நனவிடை தோய்தல்: மறக்கமுடியாத 'ஏரோகிராம்'! -இந்து லிங்கேஸ்-

காலச் சுழற்சிக்குள் ஊரில் வாழ்ந்து, அனுபவித்து மகிழ்ந்தவையெல்லாம் இப்போது ஞாபக முடிச்சுக்களாகவே மனசுக்குள் பின்னிக் கிடக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாய் அவிழ்த்து விடுதலையாக்குதல் என்பதும் ஒருவித சுகம்தான்! அதிலொன்றுதான் அன்று நாம் எழுதிய கடிதங்கள்.
பிறந்த மண்ணையும், ஊர் கூடி மகிழ்ந்த வாழ்வையும் தொலைத்துவிட்டு, பெற்றோர், உற்றார், உறவினர் என எல்லோரையும் பிரிந்து முன்பின் தெரியாத வெளிநாட்டுக்கு வந்த நம்மினத்தின் முதல் எதிர்பார்ப்பு என்றால் என்ன தெரியுமா? ஊரிலிருந்து ஒரு கடிதம் வராதா, அப்பாவோ, அம்மாவோ, சகோதரங்களோ, சொந்தங்களோ எல்லோரும் என்ன பாடோ? ஒவ்வொருநாளும் கடிதத்திற்காகக் காத்திருந்து, ஏமாந்த நாட்களைவிட, மாதங்களே அதிகம். என்றோ ஒருநாள் வீட்டிலிருந்து கடிதம் வந்துவிட்டால், என் மனசு துள்ளிக்குதித்துக் கொண்டாடும்.
கடிதங்கள் என்றதும், கற்றுவந்த கல்லூரிகள்தான் எல்லோர்க்கும் நினைவு வரும். கடிதம் எழுதுவது என்பதிலும்கூட பயிற்சியெடுத்து, அதிலும் தாராளமாய்ப் பிழைகள் விட்டு, ஆசிரியர்களிடம் அடிவாங்கியவர்களும் உண்டு ."இந்த இடத்தில ஏன் காற்புள்ளி போடேல்ல, இங்கே முற்றுப்புள்ளியை மறந்திட்டாய். ஒன்றை மற்றவர் சொன்னமாதிரி எழுதிவிட்டு, அதற்கு ஏன் மேற்கோள் குறிகள் போடேல்ல, அது என்ன உன்ர வீட்டு ஆடு, மாடே சொன்னது? கடிதத்தில ஆச்சரியமா! லட்சுமி குட்டிகள் போட்டதில ஒரு குட்டி செத்துப்போய்ச்சு என்று கவலையா, அதுவும் வடிவா எழுதிப்போட்டு அந்த வசனத்தை முடிக்கேக்க ஆச்சரியக்குறியை போட்டிருந்தால் நல்லாயிருந்திருக்கும். அதையும் மறந்திட்டியா, இல்லை நான் படிப்பிக்கேக்க நீ கிரகிக்கேல்லயா" என்று அதுக்கும் சேர்த்து ஒரு அடி விழும். கடிதமோ, கதையோ, கட்டுரையோ என்று எல்லாவற்றையும் எப்படி ஒழுங்காக, உறுப்பெழுத்தாக எழுதுவதென்று பயின்று, கற்றுத்தேர்ந்து வந்த எமக்கு இன்று எம்மொழியிலேயே பிழையின்றி எழுதுவதென்பது கல்லில் நாருரிப்பதுபோல!


வரலாறு தன்னைத்தானே சிதைத்துக்கொள்ளும் தருணங்களில், மொழி தனது வழக்கமான அழகியலை இழந்து ஒரு 'சாட்சியமாக' (Witness) மாறுகிறது. "பள்ளிமணி வான்வெளியிலிருந்து விழுந்த போது” (When the School Bell Fell from the Sky) என்பது வெறும் கவிதை அல்ல; அது ஒரு மீ-கவித்துவப் புலம்பல் (Meta-Poetic Lament). இங்கே 'பள்ளி மணி' என்பது காலத்தின் அறிவிப்பு. அது வானத்திலிருந்து விழும்போது, ஒரு தலைமுறையின் எதிர்காலம் புவிமட்டமாக்கப்படுகிறது. இந்தக் கவிதைகளில் தாய்மார்களின் துயரம் ஒரு தனிநபர் உணர்வல்ல; அது மனித நாகரிகத்தின் தோல்வியைக் காட்டும் ஒரு கண்ணாடி. நவீனத்துவக் கவிதையின் சுருக்கமும், மௌனத்தின் அடர்த்தியும் இதில் இழையோடுகின்றன. ஒரு பள்ளி அழிக்கப்படும்போது, அங்கே ஒரு கட்டிடம் வீழ்வதில்லை; மனிதகுலம் தன்னைக் குறித்து வைத்திருந்த 'நம்பிக்கை' எனும் விதை கருகிப் போகிறது. இநப் பிரதி அந்த இழப்பின் உண்மையை மறதிக்கு எதிராகப் பாதுகாக்கும் ஒரு தார்மீகச் செயல்.
கட்டுரையாளர்: முனைவர் பீ. பெரியசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி, ஆரணி, திருவண்ணாமலை- 632317,
முருகு எனும் சொல் முருகனைக் குறிக்கின்றது. இந்த முருகனைப் பற்றி பல்வேறு தொன்மக் கதைகள் புனைந்துள்ளனர். அந்த வகையில் மிகவும் கவனிக்கத்தக்கது முருகன் சிவசக்தி மகனானது. ஆரம்ப கால முருக வழிபாட்டில் முருகன் யாருடைய மகனாகவும் (பரிபாடல், திருமுருகாற்றுப்படை தவிர்த்து..) பேசப்படவில்லை. மாறாக அவன் குறிஞ்சி நிலத்தின் தலைவனாகவும், போருக்கு உரியவனாகவும், நோய் தீர்ப்பவனாகவுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளான். அவ்வாறான முருகன் இடைக்காலத்தில் சைவனாகவும் சிவசக்தி மைந்தனாகவும் திருமால் மருகனாகவும் புனைந்தது இந்து மத பரப்பும் நோக்கிலும் பிற வட இந்திய கடவுளோடு முருகனை இணைக்க வேண்டும் என்ற வலிய நோக்கத்தோடும் இது செய்யப்பட்டிருக்க வேண்டும். இங்கு முருகன் வெறியாட்டு உரியவன் செம்மறி ஆடு பலி பெற்றவன். சைவ கடவுளரகளோடு வலிய இணைத்ததன் காரணமாக அவன் சைவ படையலுக்கு உரியவனாக மாற்றம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் வழிவழியாக இருந்து வந்த தமிழர்களின் வழிபாட்டு நிலையிலும் பண்பாட்டு நிலையிலும் இந்த கடவுள் இணைப்பு என்பது மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி இன்று அனைவரும் முருகனை சைவனாக ஏற்று சைவ படையலிட்டு வழிபடுவதை நாம் காண்கின்றோம். இது நம் பண்பாடு, நாகரிகம், வழிபாட்டு மரபு ஆகியவற்றின் மீதான மிகப்பெரிய சவாலான தாக்கம் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் வேலனின் வெறியாட்டு நிலையும் கேரள தெய்யமும் எவ்வாறு ஒன்று என்கிறோம் என்பதை இவ்வாய்வு விரிவாக பேசவுள்ளது.
சட்டத்தரணியும், எழுத்தாளரும், தமிழ் இலக்கியத் தோட்ட இயக்குநர்களில் ஒருவருமான மனுவல் ஜேசுதாசன் அவர்கள் மறைந்த செய்தியினை அறிந்தேன். பதினாறு ( சிறுகதைத்தொகுதி), 90 நாட்களுள் (நாவல்) ஆகிய நூல்களின் ஆசிரியர். இவர்தம் புனைகதைகள் புகலிடத் தமிழர்களின் பல்வகை வாழ்க்கைச் சவால்களை வெளிப்படுத்துபவை. 
அமெரிக்காவின் போர்களை ஈரான் கடந்த இருபது ஆண்டுகளாக உன்னிப்பாகக் கவனித்து, ஆய்வு செய்து வந்துள்ளது என்பதே அதன் வெற்றிக்கான முதல் காரணம். ஈரான் வெறுமனே பார்வையாளராக மட்டும் இருக்கவில்லை; அது ஒரு மாணவனைப் போல, அமெரிக்க இராணுவ வியூகங்களின் பலம் மற்றும் பலவீனங்களை நுட்பமாகப் பகுப்பாய்வு செய்தது.
இசை & குரல்: SUNO AI ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
பெரும்பாலும் கவிஞனாகவே அறியப்பட்ட பாரதி, பெருமளவு எழுதியது என்னவோ கட்டுரைகளே. அதிலும் 1905-1907 காலப்பகுதியில் அவனது கட்டுரைகளில் பெரும்பாலானவை அரசியல் கட்டுரைகள் என வரையறுக்கப்படலாம். இன்னும் சில சமூகம் சார்ந்த கட்டுரைகள் என்றும் கூறப்படலாம்.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகை நிறுவனமொன்றினை நடத்தும் குடும்பம் கொடுக்கும் விருது ஞானபீட விருது. இது இந்திய அரசின் சாகித்திய அமைப்பு கொடுக்கும் விருதினைப் போன்றது அல்ல. ஆனால் மதிப்புக்குரிய விருதாகக் கருதப்படும் விருது. இதற்கு இம்முறை எழுத்தாளர் வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது. அவரது திரைப்பாடல்கள் மூலம் கவிஞர் வைரமுத்துவாக மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் அவர். அவரது இதுவரை கால கலை, இலக்கியப் பங்களிப்புக்காகக் கொடுத்திருக்கின்றார்கள். தனிப்பட்ட அவரது படைப்பு ஒன்றுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட வில்லை. 
நந்தா, போரின் சாம்பல் மேடுகளிலிருந்து உயிர்த்தெழுந்த ஒரு பீனிக்ஸ் பறவை. குண்டுச் சத்தங்கள் காதுகளில் ரீங்காரமிட, இரத்த வாடை நாசியில் ஒட்டிக்கொண்டிருக்க, அந்த தேசத்தை விட்டு வெளியேறினாள். சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் கணவனையும், நினைவுகள் உறங்கும் வீட்டையும் விட்டுவிட்டு, நான்கு பிள்ளைகளைத் தன் சிறகுகளுக்குள் பொத்தி வைத்துக்கொண்டு ஒரு ஐரோப்பிய தேசத்தில் வந்திறங்கினாள்.
மகாகவி பாரதியார் பாடல் - மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
மகாகவி பாரதியார் பாடல் - ஜய பேரிகை கொட்டடா
வ.ந.கிரிதரன் பாடல் - இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
பாரதியாரின் 'நிற்பதுவே,நடப்பதுவே' பாடலை செயற்கை நுண்ணறிவு மூலம் இசையமைத்துப் பாட வைத்திருக்கின்றேன்.
பாரதியாரின் 'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!' பாடலை செயற்கை நுண்ணறிவு மூலம் இசையமைத்துப் பாட வைத்திருக்கின்றேன்.



கட்டுரையாளர்: அருணாசலம் லெட்சுமணன், அமைப்பாளர், நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம், அதிபர்- ம.மா-கொத்- உனுக்கொட்டுவ தமிழ் வித்தியாலயம்.
தென்னிந்தியாவில் இருந்து வருகைத்தந்து இலங்கையின் பெருந்தோட்ட பொறிமுறையினை விருத்தி செய்வதில் இந்திய வம்சாவளி தமிழர்களின் பங்கேற்பு மிக முக்கியத்திற்குரியதாக விளங்குகிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான பூர்வீகத் தொடர்பு நிலைகள் குறித்த ஆதாரங்கள் பல உள்ளன. அவ் ஆதாரங்களை முன்வைப்பதில் இராமாயண சித்திரிப்புக்கள் குறித்த பார்வை மிகுந்த கவனத்தை பெறுகின்றன. இவ்வாறான தொடர்பு நிலைகள் பல இருந்த போதிலும் 1823ம் வருடத்தை பிரதானப்படுத்திய நகர்வு 'மலையக சமூக' உருவாக்கத்தில மிக முக்கிய கட்டமாக அமைகிறது. அப் பிரயத்தனத்தில் 'மலையகம் - 200' என்ற கோசத்தின் பின்னணியில் இடம்பெற்ற நிகழ்வுகள் அவதானத்திற்குரியதாக அமைந்தன. இவ் இருநூறு வருடகால அவதானிப்பில் மலையக மக்களின் வரவு, வாழ்வு, புலம்பெயர்வு, இருப்பின் ஆர்வம், புலம்பெயர்வின் நிர்ப்பந்தம், பிரயோக அரசியலின் பலம் பலவீனம், கலை பண்பாட்டு அம்சங்கள், கல்வி நிலைகள், பொருளாதார நகர்வுகள் போன்றவை பற்றிய அவதானங்களும் கவனத்தை பெறுகின்றன. மலையக மக்களின் இருப்பை தக்க வைப்பதிலும் அவர்களின் அடையாளத்தை பிரதிபலிப்பதிலும் கலைகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. அக் கலைகளுள் முத்தாய்ப்பாகவும், மலையகத்தின் முக்கூத்துக்களில் மூலமாகவும் அமையும் காமன்கூத்து மலையக மக்களை ஒருங்கிணைப்பதில் முக்கிய வகிபங்கை பெறுகிறது எனலாம்.
வ.ந.கிரிதரனின் பாடல் : "ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி
- எழுத்தாளர் மாத்தளை வடிவேலன் அவர்கள் மறைந்தார் என்னும் தகவலை அறிந்தோம், துயர் அடைந்தோம், அவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரிலும் பதிவுகளும் பங்கு கொள்கின்றது. அவர் நினைவாக , கலைம், இலக்கியத்திறனாய்வாளர் மு.நித்தியானந்தன் மாத்தளை வடிவேலனின் சிறுகதைத்தொகுப்பு பற்றி எழுதிப் பதிவுகளில் வெளியான கட்டுரையை மீள் பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்.காம் -
நீர் வார்த்த அய்யனார்! - சுருளி காந்திதுரை (மதுரை) -
திரு முருகபூபதி அவர்கள் சமூகத்திற்கு செய்த பங்களிப்புகளை மூன்று முக்கியப் பிரிவுகளாகக் கூறலாம். எழுத்தாளர், சமூகப் பணியாளர், மற்றும் சமூகப் பதிவாளர். மெல்போர்ன் தமிழ்ச் சமூகத்தில் இம்மூன்று துறைகளிலும் ஒரே நேரத்தில் பணியாற்றியவர்களை காண்பது மிகவும் அரிது. முதலில் நான் பேச விரும்புவது எழுத்தாளர் என்ற அவருடைய பங்களிப்பைப் பற்றியே.
ஊழின்வலி பெறுஒரே உயிரினம் யான் மட்டுமே