
நேற்று
மளிகைக்கடைக்குச் சென்றிருந்தேன்.
இன்று
மனைவியுடன் நோயாளர் பகுதிக்குச் சென்றுவந்தேன்.
நாளை
உடற்கூறுகளை கணினியில் கணிக்கும்
மருத்துவக்கூடத்துச் செல்லும்படியாகும்.
சலிப்பேதுமின்றி கூடவே வந்தாள் மனைவி.
அவ்வப்போது எனது கொதிநிலையை
எப்படியோ சமாளித்து யாவருக்கும் மனிதனாக
நடமாட வைத்திருந்தாள்.
புரையோடிய நோய் தாக்கியதில்
அவளுக்கு வருத்தம் அதிகமாகவே இருந்தது.
காட்டிக்கொள்ளவேயில்லை.
விரைவில் இறந்துவிடலாம் என்றறிந்தும்
புன்னகைத்தபடியே கூடவருவாள்.
அப்படித்தான்
மரியா என்கிற பெண்ணும் வருவதுண்டு..
கூட வருபவன் கணவனா காதலனா என்றறியவில்லை..
பேசியதில்லை.
புன்னகையே நட்புமாக்கியது.அவ்வளவுதான்.
அவள் இன்று இறந்துவிட்டதாக
மருத்துவச்சி சொல்லிப்போனாள்.
இன்று அவள்...
நாளை...?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









