பதிவுகள் முகப்பு

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்!

விவரங்கள்
- ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -
கவிதை
28 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1. சிறுமிகளின் இரட்டைச்சடையும் குதிரைவாலும்

குட்டிப்பெண்ணுக்கு அவளுடைய அம்மா எப்போதுமே அத்தனை இறுக்கமாக இரட்டைச்சடை பின்னிவிடுவாள்
காதுகளின் பின்புறமும் பிடரியிலும் நெற்றிப்பொட்டுகளிலும் வலி தெறித்தெழும்.
தாளமுடியாமல் சிணுங்கினால் நறுக்கென்று குட்டுவிழும்.
நடுமண்டையும் சேர்ந்து வலிக்கும்.
அல்லது குதிரைவால்.
கோடையில் கசகசக்கும்.
ஆனால் அம்மாவுக்குப் பெண் நாகரீகமாக இருக்கவேண்டும்.
அதாவது, அவர் வகுத்த நாகரீக வரம்பெல்லைக்
குட்பட்ட அளவில்
அவர் வகுத்தது அம்மம்மா வகுத்திருந்ததில் பாதி
அச்சு அசலாகவும் பாதி புறந்தள்ளப்பட்டு
திரிந்து உருமாறியதாகவும்.
பள்ளிக்குச் சென்றபின் கூந்தலை அவிழ்த்துவிட்டுக்கொள்ளலாமென்றால்
வகுப்பில் எல்லோருமே விறைத்துக்கட்டிய பின்னல்களும் அல்லது கசகசக்கும் குதிரைவால்களுமாயிருக்க
பாடமெடுக்கும் கைகளில் இருக்கும் இல்லா
திருக்கும் பிரம்புகளின்
நீள அகலம் நினைவில் பேயாகத் தலை
விரித்தாடும்.
அன்று அப்படியொரு தலைவலி வந்தபோது
அம்மா அலறியடித்துக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றாள்.
மருத்துவர் ‘அறிவுகெட்டத்தனமா இத்தனை இறுக்கமாகப் பின்னியிருக்கிறீர்களே – நரம்புகளே அறுந்துவிடுமளவு?’ என்று கோபமாகக் கேட்டபோது அன்பு அம்மாவின் முகம் துவண்டுபோவதைக் காணப்பொறுக்காத சிறுமி
’ அம்மாவை ஏன் திட்டுகிறீர்கள் – இப்படிப் பின்னுவதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது’ என்றாள்.
‘அறிவுகெட்டத்தனமா’ என்று மருத்துவர்
கூறியிருக்கத் தேவையில்லை’.
யாகாவாராயினும் நாகாக்க.
மருத்துவர் சொன்னது அவளுடைய மீட்சிக்கான தருணம் என்று அந்தச் சிறுமிக்குப் புரிந்திருக்க வழியில்லை…
ஓர் அந்நியர் அன்பு அம்மாவை முட்டாளென்று திட்டக்கேட்டு முட்டிக்கொண்டு கோபம் வரத்தானே செய்யும்…
மகள் சொன்னதைக் கேட்டு அகமகிழ்ந்துபோன அம்மா அடுத்தநாளிலிருந்து இன்னும் இறுக்கமாகப் பின்னக்கூடும்.
புரிந்தும் புரியாமலுமான குழப்பத்தில் உறங்கத்தொடங்கினாள் சிறுமி.

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானம்: "பொன்மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன், நான் வந்த நேரம் அந்த மான் அங்கே இல்லை" - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
28 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கங்கை அமரனின் இசையில், கவிஞர் முத்துலிங்கத்தின் எழுத்தில், மலேசியா வாசுதேவன் & பி.சுசீலா குரலில் ஒலிக்கும் பாடலுக்கு தம் நடிப்பால் உயிரூட்டியிருப்பவர்கள் சுதாகரும், , ராதிகாவும்.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்க ஒளிப்பேழைகள்!

விவரங்கள்
- ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -
இலக்கியம்
25 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ரொறன்ரோ தமிழ்ச் சங்க ஒளிப்பேழைகள்!

கனடாக் கலை,இலக்கிய வளர்ச்சிக்கு ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் ஆற்றிவரும் பணி முக்கியத்துவம் மிக்கது. இதுவரை தொடர்ச்சியாக இச்சங்கம் நடாத்திய கலை, இலக்கிய நிகழ்வுகளின் ஒளிப்பேழைகளைப் பின்வரும் இணைப்பில் நீங்கள் கண்டு, கேட்டு களிக்கலாம்.

http://torontotamilsangam.ca/videos

மேலும் படிக்க ...

நண்டுகளுக்கும் ஒரு மேம்பாலம்! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -

விவரங்கள்
- கிறிஸ்டி நல்லரெத்தினம் -
கிறிஸ்டி நல்லரெத்தினம்
25 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அப்போதுதான் பேய் மழை பெய்து ஓய்ந்திருந்தது! அடர்ந்த காடு. கதிரவன் வெளியே வரட்டுமா வேண்டாமா என தயங்கும் அதிகாலை வேளை. ஏதோ 'சர, சர' என்ற சப்தம் அந்தக் காட்டின் நிசப்தத்தை மெதுவாய் கலைத்தது. ஒரு செந்நிற கம்பளம் மெதுவாய் அக்காட்டில் இருந்து பரந்து விரிந்து கடற்கரையை நோக்கி நகரத் தொடங்கிற்று. இது என்ன மாயம்? அருகில் சென்றுதான் பார்ப்போமே. அட, அந்த செந்நிறத்தை தந்தது மையும் அல்ல.... மந்திரமும் அல்ல. அவைதான் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு செந்நிற நண்டுகள். 43.7 மில்லியன் நண்டுகள் இத்தீவு வாசிகள்! ஆஸ்திரேலியாவின் சனத்தொகையை விட (25.9 மி) ஏறத்தாள இரண்டு மடங்கு என்று வைத்துக்கொள்ளுங்களேன்!

இவை இத்தீவிற்கு தனித்துவமானவை. இவை ஜிகார்கோய்டியா (Gecarcodea) எனும் நிலநண்டு பேரினங்களுள் அடங்கும் உயிரினங்கள். இவை ஆஸ்திரேலியாவின் கோகோஸ் தீவுகளிலும் வாழ்ந்தாலும் கிறிஸ்மஸ் தீவுதான் இவைகளின் ஹெட் ஆபீஸ்! அது சரி, இந்த கிறிஸ்மஸ் தீவு எங்குதான் இருக்கிறதாம்? பூமிசாத்திர வகுப்பினுள் நுழைவோமா?

மேலும் படிக்க ...

உக்ரைன் நாட்டின் சில பகுதிகளை ரஸ்யா கைப்பற்றியதன் எதிர்வினை என்ன? -  குரு அரவிந்தன் -

விவரங்கள்
-  குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
24 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- பெப்ருவரி 22, 2022 -

கடந்த இரண்டு மாதங்களாக ரஸ்யா - உக்ரைன் எல்லையில் நடக்கும் பிரச்சனை உலகநாடுகளின் கவனத்தைத் திருப்பி இருக்கின்றது. உக்ரைன் எல்லையில் 100,000 மேற்பட்ட ரஸ்யாவின் இராணுவ வீரர்களும், தாக்குதல் வாகனங்களும் குவிக்கப்பட்டிருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். எந்த நேரமும் ரஸ்யா உக்ரைன் மீது படை எடுக்கலாம் என்றதொரு மாயை இதன் மூலம் உருவாக்கப் பட்டிருக்கின்றது. ஊரிலே நடக்கும் வேலிச் சண்டை போல இதுவும் ஒரு எல்லைச் சண்டைதான். இதற்கு முக்கிய காரணம் நேட்டோ கூட்டணியில் உக்ரைன் அங்கத்தவராகச் சேர்வதை ரஸ்யா தனது பாதுகாப்பு காரணங்களுக்காக விரும்பவில்லை. அதை அனுமதித்தால் தங்கள் எல்லையில் நேட்டோ நாடுகள் ஏவுகணைகளை நிலை நிறுத்திவிடுவார்கள் என்ற பயம் ரஸ்யாவுக்கு இருக்கின்றது. எனவேதான் உக்ரைன் மட்டுமல்ல, எல்லைநாடுகள் நேட்டோவில் இணைவதையும் ரஸ்யா விரும்பவில்லை. இதைவிட 2015 ஆம் ஆண்டு நடந்த மின்ஸ்க் உடன்படிக்கையின் தொடராகவே இந்த ரஸ்யா – உக்ரைன் எல்லைப் பிரச்சனை மீண்டும் உருவெடுத்திருக்கின்றது என்றும் சொல்லலாம்.

இதன் காரணமாக ரஸ்யா ஏன் படைகளை எல்லையில் குவித்திருக்கிறது என்பதற்கான காரணத்திற்கு ரஸ்யா விளக்கம் கொடுத்திருக்கின்றது. ‘உக்ரைன் மற்றும் முன்னாள் சோவியற்யூனியன் நாடுளில் நேட்டோ ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்த வேண்டும். ரஸ்ய நாட்டு எல்லைக்கு அருகே ஆயுதங்கள் கொண்டு வருவதை நிறுத்த வேண்டும். கிழக்கு ஐரோப்பாவில் இருந்து கூட்டுப் படைகளை விலக்க வேண்டும்’ என்பன போன்ற கோரிக்கைகள் ரஸ்யா நாட்டு அதிபர் விளாடிமிர் புடினால் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி சஞ்சிகை நடத்தும் "கவிதை உரையாடல் - 2" - அகில் சாம்பசிவம் -

விவரங்கள்
- அகில் சாம்பசிவம் -
நிகழ்வுகள்
23 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் இணைய வழிக் கலந்துரையாடல் : 'எமது சூரிய குடும்பம்' (அறிவியல் தொடர் - 5)

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
23 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: கலிங்கு (2015: 1-9) - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
23 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

2015  -  1

வீட்டின் முன்னால் நின்ற மாமரம் நிறைபூ கொண்டிருந்தது. நெடிய மாரியின் பின் காகம்கூட அதிலே வந்தமர்ந்து கத்தியது அவள் கண்டதில்லை. இப்போது வந்து அணில்கள் பாயத் துவங்கியிருக்கின்றன. என்ன வாழ்க்கையிது என அலுத்திருக்கிறபோது பிரபஞ்சத்தின் இயக்கம் இவ்வாறுதான் வாழ்க்கை என்கின்ற தத்துவத்தைப் புரிதலாக்குகிறது. சந்திரிகாவுக்கும் அவ்வாறான தெளி -வு அப்போது ஏற்பட்டிருந்தது. அடைந்த துன்பங்களாலும், துயரங்களாலும், இறுதியாக வந்து விழுந்த தனிமையாலும்தான், வந்த ஞானம் அது. தனிமை, புரிய முடிந்தவர்களுக்கு பெரும் ஞான வித்தாகிறதுதான்.

சென்ற ஆண்டு தை மாதத்தில் எப்போதும் அலைந்து திரிய விதிக்கப்பட்டவர்போலிருந்த அப்பா மரணமாகியிருந்தார். மூன்ற மாதங்களின் முன் அம்மாவும் காலமாகிப் போனாள். பிளாஸ்ரிக் கால் பொருத்தி சந்தோஷமாக இருந்தபோதும், அவளை திட்டித் தீர்த்துக்கொண்டிருந்த தாயின் மறைவுதான், அவளை ஒரு புள்ளியில்போல் நிறுத்தி வாழ்க்கையை விசாரப்பட வைத்தது.

விறாந்தையிலிருந்து பார்த்தால் லூர்து மாதா ஆலயத்தின் முகப்பு காலை வெயிலில் பளீரிட்டுத் தெரியும். முகப்பின் மேல்பகுதியிலிருந்த கண்ணாடிக் கூட்டுக்குள் கையில் குழந்தை ஏந்தி, ஆகாய நீல மேனியில் வெண்ணுடை விளங்க, நூற்றாண்டுக் கணக்காய் கருணை வெள்ளம் பொங்க நின்றிருக்கும் மாதாவின் சொரூபம் கண்களில் படும். முதல் தரிசனத்திலேயே ‘மாதாவே…!’ என அவளது வாய் முணுமுணுக்கிறது.
அவள் உயிர்வரை களைத்திருந்தாள். ஏழு எட்டு வருஷங்களாக வாழ்ந்த வாழ்வு வெறுத்துப்போய் இருக்கிறது. வாழ்க்கை அர்த்தமிழந்து தோன்றுகிறது. கடந்த மூன்று மாதங்களாக ஓய்ந்திருக்கிற ஓட்டோக்களின் உறுமுகைகள், இனி அவள் வீட்டு இருண்ட கேற்றடியில் மறைந்துநின்று ஒலிக்கத் துவங்கியிடும்.

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: கலிங்கு (2012: 11-13) - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
23 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

11

முன்னொரு காலத்தில் வழித் தடங்களும் அற்றிருந்த பெருவனம் மாங்குளத்துக்கும் முல்லைத் தீவுக்குமிடையே செறிந்து கிடந்தது. உள்நுழைந்து செல்கிறபோது தடங்கள் தோன்றி மறைந்து மீண்டும் தோன்றுவதான விந்தையை அவை கொண்டிருந்தன. பெருமரங்களின் அடியில் புல் பூண்டு செடி கொடிகள் துளிர்விடாதென்று யார் சொன்னது? அந்த விதி வனத்துக்கு இல்லை. விதிகள் பிறப்பதும் நிலைப்பதும் மண்ணில் காண்பவை. மனிதரால் இழைக்கப்படுபவை. வனம் தனக்கான விதிகளை தானே வகுக்கிறது.

மழை பெய்யும் காலத்தில் வனம் தாகம் தணிக்கிறது, நனைகிறது, விளையாடுகிறது. வெயிலடிக்கும் காலத்தில் அது உயிர்தரித்திருக்க மட்டும் நீரைத் தேடுகிறது. அந்த நீரை அது மண்ணில் காபந்துசெய்து வைத்திருக்கிறது. அந்தவகையில் யாருமறியா ஒட்டகமாய் இருக்கிறது வனம். பூக்கும் மரங்கள் வனத்தில் நிறையவேயெனினும், அவைகளில் தேத்தாமரம் ராணியாக இருக்கிறது. அதன் வாசம் வெகுதூரத்துக்குப் பரவி வனத்தையே வாசக் காடாக்கிவிடுகிறது. அது பூக்கும் காலத்தில் வனமெங்கும் வானவரும் வந்து மகிழ்ந்து விளையாடி களித்துச் செல்வர் என்கின்றன வனவரது கதைகள்.

கனி தரும் மரம் ஒவ்வொன்றும் பூக்கும். பூத்துவிட்டு சினைப்படுவதற்காய் சிப்பிபோல் வாய் பிளந்து காத்திருக்கும். காற்றிலும் தும்பிகளிலும் தேனீக்களிலும் தொற்றிவரும் ஒரு மகரந்தத் துகளுக்கானதுதானே பூவின் தவம்? தவத்தின் சித்தியில் சூல் கொள்கின்றன பூக்கள். காய்கள் தோன்றுகின்றன. காய்கள் கனிகளாகின்றன. குருவிகளின் பட்சணிப்பிலும், காற்றின் வீச்சிலும் இனவிருத்தி தூரதூரங்களிலும் நடக்கிறது. மரம் ஒரு சுற்று வாழ்வை முடித்த ஆசுவாசம் கொள்ள மழை வருகிறது.

மேலும் படிக்க ...

வெற்றியின் இரகசியங்கள் (2): மனத்தின் தன்மைகள்! - அ.ந.கந்தசாமி -

விவரங்கள்
- அ.ந.கந்தசாமி -
அறிஞர் அ.ந.கந்தசாமி பக்கம்
21 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

-  இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான அறிஞர் என்னும் அடைமொழியுடன் 'அறிஞர் அ.ந.கந்தசாமி' என்றழைக்கப்பட்ட எழுத்தாளர் அ.ந.கந்தசாமி மானுட வாழ்க்கைக்கு வெற்றியைத்தரக்கூடிய நல்லதோர் உளவியல் நூலொன்றையும், வெற்றியின் இரகசியங்கள்,  எழுதியுள்ளார். தமிழகத்தில் பாரி நிலையத்தால் , எழுத்தாளர் செ.கணேசலிங்கனின் உதவியுடன் வெளியிடப்பட்ட நூல். இத்துறையில் வெளியான மிகச்சிறந்த நூல்களிலொன்று. அறுபதுகளிலேயே அ.ந.க இவ்வகையான நூலொன்றை எழுதியிருப்பது வியப்பினைத் தருகின்றது. கூடவே அவரது பரந்த வாசிப்பையும் வெளிப்படுத்துகின்றது. அவரது மறைவின்போது அவரது இறுதி மரியாதை நிகழ்வில் , அவரது தலைமாட்டில் இந்நூல் வைக்கப்பட்டிருந்த புகைப்படம் பத்திரிகைகளில் வெளியானது. 'வெற்றியின் இரகசியங்கள்' பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. - பதிவுகள்.காம் -

நூல்: வெற்றியின் இரகசியங்கள். - அ. ந. கந்தசாமி - | விற்பனை உரிமை: பாரி நி லை ய ம் 59 பிராட்வே, சென்னை-1. (P A A R N L A Y A M 59, Broadway : Madras-l.) | முதற்பதிப்பு : டிசம்பர்-1966 | விலை ரூ. 5-00 | அச்சிட்டோர்: ஈஸ்வரி பிரிண்டர்ஸ், சென்னை-14.


2. மனத்தின் தன்மைகள்

மனிதனுக்கும் இதர உயிர்களுக்கும் இருக்கும் வேற்றுமை அவனுக்குச் சிந்திக்கத் தெரிந்திருப்பதுதான் என்று கிரேக்க அறிஞன் அரிஸ்டாட்டில் சொல்லியிருக்கிறான், ஆனல் ஒக்ஸ்போர்ட் சர்வகலாசாலையைச் சேர்ந்த பேராசிரியர் ஹம்ப்ரீஸ் போன்றவர்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. சிந்தனை மனிதனின் ஏகபோக உரிமையல்ல என்றும் பூனை, நாய், கொரில்லா போன்ற மிருகங்களும் சிந்திக்கவே செய்கின்றன என்றும் இவ்வறிஞர்களில் பலர் பரிசோதனைகள் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.

இது எப்படியாயினும் ஒன்றை மட்டும் எவ்ரும் மறுக்க முடியாது. இன்றுள்ள உலகப் பிராணிகள் யாவற்றிலும் அதிகமாகச் சிந்திக்கத் தெரிந்தவன் மனிதன்தான். மனிதனுக்கு அடுத்தபடி கொரில்லாக் குரங்கே அதிகமாகச் சிந்திக்கத் தெரிந்த பிராணி என்று விஞ்ஞானிகள் கூறு கிறார்கள். ஆனால் மனிதனின் சிந்தனா சக்திக்கும் கொரில்லாவின் சிந்தனா சக்திக்கும் எவ்வளவு வித்தியம்? ஒன்று மலை, மற்றது கடுகு, மனிதனின் சிந்தனா சக்தியின் பீடம் மனம் என அழைக்கப்படுகிறது. இந்த மனம் எங்கள் தேகத்தைக் கட்டியாள்கிறதா, அல்லது தேகம் மனதைக் கட்டியாள்கிறதா என்பது பற்றி மனிதன் நீண்டகாலமாக வாதித்து வருகிறான். இந்த வாதத்தில் மிகப் பெரிய தத்துவஞானிகள் பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க ...

மெல்பனில் Dare to Differ நூல் வெளியீட்டு அரங்கு!

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
21 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

மேலும் படிக்க ...

பவள விழாக்காணும் கவிஞர் 'தேசபாரதி' தீவகம் வே.இராசலிங்கத்தை வாழ்த்துகின்றோம்!

விவரங்கள்
- பதிவுகள்.காம் -
நிகழ்வுகள்
21 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிஞர் 'தேசபாரதி' தீவகம் வே.இராசலிங்கம்

பதிவுகள் இணைய இதழ் மீது மதிப்பும், பற்றும் வைத்துள்ள , பவள விழாக்காணும்  கவிஞர் 'தேசபாரதி' வே.இராசலிங்கம் அவர்களை வாழ்த்துகின்றோம். புதுக்கவிதை கோலோச்சும் கால கட்டத்தில் இன்னும் மரபுக் கவிதைகளைச் சிறப்பாக எழுதிவரும் கவிஞர் அவர். அவ்வகையில அவர் முக்கியமானவர்.  அவரது பவள விழா நிகழ்வு பற்றிய தகவலினை உரிய நேரத்தில் கவனிக்கத் தவறியதையிட்டு வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக அந்நிகழ்வு பற்றிய செய்தியினையும் இங்கு இணைக்கின்றோம்.

மேலும் படிக்க ...

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி - 2022!  - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
21 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

குளிர்கால ஒலிம்பிக் போட்டி போல இது தோன்றினாலும் அரசியல் பின்னணி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. சீனாவின் தற்காலிக நட்பு நாடுகள் இதில் கலந்து சிறப்பிப்பதையும்,  மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டிச் சில நாடுகள் இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் முதல் நாள் நிகழ்வைப் பகிஷ்கரித்து இருப்பதையும் பார்க்க முடிகின்றது. நாடுகள் குழுக்களாகப் பிரிந்திருப்பதை இது தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி இம்முறை சீனாவில் நடைபெறுகின்றது. கொரோனா – 19 பரவல் காரணமாக உலகம் ஒருபுறம் உறைந்து போயிருக்க, மறுபுறம் உறைபனியில் இடம் பெறும் விளையாட்டுக்களுக்கான ஒலிம்பிக் போட்டிகள் சீனாவில் ஆரம்பமாகி விட்டது. பனிப்பிரதேசங்களில் உள்ள நாடுகளே அனேகமாக இப்போட்டியில் கலந்து கொள்கின்றன. 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி 24 வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீனாவின் பீஜிங்கில் உள்ள தேசிய விளையாட்டரங்கில் சீன அதிபர் ஜின்பிங்கினால் உத்தியோக பூர்வமாக தொடக்கி வைக்கப்பட்டது. இம்மாதம் 20 ஆம் திகதிவரை இப்போட்டிகள் தொடர்ந்து நடைபெறும். 20 ஆம் திகதி இறுதிநாள் கொண்டாட்டம் நடைபெறும். பீஜிங்கில் 2 ஆம் திகதியே சில போட்டிகள் ஆரம்பமாகி இருந்தன. இரண்டாவது தடவையாக ஒலிம்பிக் போட்டி பீஜிங்கில் நடைபெறுகின்றது. 2008 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டி இங்கேதான் நடைபெற்றது. இந்த வகையில் இரண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய முதலாவது தலைநகரமாக பீஜிங் சாதனை படைத்திருக்கின்றது. 2026 ஆம் ஆண்டு அடுத்த குளிர்கால ஒலிம்பிக் இத்தாலியில் உள்ள மிலான் நகரத்தில் நடக்க இருக்கின்றது.

மேலும் படிக்க ...

13 ஆவது திருத்தச் சட்டமூலம் பற்றிய முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சரும் , மார்க்சிய அறிஞருமான அ.வரதராஜப்பெருமாளின் கருத்துகள்!

விவரங்கள்
- பகிர்ந்துகொண்டவர் அ.வரதராஜப்பெருமாள் -
அரசியல்
20 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு." - வள்ளுவர் -

தற்போதுள்ள அரசியல்வாதிகளில் மிகுந்த அரசியல் ஞானம் மிக்கவராக (கல்வி, அரசியல்) இவரை என்னால் அடையாளம் காண முடியும். இவர் மார்க்சிய அறிஞர்களில் ஒருவர். எண்பதுகளில் இவரது மார்க்சியக் கட்டுரைகளை 'குமரன் ' சஞ்சிகையில் வாசித்திருக்கின்றேன். ஆனால் இவர் தற்போது இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கியமானவர்களில் ஒருவர் அல்லர். இவர் தற்போது தனது அனுபவங்களைக் கடைந்தெடுத்து உருவான ஞானத்தை வெளிப்படுத்தும் எண்ணங்களை வெளிப்படுததி வருகின்றார்.

அவ்வகையில் அண்மையில் இவர் பகிர்ந்திருந்த இலங்கை , இந்திய அரசுகளுக்கிடையிலேற்பட்ட 13ஆவது திருத்தச் சட்டமூலம் பற்றிய கருத்துகளை 'எதிரொலி' பத்திரிகையில் வெளியான அரவிந்தன் என்னும் ஊடகவியலாளரின் கேள்விகளுக்கு அது பற்றி அளித்திருந்த பதில்களைப் பகிர்ந்திருந்தார். தெளிவான பதில்கள். உபகண்ட அரசியலை நன்கு விளங்கியுள்ளதை வெளிப்படுத்தும் பதில்கள்.

மேலும் படிக்க ...

பெற்றுக்கொண்டேன் கத்யானா அமரசிங்கவின் நாவல் 'தரணி'யை! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
16 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
அண்மையில் தமிழில் பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடாக வெளிவந்து விருதுகளைப்பெற்ற நாவல் எழுத்தாளர் கத்யானா அமரசிங்கவின் 'தரணி'நாவல். இதனைத் தமிழுக்குக் கொண்டு வந்திருப்பவர் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப்.
மேலும் படிக்க ...

அஞ்சலி: எழுத்தாளர் தோழர் பா. விசாலம் மறைவு! - அசோகன் யோகன் கண்ணமுத்து -

விவரங்கள்
- அசோகன் யோகன் கண்ணமுத்து -
இலக்கியம்
15 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
- எழுத்தாளர் பா.விசாலம் அவர்கள் மறைந்த செய்தியினை சமூக, அரசியற் செயற்பாட்டாளரான அசோகன் யோகன் கண்ணமுத்து தனது முகநூற் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதனை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். எழுத்தாளர் பா.விசாலம் அவர்களின் மறைவால் வாடி நிற்கும் அனைவருடன் நானும் இணைந்து கொள்கின்றேன். ஆழ்ந்த இரங்கல். - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் தோழர் பா. விசாலம் அவர்கள், இன்று அதிகாலை காலமானார்!  - அசோகன் யோகன் கண்ணமுத்து -
 

எழுத்தாளர் தோழர் பா. விசாலம் அவர்கள், இன்று அதிகாலை காலமானார், எழுத்தாளர் தோழர் பா. விசாலம் அவர்களும் அவரது வாழ்க்கைத்துணைவராக ஏற்ற தோழர் ராஜூ அவர்களும் நாகர்கோவிலில் களப்பணியாற்றியவர்கள். தோழர் பா. விசாலம், இரு நாவல்கள் மற்றும் சிறுகதைகள் எழுதியுள்ளார். ஏற்றத்தாழ்வுகளற்ற சமுதாய வாழ்வு நோக்கி தங்களை உட்படுத்திக்கொண்ட தோழர்கள் அவர்கள் தோழர் ராஜூ பல ஆண்டுகளுக்கு முன்பு மறைந்துவிட்டார். தோழர் பா. விசாலம் எனும் பெயர் நிலைகொண்டது. (தகவல்: தளம் இதழ்)

எட்டு வருடங்களுக்கு முன்னர், தோழர் விசாலம் அவர்களின் 'மெல்லக் கனவாய் பழங்கதையாய்' நாவல் பற்றி நான் எழுதிய குறிப்பை மறுபதிவு செய்கின்றேன். தோழருக்கு என் இதய அஞ்சலி!
மேலும் படிக்க ...

காதலர்தினக் கவிதை: காதல் நெஞ்சம்!  - ஜெயா ஸ்ரீ -

விவரங்கள்
- ஜெயா ஸ்ரீ -
கவிதை
15 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அழகே உனது
கண்களே கவிதை.
அன்பால் ஈர்த்தே
அகத்தை நிறைத்தாய்.

உயிரின் உயிரே
உண்மைக்கு காதலே.
உயிருள்ள வரை
பிரியாத மையலே.

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வழங்கும் கவிஞர் இந்திரனின் சிறப்புரை: திராவிடச் சிற்பங்களும், அவற்றின் அழகியலும்!

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி-
நிகழ்வுகள்
14 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Meeting ID: 834 2958 4996 | Pass code: 493623
Web: www.atlasonline.org
Email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Time: February 19, 2022

காதலர்தின வாழ்த்துகள்!

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
13 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

https://www.youtube.com/watch?v=AwazG88Jhug

மானுட உணர்வுகளில் காதல் உணர்வுகள் அற்புதமானவைு. ஏனென்றால் குடும்ப உறவுகள் தவிர்த்து முதல் முறையாக இன்னொருவருடன் உயிரும், உள்ளமும் கலந்து உறவாகும் உறவு , உணர்வு காதல். அவ்வகையில் அது மானுடரின் பருவ வளர்ச்சியில் முக்கியமானதொரு படி.

முதற்காதலோ, நிறைவேறிய காதலோ, நிறைவேறாத காதலோ, ஒரு தலைக் காதலோ அது எவ்வகையாகவிருப்பினும் அக்காதல் உணர்வுகள் மானுட வாழ்வில் முக்கியமானதோரிடத்தைப் பிடித்த உணர்வுகள் என்றால் அது மிகையான கூற்றல்ல. நான் கூறுவது தூய்மையான காதலுணர்வுகளை. அவ்வுணர்வுகளில் தன்னலம் இருக்காது. பழி வாங்கும் வெறி இருக்காது. தன் காதலுக்குரியவரின் மகிழ்ச்சி ஒன்றே நிறைந்திருக்கும்.

மேலும் படிக்க ...

அ.ந.கந்தசாமியின் 'எதிர்காலச் சித்தன் பாடல்!' & அ.ந.கந்தசாமியின் மலையக இலக்கியப் பங்களிப்பு பற்றிய குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
அறிஞர் அ.ந.கந்தசாமி பக்கம்
13 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் நினைவு தினம் பெப்ருவரி 14!

அ.ந.கந்தசாமியின் 'எதிர்காலச் சித்தன் பாடல்!' 

எழுத்தாளர் அ.ந.கந்தசாமி (அறிஞர் அ.ந.கந்தசாமி என்ற அழைக்கப்பட்டவர்) அவர்களின் நினைவு தினம் பெப்ருவரி 14. அவர் நினைவாக இந்நினைவுக் குறிப்பு வெளியாகினறது. கதை, கவிதை, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் சகல துறைகளிலும் காத்திரமாகக் கால் பதித்தவர் அ.ந.க. பத்திரிகையாசிரியராக (தேசாபிமானி, ஆரம்பகால சுதந்திரன், இதழாசிரியராகவும் (இலங்கைத் தகவற் திணைக்கள வெளியீடான ஶ்ரீலங்கா சஞ்சிகை) அவரது பங்களிப்பு பரந்து பட்டது. இதுவரை அவரது வெளிவந்த படைப்புகள்: வெற்றியின் இரகசியங்கள் , உளவியல் நூல் (பாரி நிலையம், 1966), மதமாற்றம் (நாடகம், வெளியீடு: தேசிய கலையிலக்கியப் பேரவை), மனக்கண் (மின்னூல்,அமேசன் - கிண்டில் பதிப்பு, வெளியீடு: பதிவுகள்.காம்), 'நான் ஏன் எழுதுகிறேன்' (மின்னூல், அமேசன்-கிண்டில் பதிப்பு, 14 கட்டுரைகளின் தொகுப்பு), எதிர்காலச்சித்தன் பாடல் (கவிதைத்தொகுப்பு, மின்னூல்: அமேசன் - கிண்டில் பதிப்பு, வெளியீடு : பதிவுகள்.காம்). மார்க்சியக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட அ.ந.க சமூக, அரசியற் செயற்பாட்டாளராகவும் விளங்கியவர். இலங்கைத் தமிழ் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளிலொருவராகக் கருதப்படுபவர். 

தமிழ்க் கவிதைப்பரப்பில் குறிப்பாக இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைப்பரப்பில் எழுதப்பட்ட முக்கியமான கவிதைகளிலொன்றாக நான் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) 'எதிர்காலச் சித்தன் பாடல்' என்னும் கவிதையினைக் கூறுவேன். ஆனால் இலங்கைப் பேராசிரியர்கள் அல்லது இந்திய விமர்சக வித்தகர்களின் பார்வையில் இக்கவிதை ஏன் படவில்லை என்பது புரியாத புதிர் என்பேன். பேராசிரியர் நுஃமானின் பார்வையில் கூட அ.ந.க.வின் சிறந்த கவிதைகள் எதுவும் பட்டதாக இதுவரை அவர் எழுதிய விமர்சனக் கட்டுரைகள் எவற்றிலும் நான் கண்டதில்லை (அ.ந.க.வின் ஒரு மொழிபெயர்ப்புக் கவிதையை மட்டும் . 'தேன்மொழி' கவிதையிதழின் ஐப்பசி 1955 பதிப்பில் வெளியான 'கடைசி நம்பிக்கை' என்னும் கவிதையை மட்டும் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்). விமர்சகர்கள் எவரது பார்வையிலும் படாத அ.ந.க.வின் சிறந்த கவிதைகளைப்பற்றி எழுத்தாளர்கள் பலர் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அந்தனி ஜீவா, அகஸ்தியர் , முருகையன் என்று பலர் குறிப்பிட்டிருக்கின்றார்கள். கவிஞர் முருகையன் இக்கவிதையின் சிறப்பைச் சிலாகித்துக் கூறியிருந்ததை வாசித்திருக்கின்றேன். (இன்று இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதிவரும் சி.ரமேஷ் கூட அ.ந.க.வின் படைப்புகளைத் தவற விட்டிருக்கின்றார். அண்மையில் ஜீவநதி பதிப்பகம் வெளியிட்ட 'ஈழத்து நாவல் சிறப்பித'ழில் ஈழத்து நாவல்கள் பற்றிய சி.ரமேஷின் நீண்ட நெடுங்கட்டுரையில் தினகரனில் வெளியாகி வாசகர்களின் பாராட்டுதல்களைப்பெற்ற 'மனக்கண்' நாவல் பற்றியோ, அவர் மொழிபெயர்ப்பில் சுதந்திரன் பத்திரிகையில் வெளியான எமிலி சோலாவின் 'நானா' நாவல் பற்றியோ குறிப்புகள் எவற்றையும் காண முடியவில்லை. இத்தனைக்கும் அ.ந.க.வின் படைப்புகள் இணையத்தில் நிறையவே கிடைக்கின்றன. ஜெயமோகன் கூடத் தனது தமிழ் நாவல் இலக்கியம் பற்றிய நூலில் அ.ந.க.வின் 'மனக்கண்' பற்றிக் குறிப்பிடத்தவறவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.)

மேலும் படிக்க ...

குரு அரவிந்தனின் காதலர் தினக் கதைகள்!

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
அரசியல்
13 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 1. என் காதலி ஒரு கண்ணகி

நயாகரா நீர் வீழ்ச்சியின் நீர்த் துளிகள் காற்றோடு கலந்து எங்கள் உடம்பைக் குளிரூட்ட, ‘மிஸ்ற் ஒவ்த மெயிட்டில்’ வானவில்லின் வர்ண ஜாலங்கள் என்னை ஒரு கணம் திகைக்க வைத்தன. இவ்வளவு அருகில், மிக அருகில் வானவில்லை நான் ஒரு போதும் பார்த்ததில்லை. அற்புதம்! இல்லை அதிசயம்! மாலை நேரத்து வெயிலில் நீர்த் துளிகள் பொன்மயமாக, சொர்க்க வாசலில் நுளைவது போல படகு மெல்ல மெல்ல ஆடி அசைந்தது. இயற்கையின் அதிசயத்தில் என்னை மறந்து என்னை அறியாமலே எழுந்து நின்று கண்களை மூடி, இரண்டு கைகளையும் முன்னே நீட்டி, ‘ஆகா..!’ என்று மெய்மறந்தேன்.

மறுகணம் படகு போட்ட ஆட்டத்தில், நான் தடுமாற எனக்கு முன்னால் நின்ற அவளும் தடுமாறி என் கைகளுக்குள் தஞ்சம் புகுந்தாள். கண்ணை மூடிக் கற்பனையில் இருந்த நான் என்ன நடந்தது என்று அறியாமலே, விழுந்திடுவேனோ என்ற பயத்தில் கைக்குள் அகப்பட்ட அவளை இறுக அணைத்துக் கொண்டேன். வெண்மேகப் பொதியோ? அந்த இதமான சுகத்தில் ஒருகணம் என்னை மறந்தேன். ‘ஸ்ருப்பிட்..!’ என்றாள் தன்னை விடுவித்துக் கொண்டு.

சற்றும் எதிர்பாராத வார்த்தை, தானே வந்து என் கைக்குள் விழுந்து விட்டு என்னைத் திட்டினாள்;. யாரென்றே தெரியாமல் கட்டி அணைத்தது என் தப்புத்தான், சமாளித்துக் கொண்டு,‘சொறி’ என்றேன், கோபத்திலும் அவள் ஆழகாய் இருந்தாள். கத்தும் குயிலோ இல்லை எழில் தோற்றத்தில் மயிலோ?

மேலும் படிக்க ...

அன்பைப் பரிமாறும் தினம் காதலர்களுக்கு மட்டும்தானா?   - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
13 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பெப்ருவரி 14 காதலர் தினம்!

வெலன்ரைன் தினம் என்பது உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் பலராலும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். பொதுவாக அன்பைப் பரிமாறும் தினமாக இதை எடுத்துக் கொள்வதால், ‘அன்பைப் பரிமாறும் நாள்’ என்றும் குறிப்பிடுவர். இத்தினத்தில் வேறுபாடு காட்டாமல் யாரும் யாரிடமும் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்வதால், மனதால் பண்பட்ட யாரும் அதைத் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

அதே சமயம் காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த, அல்லது பரிமாறிக்கொள்ள இந்த நாள் உகந்ததாகவும் இருப்பதால், ‘காதலர்கள் தினம்’ என்றும் குறிப்பிடுவர். சில நாடுகளில் 9 நாட்கள் இதைக் கொண்டாடுவர். காதலைக் கொண்டாடாத நாடுகளே இல்லை என்பதால், தொடக்கத்தில் அன்பைப் பரிமாற காதலர்கள் இயற்கை தந்த மலர்களையும், அவர்களுக்குப் பிடித்தமான இனிப்பு போன்றவற்றையும் பரிமாறினர். அதன் பின் கையால் எழுதிய வாழ்த்து மடல்களையும், தொடர்ந்து அச்சு யந்திரங்கள் வந்ததால் அச்சிட்ட வாழ்த்து மடல்களைப் பரிமாறும் வழக்கமும் அறிமுகமானது.

வெலன்ரைன் தினம் எப்படி அறிமுகமானது என்பதைப் பார்ப்போம். மூன்றாம் நூற்றாண்டில் ரோமானிய அரசனான இரண்டாம் கிளாடியஸ் பேரரசர் இரண்டு பேருக்குத் தண்டனை கொடுத்து அவர்களை பெப்ரவரி 14 ஆம் திகதி தூக்கிலிட்டார். வெவ்வேறு ஆண்டுகளில் அவர்கள் தூக்கிலிடப் பட்டாலும் அவர்களைப் போன்ற தியாகிகளுக்கு வெலன்ரைன் என்று பெயரிட்டார்கள். பெப்ரவரி 14 ஆம் திகதி அன்று நடந்ததால், அவர்கள் செய்த தியாகம் புனித காதலர் தினமாகப் 14 ஆம் நூற்றாண்டில் இருந்து கொண்டாடப் படுகின்றது. இதைப்பற்றி, ‘செயிண்ட் வெலன்ரைன் தினத்திற்கானது இது, ஒவ்வொரு பறவையும் தன்னுடைய இணையைத் தேடி வரும்போது’ என்று ஜெப்ரி சாஸர் ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க ...

நவஜோதி ஜோகரட்னம் (லண்டன்) கவிதைகள்!

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம் (லண்டன்) -
கவிதை
13 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

1. உலகின் பெரிய ஆயுதம்

காலையில் கண்விழிக்கிறேன்
வெற்றிடம் தான் என் வீடாகத் தெரிகிறது
பானைக்குள் இருக்கும் வெற்றிடம்போல்...
குளிப்போடு தண்ணீரை ரசிக்கிறேன்
குளியலறையில் தனிமையில் தினசரி
மர்மமான தண்ணீர்
மூடித் திறக்கிறது பிரபஞ்சம்
விபரிக்க முடியாத விந்தை அது!
குளியலறையில் காமங்களும்
கண்ணீர்ப்பாடல்களின் முணுமுணுப்பும் தான்!
நீருக்குள் என் பாடல்களை ஓசையாக்குகின்றேன்!
சாதாரணம் அது அசாதாரணம் போல் தெரிகிறது!
நீரின் ஓசையுள் என் கோபத்தையும் இசைக்கிறேன்
நிகழ்வுகள் சுருதியாகி கவிதைக்குள் இனிக்கிறது
தனிமை காணும் கனவு வெறும் வனப்பூச்சி அல்ல
தண்ணீரைத் தொடும் அழகிய என் அனுபவம்
அந்த ரசனை! ஆ...அற்புதம்!
தண்ணீர்தான் உலகின் மிகப் பெரிய ஆயுதம்
திறக்க முடியாத யன்னல்களை
மூடிவிரிக்கும் உலகின் கண்ணாடி அந்தத் தண்ணீர்தான்!

30.1.2022.

மேலும் படிக்க ...

பதிவுகள் வாசகர் கடிதங்கள்!

விவரங்கள்
Administrator
வாசகர் கடிதங்கள்
12 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- வாசகர்களே! உங்கள் ஆக்கபூர்வமான 'பதிவுகள்; இணைய இதழ் பற்றி, இவ்விதழில் வெளியான ஆக்கங்கள் பற்றி எழுதி அனுப்புங்கள். அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 


 

ஓவியர் சதானந்தன்:
Sat, Feb 12 at 9:41 a.m.

அன்புள்ள கிரிதரன் அவர்களுக்கு, இலங்கையிலிருந்து, சதானந்தன் எழுதிக் கொள்வது, தங்களது தேக, உள ஆரோக்கியம் வேண்டி முதற்கண் ஆண்டவனை பிரார்த்தித்து கொள்கின்றேன். தங்களது பயன்மிகு நேரத்தை சிரமம் பாராமல் செலவிட்டு எனது நேர்காணல்களை, வடிவமைப்புடன் நேர்த்தியாய், தங்களது 'பதிவுகள்' இணைய தளத்தில் பதிவிட்டு அதனை பல வாசகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றீர்கள்.தங்களது இந்த உதவி கிட்டாவிடில், இப்பேட்டி வாசகர்களிடம் முழுமையாய் சென்று சேர்வது என்பது சாத்தியமில்லை என்றே நான் கருதுகின்றேன். தங்களது இந்த உதவிக்கு எனது பெரு நன்றிகள் என்றும் உரித்தாகும். மேலும் தங்களது எழுத்து/இலக்கிய பணிகள் மேலும் சிறக்க எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நன்றி.
இப்படிக்கு அன்புடன் சதானந்தன்.


மேலும் படிக்க ...

இசையமைப்பாளர் வேதாவின் காலத்தால் அழியாத கானங்கள்! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
12 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இசையமைப்பாளர் வேதா காலத்தால் அழியாத தமிழ்த்திரைப்படப் பாடல்கள் பலவற்றை வழங்கியவர். ஒரு சில மேனாட்டுப் பாடல்களின் தழுவல்களுமுண்டு. தமிழ்த்திரையுலக இசையில் தழுவாதவர்கள் யாருளர்?

மாடர்ன் தியேட்டர்ஸ் என்றால் கண்ணை மூடிக்கொண்டு கூறலாம் இசையமைப்பாளர் வேதா என்று. அவரை மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான இசையமைப்பாளர் என்றே கூறுமளவுக்கு அந்நிறுவனத்துக்காக அதிக எண்ணிக்கையில் அவர் இசையமைத்துள்ளார். 'தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்' ஜெய்சங்கரையும், வேதாவையும் பிரிக்க முடியாதென்று கூறுமளவுக்கு அதிக அளவில் அவரது திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் வேதா.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், எல்.விஜயலட்சுமி, விஜயலலிதா, சி.ஐ.டி.சகுந்தலா போன்றோர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்கு இசையமைத்த வேதாவின் பாடல்கள் பல காலத்தால் அழியாதவை. வேதாவின் இசையமைப்பில் வெளியாகி எம்மையெல்லாம் துள்ள வைத்த, கிறங்க வைத்த துடிப்புள்ள பாடல்கள் பலவற்றைப் பின்வரும் இணைப்பில் கண்டு, கேட்டுக் களிக்கலாம்: https://www.youtube.com/watch?v=E5hbXdGgbbE

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. 13வது திருத்தம்! (கட்டுரை தொடர்ச்சி) - யோ.திருக்குமரன் -
  2. கனடியபத்திரிகைகளில் வெளிவந்து நூல்வடிவம் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தனின் ஆக்கங்கள்! - சுலோச்சனா அருண். செயலாளர், குரு அரவிந்தன் வாசகர் வட்டம். -
  3. சிந்தனைக் களம் (இசை, நடனம்) - மாணவர்களுக்கான நிகழ்ச்சி.
  4. கனடாவில் சிறுகதை இலக்கியம்- ஒரு பார்வை! - மைதிலி தயாநிதி -
  5. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா ! - சக்தி சக்திதாசன், லண்டன் -
  6. தற்காலத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் பற்றியதான ஒரு பகிர்வு!  - த. நரேஸ் நியூட்டன் -
  7. சிறுகதை: இரக்கம்! - சுப்ரபாரதிமணியன் -
  8. பெருங்கதையில் உவமைகள்!  - மித்ரா -
  9. இந்திய இசைக்குயில் தன் கூவலை நிறுத்தியது! - ஊர்க்குருவி -
  10. இலங்கை - பெப்ரவரி 4, 2022 : பால்மா இல்லாத சுதந்திரம்! - செ.சுதர்சன் -
  11. மருத்துவர் பிரியாந்தினி கமலசிங்கத்துக்கேற்பட்ட மிரட்டல்களும், அவரது எதிர்வினையும் பற்றி...
  12. நேர்காணல் பகுதி ஆறு (இறுதிப் பகுதி) : ஓவியர் வீரப்பன் சதானந்தனுடன் ஓர் உரையாடல்! - நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -
  13. சிறுகதை: தொட்டால் சுடுவது..! - குரு அரவிந்தன் -
  14. ரஸ்யாவின் ஆளில்லாத நவீன போர் விமானம். - குரு அரவிந்தன் -
பக்கம் 80 / 104
  • முதல்
  • முந்தைய
  • 75
  • 76
  • 77
  • 78
  • 79
  • 80
  • 81
  • 82
  • 83
  • 84
  • அடுத்த
  • கடைசி