பதிவுகள் முகப்பு

முல்லைமணியின் நினைவும், சிறுகதைகளும்! - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
நவஜோதி ஜோகரட்னம்
09 ஜூலை 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நான் கல்வி கற்றது இளவாலைக் கொன்வன்ற். ஆசிரியராகப் பணியாற்றியது தலவாக்கெல்ல சென்ற் பற்றிக்ஸ் கல்லூரி. பண்டாரவளை பிந்துனுவௌ ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் எனது ஒரு வருட பயிற்சியை முடித்த பின்னர் மிகுதிக் காலப் பயிற்சியை நான் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் மேற்கொண்டிருந்தேன். நாட்டு நிலை கொந்தளிப்பான நிலை. 1980களின் முற்பட்ட காலப்பகுதி அது. அவ்வேளை திரு.முல்லைமணி அவர்கள் எனது விரிவுரையாளராக இருந்தார்; என்பது பெருமை தருகின்ற விடயம். அவ்வேளையில் கவிஞர் இ.முருகையன், வேல் ஆனந்தன்,  வீரமணி ஐயர். புவனேஸ்வரி ராமகிருஷ்ணா, துரைராஜா,  அடைக்கலமுத்து, சுவர்ணா நவரட்னம் போன்ற பலர் விரிவுரையாளர்களாகக் கடமையாற்றியவர்கள். அவர்களின் மாணவியாக இருந்தேன் என்பதும் பசுமையான நினைவுகளாகி வருகின்றன. அவ்வேளை திருமதி ஆனந்த குமாரசுவாமி அவர்கள்தான் அதிபராக இருந்தார்.

   முல்லை மணி சேரிடம் நான் தமிழ் பயிலும் வாய்ப்பு ஏற்பட்டதை பெருமையாகக் கருதுகின்றேன். அவ்வேளை ரசிகமணி கனக செந்திநாதனின் ‘விதியின் கை’ நாவல் மற்றும், இலங்கையர்கோனின் ‘வெள்ளிப்பாதசரம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு இரண்டு நூல்களும் (எமது 'சிலபஸ்') ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டி இருந்தது. நான் எழுதிய ஆய்வுகளைப் பார்த்ததின் பின்னர் கூடுதலாக சம்பாஷனைகளும் ஏற்பட்டன. நான் மேற்கொண்டிருந்த இரு நூல்களின் ஆய்வுகளும் தினகரன் வார இதழ் பத்திகையில் வெளியாகியிருந்தன. அதற்கு ஊக்கமளித்தவர்கள் முல்லை மணி சேர்,  நிட்சயமாக எனது இனிய தந்தை அகஸ்தியர் என்பதையும் இவ்விடத்தில் நினைவுகொள்ள விரும்புகிறேன்.

மேலும் படிக்க ...

வரலாற்றுச்சின்னம்: பாலத்தடி பஸ் தரிப்பு & கூகுள் வரைபடத் தவறு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
08 ஜூலை 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வரலாற்றுச்சின்னம்: பாலத்தடி பஸ் தரிப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து காரைநகர் நோக்கிச் செல்லும் பாதை ஓட்டுமடத்தில் திரும்பி, காக்கைதீவு மீன் சந்தை, கல்லுண்டாய் வைரவர் கோயில், வழுக்கியாற்றுப்பாலம் தாண்டியதும் இரண்டாகப் பிரிகிறது. மேற்காகப்பிரியும் பாதை தெற்கு அராலிக்கூடாகச்சென்று மீண்டும் , வடக்கு அராலிக்கூடாகச் செல்லும் பாதையை வட்டுக்கோட்டைச் சந்தியில் சந்தித்து , கிழக்காகச் செல்லும். வடக்காகக் செல்லும் பாதை  காரை நகரை நோக்கிச் செல்லும்.

மேலும் படிக்க ...

புதைகுழிகளாக மாறிய பள்ளிமைதானங்கள்! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
அரசியல்
08 ஜூலை 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இது எந்த நாட்டில் நடந்தது என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எங்களுக்குப் புகலிடம் தந்து எங்களை அரவணைத்த கனடா நாட்டில்தான் நடந்திருக்கின்றது. புதைகுழிகள் என்றதும் எங்களுக்கு முதலில் ஞாபகம் வருவது தாயகத்தில் செம்மணிப் புதைகுழிதான். செம்மணியைத் தொடர்ந்து தாயகத்தில் ஏராளமான புதைகுழிகள் வரலாற்றில் பதியப்படாமல் மறைக்கப்பட்டுவிட்டன. யுத்த சூழலில் இன்னும் அனேகமான புதைகுழிகள் அடையாளம் காட்டப்படாமலே இருக்கின்றன. இரண்டு தலைமுறை போனால் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் என்ற நினைப்பில் எல்லாமே மூடிமறைக்கப் பட்டிருக்கின்றன. காலம்கடந்தாலும், மறைக்கப்பட்ட யுத்தகாலப் புதைகுழிகள் ஒருநாள் தோண்டப்படும் போது பல உண்மைகள் தெரிய வரலாம். ஆனால் இதற்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதற்குக் குற்றம் புரிந்தவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தினம் தினம் எதிர்கொள்ளும் வலியும், வேதனையும் யாருக்கும் சொல்லிப் புரியப்போவதில்லை. சொந்த மண்ணைப் பறிகொடுத்த, எங்களுக்கு ஏற்பட்ட அதே வலியைத்தான் இங்கே உள்ள முதற்குடி மக்களும் எதிர் கொள்கிறார்கள். ஆனால் இங்கு ஜனநாயக கோட்பாடுகள் பின்பற்றப்படுவதால், உண்மையை ஓரளவாவது கண்டறிய முடிகின்றது. 2008 ஆம் ஆண்டு கனடா பிரதமர் இப்படி நடந்தற்காக முதற்குடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டார். தற்போதய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கத்தோலிக்க திருச்சபை இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கனடிய மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும் இழப்பு இழப்புத்தானே!

மேலும் படிக்க ...

நடிகர் திலிப்குமார் மறைவு!

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
07 ஜூலை 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்தியத்திரையுலகின் உச்ச நட்சத்திரங்களிலொருவர் நடிகர் திலிப்குமார். இவரது இயற்பெயர் முகமத் யூசுப் கான். 1922இல் இந்தியாவின் ஒருபகுதியாக விளங்கிய பாகிஸ்தானின் பெசாவரில் பிறந்தவர்.  தனது தொண்ணூற்றியெட்டாவது வயதில் அவர் இன்று காலமானதை இணையச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவரது திரையுலகப் பங்களிப்புக்காக தாதாசாகேப் பால்கே  விருது, இந்திய மத்திய அரசின் பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளைப் பெற்ற இவர் அதிக தடவைகள் பிலிம் ஃபெயர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க ...

இணையவெளி உரை நிகழ்வும் கலந்துரையாடலும்: 'நடனமரபில் ரஸக்கோட்பாடுகள்'!

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
06 ஜூலை 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அஞ்சலி: சமூகப்பணியாளர் சொக்கநாதன் யோகநாதன்! - தகவல்: லெ. முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
05 ஜூலை 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் நிருவாக இயக்குநர் சொக்கநாதன் யோகநாதன் இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் கொவிட் தொற்றினால் மறைந்தார் என்ற செய்தி எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

நீண்டகாலமாக சமூகப்பணியாற்றி வந்திருக்கும் திரு. யோகநாதன் ( வயது 73 ) அவர்களின் திடீர் மறைவினால் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் பணியாளர்களுக்கும் மற்றும் யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு மாவட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அமரர் யோகநாதன் அவர்கள் யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கிளிநொச்சி, வவுனியா முதலான மாவட்டங்களில் வதியும் போரினால் பாதிப்புற்ற ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு உதவும் வெளிநாடுகளிலிருந்து இயங்கும் தன்னார்வத் தொண்டர் அமைப்புகளின் தொடர்பாளராகவும் அர்ப்பணிப்புடன் இயங்கியவர்.

அன்னாரின் திடீர் மறைவு ஈடுசெய்யமுடியாத இழப்பு என்று அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் தனது அனுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க ...

நிழலின் நாயகன் : சத்யஜித் ரே! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -

விவரங்கள்
- கிறிஸ்டி நல்லரெத்தினம் -
கலை
05 ஜூலை 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இயக்குநர் சத்யஜித் ரே நூறாண்டு நினைவுக் கட்டுரை!
    
"ஆக்ஷன்"

இந்த கம்பீரக் குரலுடன் 1951ல் ஆரம்பமானது 'இந்திய திரையுலக மேதை' என அழைக்கப்படும்  சத்யஜித் ரேயின் திரையுலக பயணம். அவரது கன்னிப் படைப்பு பூபதி பூஷன் பாந்தோ பாத்யாவின் வங்க குழந்தை இலக்கிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட "பதேர் பாஞ்சாலி " திரைப்படம். கிராமத்தில் பிறந்து வளர்ந்து முதிரும் அப்பு என்ற சிறுவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் உள்ள உறவை சித்தரிக்கும் கதையின் முதல் பாகம் இது. ஐயாயிரம் அடியுடன் படம்  நிதி தட்டுப்பாட்டால் பாம்பாய் பெட்டிக்குள் படுத்துக் கொண்டது. அதை எழுப்புமுன் ரேயின் பூர்வீகத்தை சிறிது பார்ப்போமா?

ரேயின் தந்தை வழி தாத்தா ஒரு எழுத்தாளர், இசையமைப்பாளர் மற்றும் அச்சக உரிமையாளரும் கூட.  'சந்தோஷ்' எனும் சிறுவர் இலக்கிய இதழ் வேறு நடத்தி வந்தார். அவர் மகன் சுகுமார் ராய் அனேக சிறுவர் இலக்கியங்கள் படைத்த எழுத்தாளர், விரிவுரையாளர். இந்த கனவுத் தொழில் சாலையில் மே 02, 1921 பிறந்த ரே பல்கலைகளையும்  இயற்கையாகவே தன்னகத்தே கொண்டிருந்தார். பல்கலை என்று சொன்னேனா? எண்ணிக் கொள்ளுங்கள்..... எழுத்து, இசை ஈர்ப்பு, ஓவியம், வரைபட வடிவமைப்பு, பதிப்பகத்துறை, விமர்சனம்.....போதுமா?  இந்த துறைகளில் அவருக்கிருந்த நாட்டமும்  திறமையும் அவரை திரைப்படத்துறைக்கு இயல்பாகவே இழுத்து வந்ததில் ஆச்சரியமில்லை!

மேலும் படிக்க ...

சிறுகதை: வெண்ணிறக்கால்கள்! - சப்னாஸ் ஹாசிம் -

விவரங்கள்
- சப்னாஸ் ஹாசிம் -
சிறுகதை
05 ஜூலை 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

காலைச் சூரியன் பொட்டெனச்சுடுகிற இலையிடுக்கில் மாமரத்து நிழலில் பெண்கள் பண்பாயோடு குந்திவிட்டனர். மௌலானாவின் மன்சிலுக்கு வருகிற பெண்களுக்கு தாயத்தும் ஓதிய தண்ணீர் பிடிக்க கலனும் விற்கவென மன்சிலை ஒட்டிய செய்யதுவின் கடைச் சாம்புராணி, மன்சிலின் பெரிய கிணற்றடிக்கு பின்னால் செத்துக்கிடந்த பூனை நெடியிடம் தோற்றுப் போயிருந்தது. லெவ்வை கிணற்றுக்கு கிழக்கால் பாத்தி பிடித்து மரவள்ளிக்கிழங்கை செவ்வென நட்டியிருந்த வரிசை இடையில் பூனையை புதைக்க குழி வெட்டிக்கொண்டிருந்தார். லெவ்வை தான் மன்சிலின் பேஷ் இமாம். தொழுவிப்பது, ஓதுவிப்பது, மையத்து வீடு, கத்தம்பாத்திஹா கோழி அறுக்க தக்பீர் சொல்லுவதென மாதம் ஐயாயிரம் தேத்திக் கொண்டிருந்தார். மௌலானா வரும் மாதங்களில் சதகா மட்டும் பத்து பதினையாயிரம் தேறும். பார்க்க தடித்த தேகம். பெனியன் இறக்கிய பச்சைவாரில் மண்ணடி நண்டு மார்க் சாரன் பிடிபட்டிருக்கும். தங்க முலாம் கைக்கடிகாரமும் அதை மூடும் கைரோமங்களுமென திடும் என்று இருப்பார். நெற்றியில் தொழுகை வடுவும் முகத்தில் தோய்ந்த கறார் பாவமுமாக மஜ்லிஸை துவக்கினாலே எல்லோரும் கமுக்கமாக பாத்திஹா ஓதத் தொடங்கிவிடுவர்.

காலையில் எட்டு மணிக்கெல்லாம் மௌலானா மருந்து கொடுக்க வருவார். பாய் விரித்த மன்சிலின் வெளிப்பள்ளியில் வெள்ளை விரித்த தலையணைப் பஞ்சில் முஸல்லாவைக் கிடத்தி பானா வடிவில் விரிப்பு போடப்பட்டிருக்கும். ஒரே மாதிரியான பச்சை முசல்லாவுக்கு நடுவில் கொஞ்சம் உயரமான தலையணைக்கு மேல் சிவப்பு காஷ்மீர் முசல்லாவிலேதான் மௌலானா உட்காருவார். தீர்க்க முடியாத நோய்களை, மனநிலை பிறழ்ந்த பெண்களை, விசம் கொட்டுண்டு வீங்கிய பிள்ளைகளை, சைத்தான் பிடித்த குமருகளை தவிர அவசரத்திற்கு வேறு யாரும் மௌலானா வை தரிசிக்க முடியாது. வரிசையில் நான்கு நான்காக பெண்களும் இரண்டு இரண்டாக ஆண்களும் இருக்கவேண்டும். ஊரின் பெரிய பள்ளிகளின் மரைக்காயர்களோ பட்டினசபை மெம்பர்களோ யாராகினும் வரிசையிலே நிற்கவேண்டும்.

மேலும் படிக்க ...

உணர்வுச்சித்திரம்: அப்பா! - முனைவர்.கோ.புஷ்பவள்ளி, புதுச்சேரி -

விவரங்கள்
- - முனைவர்.கோ.புஷ்பவள்ளி, புதுச்சேரி -
கவிதை
05 ஜூலை 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


                                           
பொறையாரில் பிறந்து                            
வறுமையில் நெடிந்து                                                               
வலிகளைச் சுமந்து
உழைப்பை நம்பி உறுதியுடன்
பொதுகை (புதுவை) வந்தார்…

பல போராட்டங்களுக்கு மத்தியில் வாழ்க்கை
உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை.
அடைக்கலம் தந்தார் மாமனிதர்
அன்போடு அடிமையாய் உழைத்தார்
அவர் நலன் கருதி.

மேலும் படிக்க ...

வரலாற்றுச் சுவடுகள்: எரிந்த 'சிரித்திரன்' சஞ்சிகை! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
04 ஜூலை 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கைப் போர்ச்சூழலில் தமிழர் பகுதியிலிருந்த அறிவுச் செல்வங்கள் அழிந்ததை அறிந்திருக்கின்றோம். யாழ் பொது நூலகம் ஜூன் 1, 1981 இரவு எரிக்கப்பட்டதை அறிந்திருக்கின்றோம். அன்றிரவே ஈழநாடு பத்திரிகை நிறுவனமும் எரிக்கப்பட்டு, ஊழியர்கள் படுகாயமடைந்ததையும் அறிந்திருக்கின்றோம். ஈழநாடு பத்திரிகை மீண்டும் இந்திய அமைதிப்படையினரின் காலத்தில் எரிக்கப்பட்டுள்ளதையும் அறிந்திருக்கின்றோம்.

ஆனால், இன்னுமொரு தமிழர் அறிவுச் செல்வமும் அழிக்கப்பட்ட விடயத்தை இந்தக் காணொளி  மூலம்தான்  அறிந்துகொண்டேன். இது  பற்றி அதிகமாகப் பத்திரிகைகளில் நான் வாசிக்காததால் அறிய முடியாமால் போயிற்று.

இவ்வழிவு இந்திய அமைதி காக்கும் படையினரால் ஏற்படுத்தப்பட்ட அழிவு. நமக்கெல்லாம் நன்கு அறிமுகமானதும், இலங்கைத் தமிழ் கலை, இலக்கிய வரலாற்றில் முக்கியமானதொரு கலை, இலக்கிய மற்றும் நகைச்சுவைச் சஞ்சிகையான 'சிரித்திரன்' சஞ்சிகைதான் இவ்விதம் அழிக்கப்பட்டது. இவ்விதம் இக்காணொளியில் தற்போது இலண்டனில் வாழும் ,'சிரித்திரன்' ஆசிரியர் அமரர் சிவஞானசுந்தரத்தின்  மகள்,  திருமதி வாணி சுந்தர் நினைவுகூர்கின்றார்.

இந்திய அமைதி காக்கும் படையினர் சிரித்திரன் ஆசிரியரின் கே.கே.எஸ் வீதியிலிருந்த சிரித்திரன் அச்சுக்கூட உபகரணங்களை, அலுவலகத்தை,  சிரித்திரன் இதழ்களின் அதுவரை காலம் வெளிவந்த முழுமையான சேகரிப்பினை, ஆசிரியரின் நூலகத்தினை எல்லாம் எரித்து அழித்ததாகவும், அதன் பின் அவர்களது இல்லத்தைத் தமது முகாமாக்கியிருந்ததாகவும் அவர் சம்பவங்களை விபரிக்கையில் நினைவு  கூர்கின்றார்.

மேலும் படிக்க ...

தமிழ்மொழிச் செயற்பாட்டகம்: இணையவழித் தொடர் கலந்துரையாடல் - முல்லைமணி (வே.சுப்ரமணியம்) - எம்.பெளசர் -

விவரங்கள்
- தகவல்:எம்.பெளசர் -
நிகழ்வுகள்
04 ஜூலை 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

காலத்தால் அழியாத கானம்: "பட்டுச்சேலை காத்தாட" - ஊர்க்குருவி -

விவரங்கள்
-ஊர்க்குருவி -
கலை
03 ஜூலை 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
 
"நிமிர்ந்து நடக்கும் நடையழகு
நெருங்கிப் பழகும் கலையழகு
அமைதி நிறையும் முகத்தழகு
யாவும் உங்கள் தனியழகு" - கவிஞர் கண்ணதாசன் -
 
இனியதொரு காதல் பாடல். கவிஞர் கண்ணதாசனின் இனிய தமிழில் கேட்பவர் இதயங்களைக் கொள்ளை கொண்ட பாடல்களிலொன்று. எம்ஜிஆர் & சரோஜாதேவி, டி.எம்.எஸ் & பி.சுசீலா, கே.வி.மகாதேவன் கூட்டணியிலுருவான காலத்தால் அழியாத கானமிது. இசைக்காக, நடிப்புக்காக, குரலுக்காக, மொழிக்காகச் சிறந்து விளங்கும் பாடல்களிலொன்று.
 
https://www.youtube.com/watch?v=ogY07oKFhRQ
 
மேலும் படிக்க ...

முகநூற்பதிவுகள்: இலங்கை அரசியலில் கடல் அட்டையும் தமிழ் அரசியல்வாதிகளின் அறிவீனமும். - தமயந்தி சைமன் -

விவரங்கள்
Administrator
முகநூல் குறிப்புகள்
03 ஜூலை 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- அவ்வப்போது பதிவுகள் இணைய இதழில் முகநூலில் பதிவு செய்யப்படும் சிறப்பான பதிவுகள் மீள்பிரசுரம் செய்யப்படும். இது அவ்வகையான  பதிவுகளிலொன்று. எழுத்தாளரும், புகைப்படக்கலைஞரும், கடலியற் துறையில் ஆழ்ந்த  அறிவும் மிக்க தயமந்தி சைமன் அவர்களைத் தமிழ்க் கலை, இலக்கிய உலகு நன்கு அறியும். அவர் முகநூலில் அண்மைக்காலமாகப் பதிவு செய்து வரும் கடலட்டை பற்றிய பதிவுகளில் இப்பதிவும் ஒன்று. - பதிவுகள்.காம் -


"......... ஏனெண்டால், இந்தத் தொழில் எங்களுடயவர்களுக்குத் தெரியாத ஒரு தொழில்...."  -அங்கஜன் இராமநாதன் , பா.உ. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி.-

சீனர்களை வரவேற்க நீங்கள் எந்தக் காரணங்களைச் சொல்லிக் கொண்டாலும் ஏதோ..... போனால் போகட்டுமென மனதை ஆற்றுப் படுத்தலாம். இப்படியொரு காரணத்தை அங்கஜன் சொல்வதென்பது மிகமிகக் கேலித்தனமாக இருக்கிறது.  "கைக்கெட்டிய கூலிக்காக கடப்பெட்டிய விடுப்பை விதைப்பதுபோல்"  குத்துமதிப்பில் கருத்துச் சொல்லப்படாது. இது ஒரு சரியான தலைமைத்துவப் பண்புமல்ல. எல்லாத் தரப்பாரின் கரிசனையும் இப்போ கொஞ்சக் காலமாக இலங்கைக் கடல்மீதும், கடல் வளங்கள் மீதும், கடற்சூழல் மீதும் மையங் கொண்டிருக்கின்றது. இந்தப் பெரும் பேறுபெற்ற காலமானது இலங்கை வரலாற்றின் பக்கங்களில் பிளாட்டினத்தில் பொறித்து பவுத்திரப்படுத்தி வைக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதேவேளை மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இப்படியான பொறுப்பு மிக்கவர்கள் ஊடகங்களுக்கு முன்னால் தோன்றிப் பிரசங்கிப்பதற்குமுன் உங்கள் பேசுபொருள் தொடர்பாக ஆய்ந்தறிந்து, சரியான தெளிவோடு பேச வேண்டும். நீங்கள் ஒரு இனக்குழுவின் தலைவர்கள். பல லட்சம் மக்களின் தலைச்சன் பிரதிநிதிகள். மிகப்பெரும் பொறுப்புமிக்க பணியைத் தாங்கியிருக்கிறீர்கள். ஒவ்வொரு வார்த்தைகளையும் பொறுப்போடும், கவனத்தோடும் பேசவேண்டும். காவோலையின்மேல் பெய்வதுபோல் சகட்டுமேனிக்க்கு வாயில் வந்ததையெல்லாம் குத்துமதிப்பில் பேச முடியாது. அறிவுசார் உலகமும், பகுத்தறியும் அடுத்த தலைமுறையும் உங்களை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றது.

இலங்கையில் கடலட்டைத் தொழில்
 
இரண்டாம் உலகமகா யுத்தம் முடிந்த காலத்திலேயே கடலட்டை எமக்கு அறிமுகமாயிற்று. நாச்சிக்குடா மம்முக் காக்கா என்று கரையோரச் சமூகங்களால் கொண்டாடப்படும் முக்கம்மது காக்கா. (இவர் "லத்தீப் மாஸ்ரர்" என்று 70களில் மிகவும் அறியப் பட்ட ஒரு முஸ்லிம் ஆசிரியரின் தந்தை என்று நினைக்கிறேன்) மற்றும் நாச்சிக்குடா ஹச்சுக்காக்கா, கறுத்த மரக்காயர், சூசை போன்றோர்களது முயற்சிகளால் கடலட்டைத் தொழில் எமது கரையோர மீனவச் சமூகங்களிடையே மிகப்பெரும் வருமானம் ஈட்டும் தொழிலாக நடைமுறையில் இருந்தது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் ஆட்சியை ஏற்ற காலப் பகுதியில் இந்தக் கடலட்டைத் தொழில் கூட்டுறவுச்சங்கங்கள் மூலமாக தொழிலாளர்களுக்கான சிறு கடன்களை வழங்கியும்,  கடலட்டைத் தொழிலுக்கான உபகரணங்களை மானிய விலையில் கொள்வனவு செய்ய ஆவன செய்தும் ஊக்குவித்தது. இந்தக் காலகட்டத்தில் கடலட்டைத் தொழில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது. (இவர்களே பின்னைய காலங்களில் இதற்கு எதிராக செயற்பட்டு பின்னடையச் செய்தார்கள் என்பது இன்னொரு கதை).

மேலும் படிக்க ...

கவிதை: முயலின் கால்கள்! - வ.ந.கிரிதரன்

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
03 ஜூலை 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவர் கூறினார் 'இன்று நானொரு முயல் பிடித்தேன்'.
'அதிலென்ன ஆச்சரிய'மென்றேன்'
'ஆச்சரியமுண்டு' என்றார். எனக்கோ ஆச்சரியம்.
"நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்' என்றார்.
'சில பிரசவங்களில் அப்படி நடப்பதுண்டு' என்றேன்.
'இல்லை இது  நல்ல பிரசவமே' என்றார்.
'இருங்கள் காட்டுகின்றேன்' என்றார்.
கூட்டினுள்ளிருந்த முயலைக்
கைகளிலேந்தி வந்தார்.
நான்கு கால்களுடன் முயல்
நல்லநிலையில் இருந்தது.
'முயலுக்கு நான்கு கால்கள்' என்றேன்.
'நன்றாகப் பாருங்கள். முயலுக்குக் கால்கள்
நான்கு இல்லை. மூன்றுதான்' என்றார்.

மேலும் படிக்க ...

'அலை' சஞ்சிகையின் ஜூலை 1981 ஆசிரியத் தலையங்கமும், நூலகர் என்.செல்வராஜாவின் சந்தேகமும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
02 ஜூலை 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'அலை'சஞ்சிகையில் வெளிவந்த நீண்ட ஆசிரியத் தலைங்கம் இதுதான். அதற்குக் காரணமும் இருக்கின்றது. மே 31, 1981 தொடங்கிய வன்செயல்களின் காரணமாக ஜூன்1, 1981 இரவு யாழ் பொது நூலகம், ஈழநாடு பத்திரிகை ஆகியவை எரிக்கப்பட்டன. அவை ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு இவ்வாசிரியத் தலையங்கம்.  யாழ் பொது நூலக எரிப்பு பற்றிய தொகுப்புகளில் தவறாமல் உள்ளடக்க வேண்டிய கட்டுரை இந்த ஆசிரியத் தலையங்கம். ஆவணச் சிறப்புள்ள ஆசிரியத் தலையங்கம்.

நூலகர் என்.செல்வராஜா நிச்சயம் வாசிக்க வேண்டிய ஆசிரியத்  தலையங்கமிது. இதுவரை காலமும் ஜூன் 1 இரவு நூலகம் எரிக்கப்பட்டதைத் தனது கட்டுரைகளில் வலியுறுத்தி வந்த அவர் அண்மையில் மீள்பதிப்பாக  தேசம் பதிப்பகம் வெளியிட்ட "Rising from the AshesTragic Episode of the Jaffna Library(A Reference Guide for Researchers By Thesam Publications (2021)" நூலுக்கு எழுதிய அறிமுகக் குறிப்பில் "During the District Development Council Election period between end of May and early June 1981 there was mass unrest and tension in the North. An unofficial curfew was in place and violence erupted. As a result to this day, there is still confusion over the exact date of when the Jaffna Public Library was burnt  down. 3rd January 2021" என்று சந்தேகமடைந்திருக்கின்றார். அதாவது நடைபெற்ற வன்செயல்கள் காரணமாக நூலகம் எரிக்கப்பட்ட தினத்தை அறிவதில் குழப்பமுண்டாம்.

பொதுமக்களுக்கு வேண்டுமானால் சந்தேகமிருக்கலாம். ஆனால் மாநகரசபையில் ஜூன் 1 பணி புரிந்துகொண்டிருந்த காவலாளி விமலேஸ்வரனுக்குச் சந்தேகம் வந்திருக்காதல்லவா. அப்போது மாநகர ஆணையாளராகப் பணிபுரிந்த மாநகர ஆணையாளர் க.சிவஞானம் அவர்களுக்கு அவ்விதமான சந்தேகம் வந்திருந்தால் தீயணப்புப்படை வாகனங்களை ஜூன் 1 இரவு தகவலைத் தொலைபேசியில் அறிந்ததும் அனுப்பியிருப்பாரா? (ஆதாரங்கள்: 1981 ஜூன் மாத ஈழநாடுப் பிரதிகள்)

மேலும் படிக்க ...

நம்மவர் பேசுகிறார்: பத்திரிகையாளர், இலக்கியவாதி, சமூகச் செயற்பாட்டாளர் திரு.லெட்சுமணன் முருகபூபதி அவர்களுடன் உரையாடல்!

விவரங்கள்
- தகவல்: நடேசன் -
நிகழ்வுகள்
29 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆய்வு: தமிழ் பிராமி கல்வெட்டு விளக்கம்! - சேசாத்திரி -

விவரங்கள்
- சேசாத்திரி -
ஆய்வு
28 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ் பிராமி கல்வெட்டுகள் சற்றொப்ப 38 ஊர்களில் மலை சார்ந்த குகைத் தளங்களிலும் திறந்தவெளியிலும் கண்டறியப்பட்டு உள்ளன. இம் 38 இடங்களில் சற்றொப்ப 100 கல்வெட்டுகள் அறியப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் குறைந்தது 1 முதல் அதிகமாக 12 கல்வெட்டுகள் வரை என இம் 38 இடங்களில் காணப்படுகின்றன. தமிழ் பிராமி கல்வெட்டுகள் தமிழ் மொழியின் தொன்மைக்கும் தமிழ் எழுத்து வட்டெழுத்தாகி அடுத்து சோழர் கால எழுத்தாகி பின் இந்நாள் எழுத்தாக  உருத்திரிந்ததற்கு சான்றாக உள்ளன. திரு. ஐராவதம் மகாதேவன் பெருமுயற்சி எடுத்து இவற்றை எல்லாம் அடர்வு செய்து தென்னகத்திற்கு சமணர் வச்சிர நந்தி தலைமையில்  வடக்கே இருந்து வந்ததை ஒட்டி தமிழகத்தில் மதுரையைச்  சுற்றியுள்ள இடங்களில் அமைந்த தமிழி கல்வெட்டுகள் கி.மு. 2 ம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ம் நூற்றாண்டு வரையான காலத்தன என்று காலவரையறை செய்தார். எனினும் புதுக்கோட்டை த் தமிழ் பிராமி நடுகல் கல்வெட்டு கங்கரை குறிப்பது 5 -ம் நூற்றாண்டு வரை தமிழ் பிராமியின் பயன்பட்டை உறுதி செய்கின்றது.  இக்கல்வெட்டுகள் உள்ள தளங்களை சமண துறவிகளின் படுக்கை என்று ஐராவதம் மகாதேவன்  கூறினாலும் மேட்டுப்பட்டி தமிழி கல்வெட்டு  "அமணன்  மதிரை அத்திரன் உறை உதயனஸ" என்பதிலும், புகளூர்  தமிழி கல்வெட்டு  "மூதா   அமண்ணன்" என்பதிலும் தான் சமணர் பற்றிய தெளிந்த குறிப்பு உள்ளது மற்றவற்றில் அவ்வாறு தெளிவாக இல்லை. இதனால் இவற்றை  ஆசீவகர் படுக்கைகள் என்று பேரா. க. நெடுஞ்செழியன் கூறுகிறார். ஆனால் அதற்கும் தெளிவான கல்வெட்டுக் குறிப்பு ஏதும் இல்லை. இக்குன்றுகளின் இருப்பிடத்தில்  பிற்காலத்தே சமண புடைப்பு சிற்பங்கள் அமைந்ததாலும் ஐயனார் கோவில்கள் அமைந்ததாலும் இக் கல்வெட்டுகள் சமணர்க்குரியன ஆசீவகர்க்குரியன என்பது தவறு. இக்கல்வெட்டு விளக்கம் அந்த தவற்றை வெளிப்படுத்தவே அமைந்ததாகும். இக்குகைகளில் அமைந்த கற்படுக்கைகள் மருத்துவம் மேற்கொள்ளப்பட்ட நோயாளிகளுக்கான படுக்கைகள் என்றே எண்ணத் தோன்றுகின்றன.  ஏனென்றால் முற்றும் துறந்த சமண, ஆசீவக முனிவர் ஒரே இடத்தில் நிலையாகத் தங்கப்போவதில்லை. இடைவிடாமல் இடம்பெயர்வது தான் முற்றத் துறந்தவரின் பண்பு.   

மேலும் படிக்க ...

சிங்களத் திரையுலகின் ஆளுமை பிரசன்ன விதானகே! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
26 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

காடும், காட்டை அண்மித்த பிரதேசமும் கொண்ட அந்தச்சிங்களக் கிராமத்தில் ஒரு முதிய விவசாயியின் சிறிய குடும்பம். மனைவி இல்லை. இரண்டு மகள், ஒரு மகன். வானம்பார்த்த பூமி. குடிதண்ணீருக்கும் குளத்தை தேடிச்செல்லவேண்டும். குடும்பத்தின் ஏழ்மையை போக்குவதற்காக மகன் பண்டார இலங்கை இராணுவத்தில் சேர்ந்து உள்நாட்டுப் போர்க்களம் சென்றுவிடுகிறான். விடுதலைப்புலிகளின் ஈழப்போராட்டத்தில் ஒரு கண்ணிவெடித்தாக்குதலில் அவன் உடல் சிதறிச்செத்துவிட்டான் என்ற செய்தியுடன், அவனது உடல் மூடிய சவப்பெட்டியில் சீலிடப்பட்டு வருகிறது. அவனது தந்தையான முதியவர் வின்னிஹாமி க்கு கண்பார்வையும் மங்கல். தட்டுத்தடுமாறி, ஊன்றுகோலுடன் நடமாடும் அவருக்கு செவிப்புலன் கூர்மையானது. பறவைகளின் குரலும், குளத்தில் கும்மாளமிட்டு குளிக்கும் சிறுவர்களின் சிரிப்பொலியும் கேட்டு பரவசமடைபவர். ஒரு வாகனத்தில் சவப்பெட்டியை எடுத்துவந்து அந்த குடிசையில் ஒப்படைத்துவிட்டு விடைபெறும் இராணுவத்தினர், உடல் மிகவும் மோசமாக சிதறியிருக்கிறது. அதனால் திறக்கவேண்டாம் என்றும் வலியுறுத்துகின்றனர். இலங்கையின் தேசியக்கொடி போர்த்தப்பட்ட அந்த சவப்பெட்டியை பார்த்து சகோதரன் பண்டாரவை நினைத்து கதறி அழுகின்றனர் சகோதரிகள். தேசத்தை காக்கச்சென்றவன், சிதறுண்டு வருகிறானே என்ற சோகம் அக்கிராமத்தை சூழ்ந்துவிடுகிறது. குடும்பத்தலைவர் வின்னிஹாமி கண்ணீரே சிந்தாமல் திக்பிரமை பிடித்திருக்கிறார். அந்த சவப்பெட்டியை தடுமாற்றத்துடன் தடவிப்பார்க்கிறார். தேசியக்கொடிதான் அவரது மங்கிய கண்களுக்குத் தெரிகிறது. கிராமத்தின் பௌத்த பிக்கு மற்றும் கிராமத்துப்பாடசாலை ஆசிரியர், கிராம சேவகர் உட்பட பலரும் வந்து முதியவருக்கு ஆறுதல் சொல்கின்றனர்.

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கின்றோம்: பேதங்கள் கடந்த மாற்றுச் சிந்தனையாளர்! கலாநிதி ஏ. சி. எல் . அமீர்அலி எழுதியிருக்கும் சிந்தனைச்சுவடுகள்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
26 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கை வாழ் முஸ்லிம் மக்களை காலம் காலமாக ஒரு வர்த்தக சமூகமாக கருதி வந்தவர்களின் பார்வையை முற்றாக மாற்றியவர்கள் என்ற பெருமையைப் பெற்றவர்களில் அறிஞர் அஸீஸ், கலாநிதி பதியுதீன் முகம்மது ஆகியோரும் முதன்மையானவர்கள். அறிவார்ந்த தளத்தில் இயங்கத்தக்க இச்சமூகத்திடம் சந்தர்ப்பங்களை வழங்கிப்பாருங்கள் என்று தமது சிந்தனையிலும் எழுத்திலும் செயற்பாடுகளிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருப்பவர்களின் அடிச்சுவட்டில் வந்திருப்பவர்தான் கலாநிதி ஏ. சீ. எல். அமீர் அலி அவர்கள். மேற்கு அவுஸ்திரேலியாவில் மெடோக் பல்லைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் விரிவுரையாளராக பணியாற்றியவரான அமீர் அலியின் அரசியல் விமர்சனக் கட்டுரைகளும் ஆய்வேடுகளும் பிரசித்தம். தமிழிலும் ஆங்கிலத்திலும் இவர் எழுதிவரும் ஆக்கங்கள் இலங்கை மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் தொடர்ந்தும் வெளிவந்து, அரசியல் மற்றும் உலகப்பொருளாதாரம் குறித்து பேசிவரும் பலருக்கு உசாத்துணையாகவும் மிளிர்கின்றன. சிலர் அமீர் அலியை , ஒரு மேற்குலக சிந்தனாவாதி எனவும் வர்ணிப்பவர். ஒருகாலத்தில் இலங்கையில் இவரது ஆலோசனைகளைப் பெற்றவர்தான் முன்னாள் கல்வி அமைச்சர் ( அமரர் ) பதியூதின் முகம்மத்.

அவரது வாக்குமூலம் ஒன்றையும் இங்கே பதிவிடுவது பொருத்தமானது.

மேலும் படிக்க ...

சிறுகதை: என்னைப் பேசச் சொன்னால்.. - முல்லை அமுதன் -

விவரங்கள்
- முல்லை அமுதன் -
சிறுகதை
26 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சும்மா இருந்திருக்கலாம். இன்றெனப்ப்பார்த்து மனைவி புத்தகங்களைக் கலைத்து மீள அடுக்கத்தொடங்கினாள். எதிர்பார்க்கவில்லை. காலையிலேயே தேநீருடன் வருபவள் இன்று காணவில்லையேயென இறங்கிவந்தேன் .கடைசிப்படியில் ஒரியோ படுத்திருந்தது. ஒரியோ எங்களது செல்லப்பூனை.வந்து இரண்டுவருடமாகிறது. பிள்ளைகளுக்கு பரீட்சையில் சித்தியடைந்தால் வாங்கித் தருவதாகச் சொல்லியிருந்தேன். இப்போது பிள்ளைகளுள் ஒன்றாகிவிட்டது. நாய்க்குட்டி ஒன்றிருந்தால் நன்றாக இருக்குமே என்கிறாள் கடைசிப்பெண்.முன்பென்றால் துணிந்து வாங்கிவிடுவேன்.இப்போது வேலைக்குப்போகாத நிலையில் வீட்டிற்குப்பாரமாகிவிட்டேனோ என்கிற நினைப்பு வர ஓய்ந்து போன ஒரு மனநிலையும் வந்துவிட்டது.கம்பீரமாக வேலை,வீடு,நண்பர்கள், புத்தகம்,பிள்ளைகள் என வலம்வந்தவனை முடக்கிப்போட்டுவிட்டது இந்த கொறோனா... வேலைக்கு போகாமல் வீட்டினுள் முடங்க எல்லாம் இழந்ததுபோல... படுக்கை,கணினி என இந்த ஒருவருடம் ஓடிவிட்டது.

'என்னப்பா...இண்டைக்குத் தேத்தண்ணி இல்லையோ?'

பதில் அவளிடமிருந்து கிடைக்கவில்லை.

-'நீங்க ரீமாஸ்டர் தானே..போடுங்கோவன்' என்று சொன்னது மாதிரி

இருந்தது.அவள் சொல்லவில்லை.எண்டைக்கெண்டாலும் சொல்லலாம்.படியில் படுத்திருந்த பூனையும் எழுந்து என்னுடன் வந்தது.அதற்கு சாப்பாட்டைப்போட்டுவிட்டு தேநீர் தயாரிக்கத்தொடங்கினேன்.முந்தி அம்மா குசினிக்குள் வரவிடமாட்டாள்...தானே சமைக்கவேண்டும்..தானே தரவேண்டும்..என்று நினைப்பாள்.அப்பாவும் கண்டிப்பென்றாலும் வேலை ஒண்டும் செய்யவிடமாட்டார்..

'போய் படிக்கிற வேலையைப்பார்' என்பார்.

மேலும் படிக்க ...

இணுவையூர்.மயூரனின் 'ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்' - ஓர் அறிமுகம்! - முல்லைஅமுதன் -

விவரங்கள்
- முல்லைஅமுதன் -
நூல் அறிமுகம்
26 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மண்ணும் அதன் வாசமும் ஒருவனால் சுவாசிக்கப்படுகையில் அவனை தாலாட்டுகிற இயற்கை கூடவே வந்து குந்தியிருந்து பலகதைகள் சொல்லி மகிழ்வூட்டும்.அதே இயற்கை அவனை கைப்பிடித்து நகர்த்தும்.காலம் அவனை அடையாளப்படுத்துமாகில் நெருக்கமுடன் அணைத்து மகிழ்விக்கும்.அந்த மகிழ்வே அவனை ஆலிங்கனம் செய்யத்தூண்டும்.அந்தத் தூண்டுதலே அவனை எல்லாமாகி நிற்கவைக்கும்.அந்த எல்லாமாகி நிற்பவனிடம் வானம் சாமரை வீசும்.காற்று காதலைத் தூதுவிடும்.நானிருக்கிறேன் என மண் தன்னை விசாலப்படுத்தி வரவேற்கும்.பூக்கள் பூக்கவும்,செடிகள் துளிர்க்கவும் புத்துயிர்ப்பாய் கிராமம் கைகுலுக்கிக்கொள்ளும்.

இப்படித்தான் ஒரு கிராமம் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும் மண்ணில் புரட்டிஎடுத்து தனக்கெனவே வளர்த்தெடுக்கும். பெரிதாகும் எந்த உயிரும் பூத்தாலும்,காய்த்தாலும்,கருகிச் சருகாகும் வரை மனத்தில் அதே சுவாசத்துடனே வாழ்கின்றான்.அவனே வாழ்வில் அலைக்கழிப்பிற்கு ஈடு கொடுத்து கிராமத்தை விட்டு நகர்ந்தாலும் அந்த மண் தன்னுடன் உறவாடியவனை காலம் முழுதும் தன்னுடன் இணைத்தே பயணிக்கவைக்கும்.இதனால்தான் புலம் பெயரும் ஒவ்வொருவருவரும் மண்ணின் நினைவுகளுடன் வாழ்வதும் தவிர்க்கமுடியாமல் இருந்துவிடுகிறது.முதுமை வரை தொடரும் அழிவடையா ஞாபகச் சின்னங்களாகிவிடும்.அதனால் தான் புலம்பெயர் சூழலுக்குள் இருந்துகொண்டு அவனால் எழுதப்படும் எழுத்துகள் அனைத்தும் மண்சார்ந்தே பயணிக்கின்றன.இணுவில் கிராமத்தில் பிறந்து தன் இள வயதுக் கனவுகள், குறும்புகள், விளையாட்டு, உணவு, விளையாட்டு, உறவுகள், நண்பர்கள், பாடசாலைகள். ஆசிரியர்கள் எல்லாவற்றையும் இழக்கும்படியாக இனமுரண்பாடுகள்,யுத்தம் இவற்றால் நம்மைப்போலவே நாட்டைவிட்டு வெளிநாடொன்றில் வாழ்கின்ற சூழலுக்குள் வாழ்ந்தாலும் தமிழையும்,தன் கனவுகளையும் கவிதைக்குள் இருத்தி சுகானுபவம் பெறும் படைப்பாளனாக, கலைஞனாக, ஊடகவியலாளனாக மண்ணின் பெருமைகளை,கலை இலக்கிய பண்பாட்டினை கட்டியெழுப்பும் பலருள் ஒருவனாக தன்னை நிலைநிறுத்தி,இன்று ஒரு நூலையும் எமக்குத்தந்து படைப்புலகத்தில் கவிஞனாக அடையாளப்படித்தி நிற்கிறார் இணுவையூர் மயூரன் அவர்கள்.

ஈழத்துப்பித்தன் எனும் பெயரிலும் தன்னை அடையாளப்படுத்தி நிற்பவர்.ஊடகராகவும், 'குருத்து'இதழின் ஆசிரியராகவும் பலராலும் அறியப்பட்டவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற இக் கவிதை நூலைப் பற்றி பேசும் தகுதி எனக்குண்டா எனத்தெரியவில்லை.எனினும் எனக்குள்ளே முகிழ்த்த வாசிப்பறிவு அத் தகௌதியை உடையதாக்கும் எனவும் நம்புகிறேன்.

மேலும் படிக்க ...

நிகழ்வு: செம்மொழி வேந்தர் முத்தமிழறிஞர் கலைஞரின் 98ஆவது பிறந்தநாள் பெருவிழா!

விவரங்கள்
- தகவல்: பேரா. பால சுகுமார் -
நிகழ்வுகள்
26 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

தொடர்நாவல்: ஒரு கல் கரைந்தபோது! (3) - ஶ்ரீராம் விக்னேஷ் (நெல்லை,, வீரவநல்லூர்) -

விவரங்கள்
- ஶ்ரீராம் விக்னேஷ் (நெல்லை,, வீரவநல்லூர்) -
நாவல்
24 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் மூன்று!

இடைவேளை விட்டுத் தொடங்கிய காட்சியிலே, கண்ணுக்குத் தெரிந்தது ஆஸ்பத்திரி வார்டு. பார்வையின் கோணத்தை அங்குமிங்கும் ஓடவிட்டேன். சந்தேகமே இல்லை. திருநெல்வேலி “மேட்டுத் திடல்” (ஹைகிரவுண்ட்) அரசு மருத்துவ மனையேதான்.இரண்டு நாட்கள் சுயநினைவின்றிக் கிடந்ததை எதிரே சுவரில் தொங்கிக்கொண்டிருந்த காலண்டர் உறுதிப்படுத்தியது. உடலெங்கும் காயங்கள். முக்கியமாக வலது காலைச் சுற்றி ஏகப்பட்ட பாண்டேஜ் துணி, பந்துபோல திரட்டிச் சுற்றப்பட்டிருந்தது. தலைமாட்டில் கண்ணீருடன் அம்மா. வெறுப்புக்காட்டும் முகத்தோடு அக்கா. அவளின் கைத்தடியாக அருகே அத்தான். அக்கா, அத்தான் இருவருக்கும் காயங்களும், கட்டுக்களும் இருந்தபோதிலும் என்னளவுக்கு இல்லை. கண்களை அகலத் திறந்து எல்லோரையும் பார்த்தபோது, அக்காளின் சுடுகணைகள் திருப்பள்ளியெழுச்சி ஆகின.

“பொம்பளைங்க எப்பவுமே சொய அறிவோட நடந்துக்கணும்….. வண்டிய ஓட்டுறத்துக்கு ஸ்டேரிங்கைப் புடிச்சா தெருவைப் பாப்பாளா….  எங்களையெல்லாம் கைலாசம் அனுப்பப் பாத்திட்டியேடி….”

வேதனையின் மத்தியிலும் பலமாகச் சிரித்துவிட்டேன் நான். எனக்குள்ளே பேச நினைத்தது தவறுதலாக வார்த்தையாக வந்துவிட்டது.

“சொய அறிவு….. அப்பிடீன்னா என்னது அக்கா….”

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: கலிங்கு (2009 -1 &2) - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
24 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


2009 - 1
அற்றைத் திங்களின் அவ்வெண்ணிலவு அப்போதும் காய்ந்துகொண்டிருந்தது. குன்றுகள்தான் ஒவ்வொன்றாய்ப் பறிபோய்க்கொண்டிருந்தன. மக்கள் திகிலடைந்திருந்தனர். தங்கள் கனவு ராஜ்யம் அழிந்துபோகும் நிர்க்கதி. அது மன மெய்களின் மொத்தமுமான ஸ்தம்பிதமாக இருந்தது.

உலகத் தமிழரங்கில் வெளிச்சமிடப்பட்ட நாடக மேடை தகர்ந்துகொண்டிருந்ததில் எங்கெங்கும்தான் அந்த நிர்க்கதி. ஐரோப்பாவிலும் வடஅமெரிக்காவிலும் அவுஸ்திரேலியாவிலும் புலம்பெயர் தமிழ் மக்கள் வீதியிலிறங்கியிருந்தனர். ‘Stop the Geanocide’ என்ற சுலோக கொடிகள் இளைஞர்கள் கையில் நிமிர்ந்து நின்றுகொண்டிருந்தன.

கிழக்கு மாகாணம் முழுவதும் ராணுவத்தின் கையில் வீழ்ந்திருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் கருணா அம்மான் கிழக்குப் புலிகளின் பெருவலிமையுடன் பிரிந்துவிட்டாரென்று அறிந்தபோது வந்துவிழுந்த ஏக்கத்தை, வன்னியிலிருந்து சென்ற இருநூறு திறல் படைத்த அதிரடிப் புலி வீரர்களால் அவர் தோற்கடிக்கப்பட்ட செய்தி வெளிவந்து போக்கியது. இப்போது முற்று முழுதாய்த் தெரிந்தது, கருணா அம்மான் அன்று தோற்கடிக்கப்படவில்லையென.

2004இன் அந்த நிலைமையில் அவர்கள் பெரிய நம்பிக்கையீனம் எதனையும் அடைந்துவிடவில்லை. கிழக்கு முற்றாக பறிபோயிருந்தபோதும் அவர்கள் பெரிய மனப் பாதிப்பைக் கொண்டுவிடவில்லை. ஆனால் அப்போது வன்னியின் பெரும் பகுதியும் பறிபோயிருக்கிறது. கிளிநொச்சி, மாத்தளன், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு ஆகிய சில கோட்டைகளே எஞ்சியிருந்த அந்த நிலைமை  அவர்களை அடிவேர்காண அதைத்தது.

மேலும் படிக்க ...

ஆய்வு: மில்மன் பாரி (Milmanparry) – ஆல்பட் பெட்ஸ் லார்டின் வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாடு – ஒர் அறிமுகம்! - முனைவர். கோ. புஷ்பவள்ளி -

விவரங்கள்
- முனைவர். கோ. புஷ்பவள்ளி, புதுச்சேரி – 605 014 -
ஆய்வு
22 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மொழியை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்படும் கலை பல்வேறு வடிவங்களையுடையது. அவை வாய்மொழியாகவும் பாட்டு வடிவமாகவும் கதை வடிவமாகவும் நாடகமாகவும் உரைநடை வடிவமாகவும் இருப்பதை நாம் காண்கின்றோம். மனித இன நாகரிக வளர்ச்சியில் நெடுங்காலமாகப் படைக்கப்பட்டுக் கலைத் தன்மையோடு கூடியவையை இலக்கியமாக கருதும் எண்ணப்போக்கு உருவாகியதை உணர முடிகிறது. ‘இலக்கியம் எழுத்து வடிவத்தை வெளிப்படுத்தும் கலை’ என இலக்கிய இயல்பு நூலாசிரியர் விளக்கமளிக்கிறார். ஆனால் இன்றளவும் மக்களோடு கலந்த காவியமாகத் திகழும் நாட்டார் வழக்காற்றில் வாய்மொழி மரபான பாடல்களும் (Oral literature) இவையும் வாய்மொழி இலக்கியமாகவே கருதப்படுகின்றன. எனவே ஏட்டிலக்கிய வடிவத்திற்கு மூலகர்த்தாவாக இருப்பது வாய்மொழி இலக்கியமே என்பதை நம்மால் மறுக்க முடியாது. இவ்வாறு வாழ்க்கையின் விழுமியமாக விளங்குகின்ற இலக்கியங்களை 20- ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து ஒப்பிட்டு ஆராயும் நிலை இலக்கிய உலகில் தோற்றம் பெற்றது. இத்தகைய ஓப்பியல் ஆராய்ச்சியின் விளைவாக ஏட்டிலக்கியத்திற்கு அடிப்படையாக வாய்மொழி இலக்கியமே அடிப்படைத் தரவாக அமைந்தது என்ற கருத்து ஆய்வாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. ஆய்வு: சிலம்பில் மன்னர்களின் பழக்கவழக்கங்கள்! - முனைவர் மூ.சிந்து -
  2. ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் 12 கவிதைகள்!
  3. கவிதை: எந்நாளும் எந்தையர் நாள்தான் எமக்கு எந்தையே! - வ.ந.கிரிதரன் -
  4. புகலிடச் சிறுவர் இலக்கியம்: சுவிட்சர்லாந்தில் சிறுவர் இலக்கியம்!
  5. ஓராயம் அமையம் இலாபநோக்கற்று இயங்குமோர் அமைப்பு.! நீங்களும் இணைந்து திட்டங்களை முன்னெடுக்கலாம்!
  6. என் நினைவில் நிலைத்து நிற்கும் கவிஞர் மஹாகவியின் கவிதை வரிகள்! - வ.ந.கிரிதரன் -
  7. கண்ணீர் அஞ்சலி: கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார். - குரு அரவிந்தன் (தலைவர், கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்) -
  8. கவிதை: நானோர் தமிழன்! - தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -
  9. கவிதை: வழித்தடங்கள்! - முனைவர் ம இராமச்சந்திரன் -
  10. நிகழ்வு: அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஜூன் 20, 2021 அன்று நடத்தவிருக்கும் இணையவழி காணொளி நினைவரங்கு! - முருகபூபதி -
  11. படகு அகதிகள் - தாமரைச்செல்வியின் 'உயிர்வாசம்' நாவலை முன்வைத்து ஒரு பார்வை! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
  12. தமிழ் மொழிச்செயற்பாட்டகம்: கே.கணேஷ்
  13. "சிவரமணியின் கவிதைகள்”: சிவரமணியைப்புரிந்துகொள்ளும் சிறு முயற்சி! - சூரியகுமாரி பஞ்சநாதன் -
  14. ஆய்வு: வெறியாடலும்,நடுகல் வழிபாடும்! - முனைவர் க. செந்தில் குமார் -
பக்கம் 105 / 115
  • முதல்
  • முந்தைய
  • 100
  • 101
  • 102
  • 103
  • 104
  • 105
  • 106
  • 107
  • 108
  • 109
  • அடுத்த
  • கடைசி