பதிவுகள் முகப்பு

சிறுகதை: அடர் இருள் என்செயும் - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
சிறுகதை
01 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                              - ஓவியம் - AI -

அவசரமாகக் குளித்துவிட்டு வினோ வெளியில் வந்தாள். ஆசைதீரக் குளிப்பதற்கோ, ஆற அமரவிருந்து சாப்பிடுவதற்கோ நேரம் கிடைப்பதில்லை என்ற நினைவில் கசிந்த கண்ணீர்த் துளிகள் அவளின் முகத்திலிருந்த நீர்த்திவலைகளுடன் சேர்ந்துகொண்டன. ஈரமாயிருந்த முகத்தையும் உடலையையும் துவாயினால் உலர்த்தியபடி, குளியலறைக் கண்ணாடியில் முன் நின்றவளுக்கு தான் வரவர அழகில்லாமல் போவதாகத் தோன்றியது. கன்னங்கள் மேலும் உட்குழிந்தும், கண்களின் கீழிருந்த கருவளையங்களின் அளவு பெருத்துமிருந்தது. சர்மிக்கு வரவர என்னைப் பிடிக்காமல் போவதற்கு இவையும் காரணமோ என மனதிலெழுந்த எண்ணம் அவளை மேலும் அழுத்தியது.

அன்றையப் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக, வினோ வேலையிலிருந்து ஒரு மணிநேரம் முன்னதாக வந்திருந்தாள். சர்மி வகுப்புக்கு நேரத்துக்கு வரவில்லை எனப் பாடசாலையிலிருந்து இந்த மாதம் இரண்டு தடவை அழைப்பு வந்திருந்தது. அவளின் இந்தத் தவணைத் தேர்ச்சியறிக்கையும் திருப்தியாக இருக்கவில்லை. இன்றைய சந்திப்பு நிறைய அசெளகரியம் தருவதாக இருக்கப் போகிறதென்ற யதார்த்தம் அவளின் மனதை நெருடியது கூடவே சர்மியுடன் முதல் நாளிரவு நடந்த வாக்குவாதமும் அவளின் நினைவுக்கு வந்தது. சர்மியுடனான பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வுகாணலாம் என்பது உண்மையிலேயே அவளுக்குத் தெரியவில்லை. தகப்பன் இல்லாத பிள்ளை என்ற என அவள் கேட்டதையெல்லாம் நிறைவேற்றி அவளைச் செல்லமாக வளர்த்ததுதான் பிழையா?

“பத்தாம் வகுப்புக்கு வந்திட்டாய். கொஞ்சமெண்டாலும் பொறுப்பு வேண்டாமே? ஒழுங்காய்ப் படிச்சால்தானே யூனிவசிற்றிக்குப் போகலாம், ஒரு நல்ல வேலையைத் தேடலாம். அல்லது என்னைப்போல பஃற்ரரி வேலையிலைதான் மாயவேண்டியதுதான்!” சர்மி பற்றிய கரிசனையுடன்தான் அவள் சொன்னாள்.

“அம்மா, என்னால முடிஞ்சதைத்தான் நான் செய்யலாம். உங்களுக்குக் கெட்டித்தனம் இருந்தாதானே, அதை என்னட்டை நீங்க எதிர்பாக்கலாம்?” கொம்பியூட்டரில் விளையாடிக் கொண்டிருந்த சர்மி, அதிலிருந்த கண்களை விலக்காமல் எள்ளலாகப் பதிலளித்தாள்.

வேலைமுடிந்த களைப்புடன் வந்திருந்த வினோவுக்குச் சர்மியின் எதிர்வாதம் கோபத்தைக் கொடுத்தது. சடாரென்று அவளின் தோளில் எட்டித் தட்டினாள். “யோசிச்சுக் கதை. பொம்பர் போடுற குண்டுகளுக்கேயும், செல்லடிகளுக்குள்ளேயும் வாழ்ந்துகொண்டு நாங்க நிம்மதியாய்ப் படிச்சிருக்கேலுமே. எவ்வளவு கஷ்டப்பட்டனாங்க எண்டது உனக்கு விளங்கினால்தானே. உன்னைச் சொகுசா இருக்கவிட்டிட்டு எல்லாத்தையும் நான் செய்யிறன். கவனமாய்ப் படி எண்டதைத் தவிர வேறை என்னத்தை நான் உன்னட்டைக் கேட்கிறன்? மேக்கப் போட்டுக்கொண்டு சுத்துறதிலைதான் உனக்கு அக்கறையே தவிர, படிப்பிலை இல்லை,” சிவந்துபோன வினோவின் முகத் தசைகள் துடித்தன. மூச்சு வாங்கியது. ஒரு நிமிடம் ஆழமாக மூச்செடுத்தவள், தன்னைச் சுதாகரித்துக்கொண்டு, “எழும்பு, பிள்ளை. முதலிலை வீட்டுப் பாடங்களைச் செய். இந்த அறையை ஒதுக்கு. பிறகு விளையாடலாம்,” சர்மியைப் பார்த்துக் கனிவாகக் கூறினாள்.

மேலும் படிக்க ...

சிறுகதை: இலக்கியப் போட்டி - எஸ். அகஸ்தியர் -

விவரங்கள்
- எஸ். அகஸ்தியர் -
சிறுகதை
31 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

(1963 இல் தமிழ் இலக்கியக் களத்தின் நிகழ்வுகளால் மையப்படுத்தப்பட்ட கதை. தினகரன் பத்திரிகையில் வெளியானது. அகஸ்தியரின் பிறந்த தினம் ஆகஸ்ட் 24. அதனையொட்டி அவரது மகள் எழுத்தாளர் நவஜோதி ஜோகரட்னம் அனுப்பி வைத்த சிறுகதை. அவருக்கு நன்றி. )


அன்புள்ள செயலாளருக்கு,

தங்கள் எழுத்தாளர் சங்கம் நடத்துகின்ற அகில இலங்கைச் சிறுகதைப் போட்டிக்கென, எனது ‘ஒரே வழி’ என்ற கதை இத்துடன் வருகிறது. போட்டியின் பெறுபேற்றை உரிய காலத்தில் அறிவிக்கவும்.

செல்வி ரோகினி, 28- 4- 63

அன்புள்ள செல்வி ரோகினிக்கு,
 
நாம் நடத்திய சிறுகதைப் போட்டியில் தங்களின் ‘ஒரே வழி’ என்ற கதை, ‘இரண்டாம் பரிசுக்குரியதென’ நீதிபதிகளால்  தெரிவு செய்யப்பட்டுள்ளது. பரிசளிப்பு வைபவம், மட்டக்களப்பிலே இம்மாத ஈற்றில் நடைபெறும் முத்தமிழ் விழாவின் ஓர் அங்கமாக இது அமையும். தாங்கள் நேரில் வந்து பரிசு பெற வேண்டும் என விரும்புகிறோம்.  
 
தங்களின் கதை, நமது வெளியீடாக விரைவில் வரும் சிறுகதைத் தொகுதியில் இடம் பெறவுள்ளது. ‘பாஸ்போட்’ அளவிலான தங்கள் புகைப்படமொன்றைச் சீக்கிரம் அனுப்பவும்.

மேலும் படிக்க ...

நூல் அறிமுகம்: எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் ஹைதராபாத் நாவல்கள்! -பெரம்பலூர் காப்பியன் -

விவரங்கள்
-பெரம்பலூர் காப்பியன் -
நூல் அறிமுகம்
30 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சுப்ரபாரதி மணியன் ஹைதராபாத்தில் 8 ஆண்டுகள் 1984-92 வசித்தவர். .அவர் அந்த அனுபவங்களை அப்போது மூன்று நாவல்களாக வெளியிட்டு இருந்தார். இப்போது அந்த மூன்று நாவல்களும் ஒரே நூலாக வெளிவந்துள்ளது.

 அவரின் முதல் நாவல்  மற்றும் சிலர் மதுரை சின்னாளபட்டியில் இருந்து ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்த,  திமுக ஆட்சி காலத்தில் இந்தி ஆசிரியர் பணியை இழந்த ஒருவரை பற்றியக் கதை. ஐதராபாத் வாழ் தமிழர்களின் வாழ்க்கையையும் தெலுங்கானா போராட்ட பின்னணியையும் கொண்ட நாவல்..தமிழ் கிளாசிக் நாவல் வரிசையில் இடம்பெற்றது. முன்பு நர்மதா, மருதா, டிஸ்கவரி ஆகிய பதிப்பகங்கள் இதை வெளியிட்டுள்ளன.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் நடராசா சுசீந்திரனின் ‘சொற்கள் வனையும் உலகம்’ , ‘தடங்களில் அலைதல்’ - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
நவஜோதி ஜோகரட்னம்
30 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 
‘சொற்கள் வனையும் உலகம்’, ‘தடங்களில் அலைதல்’  நடராசா சுசிந்திரனின் கட்டுரைத்தொகுப்பு நூல்கள் வாசிக்கக் கிடைத்தமை மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இரு நூல்களும் ‘சுவடு வெளியீடாக’ 2023 டிசம்பரில் வெளிவந்துள்ளன. இரண்டு நூல்களுமே கட்டுரை வடிவத்தைக் கொண்டிருப்பது என்பது அவற்றினை வகைப்படுத்திப் பலவிடயங்களை திரும்பிப்பார்த்து அசை போடுவதற்கும், பலவற்றை அறிந்து கொள்வதற்கும் மிகச் சுவையாக இருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

   சொற்கள் வனையும் உலகம் : புகலிட செயற்பாடுகளின் சில முக்கியமான தடயங்களையும், ஜேர்மன் மொழியுடனான தனது ஆளுமையையும் புலப்படுத்தும் வகையில் கட்டுரைகளை வெளிப்படுத்தியிருப்பது மிகச்சிறப்பான விடயம். தமிழ் மக்கள் அறிந்திராத பல விடயங்களை அனுபவச் செறிவோடும் குறிப்புகளோடும் கட்டுரைகளாக்கி வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரிய விடயமாகும். இக்கட்டுரைத் தொகுதியை ‘தன் பலத்தின் பாதியாயிருந்த அவரது அப்பா சின்னத்தம்பி நடராசாவுக்கே’ சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

    ‘கோதேயின் ‘பவுஸ்ட்’’, ‘எதுவரை தொடரும் மனிதரின் கதை’, ‘மக்ஸ் ஃபிறிஷ்ஷின் ‘ஹோமோஃபாபர்’, ‘செ. வே.காசிநாதனின் ‘விற்கன்ஸ்ரைன்: மொழி, அர்த்தம், மனம்’, ஜாக்லண்டனின் ‘கானகத்தின் குரல்’, செல்லத்தம்பி  சிறீகந்தராசாவின் ‘ஆங்கிலம் பிறந்த கதையும் வளர்ந்த கதையும்’, அப்துல்றசாக் குர்நாவின்; ‘சொர்க்கம்’, ‘பேராசிரியர் கைலாசபதியும் பாரதி ஆய்வுகளும்’, ‘கே.கணேஷின் மொழியாக்கத்தில் லாஓ ஷேயின் ‘கூனற்பிறை’, ‘அவலங்களின் காட்சியறை குந்தவையின் சிறுகதைகள்’, ‘உறைபனி இடுக்கில் அடம்பன் கொடி வேர் பின்னும் தாயகம் கடந்த தமிழ் இலக்கியத்தில் தமிழ்மனம்’, ‘பாரதிதாசனின் ‘ஓ..கனடா’, ‘வாசுதேவனின் ‘தொலைவில்’ கவிதைத் தொகுப்பு’, ‘விமல் குழந்தைவேலின் ‘கசகறணம்’ நாவல்’, ‘பிராங்போர்ட்’ றஞ்சனியின் ;றஞ்சினி கவிதைகள்’, ‘சி.சிறீறங்கனின் ‘சிவப்புக்கோடு’, ‘என். சரவணனின் ‘பண்டாரநாயக்க கொலை’, ‘இரா. றஜீன்;குமாரின் ‘இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துப் புறநானூறு’, ‘எவ்வகையில் அமையலாம் பொறுப்புக் கூறுதல் ஜப்பானிய அட்மிரல் தக்கிஜீரோ ஒனிஷி (1891-1945)யின் பதில்’, ‘நிக்கொலாய் கோகோலின் மேலங்கி’, மரணமுகாமிங்கு நேரம் தவறாது ரயில் அனுப்பிய அடொல்வ் ஜஸ்மான்’, ஓய்.பி.சத்தியநாராயணனின் ‘என் தந்தை பாலய்யா’, ‘ஸ்யூஸ்டன், டெக்சாஸ் சட்டத்தரணி ஜார்ஜ் வில்லி அவர்களின் வரவேற்புரை’ போன்ற இருபத்திமூன்று கட்டுரைகள் 168பக்கங்களை உள்ளடக்கியமைந்துள்ளன.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கையைப் பேணுவோம்.

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
28 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



இசை & குரல்: AI SUNO| ஓவியம்: AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=--s_We6LiGg

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

விரிந்து கிடக்கிறது இயற்கை எங்கும்.
விரியும் அழகில் என்னை மறக்கின்றேன்.
விரிவான் என்னை எப்பொழுதும் மயக்கும்.
வியக்க வைக்கும் பசுமைமிகு வயல்கள்.

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

மேலும் படிக்க ...

சிறுகதை: இலங்கையின் தாய்மார்கள்! - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -

விவரங்கள்
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -
சிறுகதை
28 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                                             - ஓவியம் - AI -

(1996- லண்டன்  'தமிழ் டைம்ஸ்' சஞ்சிகையில்  ஆங்கிலத்தில் வெளியான இந்தக் கதை நான் ஏன் இலங்கையில் சமாதானத்துக்காகவும் ஒற்றுமைக்காகவும் பிரச்சாரம் செய்கிறேன் என்பதை விளக்கும்.)
லண்டன் 1996

"இது ஒரு சூடான நாளாக இருக்கப் போகிறது" தேவிகா திரைச்சீலைகளை விலக்கி வெளியே வானிலை பார்ப்பதற்காக தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டாள்.

தெளிவான நீல வானம் மெதுவான இயக்கத்தில் நகரும் அலைந்து திரியும் மென்மையான வெள்ளை மேகங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காலை ஏழு மணி மட்டுமே என்பதால் தெரு கிட்டத்தட்ட காலியாக இருக்கும்ம, ஆனால் எந்த நேரத்திலும் சத்தம் மற்றும் கூட்டம் இருக்கும்.

பக்கத்து வீட்டுக்காரர் வழக்கம் போல சத்தமாக ரெக்கே இசையை இசைக்கிறார். தேவிகா ஆடியோ டேப்பை போட்டுக்கொண்டு பாத்ரூம் செல்கிறாள். சில நொடிகளில் தமிழ் தேவhர பாடல்கள் அமைதியான தாள லயங்களால் வீட்டை நிரப்புகின்றன.

அவள் தயாராகி தேநீர் தயாரிக்க கீழே வருகிறாள். அவளது குழந்தைகள் அவளது அறைக்கு அருகிலேயே தங்கள் அறைகளில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நேற்று இரவு வரை தங்கள் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தன, அவர்கள் தாமதமாக எழுந்திருக்கப் போகிறார்கள். அவர்களின் பூனை ஜோசி அறையைச் சுற்றி அலைந்து காலையில் வழக்கம் போல் தனது கால்களை நக்குகிறது. கருப்பு பூனை மிகவும் அழகாக இருக்கிறது மற்றும் நன்கு வளர்க்கப்பட்ட இளம் பெண்ணைப் போல நேர்த்தியாக நகர்கிறது. பூனை தேவிகாவைப் பார்த்து கத்துகிறது.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரன் பாடல் - தர்க்கம் செய்வோம். ஞானம் பெறுவோம்.

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
25 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


- இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=zrIMuysVSN0

தர்க்கம் செய்வோம். ஞானம் பெறுவோ

தனிமைப் பொழுதுகளில் இனிமை காண்போம்.
தர்க்கம் செய்வோம். ஞானம் பெறுவோம்.

ஆகாயம் பார்த்து நிற்கும் பொழுதுகள்
ஆகர்சிப்பவை என்னை எப்போதும் எப்போதும்.
விரிவெளியில் என்னிருப்பு எவ்விதம் இவ்விதம்?
விடைநாடி வினாக்கள் எழும் பொழுதுகள்.

தனிமைப் பொழுதுகளில் இனிமை காண்போம்.
தர்க்கம் செய்வோம். ஞானம் பெறுவோம்.

இவ்விதப் பொழுதுகளை நான் விரும்புகின்றேன்.
இருப்பு பற்றிய கேள்விகளில் விருப்புண்டு.
சிந்திக்கத்  தூண்டும் வினாக்கள் அல்லவா.
சிந்திப்பதில்தான் எத்துணை மகிழ்ச்சி.களிப்பு.

தனிமைப் பொழுதுகளில் இனிமை காண்போம்.
தர்க்கம் செய்வோம். ஞானம் பெறுவோம்.

மேலும் படிக்க ...

இருபத்து நான்காம் வயதில் பாரதி : பகுதி III - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
24 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


திலகரின் அரசியலை, பாரதி அறிமுகப்படுத்தும் முறைமை…

1906 இன் துவக்கத்தில், இவ் இளைஞன் பின்வருமாறு எழுதுகிறான்: “நமது தேசத்தின் ஆதார சக்திகளாகிய மாதர்களின் ஹிருதயமும், அவர்களது ஆன்மாவும் இருளடைந்துபோக விட்டுவிடுவதைக் காட்டிலும் பாதகச் செயல் வேறில்லை. ஞானக் கிரணங்கள் அவர்களது ஆன்மாவில் தாக்குமாறு செய்தாலன்றி நமக்கு வேறு விமோசனம் கிடையாது "(பக்கம் 145: சக்கரவர்த்தினி: பாரத குமாரிகள்)

எழுத்தின் நோக்கத்தை, இதைவிட நேர்த்தியாகச் சொல்வது கடினம். இவ் இளவயதில், இவ் இளைஞன் தனது எழுத்தின் நோக்கத்திற்கான மேற்படி தாரக மந்திரத்தை இப்படியாக வரையறுத்துக் கொள்வது மாத்திரம் இல்லாமல், மேற்படி எழுத்தானது மக்களை அதிலும் குறிப்பாக, மாதரைச் சென்றடைய வேண்டிய தேவைப்பாட்டினையும் இவன் நன்கு உணர்வதினை, மேற்படி வரிகள் எமக்கு எடுத்தியம்புவதாக உள்ளன.

இதற்காக, ‘சொல்’ ஒன்றைத் தேடி அலையும் இவ் இளைஞன், இப்பயணத்தின் போது, மக்கள் விரும்பக் கூடிய ‘எளிய பதங்களை’ தேடுவதும் தர்க்கப்பூர்வமாகின்றது. வேறு வார்த்தையில் கூறினால், சொல் ஒன்றைத் தேடியும் எளிய பதங்களை நாடியும் நகரக் கூடியவன், மக்களின் தேசப்பற்றை மதப்பற்றாக மாற்றும் எண்ணக்கருவிற்கு (அல்லது மதப்பற்றைத் தேசப்பற்றாக மாற்றும் ஒரு எண்ணக்கருவிற்கு,) இக்காலப்பகுதியில், அதாவது தனது 24ம் வயதில், வந்து சேர்ந்துவிட்டானா என்பதுவே கேள்வியாக உருவெடுக்கின்றது.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரன் பாடல் - ஒட்டகங்கள்!

விவரங்கள்
வ.ந.கிரிதரன்
வ.ந.கிரிதரன் பக்கம்
23 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


- இசை & குரல்: AI | ஓவியம்: AI -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=raMe1JIJ41g

ஒட்டகங்கள் நாங்கள். பாலையில் பயணிக்கும்
ஒட்டகங்கள் நாங்கள்.

நாளை என்ற பயணம் நாடி
வசந்தத்தை நாடித்  தொடரும் பயணம்
எங்கள் பயணம்.  எங்கள் பயணம்.

துன்பப் புயற் காற்றுகள் வீசும்.
தேகங்கள் சீர் குலைந்து விடுவதில்லை.
உறுதி குலைந்து போவதும் இல்லை.

ஒட்டகங்கள் நாங்கள். பாலையில் பயணிக்கும்
ஒட்டகங்கள் நாங்கள்.

மேலும் படிக்க ...

சிறுகதை: புற்றுப் பாம்புகள்! - அ.கந்தசாமி -

விவரங்கள்
- அ.கந்தசாமி -
சிறுகதை
23 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



                                           - ஓவியம் AI -

நிர்மலனுக்கு அது கனடாவில் முதல் இரவு.. முதல் உறக்கம். பின்னாள்களில் உறக்கத்தைத் தொலைக்கும் இரவுகள் வர வாய்ப்புகள் உண்டு என்பதைச் சிறிதும் உணராதவன் என்பதால் அவன் உறக்கத்தில் நிம்மதியும் ஒட்டியிருந்தது.

வந்தவனோடு ஆறவமர இன்னும் எதுவும் பேசவில்லை, கும்பகர்ணனுக்குச் சொந்தக்காரன் போல் உறங்குகிறான் என்று எண்ணிய தமக்கை, அருகே சென்று தலைமயிரைத் அன்போடு கோதினாள். உடலெங்கும் நிறைந்திருந்த பயண அலுப்பு, இமைகடந்து வழிந்து விழக் கண் விழித்தான்.

வீட்டுக்குள் அறை மாறிப் படுத்தாலே அவனுடைய தொடர்தூக்கத்தில் பல இடைவெட்டுக்கள் ஏற்படும். இன்று தடித்த போர்வையுள் குறங்கிக் கால் மடங்கிப் படுத்தபின் கனவுகள் குழப்பாத கண் கனத்த உறக்கம்.

பிறந்த மண்ணை விட்டுவிலகி, முன்பின் பரிச்சியம் இல்லாத பயணமாய் ஆசையோடு விமானத்தில் ஏறியவன், பாதிப்பயணத்தில்தான் அது பலமணிநேரச் சிறை என்பதை உணர்ந்தான். ஒருவாறாக விமானம் பியர்சன் விமானநிலையத்தில் தரைதட்ட, பலர் விட்ட நிம்மதிப் பெருமூச்சுகளால் விமானம் தள்ளாடி தரித்தது. அவ்வேளை நிர்மலனுக்கு ஏற்பட்ட மன மகிழ்ச்சியைச் சற்று நேரத்திலேயே குடிவரவு அதிகாரிகள் இடறினார்கள். ஆங்கிலம் என்ற ஒருமொழியை இருவிதமாய்ப் பேசும் பேரிடைவெளிக்குள் சிக்கித் தவித்து ஒருவாறு வெளியே வந்தான்.

விமானத்தில் வந்தோரை விட வரவேற்க வந்தவர்கள் அதிகமாக இருந்தார்கள். அக்காவை, அத்தானை தேடிய கண்கள் பெர்மூடா முக்கோணத்தில் சிக்கிய காந்தஊசி போல் திசை தெரியாமல் தடுதடுத்தன.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரன் பாடல்: படைப்பும், விடை தேடும் நெஞ்சும்.

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
23 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



- இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -

யு டியூப்பில் பாடலைக் கேட்க

படைப்பின் அற்புதத்தில் பேரழகில்
எனை மறக்கின்றேன் எப்பொழுதும்.

யார் படைத்தார் பேரண்டமிதை.
பார்த்தால் பிரமிக்க வைக்கும்
பேரண்டத்தை யார் படைத்தார்?
யார் படைத்தார்? ஏன் படைத்தார்?

நுண்ணியதிலும் நுண்ணியதான குவாண்டம்
உருப்பெருக் காட்டிகள் இல்லையெனில்
உள்ளவற்றைப் -பார்க்க முடியாது.
உள்ளவற்றை உணர முடியாது.

படைப்பின் அற்புதத்தில் பேரழகில்
எனை மறக்கின்றேன் எப்பொழுதும்.

மேலும் படிக்க ...

இந்த பிரபஞ்சத்தில் நாம் எங்கே இருக்கின்றோம்! - சந்திரகௌரி சிவபாலன் (கௌசி), B.A, Dip.in. Edu, ஜேர்மனி -

விவரங்கள்
- சந்திரகௌரி சிவபாலன் (கௌசி), B.A, Dip.in. Edu, ஜேர்மனி -
ஆய்வு
23 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                          ஓவியம் - AI -

இந்தப் பிரபஞ்சத்தில் நாம் எங்கே இருக்கின்றோம். எந்த அளவாக நாம் இருக்கின்றோம், எமது அறிவு பிற உயிர்களுடன் ஒப்பிடும் பொழுது எப்படியானது என்பன பற்றி ஆராய்வதே இக்கட்டுரை.

              நாம் வாழும் பூமி சூரியக்குடும்பத்தைச் சேர்ந்தது. இச்சூரியக் குடும்பத்தில் ஒன்பது கிரகங்களும், அக்கிரகங்கள் பிரயாணம் செய்கின்ற பாதைகளும் அமைந்த பரப்பு சிற்றண்டம் என்று அழைக்கப்படும். நாம் வாழுகின்ற பூமி தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனையும் சுற்றி வரும் பாதை இந்தச் சிற்றண்டத்திலேயே அடங்குகின்றது. 1008 சிற்றண்டங்கள் சேர்ந்த பரப்பு ஒரு பேரண்டமாகும். 1002 பேரண்டங்கள் சேர்ந்த பரப்பு ஒரு புவனம் ஆகும். 2214 புவனங்கள் சேர்ந்த பரப்பு சாகரம் எனப்படுகின்றது. 7 சாகரங்கள் சேர்ந்த பரப்பு பதம் எனப்படுகிறது. 814 பதங்கள் சேர்ந்ததே இந்தப் பிரபஞ்சம் என பிரபஞ்சப் படைப்புப் பற்றித் “தொன்மைத் தத்துவங்களும் அண்மை அறிவியலும்” 1 என்னும் நூலில் இருந்து அறியக் கூடியதாக இருக்கின்றது. நாம் வாழும் பூமி 51 கோடியே 66 ஆயிரம் கிலோ மீற்றர் கொண்டது. எனவே நாம் வாழுகின்ற பூமியில் நாம் வாழும் பகுதி எந்த அளவில் இருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தில் நாங்கள் எந்த அளவில் இருக்கின்றோம் என்பதை இப்போது எம்மால் அறியக் கூடியதாக இருக்கின்றது.

நாங்கள் கண் இமைக்கின்ற நொடிக்குள் 60.000 நட்சத்திரங்கள் பிறக்கும். 60 மில்லியன் கோள்கள் உருவாகும். எங்களுடைய பால்வீதி 1000 கிலோ மீற்றர் கடந்து போயிருக்கும். 120 கருந்துளைகள் (Black Holes) உருவாகியிருக்கும். 1200 நட்சத்திரங்கள் வெடித்திருக்கும். இந்தப் பிரபஞ்சம் 20 கோடி விரிவடைந்திருக்கும் என்று   விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். இங்கு எங்களுடைய பங்கு என்ன இருக்கிறது.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் முருகபூபதி விரைவில் பூரண நலத்துடன் மீண்டிட வேண்டுவோம்!

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
22 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் முருகபூபதி அண்மையில் இருதயம் சம்பந்தமான சத்திர சிகிச்சையொன்றின் பின்னர் ஓய்வெடுத்து வருகின்றார். விரைவில் பூரண நலத்துடன்  மீண்டு வந்திடப் பதிவுகள் சார்பில் வேண்டுகின்றோம். எப்பொழுதும் இன் முகத்துடன் இருக்கும் முருகபூபதி அவர்களின் ஆளுமை நிச்சயம் அவருக்கு ஒத்துழைக்கும்.

ஒஸ்லோவில் தமிழ் மரபோடு இணைந்த அரங்கேற்றம் - மாதவி சிவலீலன் -

விவரங்கள்
- மாதவி சிவலீலன் -
நிகழ்வுகள்
22 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கலாசாதனா கலைக்கூட நடன ஆசிரியை கவிதாலக்ஷ்மி அவர்களது மாணவிகள் ஹரிணி நகுலேஸ்வரதாஸ், தீபிகா மகேசன் இருவரும் 17.08.2024 அன்று மாலை 5.00 மணிக்கு நோர்வே ஒஸ்லோ Sandvika Teater இல் ‘’தீதும் நன்றும்’’ எனும் தலைப்பில் பரதநாட்டிய அரங்கேற்றத்தை நிகழ்த்தித் தந்தனர். அன்றைய பொழுதைக் கலைப் பொழுதாக்கி கண்களுக்கும் மனதுக்கும் இரசனைப் பொழுதாக அமைத்துத் தந்த ஆடலரசிகள் இருவரும் பாராட்டுதல்களுக்குரியவர்களாவர்.

கூத்தப்பெருமான் அண்டம் முழுவதையும் தனது ஆடல் அரங்காகக் கொண்டு ஆடும் போது உயிரினங்கள் அனைத்தும் சுகம் பெறுகின்றன. அந்த இன்பத்தை ஆடலரசிகள் இருவரும் கண்ணுக்கு முன் கொண்டு வந்தனர்.

குரு ஸ்ரீமதி கவிதாலக்ஷ்மி அவர்கள் பல்துறை சார்ந்த ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்டவர். பரதக்கலை மீது அவர் கொண்ட ஈடுபாட்டை அர்ப்பணிப்பை அதனை மாணவரிடையே கொண்டு சேர்க்கும் முறையையும் அன்றுஅரங்கில் தரிசிக்க முடிந்தது. கவிதாலக்ஷ்மி நடன ஆசிரியர் மட்டுமல்ல. கவிஞர், விமர்சகர், எழுத்தாளர், தமிழ் புலைமையாளர், ஓவியர் எனப் பன்முகத் திறமை வாய்ந்தவர். ஒரு குருவின் தகுதியும் அதுவே. அதனை நன்னூல் ’கலைபயில் தெளிவும் கட்டுரை வன்மையும்’ வேண்டும் எனக் கூறும். அதாவது பல கலை அறிவும் அதனை மாணவருக்குப் போதிக்கும் வன்மையும் வேண்டுமென்பர். புதுமைகளும் நுட்பங்களும் கட்டுடைப்பும் இந்த அரங்க்கில் சிறப்புப் பெற்றன. தமிழ் பாரம்பரிய முறையில் அமைந்த அரங்கேற்ற நிகழ்வாக அமைந்தமை யாவரையும் கவர்ந்திருந்தது. ஆடையலங்கார நேர்த்தியும் பின்னணி ஒலி ஒளியமைப்பும் இன்னோர் உலகிற்கு எம்மை அழைத்துச் சென்றன. பெண் அர்ச்சகர் சிவாஜினி ராஜன் அவர்கள் தமிழில் பூசை செய்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் படிக்க ...

என் அபிமான டியூசன் மாஸ்டர்களில் ஒருவர் எழுத்தாளர் அ.கந்தசாமி! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
22 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

     - எழுத்தாளர் அ.கந்தசாமி ('கந்தசாமி மாஸ்டர்') -

நான் க.பொ.த (உயர்தரம்) பெளதிகம் பாடம் ஒன்றைத்தான் முழுமையாக டியூசன் சென்று படித்திருக்கின்றேன். டியூசன் மாஸ்டர் கந்தசாமி மாஸ்டர்தான். அவருக்கு இன்று பிறந்தநாள் என்பதை  முகநூல் அறிவித்தது. இனிய  பிறந்தநாள் வாழ்த்துகள்.

இவரது டியூசன் வகுப்புகள் பற்றி நான் முதன் முறையாக அறிந்தது என் ஒன்று விட்ட அக்கா ஒருத்தி மூலம். அவர் சில வருடங்களுக்கு முன்னர் கனடாவில் மறைந்து விட்டார். மீனா என்றழைப்பார்கள். சிறந்த ஓவியர்.அப்போது ஆச்சி வீட்டில் தங்கியிருந்து யாழ்  இந்துவில் படித்துக்கொண்டிருந்தேன். அக்காவும் , சிநேகிதிகளும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து க.பொ.த (சாதாரண தரம்) பாடங்களுக்காக கந்தசாமி மாஸ்டரின் டியூசன் வகுப்புகளுக்குச் செல்வார்கள். அக்காலகட்டத்தில் யாழ் நகரில் புகழ்பெற்று விளங்கிய டியூசன் சென்ரர்களில் கந்தசாமி மாஸ்டரின் டியூசன் சென்ரரும் ஒன்று.

பின்னர் புகழ் பெற்று விளங்கிய 'பொன்ட் மாஸ்டர்' (இவரது இயற்பெயர் கனகசபை ஆனந்தகுமார்) கந்தசாமி மாஸ்டரின் டியூசன் சென்ரரில் க.பொ.த(சாதாரண தரம்) இரசாயன மாஸ்ட்டராகவிருந்தவர்.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 41 -"நீலாவணனின் பன்முக ஆளுமை" -- தகவல்: அகில் -

விவரங்கள்
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
22 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


மேலும் படிக்க ...

சிறுகதை: காற்றில் கரைந்த நதியின் ஓசை! - டீன் கபூர் -

விவரங்கள்
- டீன் கபூர் -
சிறுகதை
21 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

சிறுகதை வாசிப்போம்!

ஊரின் கிழக்குப் புறத்தே பல மைல்களுக்கப்பால் உலை மூடி மலை என அழைக்கப்படும் தொடர் மலைக்குச் சற்று விலகி ஓங்கி ஒற்றையாய் நிற்கும் பெருமலைக்குள்  உட்கார்ந்திருந்தான் சூரியன். இது அவனது வீடு. மாலைப் பொழுதில் கையிலிருந்த புத்தகத்தின் பக்கங்களை மெல்ல மெல்ல புரட்டிக்கொண்டிருந்தான். அப்போது வெளியில் ஒரு மெல்லிய ஓசை கேட்டது. அதற்கு முன்பு கேட்டது போல இல்லாத ஓசை.

வீட்டின் முன்புறத்தில் சிறிய நதியை ஒத்த ஒரு வெறும் சின்ன நீர்நிலை மட்டுமே இருந்தது. ஆனால் அந்த ஓசை, பெரியதொரு நதியின் பாய்ச்சலைப் போல சத்தமாகவும் இனிமையாகவும் இருந்தது. அது சூரியனின் மனதை ஆவலோடு பிடித்தது. ஏற்கனவே மெல்ல இயங்கிக் கொண்டிருந்தது சூரியனின் வாழ்க்கை; வீட்டில் இருந்த சாமான்கள் கூட அவனைப் போலவே மந்தமாக இருந்தன.

புத்தகத்தை மூடிவிட்டு சூரியன் எழுந்தான். பெருமரங்களில் தங்கி நிற்கும் காற்றினைப் போல அந்த ஓசை அவனை உச்சியில் தொட்டு கீழே இறக்கியது. காற்று அந்த நதியின் ஓசையை எடுத்து வந்து சூரியனின் செவிகளுக்கு மாற்றியிருந்தது. காற்றில் நதியின் ஓசை கலைந்து போய்விட்டது.

மேலும் படிக்க ...

திக்குவல்லை ஸும்ரியின் "நட்பு" சிறுகதைத் தொகுதி வெளியிட்டு விழா! - வெலிகம ரிம்ஸா முஹம்மத் -

விவரங்கள்
- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -
நிகழ்வுகள்
21 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நாடறிந்த எழுத்தாளரும் நாடக ஆசிரியரும் வானொலிக் கலைஞருமான திக்குவல்லை ஸும்ரியின் "நட்பு" சிறுகதைத் தொகுதியின் வெளியிட்டு விழா 2024 ஆகஸ்ட் 25 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையன்று காலை 9.30 மணிக்கு வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.

கொழும்பு மருதானை தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு பிரபல எழுத்தாளரும் கவிஞரும் நாவலாசிரியரும் பன்னூலாசிரியருமான திக்குவல்லை கமால் அவர்கள் தலைமை வகிக்கவுள்ளார்.
 
பிரதம அதிதியாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கலந்து சிறப்பிக்க உள்ளார். அத்துடன் இந்த நிகழ்வில் வாசனா தனியார் வைத்தியசாலையின் தலைவரும் தொழிலதிபருமான கலாநிதி அல்ஹாஜ் ரம்ஸி அமானுல்லாஹ் விசேட அதிதியாக கலந்து கொள்வதோடு நூலின் முதன் பிரதியையும் பெற்றுக் கொள்வார்.

ஹிஜாஸ் சர்வதேச பாடசாலையின் தலைவர் அல்ஹாஜ் என்.எம்.எம். ஹிஸ்புல்லாஹ் சிரேஷ்ட அதிதியாக கலந்துகொள்வார். கௌரவ அதிதிகளாக சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் சட்டத்தரணிகளான எம்.ஆர்.எம். ரம்ஸீன், சால்தீன் எம். ஸப்ரி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

மேலும் படிக்க ...

லக்ஷ்மி சிரித்தாள்! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -

விவரங்கள்
- கிறிஸ்டி நல்லரெத்தினம் -
சிறுகதை
20 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இப்போது முருகேசர் முழுவதுமாகவே மாறிவிட்டார். இதை பெரியவன் சபேசன் அவதானிக்காமல் இல்லை.

"அப்பு, இந்த கோப்பிய குடிச்சிட்டு இருங்கோவன்" என மருமகள் செல்வி காலையில் கொண்டு வந்த பால் கோப்பியை ஏறெடுத்தும் பார்க்கமல் "அந்த மேசையில வையுங்கோ பிள்ள" என்று அடித்தொண்டையில் இருந்து ஒரு முனுகலாக பதில் சொல்லிவிட்டு திரும்பிப்படுத்துக் கொண்டார்.  வழமையாக, கோப்பியின் நறுமணம் மூக்கில் நுழைந்ததுமே,  எழுந்து கட்டிலில் உட்கார்ந்து இரு கைகளையும் உரசி சூடேற்றி நாக்கில் ஊறும் உமிழ்நீரை ஒரு மடக்கு விழுங்கி எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் அந்த முருகேசர் எங்குதான் தொலைந்தாரோ? ஆம், மாறித்தான் விட்டார்.

முருகேசர் இப்படி கட்டிலில் முடங்கி தூங்குவதை மகன் சபேசன் அவதானித்தே இருந்தான். அவரின் ஆறடி  உடல் இப்படி ஏன் குறுகிக்கொண்டது என அவன் கவலைப்படாமல் இல்லை. அப்பா எந்த கூட்டத்தில் நின்றாலும் அவர் கம்பீரம்  அனைவரையும் ஆட்கொள்ளும். ஆனால் அவரின்  குரலில் உள்ள பணிவு அவர்களுக்கு ஆச்சரியமே.  உருவத்தால் உயர்ந்தவர்கள் உறுமத்தான் வேண்டும் என்பது உலக நியதியா என்ன? ஆலமரத்தில் இருந்து தேங்காயா விழுகிறது?

வந்த வேகத்தில் வார்த்தைகளை தெளித்து விட்டுப் போகும் மனிதரல்ல முருகேசர். ஆழ யோசித்து வார்த்தைகளை அடுக்கி அதன் இடையே பரிவு எனும் வெண்ணை பூசி வாயிலிருந்து விடுவிப்பார் அவர். கேட்போரின் செவிப்பறையை லாவகமாய் தட்டித் திறந்து வார்த்தைகள் பந்தியமைத்து அவர்கள் மனதில் உட்கார்ந்து கொள்ளும். அப்படி ஒரு இங்கிதம் அவரிடம்!

மேலும் படிக்க ...

இரு கவிதைகள் - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
18 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                         - ஓவியம் - AI -

1. பூவுலகில் காதல் புனிதமே !  

      
மண்ணிலே நல்ல வண்ணம்
வாழவே வேண்டு மாயின்
உண்மையில் காதல் தானே
உயிராக இருக்கு தன்றோ

எண்ணிடும் போதே நெஞ்சில்
இன்பமே ஊற் றெடுக்க
பண் ணிடும் பாங்கை
காதல் பண்புடன் தருகுதன்றோ

உண்ணிடும் சோறு கூட
உடலுடன் சேர வேண்டில்
கண்ணிலே காதல் வந்தால்
கஷ்டமே கழன்றே போகும்

பழம் இனிது பாலினிது
பசித்தவர்க்கு உண வினிது
உள மினிக்க செய்வதற்கு
ஊக்கமது காதல் அன்றோ

மேலும் படிக்க ...

ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்! - சந்திரகௌரி சிவபாலன் (கௌசி), B.A, Dip.in. Edu, ஜேர்மனி -

விவரங்கள்
- சந்திரகௌரி சிவபாலன் (கௌசி), B.A, Dip.in. Edu, ஜேர்மனி -
சமூகம்
18 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆங்கிலேயர், போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர் தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிருந்து மாறிப் போர்ச்சூழலின் காரணமாகப் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களும், பணி நிமிர்த்தமாகப் புலம்பெயாந்த இந்தியத் தமிழர்களும் இலகுவாகப் புலம்பெயர்ந்து தாம் வாழுகின்ற நாட்டினரின் பண்பாட்டிற்குத் தாமாகவே மாறக்கூடிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டிருக்கின்றது என்னும் விடயம் பொதுவாகவே எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு அம்சமாகும் என்று கூறி என்னுடைய உரைக்குள்ளே நுழைகின்றேன்.

ஜெர்மனியில் வாழுகின்ற தமிழர் பண்பாட்டு மாற்றம் என்ற விடயத்தை முதலில் எடுத்து நோக்குவதற்கு முன் பண்பாடு என்றால் என்ன? ஜெர்மனியர் பண்பாட்டுக் கூறுகள் எவை? தமிழர்களுடைய பண்பாட்டுக் கூறுகள் எவை? தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகள் தற்போது எவ்வாறு மாற்றத்தைக் கண்டுள்ளது என்பவற்றை எடுத்து நோக்க வேண்டும்.

1350 கோடி ஆண்டுகளுக்கு முன் உலகம் தோன்றியது. 450 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றியது. 350 கோடி ஆண்டுகளுக்கு முன் உயிரினங்கள் தோன்றிவிட்டன. 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஹோமோ பேரினத்துக்கும் சிம்பன்சிகளுக்கும் பொதுவான மூதாதையர்கள் தோன்றினார்கள் எனச் “சேப்பியன் மனித குலத்தின் ஒரு சுருக்க வரலாறு” என்னும் நூலிலே யுவா நோவால் ஹராரி என்பவர் கூறுகின்றார். பரிணாம வளர்ச்சியின் பின்னே மனித இனம் தோன்றியது. அது பிறந்து இறந்து பின் புதிதாய்ப் பிறந்து எனத் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றது. ஆரம்பகாலத்தில் உண்ணவும், உறங்கவும் வாழ்ந்த மனிதனின் சிந்தனை வளர்ச்சியுற்றதன் காரணத்தால், மனிதனின் பண்பாட்டுக் கூறுகளில் காலத்துக்குக் காலம் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே வருகின்றன. காலநிலை, பௌதீக சூழலினால், பண்பாட்டுக்கூறுகளில் மாற்றம் ஏற்படுகின்றது. பண்பாடு என்பது எழுதப்படாத சட்டம் என்பதை சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கின்றார்.

மேலும் படிக்க ...

ஜேர்மனிய மண்ணில் தமிழர்களின் குடியேற்றமும் தற்கால வாழ்க்கை முறையும்! -சந்திரகௌரி சிவபாலன் (கௌசி), B.A, Dip.in. Edu, ஜேர்மனி -

விவரங்கள்
-சந்திரகௌரி சிவபாலன் (கௌசி), B.A, Dip.in. Edu, ஜேர்மனி -
சமூகம்
18 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

357,386 கி.மீற்றர் பரப்பளவுள்ள ஒரு நாடு ஜெர்மனி. இது இரும்பைக் கொண்டு உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் பூமி என்று அழைக்கப்படக் கூடிய நாடு. அதன் முக்கிய வளமே இரும்புதான். இங்கு 83.02 மில்லியன் மக்கள் வாழுகின்றார்கள். வடக்கே வட கடலும், டென்மார்க்கும், கிழக்கே போலந்து, தெற்கே ஆஸ்திரியா, சுவிற்ஸலாந்து, மேற்கே பிரான்ஸ் லக்ஸம்பேர்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளன. 16 மாநிலங்களைக் கொண்ட ஒரு குடியரசு நாடாகும். இங்குள்ள மக்கள் ஜெர்மனிய மொழி பேசுகின்றார்கள்.

இலங்கை மண்ணில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் மக்கள் மத்தியில் பெரும் அழிவை ஏற்படுத்தி இருந்தாலும், ஜேர்மனிய மண்ணில் தமிழர்களின் குடியேற்றம் ஒரு வகையில் மக்களின் வளர்ச்சிப் போக்கிற்கு வழி வகுத்திருக்கின்றது, அவர்களின் மனங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கின்றது, ஏற்றத்தாழ்வுகளை மாற்றியும் அமைத்திருக்கின்றது, கல்வியறிவில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றது. இவற்றைவிட கலாசார மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது. அத்துடன் போரின் தாக்கம் பாதிக்கப்பட்ட மனங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதனால் பின்விளைவுகள் பலவற்றை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.

தாய்நாட்டில் வாழ்ந்த மக்கள் போரின் காரணத்தினால், உடைமைகளை இழந்து வெறும் கையுடன் புலம்பெயர்ந்த நாட்டுக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்களிடம் இருந்த சொத்து மதிப்பு 10 விரல்களும், நம்பிக்கை என்னும் உயரிய ஆயதமும் மட்டுமே. அவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் கற்றவர்கள் மட்டுமன்றி சகல தரப்பினரும் கொழும்பு விமானநிலையத்தை முதல் தடவையாகப் பார்த்தவர்களும், வீட்டை விட்டு வெளியே போகாமல் குடும்பம், பிள்ளை என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் தம்மை அடக்கிக் கொண்டு வாழ்ந்த எத்தனையோ தாய்மார்களும் இவர்களுக்குள் அடங்குகின்றார்கள்.

மேலும் படிக்க ...

முனைவர் பீ. பெரியசாமி கவிதைகள்!

விவரங்கள்
- முனைவர் பீ. பெரியசாமி -
கவிதை
18 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



முருகன்

அழகனவன்
ஆறுமுகன் கொண்டவன்
வெறியாட்டு நாயகன்
சேயோன், செவ்வேலோன்
தமிழன் முப்பாட்டன்
இன்று சைவனாய்….!

படிப்பு

படித்தால் முன்னேறலாம்
பலரும் சொன்னார்கள்
யாரும் சொல்லவில்லை
யார் முன்னேறுவாரென்று…

கைம்மை

நெற்றியின் பொட்டு
புதியதாய் நிறமற்று போனது
வாழ்க்கையும் தான் …

மேலும் படிக்க ...

தோரணை! - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சிறுகதை
18 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

 

                                           ஓவியம் : AI

ஜோதிக்கு  சாவு வீட்டுக்குச் செல்லும் சரியானத்  தோரணை வந்துவிட்டது. தோரணை என்றால் அதற்கான இணக்கமாக்கிக் கொண்டு   சாவு வீட்டுக்குச் செல்வது. முதலில் பொட்டு இடுவதை தவிர்த்து விடுவாள். சாதாரண சேவை உடுத்துவாள். எந்த வகையிலும் கவனம் பெற தக்க வகையில் சேலை  இருக்காது.  ஜாக்கிரதையாக சோகத்தை வரவழைத்துக் கொள்வாள். சாவு வீட்டுக்குச் செல்வதற்கான சரியான ஏற்பாட்டில் கண்ணீரை உற்பத்தி  செய்து  கொள்வாள். அப்படித்தான் சுகுமாரன் உறவு சார்ந்த ஒரு சாவிற்கு அன்று செல்ல வேண்டி இருந்தது.

         சுகுமாரனின் அண்ணன் மகளின் மாமனார் இறந்து விட்டார். அதற்காகச் செல்வதற்கான ஆயத்தங்களில் சுகுமாரன் இருந்தான். இதுபோன்று இழவு காரியங்களுக்கு செல்லும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் செல்ல வேண்டும் என்று பல சமயங்களில் சுகுமாரன் நினைப்பான். ஆனால் அந்த ஜாக்கிரதைத்தனம் எதுவும் இல்லாமல் சென்று விடுவான்.

 வருத்தம் தரும் நேரங்களில் அதுவும் ஒன்றாகிவிடும்.

 இப்போது கூட எந்த உடை அணிந்து கொள்வது என்பது தான் குழப்பம் இருந்தது வழக்கமாக அவன் அணியும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அவனுக்கு எப்போதும் ஒத்துழைப்புத் தந்து கொண்டிருக்கிறது. அதை பல நாட்களாக அவன் பயன்படுத்தி வந்தான். பத்து நாட்கள்., பதினைந்து  நாட்கள் அணிந்துவிட்டால் பின்னர் அதை அழுக்குக் கூடைக்கு அனுப்புவான். அப்படி அழுக்கோடு இருப்பது தான் அந்த ஜீன்ஸ் பேண்ட்டின் உயர்ந்த பட்ச அழகு என்பது அவனுடைய எண்ணம். பிறகு அழுக்கும் சாதாரணமாகி விடுகிறது. அடிக்கடி பேண்ட் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்க இலக்கியச் சந்திப்பு: ஈழத்துப் பண்டிதப் பாரம்பரியம்!

விவரங்கள்
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
17 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தெளிவாகப் பார்க்க படத்தை ஒரு தடவை அழுத்தவும்.

மற்ற கட்டுரைகள் ...

  1. சிறுகதை: ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை! - வ.ந.கிரிதரன் -
  2. 'ரவி அல்லது' கவிதைகள்: பால்ய வடுக்களின் ஈர்ப்பு & தவித்தலையும் காதல்.
  3. சந்தன நுஃமான் வாழ்க! - செ.சுதர்சன் -
  4. சிறுகதை : ' புல்லாங்குழலே என் ஜாதி , நீயும் நானும் ஒரு ஜாதி' - கடல்புத்திரன் -
  5. அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கு உதவி! - முருகபூபதி -
  6. ஓர் உலகக் குடிமகனின் தன் நாட்டு அரசியல் பற்றிய சிந்தனைகள்... - வ.ந.கிரிதரன் -
  7. காக்கை விடுதூது கூறும் காக்கையின் பெருமை! - முனைவர்.ஆ.ஆனந்தி, 1/1881, பழனிச்சாமி தெரு, ஜக்கதேவி நகர், பாண்டியன் நகர், விருதுநகர் -
  8. விண்ணைப் போன்றதொரு நூலகம் - வ.ந.கிரிதரன் -
  9. தமிழும் திராவிடமும்! - வ.ந.கிரிதரன் -
  10. அப்பாச்சியின் புதையல் பற்றிய ஞாபகம்! - முல்லைஅமுதன் -
  11. கம்பராமாயணத்தில் தேர்ப்பாகன் - முனைவர் க.மங்கையர்க்கரசி,,உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061,
  12. நூலகர் என்.செல்வராஜாவின் 'ஈழத்தின் தமிழ் நாவலியல் ஓர் ஆய்வுக் கையேடு' முக்கியமானதோர் ஆய்வுக் கையேடு! - வ.ந.கிரிதரன் -
  13. கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழி நடத்தும் எழுத்தாளர் அரங்கம் - 24
  14. ரொறன்ரோவில் பரதநாட்டிய அரங்கேற்றம். - குரு அரவிந்தன் -
பக்கம் 18 / 104
  • முதல்
  • முந்தைய
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • அடுத்த
  • கடைசி