பதிவுகள் முகப்பு

ஒளிப் பரிசு - செ.சுதர்சன் -

விவரங்கள்
- செ.சுதர்சன் -
கவிதை
02 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- பேராதனைப் பல்கலைக்கழக, அரசறிவியல் துறையின் நிறைவு வருட மாணவி அமரர் N. நித்தியவதனி அவர்கள், நேற்று முன்தினம் சிறுநீரகங்கள் செயலிழப்பால், கண்டி போதனா வைத்தியசாலையில் காலமானார். அவர் உயிருக்காகப் போராடிய வேளையிலும், தமது கண்களை உவந்து தானம் செய்தார். மானுட வாஞ்சையை உணர்த்திய அவருக்கு இக்கவிதை சமர்ப்பணம். -

கண்களைக் கொடுத்து
ஒளியைப் பரிசளித்தாய்!
ஆகையால்...
கரைந்துபோன பின்பும்
நீயே காண்கிறாய்...!

அவனதோ அவளதோ
கண்களில் பூக்கையில்...
நீ
அவனதும் 'கண்மணி'
அவளதும் 'கண்மணி'

மேலும் படிக்க ...

'இலக்கியவெளி'யின் ஏற்பாட்டில் நடந்த எழுத்தாளார் ஐ.சாந்தனுடனான உரையாடல் பற்றிய சில எண்ணங்கள்.. . - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
01 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் இலக்கியவெளியின் சார்பில் எழுத்தாளர் ஐ.சாந்தனுடன் நிகழ்ந்த உரையாடலொன்றின் காணொளியைப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அவரை நேர்காணல் கண்டவர்கள் கலாநிதி சு.குணேஸ்வரன் மற்றும் எழுத்த்தாளர் எஸ்.ரமேஷ்.

இவ்வுரையாடலின் ஆரம்பத்தில் ரமேஷ் கேட்ட கேள்வியொன்று என் கவனத்தை ஈர்த்தது. அது எழுத்தாளர் சாந்தனின் ஆங்கிலத் தமிழ்ப்புலமை பற்றியது. இரு மொழிகளிலும் எழுதும் அவரது ஆற்றல் பற்றியது. கேள்வியைக் கேட்கையில் ரமேஷ் அவர்கள் தமிழில் ஆங்கிலத்திலும், தமிழிழும் எழுதும் ஆற்றல் பெற்ற எழுத்தாளர் கே.எஸ்.சிவகுமாரனுக்குப் பின்னர் அவ்விதம் எழுதும் ஆற்றல் பெற்ற ஒருவர் சாந்தனே என்று குறிப்பிட்டிருந்தார். அது தவறானதொரு கூற்று என்பதால் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. எனக்குத் தெரிந்து ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் எழுதும் ஆற்றல் மிக்கவராக விளங்கியவர் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி.  அவர் திருக்குறள் பற்றி, அர்த்தசாத்திரம் பற்றியெல்லாம் டிரிபியூன் ஆங்கிலச் சஞ்சிகையில் எழுதியுள்ளார். திருக்குறள் பற்றி அவர் ஆங்கிலத்தில் எழுதியதை ஒரு நூலாகப் போட  முடியுமென்று எழுத்தாளர் அந்தனி ஜீவா தனது அ.ந.க பற்றிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரையில், தினகரனில் தொடராக வெளிவந்தது, பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:

மேலும் படிக்க ...

பிளம்ஸ் மரங்களும் சடை சவுக்குகளும் . நூல் அறிமுகம்! - எஸ் . இஸட் . ஜெயசிங் முன்னாள் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர். ), திருநெல்வேலி. தமிழ் நாடு . இந்தியா. -

விவரங்கள்
- எஸ் . இஸட் . ஜெயசிங் முன்னாள் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர். ), திருநெல்வேலி. தமிழ் நாடு . இந்தியா. -
நூல் அறிமுகம்
01 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
இலங்கை மலையகத்தில் வளர்ந்து வரும் எழுத்தாளரும்,  சமூக ஆர்வளரும்,  மார்க்ஸிய சிந்தனையாளரும்,  சட்ட தரணியுமான தோழர் எல். ஜோதிகுமார் அவர்களால் எழுதப்பட்டு கடந்த வருடம் நந்தலாலா பதிப்பகத்தால்  " பிளம்ஸ் மரங்களும் சடை சவுக்குகளும் " .  என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந் நூல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது .  இலங்கையில் 1980 களில் வெளிவந்த " தீர்த்தக் கரை " எனும் முற்போக்கு அரசியல் இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய அனுபவம் உடைய எழுத்தாளர் ஜோதிகுமார் அவர்கள் தாயகம் திரும்பிய மலையக மக்களின் மன உணர்வுகளை அவர்களின் வாழ்வியலை நேரில் கண்ட  அனுபவம் வாயிலாக இந்நூலை திறம்பட வடிவமைத்துள்ளார் .
 
200 வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்து இலங்கை மலையகம் சென்று அங்கு அடர்ந்த காடுகளை வெட்டி பெருந்தோட்டப் பயிர்களை விளைவித்து அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்திய தமிழ் மக்கள் பேரினவாத அரசியல் வாதிகளால் வஞ்சிக்கப்பட்டனர் . அவர்களில்  ஒரு பகுதியினர்  மீண்டும் இந்தியாவிற்கே சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் அடிப்படையில் வந்தனர் . அவ்வாறு வந்தவர்கள் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பக்கத்து மாநிலங்களிலும்  குடியமர்த்தப்பட்டனர் . அவர்கள் எதிர்பார்த்து வந்த மறுவாழ்வு அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது கடந்த கால வரலாறு . சதுப்பு நிலப் பகுதிகளில் ஏற்படுத்தப் பட்ட மறுவாழ்வு திட்டங்கள் பெருமளவு தோல்வி அடைந்த நிலையில் சிலர் கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களை நோக்கி நகரலாயினர் . அவ்வாறு கொடைக்கானல் மலைகளை நம்பி சென்றவர்களின் துயர வாழ்க்கையை , அடிமை நிலையை வெளி உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற சமூக உணர்வுடன் இந்நூலை எழுதியுள்ள தோழர் ஜோதிகுமார் பாராட்டுதலுக்கு உரியவராவார் .
மேலும் படிக்க ...

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ - 2023 - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
01 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

*புகைப்படங்களைத் தெளிவாகப் பார்ப்பதற்கு ஒருமுறை அழுத்தவும். -

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் விருதுவிழா சென்ற சனிக்கிழமை 28-10-2023 ரொறன்ரோவில் உள்ள ஸ்காபரோ சிவிக்சென்றர் அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை 9:30 மணியளவில் விழாவிற்கு வருகை தந்தோருக்குத் தேநீர், சிற்றுண்டி வழங்கப் பெற்றது. 10:00 மணியளவில் நிகழ்வில் கலந்து கொண்ட சில பிரமுகர்களால் மங்கள விளக்கேற்றப் பெற்றதைத் தொடர்ந்து, கனடா பண்ணும், தமிழ்த்தாய் வாழ்த்தும் செல்வி சோலை இராச்குமார், செல்வி சென்னி இராச்குமார் ஆகியோரால் இசைக்கப்பெற்றது. தொடர்ந்து அமைதி வணக்கம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து கனடா பழங்குடி மக்களின்  அங்கீகாரம் வாசிக்கப் பெற்றது.

எழுத்தாளர் இணையத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய துணைத்தலைவருமான எழுத்தாளர் குரு அரவிந்தனின் வரவேற்புரையைத் தொடர்ந்து தேனுஜா திருமாறன் ஆசிரியையின் மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது. தொடர்ந்து இணையத்தலைவர் கவிஞர் அகணி சுரேஸ் அவர்களின் தலைமையுரை இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து ‘கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் கடந்து வந்த பாதை’ என்ற தலைப்பில் உதயன் பத்திரிகை ஆசிரியரும், துணைச் செயலாளருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களின் உரை இடம் பெற்றது. அதைத்தொடர்ந்து விருது விழா மலர் வெளியிட்டு வைக்கப்பெற்றது. இந்த நிகழ்வில் வர்த்தகப் பிரமுகர்கள் சிலர் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.

மேலும் படிக்க ...

சங்க இலக்கியங்களில் சிறுதானியங்கள் - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை (சுழற்சி-II), குருநானக் கல்லூரி,சென்னை- 42. -

விவரங்கள்
- முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை (சுழற்சி-II), குருநானக் கல்லூரி,சென்னை- 42. -
ஆய்வு
30 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

மக்களின் வாழ்வாதரமாக அமைவதும் முதன்மை பெறுவதும் உணவாகும். உணவு வகைகளுள் தானியங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. இதில் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருப்பது சிறுதானியங்கள் ஆகும். சிறுதானிய வகைகளில் மிகவும் பழமை வாய்ந்தவையாக கேழ்வரகு, சாமை, தினை, கம்பு, சோளம். வரகு குதிரைவாலி போன்றவை அடங்கியுள்ளன. சிறுதானியங்களை சங்ககால மக்கள் மிகுதியாக பயன்படுத்தியுள்ளன. அவர்களைப் போல் இன்றையக் காலக்கட்ட மக்களும் மிகுதியாக பயன்படுத்தி வருகின்றன, சிறுதானியங்கள் சங்ககால மக்கள் பயன்படுத்திய உணவு வகைகளில் பெரும்பங்கு வகித்துள்ளன என்பதை சங்க இலக்கியப் பாடல்கள் எடுத்துரைத்துள்ளதை காணமுடிகின்றது. அது மட்டுமின்றி நீதி இலக்கியமான திருக்குறளில் பல்வேறு குறட்பாக்களில் 'தினை' என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளதையும் பார்க்கமுடிகிறது. எனவே. சங்ககாலம் முதல் சிறுதானியங்களை மக்கள் பயன்படுத்தினர் என்பதையும் அறியமுடிகிறது.

சங்க இலக்கியங்களில் சிறுதானியங்கள்

சங்ககால மக்கள் சிறுதானியங்களைச் சோறாக அவித்தும், தின்பண்டமாகவும், மாவாக இடித்து இனிப்பு சேர்த்தும் உண்டுள்ளனர். தினையரிசிச் சோற்றை நெய்யில் பொரித்த இறைச்சியுடன் சேர்த்து உணவாக உண்டனர் என்பதை,

பருஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேலையொடு
குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர் (மலைபடு. 168-169)

என மலைபடுகடாம் பாடல் வரிகளின் மூலம் அறியமுடிகிறது.

ஆடு, மாடுகளை மேய்த்தல்‌ தொழிற்புரியும்‌ ஆயர்குலப்‌ பெண்கள்‌ மோர்‌, நெய்‌ ஆகியவற்றை விற்று, பின்‌ கடும்பசியுடன்‌ தன்‌ வீட்டை அடைவாள்‌. அவள்‌ தினையால்‌ ஆக்கிய சோற்றைப்‌ பாலுடன்‌ சேர்த்து உண்பாள்‌ என்பதை பெரும்பாணாற்றுப்படை (பெரும்பாண்.100-103) உணர்த்துகின்றது.

மேலும் படிக்க ...

அறிமுகம்: ஆண்களின் குரல் 360! இலாப நோக்கற்று இயங்கும் ஆண்களுக்கான அமைப்பும் ஒரு 'நேர்-உரையாடற் காணொளியும்' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
சமூகம்
30 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

2020ஆம் ஆண்டிலிருந்து டொரோண்டோ, கனடாவிலிருந்து இலாப நோக்கற்ற அமைப்பொன்று , ஆண்களின் பிரச்னைகளை மையமாக வைத்து 'Voice of Men 360 (ஆண்களின் குரல் 360) என்னும் பெயரில் இயங்கி வருகின்றது. இதன் ஸ்தாபகர் சிவம் வேலாயுதம். 'சர்வதேச ஆண்கள் தினம்' (International Men's Day) என்னும் சர்வதேசரீதியில் இலாப நோக்கற்று இயங்கும் அமைப்பின் பகுதியாக இயங்கி வரும் அமைப்பிது. பல்வயது ஆண்களும் (சிறுவர் தொடக்கம் முதியவர் வரை)  சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்களை, அதனால் அவர்களுக்கு எற்படும் தேவைகளை உணர்ந்து, அவர்களுக்குப் பல் வழிகளிலும்  உதவிகள் வழங்குவதையே நோக்கமாகக்கொண்டு இயங்கிவரும் அமைப்பிது.

           -  'ஆண்களின் குரல் 360' அமைப்புன் ஸ்தாபகர் சிவம் வேலாயுதம்-

 'சர்வதேச ஆண்கள் தினம்'  அமைப்பானது சுமார் தொண்ணூறு நாடுகளில் இருபது வருடங்களுக்கும் அதிகமாகச் செயற்பட்டு வரும் அமைப்பு. இவ்வமைப்பின் முக்கியமான தூண்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

மேலும் படிக்க ...

நாவல் வாசிப்பு அனுபவம்: மகாலிங்கம் பத்மநாபனின் ' அது ஒரு அழகிய நிலாக்காலம்! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
நூல் அறிமுகம்
30 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

காலப்பயணம் செய்வது விஞ்ஞானிகளின் கனவு. ஆனால் ஒரு சாமானியன் தன் நினைவுகளால் பின்னோக்கிப் பயணம் செய்வதற்கு விஞ்ஞானம் அவசியமற்றது. மண்ணில் மீது கொண்ட விருப்பும் முன்னோர்கள் மீது கொண்ட மதிப்பும், வரலாற்றை ஆவணப்படுத்தும் சமூகநோக்கும், இலக்கிய ரசனை கொண்ட மனமும் அமைந்தால் போதுமானது. பண்டைய சரித்திரங்களைக் கேட்கும் போதும் படிக்கும் போதும் அக்காலகட்டத்திற்கு மனோவேகத்தில் சென்று நனவிடை தோய்தல் ரம்மியமானது. அவ்வாறான ஒரு அனுபவத்தைத் தருவதே 'அது ஒரு அழகிய நிலாக்காலம்' என்னும் கவிதைமயமான தலைப்பினைக் கொண்ட நாவல்.

முன்பு காடாகக் கிடந்த சில பிரதேசங்களைத் தம் கைவண்ணத்தால் பொன்விளையும் பூமியாக மாற்றி, நகரங்களை உருவாக்குவதற்கு தோற்றுவாயாக அமைவதும், அடுத்த தலைமுறையினருக்கு கையளித்தலும் எல்லோராலும் இயலக் கூடியதல்ல. அவ்வாறாக, வன்னியில் பெரியபரந்தன் எனும் கிராமத்தை உருவாக்கிய தமது முன்னோடியான (pioneer ) கொள்ளுப் பேரர்களின் முயற்சிகளை, தந்தை வழிப் பேரரின் வழியாக அறிந்து, தனக்கு முந்திய மூன்று தலைமுறையினரின் வாழ்க்கை வரலாற்றினை நாவலாக எழுதியுள்ளார், படைப்பாசிரியர் மகாலிங்கம் பத்மநாபன் அவர்கள்.

மேலும் படிக்க ...

குறிப்பேடு: ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்! - திக்குவல்லை கமால் -

விவரங்கள்
- திக்குவல்லை கமால் -
நூல் அறிமுகம்
30 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்(2023)என்ற வ.ந.கிரிதரனின் இரண்டாவது கவிதைத்தொகுதி ,  புலம்பலைச் சித்தரிக்கும் அட்டைப் படத்துடன் வெளிவந்துள்ளது. சுயகவிதைகள் நாற்பதும் இன்னும் சில மொழிபெயர்ப்புக் கவிதைகளுமாக சுமார் 100 பக்கங்கள்.

குதிரைத் திருடர்களே ! உங்களுக்கொரு செய்தி - மின்னலே ! நீ மின் பின்னியதொரு பின்னலா  ? - தனிமைச் சாம்ராஜ்யத்துச் சுதந்திரப் பறவை - இருப்பொன்று போதாது இருத்தல் பற்றியெண்ணி இருத்தற்கு - இப்படி நீண்ட தலைப்புக்கொண்டனவாகவே பெரும்பாலான கவிதைகள் காணப்படுகின்றன.

இயற்கையோடு கவிதைகள் உரையாடுகின்றன.மனித வாழ்வை இணைத்துப் பார்க்கின்றன.உருவ உள்ளடக்க மாற்றங்களுடனான எந்தக் கவிதைப் போக்கையும் இவர் கவிதைகள் வெட்டியோ ஒட்டியோ செல்லவில்லை.சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் எழுதிச் செல்கிறார்.ஒரு கவிதைக்குள் ஒன்பது அர்த்தங்களைத் தேடவேண்டியதில்லை. வார்த்தைகளைப் பின்னிப் பிசைந்து மந்திர ஜாலம் காட்டவுமில்லை. கவிதைகளை சற்று நிதானமாக வாசித்துச் செல்லும்போது  மீண்டும் மீண்டும்  வாசித்துச் சுகிக்கக்கூடிய வரிகள் நிரம்பிக் கிடக்கின்றன.சில உதாரணங்கள்...

மேலும் படிக்க ...

அஞ்சலிக்குறிப்பு: வீரகேசரி முன்னாள் விளம்பர – விநியோகப்பிரிவு முகாமையாளர் து. சிவப்பிரகாசம் கனடாவில் மறைந்தார்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
29 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வீரகேசரி பத்திரிகையில் நீண்டகாலம் விளம்பர – விநியோகப் பிரிவுகளின் முகாமையாளராக பணியாற்றியவருமான சிவப்பிரகாசம் அவர்கள் கனடாவில் மறைந்தார் என்ற துயரமான செய்தி கிடைத்தது. கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் கனடா தமிழ் இலக்கியத்தோட்டத்தின் விருது விழாவுக்காக ஸ்காபரோவுக்கு சென்றிருந்தபோது, சிவப்பிரகாசம் அவர்களை அவரது வீடு தேடிச்சென்று சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருந்தமையால், அவரது திடீர் மறைவு எனக்குள்ளே சற்று அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

“முருகபூபதி, குறிப்பிட்ட இயல்விருது விழாவுக்கு என்னால் வருகை தரமுடியாதிருக்கும், உடல் நலக்குறைவினால் வெளிப் பயணங்களை தவிர்த்துவருகின்றேன் “ என்று அவர் தொலைபேசி ஊடாக சொன்னபோது, “ சேர்… நீங்கள் ஓய்வெடுங்கள். நானே உங்களை வந்து பார்க்கின்றேன் “ எனச்சொல்லி, அவரது வீட்டு முவரியை கேட்டுப்பெற்றுக்கொண்டு, மெக்ஸிக்கோவிலிருந்து வருகை தந்திருந்த எனது உடன்பிறந்த தம்பியின் மகள் லாவண்யாவையும் அழைத்துக்கொண்டு அவரைப் பார்க்கச்சென்றேன்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியனின் புலனாய்வுக் கற்பனை! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
29 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

-  எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியன் (அருண் அம்பலவாணர் -

எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியன் (அருண் அம்பலவாணர்)  சிறந்த கவிஞர். எழுத்தாளர். ஆனால் அவ்வப்போது அவர் எழுதும் புலனாய்வு ஊடகக் கட்டுரைகள்தாம் சில வேளைகளில் சிரிப்பைத்   தருகின்றன.  நட்சத்திரன் செவ்விந்தியன் தனது முகநூற் பதிவொன்றில் என்னைத் த பிரச்சார முகவராக ஜெயமோகன் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டுகின்றார்.

அத்துடன் அவர் நிற்கவில்லை. மேலும் பல குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகின்றாற். ஜெயமோகனின் பங்களிப்பில் உருவான தமிழ் விக்கி பற்றிக் கடுமையாக விமர்சித்ததால், ஜெயமோகன் என்னுடன் சமரசம் செய்ய, தமிழ் இலக்கியத் தோட்டத்துக்குப் பரிந்துரை செய்ததால்தான் என்க்கு அண்மையில் கிடைத்த தமிழ் இலக்கியத்  தோட்ட விருது கிடைத்ததாம்.  ''தமிழ் விக்கி உருவானபோது அதன் டிசைன் பற்றி மிக்காத்திரமாக விமர்சித்து அதன் துர்நோக்கங்கங்களை அம்பலப்படுத்தியவர் அவர். அவரது குறித்த முகநூல் விமர்சனம் இப்பதிவின் இறுதியில் உள்ளது. சுதாரித்த ஜெயமோகன் அ.முத்துலிங்கத்திடம் ஆணையிட்டு கிரிதரனுக்கு கடந்த வருடம் ஒரு இயல் விருது கொடுக்க ஏற்பாடு செய்தார். அம்முயற்சி சக்சஸ். " என்று எழுதுகின்றார். அப்பட்டமான கற்பனை. நகைச்சுவைக் கற்பனை.  ஜெயமோகன் பல தடவைகள் டொராண்டோ வந்தபோதும் சந்திக்காத நான் , இம்முறை ஜெயமோகன் வந்தபோது சந்தித்தது அதற்காகத்தானாம். இது எப்படி இருக்கு? எத்தகைய கற்பனைமிகு சிந்தனை!

இந்நிலையில் இயல் விருது பற்றியும், ஜெயமோகனது பரிந்துரை பற்றியும் இவர் இவ்விதம்  குறிப்பிட்டிருப்பது வேடிக்கையானது. உண்மையில் இவ்விருது பற்றிய தகவலை எனக்கு முத்துலிங்கம் கூறியபோது நான் மறுத்திருந்தேன். அதற்குக் கூறிய காரணம் ஒருமுறை நானும் நடுவராக இருந்திருக்கின்றேன் என்பதுதான்.அதற்கு அவர் நான் 'தமிழ் இலக்கியத் தோட்டத்தில்' இல்லை என்பதால் அதில் எவ்விதத் தவறுமில்லையென்றதும்தான் ஏற்றுக்கொண்டேன்.

மேலும் படிக்க ...

மணிமேகலையில் கல்விமுறை - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி-II), குருநானக் கல்லூரி,சென்னை- 42. -

விவரங்கள்
- முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி-II), குருநானக் கல்லூரி,சென்னை- 42. -
ஆய்வு
28 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

கல்வி சமுதாய மாற்றத்திற்கு ஒரு சிறந்த கருவியாகும்‌. சமூக முன்னேற்றத்திற்கு மட்டுமின்றித்‌ தனிமனிதன்‌ சிறப்புக்கும்‌ உயர்வுக்கும்‌ கல்வி வகை செய்கிறது. கல்வியின்‌ மூலமே மக்களின்‌ வாழ்வும்‌ சமுதாயமும்‌ சிறப்புப்பெறும்‌. அது சமூகச்‌ செயல்முறையில்‌ பிரிக்க முடியாத ஒரு கூறு. சமூகத்தில்‌ வாழும்‌ மனிதனை உருவாக்குவதில்‌ கல்வி தலையாய பங்கு வகிக்கின்றது. மனிதன்‌ இயற்கையாகவே சமூக இயல்பினராயிருப்பதாலும்‌ சமூகத்தின்‌ பிரிக்க முடியாத ஓர்‌ உறுப்பினராயிருப்பதாலும்‌ மனிதனுக்கு அளிக்கப்படுகின்ற கல்வி‌ எக்காலமும்‌ சமூக இயல்புடையதாக இருக்க முடியும்‌ எனக்‌ கொள்ள இடமுண்டு.

கல்வி என்பதற்கு "அறிவு கற்றல்‌ நூல்‌" என்ற பொருள்களைத்‌ தருகின்றது தமிழ்மொழியகராதி. அறிவு, கற்றல்‌, நூல்‌ வித்தை என்ற பொருள்களும்‌ தரப்படுகின்றன. கல்வி ஒரு தனிமனிதனின்‌ ஒழுக்கத்தை வடிவமைக்க வேண்டும்‌; மனதை வலிமைப்படுத்த வேண்டும்‌; அறிவை விரிவாக்க வேண்டும்‌; தன்‌ காலிலேயே தான்‌ நிற்கக்‌ கூடியவனான வலிமையைத்‌ தரவேண்டும்‌; இவை அனைத்தும்‌ கல்வியால்‌ ஒரு மனிதனுக்குக்‌ கிடைக்கவேண்டும்‌ என விளக்குகிறார்‌ சுவாமி விவேகானந்தர்.

சமூக அமைப்பில்‌ கல்வியானது பொருளாதார அமைப்பு என்னும்‌ அடித்தளத்தின்‌ மேல்‌ நிறுவப்படும்‌ மேல்கட்டமைப்பின்‌ ஒரு கூறு என்னும்‌ கருத்தை மார்க்சும்‌ ஏங்கல்சும்‌ வெளிப்படுத்தினர்‌.

மனிதனது திறனை வளர்ச்சி பெறச்‌ செய்யவும்‌, உள்ளுணர்வை வெளிப்படுத்தவும்‌, பண்புகளை வெளிக்கொணரவும்‌ அறிவினை உருவாக்கவும்‌ கல்வி துணைபுரிகின்றது.

மேலும் படிக்க ...

பயணியின் பார்வையில் – அங்கம் - 04: ஒக்டோபர் 28 நடிகை ருக்மணி தேவியின் நினைவு தினம்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
28 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நீர்கொழும்பு – கொழும்பு வீதியில் ஜா – எலைக்கு அருகில் துடல்ல சந்தியை கடக்கும்போது நீங்கள் ஒரு சிலையை காணமுடியும். தேவதைபோன்று வெண்ணிறத்தில் காட்சியளிக்கும் அந்தச்சிலை நடிகை ருக்மணிதேவி. கொழும்புச்செட்டி சமூகத்தைச்சேர்ந்த இவரது முன்னோர்கள் தமிழர்கள். ருக்மணிதேவி சிங்கள திரையுலகில் பிரபல்யம் பெற்றிருந்தாலும் ஓரளவு தமிழும் பேசக்கூடியவர். சிறந்த பாடகி. அவர் நடித்த சிங்களப் படங்களில் அவர் சம்பந்தப்பட்ட பாடல்களுக்கு அவரே குரல்கொடுத்தார். இசைநிகழ்ச்சிகளிலும் தோன்றி பாடிவந்தவர். அக்காலத்தில் லக்ஸ் சோப் விளம்பரத்திலும் தோன்றியவர்.

1978 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி காலை வழக்கம்போன்று நீர்கொழும்பிலிருந்து கொழும்பில் வீரகேசரிக்கு வேலைக்குப்புறப்பட்டேன். எங்கள் நீர்கொழும்பூருக்கு கிரியுள்ளை என்ற ஊரிலிருந்து கொழும்பு நோக்கி வரும் கடுகதி இ.போ. ச. பஸ்ஸை காலை 7-45 மணிக்குப் பிடித்தால், கொழும்பு ஆமர்வீதி சந்தியில் 8-45 மணிக்குள் வந்தடைந்துவிடலாம். நான் வழக்கமாகச்செல்லும் பஸ். ஆசனம் கிடைப்பது அபூர்வம். நின்றுகொண்டு பயணித்தாலும், அந்த பஸ் கடுகதி என்பதனால் சோர்வு இருக்காது. ஜா – எலையில்தான் அடுத்த தரிப்பு வரும். அன்றைய தினம் துடல்ல சந்தியை நெருங்கும்போது எமது பஸ் தனது வேகத்தை குறைத்தது. வீதியில் பொதுமக்கள் நிரம்பியிருந்தனர். எட்டிப்பார்க்கின்றேன். வீதியில் இரத்தம் சிந்தியிருக்கிறது. ஒரு பெண்ணை சிலர் தூக்கி ஒரு வாகனத்தில் ஏற்றுகின்றனர். அவர் வந்த வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. அவரது உடலிலிருந்து இரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது.

மேலும் படிக்க ...

சிறுகதை: நல்லாசிரியர் விருது! - ஸ்ரீராம் விக்னேஷ் -

விவரங்கள்
- ஸ்ரீராம் விக்னேஷ் -
சிறுகதை
28 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1975ஆம் வருடம்.

யாழ்ப்பாணத்தில் ஆசிரியையாக பணியாற்றிக்கொண்டிந்த காலம். அந்தப் பள்ளிக்கூடத்துக்கு மாற்றலாகி வந்து பத்து நாட்களேயாகின்றன. எனது ஊரான கட்டுவனிலிருந்து, பேரூந்து ஏறித் தெல்லிப்பளைக்கு வந்து, அங்கிருந்து தொடரூந்தில் யாழ்ப்பாணம் வருவேன். யாழ்ப்பாணம் தொடரூந்துத் தரிப்பிடத்துக்கு அண்மையில்தான் நான் பணிசெய்யும் பள்ளிக்கூடம் இருந்தது. ஐந்து நிமிடத்தில் நடந்தே போய்விடலாம்.
பள்ளிக்கூடம் முடிந்து, தொடரூந்துக்காக காத்துநிற்கின்றேன். நேரமோ பிற்பகல் நான்கு ஐம்பத்தைந்து.

“கொழும்புக் கோட்டையிலிருந்து, காங்கேசந்துறை நோக்கிச் செல்லும் யாழ்தேவி புகையிரதம் இன்னும் சிலநிமிடங்களில் முதலாவது மேடைக்கு வரும்.....”

நிலைய ஒலிபெருக்கி அலறியது. நெற்றிக் காயம் சிறிது வலித்தது. ஒட்டியிருந்த பிளாஸ்திரிமீது இலேசாகத் தடவிக்கொண்டேன்.

”வணக்கம் டீச்சர்....”

அவசரமாக சொல்லிவிட்டு என்னைக் கடந்து சென்றான் ஒரு பையன். ஆளை அடையாளம் தெரியவில்லை.ஏற்கனவே என்னிடம் படித்த மாணவனாக இருக்கலாம். அடுத்து செல்லம்மா ஆச்சியின் தரிசனம்.

“என்ன பிள்ளை..... நெத்தியில காயம்...... காலம்பிறை வந்த ரயிலைவிட்டு நீ இறங்கையிக்கை நான் உன்னைப் பாத்தனான்..... அப்ப காயம் இல்லை....இப்ப இருக்குது.... பள்ளிக்கூடத்தில பிள்ளையளோடை ஓடிப்பிடிச்சு விளையாடி விழுந்தெழும்பினனீயோ....”

ஆச்சியின் கடைசிமகள் கிளிநொச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றாள். காலையில் நான் வந்து இறங்கும் ரெயிலில்தான் அவள் ஏறிப் பணிக்குச் செல்வாள். இப்போது நான் ஏறப்போகும் ரெயிலில்தான் அவள் வந்து இறங்குவாள். அவளை வீட்டுக்கு கூட்டிச் செல்லத்தான், ஆச்சி வந்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க ...

அகதிமுகாமின் குழந்தை அல் சைமா அக்ரம் சைடம்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
27 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


அல் சைமா அக்ரம் சைடம்!
அகதிமுகாமின் குழந்தை இவள்.
அதியுயர் புள்ளிகளை உயர் வகுப்பில்
அடைந்த அறிவுக் கொழுந்து!
எத்தனை கனவுகளுடன்
எத்தனை திட்டங்களுடன்
இருந்திருப்பாள்?

மேலும் படிக்க ...

ஜெயமோகனின் டொரோண்டோ அனுபவங்கள்! - ஜெயமோகன் -

விவரங்கள்
- ஜெயமோகன் -
இலக்கியம்
27 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- அண்மையில் டொரெண்டோ வந்திருந்த எழுத்தாளர் ஜெயமோகன், தன் டொரோண்டோ அனுபவங்களைத் தனது வலைப்பதிவில் 'ஓர் அமெரிக்கக் கனவு' என்னும் கட்டுரையில் பதிவு செய்திருந்தார். அதனை ஒரு தகவலுக்காக இங்கு பதிவு செய்கின்றோம். -


டொரெண்டோவில் இரு நிகழ்வுகள். ராஜன் சோமசுந்தரம், ஆஸ்டின் சௌந்தர், ராதா  ,பழனிஜோதி மகேஸ்வரி ,வெங்கடப்பிரசாத் என நண்பர்கள் வந்து ஒரு வாடகைப் பங்களாவை எடுத்து அங்கே தங்கியிருந்தோம். மிக வசதியான அழகிய பங்களா. முத்துலிங்கமும் முரளியும் முன்னரே சென்று அது வசதியானதா என்று உறுதிசெய்துகொண்டனர் என்று அறிந்தேன். முத்துலிங்கம் மிக இளமையிலேயே உயர்நிர்வாகியாக ஆகி, அப்படியே பணியாற்றி உச்சநிலைகளில் இருந்து ஓய்வுபெற்றவர். மிகச்சிறந்த நிர்வாகி. (ஆனால் ஒரு சாதாரண ஊழியனாக வாழ்ந்த எனக்கு அவரை அப்படிப் பார்க்கையில் ஒரு நடுக்கம். நல்லவேளை நான் இவர் கீழே வேலைபார்க்கவில்லை என நினைத்துக்கொண்டேன்)

மேலும் படிக்க ...

கணேஸ் ( துரைராஜா கணேஸ்வரன்) கவித்துளிகள்!

விவரங்கள்
- கணேஸ் ( துரைராஜா கணேஸ்வரன்) -
கவிதை
26 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒருமுறை நின்று நிதானித்து விட்டு
பயணத்தை தொடருங்கள்,
தூரம் சென்றபின்
துயரப்படாமல் இருப்பதற்கு.
ஆழம் சென்றபின்
அழிந்து விடாமல் பார்பதற்கு.

நித்திரை நீண்டு விட்டால்
நீ இங்கு இல்லை.
அப்பன் பெயரை
சுமந்த அதிகாரம் முடிந்தது.
உன் பிள்ளையும்
சில காலம் உன் பெயரைச்
சுமந்து உருக்குலைந்து போவான்.
வாழ்க்கை கணக்குக்கு
சில வேளை வரவும் புரியாது.
செலவும் புரியாது.

நதியோடு கலந்துவிடு.
நாணத்தை விட்டுவிடு.
விதியோடு உறவு என்ற
விபரீதம் கடந்துவிடு.
கதியை மாற்றிவிடு.
காலத்தை கடந்துவிடு.
சதியோடு போராடி.
சாம்பலாய் ஆகாதே.
மதி கொண்டு
எழுந்துவிடு.
மமதையுடன் வாழ்ந்துவிடு.

மேலும் படிக்க ...

பதிவுகளில் அன்று: புதியமாதவியின் 'ஹே...ராம்!' கவிதைகளினூடான ஒரு பயணம்! - ரவி(சுவிஸ்) -

விவரங்கள்
- ரவி(சுவிஸ்) -
'பதிவுகளில்' அன்று
25 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- பதிவுகள் இணைய  இதழில் 2003இல் எழுத்தாளர் பா.ரவி (சுவிஸ்) எழுதிய புதிய மாதவியின் 'ஹேராம்'கவிதைத்தொகுப்ப்பு பற்றிய விரிவான திறனாய்வு. 'பதிவுகளில் அன்று' பகுதியில் ஆவணப்படுத்தும்பொருட்டு மீள்பிரசுரமாகின்றது. -

பதிவுகள்  ஜூலை 2003 இதழ் 43 -மாத இதழ்

என் கவிதையின் முகமே
என் சொந்த முகம்
என் கவிதையின் முகவரியே
என் முகவரி
முகவரி தொலைந்த
மனிதர்களுக்காகவே
என் கவிதை
பிறந்தது

கவிதாயினி  புதியமாதவியின் முகவரியைத் தேடி வர நேர்ந்தபோது ஹே ராம் கவிதைத் தோப்பை வந்தடைந்தேன். முகவரி தொலைந்த மனிதர்களுக்காகவே கவிதைகள் முகம்காட்டுகின்றன. ஒடுக்கப்படும் சக்திகளின் குரலாக, உணர்வுகளின் நுனி கரையும் மென்முனைகளாக, நட்புபற்றிய மேலான மதிப்பீடாக, இயற்கையோடு மனிதமொழியில் பேசுபவளாக  வரும் புதியமாதவி இந்தத் தோப்பில் -அதாவது கவிதைத் தொகுப்பில்- உலாவருகிறாள். ஆனால்,

எதற்காக எழுதவந்தேன்
தெரியவில்லை -தமிழ்
என்னால்தான் வாழுமென்றும்
சொல்லவில்லை.
.....
தமிழ் இனத்திற்காய் எழுதுகின்றேன்
இதுவே என் எல்லை.

என்று அக் கவிதையை முடிக்கிறார். கவிதைகளோ அவர் புலம்பும் எல்லைக்கும் அப்பால் சிறகசைத்துப் பறந்து திரிகின்றன. அதனால் அவை வலிமையும் பெற்றுவிடுகின்றன.

ஹே...ராம் என்ற கவிதை மனிதநேயம்கொண்ட ஒவ்வொரு மனிதனையையும் உசுப்பிவிடக் கூடிய வீச்சுக் கொண்டது.

மேலும் படிக்க ...

நினைவு கூர்வோம்: டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் ( 12.11.1937 - 24.10.2020) - லதா ராமகிருஷ்ணன் -

விவரங்கள்
- லதா ராமகிருஷ்ணன் -
இலக்கியம்
25 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'நான் கே.எஸ்.பேசறேன்'  என்ற தலைப்பிட்ட நூலில் இடம்பெற்றுள்ள டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் கவித்துவ வரிகள். என்னுடைய எளிய தமிழாக்கம்:

இந்த நொடியை வாழ்ந்துவிடலாம் வாருங்கள்  - டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் -

அடர்செறிவான ஒரு மணி நேர வாழ்வு
பெயரற்றதொரு யுகத்திற்கு ஈடானது
‘எதற்காக அழிவற்ற வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கவேண்டும்?
தொலைதூர நட்சத்திரங்களுக்காக
அன்புடை அல்லிமலர்களை இழக்கவேண்டும்?
அமரத்துவத்திற்காகப் பசியோடலைதல் வாழ்வை
அதிவறண்டதாக வீணடித்துவிடும்
அதனால் ஒரு நொடியின்
அர்த்தத்தை களவாடிவிட முடியும்
நொடியில் நீடுவாழ்வோம்
நிரந்தரம் தன்னைத்தான் கவனித்துக்கொள்ளட்டும்.
வாழ்வையும் அதன் பொருளையும்
எல்லா நேரமும் அலசிக்கொண்டேயிருப்பதில்
வீணாகிவிடவேண்டாம்.
வாழ்க்கை அற்புதமானது; விரயம்செய்வதற்கானதல்ல
அட, வாழ்ந்துவிடலாம் வாருங்கள்
நம் கைவசமுள்ள நொடியை மதிப்பார்ந்ததாக்குவோம்
நாளை வெகுதொலைவிலிருக்கிறது
கடந்தகாலம் இறந்துவிட்டது.
நிகழ்காலமும்கூட
நில்லாதோடிக்கொண்டேயிருக்கிறது.
நமக்கிருப்பது இந்தவொரு நொடி மட்டுமே
அதை
வாழ்ந்துவிடலாம் வாருங்கள்!

மேலும் படிக்க ...

பிரமிள் , சுப்ரபாரதிமணியன் பற்றிய சுப்ரபாரதிமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் பற்றிய குறிப்புகள்! - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
25 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் சுப்ரபாரதிமணியன் அறக்கட்டளை சொற்பொழிவு  பிரமிள் கவிதைகள்  குறித்து  “கணத்தில் மொக்கவிழும் காலாதீதம்“ என்ற தலைப்பில் -இயக்குனர் தங்கம் அவர்கள் வழங்கினார்  அக்டோபர் மாதத்தில்  0

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் இயக்குனர் தங்கம் அவர்களின் வேங்கை சாமி என்ற திரைக்கதையை அடிப்படையாகக் கொண்டது . இந்தக்குறிப்புகள் விடுதலை படத்தின் டைட்டிலிலும் இடம்பெறுகின்றன.  வெற்றிமாறனின் விடுதலை 1 , விடுதலை 2  ஆகிய இரண்டு பாகங்களைக் கொண்ட படங்களிலும் இயக்குனர்  தங்கம் பணிபுரிந்து இருக்கிறார் .

பாலு மகேந்திரா அவரிடம் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தவர் .அவர் இயக்கிய எழுத்தாளர்களின் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட கதைநேரம் தொடரில் பெரும் பங்கு வைத்தவர் ... பல திரைக்கதைகளை உருவாக்கியவர் ..இறைவன் என்பது வரம் என்ற இவருடைய கதையை இப்போது அமீர் அவர்கள் திரைப்படமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். புதிய திரைப்படம் ஒன்று இயக்குகிற வேலையில் தங்கம் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார் ....தொடர்ந்து இலக்கியவாசிப்பிலும் அக்கறையும் கொண்டவர்.

மேலும் படிக்க ...

வசந்தம் உளவளத்துணை நிலையம் - சமூக உளவளம் பேணும் தொடர் - 63

விவரங்கள்
- முனைவர் பார்வதி கந்தசாமி -
நிகழ்வுகள்
24 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

link here | Zoom Meeting ID: 918 584 6813 |No Passcode

மேலும் படிக்க ...

என‌க்குத் தெரிந்த‌ முருகைய‌ன் ~ டிசே தமிழன் -

விவரங்கள்
~ டிசே தமிழன் -
'பதிவுகளில்' அன்று
24 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

-பதிவுகள் இணைய இதழில் 2009இல்  வெளியான கட்டுரையிது.  'பதிவுகளில் அன்று' பகுதியில் ஆவணப்படுத்தும்  பொருட்டு மீள்பிரசுரமாகின்றது. -

1.

இன்று முருகையனின் நினைவுப்பகிர்தலிற்காய் வந்திருக்கும் உங்களில் சிலர், முருகையனோடு நெருங்கிப் பழகியவர்களாக இருக்கக்கூடும். இன்னும் சிலர் அவரது வெளிவந்த படைப்புக்களை வாசித்து நெருக்கம் கொண்டவர்களாக இருக்கக்கூடும். எனக்கு எப்படி முருகையன் முதலில் அறிமுகமானார் என காலப் பாதையில் பின்னோக்கி நகரும்போது, சிறுவயதுகளில் படித்த பாடப்புத்தகங்களின் மூலமாக அறிமுகமாயிருப்பார் போலத்தான் தோன்றுகின்றது. ஈழத்தில் படித்த காலத்தில் பாடக்குழு உறுப்பினர்களின் பெயரில் முருகையனின் பெயர் நீண்டகாலமாய் இருந்து வந்திருக்கின்றது. அப்போது அறிமுகமாகிய முருகையன், இப்போது எனக்கு தெரிகின்ற பன்முகத் திறமை கொண்டதொரு படைப்பாளியாக அறிமுகமாயிருக்கவில்லை என்பதும் உண்மை.

பின்னாட்களில் வாசித்த 'பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்' தொகுப்பின் மூலமாக முருகையன் எனக்குள் ஒரு கவிஞராக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார். எங்களுக்கென்று ஒரு நீண்ட கவிதைப் பராம்பரியம் இருந்து வந்திருக்கின்றது. மஹாகவி, நீலாவாணன், முருகையன், பசுபதி என்று தொடர்கின்ற வளமான மரபு எங்களுக்கு இருக்கின்றது. முருகையன் கவிஞராக மட்டுமில்லாது, நாடக ஆசிரியராக, கட்டுரையாசிரியராக,மொழிபெயர்ப்பாளராக எனப் பன்முகத்தனமையுடையவராக இருந்திருக்கின்றார். இவையெல்லாவற்றையும் விட, இன்று முருகையனின் மறைவை ஒட்டி எழுதப்படுகின்ற அஞ்சலிக்குறிப்புக்களைப் பார்க்கும்போது, முருகையன் ஓர் அற்புதமான மனிதராக வாழ்ந்திருக்கின்றார் போலத்தான் தெரிகிறது.

பட்டங்களோடும் பட்டோபங்களோடும் பலர் வாழ்ந்தாலும், அவர்களில் பலரால் நிலத்தில் காலூன்ற முடிவதில்லை; சக மனிதர்களை நேசிக்கத் தெரிவதில்லை. அந்தவகையில் பார்க்கும்போது, இவ்வாறானவர்களுக்கு எதிர்மாறாக, முருகையனும், ஏஜே கனகரட்னவும் வாழ்ந்து முடித்துவிட்டுப் போயிருக்கின்றார்கள். இவர்கள் இருவரும் தமது திறமைகளின் வெளிச்சத்தில் திளைக்காது, சக மனிதர்களை நேசித்துக்கொண்டு, சாதாரணமாய் வாழ்ந்த அருமையான மனிதர்கள். ஆதி மதங்களும், அண்மைக் காலத்து மார்க்சிசமும் போதித்ததும் சக மனிதர்களை உன்னைப் போல நேசி என்பதைத்தான். மதத்தையும் மார்க்சையும் வைத்து எத்தனையோ போலித்தனங்களும் பித்தலாட்டங்களும் நிகழ்ந்துகொண்டிருக்க, முருகையனும், ஏஜேவும் தங்களது வாழ்வின் மூலம், முக்கியமான ஒரு விடயத்தை சப்தமின்றி எங்களுக்கு உணர்த்திவிட்டுப் போயிருக்கின்றார்கள்.

மேலும் படிக்க ...

சரண்குமார் லிம்பாளேயின் "அக்கர்மஷி"யின் அடையாளங்களைத் தேடி... - புதியமாதவி, மும்பை -

விவரங்கள்
- புதியமாதவி, மும்பை -
'பதிவுகளில்' அன்று
23 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பதிவுகளில் அன்று! பதிவுகள் ஜூன் 2008 இதழ் 102

நான் சபிக்கிறேன்
உன்னை
உன் எழுத்துக்களை
உன் கலாச்சாரத்தை
உன் வேஷத்தை..   ( நாம்தேவ் தசள் - கோல்ப்பிதா கவிதைகளிருந்து)

மராட்டிய மாநிலத்தில் ஒரு புதிய அலை இதுவரை எழுதப்பட்டிருந்த இலக்கியத்தின் பக்கங்களைப் புரட்டி, இதுவரை நிறுவப்பட்டிருந்த சமூகத்தின் அடையாளங்களை வீசி எறிந்து ஒரு கோட்டோவியத்தை வரைந்தது. 1960களில் ஏற்பட்ட சிறுபத்திரிகைகளின் வளர்ச்சி, மும்பையில் தொழில்மயம், அந்தத் தொழில்மயத்தில் எழுந்த புதிய தொழிலாளர் வர்க்கம், தொழிற்சங்கங்கள், அதுசார்ந்த மார்க்சிய சிந்தனைகள் இந்தப் பின்புலத்தில் 1972ல் தலித் பைந்தர் அமைப்பு .. என்று தொடர் அலையாக எழுந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குரல். அந்தக் குரலைப் பதிவு செய்திருக்கும் தலித் இலக்கியங்கள். அதிலும் குறிப்பாக 1980களில் தலித் எழுத்தாளர்களின் 'தன் வரலாற்று'ப் பாணியிலான தலித் வரலாறு மார்க்சிய சிந்தனைகளையும் சேர்த்தே புரட்டிப் போட்டது.

தலித் எழுதாளர் தயாப்வாரின் "பலுட்டா " -சமூக உரிமை (1978) லஷ்மண் மானேயின் " யுபரா"- அந்நியன் (1980) லஷ்மண் கெய்க்க்வாட்டின் "யுசல்ய -அற்பத்திருடன் (1987) பெண் தலித் எழுத்தாளர் பேபி காம்ப்ளேயின் 'ஜின் அமுச்" (இப்படியாக எங்கள் வாழ்க்கை) இவை அனைத்தும் தலித் தன் வரலாற்று பதிவுகளில் குறிப்பிடத்தக்கன. இக்காலக்கட்டத்தில் வெளிவந்த சரண்குமார் லிம்பாளேயின் "அக்கர்மஷி" வெளிவந்தவுடன் மிகவும் பேசப்பட்ட ஒரு பதிவு. அக்கர்மஷி என்றால் ஜாதிபிரஷ்டம் செய்யப்பட்டவன் - THE OUTCASTE என்று பொருள். ஜாதிகளால் விலக்கிவைக்கப்பட்டவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

மேலும் படிக்க ...

அஞ்சலி: (முகநூற் குறிப்பு) பலஸ்தீனியப் பெண் எழுத்தாளரும் கவிஞருமான ஹெபா ஹமல் அபு நாடாவின் (Heba Kamal Abu Nada ) கடைசிக் கவிதை! - தமிழில் : நட்சத்திரன் செவ்விந்தியன் -

விவரங்கள்
- தமிழில் : நட்சத்திரன் செவ்விந்தியன் -
அரசியல்
22 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

காசாவில், இஸ்ரேலிய குண்டுத்தாக்குதலில் வெள்ளிக்கிழமை  கொல்லப்பட்ட 32  வயதான பலஸ்தீனியப் பெண் கவி ஹெபா ஹமல் அபு நாடா ( Heba Kamal Abu Nada)

காசாவில், இஸ்ரேலிய குண்டுத்தாக்குதலில் வெள்ளிக்கிழமை  கொல்லப்பட்ட 32  வயதான பலஸ்தீனியப் பெண் கவி ஹெபா ஹமல் அபு நாடா ( Heba Kamal Abu Nada)

என் நண்பர்களின் பட்டியல்
சுருங்கி வருகிறது.
நண்பர்கள்
சின்னச் சின்ன
சவப்பெட்டிகளாகிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏவுகணைகளைவிட
வேகமாகப் பறந்திறக்கிற அவர்களை
என்னால்
மீட்க முடியவில்லை.
காக்க முடியவில்லை.
எனக்கு அழ முடியவில்லை.
எனக்கு
என்ன செய்வதென்றும் தெரியவில்லை.

மேலும் படிக்க ...

'டொராண்டோ'வில் ஜெயமோகன்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
22 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

-  நிகழ்வில் எழுத்தாளர் ஜெயமோகன் உரையாற்றும் காட்சி -

இன்று தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ஏற்பாட்டில் மார்க்கம் மாநகரசபைக் கூடத்தில் நடைபெற்ற எழுத்தாளர் ஜெயமோகனின் உரையினைக் கேட்பதற்காக எழுத்தாளர் தேவகாந்தன் மற்றும் கடல்புத்திரனுடன் சென்றிருந்தேன். நிகழ்வில் கலை, இலக்கிய மற்றும் அரசியல் ஆளுமைகளைக் காண முடிந்தது. குறிப்பாக எழுத்தாளர் மொன்ரியால் மைக்கல், எழுத்தாளர் 'காலம்' செல்வம், எழுத்தாளர் க.நவம், 'அசை' சிவதாசன், எழுத்தாளர் ஊடகவியலாளருமான கனடா மூர்த்தி, எழுத்தாளர்  டி.செ. தமிழன், எழுத்தாளர் குரு அரவிந்தன், எழுத்தாளர் அ.முத்துலிங்கம், எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம், 'விளம்பரம்' மகேந்திரன், 'தமிழர் தகவல்' திருச்செல்வம், எழுத்தாளர் மனுவல் ஜேசுதாசன், 'உதயன்' லோகேந்திரலிங்கம் என்று பலரைக் காண முடிந்தது.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 32 - சோலைக்கிளி படைப்புகள்: ஓர் உரையாடல்

விவரங்கள்
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
20 அக்டோபர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. செ.சுதர்சன் கவிதைகள் இரண்டு!
  2. சிதைவின் கலை - சிறிசுவின் சிறுகதைகள்! - ஜெயமோகன் -
  3. கனடா கலைமன்றத்தின் ‘நிருத்த நிறைஞர்’ பட்டமளிப்பு விழா - குரு அரவிந்தன் -
  4. ஆய்வு: மன்னர்களின் மனிதநேயம் - முனைவர் பட்ட ஆய்வாளர் - பொ. அபிராமி, தமிழாய்வுத்துறை, காவேரி மகளிர் கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா. -
  5. இலங்கைத் தமிழர் அரசியல்: வரலாற்று முக்கியத்துவம் கொண்ட மூன்று அவதானிப்புகள் - ஜோதிகுமார் -
  6. படிக்கக் கிடைத்த இருபெரும் கவிஞர்களைப் பற்றிப் பார்க்கக் கிடைத்த இரண்டு ஆவணப்படங்கள்! - லதா ராமகிருஷ்ணன் -
  7. கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் - விருதுவிழா-2023 - தகவல்: அகணி சுரேஸ் -
  8. அஞ்சலி: இலங்கைத் தமிழ்ப் பாடகர் ஸ்ரனி சிவானந்தன் மறைவு! - வ.ந.கி -
  9. பயணியின் பார்வையில் – அங்கம் -03 - நாணயக்குற்றிகளின் தேவை எதிர்காலத்தில் குறைந்துவிடும் ! - முருகபூபதி -
  10. கலை இலக்கிய வித்தகர் “ பாடும்மீன் ” சு. ஶ்ரீகந்தராசவின் வாழ்வும் பணிகளும் ! அக்டோபர் மாதம் அகவை 70 இல் பயணிக்கும் பல்துறை ஆளுமை ! ! - முருகபூபதி -
  11. நினைவுள் எழும் எழுத்தாளர் ஒருவரின் வாழ்வுத்தடங்கள்! - முல்லைஅமுதன் -
  12. குவிகம் குறும்புதினப் போட்டி 2024-25
  13. அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் லெட்சுமணன் முருகபூபதிக்குப் பாராட்டு விழா!
  14. அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் (Australian Tamil Literary and Arts Society – ATLAS) நிருவாகிகள் தெரிவு! - முருகபூபதி -
பக்கம் 37 / 104
  • முதல்
  • முந்தைய
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • அடுத்த
  • கடைசி