இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூன் 2008 இதழ் 102  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!

வாழ்த்துகிறோம்!
மொழிபெயர்ப்பாளர் திருமதி. லக்சுமி ஹோம்ஸ்ரோம் 2007ற்கான ‘இயல் விருது’ பெறுகின்றார்.

[திருமதி. லக்சுமி ஹோம்ஸ்ரோமுக்குக் கடந்த ஆண்டுக்கான 'இயல்விருது' கிடைத்துள்ளது. இதுபற்றிய விருதுவழங்கும் வைபவம் கடந்த மே 18, 2008 அன்று 'தொராண்டோ' பல்கலைக் கழகத்தின் 'சீலி' மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விருது பற்றி ஏற்கனவே பதிவுகளில் வெளிவந்த செய்தியினை மீள்பிரசுரம் செய்கின்றோம்]

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நவீன தமிழ்ப் புனைகதைகள், கவிதைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து வெளியிட்டு, தமிழின் சிறப்பை உலகறியச் செய்து வருபவர் திருமதி. லக்சுமி ஹோம்ஸ்ரோம்இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நவீன தமிழ்ப் புனைகதைகள், கவிதைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து வெளியிட்டு, தமிழின் சிறப்பை உலகறியச் செய்து வருபவர் திருமதி. லக்சுமி ஹோம்ஸ்ரோம்;. மௌனி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ந. முத்துசாமி, அம்பை, பாமா, இமையம் போன்றவர்களின் பதினைந்து படைப்புக்களை மொழிபெயர்த்து, உலக அரங்கில் நவீன தமிழின் வளத்தை அறியச் செய்து வருபவர். தமிழக, ஈழத்துக் கவிஞர்கள் பலரின் தமிழ்க் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பொன்றும் அவரது உழைப்பின் பயனாக பெங்குவின் மூலம் விரைவில் வெளிவர உள்ளது. இதுபோலவே, சுந்தர ராமசாமியின் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் நாவலையும் லக்சுமி ஹோம்ஸ்ரோம் ஆங்கில மொழியாக்கம் செய்துள்ளார். அதுவும் விரைவில் பிரசுரமாகவுள்ளது.

இங்கிலாந்து, கனடா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மொழி பெயர்ப்புப் பட்டறைகளை நடாத்தித் தமிழ் ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்வதற்குப் புதியவர்களை ஊக்குவிப்பதில் பெரும் பங்கு ஆற்றி வருபவர். தமிழ்க் கவிதைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும், லண்டனிலும் பிற இடங்களிலும், தமிழரல்லாதவர்கள் மத்தியில் வாசித்துக் காட்டி, தமிழ்க் கவிதைக்குச் சிறப்புச் சேர்ப்பவர்.

அம்பையின் 'காட்டில் ஒரு மான்'கனடாவில் வெளியான ஈழத்துத் தமிழ்க் கவிதை, புனைகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பான Lutesong and Lamentஇல் இவர் மொழிபெயர்த்த கவிதைகள் இடம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பழந்தமிழ் இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காவியங்களையும் வசனநடையில் ஆங்கிலத்தில் ஆக்கி வழங்கியிருப்பமை இவரது மொழிபெயர்ப்புப் பணியின் மற்றுமொரு பரிமாணமாகும். நவீன தமிழ் இலக்கியங்கள் பற்றியும் பல கட்டுரைகளை ஆங்கில இதழ்களில் எழுதியுள்ளார்.  பாமாவின் 'கருக்கு', அம்பையின் 'காட்டில் ஒரு மான்' ஆகியவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக Hutch Crossword Book Awardஇனை (இது இந்தியாவின் 'Booker Prize' எனக் கருதப்படுவது) முறையே 2000, 2006ஆம் ஆண்டுகளில் பெற்றவர்.

தமிழுக்கு அவர் ஆற்றிய, ஆற்றிவரும் வாழ்நாள் பங்களிப்பிற்காக, கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டம், அவருக்கு 2007ஆம் ஆண்டுக்கான இயல் விருதையும் 1,500 டொலர் பரிசையும் வழங்கிக் கௌரவிப்பதில் பெருமை அடைகிறது. அவருக்கு எம் வாழ்த்துக்கள்.
2001ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. இதுவரை ‘இயல் விருது’ பெற்ற வாழ்நாள் சாதனையளர்கள்: சுந்தர ராமசாமி, கே. கணேஷ், வெங்கட் சாமிநாதன், இ. பத்மநாப ஐயர், ஜோர்ஜ் ஹார்ட், ஏ. சீ. தாஸிசியஸ்.

விருது வழங்கும் விழா வழமைபோல் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் 2008ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறும். இம்முறை விருதுக்கான தெரிவுக் குழுவில் பங்காற்றியவர்கள்: பேராசிரியர் எம். ஏ. நுஃமான், பேராசிரியர் ஆ. இரா. வெங்கடாசலபதி, கவிஞரும், எழுத்தாளருமான மு. பொன்னம்பலம், 'பதிவுகள்'  இணைய இதழ் ஆசிரியரான எழுத்தாளர் வ. ந. கிரிதரன் ஆகியோர். நெறிப்படுத்தியவர் 'காலம்' ஆசிரியரான எழுத்தாளர் செல்வம் அருளானந்தம்.

அறிவிப்பவர்: செல்வம் அருளானந்தம்
'காலம்' ஆசிரியர்
kalam@tamilbook.com

கடந்தவை1
கடந்தவை2


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner