விவ(சாயம்) - முனைவர். பொ.ஜெயப்பிரகாசம், கோவை - 641107 -
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். இல்லை உலக உயிர்களின் முதுகெலும்புதான் விவசாயம். கணிப்பொறியிலோ ஆய்வகத்திலோ நெல்லையும் கம்பையும் உருவாக்கமுடியாது . மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவின் விவசாயம் அதள பாதாளத்துக்குப் போய் விட்டது. காரணம் யோசிக்க வேண்டிய அரசாங்கமோ பன்னாட்டு நிறுவனங்களுக்கு பாய் விரித்துப் படுக்கச் சொல்கிறது . தன் நாட்டில் சுற்றுப்புறத்திற்கும் நிலத்திற்கும் பாதிப்பு ஏற்படும் தொழில்களை இங்கே நிறுவி வியாபாரம் பார்க்கிறார்கள் பன்னாட்டு வியாபாரிகள்.
என தாத்தா சொல்வார் “டே கண்ணு நாங்க சின்னப் பசங்களா இருக்கறப்போ இந்த ஊரெல்லா எப்படி இருந்துச்சு தெரியுமா எங்கியோ ஒரு பக்கத்தான் கட கிட இருக்கும்.மத்த பக்கம் பாத்தா சுத்தியும் பச்சம் பசேனு இருக்கும்.” அவர் சொன்னது இன்று மிகப்பெரிய நகரமாக கருதப் படுகிற இடங்கள்தான். ஆனால் இன்றோ அது நிறுவனங்களா வாழிடங்களாக மாறிவிட்டன. சரி மனிதப் பெருக்கத்திற்கு எல்லாம் இருந்தால் தான் வாழ முடியும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் எல்லா இடங்களிலும் இவை இருந்தால்தான் வாழ முடியும் என்றால் எப்படி ஏற்றுக் கொள்வது .
மந்திரிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கும் அரசாங்கம் விவசாயிகளைக் கண்டு கொள்வதில்லையே. தற்கொலையின் தார்ச்சாலையாக மாறி வருகிறார்கள் விவசாயிகள். வாழ் நாள் முழுவதும் விவசாயம் செய்து சம்பாதித்த பணத்தில் பூச்சி கொல்லி மருந்துக்கு மட்டுமே மிச்சமிருக்கிறது என்றால் என்ன செய்வார்கள். வட்டிக் கடைக்காரர்களின வாய்ப்பாடாக மாறி விட்டார்கள். பயிர்களை அறுவடை செய்வதுதான் விவசாயின் வாழ்க்கை . ஆனால் வறுமையின் கொடுமையால் தங்களைத் தாங்களே அறுவடை செய்வதுதான் அவர்களது வாடிக்கை. பசுமைப் புரட்சி விவசாயத்தைச் சாகடித்தது என்றால் மரபுப் பயிர்களின் விவசாயச் சந்தையில் விவசாயத்தையும் விவசாயியையுமே சாகடித்து வருகிறோமே. நாம் சாகடித்தது போதாது என்றால் உரிமையை கேட்ட நம்மையே சாகடித்தது அசாங்கமே. அப்படிச் செய்தவர்களையே மறந்து அரியணையில் அமர வைத்துச் சங்கிதம் பாடுபவர்களும் இவர்களே.
இன்று கே.எஸ்.ராஜா நினைவு தினம். எம் தலைமுறையினரின் பதின்ம வயதுப்பருவத்தில் எம்மையெல்லாம் கவர்ந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர்களில் ஒருவர். இவரது குரலும், இவரது தனித்துவம் மிக்க அறிவிப்புப் பாணியும் இவரது பலமான அம்சங்கள். இவரைப் பற்றி எண்ணியதும் முதலில் நினைவுக்கு வருவது: தனது பெயரைக் குறிப்பிடுகையில் சிவாஜியின் ராஜா படப்பாடலொன்றில் வரும் ராஜா என்னும் சொல்லை ஒலிக்கச்செய்வார். அதுதான்.
- எழுத்தாளர் உதயகுமாரி பரமலிங்கம் (நிலா) அவர்கள் மறைந்த செய்தியினை துயரத்துடன் வசதிகள் வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். நிலா, வஸந்தா என்னும் பெயர்களில் இவரது இலண்டன் நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகள் பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளன. அவ்வப்போது பதிவுகள் இதழில் வெளியாகும் நிகழ்வுகள் பகுதிக்கு இலண்டனில் நடைபெற்ற நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகளைப் புகைப்படங்களுடன் அனுப்பி, அவை பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளன. எழுத்தாளர் மாதவி சிவலீலனின் 'இமைப்பொழுது' நூல் வெளியீட்டு நிகழ்வு பற்றிய இவரது கட்டுரை 11 டிசம்பர் 2017 வெளியான பதிவுகள் இணைய இதழில் 'இலண்டனில் இமைப்பொழுது' என்னும் தலைப்பில் , நிகழ்வுக் காட்சிகளை வெளிப்படுத்தும் புகைப்படங்களுடன் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 




1980களில் நான் சென்னையிலிருந்த காலத்தில், என் மாணவப் பருவத்து நண்பனான இரகுபதியை சந்தித்ததேன். அக்காலத்தில்தான் இரகுபதியின் ஆய்வு நூல் சென்னையில் பதிக்கப்பட்டது. இராமாயணத்தில் அணிலாக Early Settlements in Jaffna என்ற ஆய்வு நூலின் பதிப்பில் எனது பங்கும் இருப்பதால் சில உண்மைகளை விளம்ப விரும்புகிறேன்.
" எங்கும் கும்மிருட்டு..... நடுநிசி..... "கி....ரீ.... ரீ... ரீ...ச்" என எங்கோ யாரோ கூரிய நகங்களால் எதையோ பிறாண்டும் சத்தம்! அச்சத்தம் காதுகளில் புகுந்து முள்ளந்தண்டை சில்லிட்டது. படுக்கையில் இருந்து துள்ளி எழுந்து...... "என்ன, 'மர்மக்கதை மன்னன்' பி.டி.சாமியின் மர்ம நாவலில் இருந்து ஒரு பக்கத்தை படிக்கிறேன் என எண்ணினீர்களோ? “ அது தான் இல்லை! ஏப்ரல் 14, 1912 இல் தன் கன்னிப் பயணத்தில் RMS டைட்டானிக் எனும் பாரிய பயணிகள் கப்பல் பனிப்பாறையுடன் உரசிய வேளையில் எழுந்த மரண ஒலி அது! அது சரி, 109 வருடங்களுக்கு பின் இந்த நனவிடை தோய்தல் எதற்காம் என நீங்கள் கேட்பது புரிகிறது. அதை பின்னர் சொல்லட்டுமா? சரி, கதைக்கு வருவோம்.
- அண்மையில் முகநூலில் நானிட்டிருந்த பேராசிரியர் நுஃமானின் பெயர் பற்றிய பதிவும் , அதற்கான எதிர்வினைகளும் இவை. ஒரு பதிவுக்காக இங்கு பதிவு செய்கின்றேன். - வ.ந.கி -
இலங்கைத் தமிழ் ஆய்வாளர்களில் பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் அவர்கள் முக்கியமானவர்களிலொருவர். இலங்கைத் தமிழ்ப்பகுதிகளின் ஊர்ப்பெயர்கள் பற்றிய இவரது ஆய்வு நூல்கள், நாட்டார் இசை, பாடல்கள் பற்றிய நூல்கள், ஒப்பனைக்கலை மற்றும் கனடாத் தமிழர்தம் வரலாறு பற்றிய 'கனடாவில் இலங்கைத்தமிழரின் வாழ்வும், வரலாறும்’ என்னும் நூல் போன்ற இவரது ஆய்வு நூல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
'தலைமுறை தாண்டிய பயணம்: பத்மநாப ஐயர் - 80!' என்னும் மெய்நிகர் நிகழ்வில் (வணக்கம் லண்டன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட நிகழ்வு) உரையாற்றிய கலை, இலக்கிய விமர்சகர் மு.நித்தியானந்தன் அவர்கள் கூறிய வரலாற்றுத் தகவலொன்று என் கவனத்தை ஈர்த்தது. அது முனைவர் பொ.ரகுபதியின் Early Settlements in Jaffnaஅ நூல் பற்றியது.

வ.ந.கிரிதரனின் வெளியான நூல்கள்:
இலக்கிய வித்தகர், கலாபூசணம், ஓய்வுநிலைக் கல்விப் பணிப்பாளர் த. துரைசிங்கம் (84) திங்கட்கிழமை மாலை (23 - 08 - 2021) கொழும்பில் காலமானார். ஈழத்து இலக்கியப் பரப்பிலும், கல்விப் புலத்திலும் நன்கு அறியப்பட்ட புலமையாளர் த. துரைசிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆறு தசாப்தங்களுக்கு மேலாக, எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டு அமைதியாகச் செயற்பட்டு வந்தவர்.
எனக்கு வாசிப்பது, எழுதுவதைப்போல் இன்னுமொரு பிடித்த விடயமுமுண்டு. அது கற்றல். அவ்வப்போது 'டொராண்டோ'விலுள்ள தொழில் நுட்பக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் எனக்குப் பிடித்த துறைகளில் பாடங்கள் எடுப்பது வழக்கம். 'டொராண்டோப் பல்கலைக்கழகம்' , 'யோர்க் பல்கலைக்கழகம்', 'சென்டானியல் கொலிஜ்', 'செனகா கொலிஜ்' என்று பல கல்விக்கூடங்களில் அவ்வப்போது பாடங்கள் எடுத்திருக்கின்றேன். வானியற்பியல், உயர் கணிதம், இலத்திரனியற் பொறியியல், குடிசார் பொறியியல், தகவல் தொழில் நுட்பம் என்று பல் துறைகளில் படித்திருக்கின்றேன். வாழ்க்கையின் போராட்டங்கள் மட்டுமில்லையென்றால் வாழ்க்கை முழுவதும் படித்துக்கொண்டிருக்கவே விரும்புவேன்.
பல வருடங்களுக்கு முன்னர் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் செ. கணேசலிங்கனின் மண்ணும் மக்களும் என்ற நாவல் வெளிவந்தது. அந்த நாவலை, அது அதிதீவிரவாதம் பேசுகிறது என்ற காரணத்தினால் தடைசெய்தார்கள். சில வருடங்களுக்கு முன்னர் ஈழத்தின் மற்றும் ஒரு இலக்கிய ஆளுமை எஸ். எல். எம். ஹனீபா எழுதிய மக்கத்துச்சால்வை என்ற கதைத்தொகுப்பு வெளியானது. ஹனீபாவின் எழுத்துக்களை பிடிக்காத சில அதிமேதைகள் அவரை கிறுக்கன் என்று வர்ணித்தனர். அதற்கு அவர், “ நான் கிறுக்கன் எண்டா, எதுக்கடா என்னுடைய எழுத்துக்களை படிக்காங்கள் … ? “ என்று எதிர்க்கேள்வி போட்டவர். மகாகவி பாரதியைக்கூட அவன் வாழ்ந்த காலத்தில் கிறுக்கன் என்றுதான் சிலர் அழைத்தார்கள். எங்கள் புகலிட நாட்டில் ஒரு கவிஞர் தனக்கு கிறுக்கு பாரதி என்றே புனைபெயரும் வைத்து, அதனையே தனது மின்னஞ்சல் முகவரியுமாக்கியிருக்கிறார். எனவே கிறுக்கு என்பது மோசமான சொல் அல்ல.
[ எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர் அவர்களின் பிறந்த தினமான ஆகஸ்ட் 29 தினத்தினையொட்டி அவரது மகள் எழுத்தாளர் நவஜோதி யோகரடன்ம் 'மேய்ப்பர்கள்' என்னும் இச்சிறுகதையை அனுப்பியுள்ளார். இது பற்றி அவர் பதிவுகளுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் "எனது தந்தையின் பிறந்த தினம் ஆகஸ்ட் 29 ஆம் திகதி எதிர்நோக்குகிறது. (29.08.1926 – 08.12.1995) அவர் நினைவாக இக்கதையை அனுப்புவதில் மகிழ்வையும், நன்றியையும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். நன்றியோடு நவஜோதி நவஜோதி யோகரட்னம்" என்று குறிப்பிட்டுமுள்ளார். அவருக்கு எம் நன்றி. அகஸ்தியர் நினைவாக அவரது இச்சிறுகதையைப் பதிவுகள் பிரசுரிப்பதில் மகிழ்ச்சியடைகின்றது. -பதிவுகள் -]
பாடகி பி.சுசீலாவின் சிறந்த பாடல்களிலொன்று இந்தப்பாடல். வரிகளை உணர்வு பூர்வமாகப் பாடியிருப்பார். கவிஞர் கண்ணதாசன் தன் மொழியாற்றல் காரணமாக, மனத்தை மயக்கும் எளிய , இனிய சொற்களைக்கொண்டு சிறப்பான பாடல்களைத் தருவதில் வல்லவர். இப்பாடலும் அத்தகையதொன்று.
எழுத்தாளர் முருகபூபதி அவர்களுக்கு அறிமுக பாமாலை அவசியமற்றது. எழுத்துலகம் நன்கு அறிந்த ஒரு படைப்பாளி. புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழும் இவர் இன்றுவரை எழுத்து துறைக்குள் பயணித்துக்கொண்டு தொடர்ந்து இலக்கியப் பணி ஆற்றிவருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது. அவரால் இந்த ( 2021) ஆண்டு படைக்கப்பட்ட கதைத்தொகுப்பின் கதை என்னும் சிறுகதைத்தொகுதி அண்மையில் ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது. 15 சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் இடம்பெறும் “அம்மம்மாவின் காதல்”, “அவள் அப்படிதான்”, “ஏலம்”, “கணங்கள்”, “நேர்காணல்” ஆகிய ஐந்து சிறுகதைகளிலும் பரந்து விரிந்து இடம்பிடித்துநிற்கும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை அலசி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.