பதிவுகள் முகப்பு

வெங்காய வாழ்வு! - செ.சுதர்சன்-

விவரங்கள்
- செ.சுதர்சன்-
கவிதை
08 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நிலப் பாத்தியில் முளைத்த
வெங்காயங்கள் அணிவகுக்கும்
அதிகாலைக் கனவு...

ஒரு பீரங்கி போலவும்
ஒரு சப்பாத்துக்கால் போலவும்
ஒரு விமான வேடிக்கை போலவும்
என்னை மேலும் மேலும்
அச்சுறுத்துகிறது...

ஒரு சோற்றுப் பருக்கைதானும் வீழாத
சுருங்கி ஒட்டிய
என் பசி வயிற்றை
பீரங்கி வெங்காய முழக்கம்
எரித்துச் சாம்பலாக்குகிறது..!

மேலும் படிக்க ...

தமிழ் ஊடகத்துறையில் மூன்று தசாப்த காலத்தை நிறைவுசெய்யும் தேவகௌரி சுரேன் ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
08 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கை, இந்தியா உட்பட கீழைத்தேய - மேலைத்தேய நாடுகளில் ஊடகவியலாளர்கள் மிகுந்த கவனத்தை பெற்றிருப்பவர்கள். அவர்களுக்கு எழுத்துத்தான் வாழ்வளித்தது. அதேசமயம் பலரது உயிரையும் அந்த எழுத்து வாங்கியிருக்கிறது ! ஊடகத்துறையில் காணாமல் போனவர்கள் , கொல்லப்பட்டவர்கள், அச்சுறுத்தப்பட்டவர்கள் பற்றியெல்லாம் நாம் அறிந்திருக்கின்றோம். சிலர் நாடு கடத்தப்பட்டனர். வேறும் சிலர் நாடுவிட்டு நாடு ஓடியிருக்கின்றனர்.

இராணுவத் தளபதியாகவும் அரசியல் தலைவராகவுமிருந்த நெப்போலியன் போனபார்ட் ( 1769 – 1821 ) ஒரு தடவை, “ வீரனிடமிருக்கும் போர் வாளைவிட எழுத்தாளனிடமிருக்கும் பேனா கூர்மையானது “ எனச்சொன்னாராம். எனினும், நெப்போலியன் எழுத்தாளனோ, ஊடகவியலாளனோ அல்ல!

அன்றும், இன்றும் அரசுகளும் அரசுத் தலைவர்களும் பயப்படும் தொழில், ஊடகத்துறை சார்ந்ததாகத்தான் இருக்கிறது ! அதனால்தான், காலத்துக்கு காலம் ஊடகத்துறை தணிக்கைக்கும் உட்படுகிறது. அதற்கு எதிராக சட்டங்களும் இயற்றப்படுகின்றன.

எமது தமிழ் சமூகத்தில் பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் படித்து முன்னேறி, மருத்துவராக, பொறியியலாளராக, கணக்காளராக, சட்டத்தரணியாக வரவேண்டுமென விரும்புவதுதான் வழக்கம். இந்தத் துறைகளில் தமது பிள்ளைகள் தேர்ச்சி பெறாவிட்டாலும், குறைந்த பட்சம் பாடசாலை ஆசிரியராக வந்தாலும் போதும் எனக்கருதுபவர்கள். அத்துடன் தங்கள் பிள்ளைகளுக்கு அரசாங்க வேலைதான் கிடைக்கவேண்டும் எனவும் கனவு காண்பார்கள்.

மேலும் படிக்க ...

எம்ஜிஆர் பற்றிய அவதூறுப்பேச்சு அரசியல் 'லூசு' ஒருவரின் அறியாமையா?

விவரங்கள்
- ஊர்க்குருவி -
அரசியல்
05 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எம்ஜிஆர் பற்றி அண்மையில் அரசியல் லூசு என்றழைக்கப்படக்கூடிய ஒருவர் 'லூசு'  என்றழைத்து மேடையில் பேசியது தற்போது எம்ஜிஆர் மீது அபிமானம் கொண்ட அனைவரையும் ஆத்திரமடைய வைத்துள்ளதை சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பேச்சு மூலம் இவரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனை ஆளும் திமுக கட்சி கண்டிக்காது விட்டால் அடுத்துவரும் சட்டசபைத் தேர்தலில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் களத்தில் தமிழக வெற்றிக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வாக்குகளைப் பிரிக்கவுள்ள சூழலில் இவ்விதமான பேச்சானது ஆளும் திமுகவுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கப் போகின்றது.

தமிழக முதல்வர்களில் தொடர்ச்சியாகப் பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஒரே முதல்வர் எம்ஜிஆர். அவ்வளவுக்குத் தமிழக மக்களின் பேராதரவையும் , பேரன்பையும் பெற்றவராக விளங்கியவர் அவர். உலகத்தமிழர்கள் மத்தியிலும் அவர் அதே வகையான ஆதரவையும், அன்பினையும் பெற்றவர். கலைஞர் கருணாநிதி திமுக தலைவராக வருவதற்கு அன்று எம்ஜிஆரின் ஆதரவில்லாமலிருந்தால் சாத்தியப்பட்டிருக்காது. அது அனுபவ அடிப்படையில் நெடுஞ்செழியனுக்குச் சென்றிருக்க வேண்டிய பதவி.

மேலும் படிக்க ...

கனடா , ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் இணையவழி கலந்துரையாடல்: 'அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியம் '

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
05 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268

கனடா , ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் இணையவழி கலந்துரையாடல்: “ அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியம் “

உரை நிகழ்த்துபவர் : எழுத்தாளர் லெ. முருகபூபதி

கனடா - ரொறன்ரோ நேரம் : 16-02-2024 வெள்ளிக்கிழமை இரவு 8-00 மணி – 10-00 மணி

இலண்டன் நேரம் : 17-02-2024 சனிக்கிழமை அதிகாலை 1-00 மணி – 3-00 மணி
இலங்கை , இந்தியா நேரம் : 17-02-2024 சனிக்கிழமை காலை 6-30 மணி – 8-30 மணி
அவுஸ்திரேலியா நேரம் : சனிக்கிழமை 17-02 – 2024 நண்பகல் 12-00 மணி – 2-00 மணி

Join Zoom Meeting

Meeting ID: 847 7725 7162
Passcode: 554268

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நமோ நமோ தாயே! - செ.சுதர்சன் -

விவரங்கள்
-செ.சுதர்சன்-
கவிதை
05 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று....
வாழ்த்துகள் தெரிவித்தீர்கள்!

பதிலுக்காய்...
என்னதான் இருக்கிறது...!?
உங்களைப் பற்றிச் சொல்ல...?

கேள்விக் குறியானது
உங்கள் வாழ்வு!

நீங்களோ..
உங்களுக்கென
ஒரு ரொட்டியும் இல்லாத போதும்
வாழ்த்துச் சொல்லிப் போகிறீர்கள்...!

வானொலிகளும்
தொலைக்காட்சிகளும்
உங்களைப் படம் பிடிப்பதும்...
நீங்களே படம் காட்டுவதுமாய்...!?

முகப்புத் தளங்களும்...
பதிவுகளும்...
உங்களுக்காகப் பதிவிடுவதும்
நீங்களே பதிவிடுவதுமாய்...!?

சிரித்தவாறே கடக்கலாம் எனிலோ...

பசியின் ஏக்க மணத்தோடும்
வயிறொட்டிய நெடியோடும்
'இன்னும் ஒரு லைக்'
எனும் நப்பாசையோடும்
மஹாபொல கிடைக்காத
ஒரு மாணவனின் கேக் துண்டு,
'சுதந்திர நாள் வாழ்த்துகள்' என
வந்துபோகிறது....!
என் முகப் புத்தக வாயருகே..!

மேலும் படிக்க ...

உணர்வுசார் நுண்ணறிவை வளர்ப்போம்! - ஸ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஸ்ரீரஞ்சனி -
ஶ்ரீரஞ்சனி
04 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இன்று பெப்ருவரி 3  'உங்கள் குழந்தையை நூலகத்து அழைத்துச் செல்லுங்கள் தினம்' (Take Your Child to the Library Day). அதனையொட்டி எழுதப்பட்ட கட்டுரை. -


உணர்வுகளை அடையாளம்காண்பதற்கும், அவற்றை விளங்கிக்கொள்வதற்கும், தகுந்த முறையில் அவற்றைக் கையாள்வதற்குமான திறன், உணர்வுசார் நுண்ணறிவு எனப்படுகிறது. இது எம்மைச் சூழவுள்ளவர்களுடன் வினைத்திறனாகத் தொடர்புகொள்வதற்கும், எமக்கும் அவர்களுக்கும் இடையேயுள்ள முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்வதற்கும், எமது மனத்தகைப்பைக் குறைப்பதற்கும் உதவிசெய்கிறது.

வாழ்க்கைக்கு அவசியமான இந்த உணர்வுசார் நுண்ணறிவைப் பயிற்சியின் மூலம் நாம் வளர்த்துக் கொள்ளமுடியும். உணர்வுசார் நுண்ணறிவு அதிகமாக இருக்கும்போது, நாம் செய்யும் வேலையைச் சிறப்பாகச் செய்யவும், எமது உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும், உறவுகளை நல்ல முறையில் பேணவும் அது உதவும்.

எமது தனிப்பட்ட வாழ்க்கையிலோ அல்லது வேலையிலோ உணர்வுசார் நுண்ணறிவு அதிகமாகவிருக்கும் ஒரு சிலரையாவது நாம் சந்தித்திருப்போம். எந்த நிலைமையிலும் எம்மை எரிச்சலூட்டாமல் அல்லது புண்படுத்தாமல் எதை, எப்படிச் சொல்ல வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கும். அத்துடன், தமது பலத்தையும் பலவீனத்தையும் அறிந்திருக்கும் அவர்களால், கண்டனங்களை ஏற்றுக்கொள்ளவும், பிரச்சினைகளை இனம்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை, அமைதியான முறையில் காணக்கூடியதாகவும் இருக்கும். எமது பிரச்சினைகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது, தீர்வொன்றைக் காண்பதற்கு அது உதவாமல் போனாலும்கூட, எம்மில் அவர்கள் காட்டும் கரிசனை எமக்கு ஆறுதலைத் தரும்.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 35: “கு.அழகிரிசாமியின் எழுத்துக்கள்”

விவரங்கள்
- தகவல்-அகில் -
நிகழ்வுகள்
03 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 389 072 9245 | Passcode: 12345

மேலும் படிக்க ...

'தமிழக வெற்றி கழகம் (தவெக) : நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம்! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
அரசியல்
02 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ளார். அவர் தனது அரசியல் பார்வை பற்றிக் குறிப்பிட்டுள்ளதை 'இந்து தமிழ்'பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது;

"விஜய்யின் ‘அரசியல் பார்வை’ என்ன? - ‘தமிழகத்தில் முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம் ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் ‘பிளவுவாத அரசியல் கலாச்சாரம்’ மறுபுறம் என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதி - மத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச - ஊழலற்ற திறமையான நிர்வாகத்துக்கு வழிவகுக்க கூடிய அடிப்படை அரசியல் மாற்றத்துக்காக, குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு, தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (பிறப்பால் அனைவரும் சமம்) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும். என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். அதற்காகவே எனது தலைமையில் ‘தமிழக வெற்றி கழகம்’ எனும் கட்சி தொடங்கப்பட்டுள்ளது’ என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய்."

மேலும் படிக்க ...

எழுத்தாளர் அருண்மொழிவர்மனின் 'தாய்வீடு'க் கட்டுரையான "'வ.ந.கிரிதரனின் கட்டுரைகள்' நூலை முன்வைத்துச் சில குறிப்புகள்" பற்றி...... வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
01 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் அருண்மொழிவர்மன் அண்மையில் ஜீவநதி பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'வ.ந.கிரிதரனின் கட்டுரைகள்' என்னும் எனது நூல் பற்றிய விமர்சனக் குறிப்புகளை பெப்ருவரி தாய்வீடு  பத்திரிகையில் எழுதியிருக்கின்றார். இது அண்மையில் 'டொராண்டோ'வில் நடந்த எனது மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மேற்படி கட்டுரை நூல் பற்றி அவர் வாசித்த கட்டுரையின் எழுத்து வடிவம்.  அருண்மொழிவர்மனுக்கு எனது நன்றி.  

மேற்படி விமர்சனக் குறிப்பில் அவர் பல விடயங்களைக் கேள்விக்குட்படுத்தியுள்ளார். அவை பற்றி விரிவாக விரைவில் என் பார்வையில் கருத்துகளை முன் வைப்பேன். இங்கு இக்கட்டுரைத்தொகுப்பை என் அபிமானக் கவி பாரதிக்குச் சமர்ப்பித்தது பற்றிய அவரது விமர்சனக் குறிப்புக்கான என் நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS): தமிழ் நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம் 2024! - தகவல்: முருகபூபதி -

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
30 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.

இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் இயங்கிவருகிறது. கடந்த ஆண்டுகளில் இலங்கையில் வெளியான தமிழ் நூல்களுக்காக நடந்த தெரிவில், பரிசுபெற்ற எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் ஏற்கனவே ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மீண்டும் இந்த பரிசளிப்புத் திட்டம் இம்முறையும் இலங்கை தமிழ் எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

இந்தத்திட்டம் கீழ்வரும் தேவைப்பாடுகள் மற்றும் விதிமுறைகளைக் கொண்டு அமைந்துள்ளது.

1. கடந்த 2023 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய நான்கு துறைகளில் வெளியான தமிழ் நூல்களே இந்தத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்.

மேலும் படிக்க ...

ஜனவரி 30 - மகாத்மா காந்தி நினைவு தினம்! அண்ணல் சுத்தப்படுத்த விரும்பிய பாரத தேசம் ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
30 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் இடத்தில் பிறந்த குழந்தை காந்தி எப்படி மகாத்மாவானார்...? எவ்வாறு ஒரு தேசத்தின் பிதாவாக மாறினார் ....? என்பதற்கெல்லாம் வரலாறுகள் இருக்கின்றன.  தற்காலக் குழந்தைகளுக்கும் இனிபிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கும் இப்படியும் ஒரு மனிதர் ஆசியாக்கண்டத்தில் ஒரு காலத்தில் பிறந்து - வாழ்ந்து - மறைந்தார் என்று சொல்லிக்காண்பிப்பதற்கு காந்தி பற்றிய திரைப்படங்களும் ஆங்கிலத்திலும் அனைந்திந்திய மொழிகளிலும் இருக்கின்றன.

இந்திய சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் உண்ணாவிரதப்போர்களையும் மௌனத்துடன் உப்புச்சத்தியாக்கிரகப் போராட்டங்களையும் நடத்தி நேற்று வரையில் இந்தப்போர்களை எதற்காகவும் தொடரலாம் என்ற முன்னுதாரணத்தையும் அன்றே விதைத்துவிட்டுச்சென்றவர் ! 1869 அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி பிறந்த காந்தி எந்தத்தேசத்தின் விடுதலைக்காக அறவழியில் போராடினாரோ... அதே தேசத்தின் குடிமகன் ஒருவனால் 1948 இல் ஜனவரி 30 ஆம் திகதி வன்முறையினால் கொல்லப்பட்டார்.

ஈஸ்வர அல்லாஹ் தேரே நாம்... எனப்பாடி இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டு அந்த ஒற்றுமைக்காகவே தொடர்ந்தும் குரல்கொடுத்தமைக்காக ஒரு இந்துவான நாதுராம் கோட்சேயினால் சுட்டுக்கொல்லப்பட்டார். கோட்சேயின் கழுத்தில் தூக்குக்கயிறு தொங்குவதற்கு முன்னர் உனது இறுதி விருப்பம் என்ன ? – என நீதிமன்றில் கேட்டபொழுது, “பாரதத்திலிருந்து பிரிந்துபோன பாக்கிஸ்தானிற்குள் ஓடிக்கொண்டிருக்கும் சிந்து நதி என்றைக்கு மீண்டும் பாரதத்திற்குள் திரும்பி வருகிறதோ அதற்குப்பின்னர்தான் தனது அஸ்தி (சாம்பல்) கரைக்கப்படவேண்டும். அதுவே எனது கடைசி விருப்பம் . “ எனச்சொல்லியிருக்கிறான். அதனால் - அவனது அஸ்தி இன்னமும் கரைக்கப்படவில்லை என்றும் தகவல் உண்டு.

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் ஐம்பதினாயிரம் ரூபா பரிசு பெறும் இலங்கை எழுத்தாளர்கள்! - தகவல்: முருகபூபதி -

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
30 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்குமுகமாக நடத்திவரும் வருடாந்த இலக்கியப்போட்டியில் இம்முறை, 2022 ஆம் ஆண்டில் வெளியான நூல்களிலிருந்து நடுவர்களின் மதிப்பீட்டின் மூலம் சிறந்தனவற்றை பரிசுக்குத் தெரிவு செய்துள்ளது. சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை முதலான நான்கு துறைகளில் 2022 ஆம் ஆண்டு வௌியான இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் இந்தத் தெரிவுக்காக ஊடகங்களின் வாயிலாக கோரப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட போட்டி தொடர்பான அறிவித்தலை வெளியிட்ட இலங்கை மற்றும் புகலிட தேசத்து ஊடகங்களுக்கும் இந்தப்போட்டிக்கு சங்கத்தின் போட்டி விதிமுறையின் பிரகாரம் நூல்களை தபாலில் அனுப்பி வைத்த எழுத்தாளர்களுக்கும் சங்கத்தின் நன்றியைத் தெரிவிக்கின்றோம். போட்டி விதிமுறைகளுக்கு ஏற்றவாறு இம்முறை, கட்டுரை இலக்கியத்துறையில் நூல்கள் எவையும் சங்கத்திற்கு கிடைக்கப்பெறவில்லை.

மேலும் படிக்க ...

பொது வேட்பாளர் கோரிக்கையும் தமிழ் அரசியலும்! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
30 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

I

அண்மையில் இடம்பெற்ற மூன்று நிகழ்வுகள் முக்கியமானவை:  தமிழரசு கட்சியின் தேர்தல், லோகன் பரமசாமியின் வீரகேசரி கட்டுரை &    கலாநிதி அமீர்அலியின் 'விடிவெள்ளி'யில் வெளியான கட்டுரை.

இவை மூன்றும், இவ்வருடத்தின் ஜனவரி மூன்றாம்-நான்காம் கிழமைகளில் நடந்தேறி உள்ளன. இம்மூன்றின் முக்கியத்துவமும் தமிழ் அரசியலின் செல்திசை நோக்கி இவை கூடியிருக்க கூடிய அதேவேளை, அதற்குரிய விமர்சனங்களையும் இவை உள்ளடக்கச் செய்தன. தமிழ் தேசியம் என்பது ஒரு  30-40 வருடகாலமாய் தொடர்ந்து வரும் ஒன்றாகவே இந்நாட்டில் காணப்படுகின்றது. (பெருந்தேசியவாதத்தை போலவே).

தனிநாடு என்பதும் சமஷ்டி என்பதும் சுயநிர்ணயம் என்பதும் காலத்துக்கு காலம் தமது புது வடிவை ஏந்தியிருந்தாலும், பெரும்பாலும் இவை பெருந்தேசியவாதத்திற்கு எதிரான ஓர் எதிர்ப்பலையே. இதனாலோ என்னவோ இக்கோட்பாடுகளும் நகர்வுகளும் தமிழ் மக்கள் வாழ்வில் பாரிய தாக்கங்களை அல்லது வடுக்களை ஏற்படுத்தி தமிழ் மக்களின் வாழ்வை அவ்வவ் காலக்கட்டங்களில் நிர்ணயிப்பதாக இருந்துள்ளன. இச்சூழ்நிலையிலேயே அண்மைக்காலத்தில் ஜனாதிபதி தேர்தல் என்ற விடயமும் இது பொறுத்து தமிழ் மக்களின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்ற கேள்வியும் உருவாகி உள்ளது. இப்பின்னணியில் தமிழ் தேசியம் என்பது பகிஸ்கரிப்பு என்ற வேலைத்திட்டத்திலிருந்து முன்னேறி, பொது வேட்பாளர் என்ற கருத்தாக்கத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

மேலும் படிக்க ...

பவதாரணி: 'மயில் போல பொண்ணு ஒன்னு!"

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
26 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இளமையில் மரணம் கொடிது. பாடகி பவதாரணி இன்னும் நீண்ட காலமிருந்து இசையுலகில் மேலும் பல சாதனைகளைச் சாதித்திருக்க வேண்டியவர்.

'பாரதி' பாடத்தில் பாடிய 'மயில் போல' பாடல் மூலமே என் கவனத்தை  ஈர்த்தவர்.  இப்பாடலுக்காகச் சிறந்த பாடகிக்கான இந்திய மத்திய அரசின் தேசிய விருதினைப் பெற்றவர். தந்தையின் இசையமைப்பில் இவ்விருதை இவர் பெற்றதும் முக்கியத்துவம் மிக்கது.

அவர் மறைவால் ஆழ்ந்த துயரில் ஆழ்ந்திருக்கும் இசைஞானி மற்றும் குடும்பத்தவர் , இரசிகர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

அவர் நினைவாக 'மயில் போல பொண்ணு ஒன்னு' -  https://www.youtube.com/watch?v=QjDek8QpnWc

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வெளியான விவேகி! தேர்ந்த வாசகர்களையும் ஆற்றல்மிக்க படைப்பாளிகளையும் உருவாக்கிய சிற்றிதழ்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
25 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர், அதாவது 1960 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரத் தொடங்கிய விவேகி மாத இதழின் அன்றைய விலை நாற்பது சதம்தான். “நாற்பது சதமா…?“ அது எப்படி இருக்கும் என்று சமகாலத்தில் எமது குழந்தைகள் கேட்பார்கள். இலங்கையில் பணவீக்கம் படிப்படியாக வளர்ச்சி கண்டு, அக்கால நாணயங்களை மதிப்பிழக்கச் செய்துவிட்டது. அதற்கு காரண கர்த்தாக்கலான அரசியல்வாதிகளும் தவறான பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றிய அரசுகளும் நாணயமற்றுப் போனதன் விளைவை இலங்கை இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது.

இன, மத, கட்சி சார்பற்ற இதழ் என்ற மகுட வாக்கியத்துடன் விவேகி இதழ், இலக்கம் 32, கண்டி வீதி யாழ்ப்பாணம் என்ற முகவரியிலிருந்து 1960 களில் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. விவேகியின் கௌரவ ஆசிரியர்: மு.வி. ஆசிர்வாதம், நிர்வாக ஆசிரியர்: மாட்டின் . ஆசிரியர்கள்: செம்பியன்செல்வன், செங்கை ஆழியான். இதனை வெளியிட்டவர்கள் மட்டுமல்ல, இதில் எழுதிய பலரும் தற்போது நினைவுகளாகிவிட்டனர். சிலர் பின்னாளில் குறிப்பிடத்தகுந்த ஆளுமைகளாகவும் விளங்கினர். சிலர் புலம்பெயர்ந்தனர்.

மேலும் படிக்க ...

சென்னையில் நடந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியில்.. - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
25 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஜனவரி 16- 18ம் தேதி வரை சென்னையில் நடந்த  சர்வதேச புத்தகக் கண்காட்சியில் 50 நாடுகள் பங்கேற்றன.பிரமாண்டமான ஏற்பாடுகள். துவக்க தினத்தில் 50 தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய திரைக் காட்சிகள் ஒலிபரப்பப்பட்டன. அதில் கொங்கு பகுதியை சார்ந்த சிற்பி பாலசுப்பிரமணியம். நாஞ்சில்நாடன்.பெருமாள்முருகன். சுப்ரபாரதிமணியன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர் .

இவ்வாண்டு மலேஷியா சிறப்பு கவுரவ  நாடாகக் கொண்டதால் மலேசியா எழுத்தாளர்கள், கலைஞர்கள் பெருமளவில் பங்கு பெற்றிருந்தார்கள்.50 எழுத்தாளர்களில் மறைந்தவர்கள் தவிர கலந்து கொண்டவர்கள் மூவர் மட்டுமே. அவர்கள் இமயம், மனுஷ்யபுத்திரன்,  சுப்ரபாரதி மணியன் ஆகியோர் கவுரவப்படுத்தப்பட்டனர்.

மேலும் படிக்க ...

யாழ்நூலக எரிப்பும் எம்.ஏ.நுஃமானின் சக்திவாய்ந்த கவிதையும்! - ஈழக்கவி -

விவரங்கள்
- ஈழக்கவி -
இலக்கியம்
20 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

காலி வீதியில் அவளைக்கண்டேன்
ஐந்து மணிக்குக்
கந்தோர் விட்டதும்
கார்களும்
பஸ்களும்
இரைந்து கலந்த நெரிசலில்
மனிதர் நெளிந்து செல்லும்
காலி வீதியில் அவளைக் கண்டேன்.

மேலும் படிக்க ...

தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் ( அமரர் ) ஆர். சிவகுருநாதன் ( 1931 – 2003 ) நினைவுகள்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
19 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கொள்ளுப்பிட்டி   ரண்முத்து ஹோட்டலில் ஒரு நூல் வெளியீட்டுவிழா. நானும் ஒரு பேச்சாளன்.  நூலாசிரியரின் பதிலுரைக்கு  முதல், விழாத்தலைவர் என்னை இவ்வாறு பேசுவதற்கு அழைக்கிறார். “நேரம் போய்க் கொண்டிருக்கிறது. இனி  அடுத்துப் பேசப் போகிறவர்  முருகபூபதி. அவருக்கு  ஒரு வேண்டுகோள், கெதியாகப் பேசி முடித்துவிட்டு, நீர்கொழும்பு பஸ்ஸை பிடிக்க  ஓடவும்.” சபையில் சிரிப்பலை அடங்கச் சில விநாடிகள் தேவைப்படுகிறது.

பம்பலப்பிட்டி  சாந்திவிஹார் ஹோட்டலில்  ஒரு  பிரபல தமிழ்ப் பத்திரிகையாளருக்கு பாராட்டு  பிரிவுபசார விழா.  புகைபடக் கலைஞர் ஒருவர் சுறுசுறுப்பாக  இயங்கி, படங்கள் எடுத்துக்   கொண்டிருந்தார்.   விடைபெறவுள்ள  பத்திரிகையாளரைப் பாராட்டிப் பேசுவதற்கு ஒரு முஸ்லிம் அரசியல் பிரமுகர்  தலைவரால்   அழைக்கப்படுகிறார். பிரமுகர் தமது பேச்சுக்கிடையே – அந்தப் புகைப்படக் கலைஞரையும் புகழ்ந்து சில வார்த்தைகளை   உதிர்த்துவிட்டு “அந்தக் கலைஞர் சிறந்த படப்பிடிப்பாளர், அவருக்கும் நாம்   பாராட்டு   விழா  நடத்த வேண்டும்” என்கிறார்.

உடனே, தலைவர் “அந்தக் கலைஞர் பத்திரிகைகளுக்காக எடுத்த படங்களையும் பார்த்துள்ளேன்.  அவர்  எடுத்த   வேறு படங்களையும் பார்த்துள்ளேன். ” என்று சொன்னவுடன் சபையில் அட்டகாசமான சிரிப்பொலி எழுந்து அடங்கியது.  அந்தப்புகைப்படக்கலைஞர்   நாணத்துடன்  தலைகவிழ்ந்து   சபையின்  பின்புறம் ஓடி  வந்துவிட்டார்.

மேலும் படிக்க ...

கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி..... - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
19 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிய அறிமுகக்  குறிப்பொன்றினை எனது ஆங்கில வலைப்பூப் பக்கத்தில் எழுதியுள்ளேன். இது ஒரு திறனாய்வுக் கட்டுரையல்ல. நினைவில் இருந்த விடயங்களை வைத்து எழுதப்பட்ட அறிமுகக் குறிப்பு மட்டுமே. இதில் உதாரணத்துக்காகக் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியல்கள் முழுமையானவை  அல்ல. இதனை எனது டிவிட்டர் பக்கத்திலும்  பகிர்ந்துள்ளேன்.

On Canadian Tamil Literature!

Diaspora Tamil literature is a common term denoting the literature of expatriate Tamils. Tamil people live worldwide in many countries, including Western countries. Most of them migrated to other countries after the communal riots that happened in 1983, which is generally known as 'Black July '83.' Now, more than thirty years have passed since they left. During this time, the diaspora literature of Tamils has achieved many milestones in various literary forms such as short stories, poems, dramas, novels, and non-fiction. To Read the full article

On Twitter     On Facebook

 

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: "தமிழில் சில வினை வகைப்பாடுகளும் கூட்டு வினைகளும் - ஒரு பார்வை"

விவரங்கள்
-தகவல்;பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
18 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் கலாசூரி சிவகுருநாதன் நூல் வெளியீடு! - ஐங்கரன் விக்னேஸ்வரா -

விவரங்கள்
- ஐங்கரன் விக்னேஸ்வரா -
நிகழ்வுகள்
18 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கலாசூரி இ.சிவகுருநாதனின் இருபதாம் ஆண்டு நினைவு நூலான “இலங்கை இதழியலில் சிவகுருநாதன்” வெளியீட்டு விழா எதிர்வரும் 20.01.2024 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் நடைபெறவுள்ளது.

கன்பராவில் உள்ள தமிழ் மூத்த பிரஜைகள் சங்க மண்டபத்தில் (Tamil Senior Citizen Hall,11 Bromby Street, Isaacs ACT 2607) சட்டத்தரணி,இலக்கிய ஆர்வலர், எழுத்தாளருமான திரு. க. திருவருள் வள்ளல் தலைமையில் நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க ...

'இளம்பிறை' எம்.ஏ.ரஹ்மானுடன் ஓர் உரையாடல்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
16 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று 'இளம்பிறை' எம்.ஏ.ரஹ்மான் அவர்களுடன் அலைபேசியில் உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. முக்கியமான உரையாடல்களிலொன்று. இதுதான் நான் அவருடன் முதன் முதலாக உரையாடுவது. ஆனால் நன்கு அறிமுகமான நண்பர் ஒருவருடன் உரையாடுவதைப் போன்று உணர்ந்தேன். உரையாடல் பல விடயங்களைத் தொட்டுச் சென்றது. அவர் தனது 'இளம்பிறை' சஞ்சிகை வெளியிட்ட அனுபவங்களைப் பற்றி, 'அரசு' பதிப்பகத்தின் மூலம் நூல்கள் வெளியிட்ட அனுபவங்களைப் பற்றி எனத்  தன் இலக்கிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அண்மையில் அவரைப்பற்றி எழுதிய எழுத்தாளர் முருகபூபதியின் கட்டுரை பற்றி, 'அக்கினிக்குஞ்சு' பாஸ்கர்,  அமரர் எஸ்.பொ, ஓவியர் செள, ஓவியர் மூர்த்தி, ஓவியர் கனகலிங்கம் , கவிஞர் மஹாகவி, 'மஹாகவி'யின் குறும்பா, சில்லையூர் செல்வராசன், காவலூர் இராசதுரை, செம்பியன் செல்வன், செங்கை  ஆழியான், மு.தளையசிங்கம், அவரது 'புது யுகம் பிறக்கிறது' (அரசு வெளியீடாக வெளியான சிறுகதைத்தொகுப்பு), யாழ் தேவன், சொக்கன், பத்மநாப ஐயர் என அவரது உரையாடல் பல்வேறு இலக்கிய ஆளுமைகளைத் தொட்டுச் சென்ற நனவிடை தோய்தலாக அமைந்திருந்தது.

மேலும் படிக்க ...

பண்டைத்தமிழ் இலக்கியத்தில் முரசு - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை. -

விவரங்கள்
- முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை. -
ஆய்வு
16 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை இசைக் கருவிகள் இசைக்கப்படுகின்றன. இசைக்கருவிகளைத் தமிழர்கள் தோல் கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, கஞ்ச கருவி, மிடற்றுக்கருவி எனப் பகுத்து வைத்தனர்.அரசனது அறிவிப்புகளை மக்களுக்கு முரசறைந்து அல்லது பறையடித்துச் சொல்வது மரபாகும்.இலக்கியங்களில் திருமணச்செய்தியை அறிவிக்க,முடி சூட்டு விழாவை அறிவிக்க, போர்த் தொடக்கத்தை அறிவிக்க, போர்ப் பூவைப் பெற்றுக்கொள்ள, போர் ஆரம்பித்து விட்டது என்பதை அறிவிக்க, சமாதானத்தை அறிவிக்க, போர் வெற்றியை அறிவிக்க, பிறந்தநாள் விழாவை அறிவிக்க,விழா நடைபெற இருப்பதை அறிவிக்க என்று பல அறிவிப்புகளை மக்களுக்குத் தெரிவிப்பதற்காகவே முரசு முழக்கப்பட்டதை இக்கட்டுரையில் ஆராய்வோம்.

1.தோல் இசைக்கருவிகள்

முரசம், துந்துவி, முரசு, தண்ணுமை, படகம், ஆகுளி, சிறுகட்பறை பேரி பம்பை, துடி திமிலை, தட்டி, தொண்டகம் குறிஞ்சிப்பறை தாளக்கருவிகளுக்குப் பொதுவாக பறை குறிக்கப்படுகிறது. வாரால் விசித்துக் கட்டப்பட்டது. இக்கருவி ஒரு முகம், இருமுகம் உடையது. போர்ப்பறை வெறுப்பறை, வெறியாட்டப் பறை என பல வகைப்படும். வீர முரசு, போர் முரசு, விருந்துன்ன குருதி பலி கொடுக்கும்போது என்று முரசின் பயன் நீண்டது.

மேலும் படிக்க ...

சிறுகதை: சில துரோகங்கள் மன்னிப்பதற்கல்ல! - ஸ்ரீராம் விக்னேஷ் –

விவரங்கள்
- ஸ்ரீராம் விக்னேஷ் –
சிறுகதை
15 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

என் கணவர் ஆபிரகாமின் இரண்டாவது தங்கை திரேசாவுக்கும் - ஸ்டீபனுக்கும் புனிதவியாகப்பர் ஆலயத்தில் நடந்துகொண்டிருந்த திருமணம், மணப்பெண்ணின் மறுப்பினால் பாதியிலே தடைபட்டது.

அன்னராஜ் பாதிரியார் எனது மாமனாரிடமும், அத்தையிடமும்ஆணித்தரமாகக் கூறிவிட்டார்.

“சாரி ஜோசப்…. சாரி ரெஜினா…..மணப்பொண்ணே கலியாணத்தில இஸ்டமில்லைங்கிறப்ப என்னால எதுவுமே பண்ண முடியாது….. ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர் உங்களுக்கு புரியவைக்கணும்னு இல்லை…. உங்க பொண்ணுகிட்ட பேசி, அவளை ஒத்துக்க வையுங்க….”

“அவள்கிட்ட பேசமுடியாது பாதர்…. சொன்னதையே சாதிப்பா….”

“பெத்தவங்க உங்களாலையே பேசமுடியல்லைங்கிறப்போ, நான் பேசிமட்டும் என்ன ஆகப்போவுது…. ஆனா ஒண்ணைய்யா ஜோசப்… உங்க பெரியமவ ஸ்டெல்லாவால நீங்க குனிஞ்ச தலையை, உங்க சின்னமவ திரேசா, அவ சொன்னமாதிரியே நிமித்திப்புட்டாயா…. ஆனா தாலிகட்டுறப்ப பாத்து ஏன் கலியாணம் வேண்டாங்கிறாண்ணு தெரியலியே....”

திரேசாவைச் சரிசெய்யும் பொறுப்பிலே நான்.

“ கலியாணப் பேச்சு எடுத்த நாளிலயிருந்து இப்போ கடைசி நிமிசம் வரைக்கும் நல்லாத்தானே இருந்தே.…ஸ்டீபன் அப்பிடி என்னதான்டி பண்ணிப்புட்டாரு…..”

இந்த சம்மந்தத்தை பேசி ஒழுங்குபண்ணுறதுக்கு உங்க அண்ணன் என்னபாடெல்லாம் பட்டாருன்னு தெரியுமா….”

என்னை வேண்டாவெறுப்புடன் பார்ப்பதுபோல பார்த்தாள் திரேசா.

“அதுக்கு முன்னாடி நீங்க ஒரு சம்பவத்தைநெனைச்சுப் பாக்கணும் அண்ணி…. ஒரு வருசத்துக்கு முன்னாடி இதேசர்ச்சில வெச்சு, எல்லாரு முன்னாடியும் ஒரு சத்தியம் பண்ணினேனில்லியா….”

அவள் சொல்லும்போது, நடந்த சம்பவமெல்லாம் மனத்துள்ளே படமாக ஓடின.

எனது கணவர் ஆபிரகாமின் மூத்த தங்கை ஸ்டெல்லாவின் திருமண நிகழ்வு இரண்டு ஆண்டுக்குமுன் நடைபெற்றது.

மேலும் படிக்க ...

மறக்க முடியாத கனடிய அனுபவம்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
15 ஜனவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒரு தடவை  தொண்ணூறுகளில் ஒரு வீடற்ற வீதி மனிதனை டொரோண்டோ நகரில்  ஹில்டன் ஹொட்டல் முன் சந்தித்தேன். அவனுடான அனுபவத்தை மையமாக வைத்து ஒரு சிறுகதையும் 'வீடற்றவன்' என்னும் பெயரில் எழுதியிருந்தேன். வைகறை பத்திரிகை, பதிவுகள், திண்ணை இணைய  இதழ்களில் அக்கதை பிரசுரமானது.  பின்னர் அம்மனிதனைப் பற்றி மறந்து விட்டேன். பின்னர் ஒரு சமயம் டொரோண்டோ ஸ்டார் பத்திரிகையிலொரு செய்தி வந்திருந்தது. அதில் Bay வீதியும்,  Adelaideஎ வீதியும் சந்திக்குமிடத்தில் இரு வீடற்றவர்கள் சண்டை பிடித்தது பற்றிய செய்தி அது. அதில் ஒருவர் டொரொண்டோ மேயர் பதவிக்குப் போட்டியிட்ட கெவின் கிளார்க் என்றிருந்தது. அப்பொழுதுதான் உணர்ந்தேன் நான் சந்தித்த மனிதன் கிளார்க்கும், கெவின் கிளார்க்கும் ஒருவரே என்னும் விடயம்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. எழுத்தாளர் குரு அரவிந்தனின் எழுத்துகள் பற்றி.... - முனைவர் கரு. முத்தய்யா - காரைக்குடி -
  2. வென்மேரி அறக்கட்டளை வழங்கும் தமிழ் ஆளுமைகளுக்கான உயர் விருதுகள் 2024!
  3. வாழ்த்துகின்றோம்: அறிவியல் அறிஞரும், எழுத்தாளருமான சி.ஜெயபாரதன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! - வ.ந.கி -
  4. பொங்கலோ பொங்கல் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் , அவுஸ்திரேலியா -
  5. அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்! - வ.ந.கி -
  6. இலங்கைக்கு மார்க்கம் படிக்க வந்த ரஹ்மான் 'இளம்பிறை' மாத இதழ் ஆசிரியரான கதை ! - முருகபூபதி -
  7. தமிழ்க்கதைஞர் வட்டத்தின் தூண்களில் ஒருவரான தேர்ந்த வாசகர் வசந்தி தயாபரன் ! - முருகபூபதி -
  8. சிந்தனைக் களம்: 'தஞ்சைநால்வர் குடும்பத்தினர் வடிவமைத்த நாட்டிய மரபு'
  9. நண்பர் முருகபூபதி! - நோயல் நடேசன் -
  10. அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் பூமராங் காலாண்டு மின்னிதழ் வெளியீடு! - முருகபூபதி -
  11. எனது புதிய ஆங்கில வலைப்பதிவு 'vngiritharancorner' - வ.ந.கி -
  12. (பயனுள்ள மீள்பிரசுரம்) நூல் அறிமுகம்: பன்னாலால் பட்டேலின் ‘வாழ்க்கை ஒரு நாடகம்’ - ஜெயமோகன் -
  13. என்ன நினைச்சே. நீ என்ன நினைச்சே' - 'சொக்கத்தங்கம்' பாடலொன்று.
  14. சமுதாயவியல் சார்ந்த பண்பாட்டுச் சிந்தனை! - கலாநிதி புட்பா கிறிட்டி, கனடா -
பக்கம் 31 / 104
  • முதல்
  • முந்தைய
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • அடுத்த
  • கடைசி