கண்ணீர் அஞ்சலி: கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார். - குரு அரவிந்தன் (தலைவர், கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்) -
எமது இனிய நண்பர் கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார் அவர்கள் திடீரென எம்மைவிட்டுச் சென்ற 14ஆம் திகதி யூன் மாதம் 2021 அன்று பிரிந்து விட்டார். கோவிட்-19 காலச் சூழ்நிலையில் நேரடியான தொடர்புகள் அற்ற நிலையில் அவரது திடீர் மறைவு கனடிய தமிழ் சமூகத்திற்கு அதிர்ச்சி தருவதாகவே இருக்கின்றது. இந்தக் குறுகிய காலத்தில் இவரைப் போன்ற மூத்த தலைமுறைத் தமிழ் உணர்வாளர்கள் பலரை நாம் இழந்திருக்கின்றோம். இந்த மண்ணில் தமிழ் மொழியும், எமது பண்பாடும் நிலைத்து நிற்கப் பாடுபட்டவர்களில் நண்பர் கலாநிதி வசந்தகுமார் அவர்களுக்கும் பெரியதொரு பங்குண்டு. கடந்த சுமார் 30 ஆண்டுகளாக எங்களைப் போலவே அவரும் கனடிய மண்ணில் எம்மினத்தின், எமது மொழியின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்திருந்தார்.
‘வானவில்’ என்ற நிகழ்ச்சிகள் மூலம்தான் இவர் எனக்கு முதலில் அறிமுகமானார். 90 களின் தொடக்கத்தில் இருந்து கனடாவில் எமது மொழி மற்றும் பாரம்பரியத்தைப் பேணக்கூடிய வகையில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் வருடம் தோறும் நடைபெறுவதை அவதானிக்க முடிந்தது. ஒன்று உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பாடசாலை பழைய மணவர்களின் ‘வானவில்’ கலை நிகழ்ச்சி, மற்றது நான் கல்வி கற்ற மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களின் ‘முத்தமிழ் விழா’ நிகழ்ச்சி. குறிப்பாக நாடக ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் பழைய மணவர்களின் நிகழ்ச்சிகளாக இவை இரண்டும் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. பல தடவைகள் கனடா தமிழ் எழுத்தாளர் இணைய நிகழ்வுகளிலும், ஸ்ரீமதி நிராசந்துரு அவர்களின் நடனக்கல்லூரி பட்டமளிப்பு நிகழ்வுகளிலும் சந்தித்து அவருடன் உரையாடியிருக்கின்றேன். ஒருமுறை நூல் வெளியீட்டு நிகழ்வின் போதும், என்னை அழைத்துச் சபையோருக்கு அறிமுகம் செய்து, முதற்பிரதி வாங்கவைத்துக் கௌரவித்திருந்தார்.




மலர்களின் வாசனை மனதுக்கு உவப்பானது. அனைவரும் அறிந்தது. ஆனால் உயிரின் வாசனையை உணர்ந்தவர்கள் மிகச் சிலரே இருப்பர். விலைமதிக்க முடியாத உயிரின் மேன்மையை மனிதன் உணரும் கணங்கள் அநேகமாக மரணத்தை நிகர்த்த துன்பம் தருவனவாகவே அமைந்திருத்தல் கூடும்.அவ்வாறான வலிமிகுந்த தருணங்களை எழுத்தினால் மொழிபெயர்க்கும் வல்லமை கொண்ட படைப்பாளர்கள் அவற்றின் மூலம் வரலாற்றுக்கான தமது தடங்களையும் அழுத்தமாகப் பதிவு செய்து கொண்டே செல்கின்றனர்.

எழுத்தாளர் முருகபூபதியின் பார்வையில் : "சூரியகுமாரி பஞ்சநாதன் யாழ். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் சிவத்தம்பி, நுஃமான் , சித்திரலேகாவின் மாணவி. அத்துடன் கவிஞர் சிவரமணியின் தோழி. சூரியகுமாரி கிழக்கு பல்கலைக்கழகத்தில் துணை விரிவுரையாளராகவும் சிறிதுகாலம் பணியாற்றியவர். பின்னர் கொழும்பில் வீரகேசரியில் துணை ஆசிரியராக பணியாற்றினார். தற்போது துபாயில் பணியாற்றுகிறார். அங்கு சென்றபின்னர், எழுதுவதும் குறைந்துவிட்டது. சிறந்த ஆற்றல் மிக்க விமர்சகர்."
முன்னுரை
தமிழில் மொழிபெயர்ப்பில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் பாரதியார். அவர் இராமாயணத்தை மொழி பெயர்த்தார். மொழி பெயர்ப்பின் வழியாக நமக்கு அரசியல், தத்துவப் பார்வையை ஊட்டினார். இன்றைய மார்க்சியத் தத்துவமும் ஜனநாயகக் கோட்பாடும் மொழிபெயர்ப்பில் கிடைத்ததுதான் .
இன்று பழைய புத்தகங்களைத் தேடியபோது கவிதைப்புத்தகமொன்று அகப்பட்டது. நெடுங்கவிதையது. பெயர் " சாம்பல் வார்த்தைகள்:. கலை, இலக்கிய விமர்சகரும், கவிஞருமான இந்திரன் அவர்களின் நெடுங்கவிதை நூல். யாளி பதிவு வெளியீடு. வெளியிட்ட ஆண்டு ஜனவரி 1994. அட்டைப்பட வடிவமைப்பு ஏ.கோபாலன். நூல் வடிவமைப்பை இந்திரனே செய்திருக்கின்றார்.

அண்மையில் யாழ் இந்துக்கல்லூரி மாணவர்களின் இலாபநோக்கற்று இயங்கும் ஓராயம் அமைப்பின் காணொளியொன்றினைப் பார்த்தேன். அதில் யாழ் மாவட்டத்தில் நிலவும் நல்ல தண்ணீர்ப்பற்றாக்குறை பற்றி உரையாடிக்கொண்டிருந்தார்கள். அத்தருணத்தில் எனக்கு அண்மையில் பார்த்த காணொளியொன்றின் நினைவு தோன்றுகின்றது. இந்தியக் கிராமமொன்று உப்புத்தண்ணீரை நல்ல தண்ணீராக்கியது பற்றிய காணொளியது. குருகிராம் என்னும் வட இந்தியக் கிராமமொன்று எவ்விதம் நல்ல தண்ணீரைப் பெற்றது என்பது பற்றியது. அவர்கள் என்ன செய்தார்களென்றால்.. நல்ல தண்ணீர் ஓடும் கால்வாயின்றிலிருந்து குழாய்வழியாக நல்ல தண்ணீரைப்பெற்று சிறு குளமொன்றை உருவாக்கினார்கள். அவ்விதம் குளம் உருவாக்கப்பட்டுச் சில மாதங்களின்பின் அக்குளமானது அப்பகுதியிலிருந்த உப்புத்தண்ணீரை நீக்கி நல்ல தண்ணீராக்கிவிட்டது.
மலேசிய எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் அவர்கள் மறைந்த செய்தியினை எழுத்தாளர் யோ.புரட்சி அண்மையில் முகநூலில் பகிர்ந்திருந்தார். பதிவுகள் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் வே.ம.அருச்சுணன். அவரது படைப்புகள் பல 'பதிவுகள்' இதழில் வெளியாகியுள்ளன. சமுதாயப்பிரக்ஞை அவரது எழுத்துகளில் படர்ந்திருக்கும். மலேசியத் தமிழர்களின் உரிமைக்காய் அவை குரல்கொடுக்கும். மலேசியத் தமிழர்கள்தம் வரலாற்றை அவை பதிவு செய்யும், அவரது 'வேர் மறந்த தளிர்கள்' என்னும் நாவலும் பதிவுகள் இதழில் தொடராக வெளியாகியுள்ளது. அந்நாவலுக்கு முன்னுரையொன்றும் கேட்டு அனுப்பியிருந்தேன். நூல் வெளியானதா என்பது தெரியவில்லை. அவரது மறைவு பற்றிய மேலதிகத்தகவல்களைப் பெற இணையத்தில் தேடிப்பார்த்தேன். எவையும் அகப்படவில்லை. அருச்சுணனின் மறைவு பற்றிய மேலதிக விபரங்களை அறிந்த மலேசிய நண்பர்கள் எனது மின்னஞ்சலுக்கு அவற்றை அனுப்பி வையுங்கள். எனது மின்னஞ்சல் முகவரி: 
இலக்கியப்பிரவேசம் செய்த ( 1972 ) காலப்பகுதியில், நான் சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட அறுசுவை என்ற ஆறு குறுநாவல்கள் இடம்பெற்ற நூலைப்படித்தேன். அதில் சார்வாகன் என்ற பெயரில் ஒருவர் அமரபண்டிதர் என்ற குறுநாவலை எழுதியிருந்தார். அவர் ஒரு மருத்துவநிபுணர் என்ற தகவல், நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர்தான் தெரியும். அவர் தொழு நோயாளர்களுக்கு சிறந்த சிகிச்சையளித்தமைக்காக இந்திய அரசினால் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். எங்கள் மூத்த தமிழ் அறிஞர் கி. இலக்ஷ்மண அய்யரின் துணைவியார் பாலம் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர். மெல்பனுக்கு அவர் வந்தபொழுது எனக்கு அறிமுகப்படுத்தினார் திருமதி பாலம் லக்ஷ்மணன். சார்வாகன், அவரது இயற்பெயரல்ல. அந்தப் புனைபெயரின் பின்னாலிருந்த கதையை தமிழக சார்வாகனனே சொன்னார்.
ஜூன் 03 கலைஞர் கருணாநிதி பிறந்த தினம்
கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாள் கொரோனா காலகட்டமாதலால் ஆரவாரமின்றி கடந்து சென்றிருக்கின்றது. திமுகவினர் ஆட்சியிலிருக்கும் இச்சமயத்தில் வழக்கமான சூழல் நிலவியிருக்குமென்றால் இடம்பெற்றிருக்கக் கூடிய ஆரவாரத்தை நினைத்துப்பார்க்க முடிகின்றது.



