பதிவுகள் முகப்பு

அ.ந.க.வின் மலையக இலக்கிய மற்றும் அரசியல் பங்களிப்பு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
14 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அ.ந.கந்தசாமியின் 'நாயினும் கடையர்', 'காளிமுத்து வந்த கதை'  ஆகிய கதைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். கிடைக்கவில்லை. 'நாயினும் கடையர்' வீரகேசரியிலும், 'காளிமுத்து வந்த கதை' தேசாபிமானியிலும் வெளிவந்ததாக அறிகின்றேன். உங்களுக்கு அவை பற்றிய தகவல்கள் தெரிந்தால் அறியத்தாருங்கள். இவற்றை வைத்திருப்பவர்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இக்கதைகளை வாசித்தவர்கள் அவை பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.  இவை மலையகத்தமிழ் மக்களைப் பற்றியவை

அ.ந.கந்தசாமி மறைவதற்கு முன்னர் 'கழனி வெள்ளம்' என்னுமொரு நாவலையும் எழுதி  வைத்திருந்தார். அதுவும் மலையகத் தமிழ் மக்களைப் பற்றியது. அது எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது. அதனை அவர் 83 இனக்கலவரத்தில் இழந்து விட்டார். அவரும் அந்நாவல் பற்றிய கருத்துகள் எதனையும் பதிவு செய்திருக்காததால் அதன் கதைச்சுருக்கம் பற்றியும் அறிய முடியவில்லை. அது பற்றியும் அறிந்தவர்கள் தமது கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அ.ந.க வீரகேசரியில் முதன் முதலாகத் தொழிற் சங்கம் ஒன்றினைத் ஸ்தாபித்து தொழிலாளர் உரிமைக்காகப் பாடுபட்டவர்’ என்று தனது ”ஈழத்துச் சிறுகதை மணிகள்’ நூலில் குறிப்பிடுவார் எழுத்தாளர் செம்பியன் செல்வன்.

இது பற்றிய அந்தனி ஜீவாவின் ‘சாகாத இலக்கியத்தின் சரித்திரன் நாயகன்’ ”வீரகேசரி’ ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் அச்சகத் தொழிலாளர்கள் படும் துன்பத்தைக் கண்டு மனம் நொந்தார். அவர்களின் நலனில் அக்கறை கொண்டார். பொதுவுடமைக் கருத்துகளில் ஊறிப்போயிருந்த அ.ந.க. அச்சகத் தொழிலாளர்களுக்காகப் போராடத் தயங்கவில்லை. அதனால் அச்சக முதலாளிகளின் வெறுப்பினைச் சம்பாதித்துக் கொண்டார். அதனால் வீரகேசரியிலிருந்து விலக்கப் பட்டார்.” என்று பதிவு செய்யும்.

மேலும் படிக்க ...

நாவில்லா உபதேசிகள்: காலனிய யாழ்ப்பாணத்தில் சிறுபுத்தகக் கலாசாரமும் சமயக் கருத்தாடலும்! (பகுதி ஒன்று) - கலாநிதி செல்லத்துரை சுதர்சன் -

விவரங்கள்
- கலாநிதி செல்லத்துரை சுதர்சன் -
ஆய்வு
14 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தரும் தமிழ்ப் பேராசிரியருமான சு. வித்தியானந்தன் அவர்களின் நினைவாக 17.11.2022 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் நிகழ்த்திய நினைவுப் பேருரையின் எழுத்துவடிவமே இக்கட்டுரை. இக்கட்டுரையாசிரியர் முனைவர் செல்லத்துரை சுதர்சன் - சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம். -


அறிமுகம்

பருத்தித்துறைச் சந்தையில் இருந்த புளியமரம் ஒன்றின் கதை சுவாரசியமானது. வரலாற்று நூல்களில் பதிவான அந்தப் புளியமரத்தின் கதையைக் கூறுவதோடு, இந்தக் கட்டுரையை ஆரம்பிப்பது பொருத்தம் என எண்ணுகிறேன். 1548 இல் சவேரியார் என்னும் பெயருடைய கத்தோலிக்க மதகுரு யாழ்ப்பாணம் வந்து, சங்கிலி அரசனைச் சந்தித்த பின்னர், பருத்தித்துறை வழியாகத் திரும்பிச் சென்றபொழுது, இந்தப் புளியமர நிழலில் நின்று சமயப் பிரசங்கம் செய்தார் என்ற செவிவழிக் கதையோடு இதன் புகழ் பரவ ஆரம்பிக்கிறது. ஒல்லாந்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த பால்டியஸ் (Baldaeus) என்ற புரட்டஸ்தாந்து மதகுரு, 1658 இல் நான்கு புறமும் சடைவிரித்துப் பரந்த, கடலோரக் காற்று இதமாகத் தழுவிய, இந்தப் புளியமர நிழலில் நின்று வேதாகம சுவிஷேசத்தைப் பிரசங்கம் செய்து மக்களைச் சுவீகரித்தார். இந்த வரலாற்றுச் செய்தி புளியமரத்தின் புகழை மேலும் ஓங்கச் செய்தது. எவ்வாறெனில், இது பால்டியஸ் செய்த முதல் பிரசங்கம் மட்டுமன்றி, யாழ்ப்பாணத்தில் புரட்டஸ்தாந்து சமயத்தின் முதல் பிரங்கமாகவும், இந்தப் புளியமர நிழலில் நிகழ்த்திய முதலாவது பிரசங்கமாகவும் வரலாற்று எழுத்துகளில் பதிவுபெற்றுள்ளது. இதன் பின்னர், தென்னிந்தியாவின் தரங்கம் பாடி மிஷனைச் சேர்ந்தவரும் புகழ்பெற்ற மிஷனரியுமாகிய பிரடெரிக் வார்ச் என்பார், 1760 இல் இந்தப் புளியமர நிழலில் நின்று, கிறிஸ்தவப் பிரசாரம் செய்து சென்றார் என்பதும் எழுத்துமூல வரலாறு. (வேலுப்பிள்ளை, சி.டி. 1984:25-26). முன்னர் குறிப்பிட்ட பால்டியஸ் என்பார், தெல்லிப்பளையிலிருந்து பலகாலம் கிறிஸ்தவத்தைப் பரப்பியும், ‘கொறமண்டலும் இலங்கையும்’ எனும் வரலாற்று நூலை எழுதியுமிருந்த காலத்தில்தான், புளியமர நிழலிலே, கடலோரக் காற்றில் கலந்த அவரது பிரசங்கம், அவ்வாறு கலவாதிருக்க, அச்செழுத்துக்களை வேண்டியிருந்தது! முதன் முதலில் தமிழ் அட்சரங்களை ஐரோப்பாவில் அச்சிடுவதற்குக் காரண கர்த்தாவான பால்டியஸ் என்பவரால், அவர் முதலில் நின்று பிரசங்கித்த புளியமரம், ‘பால்டியஸ் புளியமரம்’ (வேலுப்பிள்ளை, சி.டி. 1984:25-26) என்ற பெருமையையும் சூடிக்கொண்டது.

மேலும் படிக்க ...

சிறுகதை: குட்டிநாயும் அவனும்! - சு. கருணாநிதி -

விவரங்கள்
- சு. கருணாநிதி -
சிறுகதை
14 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சந்திரன் பஸ்சால் இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தான் வீதியின் பெயரைக் காணவில்லை. சந்தியிலிருந்து பெரியவீதியால் நடந்து திரும்பி உள்ளே போகும் சிறு வீதியாயிருக்கலாம் அதுதான் பெயர் கண்ணிற் படவில்லை போலும். கைத்தொலைபேசியை எடுத்து மகன் சொன்னதின்படி கூகுளினுள் நுழைந்து மப்பைப் போட்டு அந்த மூதாட்டி கொடுத்த முகவரியை பதிந்து தேடினான். இடதுபக்கம் திரும்பு நட... முதலாவதுவலது திரும்பு,, நட... கூகிளுக்குள்ளிருந்து பேசும் பெண் குட்டியின் குரல் கரம்பற்றி வழி நடத்த நடந்தான். குட்டிநாய் புதிய இடத்திற்கு வந்திருந்ததால் அது குதூகலத்தோடு துள்ளிக்குதித்து அங்குமிங்குமாய் இடம் வலமாய் இழுத்து அலைக்கழித்துக் கொண்டிருந்தது. டேய் மணி... இஞ்சாலவா...  டேய்.சக்... குரலுயர்த்தி கழுத்துச்சங்கிலியை இழுத்துக்குறுக்கி காலடிக்குள் கொணர்ந்தான்.

ஒரு சந்தியிலிருந்து பிரியும் ஒழுங்கையில் நாட்டியிருந்த பெயர்ப்பலகையை உற்றுப்பார்த்தான் "நாய் பயிற்சியகம்" என எழுதப்பட்டிருந்த வாசகம் நம்பிக்களித்தது. ஓகே கண்டுபிடிச்சாச்சு நிமிர்ந்து நடையை விரைவுபடுத்தினான்.

இப்பிடித்தான் முப்பது மூன்று வருடங்களுக்கு முன்பு யேர்மனியிலிருந்த காலத்தில் ஒருகிராமப்புறத்தில் அவன் தோட்டவேலை தேடிச்சென்ற பாதையில் "நாய்ப்பண்ணை" என்ற பெயர்ப்பலகைப் பார்த்து அடகடவுளே நாய்களிற்கும் பண்ணையிருக்கா இந்தநாட்டில, பிரமித்து வியந்திருந்தான் அப்போது.  இப்போ நாய்ப்பள்ளிக்கூடத்தைக்கண்டு அதிர்ச்சியடைந்திருக்கின்றான்.

விதம்விதமான நாய்களின் படங்களைப்போட்டு விளங்கப்படுத்தி நாய் பயிற்சியகம் என எழுதப்பட்டிருந்த அறிவித்தல்ப் பலகையைக்குக்கீழேயிருந்த கதவை தள்ளித்திறப்பதா இழுத்துத்திறப்பதா. தள்ளியும் இழுத்தும் பார்த்தான். திறபட்டது. தள்ளும்போது திறபட்டா இழுக்கும்போது திறபட்டதா தெரியாது திறபட்டதே போதுமானதாகவிருந்தது. மனம் பதட்டபட்டுக்கொண்டிருந்தது. எப்படிக்கதைப்பது எதிலிருந்து தொடங்குவது பக்கத்து வீட்டுப்பெண்மணி கூறியதையும் மகன் சொல்லிக்கொடுத்ததையும் கூட்டிச்சேர்க்கையில் தெரிந்தவார்த்தைகளாகவே இருந்தன.எப்பிடியிருந்தாலும் நாய்க்குட்டிக்கு தன்னிலும்பார்க்க பிரெஞ்சு விளங்கும் என்ற திடம் அவனுக்குள் உற்சாகமளித்தது.

மேலும் படிக்க ...

விடுதலைக்குள் விடுகதை! - தம்பா -

விவரங்கள்
- தம்பா -
கவிதை
14 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆக்கிரமிப்பின் அங்கீகாரமும்  
அழிவின் மூர்க்கமும்
முடிசூடிக் கொண்ட யுத்த நுகத்தடியில்,
உறவின் இழப்பும்
இழப்பின் நினைவுகளை அழித்த
இனத்தின் மேலாதிக்கம்
இறுமாப்புக் கொள்ள,
நினைவுகளின் மீதான வன்முறை
உலக நுண்ணுயிருக்குமான
உரிமையை இழந்து விட்ட வேட்கை
உலகின் தெருக்களெங்கும்
கட்டுடைத்த கவனயீர்ப்பு
சுயமானத்தை பிரகடனபடுத்தி கொள்கிறது.

மேலும் படிக்க ...

பேராசிரியர் சு. பசுபதி அவர்களின் சங்கச் சுரங்கம்-3 நூலுக்கான அணிந்துரை! - பேராசிரியர் கலாநிதி நா.சுப்பிரமணியன் -

விவரங்கள்
- பேராசிரியர் கலாநிதி நா.சுப்பிரமணியன் -
கலாநிதி நா.சுப்பிரமணியன் பக்கம்
14 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடாவிலே ரொறன்ரோவை மையப்படுத்திய வாழ்க்கைச் சூழலிலே எனக்கும் எனது துணைவியார் கௌசல்யாவுக்கும் கிடைத்த கெழுதகை நண்பர்கள் சிலரில் மிக முக்கியமான ஒருவர் பேராசிரியர் சுப்பராயன் பசுபதி அவர்கள். அறிவியல் துறைசார் கல்வியாளரான அவர் தமிழ் மொழி, இலக்கியம், கலைகள் முதலான பண்பாட்டுத் துறைகளிலும் ஆழ்ந்த புலமை கொண்டவராவார். அவ்வாறான பண்பாட்டுத் துறைகள்சார் புலமை அம்சங்களை ஆய்வரங்குகள் ஊடாகவும் வலைப்பூக்கள் வழியாகவும் சமகால அறிவுலகுக்கு அவர் வாரிவழங்கி வருகிறார்.

இவ்வாறான அவருடைய ஆளுமையம்சங்கள் அவர்மீது எமக்கு மிகப்பெரிய மரியாதை உணர்வைத் தோற்றுவித்ததோடு அவரை எமக்கு நெருக்கமானவராகவும் ஆக்கின. நாம் இயங்கி நிற்கும் இயல், இசை ஆகியனசார் கல்வித்துறைகளில் அவ்வப்போது எமக்கெழும் ஐயங்களை யெல்லாம் அவரிடம் தெளிவுபெற்று வருகிறோம். அவ்வகையில் அவருக்கும் எமக்கும் இடையிலான உறவானது நட்பு என்பதான பொதுநிலையை விட மேலானதாகும். எமது நம்பிக்கைக்குரிய வழிகாட்டி யாகவும் ஆலோசகராகவும் கூட அவர் திகழ்ந்துவருபவர்.

இத்தகு பெருமதிப்புக்குரிய பேராசிரியர் அவர்கள் தமது ’சங்கச்சுரங்கம்-3’ என்ற தலைப்பிலான இந்நூலாக்கத்துக்கு அணிந்துரை வழங்குமாறு என்னைக் கேட்டுக்கொண்டமை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. ஒரு கல்வியாளனுக்குக் கிடைக்கக் கூடிய அதியுயர் அங்கீகாரமாக இதனை நான் கருதுகிறேன் அவ்வகையில் முதலில் பேராசிரியரவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் படிக்க ...

வரலாற்றுச் சிறுகதை: சதியாலே சிதைந்த விதி! - (தமிழகத்து) நெல்லை - வீரவநல்லுர் ., ஸ்ரீராம் விக்னேஷ் -

விவரங்கள்
- (தமிழகத்து) நெல்லை - வீரவநல்லுர் ., ஸ்ரீராம் விக்னேஷ் -
சிறுகதை
13 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வரலாற்றில் நிஜப் பாத்திரங்கள் :

ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன். (கண்டியின் கடைசித் தமிழ் மன்னன்)
பிலிமத்லாவ. (கண்டி அரசின் மகா மந்திரி)
எகிலப்பொல. (பிலிமத்லாவவின் மருகன். கண்டி அரசில் மந்திரி பதவி வகித்தவன்.)
பிரடரிக் நோத், தோமஸ் மெயிற்லண்ட், ரொபேட் பிரவுண்ரிக். (இலங்கையில் அடுத்தடுத்து ஆள்பதியாக இருந்தவர்கள்.)
டேவி (1809ல் கண்டிமீது படையெடுத்த பிரித்தானியப் படைக்கு தலைவன்.)-

சிறுகதைக்காகப் புனையப்பட்ட பாத்திரங்கள் :
1.மாலினி.
2.(சித்த வைத்தியன்) மாலினியின் காதலன். கண்டி அரசுப் படையில் ஒரு வீரன். (முக்கியமாக : இக்கதையின் நாயகன். கதையை நகர்த்திச் செல்பவன்.)

வரலாற்றுப் பின்னணி (நடந்த உண்மை):

இலங்கையில் அந்நிய ஏகாதிபத்தியத்திடம் பிடிபடாது, நின்ற கடைசி ராஜ்ஜியம் மலையகத்தைத் தன்னகமாகக் கொண்ட கண்டி ராஜ்ஜியமே. மன்னன் பெயர் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன்.(இயற்பெயர் – கண்ணுச்சாமி).  ஏற்கனவே கண்டி மன்னனாக இருந்த ராஜாதி ராஜசிங்கன் வாரிசு இல்லாமல் காலமானபோது, மன்னனாக வருவதற்கு மந்திரி பிலிமத்லாவ முயற்சிக்கின்றார். மக்களின் எதிர்ப்பினால் முடியாதுபோகவே, தனது பேச்சுக்கு கட்டுப்படக்கூடியவன் ஒருவனை மன்னனாக்க முயற்சித்து, இறந்த மன்னரின் நெருங்கிய உறவினனான கண்ணுச்சாமியை (மதுரையிலிருந்து) கூட்டிவந்து, ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் என்னும் பெயரில் மன்னனாக்குகின்றார். மந்திரியின் உள்நோக்கத்தை தெரிந்துகொண்ட மன்னன், மந்திரி விசயத்தில் எச்சரிக்கை கொள்கின்றார். புரிந்துகொண்ட மந்திரி பிலிமத்லாவ குறுக்குவழியில் சதிசெய்து, ஆட்சியை கைப்பற்றும் நோக்கோடு பிரித்தானியர் உதவியை நாடுகின்றார்.

கண்டியை கைப்பற்றி, தன்னை மன்னனாக்கும்படியும், தானே கப்பம் செலுத்தும் சிற்றரசனாக இருந்து, ஆட்சிபுரிவதாகவும் ஆசை காட்டி வேண்டுகின்றார். கண்டியரசுமீது பிரித்தானிய அரசு போர் தொடுக்கும்படியான சூழலை உருவாக்குகின்றார். இரண்டு தடவைகள் முயற்சித்த பிரித்தானிய படைகள் தோல்வியை தழுவுகின்றன. கண்டியின் படைகள் வலிமையும், மக்களின் ராஜபக்தியும் மண்ணைக் காக்கின்றன, பிலிமத்லாவ சிரச்சேதம் செய்து கொல்லப்படுகின்றார். பின் நாட்களில், மன்னனின் போக்குகள் மாறி, கொடுங்கோலனாக மாறுகின்றார். மக்கள் எதிர்ப்பு வலுக்கின்றது. 10.02.1815ல், ஆங்கிலேயரின் படையெடுப்பு நிகழ்கின்றது. அவர்களிடம் எந்த எதிர்ப்புமின்றி, மக்கள் வரவேற்று அரண்மனைக்கு வழிகாட்டி வைக்கின்றனர். மன்னர் கைதாகின்றார். குடும்பத்தோடு வேலூர் சிறைக்கு அனுப்பப்படுகின்றார்.

மேலும் படிக்க ...

தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, விழுப்புரம் தமிழாய்வுத்துறை & E.S. கலை மற்றும் அறிவியற் கல்லூரி இணைந்து நடத்தும் பன்னாட்டு கருத்தரங்கம்!

விவரங்கள்
- தகவல்: முனைவர் V..மணிகண்டன் -
நிகழ்வுகள்
10 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

சிந்தனைக் களம் - நாதஸ்வர இசைமரபு!

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
10 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

நூல் அறிமுகம்: நினைத்ததை முடித்த எஸ்.ரி.ஆரின் 'எண்ணம் போல் வாழ்வு' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
09 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'எஸ்.ரி.ஆர் (சி.தியாகராஜா)  - நினைத்ததை முடித்தவர்' நூல் எனக்கு நேற்று கிடைத்தது. அதற்காக எஸ்.ரி.ஆர் அவர்களின் புதல்விகளிலொருவரான திருமதி விஜிதா கேதீஸ்வரநாதனுக்கு நன்றி. நூல் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வெளியாகியுள்ளது. நூலின் ஆக்கங்களை விஜிதா கேதீஸ்வரநாதனும், 'தமிழ்த் தேசியப் பசுமை இயக்க'த் தலைவரும், சூழலியலாளரும், நண்பருமான பொ.ஐங்கரநேசனும் தொகுத்துள்ளார்கள்.

எஸ்.ரி.ஆர் பற்றிய இந்நினைவு மலர் பல வகைகளில் முக்கியத்துவம் மிக்கது. நூல் இரு பகுதிகளாகப் பிரிக்கப்படுள்ளது. முதற் பகுதியில் கலை, இலக்கியும், சமூக மற்றும் அரசியல் ஆளுமைகள் பலரின் எஸ்.ரி.ஆர் பற்றிய நினைவுகள் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன. பொ.ஐங்கரநேசன், கம்பவாரிதி ஜெயராஜ், மறவன்புலவு க.சச்சிதானந்தன், வீ.ஆனந்தசங்கரி, மாவை சோ.சேனாதிராசா, டாக்டர் வி.ஜி.சந்தோஷம், நவரத்தினம் கிரிதரன், கலோபூஷணம் ராசையா பீதாம்பரம்,  மாலி, சங்கர், தேசமானுய வீ.ஶ்ரீசக்திவேல், வே.கந்தசாமி, செ.இராகவன், சி.கந்தசாமி, தம்பு துரைராஜா, தம்பி ஐயா தேவசாஸ், அனந்த பாலகிட்ணர் 7 எஸ். ராஜேந்திரன் செட்டியார் ஆகியோரின் நனவிடை தோய்தல்கள் நூலிலுள்ளன.

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கின்றோம்: முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் எழுதிய பெண் நூறு - பெண் எனும் நான் நூல்கள் சொல்லும் செய்திகள் ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
08 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மார்ச் 08 : அனைத்துலக பெண்கள் தினம் !

“வாழ்க்கை சவால்களால் நிறைந்துள்ளது. வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்கள், சில நேரங்களில் வலி நிரம்பியவையாக உள்ளன. சிலநேரம் அப்பாடங்கள் நாம் வளர வாய்ப்பளிக்கின்றன. அவை சவால்கள் போலத் தோன்றினாலும்கூட, அவை சாதனையாக மாற வல்லவை என்பதை மறுப்பதற்கில்லை. வாய்ப்புகள் எப்போதும் வருவதில்லை. என்னால் செய்யமுடியும் என்று முன்வராமல், யாராவது நம்மைத் தேர்ந்தெடுத்து வாய்ப்பைத் தட்டில் வைத்து தருவார்கள் என எதிர்பார்ப்பதும் வாய்ப்புகள் வரும்போது, நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்வதும் முட்டாள்தனம்“  மேற்சொன்ன வரிகளுடன் தொடங்குகிறது, முனைவர் சந்திரிக்கா சுப்பிரமணியன் எழுதியிருக்கும் பெண் நூறு என்ற நூல். ஒரு பெண்ணாக, பெண்களுக்கென்றே சந்திரிக்கா இதனை எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. இக்கருத்து ஆண்களுக்கும் பொருந்தும்.

கடந்த 2021 ஆம் ஆண்டு இதே மார்ச் மாதம், இதே 08 ஆம் திகதி ஒரு மேல் நிலைப்பள்ளியில் பெண்கள் தினத்துக்காக சந்திரிக்கா பேச அழைக்கப்பட்டிருக்கிறார். ஒரு பெண்ணாக தான் சந்தித்த அனுபவங்களை அன்று பேசியிருக்கிறார். அதற்கு சிறந்த வரவேற்பு கிட்டியிருக்கிறது. அப்போதே அவரது மனதில் தோன்றிய தலைப்பு: Challenge the challenges. வீடு திரும்பியதும் தனது முகநூலில் இந்தத் தலைப்பில் தொடர்ந்து வாழ்வியல் அனுபவம் சார்ந்து நூறு நாட்கள் நூறு பதிவுகளை எழுதியிருக்கிறார். அதற்கும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பிட்ட அந்த 2021 ஆம் ஆண்டே அவற்றை தொகுத்து நூலுருவாக்கியிருக்கிறார். என்னிடம் முகநூல் கணக்கு இல்லை. அதனால், அவரது குறிப்பிட்ட இந்த பதிவுகளை படிக்கும் வாய்ப்பும் எனக்கு கிட்டவில்லை.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: “பேராசிரியர் சு. பசுபதி அவர்களின் இலக்கிய ஆளுமை - பல்கோணப்பார்வை”

விவரங்கள்
- ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -
நிகழ்வுகள்
08 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (22) - அத்தியாயம் இருபத்தியிரண்டு: ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
07 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் இருபத்தியிரண்டு: ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)!

"என்ன  கண்ணா ஆழ்ந்த சிந்தனை. எல்லாம் என்னைப்பற்றித்தானே?" இவ்விதம் கூறியவாறே  வழக்கம்போல் கண்களைச் சிமிட்டியவாறே வந்து தோளணைத்தாள் மனோரஞ்சிதம். அவளுடலின் மென்மையில் ஒருகணம் நெஞ்சிழகியது.

"கண்ணம்மா, உன்னைப்பற்றி நினைப்பதற்கு நானுன்னை மறந்திருக்க வேண்டும்.ஆனால் நீதான் என் சிந்தையெங்கும்  எந்நேரமும் வியாபித்து, கவிந்து கிடக்கின்றாயேயடி. எப்படி உன்னை நினைப்பேன்? "

வழக்கமான கேள்விதான். வழக்கமான பதில்தான். இருந்தாலும் இப்பதில் மனோரஞ்சிதத்துக்குத்  திருப்தியையும், மகிழ்ச்சியையும் ஒருங்கே தந்தன என்பதை அவளது முகபாவமே காட்டியது.

"அப்போ, வேறெதைப்பற்றித்தான் நினைத்துக்கொண்டிருந்தாய் கண்ணா?  வழக்கம்போல் ஆகாயம் , பிரபஞ்சம், இருப்பு, காலவெளி இப்படி எதைப்பற்றித்தானே நினைத்துக்கொண்டிருப்பாய். அப்படித்தானே கண்ணா?"

"கண்ணம்மா சொன்னால் பிழையாக எதுதானிருக்கும்? இல்லையா கண்ணம்மா?"

மேலும் படிக்க ...

என் நட்பின் ஆழ்கடலே! - ம.ஆச்சின் -

விவரங்கள்
- ம.ஆச்சின் -
கவிதை
07 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம்!

என் நட்பின் ஆழ்கடலே!
நதியே! பூங்காற்றென்னும் தோழியே!
நினைவை மீட்டெழுப்பும் நட்புறவே!
பெண்ணே! நட்பின் அறனே!
நட்பு வானத்தில் எங்கள்
நினைவுகளை பரப்பிய அழகே!

மேலும் படிக்க ...

சிறுகதை: ஜன்னிகெ - முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -

விவரங்கள்
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -
சிறுகதை
05 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1

அளவில்லாத ‘எம்மெ’ அவரையின் இளங்கொழுந்துகளை உண்டிருந்த அந்த எருமைக்கு நிற்காமல் கழிந்துகொண்டிருந்தது. அது எவ்வளவோ அடக்க முயன்றது போலும். பயனில்லை. அதன் கட்டுப்பாட்டையும்மீறி விரிந்த குதம் இடைவிடாது கக்கிக்கொண்டிருந்தது.

அதன் கழிசலில் எழுந்த நாற்றமோ குடலைப் பிரட்டியது. இன்னும் நேரம் தாழ்த்தாமல் அதை சலசலத்து ஓடும் ‘ஜோனி’ ஆற்றிற்கு ஓட்டிச் செல்லவேண்டும். அருகிலேயே ‘தாட்டமொக்கெ’ ஆறு இருந்தலும் இதற்கு ஜோனிதான் சிறந்தது. மண்டிகிடக்கும் புதரிலிருந்து ஓடிவரும் ஜோனியின் நீரிற்கு ஆதியிலிருந்து பல மூலிகைகள் பரிச்சயம்.

உவர்ப்பிற்காய் ஆங்காங்கே பரவியிருந்த பிங்கசப் பாறைகளை வெள்ளைப்படிந்த தன் நாவால் நக்கிக்கொண்டிருந்த அவ்வெருமையை அவசர அவசரமாக ஓட்டிச் சென்றான் மாதன். அந்த அவசரம் அதற்கும் புரிந்திருந்தது. எனினும், அதன் அசமந்த பார்வையில் மேலும் இளஞ்கொழுந்துகளை உண்ணும் எண்ணமே மிஞ்சியிருந்தது.

கோக்கைப் பிடித்து சலிப்புடன் தள்ளினான். சிறிது தூரத்திலேயே மீண்டும் நின்றுக்கொண்டது. ‘அன்னோடைக்குச்’ செல்லும் அந்த ஒற்றையடிப் பாதைக்குக்கீழே ஒரு சால் தள்ளி பிஞ்சு விட்டிருந்த பச்சைப் பட்டாணித் தோட்டத்தைக் கண்டு தலையைத் தூக்கி தன் ஆர்வத்தைக் காட்டியது. தன் பற்கள் தெரியும்படி வாயை அசைத்துக்கொண்டே தோட்டத்தையும், அவனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தது. மீண்டும் அதன் கோக்கினைப் பிடித்து அவன் வேகமாகத் தள்ளினான். அது கழிந்துகொண்டே ஜோனியை நோக்கி ஓடியது.

சலசலத்து ஓடும் ஜோனியைத் தொட்டு வணங்கி, அதனை அதில் இறக்கினான். அந்நொடிக்குக் காத்திருந்ததுபோல, அவ்வாற்றையே உரிஞ்சித் தீர்த்துவிடும் வேட்கை அதற்கு. அது நீரை உரிஞ்சியது. அதன் உஷ்ணகாற்றுப்பட்டு மேலெழும்பும் ஆற்றுநீரில் ஆகாயத்தின் சில்லுகள் மிதந்தன.

மேலும் படிக்க ...

புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி வழங்கும் மருத்துவர் சியாமளா நடேசன் தன்னார்வத் தொண்டு நிறுவனம் கண்டியில் அங்குரார்ப்பணம்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
04 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையில் புற்றுநோய்ச் சிகிச்சைக்கு தேவைப்படும் உதவிகளை ஏழை மக்களுக்கு வழங்கும் நோக்கத்துடன், அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் மருத்துவர் சியாமளா நடேசன், தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதன் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 26 ஆம் திகதி கண்டி, ரீஜன்னர் விடுதியில் நடைபெற்றது. குறிப்பிட்ட புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி வழங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் இணையத்தளத்தை, மகப்பேற்று மருத்துவ நிபுணர் இந்தர்ஜித் சமரசிங்க  தொடக்கி வைத்தார். பேராதனை மருத்துவ, பல் மருத்துவ,   மற்றும் மிருக மருத்துவ பீட முதல்வர்களுடன் பல புற்றுநோய்ச் சிகிச்சை மருத்துவர்களும் இந்நிகழ்ச்சியில் சமுகமளித்திருந்திருந்தனர்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் அ.ந.கந்தசாமி ஓர் அறிமுகம்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
ஆய்வு
04 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் ஜோர்ஜ்.இ.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் 'அபத்தம்' இதழின் மூன்றாவது இதழில் வெளியாகியுள்ள வ.ந.கிரிதரனின் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி பற்றிய விரிவானதோர் அறிமுகக் கட்டுரை. 'அபத்தம்' இதழை வாசிக்க -  


எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் நினைவு தினம் பெப்ருவரி 14. அவர் மறைந்து 55 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தருணத்தில்  இலக்கியப் புலமை காரணமாக அறிஞர் அ.ந.கந்தசாமி என்றழைக்கப்பட்ட  அவரது கலை, இலக்கியப் பங்களிப்பை நினைவு கூர்வதும் பொருத்தமானதே. சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், இலக்கியத்திறனாய்வு, மொழிபெயர்ப்பு என இலங்கை மற்றும் உலகத் தமிழ்  இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் காத்திரமான பங்களிப்பை நல்கியவர் அ.ந.க. அத்துடன் ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முக்கியமான ஒருவராகவும் கருதப்படுபவர்.  தன் குறுகிய வாழ்வில் தனக்குப் பின்னால்  எழுத்தாளர் பரம்பரையையே உருவாக்கிச் சென்றவர். அத்துடன் சமூக, அரசியற் செயற்பாட்டாளராகவும் விளங்கியவர்.   நாற்பதுகளில் வில்லூன்றி மயான சாதிப் படுகொலை பற்றி முதற்தடவையாகத் துணிச்சலுடன் குரல் கொடுத்த கவிஞர் அ.ந.கந்தசாமியே.

தமிழ் இலக்கியத்துக்குக் காத்திரமான பங்களிப்பை நல்கிய அ.ந.க.வை விரிவாக இனம் காண்பது முக்கியம்.  அவரது பன்முகப் பார்வைகளையும் வெளிக்கொணரும் வரையில்  அவரது படைப்புகள் முழுமையாக சேகரிக்கப்பட்டுத் தொகுப்புகளாக வெளிவருவதும் அவசியம்.    இது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல அந்த மகத்தான எழுத்துக் கலைஞனின் தன்னலமற்ற , இலட்சிய வேட்கை மிக்க இலக்கியப்பணிக்கு  செய்யப்பட வேண்டிய  கைம்மாறுமாகும். இதுவரையில் அவரது இரு படைப்புகள்  நூலுருப் பெற்றுள்ளன. அதுவும் அவரது இறுதிக் காலத்தில் தமிழகத்தில் வெளிவந்த ‘வெற்றியின் இரகசியங்கள்’. அடுத்தது ‘மதமாற்றம்’ மதமாற்றம் கூடத் தனிப்பட்ட ஒருவரின் நிதியுதவியின் மூலம் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்  வெளியிட்ட நூல்.  'பதிவுகள்.காம்' பதிப்பில் அமேசன் - கிண்டில் மின்னூல்களாக  மனக்கண் (நாவல்) ,  எதிர்காலச்சித்தன் பாடல் (கவிதைத்தொகுப்பு) &  நான் ஏன் எழுதுகிறேன்? (கட்டுரைத் தொகுப்பு) ஆகிய படைப்புகள் வெளிவந்துள்ளன.

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானம் - 'கவிதை அரங்கேறும் நேரம்' - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
04 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'அந்த 7 நாட்கள்' திரைப்படத்தில் இடம் பெறும் இப்பாடல் எனக்குப் பிடித்த  பாடகர் ஜெயச்சந்திரனின் இன்னுமொரு பாடல்.  மெல்லிசை மன்னரின் இசையில் , எஸ்.ஜானகியுடன் இணைந்து பாடும் இப்பாடலை எழுதியவர் கவிஞர் வாலியோ, கவிஞர் கண்ணதாசனோ அல்லர். எனக்கு அறிமுகமில்லாத கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம். இப்பாடலை அடிக்கடி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவையில் அந்திப்பொழுதுகளில் எண்பதுகளில் கேட்டு மகிழ்ந்திருக்கின்றேன். ஆறு மணியுடன் தமிழ்ச்சேவையை நிறுத்தி விடும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அப்பொழுதுதான் அதனை இரவு பத்து மணி வரையென்று நினைக்கின்றேன் நீடித்திருந்தது.   'பொக்கற் சைஸ் டிரான்சிஸ்டர் ரேடியோ'வில் அச்சேவையில்  ஒலிக்கும் பாடல்களை எப்பொழுதும் கேட்டுக் கொண்டிருந்த காலகட்டம். இப்பாடலை எழுதிய கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம் வேறு ஏதாவது பாடல்கள் எழுதியிருக்கின்றாரா?

மேலும் படிக்க ...

மாத்தளை வடிவேலன்: மலையக இலக்கியத்தின் எரிநட்சத்திரம்! - மு.நித்தியானந்தன் லண்டன் -

விவரங்கள்
- மு.நித்தியானந்தன் லண்டன் -
நூல் அறிமுகம்
04 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

"மாத்தளை எங்கள் மலையகத்தின் தலைவாயில் தமிழகக் கரையிலிருந்து பயங்கரப்படகுகள் மூலம் கடலைக்கடந்து, கொடிய கானகங்களுக்கிடையே கால்நடையாய் உயிர்தப்பி வந்ததற்காக நன்றி கூறும் முதல் தெய்வம் எங்கள் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன். மலையக மக்களின் வரலாறு மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வரலாற்றுடன் ஆரம்பமாகிறது” என்கிறார் மலையகத்தின் கல்விமான் அமரர் இர.சிவலிங்கம்.

இந்த மாத்தளை மண்ணை தன் சுவாசத்தில், மூச்சில், ரத்தநாளங்களில், சிந்தனையில் ஏற்றிப் பெருமிதம் கொள்பவர் மாத்தளை வடிவேலன். மாத்தளைப் பிராந்தியத்தில் அவர் காலடிகள் படாத இடமேயில்லை. அங்குலம் அங்குலமாக அந்தப்பிரதேசத்தை அளந்து வைத்திருப்பவர் அவர்; தெரிந்து வைத்திருப்பவர்;  வடிவேலன் கிட்டத்தட்ட எழுபத்தைந்து ஆண்டுகளாக அந்த மண்ணோடு போராடி வந்திருக்கிறார்.அந்த மண்ணில் நடந்து முடிந்த அரசியல் மாற்றங்கள், எழுச்சிகள், புரட்சிகர இயக்கங்கள், அடுத்தடுத்து தொடர்ந்து இடம்பெற்ற இனவன்முறைகள், அவற்றிற்கு எந்த நேரத்திலும் பலியாகும் மக்களாக குறிவைக்கப்பட்ட மலையக மக்கள், உண்ண உணவின்றி தமிழ்த் தொழிலாளர்கள் அந்த மண்ணை விட்டே வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட அவலம், தோட்டங்கள் அரச உடைமை ஆக்கப்பட்டபின், மாத்தளையின் பெருந்தோட்டங்களின்  பொலிவே சிதைந்து போன கோலம், இன சௌஜன்யம் குலைந்து போன கொடுமை -  இத்தனையையும் அவர் கண்கூடாக்கண்டிருக்கிறார். தன் நெஞ்சிலே தணல் கொண்டு திரிந்திருக்கிறார். தோல்வியையும் துயரத்தையும் சுமந்து கொண்டிருக்கிறார். மாத்தளை வீதிகளிலே அணிவகுத்துச் சென்ற ஊர்வலங்களில் அவர் முன்னணியில் நின்றிருக்கிறார். அரசியல் மேடைகளில் அவர் துணிவோடு முழங்கியிருக்கிறார்.

பொதுத் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார். தோல்விகளைக் கண்டிருக்கிறார், துவண்டு போனதில்லை. மாத்தளையில் உயிரோட்டம் மிக்க இலக்கியப் பாதையைச் செப்பனிடுவதில் அவர் மூலகாரணராயிருந்திருக்கிறார். மாத்தளையில் கே.முருகேசப்பிள்ளையும் , ஷெய்கு கலைமானுல் காதிரியும் ஏற்றிவைத்த உன்னத இலக்கியச்சுடரை முன்னேந்திச் சென்ற பெருமகனாக மாத்தளை வடிவேலன் திகழ்கிறார்.இர.சிவலிங்கம், எஸ்.திருச்செந்தூரன்,பாரதியின் பேத்தி விஜயபாரதி, அவரது கணவர் சுந்தரராஜன், கு.அழகிரிசாமி ஆகிய இலக்கிய ஆளுமைகளுக்கு மாத்தளையில் செங்கம்பளம் விரித்து சிறப்புச் செய்த நிகழ்வுகளில் ஆர்வத்தோடு கலந்து கொண்ட இளைஞராக வடிவேலன் திகழ்ந்திருக்கிறார். மாத்தளை கார்த்திகேசு, மலரன்பன், அல் -அஸ{மத், கதிர்வேல், பூபாலன், சி.கா.முத்து, ஆ .ராஜலிங்கம், பழனிவேல், கே.கோவிந்தராஜ், எச்.எச்.விக்ரமசிங்க, மாத்தளை சோமு என்று பேரணியின் அணைப்புடன் செயற்பட்டவர் வடிவேலன். மாத்தளையின்  இலக்கியப் பாரம்பரியத்தை முன்னெடுத்த முக்கிய ஒரு கண்ணியாக வடிவேலன் இலக்கிய வரலாற்றுக்குரியவராகிறார்.

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானம்: காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி. - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
04 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

என் அபிமானப் பாடகர்களில் ஒருவரான பாடகர் ஜெயச்சந்திரனின் மென்மையாக இதயங்களை வருடிச் செல்லும்  குரலில் ஒரு பாடல்.  இன்று , மார்ச் 3, அவரது பிறந்த நாள்.

நான் கேட்ட இவரது குரலில் ஒலித்த முதற் பாடல்  'அலைகள்' திரைப்படத்தில் வரும் 'பொன்னென்ன பூவென்ன கண்ணே' பாடல்தான். நடிகர் விஸ்ணுவர்த்தனுக்காகப் பாடியிருப்பார். யாழ் ராஜா திரையரங்கில் பார்த்த திரைப்படம் 'அலைகள்'.

ஆனால் இன்று இவர் நினைவாகக்  கேட்கும்  பாடல் 'வைதேகி காத்திருந்தாள்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள, கவிஞர் வாலியின் வரிகளை, இசைஞானி இளையராஜாவின் இசை தாங்கி வரும் 'காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி' பாடல். நடிகர் விஜயகாந்துக்காகப்  பாடிய  பாடல். விஜயகாந்தின் திரைப்பட வாழ்க்கையில் முக்கிய மைல் கல் 'வைதேகி காத்திருந்தாள்'. https://www.youtube.com/watch?v=bihKCX6nDQA

இசை, வரிகள், குரல் & நடிப்பு அனைத்தும் ஒன்றிணைந்து நெஞ்சை வாட்டி ஈர்க்கும் பாடல்களிலொன்று இந்தப்பாடல்.

மேலும் படிக்க ...

கலை, இலக்கியத் திறனாய்வாளர் மு.நித்தியானந்தன் நூல் வெளியீடும் பவளவிழாவும்!

விவரங்கள்
- தகவல்: நித்தியானந்தன் -
நிகழ்வுகள்
03 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

சிறுகதை : பாடம் - கே.எஸ்.சுதாகர் -

விவரங்கள்
- கே.எஸ்.சுதாகர் -
சிறுகதை
02 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சூரியகுமாருக்கு நாளை காலை பத்திற்கும் பன்னிரண்டுக்கும் இடைப்பட்ட சுப வேளையில் திருமண எழுத்து நடைபெற இருந்தது.

சூரியகுமாரின் அக்காவும் அத்தானும் மகள் ஆரபியும் நான்கு நாட்கள் முன்பதாகவே வீட்டிற்கு வந்துவிட்டார்கள். அக்கா தான் வீட்டிற்கு மூத்தவள். அதற்கடுத்து வரிசைக்கிரமமாக ஐந்து ஆண்கள். சூரியகுமார் கடைக்குட்டி.

அப்பா துரை சாய்வனைக்கதிரைக்குள் ஒருக்களித்துச் சரிந்தபடி எல்லாவற்றையும் அவதானித்தபடி இருக்கின்றார். அவரால் முன்னையைப்போல ஓடியாடி வேலைகள் செய்ய முடிவதில்லை. அவர் தனது மகளுக்கும், மூத்த மருமகளுக்கும் துரோகம் இழைத்துவிட்டதாக நினைத்து இன்று மனம் மறுகுகின்றார். மூத்தவள் இன்று எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாகக் கணவருடன் குடும்பம் நடத்துகின்றாள் என எண்ணுகின்றார்.

மறந்துவிடக்கூடிய சாதாரண நிகழ்வா அது! அவரின் மனம் அங்கே தாவுகின்றது.

•

பள்ளியால் வந்த மகள் புத்தகப்பொதியைத் தொப்பென்று போட்டுவிட்டு, வீட்டு வளவிற்குள் வேலிக்கரையோரமாக ஓடுகின்றாள். அவளது அவசரத்தை அவதானித்த அப்பா, வீட்டைவிட்டு வெளியேறி வீதிக்கு வந்து எட்டிப் பார்க்கின்றார். வாட்டசாட்டமான இளைஞன் ஒருவன் கிடுகுவேலியுடன் கதை பேசியபடி நிற்கின்றான். துரையைக் கண்டவுடன் வேலிக்குள் எதையோ மறைத்துவிட்டு மாயமாக அந்த இடத்தைவிட்டு நழுவிவிட்டான். வேலிக்குள் சொருகியிருந்த கடிதத்தை எடுத்து வந்தார் துரை. மகளைக் கூப்பிட்டார்.

மேலும் படிக்க ...

அலை மோதும் காதலே..! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
சிறுகதை
02 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வெளியே பனி கொட்டிக் கொண்டிருந்தது. பனிப்புகாரில் பாதை தெளிவாகத் தெரியவில்லை.  பனிமூட்டத்தில் போகிறபாதை தெளிவாகத் தெரியாவிட்டாலும் செல்லவேண்டிய இடத்தை அடைவதில் சுகி குறியாக இருந்தாள்.

மனசு தவிப்பதைவிட இந்தக் குளிரிலும் உடம்பு தகிப்பதே பெரிய வேதனையாக இருந்தது. எப்படியும் மனதில் இருப்பதை சுபாவிடம் கொட்டிவிட வேண்டும் என்ற ஆதங்கத்தோடுதான் அக்காவின் வீடு தேடி வந்திருந்தாள்.

‘ஏன்டி இத்தனை நாளாய் ஊமையாய் இருந்தாய்?’ சுபா தங்கையை அதட்டினாள்.

கட்டிலில் உட்கார்ந்திருந்த சுகி கண்களைத் துடைத்துக் கொண்டு அக்காவை நிமிர்ந்து பார்த்தாள்.

‘எப்படி அக்கா இதை வெளியே சொல்லுறது?’

‘இப்பமட்டும் என்னவாம், வெளிக்கிட்டு என்னோட வா, போவம்.’

‘எங்கேயக்கா..?’

‘டாக்டரிட்டைதான்!’

‘வேண்டாமக்கா, நான் எங்கேயும் வரவில்லை.’

‘குடும்ப வைத்தியரிட்டைப் போனியா?’

‘போனேன்..!’

‘என்னவாம்?’

‘எல்லாம் செக் பண்ணிப் பாத்தாச்சு!’ சுகி விம்மினாள்.

‘என்ன சொன்னவர் எண்டு சொல்லிப்போட்டு அழேன்’

அவள் சற்று நேரம் மௌனம் காத்தாள். இதற்கு என்ன பதில் சொல்வது? எப்படிச் சொல்வது?

‘உன்னிலை ஏதாவது பிழையா?’ என்றாள் சுபா

அவள் பதில் சொல்லாமல் தலை குனிந்திருந்தாள்.

‘பலோப்பின் குழாயில ஏதாவது தடையா..?.’

‘இல்லை’ என்று மறுத்தாள்.

‘கருப்பையில் ஏதாவது கோளாறா?’

அதற்கும் மறுத்தாள்.

‘நல்ல ஆரோக்கியமாகத் தானே இருக்கிறாய், அப்போ என்னதான் பிரச்சனை என்று சொல்லித் தொலையேன்’ சுபா பொறுமை இழந்து கத்தினாள்.

மேலும் படிக்க ...

மலையக மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதிய உதவி! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
01 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 35 வருடகாலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ( 1988 – 2023 ) ஏற்பாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டில் வாழும் ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் நிதிக்கொடுப்பனவு இவ்வாண்டும் அண்மையில் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க ...

ஒரு கடிதம் - ராஜா தியேட்டரும் மல்லிகை காரியாலயமும்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
01 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

            - எழுத்தாளர் டொமினிக் ஜீவா -

அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம்.  தங்கள் பதிவுகளில் எஸ்.ரி. ஆர். பற்றியும் ஜோர்ஜ் குருஷ்ஷேவ் பற்றியும் நீங்கள் எழுதியிருந்த குறிப்புகளை படித்தேன். அருமை.  ஜோர்ஜ் குருஷ்ஷேவை 2007 இல் கனடா  வந்த சமயம் ஒரு சந்திப்பில் கண்டு பேசியிருக்கின்றேன். அவரது முகத்தில் தவழும் மந்திரப்  புன்னகையையும் நீங்கள் குறிப்பிட்டிருந்தது சிறப்பு. அவருக்கு பெப்ரவரி 27 பிறந்த தினம் என தங்கள்  மூலம் அறிந்து வாழ்த்துகின்றேன்.

எஸ். ரி. ஆர். பற்றிய உங்கள் பதிவும் நன்று. 1963 இல்  எனது மாணவப் பருவத்தில்  அந்த ராஜா தியேட்டரில் The longest day திரைப்படம் பார்த்தேன். பின்னாளில்,  நீங்கள் குறிப்பிடும் அந்த ஒழுங்கையில் பல நாட்கள் நடந்திருக்கின்றேன். மல்லிகை காரியாலயத்தில் தங்கள் காலடித் தடத்தை பதித்த எத்தனையோ எழுத்தாளர்கள் அந்த  முகப்பினை மறந்திருக்மாட்டார்கள்.  அந்த கட்டிடமும் எறிகணை வீச்சினால் சேதமுற்றது. அதன் பிறகு  ஆசிரியர் டொமினிக்ஜீவா கொழும்பிலிருந்து மல்லிகையை வெளியிட்டார்.

மேலும் படிக்க ...

கிளிநொச்சி இலக்கியச் சந்திப்பில் மூன்று எழுத்தாளர்களுக்கு பரிசும் சான்றிதழும்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
01 மார்ச் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும், விக்ரோரியா மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட அமைப்பான அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், இங்கே வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. ஆய்வு: கம்பராமாயணத்தில் விலங்குகள்! - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி (சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை.-
  2. மணிமேகலையில் இராசமாதேவியின் நடத்தை ஆளுமை! - முனைவா் பா.பொன்னி, உதவிப்பேராசிாியா் மற்றும் துறைத்தலைவா், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் ,இராசரத்தினம் மகளிா் கல்லூாி( தன்னாட்சி ) -
  3. 'கியூறியஸ் ஜி' ஜோர்ஜ் இ.குருஷேவ்! - வ.ந.கிரிதரன் -
  4. நூல் அறிமுகம்: எஸ்.ரி.ஆர் - நினைத்ததை முடித்தவர்! - நவரத்தினம் கிரிதரன் -
  5. மானுட மற்றும் சமூக விஞ்ஞானத்துறைப் பயிற்சிப்பட்டறை மற்றும் ஆய்வில் கலந்துகொள்ள உதவி விரிவுரையாளர் ஆர். பென் டில்கரன்' (R.Ben Dilharan) இங்கிலாந்து பயணம்! - வ.ந.கி -
  6. 'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே' - ஊர்க்குருவி -
  7. பவளவிழாக்காணும் பல்துறை ஆற்றல் மிக்க இலக்கியப் பேராசிரியர் க. பஞ்சாங்கம்! திறனாய்வில் புதிய எல்லைகளை கண்டடைந்தவர் ! புதுச்சேரியில் இம்மாதம் 26 ஆம் திகதி நிகழ்ச்சி ! - முருகபூபதி -
  8. கவிதை: முறிந்த பனை! - வ.ந.கிரிதரன் -
  9. பாரதியின் 'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!' - ஊர்க்குருவி -
  10. 'என்னுடைய' தில்லையாற்றங்கரை' என்ற நாவலின் கதை திருடப்பட்டு 'அயலி' என்ற பெயரில் 'வெப் சீரி'சாக தமிழ் நாட்டில் அண்மையில் வந்திருக்கிறது. - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -
  11. அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசுபெற்ற எழுத்தாளர்களுக்கு கிளிநொச்சியில் பரிசு வழங்கும் நிகழ்வு!
  12. மனம் செயலாகும்போது உருக்கொள்ளும் எதுவும் ஏதோ ஒரு வகையில் காலத்தில் நிற்கும் - கருணாகரன் -
  13. பேரவையின் வணக்கம் வட அமெரிக்கா - இயல் 2023!
  14. முதல் சந்திப்பு கலை, இலக்கிய, மனித உரிமை ஆர்வலர் தன்னார்வத் தொண்டர் லயனல் போப்பகே ! - முருகபூபதி -
பக்கம் 54 / 104
  • முதல்
  • முந்தைய
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • அடுத்த
  • கடைசி