பதிவுகள் முகப்பு

மன அழுத்த மேலாண்மை – 3 : உடல்-மன தொடர்பும், நோய் எதிர்ப்பு சக்தியும்!   - டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை) -

விவரங்கள்
- டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை) -
'பதிவுகளில்' அன்று
22 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 - பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  - ஆசிரியர்  


நமது உடலின் செயற்பாடுகள் எல்லாவற்றையும் நரம்பு மண்டலமே கட்டுப்படுத்தி உடலின் சீரான செயற்பாட்டிற்குக் காரணமாக விளங்குகிறது. நரம்பு மண்டலம் பல பிரிவுகளாக பிரிந்து உடலின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்கிறது. தானியங்கி நரம்பு மண்டலம் என்பது நரம்பு மண்டலத்தின் ஒரு முக்கிய பிரிவாகும். இந்த தானியங்கி நரம்பு மண்டலம் 'சிம்பதடிக்' நரம்பு மண்டலம் மற்றும் 'பாரா – சிம்பதடிக்' நரம்பு மண்டலம் என இரண்டு பிரிவாக பிரிந்து செயல்படுகிறது. நமக்கு ஏற்படும் உடல் பிரச்சனைகள் எல்லாமே உடலியல் கோளாறுகளால் ஏற்பட்டவை என்று கூற முடியாது. நமக்கு ஏற்படும் மனப்பிரச்சனைகளும் நம் உடலில் நோய்களை தோற்றுவிக்கலாம். ஏனெனில் நம் உடலின் செயல்பாடுகளுக்கும் நம் மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நாம் ஆழ்மனதில் அடக்கி வைத்திருக்கும் நிறைவேறாத ஆசைகளும் எண்ணங்களும், மனத்திற்கு வலியை ஏற்படுத்தும் விஷயங்களும், இன்னபிற மன அழுத்தத்தை உண்டாக்கும் நிகழ்வுகளும் நம் உடல் செயற்பாடுகளின் மீது பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு உடலுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு அறிய வருவதற்கு முற்பட்ட தொடக்க காலத்தில் சில வித்தியாசமான நோயாளிகளை சந்திக்க வேண்டி வந்தது. உதாரணமாக, ஒரு பெண் தனக்கு பூக்களைக் கண்டாலே உடலில் அரிப்பு ஏற்படுவதாக கூறிக் கொண்டு உளவியல் மருத்துவரை சந்தித்தார். அப்பெண் அதற்கு முன்பு வேறு பல தோல் நோய் நிபுனர்களிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர்களால் அப்பெண்ணின் உடலில் பூக்களைக் கண்டால் அரிப்பு ஏற்படுவதற்கான உடலியல் அடிப்படையை கண்டறிய முடியவில்லை. நோய் குணமாகாத இந்த சமயத்தில் தான் அப்பெண் உளவியல் மருத்துவரை அணுகியிருக்கிறார்.

அப்பெண்ணிடம் பேசி பல விவரங்களைத் தெரிந்து கொண்ட உளவியல் மருத்துவர் அவரை ஒருவாரம் கழித்து மீண்டும் வரச் சொன்னார். இம்முறை உளவியல் மருத்துவர் அப்பெண்ணிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது எதேச்சயாக ஒரு கொத்து பூக்களை எடுத்துத் தன் மேசையின் ஒரு ஓரத்தில் வைத்து விட்டு பேச்சை தொடர்ந்தார். அதுவரை இயல்பாகப் பேசிக் கொண்டு இருந்த அப்பெண் பூங்கொத்தை ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டே பேச ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அவருக்கு மெதுவாக உடல் அரிப்பு ஏற்பட்டு சொரிய ஆரம்பித்தார்.

மேலும் படிக்க ...

கிளிம் வாழ்வின் மூன்றாம் தொகுதி: -தமிழ் இலக்கிய உலகை, முன்னிறுத்தி (7) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
21 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

7

தமிழ் இலக்கிய உலகில் இது எமது ஆ.மாதவனையும் சிங்காரத்தையும் நினைவுபடுத்தவே செய்யும்.

ஜெயமோகன் எழுதுவார்: “பொதுப்புத்தியாலும், புறவயமான தர்க்கத்தாலும் (REASON) அடையப்பெறும் உண்மைகளுக்கு இலக்கியத்தில் பெரிய இடம் ஏதுமில்லை…” (பக்கம் 105: மேலது)

மேலும் கூறுவார்: “மனித மனதின் ‘இயல்பை’வெளிப்படுத்துதல் என்றால் நவீனத்துவத்தை பொறுத்தவரை இருளையும் தீமையையும் வெளிப்படுத்துதல் தான்” (பக்கம்:89)

இப்பின்னணியோடு ஆ.மாதவனின் படைப்புலகை அணுகும் அவர், மாதவன் பொறுத்து கூறுவது: “மாதவன் சித்தரிப்பது தீமையை மட்டுமே… இதுதான் அப்பட்டமான வாழ்க்கை என்று அப்படியே காட்டும் பாவனை…” (கரிப்பும் சிரிப்பும்). மாதவனின் மேற்படி எழுத்துக்களின் உச்சநிலைகளை (கிளைமெக்ஸ்) ஜெயமோகன் வாயிலாகவே கேட்பது, எமது தரிசனங்களை இலகுவாக்குவதாக அமையும், (ரன்வேயில் ஓடத் தொடங்கலாம்): “‘மோகபல்லவி’ போல நேரடியான விமர்சனமே இல்லாத காமவேட்கையின் சித்தரிப்புகள்…”

“காமினி மூலம்’,‘சினிமா’ போல் விதவிதமான குற்ற சித்தரிப்புகள்…”

மேலும் கூறுவார்:

“அக்குற்றங்களுடன், நம் வாசக மனம், சுவாரஸ்யமாக (?) இணைந்து கொள்வதை, நாமே காணும் துணுக்குறுதல்தான், இவற்றின் அனுபவம்”. (பக்கம்:52: கரிப்பும் சிரிப்பும்)

இவ்விவரிப்பில் ஏற்படும் ‘அனுபவங்களை’ தனியாக விவரிக்கவும் அவர் தயங்குவதில்லை:

“‘சினிமா’…(என்ற) சிறுகதையில்… சாப்பிடும் போது வந்து ;மியாவ்’ கொட்டும் பூனையை வாலை எட்டிப் பிடித்து வாசற்கதவில் நச்சென்று மோதி எறிகிறான்” (பக்கம்:56: மேலது)

மேலும் படிக்க ...

சுவாமி விபுலானந்தர்: இல்லறத்தைத் துறந்தார் இன்பத்தமிழ் இணைத்தார்! ஜூலை 19 சுவாமி விபுலானந்தரின் நினைவு தினம்! - - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
இலக்கியம்
21 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஈழத்தின் கிழக்கில் தோன்றிய முத்து - தமிழைச் சுமந்தபடி தரணியெங்கும் ஒளிவீசி நின்றது.அந்த முத்தின் வாழ்க்கை இரு நிலைகளில் அமைந்தது. படித்துப் பட்டம் பெற்று - பண்டிதராய், கல்லூரி ஆசிரியராய், அதிபராய், தந்தை தாய் வைத்த மயில்வாகனன் என்னும் பெயரோடு சமூகத்தில் பயணித்த காலம்.மயில் வாகனன் என்னும் பெயரைக் கடந்து -

"ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப் பெற்ற
பேருஞ் சதமல்ல பெண்டீர் சதமல்ல "

என்னும் மனப்பாங்கினைப் பெற்று - ' என்கடன் பணி செய்து கிடப் பதே ' என்னும் விசாலித்த நோக்குடன் ; இராமகிருஷ்ண மடத்துடன் ஐக்கியமாகி, துறவியாகி - விபுலானந்தர் என்னும் அடையாளத்தைத் தனதாக்கி இவ்வுலகைவிட்டு ஏகும்வரை பயணித்த காலம் எனலாம். முத்தமிழ் வித்தகராய் முழுப் பேராளுமையாய் விளங்கிய எங்கள் விபுலாநந்தத் துறவியை இப்படியும் பார்க்கலாம் என்பதை மனமிரு த்துவது அவசியம் என்று எண்ணத் தோன்றுகிறது.

காரைதீவு மண்ணில் பிறந்தவர் யாவர் மனத்திலும் இன்றும் , என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்றால் - அதற்கு திருப்பு முனையான காலமாய் அமைந்தது முத்தமிழ் மாமுனிவரின் துறவற த்தின் பின்னான காலம் என்றே சொல்லலாம்.1924 ஆம் வருடம் மயில்வாகனனை மாநிலம் அறிந்திட மலரச்செய்த காலம் எனலாம். மயில்வாகனன் இலண்டன் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பட்ட தாரியாய் , மேல்நாட்டு உடையுடன் மிடுக்குடன் இருந்த கோலம் மாறி -உடையாலும் , உள்ளத்தாலும். தாமரை இலைமேல் நீர் போன்ற நிலைக்குள் வந்து - துறவியாய் பிறப்பெடுத்த நாள் எனலாம்.

மேலும் படிக்க ...

கவிதை: வைத்தியம்! - தம்பா (நோர்வே) -

விவரங்கள்
- தம்பா (நோர்வே) -
கவிதை
20 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மூடிய கல்லறையினுள்
மூச்சு முட்டும் மூலவர்கள்.
`கடவுளை காக்க
மதத்தை காக்கவேண்டும்
மதத்தை காக்க
இனத்தை காக்க வேண்டும்
இனத்தை காக்க
நலிந்தவன் நரம்புகள் அறுத்து
வலிந்தவன் வானெழ வேண்டும்´
சிதையின் சிகரம் ஏறி
சீறி சினந்து சூளுரைத்தவன்
வானவில்லை மறைத்து தலைவனானான்.

மேலும் படிக்க ...

கு.சின்னப்பபாரதியின் புனைவெழுத்துகள்- இணைய வழி கலந்துரையாடல்! - தகவல்: அகில் -

விவரங்கள்
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
20 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆய்வு: நாட்டுப்புறத்தெய்வங்களின் வழிபாடுகளும் திருவிழாக்களும் ஓா் பார்வை! - ச. சுகுமாரன், முனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த்துறை, திருவேங்கடவன் பல்கலைக்கழகம், திருப்பதி, ஆந்திரா மாநிலம் -

விவரங்கள்
- ச. சுகுமாரன், முனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த்துறை, திருவேங்கடவன் பல்கலைக்கழகம், திருப்பதி, ஆந்திரா மாநிலம் -
ஆய்வு
20 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல் வாய்ந்த சக்தி ஒன்று இருப்பதாக மக்கள் கருதுகின்றனா். அச்சக்தியே தெய்வத்தின் சக்தி என்று இறை நம்பிக்கை உள்ளவா்னால் நம்பப்படுகின்றது. இயல்பாக நடக்கும் செயல்கள் இனிதாக இருந்தால் அது தெய்வத்தின் அருளால் நடைபெறுவதாக மக்கள் கருதுகின்றனா். மனிதனின் துயா் களையப்படும்பொழுது மனிதமனம் இறைவனை நன்றி உணா்வோடு நினைக்கிறது. தன்னுடைய மகிழ்ச்சிக்குக் காரணமாக விளங்கும் இறைவனை மகிழ்விக்க விரும்புவது மனித இயல்பே. தெய்வத்தின் சினத்தைத் தணிக்கவும், நன்மை தரும் தெய்வத்திற்கு நன்றி செலுத்தவும் விழா எடுக்கப்படுகிறது. இதையே ”ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்று கூறுகின்றனா். கோயில் வழிபாட்டைவிட கூட்டுவழிபாடே நன்மை பயக்கும் என்று மக்கள் நம்புகின்றனா். எனவே, மக்கள் அனைவரும் ஒன்று கூடி வழிபாடு செய்கின்றனா். இதுவே மனித ஒருமைப்பாட்டிற்கு வழிவகுக்கிறது.

வழிபாடு – விளக்கம்

இறைவழிபாடு என்பது மனிதன் தனது நன்றியைச் செலுத்தும் முறையே ஆகும்.
வழி - இறைபோற்றுவதற்குரியவழி
பாடு - அடைவதற்குரிய செயல்முறைகள்

”இறைவனை போற்றுவதற்குரிய வழியை அடைவதற்கு மனிதன் மேற்கொள்ளும் செயல்முறைளே வழிபாடு ஆகும் என்று தமிழ் அகராதி கூறுகிறது. (சிங்காரவேலன் க்ரியாதமிழ் அகராதி ப.308) வழி – படுதல் என்னும் இரண்டு சொற்கள் ஒன்று சோ்ந்து வழிபாடு உருவாயிற்று என்றும் கூறலாம். வழிபாடு என்னும் வினைவடிவச் சொல்லின் அருமையான தொழிற் பெயா்ச்சொல் வழிபாடு எனப்படும். செல்லும் நெறியை முதற்கண் குறித்துத் தோன்றிய “வழி” எனும் சொல் காரணம் (யாழ், அகராதி) அம்புடை (உபயம்), பின்வழி மரபினா் மரபு (பிங்கலம்) பழமை (வின்சிலோ அகராதி போன்ற பல பொருள்களில் வளா்ச்சி அடைந்துள்ளது.(Tamil lexicon P. 3453) வழி எனும் தனிச்சொல் ஓா் அரிய சொல்லாகும். தமிழ்ச் சொற்கள் ஒரு சிலவற்றிற்கே உரிய சிறந்த பொருள் வளா்ச்சியை இச்சொல்லிலே காணலாம். முன்னா் பலா் சென்ற நெறியாகவே அது ஆகிறது. இறப்பு, எதிர்வு ஆகிய இரண்டும் காலங்களுக்கும் வழி பொருந்தும் என்றும் சொல்லலாம்.

மேலும் படிக்க ...

ஐனநாயகச் சர்வாதிகாரம்! - சக்தி சக்திதாசன், லண்டன் -

விவரங்கள்
- சக்தி சக்திதாசன், லண்டன் -
அரசியல்
20 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஐனநாயகம் என்பார்கள் இல்லை சர்வாதிகாரம் என்பார்கள். என்ன சக்திதாசன் ஐனநாயகச் சர்வாதிகாரம் என்கிறானே ! இவனுக்குப் புத்தி பேதலித்து விட்டதோ ? என்று நீங்கள் எண்ணத் தலைப்படுவது புரிகிறது. எனக்குத் தெரிந்த வரையில் புத்தி பேதலிக்கவில்லை என்றுதான் எண்ணுகிறேன். என்ன ! தற்போதைய உலக அரசியல் அரங்கில் நடைபெறும் காட்சிகள் அனைத்தையும் ஒருமுறை புரட்டிப் போட்டுச் சிந்திக்க வைக்கிறது. நான் வாழும், என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் ஐக்கிய இராச்சியத்தில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற அரசியல் அரங்கக் காட்சிகள் ஒருபுறம், நான் பிறந்த மண்ணான சிறீலங்காவில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அரசியல் அல்லகல்லோலங்கள் ஒருபுறம் , உலக அளவிலே உக்கிரைன் நாட்டில்ஈடம்பெற்றுக் கொண்டிருக்கும் போரும் அதன் அவலங்களும் ஒருபுறம் என அனைத்து உலகிலும் அவசரம் அவசரமாக அரசியல் அரங்கங்களில் நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இலங்கையிலே தற்போது நடந்தேறியிருக்கும் விடயங்கள் மக்களின் வாழ்வின் அடிப்படை ஆதரங்களையே பாதித்திருக்கின்றன. வசதியுள்ளோரும், வசதியற்றோரும் ஏதேவொரு வகையில் பாதிப்படைந்திருக்கிறார்கள். அம்மக்களில் ஒருவனாக வாழாமல் அம்மக்களைப் பாதிக்கும் விடயங்களைப் பற்றிய கருத்தைப் புலம்பெயர் தேசத்தில் இருந்து தெரிவிப்பது அம்மக்களுக்கு எந்தவிதத்திலும் நியாயமாக இருக்காது என்பது என் கருத்தாகையால் அதைப்பற்றிய அலசலைத் தவிர்த்துக் கொள்கிறேன். சரி இனி ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் சதுரங்கப் பலகையைப் பார்ப்போம். எனது வாழ்வினை நேரடியாகப் பாதிக்கும் எனும் வகையில் இதைப் பற்றிய அலசலுக்குள் கொஞ்சம் புகுந்து கொள்கிறேன்.

எமது பிரதமர் பொரிஸ் ஜான்சன் பதவிக்கு வரும்போதே அவர் சராசரியான ஒரு அரசியல்வாதியைப் போல நடந்து கொள்ள மாட்டார் எனும் கருத்து அனைவரும் அறிந்த ஒன்றே. அவரது அசாதாரணமான பண்புகள், பழக்க வழக்கங்களை அவர் லண்டன் நகர மேயராக 8 வருட காலம் பதவி வகித்தபோதே மக்கள் தெரிந்து கொண்டிருந்தார்கள். மக்களின் மனங்களை ஈர்க்கும் ஏதோ ஒரு சக்தியை அவர் கொண்டிருந்தார் என்பதுவே உண்மை. அவரது 2019 அறுதிப் பெரும்பன்மை வெற்றி மக்களுக்கு அவர் மீதிருந்த ஈர்ப்பு என்று வாதிடும் பல அரசியல் அவதானிகள் உண்டு. அதே நேரம் ப்றெக்ஸிட் எனும் ஐரோப்பிய ஒன்றியத்தினிலிருந்து விலகுவது எனும் நிகழ்வு கிளப்பி விட்ட புரிந்துணர்வுக்கு அப்பாற்பட்ட ஒரு பிரிந்துணர்வினை ஊட்டும் வகையில் அவர் நடந்து கொண்டமையே அவரது வெற்றிக்குக் காரணம் எனும் வாதமும் பலமாக எழுந்ததுண்டு. எது எவ்வகை இருப்பினும் அமெரிக்கா ட்ரம்ப் அலையினால் தாக்கப்பட்ட சிறிது காலத்திலேயே இங்கிலாந்து பொரிஸ் அலையினால் தாக்கப்பட்டது என்பதுவே உண்மை. அப்போதைய அமேரிக்க ஐனாதிபதி ட்ரெம்ப் அவர்கள் பொரிஸ் ஜான்சனை ஆதரித்த தலைவர்களுள் முக்கியமானவர் என்பதும் குறிப்பிடப் பட வேண்டிய ஒன்றாகும். சிரிக்கச் சிரிக்கப் பேசி தனது காரியத்தை சாதித்துக் கொள்ளும் திறமை பொரிஸ் ஜான்சனிடம் இருந்தது. கேட்கப்படும் கேள்விகள் எத்தனை கடினமானதாக இருந்தாலும் சுற்றி வளைத்துப் பதிலளித்துத் தப்பித்துக் கொள்ளும் திறமை அவரிடம் இருந்தது. அவரிடமிருந்த ஏதேவொரு வசீகரம் அவரின் மீது ஆத்திரம் கொள்வதற்குப் பதிலாக அனுதாபம் கொள்ளத் தூண்டியது எனலாம்.

மேலும் படிக்க ...

ஆய்வு: நாட்டுப்புற இலக்கியங்களில் பெண்ணியச் சிந்தனைகள்! - பா. தாரா, முனைவர்பட்ட ஆய்வாளர், அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம் -

விவரங்கள்
- பா. தாரா, முனைவர்பட்ட ஆய்வாளர், அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம் -
ஆய்வு
18 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

நாட்டுப்புறப் பாடல்கள் பழமைக்கும் பழமை வாய்ந்தவை. பின்னைப் புதுமைக்கும் புதுமையாகவும் விளங்குபவை. இப்பாடல்கள் இனியவை, எளியவை, எழுதப்படாதவை. வாயில் பிறந்து செவிகளில் நிறைந்து உள்ளத்தில் பதிவு பெறுபவை. மண்ணின் மணத்தைப் பரப்புபவை:

நாட்டுப்புற இலக்கியத்தின் வேர்கள் மனித சமுதாயத்தில் மிக ஆழமாகப் பதிந்துள்ளன. நாட்டுப்புற இலக்கியமானது மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ அதைக் குவித்து வைத்திருக்கும் சேமிப்பு அறையாகும் என்கிறார் முனைவர் சு. சக்திவேல். (நாட்டுப்புற இயல் ஆய்வு, ப.22) எனவே, நாட்டுப்புற இலக்கியம் மண்ணின் மணத்தைப் பரப்பும் சிறப்பினைக் கொண்டது எனலாம். அந்தவகையில் நாட்டூப்புறப் பாடல்களில் விரவிக்கிடக்கும் பெண்ணிய சிந்தனையை மட்டும் எடுத்துரைப்பதாக அமைகின்றது இக்கட்டுரை.

நாட்டுப்புற ப்பாடல் வகைப்பாடு

நாட்டுப்புறப் பாடல்கள் அவை பாடப்படும் சூழல் நிகழ்வுகளின் தன்மை இவற்றை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. நாட்டுப்புறப் பாடல்களில் இடம்பெற்றிருக்கும் பெண்ணிய சிந்தனைகளை முனைவர் சு.சக்திவேல், கீழ்வருமாறு பகுத்துக் கூறுகிறார்.

ஆணாதிக்க வெளிப்பாடு
கற்புக் கோட்பாடு
விருப்பமின்றி நடத்தப்படும் திருமணங்கள்
கருவின் கருவளம்
பாலின சமமின்மை
சக பாலின முரண்
விதவைப் பெண்ணின் மன உணர்வு
வேலைச்சுமை
கூலி வேலை செய்வும் பெண் நிலை
வன்புணர்வு
பெண் தன் பலத்தைப் பிரகடனம் செய்தல்.

மேற்கண்ட பட்டியலுக்குள் அடங்கியிருக்கும் பெண் உணர்வுகளையும், அடக்குமுறை களையும், அடிமைநிலையையும் நாட்டுப்புறப் பாடல்களின் துணைகொண்டு கீழ்வருமாறு காணலாம்.

மேலும் படிக்க ...

ஆடிப்பிறப்பு! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
18 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழர்களின் திருநாட்களில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டமும் முக்கியமானதாகும். தமிழ் நாட்காட்டியின்படி நான்காவது மாதமான ஆடி மாதம் முதலாம் திகதியை (இந்த வருடம் 17-7-2022) ஆடிப்பிறப்பு என்று சொல்வார்கள். தமிழ் நாட்டில் இதை ஆடிப்பெருக்கு என்று அழைப்பார்கள். ஆடிப்பிறப்பன்று சிறுவர், சிறுமிகளுக்குப் பிடித்தமான கொழுக்கட்டையும், இனிப்பான ஆடிக்கூழும் விசேடமான உணவான இருக்கும். ஒரு காலத்தில் அதாவது 1950 களில் யாழ்பாண பாடசாலைகளில் ஆடிப்பிறப்பன்று விடுமுறை விட்டார்களாம். சில தனிப்பட்ட காரணங்களால், குழந்தைகள் மகிழ்ச்சியோடு கொண்டாடிய இத்திருநாளைக் கொண்டாடுவதை இந்தத் தலைமுறையினர் பல இடங்களில் நிறுத்திவிட்டார்கள்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் அகணி சுரேஷ் எழுதிய மூன்று நூல்களின் நூல் வெளியீட்டு விழா!

விவரங்கள்
- தகவல்: அகணி சுரேஷ் -
நிகழ்வுகள்
18 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

நடு 50 இதழ் பற்றிய எண்ணங்கள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
17 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- ஸ்கார்பரோவில் நேற்று நடைபெற்ற எழுத்தாளரும், நடு இணைய இதழ் ஆசிரியருமான கோமகன் அவர்களை நிஒனைவு கூர்தல் மற்றும் நடு 50 இதழின் வெளியீடு ஆகியவற்றை உள்ளடக்கிய நிகழ்வில் நான் ஆற்றிய உரையின் விரிவான வடிவமிது. - வ.ந.கி -


இன்று இங்கு கூடியிருக்கும் பேச்சாளர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள். சமூக அரசியற் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் முதலில் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இன்று நாம் இதழாசிரியரும் , எழுத்தாளருமான நண்பர் கோமகனின் எழுத்து மற்றும் இதழியற் பங்களிப்பை உள்ளடக்கிய இலக்கியப் பங்களிப்பு பற்றிப் பேசுவதற்கும், அவரை நினைவு கூர்வதற்கும், அவரது இலட்சியக் கனவான நடு இணைய இதழின் அச்சு வடிவினை அறிமுகப்படுத்துவதற்காகவும் கூடியிருகின்றோம். அதற்காக இங்கு எழுத்துலக ஆளுமைகள் பலர் கலந்துகொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தம் கண்ணோட்டத்தில் கோமகனை நமக்கு அறிமுகப்படுத்தவிருக்கின்றார்கள்.

கோமகனை நான் ஒரு போதும் நேரில் சந்தித்ததில்லை. அவருடன் உரையாடியதுமில்லை. ஆயினும் அவரும் நானும் முகநூல் மெசஞ்சர் மூலம் தொடர்பிலிருந்தோம். அத்தொழில்நுட்பத்தினூடு உரையாடிக்கொண்டிருந்தோம். அவர் படைப்புகளை வேண்டி நிற்கும்போது என் படைப்புகளை வழங்கியிருக்கின்றேன். இணைய இதழ் தொழில்நுட்பம் பற்றிக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டிருந்தோம். அவருடனான எனது தொடர்பிலிருந்து அவரைப்பற்றியதொரு பிம்பம் என்னுள்ளத்திலிருந்தது. இதழாசிரியராக, எழுத்தாளராக விளங்கிய அவர் சுயமாகத் தகவற் தொழில் நுட்பத்தை இணையம் மூலம் கற்பதில் வெற்றியடைந்தார். அதனால் அவரால் நடு இணைய இதழைத் தனியாக வடிவமைக்க முடிந்தது. இவ்விதம் இணைய இதழொன்றினைச் சுயமாக வடிவமைத்து, ஆக்கங்களைப் பெற்று , அவற்றைப் பதிவேற்றுவதென்பது மிகவும் நேரத்தை எடுக்குமொரு செயல் என்பதைப் பதிவுகள் இணைய இதழை உருவாக்கிப் பராமரிப்பவன் என்னும் என் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் அறிவேன். ஆர்வமும், மிகுந்த அர்ப்பணிப்பும் இருந்தாலன்றி இவ்விதமான இணைய இதழொன்றினைத் தொடர்ச்சியாக வெளியிட முடியாது. இதனால்தான் பலர் இவ்வித இணைய இதழ்களை அல்லது வலைப்பூக்களை உருவாக்கிவிட்டு, ஆரம்பத்தில் சிறிது காலம் உற்சாகமாக இருந்துவிட்டு பின்னர் ஓய்ந்து விடுவார்கள். இதனால் எப்பொழுதும் எனக்குக் கோமகன் மீது தனிப்பட்ட மதிப்பும், அன்புமுண்டு.

மேலும் படிக்க ...

கனடாவில் நடைபெற்ற எழுத்தாளர் கோமகன் நினைவு கூரலும், நடு 50 இதழின் வெளியீட்டு நிகழ்வும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நிகழ்வுகள்
17 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று 3600 கிங்ஸ்டன் 'றோட்'டில் அமைந்துள்ள ஸ்கார்பரொ சமூக நிலையத்தில் நடு இணைய இதழாசிரியரும், எழுத்தாளருமான கோமகனின் நினைவு கூரல் நிகழ்வும், நடு 50 இணைய இதழ் வெளியீடும் நடைபெற்றது. நேரிலும் ZOOM செயலி மூலமும் எழுத்தாளர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். எழுத்தாளரும் , பதிவுகள் இணைய இதழ் ஆசிரியருமான வ.ந.கிரிதரனின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற நிகழ்வு அமரர் கோமகனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆரம்பமானது.

முதலில் வ.ந.கிரிதரன் கோமகனுடனான தனது அனுபவங்களையும், அவரது பன்முகப்பட்ட ஆளுமைகளைப்பற்றியும் , அவரது இலட்சியக் கனவான நடு இதழ் .அதன் எதிர்காலம் பற்றிய அவரது எண்ணங்களையும் குறிப்பிட்டு, நடு 50 இதழ் படைப்புகள் பற்றிய தனது கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார். நடு 50 இதழானது சிறந்த வடிவமைப்பில் மானுடரின் சமூக, அரசியற் சீர்கேடுகள், போர், சீதனப்பிரச்சினை, பொருந்தா மணம், சட்டரீதியாகத்திருமணம் என்னும் பெயரில் நடைபெறும் பாலியல் வன்முறை, இயற்கைச் சீரழிவு, காமம் அதன் விளைவுகள், பணியிடத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பாலியற் பிரச்சினைகள், போர்ச்சூழல் ஏற்படுத்திய அழிவுகள், அது பெண்கள் மேல் ஏவிவிட்ட பாலியல் வன்முறை, இளைஞர்கள் மேல் ஏற்படுத்திய வன்முறை எனப் பலவற்றைப் பேசுமொரு காத்திரமான இதழாக வெளிவந்துள்ளது என்று கூறியதுடன் , நடு இதழில் வெளியான படைப்புகள் சிலவற்றைப்பற்றிய தனது கருத்துகளையும் எடுத்துரைத்தார்.

அடுத்துப் பேசிய 'காலம்' இதழின் ஆசிரியரும், சிறந்த புனைகதை ஆசிரியருமான செல்வம் அவர்கள் பாரிசில் தான் சந்தித்த கோமகனுடான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அத்துடன் புலம்பெயர் இலக்கியமென்பது அக்காலகட்டத்து மக்களின் வாழ்வைப் பதிவுசெய்கின்றது. அவ்விலக்கியத்தில் கோமகனின் பங்களிப்பு முக்கியம் மிக்கது என்னும் கருத்துப்பட தன் கருத்துகளை முன்வைத்தார். அத்துடன் நடு இணைய இதழ் மூலம் பல்வேறு கருத்துகளைக்கொண்ட படைப்பாளிகளையெல்லாம் அரவணைத்துச் சென்றார். புதிய படைப்பாளிகள் பலரை (ஓவியர்கள் உட்பட) அறிமுகப்படுத்தியது அது முக்கியமானது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் படிக்க ...

கோமகன் நினைவும் , 'நடு' ஐம்பதாவது இதழ் வெளியீடும்!

விவரங்கள்
- தகவல்: யோக வளவன்-
நிகழ்வுகள்
14 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting

Meeting ID: 810 8733 4304
Passcode: 521902

நடு இணைய இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும், நடு பதிப்பக வெளியீட்டாளருமாகிய திரு. கோமகன் அவர்களை நினைவு கூரும் முகமாகவும், நடு சஞ்சிகையின் அச்சு பிரதியான 50 வது இதழை கனடாவில் வெளியிடும் முகமாகவும், எதிர்வரும் ஜூலை 16 ம் திகதி சனிக்கிழமை ஸ்காபுரோவில் கூட்டம் ஒன்று கோமகனின் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரொறன்டோ நேரம் :- மாலை 5.30 மணி
லண்டன் நேரம் :- இரவு 10.30 மணி
ஐரோப்பிய நேரம் :- இரவு. 11.30 மணி
இலங்கை நேரம்:- காலை 3.00 மணி ( ஞாயிற்று கிழமை )
அவுஸ்ரேலிய நேரம். காலை 7.30 மணி ( ஞாயிற்று கிழமை )

அக்கூட்டத்தினை 'பதிவுகள்' இணைய இதழ் ஆசிரியரும், எழுத்தாளருமாகிய வ. ந. கிரிதரன் தலைமையேற்று நெறிப்படுத்த உள்ளார்…
மேற்படி கூட்டத்தில் கோமகனின் நண்பர்களும் எழுத்தாளர்களுமாகிய

1) ஶ்ரீரஞ்சனி
2) செல்வம் ( காலம் சஞ்சிகை )
3) ஜயகரன்
4) கோமகனின் பால்ய கால நண்பர்கள்

என பலரும் உரையாற்ற உள்ளனர்.

மேலும் படிக்க ...

துயர் பகிர்வோம்: இனிய நண்பர் வே. நந்தீஸ்வரர்! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
14 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இனிய நண்பர் நந்தீஸ்வரர் அவர்கள் 27- 6 -2022 ஆண்டு கனடாவில் எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். பிறப்பு என்று ஒன்றிருந்தால் இறப்பு என்பதும் நிச்சயமே என்பதற்கிணங்க அவரது பிரிவையிட்டு அவரது குடும்பத்துடன் துயர் பகிர்ந்து கொள்வோம்.

பன்னாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவராவார். இவர் தனது காலத்தில் தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகப் புலம்பெயர்ந்த கனடிய மண்ணில் சமூகசேவகராக முன்னின்று உழைத்ததை யாரும் மறுக்க முடியாது. புலம்பெயர்ந்த பலர் தான் உண்டு, தன்குடும்பம் உண்டு என்று சுயநலமாக வாழமுற்பட்டபோது, ஒரு சிலர்தான் முன்வந்து பொதுநல சேவைகளில் ஈடுபடத் தொடங்கினர். அந்த வகையில் நண்பர் நந்தீஸ்வரனை மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்திலும், கனடா இந்து மா மன்றத்திலும் முனைப்போடு செயற்பட்ட ஒருவராக நான் சந்தித்தேன். அவரது சிந்தனை எல்லாம் தமிழ் மணவர்களது முன்னேற்றம் கருதியதாகவே இருந்தது. தனது நேரத்தையும் அதற்காகச் செலவிட்டார்.

பேராதனை பல்கலைக்கழகப் பொறியியல் பட்டதாரியான இவர் கணிதத்தில் சிறந்து விளங்கியதால் கனடாவில் சுற்றாடலில் உள்ள அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு இலவசமாகக் கணிதபாடம் கற்பிக்கத் தொடங்கினார். அதில் திருப்திப்படாத இவர் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினுடாக கணிதம், பொதுஅறிவு, தமிழ் போன்ற பாடங்களில் பரீட்சை வைத்து மாணவர்களை ஊக்குவிக்கத் தொடங்கினார். இதற்காகப் பல பயிற்சிப் பட்டறைகளையும் பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக நடத்திவைத்தார். தொடக்க காலத்தில் வருடாவருடம் சுமார் 1000 மேற்பட்ட தமிழ் மாணவர்கள் ரொறன்ரோ, மொன்றியல் போன்ற இடங்களில் இருந்து இந்தப் பரீட்சைக்குத் தோன்றினார்கள். சிறப்பாக இந்தப் பரீட்சைகள் நடைபெற்றதால், வடஅமெரிக்கா, இலங்கை போன்ற இடங்களில் இருந்தும் மாணவர்கள் பரீட்சைக்குத் தோன்றினார்கள். இன்று கனடிய தமிழ் சமூகத்தில் எழுச்சி பெற்று நல்ல நிலையில் இருக்கும் பலர் இந்தப் பரீட்சையில் தோன்றிக் கல்வியில் தங்கள் நிலை என்ன என்பதை இதன் மூலம் உறுதிப் படுத்தியவர்களேயாகும்.

மேலும் படிக்க ...

வன்னியியல் ஆய்வரங்கம் - 14 எழுத்தாளர் குரு சதாசிவம் அவர்களின் சிறுகதைகள் நூலாய்வும் அறிமுகமும்!

விவரங்கள்
- தகவல்: த.சிவபாலு -
நிகழ்வுகள்
14 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

மணற்கேணி இரு,மாத இதழ் பற்றி... - 'மணற்கேணி' ரவிக்குமார் -

விவரங்கள்
- 'மணற்கேணி' ரவிக்குமார் -
நிகழ்வுகள்
14 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இத்தகவல் இறுதி நேரத்தில் கிடைத்ததால் உரிய நேரத்தில் பிரசுரிக்க முடியவில்லை. ஒரு பதிவுக்காக பிரசுரிக்கின்றோம். - பதிவுகள்.காம் -


வணக்கம்! மணற்கேணி இருமாத இதழைத் தொடங்கி 12 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது 57 ஆவது இதழ் தயாராகி வருகிறது. தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் ஆய்விதழ்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தனக்கெனத் தனித்துவமானதொரு அடையாளத்தை மணற்கேணி உருவாக்கியிருக்கிறது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

2010 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் முதல் இதழ் வெளியானபோது கதை, கவிதை என படைப்பிலக்கியத்துக்கும் இடம் அளித்திருந்தது. பின்னர் ஆய்வுக் கட்டுரைகளை மட்டுமே வெளியிடும் ஒரு ஆய்விதழாகத் தன்னை மாற்றிக்கொண்டது.

மேலும் படிக்க ...

ஆங்கிலத்தில் வெளியாகும் முருகபூபதி எழுதிய நடந்தாய் வாழி களனி கங்கை ( Mystique of Kelani River) - மணிமாறன் -

விவரங்கள்
- மணிமாறன் -
இலக்கியம்
12 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் முருகபூபதியின் 71ஆவது பிறந்ததினம் ஜூலை 13. அவருக்குப் பதிவுகள் இணைய இதழும் ,வாசகர்களும் தம் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றார்கள். 

எழுத்தாளரும் ஊடகவியலாளருமான லெட்சுமணன் முருகபூபதிக்கு இம்மாதம் 13 ஆம் திகதி 71 ஆவது பிறந்த தினமாகும். அதனை முன்னிட்டு, அவர் ஏற்கனவே எழுதிய நடந்தாய் வாழி களனி கங்கை நூல் Mystique of Kelani River என்ற தலைப்பில் இம்மாதம் கிண்டிலில் மின்னூலாக வெளியாகிறது. இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் திரு. நூர் மகரூப் முகம்மட் , ஏற்கனவே முருகபூபதியின் சில ஆக்கங்களை மொழிபெயர்த்தவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. நூர் மகரூப் முகம்மட் , கவியரசு கண்ணதாசனின் வனவாசம் நூலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவராவார். நடந்தாய் வாழி களனி கங்கை கிழக்கிலங்கையிலிருந்து வெளியான அரங்கம் இதழில் முன்னர் தொடராக வெளியாகி, கொழும்பு குமரன் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டது. அரங்கம் இதழின் ஆசிரியர் திரு. சீவகன் பூபாலரட்ணம் தனது அணிந்துரையில் இந்நூல்பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

மேலும் படிக்க ...

'அன்னா கரினினா'வின் தமிழ்த்திரை வடிவம் 'பணக்காரி'

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
12 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் டால்ஸ்டாயின் புகழ் பெற்ற நாவல்களிலொன்று 'அன்னா கரினினா' . இந்நாவலைத் தழுவித் தமிழில் 1953இல் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் 'பணக்காரி' என்னும் பெயரில் திரைப்படமொன்றும் வெளியாகியுள்ளது. சித்தூர் நாகையா அன்னாவின் கணவன் கரீன் ஆக நடித்துள்ள திரைப்படத்தால் அன்னா வேடத்தில் நடித்திருப்பவர் அந்நாளைய 'கனவுக்கன்னி' டி.ஆர்.ராஜகுமாரி. இத்திரைப்படத்தில் அன்னாவின் காதலன் வெரோன்ஸ்கி என்னும் இளம் இராணுவ அதிகாரி வேடத்தில் நடித்திருப்பவர் யார் தெரியுமா? பின்னாளில் எம்ஜிஆர், புரட்சி நடிகர், மக்கள் திலகம் என்றெல்லாம் அறியப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரன்தான்.

மேலும் படிக்க ...

கிளிம் வாழ்வின் மூன்றாம் தொகுதி: -தமிழ் இலக்கிய உலகை, முன்னிறுத்தி (6) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
11 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

6

மேற்படி நடுக்கமூட்டும், ஆவிகளையும், ஆன்மாக்களையும் விட்டு இலக்கியத்துக்கு வந்தால், மரீனாவின் இலக்கிய அறிவும் கூட, வியக்கதக்கதாய் இருப்பதை கண்டு கிளிம் அதிசயிக்கின்றான். அது மிக மிக ஆழமானதாயும், சமயங்களில் உலக இலக்கிய வரலாற்றையே நாடி பிடித்து விடும் அளவுக்கு, பற்பல தளங்களுக்குள் ஊடுறுவுவதாகவும் அமைந்து விடுகின்றது.

இவளை ஒத்த, ஏனைய பலரைப் போலவே, பகுத்தறிவை அடியோடு வெறுக்கும் அவள், ஒரு சம்பாசனையின் போது, ‘இது சிறு குருவிகளுக்கான காலம் அல்ல’ என்ற தீர்ப்பை வழங்குவது கூட இத்தகைய ஓர் இலக்கிய அல்லது வாழ்நிலை நிலைப்பாட்டை அடிப்படையாக கொண்ட ஓர் கூற்றாகவே இருக்கின்றது. (1901 இல் கார்க்கியால் எழுதப்பட்டு, பலராலும் பெரிதும் புகழப்பட்ட  ‘புயல் பறவையின் பாடல்’  (SONG OF THE STORMY PETREL) எனும் கதையையே மரீனா இவ்வாறு குறிக்கின்றாள்).

இதேப்போன்று, மறுபுறத்தில், நாவலின் இன்னுமொரு பாத்திரமான, மேலே கூறப்பட்ட, வெலண்டைனின், இலக்கியம் தொடர்பிலான கூற்றுக்களும், ஒரு புள்ளி வரை, மரீனாவின் பிரச்சினைக்குரிய இலக்கிய நிலைப்பாடுகளுடன் ஒட்டி செல்வதாகவே அமைந்துள்ளன. (இது குருவிகளுக்கான காலம் அல்ல என்பதுப்போல்)!

கிளிம்மை பொறுத்தவரை, டஸ்டாவஸ்கியின் அமைதியற்ற பாத்திரங்கள் கிளிம்மின் சிந்தையை ஆகர்சிப்பதாகத் தெரிகின்றது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. நூற்றுக்கணக்கான, அல்லது ஆயிரக்கணக்கான பிம்பங்களை தனக்குள் தேக்கி தேக்கிச் சேமித்து வைத்திருக்கும் கிளிம்மிற்கு அவ்விம்பங்களே பிரச்சினைகளை தோற்றுவிக்கும் அடிப்படைகளில் ஒன்றாக, காலப்போக்கில் உருவெடுப்பதாய் உள்ளது.

மேலும் படிக்க ...

ஊருக்குள் இரண்டு காளி! - எஸ்.வைத்தீஸ்வரன் -

விவரங்கள்
- எஸ்.வைத்தீஸ்வரன் -
சிறுகதை
11 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- தற்போது 'காளி' குறும்படத்தையொட்டி எழுந்துள்ள சர்ச்சையை ஒட்டிய சர்ச்சையொன்று இச்சிறுகதையில் வரும் ஓவியனொருவனின் 'காளி' ஓவியத்துக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இக்கதை எழுதப்பட்டது 2015 ஆம் ஆண்டில் என்பது கவனத்தில் வைக்கத்தக்கது. -


வகுப்பில் கலைகளின் வெவ்வேறு மரபுகள் பற்றியும் அதன் சமூக வரலாற்று முக்கியத்துவங்களையும் பற்றியும் ஆசிரியர் சிக்கலான மொழிப்பிரயோகங்களை உபயோகித்து தன் அகராதி அறிவை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். இருக்கையில் நெளிந்தவாறு ஜன்னலுக்கு கீழே வெளியே தெரிந்த திறந்த வெளி சிற்பக் கூடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே சிற்பக்கலை பயிலும் மாணவர்கள் சிலர் சிற்பத்தை வடிவப்படுத்துவதில் மௌனமாக செயல்பட்டு வந்தார்கள். அவர்கள் கைவண்ணத்தில் அந்தக் கல் மெல்ல மெல்ல வடிவம் பெற்று புதிய உருவங்களின் சாயல் திகைந்துகொண்டிருந்தது. ஒரு சிற்பம் நிதானமாக உருவாகும் அதிசயத்தை அது எனக்குத் தந்துகொண்டிருந்தது.

வகுப்பு கலைந்தவுடன் நான் கீழே இறங்கி அந்த சிற்பக் கூடத்துக்குப் போனேன். அங்கே நான்கு மாணவர்கள் செதுக்கிக்கொண்டிருந்தார்கள். அந்த நான்குமாணவர்களில் ஸவீதாவும் ஒருவர். ஸவிதா இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சிற்பக்கலை மாணவி. பார்ப்பதற்கு சற்றுக் கருப்பாக இருப்பாள். மத்யப்பிரதேசத்திலிருந்து வந்திருந்த பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவள் அருமையான மாணவி. அவள் சிற்பம் செதுக்கும்போது அவளை கவனிப்பது மிக உற்சாகமாக இருக்கும். அவள் உடல் மனம் கைகள் அத்தனையும் அந்தக் காரியத்திலேயே கரைந்து போய்விட்டது போல் இருக்கும். சூழலை மறந்து சிற்பத்தை சுற்றிச்சுற்றி வந்து பல்வேறு கோணங்களில் அதன் ஒத்திசைவை சரி பார்த்தவண்ணம் அவள் முனைப்புடன் செதுக்கிக்கொண்டிருந்தாள். சுற்றிலும் இருந்த உயரமான மரங்களின் அடர்த்தியைத் தாண்டி தகிக்கும் வெய்யிலால் வழிந்த வியர்வையையும் பொருட்படுத்தாமல் அவ்வப்போது நெற்றியைத் துடைத்துக் கொண்டவாறு அவள் செயலில் ஈடுபட்டிருந்தாள்.

மேலும் படிக்க ...

குறுநாவல்: புகையில் தெரிந்த முகம்! - அ.செ.முருகானந்தன் -

விவரங்கள்
- அ.செ.முருகானந்தன் -
நாவல்
11 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அ.செ.மு,.வின் 'புகையில் தெரிந்த முகம்' பற்றிச் சில வார்த்தைகள்!

மாயவாத சித்திரிப்பில் எழுதப்பட்டுள்ள நடேசனின் பண்ணையில் ஒரு மிருகம்' என்னும் தலைப்பில்  ஜொஸப்பின் பாபா (துணைப் பேராசிரியர், புனித சேவியர் கல்லூரி பாளையங்கோட்டை )  எழுதிய விமர்சனத்தை வாசித்தபோது தமிழகப் பண்ணையொன்றில் கால்நடை வைத்தியராகச் செல்லும் ஒருவரிடம் அங்கு காதற் பிரச்சினையால் காதலன் படுகொலை செய்யப்பட, தற்கொலை செய்துகொண்ட கற்பகம் என்னுமொரு பெண் தன் கதையைக் கூறுவதாகக் கதையோட்டம் செல்வதை அறிய முடிந்தது.

இறந்தவர்கள் தம் கதைகளைக் கூறி தம் கொலைகளுக்கான மர்மத்தைத் தீர்க்கும் வகையிலான படைப்புகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. உலகப்புகழ் பெற்ற நாவல்களிலொன்றான நோபல் பரிசு பெற்ற துருக்கிய நாவலாசிரியரான ஓரான் பாமுக்கின் 'எனது பெயர் சிவப்பு' (My Name is Red) நாவல் இத்தகைய பாணிப் படைப்புகளிலொன்று. 'மாஜிக்கல் ரியலிசம்' மிக்க பின் நவீனத்துவப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. ஆனால் இது போன்ற பாணியில் அமைந்த குறுநாவலொன்றினை ஐம்பதுகளிலேயே இலங்கைத் தமிழ் எழுத்தாளர் ஒருவர் எழுதியுள்ளார் என்பது கவனத்துக்குரியது. அவர் அ.செ.முருகானந்தன். அக்குறுநாவல் சுதந்திரன் வாரவெளியீட்டில் தொடராக வெளியாகி, நவலட்சுமி புத்தகசாலை (136 செட்டியார் தெரு, கொழும்பு) பதிப்பகத்தால் 1950இல் வெளியிடப்பட்ட 'புகையில் தெரிந்த முகம்'. 

மேலும் படிக்க ...

மாயவாத சித்திரிப்பில் எழுதப்பட்டுள்ள நடேசனின் பண்ணையில் ஒரு மிருகம்! - ஜொஸப்பின் பாபா ( துணைப் பேராசிரியர், புனித சேவியர் கல்லூரி பாளையங்கோட்டை )

விவரங்கள்
-- ஜொஸப்பின் பாபா ( துணைப் பேராசிரியர்,புனித சேவியர் கல்லூரி பாளையங்கோட்டை )
நூல் அறிமுகம்
10 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் நடேசன் அவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்த காலப்பகுதியில் சென்னக்கு அடுத்திருந்த காஞ்சிபுரம் பகுதியில் ஒரு கிராமத்தில் அமைந்திருந்த பண்ணையில் வேலை செய்தபோது பெற்ற அனுபவங்களை பின்னணியாக வைத்து எழுதப்பட்ட நாவல்தான் பண்ணையில் ஒரு மிருகம் . தமிழ்நாடு காலச்சுவடு பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. இதன் முன்னுரையில் நடேசன் எழுதியிருக்கும் குறிப்புகளிலிருந்தே இந்த செய்தியையும் அறிய முடிகிறது. அந்தப் பண்ணையில் மேற்பார்வையாளராக அவர் வேலைக்கு வந்து சேர்வதுடன் கதை ஆரம்பிக்கிறது. ஒரு மிருக மருத்துவராக இருந்தும் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் அங்கு அதே மருத்துவராக வேலை செய்ய சட்டச் சிக்கல்கள் உள்ளதை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க ...

தமிழுக்குப் புதிய சொல் `சதிவிரதன்’ – குரு அரவிந்தனின் சிறுகதைத்தொகுதிய முன் வைத்து - கே.எஸ்.சுதாகர் -

விவரங்கள்
- கே.எஸ்.சுதாகர் -
நூல் அறிமுகம்
10 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தொகுப்பின் முதல் கதை `சதிவிரதன்’. அறிவியல் சார்ந்த வித்தியாசமான படைப்பு. பல காரணங்களை முன்னிட்டு, உறைபனிக்காலங்களில் மனிதர்களை தொடர்ச்சியாக நான்குமாதங்கள் தூங்க வைக்கும் `உறங்குநிலைத்திட்டம்’ ஒன்றை பேராசிரியர் ராம், தன் உதவியாளர்களான மைக்கல், யூலி என்பவர்களுடன் சேர்ந்து முன்வைக்கின்றார். கதையின் முன்பகுதி அறிவியல் சார்ந்து பல விடயங்களை அலசி ஆராய்கின்றது. அறிவியலின் தாக்கம் மனித உணர்வுகளில் ஏற்படுத்தும் பிரதிபலிப்புகளைப் பின்பகுதி சொல்கின்றது. அல்லது கதையின் தலைப்பான `சதிவிரதனு’க்கானது. பேராசிரியர் கண்டுபிடித்த அறிவியல் அவருக்கே வினையாகின்றது. விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாக, தன் உதவியாளர் யூலியின் மீது விழுந்துவிடுகின்றார். குரு அரவிந்தனின் கற்பனைக்கு ஒரு சபாஷ்.

இயற்கையோடு மழை குளிருக்கு இணைந்து பழக்கப்பட்ட விலங்கினங்கள், பறவையினங்கள் உறங்குநிலைக்குப் (Hibernating) போவதற்கும் – மனிதர்களுக்கு ஊசியைப் போட்டு செயற்கையாக உறங்குநிலைக்குப் போக வைப்பதற்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. மனிதர்களை தொடர்ச்சியாக தூங்க வைப்பதன் மூலம் எதனைச் சாதிக்கலாம்? வாழ்க்கை என்பது வாழ்வதற்கே! உறங்குவதற்கு அல்லவே! பேராசிரியர் உறங்குநிலைத்திட்டத்தை விடுத்து குளிரிலும் உறைபனியிலும் மனிதர்கள் வாழ்வதற்கு ஏதுவாக ஏதாவது மருந்தைக் கண்டுபிடிக்க முயற்சித்திருக்கலாம் என்பது எனது கருத்து.

மேலும் படிக்க ...

ஈழத்து இலக்கியப் பரப்பில் ஐந்து தசாப்த காலமாகச் சுடர்விட்டுப் பிரகாசித்தவர் நாவேந்தன்..! - பத்மபாரதி -

விவரங்கள்
- பத்மபாரதி -
அரசியல்
06 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

யூலை 10 நாவேந்தன் நினைவுதினம்

'நற்றமிழுக்கு ஒரு நாவேந்தன்" எனப் புகழ்பெற்றவர் நாவேந்தன். ஈழத்து இலக்கியப் பரப்பில் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகச் சுடர்விட்டுப் பிரகாசித்தவர். சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், கட்டுரை, விமர்சனம் எனப் பல்துறைகளிலும் அவர் எழுதிக் குவித்தவை ஏராளம். தமிழகத்திலும், ஈழத்திலும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றிலும் அவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றில் சிலவே நூலுருப்பெற்றன. நாவேந்தன் பன்முகத்தன்மை வாய்ந்தவர். நாடறிந்த நல்லதோர் பேச்சாளராகத் திகழ்ந்தவர். அற்புதமான எழுத்தாளர். சிறந்த தொழிற்சங்கவாதி. ஆளுமைமிக்க அதிபர். 'நாவேந்தன், தமிழகத்துத் தலைசிறந்த பேச்சாளர் வரிசையில் வந்த ரா. பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், அண்ணாதுரை போன்றோரின் வழியில், இலங்கையில் அழகுதமிழில் எளிமையாகப் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் ஆற்றொழுக்காகப் பேசும்பாணியில் ஒரு முன்னோடியாக விளங்கியவர்.

தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அதன் இளைஞர் அணி முக்கியஸ்தராகக் கட்சிக் கொள்கைகளைப் பரப்பித் தமிழ் உணர்வும் தமிழ்த் தேசியவாதமும் வட கிழக்குப் பகுதிகளில் பட்டி தொட்டிகளிலெல்லாம் பரவும் வகை செய்தார். சுதந்திரன் பத்திரிகையில் ஆஸ்தான எழுத்தாளராகப் பல புனைபெயர்களில் பொருள் மிகுந்த கருத்துக்களை அள்ளித் தெளித்தவர். இவர் நடத்திய 'சங்கப்பலகை" என்ற பத்திரிகையில் 'நக்கீரன்" என்ற பெயரில் நாவேந்தன் எழுதிக் குவித்தவை எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் முன்வைத்த வாதங்களையெல்லாம் தவிடுபொடியாக்கும் தர்க்க முறையான வாதத்திறன் கொண்டவையாக அமைந்திருந்தன. அரசியல் எதிராளிகள் நாவேந்தன் மீது கொண்டிருந்த அச்சமும் நியாயமானதே.

"தமிழ்த் தேசிய வாதம் இன்று உண்மையாக வளர்ச்சியுற்று அகில உலகக் கவனத்தை ஈர்த்ததுடன் தென்னாசியாவில் ஒரு உறுதியான கருத்திற் கொள்ள வேண்டிய சக்தியாக வளர்ந்துள்ளதென்றால் அதில் நாவேந்தனுக்கும் ஒரு முக்கிய இடமுண்டு." இவ்வாறு தனது கல்லூரிக் காலம் முதல் நாவேந்தனை நன்கறிந்த பேராசிரியர் சோ. சந்திரசேகரன் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ...

நற்றிணைக் காட்டும் பெண்பாற் புலவரின் மனவுணா்வு - முனைவர். கு.செல்வஈஸ்வரி, உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி , சிவகாசி.

விவரங்கள்
முனைவர். கு.செல்வஈஸ்வரி, உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி , சிவகாசி.-
ஆய்வு
06 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை
கல்வி அறிவின் கண் சிறந்து விளங்கும் பெண்பாற்புலவர்கள் அகப்பாடல்களில் மிகுதிபட பெண்மையின் மனஉணர்வினை எடுத்தியம்புவதில் ஆணிவேராகத் திகழ்ந்துள்ளனர் என்றால் மிகையாகாது. பெரும்பான்மை ஆண்களை விட பெண்களே அதிகஅளவில் பாதிப்படைவதுண்டு. ஆண்கள் தனது மனவுணர்வுகளை எளிதில் எடுத்துரைப்பது இல்லை. ஆனால் பெண்ணினமோ மனச்சுமை குறைய பிறரிடம் புலம்பி ஆறுதல் அடைவர். தன்னம்பிக்கை உள்ளம் கொண்டவராக இருந்தாலும் இளகும் பண்புள்ளம் பெண்ணினத்திற்கே உரியதாகும். சங்ககாலத்தில் தலைவி தலைவனது பிரிவை எண்ணி வருந்தும் தவிப்பினை ஒரு பெண்ணாக உள்ளுணர்ந்து புலவர்கள் பாடியிருப்பது போற்றுதலுக்குரியதாகும். குறிப்பாக, நற்றிணைப் பாடலைப் பாடிய பெண்பாற்புலவருள் சுமார் 21க்கு மேற்பட்டோர் தன்னிலை எண்ணிப் பாடிய பாங்கினை அறியலாம். அதாவது ஒரு பெண்ணிற்கு ஏற்படும் துயரினை வேறொரு பெண் அறிந்து தான் அடைந்த துயராகக் கருதி வெளிப்படுத்தும் தன்மையினைப் பின்வரும் நற்றிணைப் பாடல் வழிக் காண்போமா.
பொழுது கண்டு புலத்தல்

காலமாகிய பருவம் கண்டு தனிமையில் வருந்துதல் இருபாலாருக்கும் பொதுவான ஒன்றாகும். அக்காலத்தில் தலைவன் வருவதாகக் கூறிச் சென்ற பருவம் வாராமையால் தலைவி தனிமையில் ஏங்கி வருந்துவாள். பொழுது (பிரிவு) கண்டு பொறுத்துக் கொள்ளாத தலைவி அவனை நினைத்து மனவேதனைக்கு ஆட்படுகின்றாள். தலைவனது நினைவில் உணவின்றி, உறக்கமின்றி துன்புறும் காட்சியினை நிறைய சங்கப்பாடல்கள் பதிவுசெய்துள்ளன. உதாரணமாக, வறண்ட பாலை நிலத்தில் பொருள்வயிற் பிரிந்தோனை எண்ணி புலம்பும் காட்சியை நல்வெள்ளியார் தன் மனஉணர்வோடு இயைத்து பின்வருமாறு பாடுகிறார்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும். கவிஞர் லீனா மணிமேகலைக்குத் துணைநிற்போம்! - லதா ராமகிருஷ்ணன் -
  2. நிகழ்வு; தமிழ் இணையம் 100 (Tamil internet 100) - முனைவர் துரை மணிகண்டன் -
  3. வாசிப்பும் யோசிப்பும் (378): தத்யயேவ்ஸ்கி நூல்களுக்குப் புறக்கணிப்பா?..... - வ.ந.கிரிதரன் -
  4. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல்: "நவீன தமிழிலக்கியத்தின் அழகியல் - புனைகதை மற்றும் நவீன கவிதை தொடர்பான சிந்தனைகள்”
  5. அது ஒரு 'கட் அவுட்'காலம்! யாழ் ராணியில் 'மாட்டுக்கார வேலன்' 'கட் அவுட்'!
  6. எழுத்தாளர் அகிலன் ( 1922 – 1988 ) நூற்றாண்டு ஆரம்பம் ! இந்திய ஞாடபீட விருதைப்பெற்ற முதல் தமிழ் படைப்பாளி ! - முருகபூபதி -
  7. அண்டனூர் சுராவின் 'தீவாந்தரம்' - வ.ந.கிரிதரன் -
  8. இலங்கை இளம் மலையகத் தமிழ்க் கவிஞர்களுக்கான கவிதைத்தொகுப்பு நூலிற்குக் கவிதைகள் வரவேற்பு! இறுதி நாள் – 10.07.2022 வரை! - ஜெ.கார்த்திக் (தமிழ்நாடு) -
  9. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் ஐந்து கவிதைகள்
  10. மேலைத்தேசத்தவரான ஹோரேஸ் ஹேமன் வில்சனின் இந்துக்கற்கைகள் தொடர்பான பங்களிப்புகள்! - கோ.ஆரணி, கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, இலங்கை -
  11. எழுத்தாளர் அகிலனின் நூறாவது பிறந்ததினம்!
  12. எழுத்தாளர் டொமினிக் ஜீவா பிறந்ததினம் இன்று!
  13. ஜூன் 27 அமரர் டொமினிக் ஜீவா அவர்களின் பிறந்ததினம்!
  14. முகநூற் குறிப்புகள்: மரத்தை வளர்ப்போம்! மண்ணைக் காப்போம்! - க.ஸ்ரீதரன் ('தரன்சிறி') -
பக்கம் 80 / 115
  • முதல்
  • முந்தைய
  • 75
  • 76
  • 77
  • 78
  • 79
  • 80
  • 81
  • 82
  • 83
  • 84
  • அடுத்த
  • கடைசி