பதிவுகள் முகப்பு

விண்ணைப் போன்றதொரு நூலகம் - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
12 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


 
ஓசை & குரல் : AI SUNO  | ஓவியம்: AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=w9bSBvRq-Zk   வ.ந.கிரிதரன் பாடல்கள் அனைத்தையும் கேட்க -  https://www.youtube.com/@girinav1

விண்ணைப் போன்றதொரு நூலகம்

விண்ணைப் போன்றதொரு நூலகம்
மண்ணில் உண்டோ? இந்த
மண்ணில் உண்டோ?

விரிந்திருக்கும் விண் எனக்கு
விளக்கும் ஓர் ஆசான்.
இருப்பை விளக்கும் ஆசான்.
இங்குதான் சிந்தனைகள் விரிவடையும்.

விண்ணைப் போன்றதொரு நூலகம்
மண்ணில் உண்டோ? இந்த
மண்ணில் உண்டோ?

விரிந்து செல்லும் விண்ணுக்கு
எங்குண்டு ஒரு முடிவு?
அன்றொரு நாள் பெருவெடிப்பில்
இன்றுள்ள விண் தோன்றியதாம்.

விண்ணைப் போன்றதொரு நூலகம்
மண்ணில் உண்டோ? இந்த
மண்ணில் உண்டோ?

மேலும் படிக்க ...

தமிழும் திராவிடமும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
12 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                           தமிழ் அறிஞர் தேவநேயப் பாவாணர்

                            இசை & குரல்: AI SUNO

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=6tzw0IE3y-I   | தேவநேய பாவாணரின் திரவிடத்தாய் -

தேவநேயப் பாவாணர் தமிழ் அறிஞர்.
தமிழ் ஆய்வில் பேர் அறிஞர்.

திரவிடம் மூலம் தமிழம்
திராவிட  மூலம் திரவிடம்.
திராவிட மொழிகள் அனைத்தும்
தமிழ் மொழியின்  குழந்தைகளே.

தேவநேயப் பாவாணார் சொன்னார்.
திராவிட  மூலம் திரவிடமே.
திரவிடத்தின் மூலம் தமிழமே.
திராவிடத்தின் மூலம் தமிழே.

தேவநேயப் பாவாணர் தமிழ் அறிஞர்.
தமிழ் ஆய்வில் பேர் அறிஞர்.

மேலும் படிக்க ...

அப்பாச்சியின் புதையல் பற்றிய ஞாபகம்! - முல்லைஅமுதன் -

விவரங்கள்
- முல்லைஅமுதன் -
கவிதை
12 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                         - ஓவியம் AI -

அப்பாச்சி அடிக்கடி  சொல்வாள்.
சரியான இடம் அவள் ஞாபகத்தில் இல்லை.
அப்பாவும் பெரிதுபடுத்தவில்லை.
இரவுக்காட்சி பார்த்துவிட்டு பயத்தில்
மாட்டுக் கொட்டிலில் படுத்துத் தூங்குகையில்
கைவிளக்குடன் வந்த அப்பா
வீட்டினுள்ளே அழைத்துவந்தார்.
அம்மாவுக்கு அருகில் தூங்கினேன்.
விளக்கின் ஒளியில் அம்மாவின் முகம் தெரிந்தது.
தூரத்தே சிறுவெளிச்சமாய்...
அப்பா சுருட்டை நான்காவது தடவையாகவும்
பற்றவைத்துத் தோற்றுப்போகிறார்.
ஒருநாள் சுற்றிவளைத்த சப்பாத்துக்கால்கள்
அதே மாட்டுக்கொட்டிலில் சுட்டுவிட்டுச் சென்றனர்.
அப்பாச்சியின் அம்மா புதைத்த இடத்தில்.
அப்பாச்சிக்கு புதையல் பற்றிய
ஞாபகம் இப்போது வந்திருந்தது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கம்பராமாயணத்தில் தேர்ப்பாகன் - முனைவர் க.மங்கையர்க்கரசி,,உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061,

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி,,உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061,
ஆய்வு
11 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



முன்னுரை

ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல பயன்படும் ஊர்தியே தேர்.அந்தத் தேரை ஓட்டுபவர் தேர்ப்பாகன் என்று அழைக்கப்பட்டார். நால்வகை படைகளில் ஒன்று தேர்ப் படையாகும். தேரில் நகர்ந்து தாக்கும் படை தேர்ப் படை. தேரில் குதிரைகள் பூட்டப்பட்டன. அதைத் தேர்ப்பாகன் செலுத்தினான். தேரை ஓட்டுவதற்கு நல்ல பயிற்சி வேண்டும். .சங்க இலக்கியத்தில் தேர்ப்பாகன் குறித்து நிறைய குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. கம்பரும் தன் இராமாயணத்தில் தேர்ப்பாகன் குறித்து கூறியுள்ள செய்திகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கைகேயி ஒரு தேரோட்டி

போரில் வெற்றிபெற தேரோட்டி மிகவும் வல்லவனாக இருக்கவேண்டும். சம்பராசுரனுடன், தசரதன் போர் புரியும்போது கைகேயி அவனுக்கு உதவினாள். பாடலில் ’கோல்கொள’ என்ற பகுதிக்குத் தேர் சக்கரத்தின் அச்சாணி கழன்று விழுந்துவிட்டபோது, அந்தத் தேர் சாய்ந்து விழுந்து விடாதவாறு தன் விரலையே கோலாகக் கொண்டு தேரை ஓட்டினாள். என்றும், தேர்ப்பாகன் இல்லாத நிலையில் தசரதனுக்காக குதிரைகளை ஒட்டுகையில் கோல் கொண்டு தேரை ஓட்டினாள் என்றும் கொள்ளலாம். தேர்மீது அமர்ந்து போர் செய்யும் போது தேரைச் செலுத்தும் பாகன் தேர்ப்பாகனாவான்.

“பஞ்சி மென் தளிர் அடிப்பாவை கோல்கொள
வெஞ்சினத்து அவுணர் தேர் பத்தும் வென்றுளேற்கு
எஞ்சல் இல் மனம் எனும் இழுதை ஏறிய
அஞ்சு தேர் வெல்லும் ஈது அருமை ஆவதோ”
(மந்திரப்படலம் 18)

தேர்ப்பாகனின் கடமை

` தேரில் ஏறிய தலைவனின் குறிப்பறிந்து தேரினைச் செலுத்துதல் தேரோட்டியின் கடமை ஆகும். தேரில் ஏறிப் போர் செய்பவர் கருத்தும், குதிரையின் உள்ளமும் ,பகைவர் மனமும், கால நிலையும், காரிய சாதனையும் அறிந்து நடக்கவேண்டும்.போர் செய்பவர் தடுமாறும்போது,உண்மை நிலையை உணந்து எடுத்துக் கூறவேண்டும். தேரில் ஏறிப் போர் செய்பவர் தளர்ச்சியுற்றால்,தொடர்ந்து போர் செய்ய இயலாதநிலையில் அவருடைய உயிரைக் காக்கவேண்டும்.பாகன் ஓட்டும் தேரில் ஏறிப் போர் செய்பவர் மனதில் தவறான எண்ணம் தோன்றினாலும் உண்மைத் தன்மையை எடுத்துக் கூறவேண்டும்.எதிரிகள் தேர்ப்பாகனையே முதலில் வீழ்த்துவர். ஏனெனில் அப்போதுதான் பகைவர் தேர் ஓடாது என்பதால் முதலில் தன் உயிர்க்கே ஆபத்து என்று தெரிந்த நிலையிலும் தன் தேரில் ஏறுபவரைக் காக்கவேண்டும்.

மேலும் படிக்க ...

நூலகர் என்.செல்வராஜாவின் 'ஈழத்தின் தமிழ் நாவலியல் ஓர் ஆய்வுக் கையேடு' முக்கியமானதோர் ஆய்வுக் கையேடு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
09 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஐரோப்பியத் தமிழ் ஆவணக் காப்பகமும், ஆய்வகமும் அமைப்பினால் வெளியிடப்பட்ட ஆய்வுக் கையேடு. இவ்வாய்வுக் கையேடு இலங்கைத் தமிழ் நாவல்களைப்பற்றிய முக்கியமானதோர் ஆய்வுக் கையேடு. 1856 தொடக்கம் 2019 வரையில் வெளியான நாவல்களை உள்ளடக்கிய ஆய்வுக் கையேடு இத்துறை பற்றிய ஆய்வாளர்கள் பலருக்கும் பல்வகைகளிலும் உறுதுணையாகவிருக்கும்.

இக்கையேடு  பற்றிய தனது 'நுழைவாயிற்' குறிப்பில் இக்காலகட்டத்தில் வெளியான ஈழத்தின் கணிசமான தமிழ் நாவல்களை இவ்வாய்வுக் கையேட்டில் காணலாம் என்கின்றார் நூலகர் என்.செல்வராஜா.

இந் 'நுழைவாயிற்' குறிப்பின் இறுதியில் நூலகர் என்.செல்வராஜா அவர்கள் பின்வருமாறு கூறுவார்: "ஈழத்தித் தமிழ் நாவல்கள் பற்றிய ஆய்வினை மேற்கொள்ள முனையும் அறிமுக ஆய்வாளர்களுக்கும் ஆய்வுத்துறை மாணவர்களுக்கும் இலக்கிய  ஆய்வாளர்களுக்கும் தமக்குரிய பின்புலத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள இப்பட்டியலில் உள்ள நூல்கள் உதவக்கூடும். இந்நூல் ஒரு தனிமனித முயற்சியாகும். வரையறுக்கப்பட்ட சொந்த முதலீட்டுடன் லாபநோக்கின்றி ஆய்வாளர்களின் நலன்கருதி வெளியிடப்பட்டுள்ள இந்நூலின் இருப்பினைப் பலருடனும் பகிர்ந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகின்றேன்.''

நூலகராக இருந்த இவரது அனுபவம் இவர் வெளியிடும் ஆய்வுத் தொகுதிகளில் தெரியும்.  இலகுவாகத்  தகவல்களைத் தேடியறியும் வகையில் பிரிக்கப்பட்டிருக்கும். இத்தொகுதியும் அதற்கு விதிவிலக்கல்ல. தொகுதியிலுள்ள நாவல்கள் 1. ஈழத்து நாவல்கள், குருநாவல்கள், 2. மொழிபெயர்ப்பு நாவல்கள், குறுநாவல்கள், 3. சிறுவர் நாவல்கள், சிறுவர் கதை நூல்கள், 4. சிறுவர் மொழிபெயர்ப்பு நாவல்கள், சிறுவர் கதைகள், 5. இவ்வாண்டில் வெளிவந்ததாகக் கருதப்படும் நாவல்கள் ஆகிய ஐந்து பிரிவுகளில் பிரிக்கப்பட்டுள்ளன. தகவற் தேடலை இலகுவாக்கும் பிரிவுகள் இவை.

மேலும் படிக்க ...

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழி நடத்தும் எழுத்தாளர் அரங்கம் - 24

விவரங்கள்
- தகவல்: தேவகாந்தன் -
நிகழ்வுகள்
09 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ரொறன்ரோவில் பரதநாட்டிய அரங்கேற்றம். - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
09 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சென்ற சனிக்கிழைம யூலை மாதம் 27 ஆம் திகதி 2024 அன்று மலை 6:00 மணியளவில் ரெறன்ரோவில் உள்ள சீன கலாச்சாரமண்டபத்தில் செல்வி சாக்ஸவி திலீபனின் பரத நாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேறியது. நண்பர் திலீபனின் அழைப்பை ஏற்று நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். இது போன்ற பரதநாட்டிய, இசை அரங்கேற்றங்கள் சிலவற்றுக்குச் சிறப்பு விருந்தினராக நான் கலந்து கொண்டிருந்தாலும், அன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டது போல இசை, நடன ஆசிரியர்களை நான் ஒரு போதும் இப்படியான நிகழ்வுகளில் சந்திக்கவில்லை. இந்த நிகழ்வில் பல புதிய இசை, நடன ஆசிரியர்களையும் சந்தித்து உரையாடவும் முடிந்தது குறிப்பிடத் தக்கது.

சாக்ஸவியின் தாயார் ஸ்ரீமதி சுதர்சினி அவர்கள் நடன ஆசிரியராக இருப்பதும் இவர்களின் வருகைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அண்ணாமலை கனடா வளாகத்தைச் சேர்ந்த டாக்டர் சூரியகலா சந்திரிகா ஜீவானந்தன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த அரங்கேற்ற நிகழ்வுக்கு அற்புத நர்த்தனாலய அதிபர் ஸ்ரீமதி அற்புதராணி கிருபராஜ் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் தனது உரையில் ‘செல்வி சாக்ஸவி திலீபன் மிகவும் திறமை உள்ள பாத்திரலட்சணங்கள் பொருந்திய அன்பும், அடக்கமும், பணிவும் உள்ள சிறந்த மாணவி. நல்ல அங்கசுத்தம், சிறந்த வயப்பிடிப்பு, உணர்ந்த பாவம் என்பனவற்றை சாக்ஸவியின் இந்த நடனத்தில் கண்டு மகிழ்ந்தேன். இந்த அரிய கலையைப் புலம்பெயர்ந்த இந்த மண்ணில் உள்ள  அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய பொறுப்பு சாக்ஸவி போன்றவர்களிடமே இருக்கிறது, அவரது எதிர்காலம் சிறக்க எனது வாழ்த்துக்கள்’ என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க ...

நட்சத்திரத் தோழியரே அவனை அழைத்து வாருங்கள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
09 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



                          - இசை & குரல் : AI SUNO | ஓவியம் - AI

              யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=ibgzWOjb2Qc  வ.ந.கிரிதரனின் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/@girinav1


மேற்கு நாடு நோக்கிப்  பொருள் தேடச் சென்ற கணவனைப் பற்றிய  தகவல்கள் எவையுமற்று வாடும் பெண் ஒருத்தியின் உணர்வுகள் இவை. அவள் தன் உணர்வுகளை நட்சத்திரத் தோழியரிடம் உரைக்கின்றாள். உதவும்படி கேட்கின்றாள்.

நட்சத்திரத் தோழியரே அவனை அழைத்து வாருங்கள்! - வ.ந.கிரிதரன் -

படுக்கையில் புரண்டு கிடக்கின்றேன்.
விரிவானத்து நட்சத்திரத் தோழியரே.
தூக்கமின்றித்  தவிக்கின்றேன்.
என்னவன் நினைவாலே.
என்னவன் நினைவாலே.

நீள்விழியாள் என்றெனை அழைத்தான்.
நிம்மதியாய் இரு என்றான்.
நீயின்றி நானில்லை என்றான்.
சொன்னவன் இன்று இங்கில்லை.
நெடுந் தொலைவு சென்று விட்டான்.

மேலும் படிக்க ...

பன்முக இலக்கிய ஆற்றல் மிக்க எழுத்தாளர் ஈழக்கவி பற்றி... - பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் -

விவரங்கள்
- பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் -
இலக்கியம்
08 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

               - எழுத்தாளர் 'ஈழக்கவி' ஏ. எச். எம். நவாஷ் -

ஈழக்கவி என்னும் புனைபெயரில் எழுதிவரும் ஏ. எச். எம். நவாஷ் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மெய்யியலில் சிறப்புப் பட்டம் பெற்றவர்; சிறிதுகாலம் மெய்யியல் துறையில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். நீண்டகாலம் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றி அண்மையில் பணி ஓய்வு பெற்றிருக்கிறார்.

1980களிலிருந்து கவிதை எழுதிவரும் ஈழக்கவியின் ஏவாளின் புன்னகை, இரவின் மழையில் ஆகிய கவிதைத் தொகுதிகள் இவரை குறிப்பிடத்தக்க ஈழத்துக் கவிஞர்களுள் ஒருவர் என நிறுவியுள்ளன. விமர்சகர், ஆய்வாளர் என்ற வகையில் கடந்த சுமார் இருபது ஆண்டுகளில் விரிவாகவும், ஏராளமாகவும். எழுதியுள்ளார். ஆறு சிறுகதைகள்: ஒரு பகுப்பாய்வு, பிரமிள் கவிதைகள் ஒரு நுண்ணிய உசாவல், அழகியல் மெய்யியல் ஆகிய இவரது நூல்கள் இவ்வகையில் முக்கியமானவை.

ஈழத்துத் தமிழறிஞர்களான பேராசிரியர்கள் சுவாமி விபுலாநந்தர், தனிநாயகம் அடிகளார், க. கணபதிப்பிள்ளை, சு. வித்தியானந்தன், ம. மு. உவைஸ் முதலியோர் பற்றிய ஈழக்கவியின் சிறு நூல் வரிசை இவர்கள் பற்றிய பயனுடைய அறிமுகமாகவும், ஆய்வாகவும் மதிக்கத்தக்கது.

மேலும் படிக்க ...

ஓடை II - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
08 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கு முட்டையிட்டாய்
கடலைக் கடைந்து
கடலோரம் முட்டையிட்டேன்.

சற்றே மாற்றி பாடினால் இவ்வாறுதான் அமையும். ஆனால் இயற்கை அடிப்படையில் மாறாது எனில், மனிதன் இயற்கையோடு தொடுக்கும் போரும் மாறாது. (சாராம்சத்தில்).

காலை ஆறுமணியளவில் பாதையின் வலப்புறமாய் கடற்கரைக்கு அடுத்ததாயிருந்த அந்த பெரிய வீதியில் நடக்க தொடங்கினேன். எனது வலதுபுறத்தில் ஒரு மைதானம் போல் கிடந்தது வயல்வெளி. உண்மையில் அதனை வயல்வெளியென்று சொல்ல முடியாது. வேண்டுமென்றால், புல்வெளியென்று சொல்லலாம். நடக்;க முடியாது - சதுப்புநிலம் என்று விடுதி உரிமையாளன் எனக்கு சொல்லியிருந்தான். எனவேதான் வீதி நெடுக நடக்க முடிவு செய்தேன். ஆனால் வயலை அடுத்ததாய் அந்த பிரம்மாண்டமான குளம் கிடந்தது. பல சிறு சிறு குடில்கள் கரையோரமாய் முளைத்திருந்தன. ஒருவேளை அவை இறால் பிடிக்க வசதி செய்வனவாக இருக்கக்கூடும். பெரிய படகுகள் சிலவேளை அங்கு வந்து இறங்கக்கூடும். தெரியவில்லை.

சிறிது தூரம் சென்றவுடன் பனைமரங்கள் வீதியோரமாய் ஆங்காங்கே, நிற்க தொடங்கி இருந்தன. அதாவது வீதி. அடுத்ததாய் பனை மரங்கள். அடுத்ததாய் வயல்வெளி. அடுத்ததாய் குளம். ஒரு பத்து பதினைந்து பனை மரங்களை கடந்தால் வயல்வெளி. பின் குளம்.

இறங்கி, அந்த பனை மரங்களை கடந்து வயலை அடைந்தேன். சில ஒற்றையடிப்பாதைகள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடின. ஒன்றின் வழியே குளத்தருகே சென்றேன். இப்போது அவை கரையோடு ஒட்டி இருந்த குடில்களாய் இல்லை. கரையில் இருந்து, ஐந்தாறடி உள்ளே குளத்து நீரில் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் ஒன்றின் ஓரமாய் படகொன்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒருவேளை யாரேனும் வந்திறங்கியிருக்க வேண்டும். வந்து என்ன செய்வார்கள்? தெரியவில்லை. தூரத்தே, தீவு போலிருந்த ஒரு சிறு பிரதேசத்தில் நாணற்புற்கள் இடுப்புவரை வளர்ந்திருந்தன.

மேலும் படிக்க ...

இயற்கையின் பேரழகு. - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
08 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


                                             ஓவியம் AI
                                  - இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=syd_-1rqcL4

இயற்கையின் அழகோ பேரழகு.
செயற்கையின் நிலையோ சீரழிவு.

இயற்கையை ஆராதிப்பதில் எப்பொழுதும் .
பெருவிருப்பு உண்டு எனக்கு.
இருப்பை மறந்து இரசிப்பேன்.
பெருவிருப்பு அத்தகையது. ஆம்.

இயற்கையின் அழகோ பேரழகு.
செயற்கையின் நிலையோ சீரழிவு.

மேலும் படிக்க ...

நான் பார்த்த சீக்கிய மதத் திருமணம்! - கனகசபை குருபரன் -

விவரங்கள்
- கனகசபை குருபரன் -
சமூகம்
07 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                              - ஓவியம் AI -

    கடந்த ஆனி மாதம், சீக்கிய மத முறையிலான  திருமணம் ஒன்றைப்  பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக்  கிடைத்தது. இது நான் பார்த்த முதலாவது வேற்று இன, மத திருமணம் என்பதால் அது சம்பந்தமான எனது மன உணர்வுகளை உங்களுடன் பகிரலாம் என்று நினைக்கிறேன்.

    ஏற்கனவே சீக்கிய இனத்தவருடன் எனக்கு இருந்த தொடர்பு பற்றி இங்கு குறிப்பிட வேண்டும்.  தொண்ணூறுகளின் தொடக்கத்தில் போட்ஸ்வானாவில் சீக்கியர் ஒருவரோடு  மூன்று மாதங்கள் ஒரே வீட்டில் வசித்திருக்கிறேன். வீடு விற்பனை முகவராகக் கனடாவில் வேலை பார்த்த அவர், அக்காலப் பகுதியில் ஏற்பட்ட  பொருளாதார மந்த நிலை காரணமாகத்  தொழில் தேடி போட்ஸ்வானாவிற்கு வந்தார். கனடாவில் இருக்கும் எனது சகோதரரின் பரிந்துரையோடு வதிவிடம் தேடி எனை நாடி வர,  இந்திய அமைதிப்  படையின் அடடூழியங்களை நேரடியாகப்  பார்த்திருந்தாலும், வேறு வழியில்லாமல்  ஒத்துக் கொண்டேன். எனினும் அவருடன் நான் வசித்த அந்த மூன்று மாதங்கள், சீக்கிய சமுதாயம் பற்றிய எனது எண்ணத்தை முற்றாக மாற்றி விட்டன. அன்று தொடங்கிய எமது நட்பு, நான் போட்ஸ்வானாவை விட்டு வரும் வரை தொடர்ந்தது.
     
    சுவாரசியமாகப்  பேசவும்  சுவையாகச்  சமைக்கவும்  கூடிய அவரோடு  நடந்த உரையாடல்களில் இருந்து சீக்கிய மதத்தின் வரலாறு, சீக்கியர்களின் வாழ்க்கைமுறை பற்றி  விபரமாக அறிந்து கொண்டேன்.  ஒரு இந்துத் தகப்பனுக்கும், இஸ்லாமியத் தாய்க்கும் பிறந்த குரு நானக்(1469-1539) எனும் குருவினால் சீக்கிய மதம் நிறுவப்பட்டது. அவரைத்  தொடர்ந்து வந்த 9  சீக்கிய மத குருமார்களினால் அது மெருகூட்டி  வளர்த்தெடுக்கப்பட்டது. பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங், அவர்களுடைய புனித நூலான குரு கிரந்த் சாஹிபை தனக்கு அடுத்த குருவாக பிரகடனப்படுத்த, இன்று வரை அந்தப் புனித நூலையே குருவாகக் கொண்டு வழிபட்டு வருகின்றனர். அவர்களின் வழிபாட்டுத் தலமான குருத்வாராவில் உள்ள பிரதான மண்டபத்தில் உள்ள தர்பார் சாஹிப்  என்று அழைக்கப்படும் சிறு மேடையில் குரு கிரந்த்  சாஹிபை  வைத்து, கவிதை வடிவில் அதில் உள்ள சுலோகங்களைப்  பாடித்  துதிப்பது, அவர்களின் வழிபாட்டு முறையாகும். இந்து, இஸ்லாம் இரண்டினதும் வரலாறு, இறையியல்த் தடங்களை  சீக்கியம் தன்னகத்தே கொண்டுள்ளது. சீக்கியம், எப்படி வாழவேண்டும் என்று பல நல்ல விடயங்களைக்  கூறி இருந்தாலும்,  தியாகம், மனித நேயம் மற்றும் நேர்மையான நடத்தை  என்பவற்றிக்கு அதிக முக்கியத்துவம்  கொடுக்கிறது.  

மேலும் படிக்க ...

ஆழ் மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள் - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
07 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                         -  ஓவியம் AI -

                                  இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=RUxx8ili1gM

ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள்.
வாழ்வில் பால்யப் பருவத்து நினைவுகளே.

என் பால்ய காலத்து  நண்பனை
நான் நேற்று சந்தித்தேன்.
நீண்ட நாட்களின் பின்பு
ஆண்டுகள் பல கடந்த பின்பு
நேற்றுத்தான் சந்தித்தேன் அவனை.

பதின்ம வயதுகளில் அவனுடன் கழித்த நினைவுகள்
படம் விரித்தன நெஞ்சில்.
யாழ் நகரத்தின் தெருக்களில் அவனுடன்
வாழ்வைக்  கழித்த பொழுதுகள் தெரிந்தன.

மேலும் படிக்க ...

மாணிக்கவாசகா் வரலாறும் படைப்புச் சூழலும்! - முனைவா் நா.கவிதா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா், தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -

விவரங்கள்
- முனைவா் நா.கவிதா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா், தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
ஆய்வு
07 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலக்கியங்கள் குறிப்பிட்ட காலத்தைச் சோ்ந்த படைப்பாளிகளால் படைக்கப்படுவதாகும். ஆதலால் இலக்கியங்கள் யாவும் அவை தோன்றிய காலத்தில் ஏற்படும் மாற்றங்களை, முழுமையாக சுவீகரித்துக் கொள்ளும் என்று கூறுவா். இதனால் இலக்கிய உருவாக்கத்தில் வரலாற்றுப் பின்னணியின் முதன்மை இடத்தை உணர முடிகின்றது. வரலாற்றிற்குப் பலமுகங்கள் உள்ளன. அரசியல் வரலாறு, சமுதாய வரலாறு, கலை வரலாறு, அறிவியல் வரலாறு, பண்பாட்டு வரலாறு எனப்படும் பல முகங்களுக்கும் அடிப்படையானது – அனைத்துத் துறைகளிலும் தாக்கம் ஏற்படுத்தக் கூடியது அரசியல் வரலாறு ஆதலால் படைப்பு, படைப்பாளா் வரலாறு அறிவதற்கும், அரசியல் வரலாறு அவசியமாகின்றது. இலக்கியம் உருவாகி வளா்ந்திட்ட, தமிழகத்தின் அரசியல் வரலாறாகிய படைப்புச்சூழல், படைப்பாளா் வரலாறு அறியப்பட்டால் பக்தி இலக்கியங்களைச் செம்மையாக அறிந்து கொள்ள முடியும். அவ்வகையில் மாணிக்கவாசகா் வரலாறையும் படைப்புச் சூழலையும் ஆராய்வதாக இவ் ஆய்வுக் கட்டுரை அமைகின்றது.

மாணிக்கவாசகா் பிறப்பு

பாண்டிய நாட்டில் வைகை ஆற்றங்கரையில், மதுரை நகரிலிருந்து ஏழுமைல் தொலைவில் உள்ள திருவாதவூரின் கண், மானமங்கலத்தில் மறையோதும் ஓா் அந்தணா் குடியில் பிறந்தவா் மாணிக்கவாசகா். இவா் தாய் தந்தையார் பெயா் புலப்படவில்லை. ஆயினும் சிலா் இவரது தாய் தந்தையார் பெயா் சம்புபாதாசிரியா் என்றும் சிவஞானவதியார் என்றும் கூறுவா். ஆனால் மறைமலைஅடிகள் இக்கருத்தை பின்வருமாறு மறுத்துக் கூறுகின்றார்.

மேலும் படிக்க ...

அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவங்கள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
06 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                - இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=zNGlkKq8ZPc

கனடாவுக்குச் செல்லும் வழியில் டெல்லா எயார் லைன்ஸ் பொச்டனிலிருந்து மொன்ரியால் ஏற்றிச் செல்ல மறுத்ததால் பொஸ்டனில் அகதியாக அடைக்கலம் கோரினேன். என்னை நியு யோர்க் மாநகரிலுள்ள புரூக்லின் என்னும் தடுப்பு முகாமில் மூன்று மாதம் தடுத்து வைத்திருந்தார்கள். அது பர்றி விபரிக்கும் கவிதை இது.

 

அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவங்கள்!  - வ.ந.கிரிதரன் -

அமெரிக்கத் தடுப்பு முகாமில்
அடியேனின் அனுபவங்களைக் கூறுவேன்.

அகதியாகக்  கனடா செல்லும் வழியில்
ஆகாய விமானம் , டெல்டா ஆகாய விமானம்
மொன்ரியால் ஏற்றிச் செல்ல மறுத்ததால்
மாநகர் பாஸ்டனில் அடைக்கலம் கோரினேன்.

அமெரிக்கத் தடுப்பு முகாமில்
அடியேனின் அனுபவங்களைக் கூறுவேன்.

மேலும் படிக்க ...

பிரசன்ன விதானகேயின் Paradise திரைப்படம்! இலங்கை பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், இராமாயண ஐதீகத்தைப் பேசும் உலக சினிமா ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
05 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பூலோகத்தின் சொர்க்கம் என வர்ணிக்கப்பட்ட இலங்கைக்கும் இராமாயணத்திற்கும் தொடர்பு இருப்பதை ஐதீகக் கதைகள் மூலம் அறிகின்றோம். இராமாயணத்தில் வரும் இராவணன் தமிழனாகவும் இராமன் ஆரியனாகவும் சித்திரிக்கப்படுகிறார்கள். இந்த இரண்டு பாத்திரங்களின் குணவியல்புளை வைத்து இன்றும் பட்டிமன்றங்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். வால்மீகி இராமாயணம் – கம்பராமாயணம் ஆகியன குறித்தும் மாறுபட்ட கதைகள் தொடருகின்றன.

இந்தியாவில் உத்தரபிரதேசம் அயோத்தியில்தான் இராமர் பிறந்தார் என்று சொல்லிக்கொண்டு 32 வருடங்களுக்கு முன்னர் ( 1992 – டிசம்பர் 06 இல் ) ஆயிரத்து ஐநூறு வருடங்கள் பழைமை வாய்ந்த பாபர் மசூதியை இந்துத்துவா கரசேவர்கள் இடித்துத் தரைமட்டமாக்கினர். இது இவ்விதமிருக்க, தாய்லாந்தில்தான் இராமர் பிறந்தார் என நம்புகின்றவர்கள், அங்கே அவருக்கு கோயில் அமைத்து வழிபடுகிறார்கள்.

இந்தோனேஷியாவின் ஆளுகைக்குள்ளிருக்கும் பாலித்தீவில்தான் அவர் பிறந்தார் என நம்புகின்றவர்கள், அங்கே அவருக்கு சிலைகள் எழுப்பியிருக்கிறார்கள். இவ்வாறு இராமாயணக் கதைகள் பலவுள்ளன.

    -  திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகே -

ஆனால், அவன் மனைவி சீதையை கடத்தி வந்து இலங்கையில் அசோகவனத்தில் சிறை வைத்த இராவணன் இலங்கை மன்னன் என்பதனால் இவனுக்கு இலங்கேஸ்வரன் எனவும் பெயர் உண்டு. குறிப்பிட்ட அசோகவனம் அமைந்துள்ள இடத்தில் நாம் சீதையம்மன் கோயிலை பார்க்க முடியும். சிங்கள மக்களும் வழிபடும் இவ்விடத்திற்கு சீதா எலிய என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டவர்களை பெரிதும் கவரும் இயற்கை எழில் சூழ்ந்த பிரதேசமாகவும் இவ்விடம் காணப்படுகிறது.

மேலும் படிக்க ...

சிறுகதை: ஒரு காதல் கதை! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
05 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                  - ஓவியம்: AI -

“கண்ணை மூடிக்கொண்டு, ரிகார்ட் பிளேயரில் ஒலிக்கும், மென்னிசை தாலாட்டு ஒலிக்க, படுத்துக்கிடப்பேன். ஒரு நங்கையானவள் மலை உச்சியிலிருந்து மென் ஓட்டத்தில் இறங்கி ஓடி வருவது போல் ஒரு பிம்பம் மனத்திரையில் தோன்றும்…”

இது அவனது நிசப்தம் நிறைந்த இரவு.

பகலும், மாலைகளும் வேறு விதமானது.

கோர்ட் வேலை முடிந்தவுடன், இவனும் இவனது நான்கு அல்லது ஐந்து நண்பர்களுமாய் சேர்ந்து கூடிவிடுவார்கள்.

பகல் நேரத்தில், நேரமிருந்தால், ஒரு மூத்த தொழிற்சங்கவாதியின் அலுவலகத்தில்… அவனும், ஒரு வித்தியாசமான ஆள். தோழமை மிகுந்த ஒரு அரசியல்வாதி.

மாலை நேரமென்றால் வைட் ஹவுஸ் தேனீர் சாலையில். நான்கு மணியளவில், இந்த நால்வரையும், அந்த வைட் ஹவுஸ் தேநீர் சாலையில் வழமையான மூலையில் காணலாம்.

அங்குள்ள சிப்பந்தியில் - அதிலும் சீனியர்கள் - அவர்கள் ஏதோவொரு வழியில், ஏதோவொரு தொழிற்சங்க நடவடிக்கையில் தம்மை இணைத்து, ஏதோவொரு வகையான வழக்கு வம்பென்று ஊடாடி வந்திருந்ததால், இவன், அவர்களது கதாநாயகன் ஆனான். எனவே இவர்கள் நேரம் போவது தெரியாமல் கதைப்பதை அவர்கள் பொருட்படுத்துவது இல்லை. அதனாலேயே இது வழமையாகியது. அத்தேநீர் சாலையில் இது இவனுக்குத் தரப்படும் தனி மரியாதை. பாலற்ற வெறும் தேநீரை சுவைத்து சுவைத்து இவனும் இவனது நண்பர்களும் ஆர அமற நாட்டு நிலவரங்கள், உலக நடப்புகள், பத்திரிகை செய்திகள், கட்சி விவகாரங்கள்- இத்தியாதி என்று ஒருமுறை வைத்து கதைத்து இறுதியாய் புறப்பட ஓரிரண்டு மணி நேரம் சென்று, மாலை மங்கவும் ஆரம்பித்திருக்கும்.

மேலும் படிக்க ...

ரவி அல்லது கவிதைகள்!

விவரங்கள்
- ரவி அல்லது -
கவிதை
04 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1. இனியது கேட்கின்.

மன பாரம் நீங்க
மழை நாளில்
வெகுதூரம் வந்திருக்க கூடாதுதான்
ஒதுங்கி நிற்கும்பொழுதில்
தெரிந்தவர்கள்
பரிவு கொண்டு
வீட்டிற்கு வரச்சொல்லிய
அசௌகரியம் வராமல் இருப்பதற்கு.
அழைத்தவரின்
அப்பாவினுடைய
நோய்த் துயரை
கவலையோடு
காட்சிகளாக்கினார்.

மேலும் படிக்க ...

அஞ்சலிக்குறிப்பு: வான் அலைகளில் கலை பரப்பிய அப்பல்லோ சுந்தாவின் துணைவியார் கலாரசிகை பராசக்தி சுந்தரலிங்கம் விடைபெற்றார்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
04 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கை வானொலி மற்றும் லண்டன் பி. பி. சி . யில் முன்னர் சேவையாற்றியவரும் இலங்கை நாடாளுமன்றில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவருமான புகழ் பூத்த அறிவிப்பாளர் ( அமரர் ) சுந்தா சுந்தரலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியாரும், சுபத்திராவின் பாசமிகு தாயாரும், குலசேகரம் சஞ்சயனின் அன்பு மாமியாரும், சேந்தன், சேயோன் ஆகியோரின் பிரியத்திற்குரிய பேத்தியாருமான திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள் இம்மாதம் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலையில் அவுஸ்திரேலியா சிட்னியில் அமரத்துவம் எய்திவிட்டார் என்ற துயரச் செய்தியுடன்தான் அன்றைய நாளின் காலைப்பொழுது எனக்கு விடிந்தது.

சிட்னியிலிருந்து இலக்கியச் சகோதரன் கானா. பிரபா, காலை வேளையில் எனக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டால், ஏதோ ஒரு கலை, இலக்கியப் புதினம்தான் சொல்லப்போகிறார் என நினைத்துக்கொள்வேன். ஆனால், அவர் அன்று சொன்ன தகவல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்தத் தகவலைத்தான் இந்த அஞ்சலிக்குறிப்பின் தொடக்கத்தில் குறிப்பிட்டேன். எங்கள் கலை, இலக்கிய, வானொலி ஊடகக் குடும்பத்திலிருந்து மற்றும் ஒருவரை நாம் தற்போது இழந்து நிற்கின்றோம். எம்மால் அக்கா என அன்புபொங்க அழைக்கப்படும் பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள், எமது அந்த நேசம் இழையோடும் உணர்வுபூர்வமான குரலை இனிமேல் கேட்கமாட்டார்கள்.

இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சிட்னிக்குச் சென்றிருந்தவேளையில், என்னை அவரிடம் அழைத்துச்சென்றவர்கள் கவிஞர் அம்பியின் புதல்வன் திருக்குமாரனும், புதல்வி மருத்துவர் திருமதி உமாதேவி சிவகுமாரனும்தான். அன்று அக்கா, எங்களைக்கண்டதும் உற்சாகம் பொங்க நீண்டநேரம் உரையாற்றினார்.

மேலும் படிக்க ...

வென்மேரி அறக்கட்டளையின் ஆற்றல்மிகு ஆளுமைகளுக்கான விருது வழங்கும் விழா 2024 கனடா. - தகவல்: வென்சிலாஸ் அனுரா -

விவரங்கள்
- தகவல்: வென்சிலாஸ் அனுரா -
நிகழ்வுகள்
04 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- தெளிவாகப் பார்ப்பதற்கு படங்களை ஒரு தடவை அழுத்தவும். -


 
கனடா வென்மேரி அறக்கட்டளையின் மூன்றாவது  சர்வதேச விருது வழங்கும் விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி  கனடாவில் நடைபெறவுள்ளது.
 
தமிழ் இனத்திற்கும் மொழிக்கும் அரும்பணி ஆற்றிய ஆளுமைகளை  இனங்கண்டு அவர்களுக்கு மதிப்பளித்து, பாராட்டி, கெளரவித்து  ஏனையோர்க்கு  முன்மாதிரியாகத் திகழும் அவர்களை மண்ணின் மாமணிகளாக வரலாற்றில்  பதிவு செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதே  வென்மேரி அறக்கட்டளை.

மேற்படி அறக்கட்டளையின்   முதலாவது விருது  வழங்கும் விழா கடந்த ஆண்டு யாழ் . நீராவியடியில்  உள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில்  அறக்கட்டளையின் தலைவர்  வென்சிலாஸ் அனுரா தலைமையில்    நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து  ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதி 2023ம் ஆண்டுக்கான    இரண்டாவது சர்வதேச விருது  வழங்கும் விழா பிரான்ஸில்   நாட்டில் நடைபெற்றது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பதினொராம் திகதி 2024ம் ஆண்டுக்கான    மூன்றாவது  சர்வதேச விருது  வழங்கும் விழா கனடாவில் பிற்பகல் 2.௦௦ மணிக்கு Audley Recreation center Ajax என்னும் இடத்தில் நடைபெற உள்ளது.

அனைவரையும் பணிவன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி.

வென்சிலாஸ் அனுரா
நிறுவுனர்,
வென்மேரி அறக்கட்டளை

மேலும் படிக்க ...

சிந்தனைக் களம் இசைத்தொடர் 42: 'இசைமரபுக்கு டாக்டர் S. இராமநாதன் அவர்களின் பங்களிப்பு’

விவரங்கள்
-தகவல்;பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
03 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting  | Meeting ID: 813 0576 0745 | Passcode: 381740

மேலும் படிக்க ...

SRS தமிழ் வானொலியின் விமர்சன அரங்கத்தில் வ.ந.கிரிதரனின் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத் தொகுப்பு பற்றிய விமர்சனம்.

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
03 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பதிவுகள்.காம் வெளியீடாக வெளியான எனது கவிதைத் தொகுதியான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' தொகுப்புக்கு எழுத்தாளரும், திறனாய்வாளருமான ரஞ்ஜனி சுப்பிரமணியம் எழுதிய விமர்சனம் SRS தமிழ் வானொலியின் விமர்சன அரங்கத்தில் ஒலி பரப்பாகியுள்ளது. அதனை ஒலி வடிவில் வழங்கியவர் நாடகவியலாளர் ஆனந்தராணி பாலேந்திரா.

சிறப்பாக எனது கவிதை நூலுக்கு விமர்சனம் எழுதிய ரஞ்ஜனி சுப்பிரமணியம் அவர்களுக்கும், அதனைச் சிறப்பாக வாசித்த நாடகவியலாளர் ஆனந்தராணி பாலேந்திரா அவர்களுக்கும், இதற்குச் சந்தர்ப்பம் வழங்கிய SRS தமிழ் வானொலியின் 'விமர்சன அரங்க'த்துக்கும் என் நன்றி. விமர்சன உரையினைக் கேட்பதற்கான  இணைய இணைப்பு

வாழ்த்துகள்: எழுத்தாளர் அலெக்ஸ் பரந்தாமனுக்கு ரூபா 5 இலட்சம் நிதி நல்கை

விவரங்கள்
- ஊர்க்குருவி -
நிகழ்வுகள்
03 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

           - எழுத்தாளர் அலெக்ஸ் பரந்தாமன் -

எழுத்தாளர்கள் ஜோர்ஜ். இ.குருஷேவ், கற்சுறா ஆகியோர் நண்பர்கள் சிலரின் ஆதரவுடன் நிதி திரட்டி ரூபா 5 இலட்சத்தினை இலங்கையிலிருந்து செயற்படும் எழுத்தாளர் அலெக்ஸ் பரந்தாமன் (இராசு தங்கவேல்) அவர்களுக்கு வழங்கியிருக்கின்றார்கள். இதனை அமரரும் , தமிழ் மக்கள் ஜனநாயகி முன்னணியின் ஸ்தாபகர்களில் ஒருவருமான சின்னத்தம்பி சண்முகநாதன் நினைவாக வழங்கியிருக்கின்றார்கள்., நல்லதொரு முயற்சி. வாழ்த்துகள் அனைவருக்கும்.

மேலும் படிக்க ...

சிறுகதை: ஏகாநேகம் - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
சிறுகதை
02 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                      -  ஓவியம்: AI -

தொலைபேசி ஒலித்த விதம் மது அழைக்கிறாள் என்பதை யசோவுக்குச் சொல்லாமல் சொன்னது. வேகமாகச்சென்று அதைக் கையிலெடுத்தவள், “ஓ, ரண்டு பேருமா இருக்கிறியள், எல்லாம் ஓகேயா?” ஆங்கிலத்தில் கேட்டாள்.

“எங்களிட்டை ஒரு நல்ல செய்தி இருக்கு,” மதுவும் ஆங்கிலத்திலேயே பதிலளித்தாள்.

“கர்ப்பமாயிருக்கிறாயா?”

தலையை மேலும் கீழும் ஆட்டிய மதுவின் முகம் திரையில் பிரகாசமாக மின்னியது.

“ஓ, கொரோனாக் காலம் கவனமாயிரு, அதோடை அவசரப்பட்டு ஒருத்தருக்கும் இப்ப சொல்லாதே”

“நாங்க ஒரு இடமும் போறேல்லை அம்மா, ரிலாக்ஸ்,”.

“அன்ரி, நீங்க பாட்டியாகப் போறியள்! இனித்தான் அம்மாவுக்குச் சொல்லப்போறன், அவ மகிழ்ச்சியில மிதக்கப்போகிறா,” பீற்றரின் வாய் புன்னகையுடன் அகல விரிந்திருந்தது.

‘சீ, சந்தோஷமா நான் வாழ்த்தியிருக்கலாம். கவனமாக இருக்கவேணுமெண்டது அவைக்கும் தெரியும்தானே…” தொலைபேசியை வைத்தவளுக்கு ஆதங்கமாக இருந்தது.

“கர்ப்பமா? தாய் ஆகுறதுக்கான தகுதி உனக்கு இப்ப இருக்கெண்டு நான் நினைக்கேல்ல” என்ற குணத்தின் அன்றைய வார்த்தை அம்புகள் அவளைக் கூறுபோட்டது நினைவுக்கு வர அவளின் கண்களில் கண்ணீர் திரையிட்டது.

மேலும் படிக்க ...

யாழ்ப்பாணம்: நினைவுகூர் நிகழ்ச்சி - கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன! - தகவல்: பொ.ஐங்கரநேசன் -

விவரங்கள்
- தகவல்: பொ.ஐங்கரநேசன் -
நிகழ்வுகள்
02 ஆகஸ்ட் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மற்ற கட்டுரைகள் ...

  1. ரொறன்ரோவில் தமிழ் சார்ந்த ஆய்வு நூல்கள் வெளியீடு! - குரு அரவிந்தன் -
  2. இருபத்தி நான்காம் வயதில் பாரதி : பகுதி II - ஜோதிகுமார் -
  3. எம்.ஜி.ஆர் என்னும் வள்ளல்! - - ஆய்வாளர்: கு.மு. ரமேஷ்பாபு, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை – 117 -
  4. பாரதியாரின் குடும்பப் புகைப்படம்! - ஊர்க்குருவி -
  5. என் யு டியூப் சானல்: வ.ந.கிரிதரனின் பாடல்கள்! - வ.ந.கி -
  6. நூல் அறிமுகம்: ‘யாழ்ப்பாணப் பொது நூலகம், அன்றும் இன்றும்’ - ஶ்ரீரஞ்சனி -
  7. அஞ்சலி! எழுத்தாளர் அ.சேகுவேரா மறைவு! ஆழ்ந்த இரங்கல். - வ.ந.கி -
  8. அஞ்சலி: வரலாற்றுப் புனைகதைச் சேகரிப்பாளர் சுந்தர் கிருஷ்ணன் மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -
  9. அஞ்சலி: கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின - தன் கொள்கையில் நோக்கில் தெளிவும் திடமும் மிக்க தலைவர்களில் ஒருவர். சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைக்குரலாக ஒலித்த தென்னிலங்கை அரசியல்வாதி. - வ.ந.கி -
  10. இரவு மெதுவாக வந்தது (The Night Came Slowly) - மூலம் ஆங்கிலத்தில் கேட் சோபின் (Kate Chopin) | தமிழில் அகணி சுரேஸ் -
  11. வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளின் 41ஆவது நினைவு தினம்! 1983 ஜூலை 25 – 27 – 28 ஆம் திகதிகளில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக ! தாயகம் முதல் புகலிடம் வரையில் அலைந்துழலும் ஈழவிடுதலைக் கனவைச் சுமந்த ஆத்மாக்கள்! - முருகபூபதி -
  12. கறுப்பு ஜூலை நினைவுகள்! - முருகபூபதி -
  13. சொற்களின் வழியே கடந்தகாலத்திற்குச் திரும்பிச் செல்லுதல் - த.அகிலன் -
  14. இருபத்தி நான்காம் வயதில் பாரதி - ஜோதிகுமார் -
பக்கம் 19 / 104
  • முதல்
  • முந்தைய
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • அடுத்த
  • கடைசி