கவிதை: லதா ராமகிருஷ்ணன் (ரிஷி) கவிதைகள்
1. அவரவர் – அடுத்தவர்
(* சமர்ப்பணம்: கவிதைப் பிதாமகர்களுக்கும் ‘க்ரிட்டிஸிஸ’ப் பீடாதிபதிகளுக்கும்)
‘ஆவி பறக்கக் காப்பியருந்தினேன்’ என்று
அதிநவீனமா யொரு வரி எழுதியவர்
‘அருமையின் அரிச்சுவடியும் அகராதியும் இஃதே’ என்று
ஆட்டோகிராஃப் இட்டு முடித்தபின்
தன் வலியை உலகக்கண்ணீராகப் புலம்பினால்
கவிதையாகிடுமாவென
அடுத்த கவியை இடித்துக்காட்டி
‘நிலம் விட்டு நிலம் சென்றாலும்
நகம்வெட்டித்தானேயாகவேண்டும்’ என்று
தன் கவிதையின் இன்னுமொரு வரியை எழுதிவிட்டு.
பின்குறிப்பாய்,
‘கவிதைவரலாற்றில் க்வாண்ட்டம் பாய்ச்சல் இதுவென்றால்
ஆய்வுக்கப்பாலான சரியோ சரியது கண்டிப்பாய்’
எனச் சிரித்தவாறு முன்மொழிந்து வழிமொழிந்து
"வந்துபோன என் வசந்தம் தந்ததொரு தனி சுகந்தம் என்று
சொத்தை ‘க்ளீஷே’க்களைக் கவிதையாக்கி
தத்துப்பித்தென்று உளறி வதைக்கிறாரெ"ன
சக கவியைக் கிழிகிழித்து
சத்தான திறனாய்வைப் பகிர்ந்த கையோடு
"முத்தான முத்தல்லவோ, என் முதுகுவலி
உலகின் குத்தமல்லவோ" என
கத்துங்கடலாய்க் கண்கலங்கிப்
பித்தாய் பிறைசூடிப் பிரபஞ்சக் கவிதையாக்கி
மொத்தமாய் மேம்படுத்திக்கொண்டிருக்கிறார்
வெத்துக்காகிதத்தை!
(*சமீபத்தில் வெளியாகியுள்ள ‘தனிமொழியின் உரையாடல்’ – கவிதைத் தொகுப்பிலிருந்து)
2. சதுர நிலவின் மும்முனைகள்
தன் சதுர நிலவை
உள்ளங்கைக்குள் பொதிந்துவைத்திருந்தது குழந்தை.
வட்டமாயில்லாதது எப்படிச் சந்திரனாகும் என்று
கெக்கலித்துக் குற்றஞ்சாட்டி
கத்தித்தீர்த்த திறனாய்வாளரைப் பார்த்து
கன்னங்குழியச் சிரித்து
தன் ஒரு நிலவைப் பல வடிவங்களில்
பிய்த்துப்போட்டதில்
பெருகிய ஒளிவெள்ளத்தைக்
கைகுவித்து மொண்டு குடித்து மகிழ்ந்த குழந்தை
நாவறள நின்றிருந்தவரை அன்பொழுகப் பார்த்து
அவர் கையிலிருந்த தரவரிசைப்பட்டியல் தாளைத்
தன் சின்னக்கைகளால் விளையாட்டாய்ப் பறித்து
அதில் சிறிது ஒளிநீரை அள்ளி ஊற்றி
அவரிடம் குடிக்கச் சொல்லித் தந்த பின்
தன்போக்கில் துள்ளி முன்னேறிச் சென்றது.


இது ஒரு எளிய முயற்சி. அடுத்தடுத்த தொகுதிகள் வெளியிடும்படியாகத் தொடரவேண்டும் என்று மனதார விரும்பும் ஒரு முயற்சி. இன்னும் சில கவிஞர்களையும் சேர்த்து இப்பொழுது 130 கவிஞர்களின் ஆளுக்கொரு கவிதை என்ற அளவில் ஏறத்தாழ 300 பக்கங்களில் (மூல கவிதைகளையும் உள்ளடக்கி) தயாராகிவிட்டது. மூத்த கவிஞர்கள், இப்பொழுதுதான் எழுத ஆரம்பித்திருக்கும் கவிஞர்கள், பெயர்பெற்ற கவிஞர்கள், அதிகம் தெரியாத கவிஞர்கள், நிறைய தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் கவிஞர்கள், தொகுப்பே இதுவரை வெளியிட்டிராத கவிஞர்கள் என்றெல்லாம் பாகுபாடில்லாமல் என்னுடைய முகநூல் நட்பினரில் எனக்கு அவர்கள் டைம்-லைனில் வாசிக்கக் கிடைத்து நான் மொழிபெயர்க்க விரும்பி அதைச் செய்வதற்கான நேரமும் கிடைத்ததில் நான் மொழிபெயர்த்த கவிதைகளின் தொகுப்பு மட்டுமே இது. இன்னும் 400 கவிதைகளுக்கு மேல் மொழிபெயர்க்கும் பெருவிருப்போடு எடுத்துவைத்திருக்கிறேன். சீக்கிரம் செய்யவேண்டும். ஏற்கனவே மொழிபெயர்த்துவைத்திருப்பதில் இதேயளவு இன்னொரு தொகுதி யையும் கொண்டுவரவேண்டும்.

நூல்: பாரதியார் - பன்முகங்கள், பல்கோணங்கள் - டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் கட்டுரைகள்




For more than 30 years now, since the 80s I have been associated with the field of Neo-Thamizh Poetry and I can say with conviction that Poet Brammarajan is a pioneer in this realm, in more than one way. Form-wise and content-wise he has experimented a lot in this area. Anyone who objectively writes the history of the History of Neo-Thamizh Poetry cannot but mention Poet Brammarajan as a name to reckon with in this realm. Though I cannot claim to have understood the full texts and sub-texts of all his poems and the myriad lanes and by-lanes of the inner world through which the Poet's mind and imagination choose to undertake a lone, wholesome voyage, the Style and Content of his poems have given me lot of new openings and poignant moments. Latha Ramakrishnan.
- ஆரவாரமில்லாமல், எனில், அழுத்தமாகத் தமிழ் இலக்கியவெளியில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் கவிஞர் சொர்ணபாரதி (இயற்பெயர்: முகவை முனியாண்டி) கல்வெட்டு பேசுகிறது என்ற சிற்றிதழைப் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் தொடர்ச்சியாக வெளியிட்டுவருவதன் மூலம் எழுதும் ஆர்வமுள்ள பலருக்குக் களம் அமைத்துத் தருபவர். நுட்பமான கவிஞர். கல்வெட்டு பேசுகிறது இதழ்களில் இடம்பெற்றுள்ள தலையங்கங்கள் இவருடைய சீரிய சமூகப் பிரக்ஞைக்கும், அரசியல் பிரக்ஞைக்கும் சான்று பகர்பவை. 





பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









