தாய்வீட்டார் அழைப்பிதழ்! தாய்வீடு இதழ் உரையாடலும் விமர்சனமும் - 2024 - திலீப்குமார் -

கடந்த 17 ஆண்டுகளாக அச்சு, இணைய இதழாகத் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருந்த தாய்வீடு இதழ், கடந்த மூன்று ஆண்டுகளாக ஒலி இதழாகவும் வெளிவந்துகொண்டிருக்கிறது.
தாய்வீடு மாத இதழானது சமகாலத்தில் உலகளாவிய அளவில் நடக்கும் சமூக அரசியல் நிகழ்வுகளையும் வரலாறு, பண்பாடு, வாழ்வியல், இலக்கியம், ஆவணப்படுத்தல் சார்ந்த பல்வேறு விடயங்களையும் தமிழ்ச் சமூகத்தின் உரையாடற் பரப்புக்குள் கொண்டுவந்து கொண்டிருக்கின்றது.
வாகசர்களதும் அறிவுஜீவிகளதும் விமர்சனங்களையும் கருத்துகளையும் உள்வாங்கிப் பயணிக்க வேண்டியது பொறுப்புள்ள ஊடகம் ஒன்றின் கடமை என்பதை நன்றாகப் புரிந்துகொண்டுள்ள தாய்வீடு, அந்த நோக்குடன் 'தாய்வீடு இதழ் உரையாடலும் விமர்சனமும் – 2024' எனும் சந்திப்பை எதிர்வரும் 25.02.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு, இல.128, டேவிட் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள 'கலைத்தூது அழகியல் கல்லூரி' அரங்கில் நடத்தவுள்ளது.







சிறுகதையொன்றின் கருவும் களமும் காலமும் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு படைப்பாளரின் மனம் செல்லும் வழியும் மொழியும் , அவரது எழுத்தின் ஊடாக வெளிப்படுகின்ற விதமே அப்படைப்பின் மேலான வாசகரது ஈடுபாட்டை உறுதி செய்கிறது. இலக்கியத்தின் எந்த ரூபத்திலும் எழுத்தாளரின் வெளிப்பாட்டு மொழிதான் வெற்றியைப் பெருமளவில் தீர்மானிக்கிறது. 








குழந்தைகளை அடிப்பது கொடூர வன்முறைச் செயல். காலத்திற்கும் குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. சக குழந்தை அடிவாங்குவதைக் கையறுநிலையில் பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தை யும் மனரீதியாக பாதிப்படையும் என்று பல உளவியல் ஆராய்ச்சிகள் எடுத்துரைக்கின்றன.
புதிதாய் பிறந்த வருடத்தின் ஆரம்பநாளில் பூமராங் எனும் காலாண்டு மின்னிதழ் வெளிவந்திருக்கிறது. அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வெளியீடாக வந்திருக்கும் இவ்விதழ், முதற்பார்வையிலேயே எமது கவனத்தை ஈர்த்துக் கொள்கிறது. அட்டை வடிவமைப்பு இதழை ஆவலோடு புரட்ட வைக்கிறது. 

(நான் காதல் என்றேன், அவள் டேற்ரிங் என்றாள்.


அண்மையில் நடந்த நிகழ்வுகளில் இரண்டு விடயங்கள், முக்கியமானவையாக காணப்படுகின்றன:
கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை நான் வதியும் புறநகரத்திலிருந்து மெல்பன் நோக்கி பயணத்தை தொடங்கிய வேளையில், சிட்னியிலிருந்து இலக்கிய நண்பரும் வானொலி ஊடகருமான கானா. பிரபா தொலைபேசியில் தொடர்புகொண்டு, நண்பர் கலாமணி மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தியை பகிர்ந்துகொண்டபோது அதிர்ந்துவிட்டேன். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 02 ஆம், 03 ஆம் திகதிகளில் எனது சில பொழுதுகள் வடமராட்சியில் அவருடன் கரைந்தது. அவர் தனது இரண்டாவது புதல்வனின் வீட்டிலிருந்து, மூத்த புதல்வன் பரணீதரனின் இல்லத்தில் நடந்த எனது 'சினிமா: பார்த்ததும் கேட்டதும்' புதிய நூலின் ( ஜீவநதி வெளியீடு ) வெளியீட்டு அரங்கிற்கும் வருகை தந்தார்.