பதிவுகள் முகப்பு

உலக மகாகவி சேக்ஸ்பியரைப் பாதித்த கவிஞன் கிறிஸ்தோபர் மார்லோ ( Christopher Marlowe) - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Christopher Marlowe சேக்ஸ்பியர் காலத்தில் வாழ்ந்த கவிஞர். இவரது புகழ்பெற்ற கவிதை  Hero and Leander!  ஹீரோ என்னும் பெண்ணுக்கும், லியான்டெர் என்னும் ஆணுக்குமிடையிலான காதலை விபரிப்பது. இக்கவிதை தூய  காதல், விதி, மானுட உணர்வுகளில் விதியின் பங்கு ஆகியவற்றை ஆராய்கின்றது.

இதில் கவிஞர் காதல் , வெறுப்பு போன்ற உணர்வுகள் தன்னிச்சையாகத்  தோன்றுகின்றன.  சிந்தித்துச் சீர்தூக்கி வருவதில்லை. பார்த்த மாத்திரத்தில் உருவாகின்றன. பின்னால் விதியிருந்து ஆட்டி வைக்கின்றது என்பது இவரது கருத்து.

இக்கவிதையின் காதலைப்பற்றிய  கடைசி இரு வரிகள் முக்கியமானவை. அவை:

Where both deliberate, the love is slight:
Who ever loved, that loved not at first sight?

மேலும் படிக்க ...

மொழிபெயர்ப்புச் சிறுகதை - ஒரு வித்தியாசமான கதை! - ஆங்கிலத்தில் மூலம் - ஓ. ஹென்றி | தமிழில் - அகணி சுரேஸ் -

விவரங்கள்
- ஓ. ஹென்றி | தமிழில் - அகணி சுரேஸ் -
சிறுகதை
10 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இங்குள்ள சிறுகதை 'ஒரு வித்தியாசமான கதை'  ஆங்கில மூலத்தில் 400 சொற்களே உள்ள உலகப் புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளரான ஓ. ஹென்றியின் புகழ்பெற்ற சிறுகதை. நம்மவர்களிடம் ஒரு குறைபாடுண்டு. குறிப்பாகப் புனைகதைகளைப்பற்றி விமர்சனம் எழுதுபவர்களிடத்தில். ஓரிரு பக்க அல்லது ஒரு பக்கச் சிறுகதைகளை அவர்களில் பலர் சிறுகதைகளாகவே நினைப்பதில்லை. மதிப்பதில்லை. அந்த அளவுகோலுடன் அவ்விதமான படைப்புகள் பற்றி கருத்துகளைக் கூறுவார்கள். இவர்கள் உலக இலக்கியத்தில் வெளியான சிறந்த சிறுகதைகளை அதிகம் தேடியெடுத்து வாசித்தால் ஒன்றைப்புரிந்துகொள்வார்கள் எழுத்தாளர்கள் பலரின் ஓரிரு பக்கச் சிறுகதைகள் பல முக்கிய சிறுகதைகளாக விளங்குவதை.  எழுத்தாளர் புதுமைப்பித்தனின் பொன்னகரம் நல்லதோர் உதாரணம்.
நல்லதொரு சிறுகதைக்கு அளவு முக்கியமில்லை. அது வெளிப்படுத்தும் உணர்வு அல்லது விடயம், வாசகர்களிடத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம்தான் முக்கியமானது. - வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள்.காம் -

ஆஸ்டினின் வடக்குப் பகுதியில் ஒரு காலத்தில் ஸ்மோதர்ஸ் என்ற பெயரில் ஒரு நேர்மையான குடும்பம் வசித்து வந்தது. அந்தக் குடும்பம்  ஜோன் ஸ்மோதர்ஸ், அவரது மனைவி, அவர், அவர்களின் சிறிய மகள், ஐந்து வயது, மற்றும் அவரது பெற்றோர்  ஆகியோரை உள்ளடக்கியது.  ஒரு சிறப்பு பதிவுக்காக நகரத்தின் மக்கள்தொகையை நோக்கி கணக்கிடப்பட்டபோது  ஆறு பேராக இருந்தது.  ஆனால் உண்மையான எண்ணிக்கையில் மூன்று பேர் மட்டுமே இருந்தனர்.

ஒரு நாள் இரவு உணவிற்குப் பிறகு சிறுமி கடுமையான வலியால் பாதிக்கப்பட்டாள்.  ஜோன் ஸ்மோதர்ஸ் சில மருந்துகளைப் பெற நகரத்திற்கு விரைந்தார். அவர் திரும்பி வரவே இல்லை. சிறுமி குணமடைந்து காலப்போக்கில் பெண்ணாக வளர்ந்தாள்.

அந்தச் சிறுமியும் சரியான நேரத்தில் திருமணம் செய்துகொண்டாள். காலம் விரைவாக ஓடியது. அவளுக்கும் ஐந்து வயதில்  சிறுமி இருந்தாள்.

அவள் தந்தை சென்றபோதும், திரும்பி வராதபோதும் அவர்கள் குடியிருந்த அதே வீட்டில்தான் அவள் இன்னும் வாழ்ந்து வந்தாள்.

ஜோன் ஸ்மோதர்ஸ் காணாமல் போய்  ஓராண்டு நிறைவு நாளில் சிறுமிக்கு  இரவு கடும் வலி ஏற்பட்டது. அவர் உயிருடன், ஒரு நிலையான வேலையில் இருந்திருந்தால், இப்போது அவளுடைய தாத்தாவாக இருந்திருப்பார்.

மேலும் படிக்க ...

23-24 வயதில் பாரதி : வேல்ஸ் இளவரசரை வாழ்த்திய கவிதையும் - கட்டுரையும் - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
09 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1

கிட்டத்தட்ட இருபத்திரண்டு வயதே அரும்பியிருக்கக்கூடிய பாரதி என்ற இந்த இளைஞனை இனங்கண்டு, அவனை மதுரை சேதுபதி கல்லூரியிலிருந்து, சென்னை சுதேசமித்திரனிற்கு இட்டுவந்த பெருமை, திரு.ஜி.சுப்ரமணிய ஐயரையே சாரும்.  மதுரை சேதுபதி கல்லூரியில் தமிழாசிரியனாய் இருந்த இவ் இளைஞன், தனது தமிழாசிரியர் பதவியை விட்டுவிட்டு, விடுதலைப்போர் மோகம் சூழ்ந்த காலத்தில் ஓர் பத்திரிகை தொழிலில் - அதுவும் பதவி இன்னதெனச் சரியாக நிர்ணயிக்கப்படாத ஒரு சூழலில் சென்று சேர தீர்மானம் கொண்டது – அவனது வாழ்வில், அவன் எடுத்து வைத்த முதல் திருப்புமுனை படிகளில் ஒன்றாகின்றது (1904 – நவம்பர்). இம்முடிவு, இவ் இளைஞனை ஒரு பரந்த உலகத்தை நோக்கி உந்தித்தள்ளி இருந்திருக்க வேண்டும். குறுகிய காலத்துள், பல்வேறு திறமைகளால் தன்னை நிரூபித்துவிடும் இவ் இளைஞன், அப்பத்திரிகையின் உபபத்திராதிபராய், சில மாதங்களிலேயே நியமிக்கப்படுகின்றான். திரு.ஜி.சுப்ரமணிய ஐயரின் வியப்பையும், விநோதத்தையும், வாஞ்சையையும், சம்பாதித்துக்கொள்ளும் இப்புதிய இளைஞனை அவர் மிகுந்த பிரியத்துடன் பார்க்கின்றார் - அதிசயத்துடன்.

வேல்ஸ் இளவரசரை வரவேற்கும் கட்டுரையின் துவக்கம் :

1905 நவம்பரில் சக்கரவர்த்தினியில் வேல்ஸ் இளவரசனை வரவேற்று அவன் பின்வரும் பொருள்பட எழுதியது அவனது அன்றைய சிந்தனை ஓட்டத்தை எடுத்துரைப்பதாக இருக்கின்றது : “கோழி முட்டையை ஏழுமுறை இளவரசியின் தலையைச் சுற்றி உடைப்பதும், பின் அவளது தலையில் அரிசியைக் கொட்டுவதும் (அட்சதை), பின், அவளது கன்னத்தில் கைவைத்து அவளைத் திருஷ்டி கழிப்பதும், குங்குமத்தை அவளது நெற்றியில் தீட்ட முயற்சிப்பதும் - அது அந்த வேல்ஸ் இளவரசிக்கு பிரியமில்லையாம் - எனவே அவ் விஷேசம் நடத்தப்படவில்லையாம்…” (பக்கம் - 81).

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கின்றோம்: கனடா தேசத்தின் நிலக்காட்சியையும் பல்லின மக்களின் ஆத்மாவையும் சித்திரிக்கும் வ. ந. கிரிதரனின் கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் கதைத் தொகுதி ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
07 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வாசிப்பு அனுபவம், ஆளாளுக்கு வேறுபடும். ஒரு எழுத்தாளரின் புனைவு இலக்கியப் படைப்பினைப் பற்றி, சாதாரண வாசகர் கொண்டிருக்கும் ரசனைக்கும், மற்றும் ஒரு எழுத்தாளர் வைத்திருக்கும் பார்வைக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. கனடாவில் வதியும் வ. ந. கிரிதரனின் கதைத் தொகுதியான கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் நூலை நான் படித்தபோது, வாசகர் மனநிலையிலும், படைப்பாளி மனவுணர்வுடனும்தான் படிக்க நேர்ந்தது.

சரியாக ஓராண்டுக்கு முன்னர், 07-06-2023 ஆம் திகதி கனடா ஸ்காபரோவில் என்னைச் சந்தித்து விருந்துபசாரம் வழங்கியபோது, அவர் என்னை வாழ்த்தி தனது கையொப்பத்துடன் தந்த இந்த நூல் பற்றி, ஒரு வருடம் கழித்து எழுது நேர்ந்தமைக்கு, இந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கிருந்த பணிச்சுமைகள்தான் அடிப்படைக் காரணம். எனக்கிருக்கும் பணிச்சுமைகளுக்கு மத்தியில்தான் கிடைக்கும் நூல்களைப்பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை படிப்படியாக பதிவுசெய்வதற்கும் நேரம் தேட வேண்டியிருக்கிறது ! யாழ்ப்பாணம் ஜீவநதியின் 194 ஆவது வெளியீடாக வந்திருக்கும் கிரிதரனின் கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பதிப்பினைக் கண்டுள்ளது.

மேலும் படிக்க ...

அரசியல், திரைப்பட ஆய்வாளார் ரதனின் 'கனடியப் பொருளாதாரம் மீண்டெழுகிறதா?" என்னும் 'தாய்வீடு'க் கட்டுரை பற்றி.... வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
07 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடியப் பொருளாதாரம் மீண்டெழுகிறதா' என்னுமொரு கட்டுரையை அரசியல், திரைப்பட ஆய்வாளர் ரதன் ஜூன் மாதத் தாய் வீடு பத்திரிகையில் எழுதியிருக்கின்றார். அதில் ஓரிடத்தில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

"2000-ம் ஆண்டில் 250,000 டொலருக்கு விற்கப்பட்ட ஒரு வீ டு , 2020-ல் 1.5 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்படுகின்றது . இது 500 வீ த அதிகரிப்பாகும் . வேறு எங்கு முதலிட்டாலும் இவ்வாறன இலாபத்தைப் பெறமுடியாது. இதனால் அமெரிக்கர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் கனடிய வீட் டுச் சந்தையில் முதலிடுகின்றார்கள் . கனடாவில் வாழ்கின்றவர்களும் பல வீ டுகைள வாங்குகின்றார்கள் . வாடகையும் அதிகமாகவிருப்பதனால் வீட் டுக்கடன்கைள செலுத்துவதும் சிரமமற்று உள்ளது ."

இங்கு அவர் 'வேறு எங்கு முதலிட்டாலும் இவ்வாறன இலாபத்தைப் பெறமுடியாது' என்று கூறுகின்றார்.  எண்பதுகளின் நடுப்பகுதியில் கனடாவில் , குறிப்பாக 'டொராண்டோ'வில் வீட்டு விலைகள் பல மடங்கு அதிகரித்திருந்தன. அவ்விதம் அதிகரித்த வீட்டு விலைகள் அதலபாதாளத்துக்குச் சரியத்தொடங்கின 1989 காலகட்டத்தில் தொடங்கிய பொருளாதார மந்தத்தில். அக்காலகட்டத்தில் $340,000 ற்குக்கட்டப்பட்ட , நான்கு அறைகள் கொண்ட தனி வீடுகள் $200,000ற்குச் சரிந்தன. அதன் பின் மீண்டும் அந்த விலைக்கு மீண்டு வர சுமார் 20 வருடங்கள் எடுத்தன. 2009இல்தான் அது சாத்தியமானது.  அக்காலகட்டத்தில் பல வீடுகளை வாங்கிய பலர் அவற்றை இழந்திருக்கின்றார்கள்.  இவற்றைப்பற்றி இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் கனடாவில் எவ்விதம் வீட்டு விலைகள் மாறுதலடைந்துள்ளன என்பதை அறிய இவ்வரலாறு உதவும்.

மேலும் படிக்க ...

மனிதர்கள் -துவாரகன் -

விவரங்கள்
-துவாரகன் -
கவிதை
05 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒரு மனிதனைக்
கொல்லக்கூடியவை
எவையாக இருக்கலாம்?

ஓர் ஆயுதம்
ஒரு விபத்து
தீராத நோய்
இன்னமும் எவையெவையோ...

இவற்றைவிடவும்
மேலான ஒரு கொலைக்கருவி
மனிதர்களிடம் உண்டு
அதனை எங்கும் எடுத்துச் செல்லலாம்
யாரும் சந்தேகிக்க மாட்டார்கள்
ஒவ்வோர் வேளையும்
ஒரு துளி இரத்தமின்றி  
ஒரு விரல்கூடத் தீண்டாமல்
கொல்லமுடியும்

மேலும் படிக்க ...

ந.சுசீந்திரனின் நூல்கள் வெளியீடும் அறிமுக உரையும் - தகவல்: கிருபா கந்தையா -

விவரங்கள்
- தகவல்: கிருபா கந்தையா -
நிகழ்வுகள்
03 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கம்பராமாயணத்தில் மாதரைக் கொல்லுதல் பாவம் என்பது குறித்த பதிவுகள் - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061 -

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061 -
ஆய்வு
03 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

கவிச்சக்கரவர்த்தி கம்பர் தம் ராமாயணத்தில் குற்றமுடைய செயல்களாகச் சிலவற்றைக் குறிப்பிடுகிறார். நமக்குத் துன்பத்தைச் செய்தாலும் தூதரைக் கொல்லக்கூடாது என்றும் கூறியுள்ளார். மகளிரைக் கொல்வது பாவம் என்றும், குற்றம் என்றும் கூறியுள்ளார் என்பதை இக்கட்டுரையின் வழி ஆராய்வோம்.

பெண் கொலை புரிந்த மன்னன்

சங்க இலக்கியத்தில் நன்னன் என்ற மன்னன் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அவனுடைய காவல் மரம் மாமரம். அந்த மரத்தில் உள்ள பழங்களை யாரேனும் சாப்பிட்டால், அவர்கள் நீண்ட நாள் வாழ்வர் என்ற நம்பிக்கையும் இருந்து வந்தது. காவல் மரத்தின் மாம்பழம் ஒன்று ஆற்று வெள்ளத்தில் அடித்துக்கொண்டு வந்தது. அது இன்னாருடையது என்பதை அறியாமல், ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த கோசர் குடி பெண் அதனை எடுத்துத் தின்றுவிட்டாள். இதனை அறிந்த நன்னன் அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை விதித்தான். கோசர்குடியினர் நன்னனிடம் முறையிட்டனர். அவனது காவல் மரத்தின் மாம்பழத்தைத் தின்ற தவறுக்காக, அவளது எடைக்கு எடை பொன்னும், 81 யானைகளும் தண்டமாக ஏற்றுக்கொண்டு அப்பெண்ணை உயிருடன் விட்டு விடும்படி மன்றாடினார்கள். ஆனால் மன்னன் நன்னன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்காமல், அவளைக் கொன்று விட்டான். இதனால் புலவர் இவனைப் ’பெண் கொலை புரிந்த மன்னன்’ என குறிப்பிடுகின்றார்.

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கின்றோம் : ஜேகே. எழுதிய மாயப்புனைவு நாவல் வெள்ளி ! புதிய படைப்பு மொழியால் உருவான சங்க இலக்கியக்கதை ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
03 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும் ஜே.கே. என்ற புனைபெயரில் இலக்கியப்பிரதிகள் எழுதிவரும் ஜெயக்குமாரனின் வெள்ளி ( மாயப்புனைவு ) நாவலை அண்மையில் படித்தேன். ஜே.கே. மெல்பனில்தான் வசிக்கிறார் என்பதை அவரது எழுத்துக்களை தொடர்ந்து படித்துவரும் வாசகர்கள் நன்கு அறிவர். எனினும் ஜே.கே. என்றால், அது மறைந்துவிட்ட ஜெயகாந்தனைத்தானே குறிக்கும் என்றும், அவுஸ்திரேலியா எங்கே இருக்கிறது ? எனவும் கேட்கும் தமிழக வாசகர்களுக்காகவும், இந்தப்பதிவின் தொடக்கத்தில் அவ்வாறு எழுதினேன். தங்களுக்கு ஆஸ்திரேலியாதான் தெரியும், அவுஸ்திரேலியா எங்கே இருக்கிறது..? என்று ஒரு தமிழக வாசகர் தமிழ்நாடு திண்ணை இணைய இதழில் கேட்டிருந்தார்.

இங்கு நான் குறிப்பிடும் ஜே.கே. “படலை “ என்ற வலைத்தளமும் வைத்திருக்கிறார். அதிலும் இவரது ஆக்கங்களை நாம் படிக்கமுடியும். “படலை “ என்றால் அது என்ன..? எனக்கேட்கும் வாசகர்களுக்காக நான் ஒரு அகராதிதான் உருவாக்கவேண்டும். சரிபோகட்டும், ஜே.கே. ஏற்கனவே என் கொல்லைப்புறத்துக் காதலிகள், கந்தசாமியும் கலக்சியும், சமாதானத்தின் கதை முதலான படைப்புகளை நூலுருவில் தந்திருப்பவர். இவை பற்றியும் ஏற்கனவே எனது வாசிப்பு அனுபவத்தை எழுதியிருக்கின்றேன்.

மேலும் படிக்க ...

எழுத்தாளரும், முன்னாள் தெல்லிப்பளை, யூனியன் கல்லூரி அதிபருமான கதிர் பாலசுந்தரம் அவர்கள் தனது தொண்ணூற்றாவது வயதில் காலமானார்!

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
01 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
 - எழுத்தாளரும், முன்னாள் தெல்லிப்பளை, யூனியன் கல்லூரி அதிபருமான கதிர் பாலசுந்தரம் அவர்கள் தனது தொண்ணூற்றாவது வயதில் காலமானார். அவர் பிரிவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல். அதனையொட்டி முன்னர் பதிவுகளில் எழுத்தாளர் முருகபூபதி எழுதிய இக்கட்டுரையினை நினைவூட்டுகின்றோம். - பதிவுகள்.காம் -
படித்தோம் சொல்கின்றோம்: "தங்கத்தாரகை" - தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் 200 ஆண்டு கால வரலாறு! வடக்கின் கல்விப்பாரம்பரியத்தை ஆவணப்படுத்தியிருக்கும் முன்னாள் அதிபர் கதிர். பாலசுந்தரம் படைப்பிலக்கியவாதியுமாவார்!  - முருகபூபதி -

கல்லிலிருந்து கணினி வரைக்கும் பாய்ந்திருக்கும் மொழிகளில் தமிழ் தொன்மையானது. இந்தத்தொன்மையிலிருந்து உருவான பழந்தமிழ் இலக்கியம், நவீன தமிழ் இலக்கியம், என்பவற்றின் ஊடாக தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சியில் தமிழர்களின் வேட்கையையும் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆசியாக்கண்டத்திலேயே முதல் முதலில் தோன்றிய இருபாலாரும் கல்வி என்னும் செல்வத்தை பெற்றுக்கொள்வதற்காகவும் தமிழ் சமுதாயம் அறிவார்ந்த தளத்தில் நடப்பதற்கு வெளிச்சம் வழங்கிய கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்த இலங்கையின் வடபுலத்தின் தெல்லிப்பழையில் தோன்றிய யூனியன் கல்லூரியின் வரலாற்று ஆவணம் தங்கத்தாரகை எம்மவரின் வாழ்க்கைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகவே அமைந்துள்ளது. மைல் கல் எனக்குறிப்பிடுவதற்கும் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. இதனையும் நாம் கடந்துசெல்லவேண்டும். மற்றும் சில மைல்கற்களை கடக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. "எல்லாம் கடந்துபோகும்" என்பது வாழ்வின் தத்துவம். கடந்த அரைநூற்றாண்டு காலமாக படைப்பிலக்கியம், ஊடகம், சமூகப்பணி முதலான மூன்று தளங்களில் இயங்கிவருவதனால் இந்த மூன்று தளத்திலும் நின்றுதான் இந்த ஆவணத்தை அவதானிக்கின்றேன். இரண்டு நூற்றாண்டுகளையும் கடந்து இயங்கிக்கொண்டிருக்கும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியை இதுவரையில் நான் பார்க்கவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் இதுவரையில் எனக்கு கிட்டவில்லை. அதே பிரதேசத்திலிருக்கும் மகாஜனாக்கல்லூரிக்கும் ஒரே ஒரு தடவைதான் சென்றுள்ளேன். அங்கு பணியாற்றிய எழுத்தாளர் கோகிலா மகேந்திரனின் முரண்பாடுகளின் அறுவடை நூலின் வெளியீட்டுவிழா 1984 இல் அங்கு அதிபர் த. சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தபோது உரையாற்றச்சென்றேன். இந்தக்கல்லூரிக்களுக்கும் எனக்கும் இருந்த மற்றும் ஒரு தொடர்பு நாம் அவுஸ்திரேலியாவிலிருந்து மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாக இயக்கும் இலங்கை மாணவர் கல்விநிதியத்தின் ஊடாக இக்கல்லூரிகளில் பயின்ற சில மாணவர்களுக்கும் உதவியிருக்கின்றோம்.

இந்த இரண்டு கல்லூரிகளுடனும் எனக்குள்ள மற்றும் ஒரு முக்கியமான உறவு: இங்கு பயின்றவர்கள், இங்கு அதிபர்களாக, ஆசிரியர்களாக இருந்த பலர் எனது நீண்ட கால இலக்கிய நண்பர்கள். இன்றும் தொடர்பிலிருப்பவர்கள். இரண்டு கல்லூரிகளினதும் வரலாற்றில் நிகழ்ந்திருக்கும் சுவாரஸ்யமான நிழல் யுத்தங்களையும் கேள்வி ஞானத்தில் அறிந்துவைத்திருக்கின்றேன். இந்தப்பின்னணிகளுடன்தான் எனக்கு கிடைத்திருக்கும் தங்கத்தாரகை பற்றிய எனது ரஸனைக்குறிப்புகளை பதிவுசெய்கின்றேன். எமது தமிழ் மக்கள் சந்தித்த ஐந்து காலகட்டங்களையும் இந்த ஆவணம் பேசுகிறது. சுதந்திரத்திற்கு முன்னரும் அதற்கு பின்னர் வந்த காலமும், போர்க்காலமும், அதற்குப்பிற்பட்ட சமகாலமும், மக்கள் அந்நியம் புலம் பெயர்ந்த காலமும் அதன் பின்னர் தொடரும் காலமும் சித்திரிக்கப்படுகிறது. 425 பங்கங்களில் இக்காலங்கள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன. வரலாற்று ரீதியில் அவற்றை ஆவணப்படுத்தியுமிருக்கிறது. இதனைத்தொகுத்திருக்கும் பாரிய பணியை மேற்கொண்டிருப்பவர் யூனியன் கல்லூரியின் முன்னாள் அதிபர், எழுத்தாளர், ஆய்வாளர், அரசியல் பிரக்ஞையுள்ளவர். 90 வயதிலும் அயராது இயங்கிக்கொண்டிருப்பவர். இதுவரையில் நான் நேரில் பார்த்திருக்காத பேசியுமிருக்காத மின்னஞ்சலில் மாத்திரம் தொடர்பில் இருக்கும் நண்பர், மதிப்பிற்குரிய கதிர். பாலசுந்தரம் அவர்கள். அவரது படைப்பிலக்கியங்களின் வரிசையில் எழுதியிருக்கும் நாவல்கள், தமிழ் அரசியல் தலைவர்களின் வரிசையில் எழுதியிருக்கும் நூல்களையும் ஏற்கனவே படித்திருக்கின்றேன். சிலவற்றைப்பற்றி எனது அவதானக்குறிப்புகளும் எழுதியிருக்கின்றேன்.

மேலும் படிக்க ...

யாழ் பொது நூலக எரிப்பு நினைவாக : கௌதம இரத்தம் --- செ. சுதர்சன் ---

விவரங்கள்
--- செ. சுதர்சன் ---
கவிதை
01 ஜூன் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இனிய கௌதம...!

துறவு காலியாகிய
உமது பிள்ளைகளைக் கொண்டே
முன்பு போலவே
ஒரு குண்டு மழையால்
இப்போதும் பொழிந்து எரித்துவிடுக...!

எமது
எல்லா நூலகத்தையும்...
புத்தகசாலையையும்...
அச்சகத்தையும்...

எமது அறிவு
உமது பிள்ளைகளில்
அச்சமாய் மலர்கையிலும்...
கரியாக்கிய நூலோ
அவர்க்கோர்
மரணப் பாயாய் விரிகையிலும்...
அதன் ஒவ்வோர் பக்கமும்
கூரிய வாளாய் மின்னுகையிலும்...
மேலும்;
அதன் நேர்த்தியான எழுத்தோ
பாசக் கயிறாய் இறுகுகையிலும்...

மேலும் படிக்க ...

கனடாவில் கோவிலூர் செல்வராஜனின் நூல் வெளியீடு - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
31 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ் வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்பெற்ற எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜன் அவர்களின் நூல்கள் வெளியீட்டு மற்றும் அறிமுகவிழா சென்ற மே மாதம் 25 ஆம் திகதி 2024  அன்று கனடா ஸ்காபறோ நகரில் உள்ள பைரவி நுண்கலை மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில் மேற்படி விழாவிற்கு தற்போதைய தலைவரும் கவிஞருமான அகணி சுரேஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.

மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து கனடா தேசியப் பண்ணும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பெற்றன. அடுத்து நிர்மலா இரத்தினசபாபதி அவர்களின் வரவேற்புரையும், தொடர்ந்து அகணி சுரேஸ் அவர்களின் தலைமை உரையும் இடம் பெற்றன. அவர் தனது தலைமை உரையில் ‘தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்டிருக்கும், இவரைப் போன்ற புலம் பெயர்ந்த படைப்பாளிகளை இனங்கண்டு அவர்களது ஆக்கங்களை வெளிக் கொண்டு வருவதில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் என்றும் முன்னின்று செயற்படும்’ என்று குறிப்பிட்டார்.

அடுத்து திரு. சாமி அப்பாத்துரை, திருமதி சுகல்யா ரகுநாதன், திரு அ. தேவதாசன், உதயன் ஆசிரியர் திரு. ஆர். என். லோகேந்திரலிங்கம் ஆகியோரது வாழ்த்துரைகள் இடம் பெற்றன. தொடர்ந்து, ‘நல்லது நடக்கட்டும்;’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு திருமதி மேரி கியூரி போல் அவர்களும், ‘கிழக்கிலங்கையின் மறைந்த இலக்கிய ஆளுமைகள்’ என்ற கட்டுரைத் தொகுப்புக்கு திரு. தங்கராசா சிவபாலு அவர்களும், இலக்கியத்தென்றல் ‘பொன்விழா மலருக்கு’ சிந்தனைப் பூக்கள் எஸ். பத்மநாதன் அவர்களும், ‘கொத்துரொட்டி’ சிறுகதைத் தொகுப்பிற்கு எழுத்தாளர் இணைய உபதலைவர் திரு. குரு அரவிந்தனும் நயவுரை வழங்கினர்.

மேலும் படிக்க ...

சிவ. ஆரூரனின்'ஆதுரசாலை' நாவல் நயவுரை - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ரஞ்ஜனி சுப்ரமணியம்
31 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'இலக்கியமும் வைத்தியமும் மட்டுமே ஒரு மனிதனைப் பற்றி அறிவதற்கான இரு நேரடி வழிகள். ஆகையால் மருத்துவத்தை இலக்கியத்தோடு இணைத்துப் புனைய முயற்சித்திருக்கிறேன். போர்க்காலத்தில் எமது வைத்தியர்களினதும் சுகாதாரப் பணியாளர்களினதும் அர்ப்பணிப்பான சேவைகளைக் கண்ணால் கண்டும் காதால் கேட்டும் வியந்து மகிழ்ந்ததுண்டு. தற்போது போர்மேகம் விலகிய சூழலில் 'நீரேந்துப் பகுதியில் பொழிய வேண்டிய மழை உப்பளத்தில் இரைத்துப் பொழிவது போல' எம்மண்ணின் மைந்தர்கள் பலர் குடிபெயர்ந்து அந்நிய மண்ணில் வைத்தியம் பார்த்துச் சீரும் சிறப்போடு வாழ்ந்து வரும் ஒரு சூழலில், கல்லையும் மண்ணையும் பற்றிக் கற்றவன் நான் இரத்தமும் சதையும் பற்றி எழுத வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளேன். முடங்கிக் கிடந்த வைத்தியசாலை  ஒன்று புத்தாக்கம் பெற்று இயங்கிய கதை இது. A 9 நெடுஞ்சாலையோரம் ஏற்றம் பெற்றிருக்கும் பச்சிசிலைப்பள்ளி ஆதுரசாலைக்குள் ஆரவாரமின்றி அழைத்துப் போகிறேன் வாருங்கள்'.  -தோழமையுடன் சிவ. ஆரூரன் -

நாவல் பற்றிய படைப்பாசிரியரின் ஆரம்ப உரையின் சில பகுதிகளே கதைச்சுருக்கமும் ஆகும். அவரது அழைப்பை ஏற்று நானும் சென்றேன். குறுந்தூர ஓட்ட வீராங்கனை போல சென்ற கையோடு திரும்பியும் விட்டேன். காரணம் உண்டு. மிக ஆறுதலான வாசிப்பையே செய்யும் நான் அதிவிரைவில் வாசித்த படைப்பு இது. விரைவு வாசிப்பானது ஆர்வ மிகுதியின் விளைவாகும் . காரணங்கள் சில. கருவுக்கும் கதைக்களத்துக்கும் பொருத்தமான ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான எழுத்துநடை , புனைவில்லா உண்மைகளின் தரிசனம் தந்த பெருவியப்பும் உருக்கமும். மருத்துவத்துறை சார்ந்த ஒருவராக எனது ஒத்துணர்வு .அனுபவரீதியான மன ஈர்ப்பு. உளத்தாக்கங்கள். சிறிதே குற்ற உணர்வு.

இந்நாவல் வாசிப்பானது அனைவருக்கும் இதே உணர்வுகளைத் தராமலும் இருக்கலாம். ஆனால் தாயகத்தின் மீதான நேசமும், இலவசக் கல்வி பெற்றதற்கான நன்றி உணர்வும், தொழில்ரீதியான கடமை உணர்வும், மனிதநேயம்  பெற்ற அல்லது பெற நினைக்கும் அனைத்து துறையினராலும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. நேர்மையான மருத்துவ சேவை என்பது தியாக உணர்வினையும் சம அளவில் தன்னகத்தே பொதிந்து கொண்டதாகும் என்பதை எழுத்தின் பாதைவழி அழுத்தமாகக் கூறிக் கொண்டே செல்லும் நாவல். ஆதுரசாலை எனும் இந்நாவல் ஜீவநதி பதிப்பகத்தின் வெளியீடாக மார்கழி 2021 இல் முதற்பதிப்பினையும்  மார்கழி 2023 இல் இரண்டாம் பதிப்பினையும் கண்டுள்ளது .

மேலும் படிக்க ...

கனடாவில் 'சமூகம் இயல்' பதிப்பக நூல்களின் அறிமுகமும் வெளியீடும்!

விவரங்கள்
Administrator
நிகழ்வுகள்
29 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

சம்பந்தனின் நிலைப்பாடும், அண்மைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் ! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
28 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

“தமிழ் பொது வேட்பாளர் யோசனையை ஏற்கமுடியாது” என்பது சம்பந்தனின் நிலைப்பாடானது. முள்ளிவாய்க்காலின் பதினைந்தாவது வருட “நினைவேந்தலின் போது”, அதே தினத்தில் இது, வெளியிடப்பட்டுள்ளமை, பல்வேறு சிந்தனைகளை தூண்டுவதாயுள்ளது.  இது ஒருபுறம் நடந்தேற, இம்முறை, பதினைந்தாவது வருட நினைவேந்தலின் போது, சர்வதேசம், தான் இருப்பதைக் வழமைப்போல்,  காட்டிக்கொள்ள முண்டி அடித்திருந்தாலும், இத்தடவை, அது சற்று தீவிரமாகவே தனது முண்டியடிப்பை வெளிபடுத்தியதை, காணக்கூடியதாக இருந்தது. அமெரிக்க தூதுவரின் வடக்கு விஜயமும், அமெரிக்க காங்கிரஸில் முதல் முறையாக (அம்மாடி – கடைசியாக) தமிழர்களின் சுயநிர்ணயம் தொடர்பிலான மனு ஒன்றை, சமர்ப்பணம் செய்தது, என்பதுபோக, சர்வதேச மன்னிப்பு சபையின் செயலரும் இம்முறை நேரடியாகப் பங்கேற்றமை என நிகழ்ச்சி நிரலை அமர்க்களப்பத்தி விட்டனர்.

முள்ளிவாய்க்கால் கொலைகளைத்தடுக்க சுட்டுவிரலைக்கூட அசைக்காத சர்வதேசம், இன்று இப்படி பங்குபற்றுவது அலுப்பைத்தான் தருகின்றது. காரணம், சில நெஞ்சங்களிலிருந்தும், வடுக்கள் இன்னமும் அகலாதிருப்பது இருக்கவே செய்வதினாலேயே. ஒரு பதினைந்து வருடங்கள், கழிந்து போன நிலையில், இப்போதாவது ஒரு மனு, அமெரிக்கா காங்கிரஸில் மிக கடைசியாக? சமர்ப்பிக்கப்பட்டுள்ளது - அதுவும் ஒரு தேர்தலை ஒட்டி, என்ற விடயம் மலைப்பை தருவதாக உள்ளது. இருந்தும் கார்வண்ணன் தனது வீரகேசரி பத்தியில் குறித்துள்ளார் குறிப்பிட வேண்டும் : அமெரிக்க காங்கிரசில் இருந்து, இலங்கை தொடர்பான தீர்மானம் வெளியுறவு குழுவுக்கு அனுப்பப்படும். அங்கு அது கிடப்பில் போடப்படும். அடுத்த ஆண்டு வந்ததும் அது கைவிடப்படும். இதுதான கடந்த பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது (வீரகேசரி : 26.05.2024)

மேலும் படிக்க ...

நிகழ்கால அரசியலை நிகழ்வுகளாக்குதல்: ப்ரசன்னா ராமஸ்வாமியின் அரங்கியல் முறைமைகள் - பேராசிரியர் அ.ராமசாமி -

விவரங்கள்
Administrator
கலை
27 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- பேராசிரியர் அ.ராமசாமியின்  'அ.ராமசாமி எழுத்துகள்'  வலைப்பதிவில் நாடகவியலாளர் ப்ரசன்னா ராமஸ்வாமி பற்றியதொரு அறிமுகக் கட்டுரை ' நிகழ்கால அரசியலை நிகழ்வுகளாக்குதல்: ப்ரசன்னா ராமஸ்வாமியின் அரங்கியல் முறைமைகள்' என்னும் தலைப்பில்  வெளியாகியிருந்தது. (ஆகஸ்ட் 19, 2017 )  இக்கட்டுரையில் அவர் ப்ரசன்னா ராமஸ்வாமியைத் 'தமிழின் முக்கிய நாடக ஆளுமையான ப்ரசன்னா ராமஸ்வாமி' என்பார்.  அத்துடன் 'தமிழகப் பரப்பிலிருந்து தனது நாடகங்களில் வழியாக, அவற்றை இயக்கும்போது கடைப்பிடிக்கும் நவீன வெளிப்பாட்டு முறையின் வழியாக  இந்திய அளவிலும், சில நிகழ்வுகளின் வழியாகத் தேசங்கடந்த பார்வையாளர்களிடத்திலும் அறியப்பட்டவராக இருக்கிறார் ப்ரசன்னா ராமஸ்வாமி'  என்றும் கூறுவார்.

ப்ரசன்னா ராமஸ்வாமி அவர்களைப் பற்றி ஊடகங்கள் வாயிலாக அறிந்திருக்கின்றேன். என் முகநூல் நண்பர்களில் ஒருவராகவும் அவர் இருக்கிறார்.  அண்மையில் அவர் தனது முகநூல் பக்கத்தில் இட்டிருந்த பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும். அத்துடன் துயரையும் அடைய வைத்திருக்கும்.  அதில் அவர் பின்வருமாறு கூறியிருப்பார்:

"வலி. இந்த வலியின் கொடுமையிலிருந்து விடுதலை என்று சாவை யாசிப்பது துயரமான நிலை. வாழ்க்கை போல மரணமும் இயல்பாக, விரைவில் நிகழ்ந்து விட அருள் புரிய வேண்டும் தெய்வமே."

மேலும் படிக்க ...

மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ் இலக்கிய மன்றம்

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
24 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ்ச் சங்கம் தற்போது 'மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ் இலக்கிய மன்றம்' என்றழைக்கப்படுகின்றது.  இத்தமிழ் மன்றத்தின் இணைய இணைப்பு - https://tlauom.com

இத்தளத்தில் மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க வெளியீடான நுட்பம், தமிழருவி இதழ்களின் கடந்த கால இதழ்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நண்பர் பிறேமச்சந்திரா இதழாசிரியராகவிருந்தபோது  வெளியான 1981/1982 ற்கான நுட்பம் இதழைக் காணவில்லை. யாரிடமாவது அவ்விதழ் இருந்தால் அதனை மேற்படி தளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதியுள்ளது.

மேலும் படிக்க ...

(மீள்பிரசுரம்) மோகத்தின் நிழல் - சுகுமாரன் -

விவரங்கள்
- சுகுமாரன் -
நூல் அறிமுகம்
24 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'அம்மா வந்தாள்'  ஒன்றைத் தவிர தி. ஜானகிராமன் எழுதிய பிற நாவல்கள் எல்லாமும் பத்திரிகைகளில் தொடராக வெளிவந்தவை. 'ஆனந்த விகடன்' போன்ற வெகுஜன இதழ்களிலும் 'கணையாழி' போன்ற சிறு பத்திரிகை களிலுமே அவை தொடராக வெளியாகியிருக்கின்றன. பிற்காலத்தில் வெகு ஜனப் பிரபலமுள்ள எழுத்தாளர்கள் உருவாக்கிய தொடர் கதை இலக்கணம் எதற்கும் தி.ஜாவின் நாவல்கள் உட்படாதவை. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் வாசக எதிர்பார்ப்புக்காக ஏற்படுத்திய திடீர் திருப்பங்களோ சுவாரசியச் சிக்கல்களோ இல்லாமல் எழுதப்பட்டவை.  எனவே தான் இந்த நாவல்களைத் தொடர்கதைகள் என்று சொல்லாமல், தொடர்கள் என்று குறிப்பிடுகிறேன்.

தி.ஜானகிராமனின் மாஸ்டர் பீஸான 'மோக முள்'ளும் தொடராக வெளி வந்த நாவல்தான். 1955 - 56 ஆண்டுகளில் 'சுதேசமித்திரன்' நாளிதழின் வாரப் பதிப்பில் தொடராக வெளிவந்தது. ஜானகிராமனின் நாவல்களிலேயே அளவில் பெரிய நாவல் இது. மிக அதிகமான  பாத்திரங்கள் கொண்ட நாவலும் இதுதான். அவரது நாவல்களில் அதிக அளவு வாசகர்களைப் பெற்றதும் இதுவாகவே இருக்க வேண்டும். இவற்றுக்கெல்லாம் காரணம் அது பத்திரிகைத் தொடராக வெளிவந்ததுதான். ஆணின் விடலை மனப் பாங்குக்கு உகந்ததாக நாவலின் கதைப் போக்கு இருந்ததும் இன்னொரு காரணமாக இருக்கலாம். பதின் வயதில் தைக்கும் முள்ளின் நோவு காலம் கடந்தும் தீராத மோகமாகவே எஞ்சியிருக்கச் செய்யும் ரசவாதம் அதில் இருக்கிறது.

மேலும் படிக்க ...

இரு நூல் அறிமுக நிகழ்வு!

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -
நிகழ்வுகள்
23 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பிரம்மஸ்ரீ மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா அவர்களின் கற்பகதரு நூல் வெளியீட்டு விழா

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
நிகழ்வுகள்
23 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

காலம் :  02-06-2024 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : பி.ப 4 மணி பி.ப 6 மணி
இடம் : பீக்கொக் மண்டபம்

ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயம்
கரம்டவுண்ஸ் , விக்டோரியா 3201

தலைமை: திரு. சங்கரசுப்பிரமணியம் அவர்கள்
வாழ்த்துரை : திரு மாவை நித்தியானத்தன் அவர்கள்
நூல் ஆய்வுரை : திரு. சந்திரன் சண்முகம் அவர்கள்

தொடர்புகளுக்கு : + 61 431 200 870

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்..a

'காற்றுவெளி'யின் இங்கிலாந்து சிறப்பிதழ் 2024

விவரங்கள்
- முல்லைஅமுதன் -
நிகழ்வுகள்
23 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

யாவரும் நலமா? காற்றுவெளி விரைவில் இங்கிலாந்து படைப்பாளர்களின் படைப்புக்களைத் தாங்கி இங்கிலாந்து சிறப்பிதழாக கொண்டுவரவுள்ளது. ஆகவே, சிறப்பிதழுகான படைப்புகளை(கவிதை,சிறுகதை,இலக்கிய ஆய்வுக்கட்டுரைகள்)அனுப்பி சிறப்பியுங்கள்.அச்சிலும் கொண்டுவரும் எண்ணமுண்டு. சந்தா,விளம்பரம் ஏதுமின்றி வெளிவரும் மின்னிதழ் இதுவாகும்.இத் தகவலை நண்பர்களுடனும் பகிருங்கள்.

நட்புடன்,

முல்லைஅமுதன்
mullaiamuthan1954£gmail.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

வேந்தனார் இளஞ்சேய் கவிதைகள் இரண்டு!

விவரங்கள்
- வேந்தனார் இளஞ்சேய் -
வேந்தனார் இளஞ்சேய்
23 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1. வீழ்ந்தவராயினும் நல்லவர் புகழ் வாழும்

காணொளி ஒன்று பார்த்தேனின்று
கதைதான் என்றாலும் கனமானது
காவியத் தலைவன் கர்ணமாவீரன்
கவிதைபிறந்ததுஒலிவடிவிலிங்கே

சின்ன வயதினில் மனதினைக்
கவர்ந்தவன்
சிந்தையில் நிறைந்த கொடைவள்ளல்
இவன்
உன்னதமான குணம் கொண்டவன்
இவன்
உலகம் போற்றும் மாவீரன் கர்ணனேயாம்

மேலும் படிக்க ...

இருபத்து மூன்று வயதில் பாரதி ! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
22 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


1

பாரதி பிறப்பதற்குச் சரியாக ‘ஐம்பத்து இரண்டு’ வருடங்களுக்கு முன், பிரிட்டிஷாரின் பிரதான காலனிகளில் ஒன்றாக விளங்கிய, இந்துஸ்தானம் (இந்தியா) குறித்து, கார்ல்மார்க்ஸ், 1853ல், பின்வரும் பொருள்பட எழுத நேர்ந்தது : “இந்துஸ்தான் ஆனது, ஒரு பார்வையில், ஆசிய கண்டத்தின் இத்தாலி எனலாம். அல்ப்ஸ் மலைத்தொடருக்கு நிகரான ஒரு இமாலயமும், லொம்பார்டி சமவெளிக்காய் வங்காளத்தின் பரந்த சமவெளிகளும், அபேன்சிக்கு சமமாக டெக்கானும், இலங்கை தீவுக்காக ஒரு சிசிலியும் - மொத்தத்தில் - பூகோள ரீதியாக, இந்தியா, ஆசிய கண்டத்தின் இத்தாலி ஆகின்றது…”

“ஆனாலும் ஒரு சமூகவியல் பார்வையில் - இது இத்தாலியல்ல – ஆனால், கிழக்கின் அயர்லாந்து ஆகின்றது”.

“இந்தப் புதிரான ஒன்று சேர்க்கையின் - இரு அம்சங்கள் - அதாவது இத்தாலியையும் அயர்லாந்தையும் ஒருங்கே உள்ளடக்கும் இப்பண்பலை – ஒரு புறம் அதன் செல்வக்குவிப்பை அர்த்தப்படுத்தினாலும், மறு புறத்தில் அதன் துயரங்களின் சேர்க்கையை எடுத்தியம்புவதாய் உள்ளது”.

“பல நூற்றாண்டு மத சம்பிரதாயங்களின் பின்னணியில், இம்முரண் புரிந்துக்கொள்ளக் கூடியதே”.

“இந்திய மதங்கள், ஒரு புறத்தே இன்ப புலன்நுகர்ச்சிகளை அங்கீகரிப்பதாயும் மறுபுறத்தே முற்றும் துறந்த ஆழ்துறவு நிலையை போதிப்பதாயும் -; கணிகைகளையும், முற்றும் துறந்த முனிவர்களையும், லிங்கங்களில் இருந்து கிருஷ்ண பரமாத்மாவின் சக்கரம் வரை ஒருங்கே ஆராதிப்பனவாக இருக்கின்றன”

மேலும் படிக்க ...

ஆலமரம் நிற்கிறது ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் , அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
22 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அழகான ஆலமரம்
         கிளைவிட்டு நின்றதங்கே
 விழுதெல்லாம் விட்டுஅது
          வேரோடி நின்றதங்கே

ஆலமர நிழல்தேடி
           அனைவருமே வருவார்கள்
 வேலையில்லா நிற்போரும்
           விரும்பி வந்திருப்பார்கள்

காலைமாலை என்றின்றி
          காளையரும் வருவார்கள்
 சேலையுடன் பெண்கள்வந்து
           சிரித்து விளையாடிடுவர்

 நாலுமணி ஆனவுடன்
        ஆளரவம் கூடிவிடும்
 ஓடிடுவார் ஆடிடுவார்
         உல்லாசம் கூடிவிடும்

மேலும் படிக்க ...

'காஞ்சி' சேரன் கவிதைகள் நூல் வெளியீடு! - தகவல்: 'காலம்' செல்வம் -

விவரங்கள்
- தகவல்: 'காலம்' செல்வம் -
நிகழ்வுகள்
22 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மற்ற கட்டுரைகள் ...

  1. சிறுகதை: நெருடல்கள் - ஶ்ரீரஞ்சனி -
  2. ஜீவகுமாரனின் 'கடைக்குட்டியன்' சிறுகதைத் தொகுப்பு - ரசனைக் குறிப்பு - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
  3. படித்தோம் சொல்கின்றோம் : வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும் ! தி. லஜபதிராய் எழுதிய - வரலாற்றை வழிகாட்டியாகக் கொள்ள விரும்புவோர் படிக்கவேண்டிய நூல் !! - முருகபூபதி -
  4. தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (6): எதிர்காலத்திட்டங்கள் பற்றிய உரையாடலொன்று. - வ.ந.கிரிதரன்-
  5. முள்ளிவாய்க்கால் கஞ்சி!
  6. சிறுகதை: மகிழ்ச்சி - அன்டன் செக்கோவ் | தமிழில் (ஆங்கிலம் வழியாக) அகணி சுரேஸ் -
  7. "சிந்திக்கச் சொன்னவர் பெரியார். தந்தை பெரியார்" - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்கிருஷ்ணா
  8. வாழ்த்துகள்: வாசுகி கணேசானந்தனின் (V. V. Ganeshananthan) Brotherless Night (சகோதரனற்ற இரவு) நாவலுக்கு 2023ற்குரிய புனைவுக்கான Carol Shields Prize இலக்கிய விருது $150,000
  9. காலமும் கணங்களும்: மூத்த இலக்கியவாதி கே. கணேஷ் (1920 - 2004) நினைவுகள்! - முருகபூபதி -
  10. காலம் செய்த கோலம் - குரு அரவிந்தன் -
  11. முனைவர் பீ. பெரியசாமி கவிதைகள்
  12. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா ஒருங்கிணைக்கும் வெவ்வேறு பிரிவுகளுக்கான (Inter Batch) மென்பந்து துடுப்பாட்டப் போட்டிகள் 2024! - தகவல்; சுதர்சன் -
  13. புகலிட இலக்கியமும் - வ.ந.கிரிதரனின் கட்டடக்கா(கூ)ட்டு முயல்களும் - ஈழக்கவி -
  14. முதல் சந்திப்பு: கலைக்குடும்பத்தின் வாரிசு கலையரசி சின்னையா ! வளரிளம் பருவம் முதல், புகலிட நாடுகள் வரையில் இலக்கியம் பேசும் ஆளுமை ! ! - முருகபூபதி -
பக்கம் 26 / 107
  • முதல்
  • முந்தைய
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • அடுத்த
  • கடைசி