புள்ளது. அக் குறைகள் சுட்டிக்காட்டப்படும்போது அவற்றை அவர்கள் கூடிய அக்கறையெடுத்து நிவர்த்திசெய்ய முயலவேண்டும்.

இயல்விருதுக்கான தேர்வுகளின் நியாயங்கள் விருது வழங்கலின்பொழுதோ அல்லது முன்னதாகவோ அறிவிக்கப்படுகிறதுதான். ஆனால் கடந்த இரண்டு தடவைகளிலும் இடம்பெற்ற படைப்பிலக்கியப் பரிசுகள் அளிக்கப்பட்டமைக்கான தராதர விளக்கங்கள் தெரிவிக்கப்படவேயில்லை.

எந்தச் சமூகத்தில் ஒரு நிறுவனம் இயங்குகிறதோ, அந்தச் சமூகத்துக்கு அது வெளிப்படையாக இருக்கவேண்டுமென்பதின் அகல்விரிவான விளக்கம் இதுதான். இனிவரும் காலங்களில் போட்டிக்கு எடுக்கப்பட்ட நூல்கள், தகுதியானவற்றின் தேர்வுத் தொகை, தேர்வுக்குப் பொறுக்கப்பட்டவை, பரிசீலனையில் நின்ற இறுதி நூல்களின் விபரம், தேர்வின் காரணம் என யாவற்றையும் அந்தச் சமூகத்தின் முன்னால் விரித்துவைக்கும் கடமையை இலக்கியத் தோட்டம் மறவாதிருக்கவேண்டும.;

ஓர் இலக்கியவாதியாக இம் முன்மொழிதலை இங்கே சமர்ப்பிக்கிறேன்.

baladevakanthan@gmail.com

 


துவக்குகளின் சப்தங்களிடையில்....
- சுப்ரபாரதிமணியன் -


இலங்கையின் தேசிய இனச்சிக்கல், போரின் விபரீதங்களால் தகர்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் சாதாரண வாழ்க்கைக் கனவுகளுக்கு மத்தியில் அப்பிரச்சனைகள் பற்றிய சுவடின்றி திரைப்படங்கள் இலங்கையிலிருந்து வெளிவருவது அங்கு நிலவும் அரசியல் சூழலின் இறுக்கத்தையும் கலைஞர்களின் இயலாமையையும் காட்டுகிறது என்று புரிந்துகொள்ள முடிகிறது.

பிரசன்னா ஜெயக் கொடியின் 'சங்கரா' என்ற இலங்கை படத்தில் இவ்வகைச் சிக்கல் முழுதும் புறக்கணிக்கணிப்பட்டு அல்லது தேவையில்லாதாக்கப்பட்டு ஒரு திரைக்கதை வடிவமைக்கப் பட்டிருக்கிறது. ஒரு கோவிலில் வரையப்பட்டிருக்கிற 'தெலபதா ஜாதகயா' கதைகளை மையமாகக் கொண்டு வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் சிதிலமடைந்திருப்பதை சரி செய்ய ஒரு புத்தத்துறவு வருகிறார். அக்கதைகளில் புத்தரின் உபதேசங்கள் வலியுறுத்தப் பட்டிருக்கின்றன. உயர்ந்த லட்சியங்களை மனதில் கொண்டிருப்பவன் பெண் போன்ற மாயைகளால் கவரப்படக்கூடாது என்பது அதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது.

கிராமிய சூழல், வழிபாட்டிற்கென்று வந்து போகும் சிங்களவர்கள், தனித்து விடப்பட்ட சூழலில் புத்தத் துறவி தன் வேலையைத் தொடர்கிறான். இளம்பெண் ஒருத்தியின் தலை 'ஹேர்பின்'னை ஒருநாள் எதேச்சையாக கோவிலில் கண்டெடுக்கிறான். அந்த இளம்பெண்ணை அவன் அறிவான். அதை அவளுக்கு தருவது என்ற முடிவில் அலைவுறுகிறான்.சாதாரண மனிதனின் சபலமும் ஊசலாட்டமும் அவனின் துறவைக் கேள்விக்குறியாக்குகிறது. பௌத்த வாழ்க்கையின் சாரங்களும், ஓவியங்களின் மையமும் இருவேறு உலகங்களாகின்றன. இரண்டிற்குள்ளும் அலையும் மனமும் புனைவுகளும் வெவ்வேறாகின்றன.

ஓர் இரவில் அந்த ஓவியங்கள் சிதைக்கப்படுகின்றன. அந்த ஓவியங்களின் மறு žரமைப்பு என்பது அவனுக்கு கேள்விக்குறியாகிறது. தான் மாட்டிக் கொண்டிருக்கும் மோகவலையை பிய்த்தெறிவதா அல்லது அதனுள் மாட்டி அலைவுறுவதா என்பது அவனுள் விசுவரூபிக்கிறது. கோவிலைத் தாண்டிய புறச்சூழலை தவிர்த்து விட்டு இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருப்பதில் பல கேள்விகள் தேவையில்லாததாக்கப்படுகின்றன. தேசிய இனச் சிக்கலில் பௌத்தமும், அது சார்ந்த அமைப்புகளின் சமரச உணர்வும் ஒரு புறம் இப்படத்தை மையமாக்கி ஒப்பீடு நிகழ்த்தப்படும்போது இப்படத்திற்கு இன்னுமொரு பரிமாணம் கிடைக்கலாம். அது வலிந்து கொள்ளப்படும் படிமமாகத்தான் இருக்கும்.

ஈழத்தமிழ்ச் சூழலை பின்னணியாகக் கொண்டு ஒளிப்பதிவாளர் சி.கே.ராஜ்குமார், இயக்குனர் புதியவனின் உருவாக்கத்தில் வெளிவந்திருக்கும் 'மண்' திரைப்படம் இலங்கைச் சூழலில் ஜாதீய இறுக்கத்தை வெளிப்படுத்துகிறது. இலங்கையின் சாதீய பிரச்சனைகள், தீண்டாமைக் கொடுமைகள் தமிழர்கள் மத்தியில் நீறு பூத்த நெருப்பாக இருந்து வருகிறது. இப்பிரச்சனைகள் முதன்மைப்படுத்திப் பேசுவது ஈழத்தமிழர்களுக்கு எதிராக முனைப்படுத்தும் போக்குகளால் பல சந்தர்ப்பங்களில் பின்னோக்கித் தள்ளப்பட்டிருக்கிறது. இந்திய வம்சாவளியின் மலையகத் தமிழர்களும் தீண்டாதவர்களாகவே நடத்தப்படுகிற அவலத்தையும் இப்படம் சொல்கிறது.

'தோட்டக்கார நாய்' என்ற வசவுடன் வாழும் மலையகத் தமிழர் குடும்பம் ஒன்று கலவரமொன்றில் மகனை இழந்ததால் வவுனியா பிரதேசத்தில் கனகராயன் கிராமத்தில் இடம்பெயர்ந்து வ'ழ்ந்து வரும் சூழலில் அக்குடும்பத்து பெண் பண்ணையாரின் மகனைக் காதலித்து கர்ப்பமுறுகிறாள். பண்ணையார் மகன் இப்பிரச்சனையிலிருந்து தப்பிக்க லண்டன் சென்று விடுகிறான். இருபதாண்டுகள் கழித்து அவன் போரில் சிதைந்த தன் கிராமத்தைப் பற்றி ஒர் ஆவணப்படம் எடுக்க வருகிறான். ஏமாற்றப்பட்ட பெண்ணின் மகன் தன் தந்தையை அடையாளம் கண்டு சுட்டுக் கொல்கிறான். சாதீய கொடுமைகளின் காரணமாக 'கும்பிட மட்டுமே உயர்ந்த கைகள் இப்போது கொடுமைக்கு எதிராகத் துப்பாக்கியைத் தூக்கவும் உயர்வதை' இயக்குனர் சுட்டுகிறார்.

கிராமிய சாதீய உணர்வின் ஆழமும், சிறுவயதினரின் பாலியல் குறித்த விவாதங்களும் பாலியல் அலைக்களிப்புகளும் நுணுக்கமாக படம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. ராஜ்குமாரின் தேர்ந்த ஒளிப்பதிவு இலங்கையின் வனப்பை ஏக்கம் கொள்ளும் வகையில் படமாக்கியிருக்கிறது. வனப்பின் பின்னணியில் கேட்கும் துவக்குகளின் சப்தங்கள் முழுமையாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு வனப்பான பூமி போரால் சிதைவுறுகிற கொடுமை மனதை துன்புறுத்துகிறது. அந்தப் போரின் நியாயங்கள், விவாத தர்க்கங்களோ இப்படத்தில் இடம்பெறவில்லை. ஆனால் அங்கு நிலவும் சாதீயக் கொடுமையின் அழுத்தம் சரியாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. வவுனியா பகுதியில் இப்படப்பிடிப்பு நடத்த போராளிகளின் அனுமதி , தமிழ்ப்படத்தின் தேவை ஆகியவை குறித்து பல சங்கடங்களும் மனதில் எழும். யுத்த பூமியிலிருந்து யுத்தம் தவிர்த்த விடயங்களைச் சொல்ல புதியவனுக்கு இருக்கும் உறுத்தலும் எளிதாக விளங்கக் கூடியதுதான்.

- சுப்ரபாரதிமணியன் (subrabharathi@gmail.com)


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner