பதிவுகள் முகப்பு

யுவான் வாங் (Yuwan Wang-5) சீனக்கப்பலின் இலங்கை வருகை , பிராந்திய மற்றும் பூகோள அரசியற் பின்னணி பற்றியதோர் அவதானிப்பு! (5 & 6) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
13 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

5

சென்ற அரசு அகன்ற பின், பொறுப்புகளை ஏற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசை “புதிய போத்தலில் பழைய கள்ளு” என்று எதிர்பாளர்களால் வர்ணணைக்கு உட்படுத்தப்பட்டாலும், “நகர்வுகளில்”  அவர் இன்னமும் புதிய கள்ளாகவே தென்படுவதை விமர்சகர்கள் சுட்டிகாட்டாமல் இல்லை. இது காலம் வரை, இலங்கையின் நெருக்கடிக்கு, உண்மையான காரணம், இலங்கை தனது கடன் முறிகளை திறந்த சந்தையில் விற்றமையே என்பது குறித்து, அவர் இதுவரை வாய்திறவாமல் இருப்பதே அவரது சாமர்த்தியத்தை காட்டுவதாய் இருக்கிறது எனலாம்.  51-57 கோடி பில்லியன் டாலரை வெளிநாட்டு கடனாய் (வெளிநாட்டு மொத்த கடன்களில் 47%) இருக்க தலையாய காரணமாய் அமைவது இக்கடன் முறிகளை விற்றதுவே - இதுவே, இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளுக்கு மூலகாரணம் என்பது குறித்து இதுவரை அவர் ஒரு வார்த்தையும் கூறினார் இல்லை.  இருந்தும், “சீன கடன்பொறி”, அல்லது “இந்திய கடன்பொறி” என்ற கதை மேலெழும்பும் போதெல்லாம் மௌனம் காப்பது, அல்லது அவற்றை கண்டும் காணாதது போல் இருப்பது இவரது உயரிய பண்புகளில் ஒன்றாகின்றது.  பிராந்திய-உலக வல்லரசுகளை மோதவிட்டு, அதில் வர கூடிய லாப-நட்டங்களை வளைத்து போட்டுக்கொள்ளும் ஓர் அணுகுமுறையானது ஏற்கனவே இலங்கைக்கு அறிமுகமான, புளிப்புத்தட்டிப்போன ஓர் நடைமுறைதான். எனினும், ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அமெரிக்க சார்பும், பெருந்தேசிய உணர்வும் இந்நடைமுறைக்கு புது மெருகு சேர்ப்பவையே என்று கூறினால் அது மிகையாகாது.

உதாரணமாக, சில மாதங்களின் முன்னால் இடம்பெற்ற  WION நேர்காணலின் போதுகூட, இத்தனை நூல்களில், உங்களின் இதயத்திற்கு நெருக்கமான நூல் எது என்று ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது, ஒரு நொடியும் தாமதிக்காமல் “அது மகாவம்சம் தான்” என கூறி நின்றார். இதுபோலவே, அவரது வீடு, எதிர்ப்பு போராட்டகாரர்களால் அண்மையில் எரியூட்டப்பட்டு விட்டபின்னர், அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.  தனது வீட்டில் 25 புத்தர் சிலைகள் இருந்தன என்றும், அவை போராட்டகாரர்களால் தற்போது எரியூட்டப்பட்டுவிட்ட பின்னர், இப்போது எஞ்சியிருப்பது ஒன்றே ஒன்றுதான் என்றும், இதுபோலவே தனது வீட்டில் இருந்த 200 பண்டை காலத்து ஓவியங்கள் எரியூட்டப்பட்டு விட்டன என்றும் அவர் தன் உரையின் போது கூறி நின்றார்.  இச்சூழலில் இருக்ககூடிய, எந்தவொரு தலைவரும், தான் பெற்ற நட்டங்களை எடுத்துக்கூறி மக்களிடமிருந்து பரிதாப அலைகளை பெறமுயற்சித்திருப்பார்களே அன்றி வேறு எதனையும் செய்திருக்க துணிந்திருக்க மாட்டார்கள்.   இந்த வேறுபாடு, அவரது மனோ திடத்தையும், திட்டம் வகுக்கும் அவரது அளப்பரிய ஆற்றலையுமே பறைசாற்றுவதாய் உள்ளது என ஆய்வாளர்கள் புகழ்ந்துள்ளனர்.  இக்கண்ணோட்டத்தில் பார்க்குமிடத்து, எதிர்ப்பலைகளை படைபலம் கொண்டு அழிப்பது அல்லது ஒடுக்குவது, மேலும் இருக்கும் எதிர்ப்பலை சூழலை தகுந்த மாற்றீடால் மாற்றியமைக்கப்படுவது, போன்ற தேவைகளை அவர் அறியாமல் இருக்க முடியாது என நம்பலாம்.

மேலும் படிக்க ...

ஆய்வு: குழந்தைகளுக்கான நம்பிக்கை மருத்துவத்தில் தோஷம் நோய் - முனைவர் த. ரெஜித்குமார், கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேதாரண்யம். -

விவரங்கள்
- முனைவர் த. ரெஜித்குமார், கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேதாரண்யம். -
ஆய்வு
13 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

    குழந்தைகளுக்கு நோய் வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதல் காரணம் தாயும் தந்தையும் ஆவர். மனப்பொருத்தமுடைய ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியுடன் கூடுகின்ற காலத்தில் குழந்தைபேறு கிடைக்கும்போது பலப்பல வியாதிகள் பெற்றோர்கள் செய்கின்ற தவறினால் தோன்றக் கூடும். பெற்றோருக்கு மேகம், சூலை, வெட்டை போன்ற நோய்கள் இருக்குமாயின் உடனே அந்நோய்களைக் குணமாக்கி விட வேண்டும். அந்நோய்களைக் கொண்ட தாய் கருக்கொண்டால் குழந்தைக்குச் சிவப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கொடிய சிவப்பு எனப்படும் சிவப்பாகிய சன்னி நோய் குழந்தைக்கு ஏற்பட்டால் குழந்தை இறந்துவிடவும் வாய்ப்பு உள்ளது. மேலும், மனக்கவலை, சத்தான உணவுப் பொருட்கள் இன்மை, அழுகை, உடலுறவு, பயணங்கள் அவற்றின் மூலம் தாய்க்குச் சூடு ஏற்பட்டு உடல் பாதிக்கப்பட்டால் குழந்தைக்குப் பலவித நோய்கள் உண்டாகின்றன. குழந்தைகளுக்கு நம்பிக்கையின் அடிப்படையில் சில மருத்துவமும் செய்கின்ற மரபு நாட்டுப்புற மக்களிடையே காணப்படுகிறது. இக்கட்டுரையானது நாட்டுப்புற குழந்தை மருத்துவத்தில் கையாளக்கூடிய நம்பிக்கை மருத்துவ முறைகளில் ஒன்றான தோச நோய் குறித்து எடுத்துரைப்பதாக அமைகிறது.

குழந்தை நோய்களைக் கண்டறியும் முறை

    நாட்டுப்புற மக்கள் இயல்பாக குழந்தைகளுக்கு நோய் ஏற்பட்டிருப்பதை அனுபவத்தின் வாயிலாக கூறுகின்ற மரபு உள்ளது. அவை,

1. இயல்பாய் இருக்கும் குழந்தை நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தால் உடல் உபாதைகள் ஏதோ நிகழ்ந்திருப்பதை உணரலாம்.
2. குழந்தையின் நெற்றிப்பொட்டைத் தொட்டுப் பார்க்கும்பொழுது அதிக உஷ்ணமாக இருக்கும்.
3. குழந்தையைத் தூக்கும்பொழுது இயல்பைவிட சற்று கனமாக இருக்கும்.
4. குழந்தையின் அடிவயிற்றைத் தொட்டுப் பார்க்கும்பொழுது சிறிது கடினமாக இருக்கும்.
5. சிறுநீர், மலம் நிறம் மாறி இருக்கும்.
6. நாக்கில் வெள்ளை நிறத்தில் மாவு படிந்து காணப்படும்.
7. மூக்கடைப்பு இருக்கும்.
8. உடல் களைப்பு காணப்படும்.

என்பனவற்றைக் கூறுகின்றனர்.

மேலும் படிக்க ...

ஆய்வு: பள்ளு இலக்கியத்தில்‌ உழவு - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி-II), குருநானக் கல்லூரி, சென்னை- 42 -

விவரங்கள்
- முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி-II), குருநானக் கல்லூரி, சென்னை- 42 -
ஆய்வு
13 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை
பள்ளு இலக்கியங்கள்‌ உழவியற்‌ செய்திகளைச்‌ சிறப்புறக்‌ கூறும்‌ இலக்கியம் பள்ளு இலக்கியங்கள்‌. இத்தகைய இலக்கியங்களில்‌ இன்றைய அறிவியலுக்குப்‌ பொருந்தும்‌ வகையில்‌ உழவியற்‌ செய்திகள்‌ பல சுவைபெற விளக்கப்பட்டுள்ளன.  பள்ளா்‌ வயல்களில்‌ உழவுத்‌ தொழில்கள்‌ செய்து வாழ்பவர்‌. பண்ணைக்காரனான நில உடைமையாளனிடம்‌ வயல்‌ வேலை செய்து வருபவர்‌. உழவுத்‌ தொழிலில்‌ ஒவ்வொரு கட்டத்திலும்‌ செய்யப்படும்‌ சடங்குகளுக்குப்‌ பள்ளர்களே அதிகாரிகளாக உள்ளனர்‌. வயலில்‌ உழுவதற்கு முதன்முதலாக பூட்டுவதற்குமுன்‌, மழை பெய்வதிலிருந்து, வயல்களில்‌ விளைந்து அறுவடையாகும்‌ நெல்லை அளப்பது வரைவுள்ள ஒவ்வொரு நிகழ்வும்‌ பள்ளர்களைச்‌ சுற்றியே அமைகின்றன.

உழவு
உழவுப்பணி பருவமழையை நம்பி நடந்தது. பருவமழை பொழிந்ததும்‌ உழவுப்பணிகள்‌ தொடங்கின. உழவுத்‌ தொடங்கும்‌ முன்னர்‌ நன் நிமித்தம்‌ பார்த்துத்‌ தொடங்கினர்‌. இதனை,

 சத்தமி புதன்சோதி தைதுலக்‌ கரணம்‌
தவறாத சுபயோகந்‌ தருபஞ்‌ சாங்கம்‌
மெத்தநன்‌ றெனப்பார்த்து மேலான வேதியர்கள்‌
மிக்கதுலா முகிழ்திதம்‌ விதித்தார்‌ இன்று
(புலியூர்க்கேசிகன்‌, முக்கூடற்‌ பள்ளு, பா-113)

மேலும் படிக்க ...

இளைய பல்லவன்' கருணாகரத் தொண்டைமான்! சாண்டில்யனின் புகழ்மிக்க வரலாற்று நாயகன்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
12 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- கடல்புறா நாவலின் முதல் அத்தியாயப் பக்கம். ஓவியர் - லதா -

எழுத்தாளர் சாண்டில்யனின் (இயற்பெயர்  பாஷ்யம்) .  மகாகவி பாரதியார் மறைந்த அதே செப்டம்பர் 11இல்தான் சாண்டில்யனும் மறைந்தார். பேராசிரியர் பசுபதி அவர்களின் 'பசுபதிவுகள்' வலைப்பதிவில் வெளியான சாண்டில்யனின் நினைவு நாட் பதிவின் மூலம் சாண்டில்யனின் நினைவு தினமும் செப்டெம்பர் 11 என்பதையறிந்தேன்.

மேலும் படிக்க ...

புத்தூக்கம் தரும் மருந்தாய் புவியதனில் திகழ்கின்றாய் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் ... அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் ... அவுஸ்திரேலியா -
கவிதை
11 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

செப்டம்பர் 11 பாரதியார் நினைவுதினம்!


முண்டாசுக் கவிஞனேநீ மூச்சுவிட்டால் கவிதைவரும்
பண்டார மாயிருந்து பலகவிதை தந்தாயே
தமிழ்வண்டாக நீயிருந்து தாகமெலாம் தீர்த்தாயே
உண்டாலே அமுதமென உன்கவிதை இருந்ததுவே

வறுமைத் தடாகத்தில் மலர்ந்திட்ட மாமலரே
தறிகெட்ட மனிதரை குறிபார்த்த மாகவியே
விடுதலைச் சிறகுகளை விரித்திட்ட பெருங்கவியே
வீழ்வேனா எனவுரைத்து வித்தானாய் புரட்சிக்கு

மடமைத் தனத்துக்கு மாலையிட்டார் மண்டியிட
அடிமைத் தளையிருந்தார் அலறியே ஓடிவிட
பொடிவைத்து பாட்டிசைத்து போக்கியே நின்றாயே
பொல்லாதார் வசையெல்லாம் பொசுங்கிவிடச் செய்தனையே  

மேலும் படிக்க ...

பாரதியாரின் கண்ணம்மாப் பாடல் - 'காற்று வெளியிடக் கண்ணம்மா!' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மகாகவி பாரதியாரின் கண்ணம்மாப் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த கவிதையிது. அவரது நினைவாக இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
மானுட உணர்வுகளில் காதல் உணர்வுகள் அற்புதமானவைு. ஏனென்றால் குடும்ப உறவுகள் தவிர்த்து முதல் முறையாக இன்னொருவருடன் உயிரும், உள்ளமும் கலந்து உறவாகும் உறவு , உணர்வு காதல். அவ்வகையில் அது மானுடரின் பருவ வளர்ச்சியில் முக்கியமானதொரு படி.
முதற்காதலோ, நிறைவேறிய காதலோ, நிறைவேறாத காதலோ, ஒரு தலைக் காதலோ அது எவ்வகையாகவிருப்பினும் அக்காதல் உணர்வுகள் மானுட வாழ்வில் முக்கியமானதோரிடத்தைப் பிடித்த உணர்வுகள் என்றால் அது மிகையான கூற்றல்ல. நான் கூறுவது தூய்மையான காதலுணர்வுகளை. அவ்வுணர்வுகளில் தன்னலம் இருக்காது. பழி வாங்கும் வெறி இருக்காது. தன் காதலுக்குரியவரின் மகிழ்ச்சி ஒன்றே நிறைந்திருக்கும். காதல் என்றதும் முதலில் நினைவுக்கு வரும் பாடல் 'கப்பலோட்டிய தமிழன்' திரைப்படத்தில் வரும் 'காற்று வெளியிடைக் கண்ணம்மா' பாடல்தான்.

கலை, இலக்கிய விமர்சகரும், கவிஞருமான எம்.ஏ.நுஃமான் 'மார்க்சியமும், இலக்கியத்திறனாய்வும்'  என்னும் நூலில் இக்கவிதை பற்றிப் பின்வருமாறு கூறுவார்:

மேலும் படிக்க ...

இன்று மகாகவி பாரதியார் நினைவு தினம்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று மகாகவி பாரதியார் நினைவு தினம்!

என்னைக் கவர்ந்த  தமிழ்க் கவிஞர்களில், எழுத்தாளர்களில் முதலிடத்திருப்பவர் மகாகவி பாரதியார். எப்பொழுதும் என் மேசையில் இவரது கவிதைகள் நூலிருக்கும்.  என் பால்யப்பருவத்திலேயே எனக்கு பாரதியார் அறிமுகமானதுக்குக் காரணம் என் தந்தையாரே. அப்பொழுதே பாரதியாரின்  முழுக்கவிதைகள் அடங்கிய தொகுப்பினை வாங்கித்தந்திருந்தார். அன்றிலிருந்து இன்று வரை பாரதியாரின் கவிதைகள் எனக்குப் பல் வகைகளிலும் துணையாக விளங்கி வருகின்றன.

பாரதியாரின் எழுத்திலுள்ள எளிமை,  அதன் ஆழத்திலுள்ள சிந்தனைத்தெளிவு, சோர்ந்திருக்கும் உள்ளங்களுக்குத் துடிப்பினை, நம்பிக்கையினை ஏற்படுத்தும் நேர்மறைப்போக்கு, பல்வகைச் சமூக, அரசியல், பொருளியல் அநீதிகளுக்கெதிராகக் குரல்  கொடுக்கும் புரட்சிகரத்தன்மை, இருப்பு பற்றிய சிந்தனைகள் , காதல், அன்பு போன்ற மானுட உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மை என்று கூறிக்கொண்டே செல்லலாம்.

பாரதி எப்பொழுதும் என் வாழ்க்கையின் வழிகாட்டியாகவே இருந்து வருகின்றான். அவன் எழுத்துகளற்ற இருப்பினை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவனது எழுத்துகள் என் உணர்வில்  பின்னிப் பிணைந்துள்ளன. எனக்குப் பிடித்த அவனது கவிதைகளில் இரண்டு:

இன்று புதிதாய்ப் பிறந்தோம்!

சென்றதினி மீளாது,மூடரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளையாடியின்புற் றிருந்து வாழ்வீர.
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

மேலும் படிக்க ...

எக்காலத்திற்குமான நீதியின்போக்கு அண்டனூர் சுராவின் தீவாந்தரம் ( நாவல் ) - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
10 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தீவாந்தரம் நாவலின் வடிவத்தைக் கூர்ந்து பார்க்கிறபோது என்  நாவல் 1098 ஞாபகத்திற்கு வந்தது. ஒரு சிறுமி சார்ந்த  கைதும் நடவடிக்கையும் பின்னால் அது சார்ந்த நீதிமன்ற விசாரணைகளும் பிறகு முடிவான தீர்ப்புகளும் அந்தச் சிறுமியின் வாழ்வு போக்குகளும் கொண்டதாக அந்த நாவலின் வடிவம் இருக்கும். அதுபோன்ற ஒரு வடிவத்தைத் தீவாந்தரம் நாவலில் கண்டேன். இதில் வ உ சி  அவர்களின் கைது நடவடிக்கை, அதன்பிறகு அவர் சார்ந்த விசாரணைகள், இறுதியாக அவர் மீது எடுக்கப்பட்ட இறுதி நடவடிக்கைகள், தீர்ப்பின் விளக்கங்கள் என்று நாவலின் போக்கு அமைந்து, என் நாவலின் வடிவ அம்சங்களைத் தீவாந்தரம்  ஞாபகத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.

 வ உ சி அவர்களின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான காலகட்டத்தைப் பிரதிபலிக்கிறது நாவல்.  தீவாந்தரம் என்ற தலைப்பே ஒரு வகையான தண்டனையை காண்பித்துவிடுகிறது. அந்தத் தண்டனை கைதுக்குப் பின்னால் அவர் மீது அமல்படுத்தப்படும் போதும் அதன் இடையில் ஏற்பட்ட இந்த நாவலில் முக்கியக் கதாபாத்திரங்கள் உரையாடலும் அல்லது நீதிமன்றங்கள் ஏற்படுத்தும் உரையாடலுமாக நாவல் நின்று பேசுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற தூத்துக்குடி வழக்கு விசாரணை அம்சங்கள் இந்த நாவலில் பல இடங்களில் ஒத்துப்போய் இந்த நாவலின் போக்கை ஒரு சமகால தன்மை உள்ளதாக கூட மாற்றி விடுகிறது அல்லது நூற்றைம்பது வருடங்களுக்கு முற்பட்ட ஒரு சரித்திர விஷயத்தைச் சமீபத்திய  சரித்திர அம்சங்களுடன் கலந்து தருவதில் நம்பகத்தன்மை என்பது பற்றிய ஒரு குழப்பமும் ஏற்படுகிறது. முந்தைய சரித்திர விஷயத்தை இது தேவையில்லாமல் குறுக்கிடுகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் புனைவில் எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்க்கலாம் என்பது விதியாக இருக்கிறது.  

மேலும் படிக்க ...

தற்கொலை - தடுப்பதற்கான முயற்சி! - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
ஶ்ரீரஞ்சனி
10 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

செப்ரெம்பர் 10, சர்வதேச தற்கொலைகள் தடுப்பு தினம்!

தப்பித்தலுடன் தொடர்பான ஒரு செயற்பாடே தற்கொலை எனலாம். தற்கொலை என்பது அந்த நேரத்திலான ஒரு முடிவாக இருப்பது மிகவும் அரிதாகும். பத்துப் பேரில் எட்டு பேர் தற்கொலை செய்துகொள்வதற்கான எண்ணம் இருக்கிறது என்பதைக் காட்டும் அறிகுறிகளைச் சிலருக்கோ அல்லது பலருக்கோ காட்டியிருப்பார்கள் என்கிறது ஆய்வு.மேலெழுந்தவாரியாகப் பார்த்தால்,தற்கொலை என்பது மனக்கிளர்ச்சியிலான ஒரு செயலாகத் தோன்றலாம், ஆனால் அது எழுந்தமானமானதொரு நிகழ்வல்ல, அது ஒரு செயல்முறை என்கின்றனர் ஆய்வாளர்கள்.   

தற்கொலையைப் பற்றிப் பேசுவதற்குப் பொதுவில் நாங்கள் எவருமே விரும்புவதில்லை. அத்துடன், எங்களுக்குத் தெரிந்தவர்கள் ஒருவரும் அந்த முடிவுக்கு ஒருபோதும் வரமாட்டார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம். ஆனால், எங்களுக்குத் தெரிந்தவர்களும் தற்கொலையைத் தெரிவு செய்துகொண்டுதான் இருக்கின்றனர். இருப்பினும், தற்கொலை ஒரு களங்கம் என்ற உணர்வு அல்லது அது அவமானம் தரும் ஒரு செயல் என்ற கருத்துப்பாடு எங்களைச் சங்கடப்படுத்துவதால் அதைப் பற்றி நாங்கள் அதிகம் கலந்துரையாடுவதில்லை. அதனால், ஒருவர் உணரும் வலி பற்றியோ அல்லது அவருக்குத் தேவையான உதவி பற்றியோ வெளிப்படையாகப் பேசுவதற்கான சந்தர்ப்பங்களை நாங்கள் இழந்துவிடுகின்றோம்.

தனது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரவேண்டுமென ஒருவர் முடிவெடுப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். உண்மையில், அந்தக் காரணங்கள் பற்றிய ஒருவரின் உணர்வுகள்தான், அந்தக் காரணங்களைவிட மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன. குறித்த வலியைத் தொடர்ந்து தாங்கமுடியாது அல்லது நிச்சயமற்ற வாழ்வைத் தொடரமுடியாது என்பதின் அடிப்படையில் எழும் நம்பிக்கையின்மை, கையலாகதன்மை மற்றும் விரக்தி போன்ற தீவிரமான உணர்வுகளால் தற்கொலைதான் தீர்வென முடிவெடுப்பவர்கள் ஆட்கொள்ளப்படுகிறார்கள். வேறு சிலருக்கு சில வகையான மனநோய்களின் தாக்கம் தற்கொலை செய்வதற்கான தூண்டல்களைக் கொடுக்கக்கூடும். அப்படியான தூண்டல்களை குரல்களாக அவர்கள் கேட்கக்கூடும், அல்லது விம்பங்களாகப் பார்க்கக்கூடும்.

மேலும் படிக்க ...

`முள்ளும் மலரும்’ திரைப்படம் – பிளாஷ்பேக்! - கே.எஸ்.சுதாகர் -

விவரங்கள்
- கே.எஸ்.சுதாகர் -
கலை
10 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முள்ளும் மலரும் திரைப்படம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆயினும் 1980 மட்டில் தான் எனக்கு அந்தப் படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. தெல்லிப்பழை துர்க்கா தியேட்டருக்கு அப்பொழுதுதான் முள்ளும் மலரும் வந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் மனதை ஒரு உலுப்பு உலுப்பி உறங்கவிடாமல் செய்த திரைப்படம் இது. இல்லாவிட்டால் துர்க்கா சினிமாத் தியேட்டரின் அருகேயிருந்த நூல்நிலையத்திற்கு ஒரு பைத்தியக்காரன் போல அடிக்கடி சென்றிருப்பேனா? நூல்நிலையத்தையும் தியேட்டரையும் பிரித்து நிற்கும் வேலிக்குள்ளால் பாய்ந்து வரும் பாடல்களையும், திரைக்கதையை நினைவூட்டும் இசைவெள்ளத்தையும் காது குடுத்துக் கேட்பதில் ஒரு அலாதி இன்பம் பிறக்கும். அடிக்கடி வேலிக்கருகே நின்றால் பைத்தியம் பிடித்துவிட்டதென ஆக்கள் நினைத்துவிடுவார்கள் என்பதற்காக இடையிடையே லைபிறறிக்குள் சென்று பேப்பரைப் புரட்டுவேன். ஆனால் மனம் திஜேட்டருக்குள் குதித்து நிற்கும். உறி அடிக்கும் காட்சி, விஞ் இயங்கும் காட்சி, உறக்கத்தில் இருக்கும் வள்ளிக்கு காளி மருதாணி இடும் காட்சி என இசைவெள்ளம் என்னை மீளவும் வெளியே கொண்டுவந்துவிடும். அது நடிகர்களின் தனித்தன்மை வாய்ந்த குரல், அவர்களின் தோற்றத்தை என் மனக்கண் முன் கொண்டுவந்துவிடும்.

`முள்ளும் மலரும்’ கல்கி இதழ் நடத்திய வெள்ளிவிழா நாவல் போட்டியில் உமாசந்திரன் எழுதி முதல் பரிசு பெற்ற நாவல். இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில் ரஜனிகாந்(காளியண்ணன்/திரைப்படத்தில் காளி), சரத்பாபு(குமரன்), ஷோபா(வள்ளி), படாபட் ஜெயலட்சுமி(மங்கா) போன்றோர் முன்னணிக் கதாபாத்திரமேற்று நடித்தார்கள். நாவலில் முனியாண்டி, மாயாண்டி, அங்காயி என்ற பாத்திரங்கள் வருகின்றன. திரைப்படத்தில் குழப்பம் வருவதைத் தவிர்க்கும் முகமாக முனியாண்டிக்கு முருகேசன் என்ற பெயர் குடுக்கப்பட்டுள்ளது. முருகேசனாக வெண்ணிறாடை மூர்த்தி நடித்திருப்பார்.  படத்தை பாலு மகேந்திராவின் கமராவும், இளையராஜாவின் இசையும் உச்சிக்கு எடுத்துச் சென்றன.

மேலும் படிக்க ...

மரணித்தும் மறையாத மகாராணி! - சக்தி சக்திதாசன் - இலண்டன் -

விவரங்கள்
- சக்தி சக்திதாசன் - இலண்டன் -
அரசியல்
09 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒரு நாடு ஸ்தம்பித்து போய்விட்டது என்பதை வெறும் கதைகளிலும், கட்டுரைகளிலுமே கண்டு வந்த எமக்கு அதன் தாத்பரியத்தைக் கண் முன்னால் காணும் நிலை இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது. நான் இங்கிலாந்துக்குள் காலடி வைத்து இப்போது 47 வருடங்கள் ஒன்பது மாதங்கள் ஆகின்றன. நான் காலடி வைத்த நாள் முதல் நேற்றுவரை இங்கிலாந்தில் மாற்றமின்றி நான் கண்ட ஒரேயொரு அடையாளம், ஒரேயொரு மனிதர் இங்கிலாந்தின் இரண்டாவது எலிசபெத் மகாராணியார் என்றால் அது மிகையில்லை. இவர் யார் ? இவர் இத்தகைய ஒரு இடத்தை இங்கிலாந்து மக்கள் மத்தியில் மட்டுமல்ல உலக மக்கள் மத்தியிலும் பெற்றிருக்கக் காரணம் என்ன ? இங்கிலாந்து மகாராணியார் எனும் பதவி ஒன்றினால் மட்டும் எமது மகாராணியார் இத்தகைய பெரு மதிப்பை உலகளாவிய ரீதியில் பெற்றிருக்க முடியுமா ? இக்கேள்விகளுக்கு விடைகாண முயலும்போதுதான் இவரின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. மகாராணி எனும் பதவியிலிருக்கும் போதும் மனிதத்துவத்தை இழக்காமல் கலாச்சார அடையாள விழுமியங்களைப் பாதுகாத்து வாழ்ந்த இவரின் அயராத சேவையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் படிக்க ...

யாழ் இந்துக் கல்லூரியின் அறிவித்தல்!

விவரங்கள்
- தகவல்; தனபாலசிங்கம் -
நிகழ்வுகள்
09 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வன்னி, கிழக்கு & மலையகப் பகுதிகளைச் சேர்ந்த ,  2024 க.பொ.த (உயர்தர விஞ்ஞானம்)  கற்கவுள்ள பொருளாதாரரீதியில் பின் தங்கிய  மாணவர்களுக்கான அனுமதி பற்றிய யாழ் இந்துக்கல்லூரியின் அறிவித்தல். விடுதி வசதியும் இலவசம்!

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல் - நூல்களைப் பேசுவோம்!

விவரங்கள்
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -
நிகழ்வுகள்
09 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

ஆய்வு: முல்லைப் பாட்டில் அகமும் புறமும் -- முனைவர் நா. சுமதி, உதவிப் பேராசிரியர்,,தமிழ்த்துறைத் தலைவர்,,சுவாமி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒரத்தூர், விழுப்புரம் -

விவரங்கள்
-- முனைவர் நா. சுமதி, உதவிப் பேராசிரியர்,,தமிழ்த்துறைத் தலைவர்,,சுவாமி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒரத்தூர், விழுப்புரம் -
ஆய்வு
07 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல குறைவான அடிகளைக் கொண்டு விளங்கினாலும் முல்லைப் பாட்டில் இல்லாத செய்திகளே இல்லை எனலாம். சங்க காலத்தில் வணிகத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களும் புலமையில் சிறந்து விளங்கினார்கள் என்பதை முல்லைப்பாட்டின் வழி காணலாம். “முல்லை சான்ற கற்பு” என்று கற்புடன் தொடர்புபடுத்திப் பேசப்படும் இத்திணையின் உரிப்பொருள் ‘இருத்தல்’ ஆகும். போர்க் காரணமாகவோ பொருள் தேடும் பொருட்டோ பிரிந்து சென்ற தலைவன் கார்காலத் தொடக்கத்திற்குள் வந்து விடுவதாகக் கூறி பிரிவான். அத்தலைவன் வரும் வரை ஆற்றியிருத்தல் தலைவியின் கடமையாகும். இதுவே முல்லைத் திணையின் சிறப்பாகப் போற்றப்படுகிறது.

நிலம், காலம், பொருள் ஆகிய இயற்கையின் அடிப்படையில் எழும் மனம் உணர்வை முல்லைப் பாட்டு எடுத்துக் கூறுகிறது. அகத்திணை ஒன்றினை முதன்மையாக் கொண்டு அதற்கு இயைபான புறத்திணையும் கொடுத்துப் பாடும் ஓர் அரிய நூலாக முல்லைப் பாட்டு விளங்குகின்றது. புறத்திணையான வஞ்சி முல்லை திணையோடு தொடுக்கப்பட்ட போதிலும்,

மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்
சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர் (தொல்.அகத்.நூ.5)

என்னும் அகநூல் மரபைப் பின்பற்றி, பாட்டுடைத்தலைவனின் இயற்பெயரைச் சுட்டிக் கூறாத அப்பொருள் சார்ந்த இலக்கியமாகவே இந்நூல் விளங்குகிறது. முதல், கரு, உரி ஆகியவற்றால் ஒன்றுக்கொன்று தொடர்புடைய முல்லை, வஞ்சி என்னும் இவ்விரண்டு திணைகளையும், நப்பூதனார் தம் முல்லைப் பாட்டில் முல்லை ஒழுக்கமே முதன்மை பெறுகின்றது என்கிறார்.

மேலும் படிக்க ...

சிந்தனைக்களம்: 'நாட்டிய மரபுசார் இசைப்பாடல்கள்'

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
07 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

யுவான் வாங் (Yuwan Wang-5) சீனக்கப்பலின் இலங்கை வருகை , பிராந்திய மற்றும் பூகோள அரசியற் பின்னணி பற்றியதோர் அவதானிப்பு! (3 & 4) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
06 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



3

அதாவது சர்வதேச நெருக்கடிகள், தனது உச்சத்தை தொட்டு, இழுப்பறி நிலைமைகள், யுத்த மேகங்களை உருவாக்கி வருகையில் இந்தியா போன்ற நாடுகளின், நடு நிலைமைத் தன்மை(?) பொருத்துக் கொள்ள முடியாததாகின்றது.

அதாவது, இலங்கையின் இராஜதந்திரத்தில், இலங்கைத் தமிழர் கேள்வியை, இந்தியாவிலிருந்து எப்படி கத்தரித்து விடுவது அல்லது எப்படி அந்நியப்படுத்தி விடுவது என்பது முதன்மை நடைமுறையாக இருப்பதை போலவே, ஒரு, ரஷ்ய-சீன கூட்டில் இருந்து இந்தியாவை விலகிச்செல்ல செய்வதும், அதனை தனது செல்வாக்கின் எல்லைகளுக்குள் கொணர்ந்து நிறுத்துவதுமே அமெரிக்காவின் ஆசியாவுக்;கான அடிப்படை இராஜதந்திரமுமாகின்றது.  இச்சூழலிலேயே, யுவான்வாங்-5 கப்பலின் வருகை என்பது, இவ்ராஜதந்திரத்தின், பல்வேறு தோற்றப்பாடுகளை உள்ளடக்கியதாக இருந்தது.

இக்கப்பல் வந்துசேர்ந்த ஓரிரு தினங்களின் முன்னரே இந்தியாவின், ட்ரோனியர் விமானம் இலங்கைக்கு வந்து சேர்ந்து விட்டது. இது இலங்கைக்கு வழங்கப்பட்ட பரிசா அல்லது பரிசு வடிவில் அமைந்துள்ள ட்ரோஜோன் குதிரையா என்பதெல்லாம் ஏற்கவே ஆய்வாளர்களால் சின்னாப்பின்னப்படுத்தப்பட்டு வாதிக்கப்பட்டுள்ளது. போதாதற்கு, கப்பலின் வருகையைத் தொடர்ந்து, இராமேஸ்வர கண்காணிப்பும் பயிற்சியும் தீவிரப்படுத்தப்பட்டது. (இது, இந்திய சிந்தனைகளையும் அதிருப்தியையும் அறிவிக்கும் ஒரு தோற்றப்பாடு என கூறப்படுகின்றது). ஆனால், இவையணைத்தும், ஓர் தோற்றப்பாடே ஆகும்.  உண்மையான அரசியல், ஆழமானது. மிக நுணுக்கமாக பயணிப்பதாய் இருந்தது.

கப்பலின் வருகையானது, இந்தியாவால் எதிர்க்கப்பட்டது என்பதும் அதனைத் தொடர்ந்து இலங்கை, கப்பலை தனது துறைமுகத்தில் தரிக்க மறுப்பு தெரிவித்தது என்றும், ஆனால் அம்மறுப்பை மீறி சீன கப்பலானது இலங்கையை நோக்கி பலவந்தமாக தன் பயணத்தை தொடர்ந்தது எனவும் பரவலாக கதை அடிப்படலாயிற்று.

மேலும் படிக்க ...

கனடா மகாஜனாக்கல்லூரி & நடேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர் சங்க ஒன்றுகூடல் - 2022 - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
06 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடாவில் இயங்கிவரும் மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களும், கல்லூரி நலன்விரும்பிகளும் சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவின்  மக்கோவான் - ஸ் ரீல் சந்திக்கு அருகே உள்ள பூங்காவில் ஒன்றுகூடிக் கொண்டாடினார்கள். கோவிட் - 19 காரணமாக இரண்டு வருடங்கள் தள்ளிப் போடப்பட்ட இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக இம்முறை நடைபெற்றது. கனடா தேசிய கீதம், தமிழ்வாழ்த்து, கல்லூரிக்கீதம், கொடிவணக்கம், மற்றும் எம்மைவிட்டுப் பிரிந்தோருக்கான அகவணக்கம் போன்றவற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதைத் தொடர்ந்து காலை உணவு வழங்கப்பட்டது. அதன்பின் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று மதிய உணவு வழங்கப்பட்டது.

மதிய உணவைத் தொடர்ந்து, சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்குமான ஓட்டப்போட்டி, பந்தெறிதல், கயிறு இழுத்தல், வேகநடை போன்ற பலவிதமான விளையாட்டுகளும் இடம் பெற்றன. அங்கத்தவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதன் மூலம் உளரீதியாகவும் ஒன்றுகூடி மகிழ்வதே இந்த நிகழ்வின் நோக்கமாக இருந்தது. நீண்ட நாட்களின்பின் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்வோடு உரையாட முடிந்தது. இந்த நிகழ்வில் பிரான்ஸ், நோர்வே, அமெரிக்கா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் இருந்தும் வந்திருந்த பழைய மாணவர்கள் சிலர் கலந்து கொண்டிருந்தனர். போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்றவர்களுக்கு மாலை 5:00 மணியளவில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களால் பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை 6:00 மணியளவில் நிகழ்வு நிறைவுபெற்றது.

மேலும் படிக்க ...

முருகபூபதியின் 'இலங்கையில் பாரதி' மதிப்பீடு – நடேசன் -

விவரங்கள்
– நடேசன் -
நூல் அறிமுகம்
06 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

எமது அண்டை நாடான பாரத தேசத்தில்  பிறந்த மூவர் நமது  இலங்கையில் தங்களது சிந்தனைகள் ,  செயல்களால் செல்வாக்கு செலுத்தினார்கள்.    அவர்களில் கௌதம புத்தர் முதன்மையானவர்.  அவர் இலங்கைக்கு வந்தாரோ,   இல்லையோ,  அவரது உபதேசங்கள்  இலங்கையில் தேர வாத பௌத்த சமயமாக இரண்டாயிரம் வருடங்கள் முன்னதாக ஆழமாக வேரூன்றியது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் மோகனதாஸ் கரம் காந்தி இலங்கைக்கு வந்ததுடன்,  அவரது அரசியல் கருத்து  போராட்ட வழி முறைகள்  இலங்கையில் செல்வாக்குச் செலுத்தியது. உண்ணாவிரதம்,   அகிம்சை  வழி,  கடையடைப்பு என  இங்கும் தமிழர்,  சிங்களவர் என  இரு இனத்தவரும்   அத்தகைய போராட்ட வடிவங்களை முன்னெடுத்தார்கள். ஆனால்,  இலங்கைக்கு வராதபோதிலும்  பட்டி தொட்டி எங்கும் தமிழ் பேசும் மக்களால் கொண்டாடப்படுபவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். மற்றைய இருவரிலும்  பார்க்க, இவர் ஒரு விடயத்தால் முக்கியத்துவமாகிறார்.

மேலும் படிக்க ...

சிறுகதை : வேலை - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
சிறுகதை
06 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒவ்வொரு மாதத்திலும் காயத்திரி தேவதையாகிப்  போன நாளில் பிள்ளையார் கோவிலுக்கு போய் வருவதை வழக்ககமாகக் கொண்டிருக்கிறான் . முகத்தில் மஞ்சள் பூசி கட்டிலில் படுத்திருந்ததை மறக்க முடியவில்லை . அன்று அவள் அதிகமாக சோர்ந்திருந்தது போல தெரிந்தது . நித்திரையிலிருந்து தானாக எழட்டும் என வீட்டை துப்பரவாக்குவதில் ஏடுபட்டான் .இடையிடையே வந்து எட்டிப் பார்த்துக் கொண்டுமிருந்தான் . எழுவதைக் காணவில்லை . வழக்கத்திற்கு மாறாக தூங்குறாளோ? ...புன்சிரிப்பு சந்தேகத்தை ஏற்படுத்த மூக்கில் கையை வைத்துப் பார்த்தான் . அனுங்கலையும் காணவில்லை .எப்படியும் அவளிடமிருந்து சிறு சத்தம் வந்து கொண்டிருக்கும் . மூச்சு நின்று விட்டதை உறுதிப்படுத்தவே சிறிது நேரம் எடுத்தது ." என்னடி ஒரேயடியாய் போய் விட்டாயா ? " இலங்கை ராணுவத்தின் முன் நிராயுதபாணியாய் எல்லாத்தையும் இழந்து கையறுயற்று   நிற்பது போல  ,   ஒரேயடியாய் தளர்ந்து போனான் . அவளை தூக்கி நிறுத்துகிற ஒவ்வொருவாட்டியும்  ஒரு சிரிப்பு சிரிப்பாளே . இனி  அதைக் காண முடியாது . அவனுடைய ஆவியும் வெளியேறி காயத்திரியின் கைப் பிடித்து கூட்டிக் கொண்டு மேலே போனால் எவ்வளவு நல்லாய் இருக்கும் .   அன்றிலிருந்து மூன்று வருசமாக அவள் சென்ற நாளில் ஒவ்வொரு மாசத்திலும் கோவிலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறான் . இன்று அவளின் நினைவு நாள் ! .

         கொஞ்சநாளுக்கு முதல் சுகன் புதிதாக வாங்கிய வீட்டிற்கு அலைபேசியில் " வா , வா " என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தான் .   அது  ஞாபகம் வந்தது   .   அவ்விடத்திற்கு அயலில் கார் சென்ற போது " வீட்டிலா இருக்கிறாய் ? " என்று கேட்டான் . " வா " என்றான் . அலைச்சல் வேலையில் தினமும் ஒரு மூட் . எரிபொருள் விலை ஏறியதில் ...புலம் பெயர் நாடே வேறொரு மாதிரி தோற்றம் காட்டுகிறது . இந்த நாட்டுக்கு வெளிநாட்டுக் கொள்கை கிடையாது . அயலில் உள்ள பெரியவன் என்ன சொல்றானோ ?....பின்னாலே போறவன் . வாழ்க்கைச் செலவு கூடும் . பஞ்சத்தை எட்டிப் பார்க்கும் என்று தெரியும் . இன்றைய தலைவரின் அப்பருக்கு இருந்த தைரியம் ….கிடையாது . என்ன இருந்தாலும் பழசு வலிமையானது தான் . ஊரிலே ஏர் மேடை கட்டி இறைக்கும் முறை , சூத்திரக்கிணறுகள் ...எல்லாவற்றையும் மெருகூட்டி மீள கொண்டு வாருங்கள் . அதை வீழ்த்த இன்று கூட எதுவுமே இல்லை . காந்தி வயதானவராக இருக்கலாம் . அவரது கொள்கைகள் வயதானதில்லை .   இந்த தலைவர்களா இயற்கையைக் காப்பாற்றப் போறவர்கள் ? . வாயில் கஞ்சாவை வைத்துக் கொண்டு பேசுறவர்கள் . வெறித்தனமாக சண்டை பிடிக்க  ஆயுதங்களை அனுப்பிக் கொண்டு கிடக்கிற பலவீனமானவர்கள் . சரியான    மெண்டல்கள் . விடுங்கள் .

மேலும் படிக்க ...

வாசிப்பும், யோசிப்பும் 381 : எழுத்தாளர் நடேசனும், சிறுகதை பற்றிய அவரது எண்ணங்களும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
05 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                 - எழுத்தாளர் நடேசன் -

எழுத்தாளர் நடேசன் அவர்கள் தனது முகநூற் பதிவொன்றில் சிறுகதை பற்றி பின்வருமாறு குறிப்பிட்டிருக்கினறார்:

" தற்போது இலங்கை பத்திரிகைகளில் சிறுகதைகள் பக்கத்துக்கேற்ப குறைக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறது .  சிறு கதைகளில் பாத்திரம் , சம்பவம்  முழுமையாக வரவேண்டும். சம்பவங்கள் சுரியலில் வருவதுபோல் இலக்கியத்தில் தற்செயலாக நடக்கமுடியாது . அதேபோல் பாத்திரத்தின் செயலுக்கு  காரணம் தேவை . ஆனால் 800 வார்த்தைகளில் எழுதுவது அம்மாவின் சீலையில் பாவாடை தைப்பது போன்ற விடயமாகி விட்டது . கட்டுரை ,நாவல் வறண்டு போய் விட்ட நிலையில் சிறுகதைகளும் சிதைந்துவிடுமோ என்ற பயத்தில் எழுதுகிறேன்.' விக்கிபீடியாவின் சிறுகதை பற்றிய கருத்துகளையொட்டி அவர் கருத்துகளைக் கூறியுள்ளார்.

என்னைப்பொறுத்தவரையில் சிறுகதையொன்றுக்கு இப்படியெல்லாம் வரைவிலக்கணம் கூற முடியாது. ஒரு பிரதேசம் பற்றிய விபரிப்பு கூட  சிறுகதையாக இருக்க முடியும்.  ஒரு சம்பவம் தாக்கிய உணர்வைக் கூட சிறுகதையொன்று விபரிக்கலாம். இந்த வரைவிலக்கணத்தின்படி பார்த்தால் புதுமைபித்தனின் மிகச்சிறந்த சிறுகதைகளிலொன்றாகக் கருதப்படும் 'பொன்னகரம்' ஒரு சிறுகதையேயல்ல. அது ஓர் இருபக்கச் சிறுகதை.  மாநகரின் ஒரு பகுதி பற்றிய விவரணச் சித்திரம்.  அதில் பாத்திரங்கள் முழுமையாக வார்க்கப்படவில்லை.  ஆனால் அப்பகுதி பற்றி, வாழ்க்கை முறைகளைப்பற்றி கடுமையாக விமர்சிக்கின்றது. 800 சொற்களுக்கும் குறைந்த எண்ணிக்கையில் சொற்களைக் கொண்ட சிறுகதை  'பொன்னகரம்'

மேலும் படிக்க ...

யுவான் வாங் (Yuwan Wang-5) சீனக்கப்பலின் இலங்கை வருகை , பிராந்திய மற்றும் பூகோள அரசியற் பின்னணி பற்றியதோர் அவதானிப்பு! (சென்ற இதழ் தொடர்ச்சி) - ஜோதிகுமார்

விவரங்கள்
- ஜோதிகுமார்
ஜோதிகுமார்
03 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

(சென்ற இதழ் தொடர்ச்சி)

பெலோஸ்கியின் விஜயம் நடந்துமுடிந்த, 12வது தினமே, செனடர் எட் மார்கியின்; தலைமையின்கீழ், செனட் குழு ஒன்று தாய்வானுக்கு விஜயம் மேற்கொண்டது (16.8.2022).  இது அமெரிக்கா அணுகுமுறையின் தீர்மானகரமான நிலைமையினை புலப்படுத்தியது. மறுபுறுத்தே, ஏற்கனவே நூற்றுகணக்கான விமானங்களையும், பத்துக்கு குறையாத கப்பல்களையும் அனுப்பி, அதற்கூடு, தாய்வானுக்கென்று, உண்மையில், சொந்தமாக, வான்பரப்பு என்று ஒன்று உண்டா என்று சர்வதேச ஆய்வாளர்களை கேள்வி கேட்க வைத்த சீனத்தின் நடவடிக்கைகள் கட்டுக்கடங்காமல், இன்றும்,இன்னமும் தொடர்வதாகவே இருக்கின்றது.

இச்சுற்றி வலைப்பின் முக்கிய அம்சங்கள் இரண்டு: ஒன்று, தாய்வானைச்சுற்றி வளைத்து, தாய்வானுக்கு அதன் கையாலாகாத தனத்தை காட்டிக்கொடுப்பது. (அமெரிக்க ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்கள் நிறையவே இருந்த போதிலும்). மற்றது, அமெரிக்காவின் கடற்படைத் தளமான குஹாம் தளத்திலிருந்து அமெரிக்க போர் கப்பல்களை (அல்லது விமானங்களை) நிறுத்தி வைத்து, “கடல் வழி பாதை சுதந்திரம்” (Navigation Right) என்ற வாய்பாட்டை அர்த்தமில்லாமல் ஆக்கி, தாய்வானுடன் அதற்கு எந்தவித சம்பந்தமும் இல்லாமல் செய்துவிடுவது.

இதுவும் சரி, அல்லது ஏற்கனவே கூறினால் போல் தாய்வானின் மேலாக, தாய்வானின் வான்பரப்பை ஊடறுத்து, தான் செலுத்திய ஏவுகணையின் விளைபயன்களும் சரி- கிஸிஞ்ஞரின் பயங்களை மேலும் மேலும் அதிகரிக்க செய்வதாகவே இருந்தன.

மேலும் படிக்க ...

மகாகவி பாரதியார் நூற்றாண்டையொட்டி எழுத்தாளர் முருகபூபதியின் 'பாரதி தரிசனம்' மின்னூல் வெளியீடு1

விவரங்கள்
- தகவல்; முருகபூபதி -
நிகழ்வுகள்
03 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
- இம்மாதம் 11 ஆம் திகதி மகாகவி பாரதியார் மறைந்து 101  வருடங்களாகின்றன.  இதனை முன்னிட்டு எழுத்தாளர் முருகபூபதி எழுதியிருக்கும்  புதிய நூல்  "பாரதி தரிசனம்  "  இதன் வெளியீட்டு அரங்கு மெய்நிகரில் அன்றைய தினம் நடைபெறவிருக்கிறது. -
 

வாசகர் முற்றம் : தீவிர வாசகனாக வளர்ந்து, வானொலி ஊடகவியலாளனாகியிருக்கும் நியூசிலாந்து சிற்சபேசன்! ஈழத்து மு. தளையசிங்கமும் இந்திய ஆர்.கே. நாராயணனும் இவரது ஆதர்சங்கள்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
03 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பெற்றவர்களிடம் கற்றதையும் சமூகத்திடம் பெற்றதையும் வாழ்வியல் அனுபவமாக்கி,  ஊடகத்துறையின் நுட்பங்களை உள்வாங்கி செய்தியாளராக பரிமளிக்கும்  தேர்ந்த இலக்கிய வாசகர்  சிற்சபேசன் அவர்களை எமது  வாசகர் முற்றத்திற்கு  அழைத்து வருகின்றோம். யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்,  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், தன்னுடைய தந்தையார் அதிபராகவிருந்த அனுராதபுரம் விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயத்திலும் கற்றவர். பின்னர் உயர்கல்வியை தமிழ்நாட்டில்  தொடர்ந்தவர்.

யாழ்ப்பாணத்திலும்  தமிழ்நாட்டிலும் பல்கலைக்கழகக் கல்விவரையான காலகட்டத்திலே வாழ்ந்தமையைப்  பெரும் பாக்கியமாகவே கருதுகின்றார்.   “ யாழ்ப்பாணக் கலாசாரம் கந்தபுராணக் கலாசாரம்  “ என்பார் பண்டிதமணி கணபதிப்பிள்ளை. அந்தவகையில், அங்கே பெற்றுக்கொண்ட சைவத்தமிழ் விழுமியங்களிலான தன்னுடைய அத்திவாரத்தை, தமிழ்நாட்டின் மொழி, கலை, பண்பாட்டுச்சூழல் பலப்படுத்தியதாக நம்புகின்றார்.  அந்தவாய்ப்பை ஏற்படுத்திய தன்னுடைய பெற்றோரை நன்றியோடு நினைவுகூர்கின்றார் சிற்சபேசன். தற்போது நியூசிலாந்து அரசதுறையில் சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.   நாம் தொடர்ந்து பதிவேற்றிவரும் வாசகர் முற்றம் பகுதிக்காக சிற்சபேசனை தொடர்புகொண்டோம்.

மேலும் படிக்க ...

விம்பம்* ஏற்பாட்டில், எதிர்வரும் சனி , இலண்டனில் 2 நூல்கள் அறிமுகமும், “இலங்கையின் பொருளாதரம்” நூல் வெளியீடும்!

விவரங்கள்
- தகவல்: பெளசர் -
நிகழ்வுகள்
01 செப்டம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

வாசிப்பும், யோசிப்பும் (380) 'ரகரம்' பற்றித் தமிழ் அறிஞர் அ.கி.பரந்தாமனார்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
30 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிஞர் மகுடேசுவரன் தன் முகநூற் பதிவொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

"தமிழ் இலக்கணப்படி, ‘ர’கர வரிசை எழுத்துகளில் எதுவும் சொல்லுக்கு முதல் எழுத்தாக வராது. பிறமொழிச் சொற்களில்கூட ’ர’கர எழுத்து முதலாய் வந்தால் அதன் முன்னே உயிரெழுத்தை இட்டே எழுதுவோம். ரங்கன் – அரங்கன். ராமசாமி – இராமசாமி. "

ஆனால் பிறமொழிச் சொற்களில்  ர என்னும் எழுத்தை சொல்லுக்கு முதலில் வைத்து எழுதும் வழக்கம் ஏற்பட்டு ஆண்டுகள் பலவாகிவிட்டன. தமிழ் அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது . இது பற்றி தமிழறிஞர் அ.கி.பரந்தாமனார் அவர்கள் தனது 'நல்ல தமிழ் எழுத வேண்டுமா?" நூலில் பின்வருமாறு கூறுவார்:

"இக்காலத்தில் ரகரமும்  பிறமொழிச் சொற்களில் மொழி முதல் எழுத்தாக வரலாம். தொன்று தொட்டு அரங்கநாதன், இராமன், இராமாயணம் என்று எழுதுவதை நாம் இன்றும் மேற்கொள்வதால் தவறில்லை. ஆனால், எல்லாவற்றையும் அப்படியே எழுத வேண்டுமென்பதில்லை. ரதம் என்னும் சொல்லை இரதம் என்று எழுத வேண்டுவதில்லை. ரப்பர் என்னும் சொல்லை இரப்பர் என்று எழுதினால் யாசிப்பர் என்றன்றோ பொருள்படும். ஆதலால், தொன்று தொட்டு  எழுதி வருவதற்கு மட்டும் அகரம், இகரம் பெய்து எழுதுவோம். மற்றவற்றிற்கு அவ்வாறு செய்ய வேண்டுவதில்லை."

இதுபோல் ட என்னும் சொல்லையும் பிறமொழிச் சொற்களுக்குப் பாவிக்கலாம் என்பது அவர் எண்ணம்.  

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. வாசிப்பும், யோசிப்பும் (379) : 'ஜே.ஜே.சில குறிப்புகள்' பற்றிச் சில குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -
  2. யுவான் வாங் (Yuwan Wang-5) சீனக்கப்பலின் இலங்கை வருகை , பிராந்திய மற்றும் பூகோள அரசியற் பின்னணி பற்றியதோர் அவதானிப்பு! - ஜோதிகுமார்
  3. நினைவுகளின் தடத்தில் - (23 & 24) - வெங்கட் சாமிநாதன் -
  4. இணையவெளி உரை நிகழ்வும் கலந்துரையாடலும்: '22 சுருதிகளின் முக்கியத்துவம் -செய்முறை விளக்கங்களுடன்’
  5. தமிழ் வான் அவை இணைய வழிப் பன்னாட்டு இலக்கியச் சந்திப்பு 29: பாலியல் வன்முறைக்கான காரணங்கள் ஆண்களா? பெண்களா? சமுதாயமா?
  6. இலங்கை மாணவர் கல்வி நிதியம் ( 1988 – 2022) CSEF ஆண்டுப்பொதுக்கூட்டம்!
  7. ஆய்வு: மருதத்திணையில் இளிவரல் மெய்ப்பாடு! - கி.ச. புனிதவதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இம்மாகுலேட் மகளிர் கல்லூரி, கடலூர். -
  8. தி.ஜானகிராமனின் 'அன்பே! ஆரமுதே!' - வ.ந.கிரிதரன் -
  9. சிறுகதை: பொறி! - எஸ் அகஸ்தியர் -
  10. கம்பராமாயணம் கூறும் வாழ்வியல்! - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை-42. -
  11. சிறுவர் மனங்களை வென்ற செந்தமிழறிஞர் த. துரைசிங்கம்!   - பத்மா இளங்கோவன் -
  12. ஆகஸ்ட் 23 தமிழறிஞர் த. துரைசிங்கம் நினைவுதினம்! – இளநிலா சுரேசானந்த் (பிரான்ஸ்) -
  13. உயிர்த்தெமும் உயிரினம்! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
  14. கிளிம் வாழ்வின் மூன்றாம் தொகுதி: -தமிழ் இலக்கிய உலகை, முன்னிறுத்தி (9) - ஜோதிகுமார் -
பக்கம் 77 / 115
  • முதல்
  • முந்தைய
  • 72
  • 73
  • 74
  • 75
  • 76
  • 77
  • 78
  • 79
  • 80
  • 81
  • அடுத்த
  • கடைசி