'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மார்ச் 2007 இதழ் 87 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான ணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் ணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் முரசு அஞ்சலின் latha, Inaimathi, Inaimathitsc அல்லது ஏதாவது தமிழ் tsc எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று ணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, ணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
பதிவுகள்' பற்றி...
'பதிவுகள்' பற்றித்
'தென்றல்'....

[தென்றல் வட அமெரிக்கத் தமிழர்களுக்காக C.K.வெங்கட்ராமனால் ஆறாந்திணை / Chennaionline ஸ்தாபனத்துடன் இணைந்து மாதமொருமுறை வெளியிடப்படும் இதழ். தென்றல் இதழின் இணையத் தள முகவரி: http://thendral.chennaionline.com தென்றல் இதழின் நவம்பர் 2001 இதழில் சரவணனால் பதிவுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதையே கீழே காண்கின்றீர்கள்.]

Pathivukalநேரத்தை உபயோகமான முறையில் செலவழிக்க விரும்புபவர்கள் ஒரு முறை பதிவுகள் இணையத் தளத்துக்குச் சென்று பார்வையிட்டுவிட்டு வரலாம். அந்த அளவுக்கு பதிவுகளில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. தீவிர இலக்கியம் மட்டுமல்லாமல் அத்தனைத் துறைகளிலும் தீவிரம் தெரிகிறது. அரசியல், கவிதை, சிறுகதை, நூல் விமர்சனம், நிகழ்வுகள், சினிமா, அறிவியல், தமிழ் பத்திரிகைகள், தமிழ் இதழ்கள், தமிழ் இலக்கிய பக்கங்கள், ..எனப் பலதரப்பட்ட விசயங்கள் குறித்தும் இந்த இணையத் தளத்தின் வழியாக அறிந்து கொள்ள முடியும்.கனடா வாழ் தமிழர்களை எல்லாம் ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் படியாக கனடா தமிழர்களுக்கான சிறப்புப் பக்கம் ஒன்றும் வடிவமைக்கப் பட்டுள்ளது. தமிழ்ப் புத்தகங்களை விற்பனை செய்வதற்கென்றே புத்தக அங்காடியும் நிறுவப்பட்டுள்ளது.  மேலதிக விபரங்களுக்கு sales@pathivukal.com என்னும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். பதிவுகள் வழங்குமின்னுமொரு சேவை: தமிழ் வர்த்தகக் கையேடு. இதுவோர் இலவச சேவையாகும். நிறுவனங்கள் தங்களது வர்த்தக விபரங்களைப் பதிவு செய்து அவர்களது வர்த்தகத்தை உலகளாவியரீதியில் பெருக்க உதவி செய்யும் படியாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

தீவிர இலக்கிய விவாதங்களும், பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளும், தொடர் நாவல்களும் இங்கு பிரசுரிக்கப்படுகின்றன. தற்போது எழுத்தாளர் மைக்கலின் 'ஏழாவது சொர்க்கம்' நாவல் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. அரசியல் கட்டுரைகள் அனைத்தும் காரசாரமாக, நெத்தியடி போல் எழுதப் பட்டுள்ளன. மற்ற தமிழிணையத் தளங்கள், தமிழ்ப் பத்திரிகைகள் ஆகியவற்றைப் பற்றி அறிமுகப் படுத்தும் பகுதியும் பதிவுகள் இணையத் தளத்தில் இடம் பெற்றிருக்கிறது. அறிவியல் மற்றும் கணினி தொடர்பான கட்டுரைகள் அனைத்தும் தற்போதைய நிலைகளைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. வாசகர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க வாசகர் எதிரொலி என்ற பக்கம் ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த இணையத் தளத்தை எழுத்தாளர் வ.ந.கிரிதரன் இருந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இணையத்தில் 
சிற்றிதழ்கள்....

நவீனத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சிற்றிதழ்களின் பங்கு குறிப்பிடத் தக்கது. சிற்றிதழ்கள் வெளியீட்டு, விநியோகச் சிக்கல்களைத் தாண்டி வாழ்வது கடினம் என்ற நிலையில் பெரும்பான்மையானவை கடல் மேல் குமிழிகள் தோன்றி மறைந்திருக்கின்றன. பொருளீட்டு நோக்கில் செயற்படும் இலக்கியச் செப்பிடு வித்தைகாரார்கள் இடையில் மொழி, சமூகம், இலக்கியம் ப்ற்றிய பொறுப்புணர்வுள்ள எழுத்தாளர்களையும், வாசகர்களையும் இணைக்கும் மையமாமாக இணையம் விளங்கத் தொடங்கி விட்டது. மணிக்கொடு , எழுத்து என்று தொடங்கி, கணையாழி, காலச்சுவடு, சொல் புதிது என்று தொடர்ந்த சிற்றிதழ் மரபு இப்போது இணையத்திலும் படரத் தொடங்கி உள்ளது. வட அமெரிக்காவிலிருந்து வெளிவரும் திண்ணை, பதிவுகள், என்ற வலையிதழ்களைத் தொடர்ந்து தாய்த் தமிழகத்திலும் சிற்றிதழ்கள் வலையேறத் தொடங்கியிருக்கின்றன...

-மணி.மு.மணிவண்ணன் -
'தென்றல்' பெப்ருவரி 2003 இதழில்
K.S.Sivakumaran 
on Pathivukal...

k.s.sivakumaranWhile there are more than a dozen websites in Thamil promoting literary and cultural events of the Thamilians in Thamilnadu in India, it is Giritharan's 'Pathivukal' e-zine that gives almost exclusively a comprehensive coverage of the Lankan Thamil literary scene, apart from other subjects like politics. But the accent in 'Pathivukal' is on contemporary Thamil literature including what is produced in India. 

courtesy: Daily News (Sri Lanka)
 'பதிவுகள்' பற்றித் 
தமிழ் 'கம்யூட்டர்'

[தமிழகத்திலிருந்து கணினித் தொழில் நுட்பம் சம்பந்தமாக மாதமிருமுறை வெளிவரும் பிரபல சஞ்சிகை 'தமிழ் கம்யூட்டர்'. அதன் ஆகஸ்ட் 19- செப்டம்பர் 1, 2002 இதழில் 'பதிவுகள்' பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள். அதனையே கீழே தந்திருக்கின்றோம்.]

About Pathivukalபதிவுகள் என்று ஓர் இணைய இதழ் கனடா நாட்டிலிருந்து மாதமொருமுறை வெளிவருகிறது. இதன் ஆசிரியர் திரு வ.ந.கிரிதரன். அரசியல், அறிவியல், திரைப்படம்,இலக்கியம் என பல பகுதிகளாக இவ்விதழ் அமைக்கப் பட்டுள்ளது. நடப்பு அரசியல் நிலவரங்களைப் பற்றிய கட்டுரைகள் அரசியல் பகுதியில் வெளிவருகின்றன. இக்கட்டுரைகள் நிகழ்வுகளின் பின்னணிச் செய்திகளைத் தாங்கியுள்ளன. அணு ஆற்றலிலிருந்து மின்னாற்றலைப் பெறுவது எப்படி என்பது போன்ற பயனுள்ள அறிவியல் கட்டுரைகள் எளிமையான தமிழில் தரப்பட்டுள்ளன. அதே பகுதியில் ஐன்ஸ்டீனின் அணு ஆயுத அபாயம் குறித்த சிந்தனைகளும் இடம் பெற்றுள்ளன. சிறுகதை, கவிதை, கதை என வெவ்வேறு பகுதிகளில் வழங்கப் படும் இலக்கியப் படைப்புகள் பெரும்பாலும் தமிழர் வாழ்வு நிலையை விவரிப்பதாகவே அமைந்துள்ளன. பிள்ளைகளால் புறக்கணிக்கப் படும் பெற்றோரின் அவதியை படம் பிடிக்கும் ஓரங்க நாடகம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. பதிவுகள் இதழ் கணினி உலகில் வெளிவரும் புதிய செய்திகளையும் வெளியிடுகிறது.

திரைப்படப் பகுதியில், பிப்ரவரி மாதம் வெளியான செய்தியொன்று இதுவரையில் மாற்றப் படாமல் இருக்கிறது. தமிழ் மற்றும் இலக்கிய உலகில் நடைபெறவுள்ள நிகழ்சிகளை முன்னதாக அறிவிக்கும் நிகழ்வுகள் பகுதியிலும் சில பழைய செய்திகள் காணப் படுகின்றன.

இவ்விதழின் பிற பகுதிகளாக இலவச விளம்பரப் பகுதி, வாசகர்களின் கருத்துகளை வழங்கும் வாசகர் ஒலி பகுதி, நூல்களை விறபனை செய்யும் தமிழ் புத்தகசாலை பகுதி ஆகியனவும் இடம் பெறுகின்றன. கனடாவிலிருந்து வரும் இதழ் என்பதால் கனடா தொடர்புள்ள செய்திகளும் நிறைய உள்ளன.

பதிவுகள் இதழை பார்வையிட www.pathivukal.com என்ற முகவரிக்குச் என்று பார்க்கலாம். இத்தளம் இயக்க நேர எழுத்துரு மாற்றம் (Dynamic Fonts)  என்ற பயன்பாட்டில் அமைக்கப் பட்டுள்ளதால் நம்முடைய கணினியில் ஏற்கனவே தமிழ் பாஃண்டுகள் நிறுவப் பட்டிருக்க வேண்டியதில்லை. எனினும் தமிழ் வருவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் முரசு அஞ்சல் எழுத்ததுருவை இத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பார்வையிடலாம். 

- தனா -
'பதிவுகள்' பற்றி 
விகடன்...

ஆனந்த விகடன் ஆவணி 20,2000 இதழில்...
உலகே..உலகே..உடனே வா!

காந்தி இருந்திருந்தால்... 

vikatan20082000'பதிவுகள்' இணைய இதழில் (http://www.pathivukal.com) மகாத்மா காந்தியின் பேரன் டாக்டர் சாந்தி காந்தியைப் பற்றிக் கடுமையான விமரிசனம் வந்திருக்கிறது. அவர் இருந்திருந்தால் அமெரிக்காவின் முக்கிய கட்சிகளில் ஒன்றான குடியரசுக் கட்சியின் பக்கம் தான் இருந்திருப்பார் என்று அவர் சொன்னதுதான் பிரச்னையைக் கிளப்பியிருக்கிறது. ஏன்?கட்டுரை  சொல்லும் விளக்கம்- "அமெரிக்காவில் வாழும் பெரும்பாலான கறுப்பின மக்கள் ஜனநாயகக் கட்சியினையே ஆதரிக்கின்றார்கள். குடியரசுக் கட்சியின் செயற்பாடுகள் இனத்துவேசம் பிடித்தவையெனக் கருதுகின்றார்கள். இம்முறை உப ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள 'டிக் செய்னி' தென்னாபிரிக்காவின் முன்னால் ஜனாதிபதியான நெல்சன் மண்டலா சிறையிலிருந்து விடுவிக்கப் படுவதற்கு எதிராக அமெரிக்கக் காங்கிரஸில் வாக்களித்தவர். முன்னால் வெள்ளையினச் சிறுபான்மை அரசிற்கெதெராகத் தடைகள் கொண்டு வருவதை பலமுறை எதிர்த்துக் காங்கிரஸில் வாக்களித்தவர். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்ஸினைப் பயங்கரவாத இயக்கமாகக் கருதியதால்தான் தான் அவ்விதம் வாக்களித்ததாக நாடகமாடுகின்றவர். தென்னாபிரிக்க மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவரின் கொள்ளுப் பேரன் , 'தென்னாபிரிக்க மகாத்மா'வின் விடுதலைக்கு எதிராக வாக்களித்தவரின் கட்சிக்காகப் பிரசாரம் செய்வதை என்னவென்பது?"

 தமிழ் இலக்கியம் 2004
கருத்தரங்கில் பா.ராகவன்! 

கோ. ராஜாராம் நடத்திக்கொண்டிருக்கிற 'திண்ணை' என்கிற மின்னிதழும் வ.ந. கிரிதரனின் 'பதிவுகள்' மின்னிதழும் தொடர்ந்து தீவிரமாக, கட்டுரை இலக்கியத்துக்கு ஆற்றிவரும் பங்கினைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். மிகச் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட மாலனின் 'திசைகள்' குறுகிய காலத்தில் செய்திருக்கும் சாதனைகள் பிரமிப்பூட்டுபவை.

- தமிழ் இலக்கியம் 2004 கருத்தரங்கில் வாசிக்கப் பட்ட 
எழுத்தாளர் பா.ராகவனின் ஆய்வுக் கட்டுரையில்..
 
பதிவுகள் பற்றி 'காலச்சுவடு'...
 
காலச்சுவடு ஏப்ரல் 2006வணிக நோக்கில்லாத சில இணைய இதழ்களும் உருவாகியுள்ளன.  திண்ணை, தமிழோவியம் வாராவாரமும்,  திசைகள் மாதமொருமுறையும், பதிவுகள், நிலாச்சாரல் ஆகியவை எப்பொழுதெல்லாம் வரமுடியுமோ அப்பொழுதும் வெளிவருகின்றன. இவை அரசியல், சமூகம், இலக்கியம், சினிமா எனப் பல விஷயங்களை விவாதிக்கின்றன. இந்த இதழ்களின் சிறப்பம்சம் இவற்றில் எழுதுபவர்கள் பலரும் இணையத்தில் மட்டுமே எழுதுபவர்கள்.
- 'தமிழ் இணைய இதழ்கள்: ஓர் அறிமுகம்' - பத்ரி சேஷாத்ரி ( காலச்சுவடு ஏப்ரல் 2006)
 
மதியழகன் சுப்பையாவின் வலைப்பதிவிலிருந்து...

பதிவுகள் இணைய இதழ்!மெல்ல இனி தமிழ் சாகும் என்று ஆங்காங்கே சில பஞ்சுத் தலையர்கள் விசனப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லை. தமிழ் வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் பரவிக் கொண்டிருக்கிறது. முன்னைக்கு ஒப்பிடுகையில் தற்போது தமிழ் இதழ்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. எழுதுபவர்களும் வாசிப்பவர்களும் அதிகரித்து உள்ளனர். தமிழகம் தாண்டி. இந்தியா தாண்டிருப்பவர்கள் அச்சிட்ட
இதழ்களை பெற்றுக் கொள்ள இதழ்லையோடு அஞ்சல் விலை பன்மடங்காகிப் போய் விடும் நிலையில் இணையத்தை போல் சவுகரியமான ஒர் ஊடகம் வேறு ஏதுமில்லை என்பது சுத்தமான உண்மை.வலைத் தளங்களும், வலைப் பதிவுகளும் நாளுக்கு நாள் இறுக்கமாகிப் கொண்டிருக்கிறது.அச்சில் வெளிவரும் முன்னணி இதழ்களும் இணையத்திலும் தங்கள் இதழ்களை வெளியிட்டு வருகின்றன. இணையம் புகுபவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் அறிந்த ஒரு மின்னிதழாக "பதிவுகள்' தளத்தை குறிப்பிடலாம். மாத இதழென்ற அறிவிப்போடு அவ்வாறே புதுப்பிக்கப்பட்டு வரும் இந்த இணைய இதழின் ஆசிரியர் வ.ந. கிரிதரன் ஆவார். அரசியல் கவிதை, சிறுதை, கட்டுரை நூல் விமர்சனம், நிகழ்வுகள், அறிவியல், சினிமா, நாவல், வாதம், ஆகியவைகளோடு உங்கள் நலம், தமிழ் வர்த்தக கையேடு, இலவசவரிவிளம்பரம், நூல் அங்காடி மற்றும் வாசகர் எதிரொலி என பல அடுக்குகளை கொண்டு கனத்துக் கிடக்கிறது இந்தத் தளம். உலகத்தின் அனைத்து மூலையிலும் உள்ளழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை பதியும் ஒரு தளம் என்றால் மிகையாகாது. அரசியல் கட்டுரைகளும் ஆய்வுக் கட்டுரைகளும் வாசிக்க வேண்டிய சிறப்புப் பகுதி சிறப்பான ஆங்கிலக் கட்டுரைகளையும் ஏற்றுகிறார்கள். இளம் எழுத்தாளர்களை ஊக்கப் படுத்தும் வகையில் அவர்களின் படைப்புகளை தக்க ஒவியங்கள்/புகைப்படங்கள் இணைப்புடன் வெளியிடுவது இவர்களின் ஈடுபாட்டுக்கு ஒரு சான்று. விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள் இங்கு புதிய பரிணாமம் பெற்றிருக்கிறது. இன்று தமிழ் அச்சேடுகளில் எங்கும் காணக் கிடைக்காத அறிவியல் கட்டுரைகளை பதிவுகள் தளத்தில் காணலாம். பதிவுகள் தளத்தின் படைப்புகளை யாரும் எடுத்தாளலாம் என்று பெருந்தன்மையோடு அனுமதித்திருக்கும் நிலையில் அச்சு இதழ்களும் பிற இதழ்களும் பயம் படுத்திக் கொள்ளலாம். தங்கள் வர்த்தகம் குறித்து இலவசமாக விளம்பரம் செய்து பயன் அடையுங்கள் என்று வாசல் திறந்து வாய்ப்பளித்து உள்ளது இந்த இதழ். தமிழர் விழாக்களை முன்னிட்டு சிறப்பிதழ்களும் புதுப்பிக்கப் படுகின்றன. உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள், இலக்கிய மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்து புகைப்படங்களுடன் செய்தி வெளியிடப் படுகிறது. நல்ல திரைப்படங்கள் குறித்து சிறப்பான விமர்சனங்களும் நூல் மதிப்புரைகளும் பாராட்டத் தக்கவைகள். வீண் அரட்டைகளும் விவாதங்களும் இந்த தளத்தில் இல்லை. ஆக்கப் பூர்வமான படைப்புகளை எதிர்பார்க்கும் எவரும் இந்த தளத்தை திறக்கலாம் தங்கள் படைப்புகள் காலத்தால் அழியாமலும் வெகுமக்களால் படிக்கவும் பாராட்டவும் பட வேண்டும் என்று விரும்புவர்கள் உடனடியாக இந்த இணைய இதழை காணுங்கள். பதிவுகள் தளம் காலத்தின் அத்தனை நிகழ்வுகளையும் மிகச் சரியாக பதிவு செய்து வருகிறது. பாராட்டலாம் பார்த்து ருசிக்கலாம்.

http://madhiyalagan.blogspot.com/ வலைப்பதிவிலிருந்து (மதியழகன் சுப்பையா)....
 
பதிவுகள் பற்றி 'கீற்று.காம்'....

மெல்ல இனி தமிழ் சாகும் என்று ஆங்காங்கே சில பஞ்சுத் தலையர்கள் விசனப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லை. தமிழ் வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் பரவிக் கொண்டிருக்கிறது. முன்னைக்கு ஒப்பிடுகையில் தற்போது தமிழ் இதழ்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. எழுதுபவர்களும் வாசிப்பவர்களும் அதிகரித்து உள்ளனர். தமிழகம் தாண்டி. இந்தியா தாண்டிருப்பவர்கள் அச்சிட்ட இதழ்களை பெற்றுக் கொள்ள இதழ்களைவிட அஞ்சல் விலை பன்மடங்காகிப் போய் விடும் நிலையில் இணையத்தை போல் சவுகரியமான ஒர் ஊடகம் வேறு ஏதுமில்லை என்பது சுத்தமான உண்மை.வலைத் தளங்களும், வலைப் பதிவுகளும் நாளுக்கு நாள் றுக்கமாகிப் கொண்டிருக்கிறது. அச்சில் வெளிவரும் முன்னணி இதழ்களும் இணையத்திலும் தங்கள் இதழ்களை வெளியிட்டு வருகின்றன. இணையம் புகுபவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் அறிந்த ஒரு மின்னிதழாக "பதிவுகள்' தளத்தை குறிப்பிடலாம். மாத இதழென்ற அறிவிப்போடு அவ்வாறே புதுப்பிக்கப்பட்டு வரும் இந்த இணைய இதழின் ஆசிரியர் வ.ந. கிரிதரன் ஆவார். அரசியல் கவிதை, சிறுதை, கட்டுரை நூல் விமர்சனம், நிகழ்வுகள், அறிவியல், சினிமா, நாவல், வாதம், ஆகியவைகளோடு உங்கள் நலம், தமிழ் வர்த்தக கையேடு, இலவச வரிவிளம்பரம், நூல் அங்காடி மற்றும் வாசகர் எதிரொலி என பல அடுக்குகளை கொண்டு கனத்துக் கிடக்கிறது இந்தத் தளம்.

உலகத்தின் அனைத்து மூலையிலும் உள்ளழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை பதியும் ஒரு தளம் என்றால் மிகையாகாது. அரசியல் கட்டுரைகளும் ஆய்வுக் கட்டுரைகளும் வாசிக்க வேண்டிய சிறப்புப் பகுதி சிறப்பான ஆங்கிலக் கட்டுரைகளையும் ஏற்றுகிறார்கள். இளம் எழுத்தாளர்களை ஊக்கப் படுத்தும் வகையில் அவர்களின் படைப்புகளை தக்க ஒவியங்கள்/புகைப்படங்கள் இணைப்புடன் வெளியிடுவது இவர்களின் ஈடுபாட்டுக்கு ஒரு சான்று. விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள் இங்கு புதிய பரிணாமம் பெற்றிருக்கிறது. இன்று தமிழ் அச்சேடுகளில் எங்கும் காணக் கிடைக்காத அறிவியல் கட்டுரைகளை பதிவுகள் தளத்தில் காணலாம். பதிவுகள் தளத்தின் படைப்புகளை யாரும் எடுத்தாளலாம் என்று பெருந்தன்மையோடு அனுமதித்திருக்கும் நிலையில் அச்சு இதழ்களும் பிற இதழ்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தங்கள் வர்த்தகம் குறித்து இலவசமாக விளம்பரம் செய்து பயன் அடையுங்கள் என்று வாசல் திறந்து வாய்ப்பளித்து உள்ளது இந்த இதழ். தமிழர் விழாக்களை முன்னிட்டு சிறப்பிதழ்களும் புதுப்பிக்கப்படுகின்றன. உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள், இலக்கிய மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்து புகைப்படங்களுடன் செய்தி வெளியிடப்படுகிறது. நல்ல திரைப்படங்கள் குறித்து சிறப்பான விமர்சனங்களும் நூல் மதிப்புரைகளும் பாராட்டத் தக்கவைகள். வீண் அரட்டைகளும் விவாதங்களும் இந்த தளத்தில் இல்லை. ஆக்கப் பூர்வமான படைப்புகளை எதிர்பார்க்கும் எவரும் இந்த தளத்தை திறக்கலாம் தங்கள் படைப்புகள் காலத்தால் அழியாமலும் வெகுமக்களால் படிக்கவும் பாராட்டவும் பட வேண்டும் என்று விரும்புவர்கள் உடனடியாக இந்த இணைய இதழை காணுங்கள். பதிவுகள் தளம் காலத்தின் அத்தனை நிகழ்வுகளையும் மிகச் சரியாக பதிவு செய்து வருகிறது. பாராட்டலாம் பார்த்து ருசிக்கலாம். இணைய முகவரி www.pathivugal.com

[கீற்று தளத்திலிருந்து: http://www.keetru.com/ani/index.html]
கணித்தமிழும் இணைய இதழ்களும்....
 
- வ.ந..கி -
 
'பதிவுகள்' பற்றி தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு பயிலும் பலர் இணைய இதழ்கள் பற்றி இணையத்தில் உலாவுமொருவர்!ஆய்வுகளுக்காக ஆராய்ந்திருக்கின்றார்கள். எழுத்தாளர் அண்ணா கண்ணன் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் ஆய்வுக்காக தான் எழுதிய ஆய்வில் பதிவுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாய்வு நூல் அமுதசுரபி வெளியீடாக வெளிவந்துள்ளது. மேலும் பலர் தமது பல்கலைக்கழகப் பட்டபடிப்பில் 'தமிழ் இணைய இதழ்கள்' ஆய்வுக்காக 'பதிவுகள்' பற்றியும் ஆராய்ந்துள்ளார்கள். சு. துரைக்குமரன் பி.லிட்., எம்.ஏ., ஆசிரியப் பயிற்றுநர், வட்டார வள மையம், புதுக்கோட்டை அவர்களும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள இந்தக் களத்தை எடுத்துக்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது பற்றி அவர் திண்ணை இணைய இதழில் கட்டுரையொன்றினை அண்மையில் எழுதியுமிருந்தார்.  எழுத்தாளர் சோழநாடனும் (ப.திருநாவுக்கரசு) இணையத்தில் தமிழ் பற்றிய ஆய்வு நூலொன்றினை வெளியிட்டுள்ளார். அதில் 'பதிவுகள்' இணைய இதழ் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பலர் அவ்வப்போது இவ்வாய்வு சம்பந்தமாக எம்முடன் தொடர்பு கொள்வதுமுண்டு. தமிழ் இலக்கிய உலகில் கணித்தமிழ் இலக்கியமும் ஒரு பிரிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதையே மேற்படி ஆய்வுகளும், தமிழ் இணைய இதழ்கள் மீதான கவனமும் காட்டுகின்றன. இன்று கணித்தமிழ் இலக்கிய உலகில் இணைய இதழ்கள், வலைப்பூக்கள், விவாதக்குழுக்களெல்லாம் முக்கிய பங்கினையாற்றி வருகின்றன. குறுகிய காலத்தில் கணித்தமிழ் அடைந்துள்ள வளர்ச்சி நம்பிக்கையினையும், பிரமிப்பினையும் ஊட்டுகின்றது.
 
பலர் எம்மிடம் அவ்வப்போது இணைய இதழ் ஆய்வுக்காகத் தொடர்பு கொள்வதுண்டு. அவர்கள் பொதுவாகக் கேட்கும் கேள்விகளையும் அவற்றுக்கான எனது பதில்களைப் 'பதிவுகள்' பற்றிய ஆய்வுகளுக்குப் பயன்படுத்த விரும்புவோருக்காகவும், பதிவுகள் இணைய இதழ் பற்றிய ஆரம்பம் / நோக்கம் போன்ற பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ள விரும்பும் வாசகர்களுக்காகவும் இத்துடன் கீழே பிரதி செய்துள்ளேன்.

1. இணைய இதழ் தொடங்கப்பட்ட நாள், ஆண்டு, இடம்? இதழுக்கான எழுத்துரு? 2. இதழ் வெளியாகும் கால இடைவெளி( நாளிதழ், வார இதழ், மாத இதழ்..) மாத இதழ்.

பதிவுகள் இணைய இதழ்: 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'.பதிவுகள் இணைய இதழானது மாசி 2000 இல் கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் வ.ந.கிரிதரனால் மாத இதழாகத் தொடங்கப் பட்டது. ஆரம்ப காலத்தில் முரசு அஞ்சலின் இணைமதி எழுத்துருவே பாவிக்கப்பட்டது. பின்னர் அது Tscu_Inaimathi ( முரசு அஞ்சலின்) ஆக மாற்றப்பட்டது. தற்போது பதிவுகள் யூனிகோட்டில் (லதா எழுத்துருவில்) வெளிவருகின்றது.

2. இதழ் தொடங்கப்பட்டதன் நோக்கம்?

பல்வேறு நோக்கங்கள். எழுத்தாளனான நான் பல்வேறு படைப்பாளிகள் மற்றும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுடன் என் சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்வது அதிலொன்று. பதிவுகளின் முக்கியமான நோக்கங்களிலொன்று 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்ளல் (
'Sharing knwoledge with every one'). தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் வாசகர்கள், படைப்பாளிகள் மற்றும் அறிஞர்கள் அனைவரும் தம் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளுமிடமாகப் பதிவுகள் விளங்குகின்றது. இணையத்தின் ஆரோக்கியமான பயன்களிலொன்று மிக இலகுவாகப் பலரை எல்லைகளைக் கடந்து தொடர்பு கொள்ள வைத்தலென்பது.. இணைய இதழொன்றினால் மிக இலகுவாக, விரைவாகப் பல படைப்பாளிகள், ஆர்வலர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். அதற்கு அனைவரையும் கணித்தமிழின் நன்மைகளை உணர வைக்க வேண்டும். இத்தகைய இணைய இதழ்களால், அவற்றை வெற்றிகரமாக நடாத்திக் காட்டுவதன் மூலம், அவற்றில் பங்களிக்க வைப்பதன் மூலம் உணர வைக்க முடியும். இதற்கு முதல்படியாக பதிவுகள் ஆரம்பத்தில் பாவிக்கும் எழுத்துருக்களில் ஆக்கங்களை, எண்ணங்களை அனுப்பி வைக்கும்படி கோரினோம். அவ்விதம் வரும் படைப்புகளையே பிரசுரிக்கத் தொடங்கினோம். பல பெரிய எழுத்தாளர்கள் ஆரம்பத்தில் தமிழில் எழுதச் சிரமப்பட்டபோது அவற்றை அவர்களுக்கு விளங்கப்படுத்தினோம். அதன்பின் அவர்கள் பதிவுகளுக்குத் தாங்களாகவே உரிய எழுத்தில் ஆக்கங்களை அனுப்பத் தொடங்கினார்கள். இதன் மூலம் படைப்பாளிகளை கணித்தமிழின் பயனை நேரடியாகவே உணரவைக்கக் கூடியதாகவிருந்தது. மேலும் பதிவுகள் இதழினை ஆரம் காலத்திலிருந்தே படைப்பாளிகளின், வாசகர்களின் பங்களிப்புடன் வெளிக்கொணர்ந்திட முடிந்தது. பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்பும் படைப்பாளிகள் தங்களது ஆக்கங்களைத் தாங்களே தட்டச்சு செய்து அனுப்புவதென்பது பதிவுகள் சஞ்சிகையின் வெற்றிக்கு முக்கியமானதொரு தேவையாகவிருந்தது. ஆரம்பகாலப் பதிவுகள் இதழ் மிகவும் மோசமான வடிவமைப்புடன் ஆர்வத்தின் காரணமாக வெளிவந்ததை ஆரம்ப ஆக்கங்களைப் பார்க்கும்போது புரிந்து கொள்வீர்கள். இருந்தும் பதிவுகள் ஆரம்பத்திலேயே பலரையும் ஈர்க்கத் தொடங்கி விட்டது. அடுத்துவரும் ஆண்டுகளில் பதிவுகளில் விவாதக் களத்தினையும் ஆரம்பித்தோம். அச்சமயம் பதிவுகளின் விவாதக் களத்தில் ஜெயமோகனுட்படப் பல படைப்பாளிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள். பதிவுகளுக்கும் ஆக்கங்களை அனுப்பினார்கள்.

கணித்தமிழை படைப்பாளிகள், வாசகர்கள் அனைவரும் பயன்படுத்தும் படி செய்தல். அறிவினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளல், படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்குமிடையிலொரு பாலமாக விளங்குதல் ஆகிவற்றை  அடிப்படை நோக்கங்களில் சில எனக். குறிப்பிடலாம்.

3. இதழில் வெளியாகும் படைப்பிலக்கியம் (கவிதை, சிறுகதை, நாவல்...) பற்றிய விவரம்...

இதழில் கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு, நாவல், சினிமா, நூல் அறிமுகம், விவாதம், இணையத் தள அறிமுகம், நிகழ்வுகள், அரசியல் என அனைத்துப் பிரிவுகளிலும் ஆக்கங்களைக் காணலாம்.

பதிவுகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளை இலவசமாகப் பிரசுரித்து உதவுகின்றது. நூல்களை, இணையத் தளங்களை அறிமுகம் செய்து வைக்கின்றது. இலவசமாக வரி விளம்பரங்களைப் பிரசுரித்து உதவுகின்றது.

மேலும் பதிவுகளின் விவாதத் தளம் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒருகாலத்தில் மிக ஆர்வமுடன் பல பிரபல எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்களென அனைவரும் கலந்து கொள்ளுமிடமாக விளங்கிய இத்தளத்தில் பல்வேறு விடயங்களைப் பற்றியும் விவாதித்துக் கொண்டார்கள்.

4. படைப்பிலக்கியம் முதன்முதலாக வெளியிடப்பட்ட நாள், ஆண்டு? யாருடய படைப்பு?

ஆரம்பத்தில் மிகச் சாதாரணமாக வெளியிடப்பட்ட பதிவுகளின் முதலாவது இதழ் மாசி 2000இல் வெளிவந்தது. மிக மிகச் சாதாரணமாக வெளிவந்த பதிவுகளின் ஆரம்ப இதழில் இந்திரனின் அகமும் புறமும் நூலிருந்து ஓவியம் பற்றி வெளிவந்த கருத்துகளில் சிலவற்றை பதிவுகளின் ஆரம்ப இதழான மாசி 2000 இதழில் பிரசுரித்திருந்தோம். ஆரம்ப இதழ்களில் மகாகவி, சோலைக்கிளி போன்றவர்களின் கவிதைகள் சில, இலங்கை, தமிழக அரசியல் பற்றிய கட்டுரைகள், தமிழ் விமர்சனம் பற்றிய சு.ரா, கா.சிவத்தம்பி, மற்றும் கனேடியத்தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரைகள் சில வெளிவந்தன. அன்று வெளிவந்த பதிவுகள் மிக மிக ஆரம்பகால முயற்சி. உண்மையில் பதிவுகள் ஆரம்பத்தில் மிக மிகச் சாதாரணமாக ஆர்வத்தால் தொடங்கப்பட்ட இதழ். ஆவணி பதிவுகளில் காந்தி இருந்திருந்தால் என வெளிவந்திருந்த பகுதியினை அப்பொழுதே ஆனந்த விகடன் (ஆவணி 20, 2000) தனது 'உலகே.. உலகே... உடனே வா... ' பகுதியில் மீள்பிரசுரம் செய்திருந்தது. மிக மிகச் சாதாரணமாக, ஆரம்ப வடிவமைப்புடன் வெளிவந்த பதிவுகள் அப்பொழுதே பலரின் கவனத்தைக் கவர்ந்திருந்தது இப்பொழுதும் மகிழ்ச்சியினைத் தருமொரு விடயம்.

5. இதழில் சிறப்புப் பகுதிகள் எவை?

சிறுகதை, கட்டுரை (இலக்கியம், அரசியல், சினிமா, அறிவியல் ...), கவிதை, நாவல், குறுநாவல், நிகழ்வுகள், விவாதங்கள், நூல் விமரிசனம், இணையத்தள அறிமுகம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

6. வாசகர்களின் எண்ணிக்கை பற்றி.. (வாசகர் வசிக்கும் நாடுகள் பற்றிய விவரம் இருந்தால் கொடுக்கவும்)

பதிவுகளை ஆயிரக்கணக்கில் வட அமெரிக்கா, ஐரோப்பா (சுவிஸ், பிரிட்டன், நோர்வே, பாரிஸ், ஜேர்மனி, டென்மார்க்....), ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகள், கொரியா, ஜப்பான், மலேசியா, இந்தியா, இலங்கையுட்பட உலகின் பல பாகங்களிலிருந்தும் பலர் வாசித்து வருவதுடன் பங்களித்தும் வருகின்றார்கள். இந்தியாவில் தமிழகம், மும்பாய், புது டெல்லி என பல இடங்களிலும் பதிவுகளுக்கு வாசகர்களுண்டு. இன்று பதிவுகளை உலகின் பல பாகங்களிலிருந்தும் தமிழ் மக்கள் படித்து வருகின்றார்கள்.

7. தங்கள் இதழில் எழுதும் புதுமுக, பிரபல எழுத்தாளர்கள் பற்றிய விவரம். ..

பதிவுகளில் ஜெயமோகன், வெங்கட்சாமிநாதன், ஜெயபாரதன், யமுனா ராஜேந்திரன், சுப்ரபாரதிமணியன், திலகபாமா, கே.எஸ்.சிவகுமாரன், லதா ராமகிருஷ்ணன், நளாயினி தாமரைச் செல்வன், ரஞ்சி(சுவிஸ்), பா.ராகவன், நேசகுமார், புதியமாதவி, பிச்சினிக்காடு இளங்கோ, சந்திரவதனா செல்வகுமாரன், இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், பிச்சினிக்காடு இளங்கோ, அ.முத்துலிங்கம், க.நவம், செழியன், டாக்டர் சுமதி ரூபன், கவிஞர் ஜெயபாலன், மைக்கல், ரமணீதரன், சரீஷ், டிசெதமிழன், ஆபிதீன், தாஜ், ராஜநாயகம், ரோசாவசந், சூரியா, இரா.முருகன், பெங்களூரிலிருந்து சங்கர், வேதசகாயகுமார், நாகரத்தினம் கிருஷ்ணா, தேவகாந்தன், த.சிவபாலு, கே.எஸ்.சிவகுமாரன், மு.திருநாவுக்கரசு, அருணன், ரதன், என்.கே.மகாலிங்கம், சுசீந்திரன், ஸ்ரீரங்கன், வைகைச்செல்வி, நவஜோதி ஜோகரட்னம், வேதா இலங்காதிலகம், சக்தி சக்திதாசன், நடேசன், டானியல் ஜீவா, அன்புதாசன்.....எனப் பலர், பிரபல படைப்பாளிகளிலிருந்து புதிய படைப்பாளிகள்வரை, எழுதியுள்ளார்கள். எழுதியும் வருகின்றார்கள். எல்லோரையும் கூறுவது சாத்தியமில்லை. பதிவுகளின் கடந்தவைகளைப் படிக்கும்போது பதிவுகளின் வளர்ச்சியினைப் புரிந்து கொள்வீர்கள்.

8. தங்கள் இதழ் பணம் கட்டி வாசிக்கும் இதழா? ஆம் எனில் அது பற்றிய விவரம்..

இல்லை.

9. தங்கள் இதழ் ஒரு மொழி இதழா? பன்மொழி இதழா? பன்மொழி இதழ் எனில், வெளிவரும் மொழிகள் பற்றிய விவரம்?

பதிவுகள் தமிழில் வெளிவந்தாலும் அவ்வப்போது ஆங்கிலத்திலும் வெளிவரும் ஆக்கங்களையும் தவிர்க்க முடியாத சூழலில் பிரசுரித்து வருகின்றோம். உதாரணமாக ஈழத்து எழுத்தாளரும், விமர்சகருமான கே.எஸ்.சிவகுமாரனின் பக்கத்தினைக் குறிப்பிடலாம்.

101. இதழ் செய்திகள் நூலாக்கம் ( அச்சுவடிவம் ) பெறுகிறதா? ஆம் எனில், அதைப்பற்றிய விவரம்.  முதன்ம ஊடகம் அச்சா? இணையமா?

தற்போது இணையத்தில் மட்டுமே வெளிவரும் இதழிது. விரைவில் பதிவுகள் மலரொன்றினை வெளிவிடும் எண்ணமுண்டு. அதன் மூலம் பதிவுகள் பற்றியதொரு ஆவணமாக அது விளங்கும்.

11. படைப்பிலக்கிய வரிசையில் வாசகர்கள் அதிகம் விரும்பிப் படிக்கும் பகுதி ....

இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், இலக்கிய நிகழ்வுகள் பற்றிய செய்திகள், சினிமா, நாவல், அறிவியற் கட்டுரைகளென அனைத்தையும் வாசகர்கள் ஆர்வத்துடன் படித்து வருகின்றார்கள்.

12. படைப்பாளிகளுக்குப் பணம் வழங்கப்படுகிறதா?

தற்போது படைப்பாளிகளின் பயன்கருதா ஒத்துழைப்புடன் வெளிவரும் இதழிது. எதிர்காலத்தில் வருமானம்பெறும் சாத்தியமேற்பட்டால் நிச்சயம் சன்மானம் வழங்குவோம். இதன்பொருட்டு பதிவுகள் தமிழர் மத்தியில் ஸ்தாபனத்துடன் இணைந்து 2005இல் சிறுகதைப் போட்டியின்றினை நடாத்தி வென்ற மூவருக்குப் பணப் பரிசுகள் வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இது பற்றிய விபரங்களைப் பின்வரும் முகவரியில் கண்டு கொள்ளலாம்: http://www.geotamil.com/pathivukal/results_contest_final.html#results
தற்போதுள்ள நிலையில் உலகெங்கும் பரந்து வாழும் புதிய, புகழ்பெற்ற படைப்பாளிகளின் படைப்புகளை, எண்ணங்களையெல்லாம் அனைவருக்கும் பயன்படும் வண்ணம் எடுத்துச் செல்வதைத்தான் எம்மால் செய்ய முடிகிறது.

13. இணய இதழ்களின் எதிர்காலம் பற்றிய தங்களின் கருத்து... இணய இதழ்களின் வரவால் பிற ஊடகங்களுக்கான பாதிப்பு என்ன? இணய இதழ்களின் வரவால், தமிழ் மொழி, தமிழ் இலக்கியத்திற்கான பயன், பயனின்மை குறித்த தங்கள் கருத்து..

என்னைப் பொறுத்தவரையில் கணித்தமிழ் தமிழ் இலக்கிய உலகின் இன்னுமொரு பரிணாம விளைவு. பொதுவாகக்த் தொழில்நுட்ப வளர்ச்சி ஊடகங்களின் வளர்ச்சியினையும் கூடவே உருவாக்கி வருவது தெரிந்ததே. ஓலைச் சுவடிகள், தாள்களென வளர்ந்து இன்று கணித்தமிழ் வரை வளர்ச்சியடைந்துள்ளது. இணையத்தைப் பொறுத்தவரையில் பல பயன்கள். மிக இலகுவாக உலகின் பல பாகங்களிலும் வாழும் ஆயிரக்கணக்கான வாசகர்களிடம் சஞ்சிகையினை மிக இலகுவாக எடுத்துச் செல்லும் சக்தி வாய்ந்தது. தகவல்களின் சுரங்கமாக விளங்கும் இணையத்தில் உலாவரும் இணையச் சஞ்சிகைகளில் உடனுக்குடன் இலக்கிய விவாதங்களை, கருத்துப் பரிமாறல்களை நடாத்த முடிகிறது. இது அச்சு ஊடகங்களில் சாத்தியமற்றது. அவை வெளிவரும் வரையில் காத்திருக்க வேண்டும். மேலும் எல்லோருடைய கருத்துகளையும் பிரசுரிப்பதும் சாத்தியமற்றது. இணையத்தில் பலரின் கருத்துகளை, விவாதங்களை உடனடியாகவே பிரசுரிக்க முடியும். மேலும் தனிமனிதரொருவர் கூட தகவல் தொழில் நுட்ப அறிவும், இலக்கிய அறிவும், அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புமிருந்தால் ஒரு இணையச் சஞ்சிகையினை இலகுவாக வலையேற்றி விடலாம். இதுபோல் பல பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால்தான் சிற்றிதழ்கள் வரை, வெகுசன ஊடகங்கள் வரை இணையத்தில் காலூன்றுவதில் அக்கறையெடுகின்றன.

இணைய இதழ்களின் வரவு நிச்சயமாகப் பிற ஊடகங்களைப் பாதிக்கத்தான் செய்யும். உடனடியாகவல்ல. ஒருவரால் இணையத்தில் ஒரு சஞ்சிகையின் விடயங்கள முழுவதையும் படிக்க முடியுமென்றால் அவர் எதற்காக அச்சில் வெளிவரும் அவ்வூடகத்தை நாட வேண்டும். ஆனல் அந்த நிலை வருவதற்கு இன்னும் நீண்ட காலமுண்டு. இணையத் தொடர்பு சாதாரண மக்களையும் மிகவும் குறைந்த செலவில் அடையும் வாய்ப்பு முதலில் ஏற்படவேண்டும். கணினி அனைத்து மக்களாலும் இலகுவாக அடையுமொரு பொருளாக இருக்கும் சாத்தியம் வேண்டும். அததகையதொரு சூழலில், பிராந்திய மொழிகளில் மக்களின் அனைத்துப் பிரிவினரும் கணினிகளைப் பாவிக்க முடியும் சூழல் உருவாகும். அததகையதொரு சமயம் ஏற்படும்வரை அச்சு ஊடகங்களின் தேவையும் இருந்து கொண்டுதானிருக்கும்.

தமிழ் இலக்கிய உலகில் கணித்தமிழ் முக்கியமான பரிணாம வளர்ச்சியென நான் கருதுகின்றேன். பதிவுகள் எனக்கு உணர்த்திய பாடமிது. எவ்வளவு இலகுவாக என்னால் பல படைப்பாளிகளுடன் எவ்வளவு இலகுவாகத் தொடர்புகளை ஏற்படுத்த முடிந்தது. அச்சில் ஒரு இதழைக் கொண்டு வந்தால் இவ்வளவு அதிகமான படைப்பாளிகளிடமிருந்து நான் தான் சேகரித்து வெளியிட வேண்டும். ஆனால் இணையம் அதனை எவ்வளவு இலகுவாக்கி விட்டது. புகழ்பெற்ற படைப்பாளிகள் முதல் புதிய படைப்பாளிகள்வரை எல்லோருமே பதிவுகளைத் தாங்களாகவே இனங்கண்டு தொடர்பு கொண்டார்கள். சாதாரண அச்சு ஊடகங்களுக்கில்லாத பல பயன்கள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதுபோல் இருப்பதால் இணைய இதழ்களின் வரவு தவிர்க்க முடியாதது மட்டுமல்ல நிலைத்து நிற்கவும் போகின்றது. தமிழ் இலக்கிய உலகில் கணித்தமிழின் நல்லதொரு வரவு. இந்த வகையில் பதிவுகள், திண்ணை, மரத்தடி, நிலாச்சாரல், தமிழோவியம்,ஆறாந்திணை, அம்பலம், இந்தாம் இதழ்கள் போன்ற ஆரம்பகால இணைய இதழ்களின் சேவை வரலாற்றில் நன்றியுடன் நினைவு கூரப்படுமென நான் நிச்சயம் எதிர்பார்க்கின்றேன்.

14. தங்களைப் பற்றிய சிறு குறிப்பு...

பின்வரும் இணைய இணைப்புகளில் என்னைப் பற்றி அறிந்து கொள்ளலாம். என் படைப்புகள பலவற்றை வாசித்துக் கொள்ளலாம்.

http://www.geotamil.com/pathivukal/aboutvng.html
http://www.vngiritharan.blogspot.com/
http://www.geotamil.com/pathivukal/vng_shortstories.html
http://www.geotamil.com/pathivukal/vng_articles.html
http://www.geotamil.com/pathivukal/poems_vng.html
http://www.geotamil.com/vng/
http://www.geotamil.com/ctamils/nallur_b.html

© காப்புரிமை 2000-2004 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்