அகில விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

[இக்கட்டுரை ஏற்கனவே பதிவுகள் இதழில் பிரசுரமானது. தற்போது ஒருங்குறியில் பதிவுசெய்வதன் அவசியம் கருதி மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது. இது போல் ஜெயபாரதன் அவர்களின் ஏனைய கட்டுரைகளும் மீள்பிரசுரம் செய்யப்படும். இது போல் ஏனையவர்களின் ஆக்கங்களும் படிப்படியாகப் பதிவுகளில் மீள்பிரசுரமாகும் -- பதிவுகள்] விஞ்ஞானத் தத்துவங்கள் புதிதாய் எழுந்தன!இருபதாம் நூற்றாண்டின் நுழைவாயிலில் பூர்வீகப் பௌதிக விஞ்ஞானக் கருத்துக் கள் பல கீழே தள்ளப் பட்டுப், புரட்சிகரமான புது விஞ்ஞானக் கோட்பாடுகள் தோன்றின. அணுவின் அமைப்பு, அண்ட வெளி காலக் கோட்பாடு, பொருள் சக்தி உடன்பாடு போன்ற பழைய தத்துவங்கள் பல தகர்க்கப் பட்டு, அவை புதுப்பிக்கப் பட்டன. 19 ஆம் நூற்றாண்டு விஞ்ஞான நிபுணர்கள் மைக்கேல் ·பாரடே, ஜேம்ஸ் மாக்ஸ்வெல் ஆகியோர் படைத்த பூர்வீக நியதி, மின்காந்தவியல் [Electromagnetism] ஒன்றைத் தவிர மற்றவை யாவும் மாற்றப் பட்டன. அப்போது உதித்ததுதான் ஐன்ஸ்டைன் படைத்த "ஒப்பியல் நியதி" [Theory of Relativity]. அகில வெளி, காலம், பிண்டம், சக்தி [Space, Time, Matter, Energy] பற்றிய எளிய மெய்ப்பாடுகளை அடிப்படையாக் கொண்டு எழுதப் பட்டது, ஒப்பியல் நியதி! புது பௌதிகத் தத்துவமான அவரது நியதியைப் பலர் முதலில் ஒப்புக் கொள்ள வில்லை! பலருக்குப் புரிய வில்லை! பலர் எதிர்த்து வாதாடினர்! மானிட சிந்தனை யூகித்த மாபெரும் எழிற் படைப்பு, இவ்வரிய "ஒப்பியல் நியதி". பல நூற்றாண்டுகளாய் பரந்த விஞ்ஞான மாளிகை எழுப்பிய, உலகின் உன்னத மேதைகளான, ஆர்க்கிமெடிஸ் [Archimedes], காபர்னிகஸ் [Copernicus], காலிலியோ [Galileo], கெப்ளர் [Kepler], நியூட்டன் [Newton], ·பாரடே [Faraday], மாக்ஸ்வெல் [Maxwell] ஆகியோரின் தோள்கள் மீது நின்று கொண்டுதான், ஐன்ஸ்டைன் தனது ஒப்பற்ற அகில வேதத்தை ஆக்கம் செய்தார்.

பில் கேட்ஸை அறிந்த அளவுக்கு ஸ்டீவ் ஜாப்ஸை உலகம் அறிந்ததில்லை. பில் கேட்ஸ் என்றவுடன் மைக்ரோசாப்ட் சாம்ராஜ்யமும், அவரது உலக மகா கோடீஸ்வரர் பட்டமும் நினைவுக்கு வரும். ஆனால், கம்ப்யூட்டர் உலகை பொறுத்தவரை ஜாப்ஸ் கோடீஸ்வர கேட்சை விட செல்வாக்கும் மதிப்பும் மிக்கவர். தொழில்நுட்பத்தில், அதிலும் குறிப்பாக வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர்களுக்கு அவர் தான் ஆதர்ச நாயகன்! ஆப்பிளின் இணை நிறுவனர் என்று குறிப்பிடப்படும் ஜாப்ஸின் தொழில்நுட்ப புரிதலும் வடிவமைப்பில் அவருக்கு இருந்த ஆற்றலும் அசாத்தியமானவை. மேக்கின்டாஷில் துவங்கி, ஐபாட், ஐபோன், ஐபேட் என அவர் பெயர் சொல்லும் தயாரிப்புகள் அநேகம். ஒவொன்றுமே கம்ப்யூட்டர் உலகில் தொழில்நுட்ப மைல்கல்லாக விளங்குபவை. அந்தத் துறைகளையே மாற்றியமைத்தவை.

உயிர்வாழ்வதற்கு ஏற்ற சூழலைக்கொண்ட ஒரே ஒரு கிரகமாக தற்போதுவரை ஏகோபித்த உரிமையை கொண்டாடிவரும் நாம் வாழும் பூமியானது தன்னகத்தே பல மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரினங்களைக் கொண்டு காத்துவருகிறது. நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரு கலத்தைக்கொண்ட அங்கியாக தோற்றம் பெற்ற உயிரின ஆட்சியானது இன்று பல சிக்கலான கட்டமைப்புகளையுடைய தாவரங்கள், விலங்குகளாக பரிணாம வளர்ச்சியடைந்து அவற்றின் உச்சமாக ஆற்றிவு படைத்த மனிதனை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு யுகத்திலும் ஏதாவது ஒரு உயிரினம் கூர்ப்பில் தான் பெற்ற சாதகமான இயல்புகளை கொண்டு ஏனைய இனங்களை விட தன்னை மேன்நிலைப்படுத்தி பூமியின் ஆட்சியான உயிரினமாக இருப்பதும் பின்னர் அவ்வினம் பூமியில் ஏற்பட்ட பாரிய எரிகற்களின் மோதுகை, எரிமலைக்குமுறல்கள், நிலநடுக்கங்கள், வெள்ளப்பெருக்குகள் போன்ற இயற்கை அனர்த்தங்களாலும் அவற்றை தொடர்ந்து ஏற்பட்ட காலநிலை மாற்றங்களாலும் முற்றாக அழிவடைவதும் அவ்வெற்றிடத்தை இன்னுமொரு ஆட்சியான உயிரினம் இட்டு நிரப்புவதுமாக இருந்துவந்துள்ளது. அந்தவகையில் இரண்டு லட்சம் வருடங்களுக்கு முன் தோற்றம் பெற்றதாக நம்பப்படும் மனித இனமானது (Homo sapiens) இன்றுவரை தனது ஆட்சியை பூமியில் நிலைநிறுத்தியுள்ளது.
In 1600, Giordano Bruno, an Italian priest and mathematician, was burned at the stake in Campo dei Fiori in Rome after the Inquisition found him guilty of heresy, a charge that included his belief that there were infinitely many worlds like our own. Four centuries later, at a time when a popular television show is called The Big Bang Theory, science has infiltrated popular culture to such a degree that a scientist can forcefully argue that, indeed, infinitely many universes may exist and that we live in but one of the many distinct parts of what is now known as the "multiverse." Brian Greene is no stranger to controversial science. His first book, the Pulitzer Prize-nominated The Elegant Universe (1999), was an eloquent exposition of what was then still an obscure theory in physics: string theory. Greene's book helped make string theory a household phrase. In The Hidden Reality, while admitting that string theory has in the meantime come under attack from many physicists as a theory that may be extremely hard to prove experimentally, Greene forges forward to explain an equally controversial theory – or rather, set of theories – about the plurality of universes. Having done so well in his exposition of string theory , Greene apparently feels safe from being figuratively burned at the stake. But this is not to say that the theories he writes about are easy to believe, feel natural in any way, or have any significant experimental evidence to support them.
சாதாரண மனிதரிலிருந்து விஞ்ஞானிகள் வரை மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்துப் புதிரென்று ஒன்றிருந்தால் அது இந்தக் கருந்துளைகள் (Black Holes) தான். உண்மையில் இவற்றைத் தமிழில் கருந்துளைகள் என மொழிபெயர்ப்பதை விடக் 'கரும் ஈர்ப்பு மையங்கள் ' என மொழி பெயர்ப்பதே மிகவும் பொருத்தமாகவிருக்குமெனக் கருதுகின்றேன். ஏனெனில் இவை மிகவும் ஈர்ப்புச் சக்தி மிக்கவை. ஒளிக்கதிர்களையே வெளியேற முடியாத அளவிற்கு ஈர்ப்புச் சக்தி மிக்கவையான இவற்றை கரும் ஈர்ப்பு மையங்களென அழைப்பதே சரியென்றெனக்குப் படுவதால் இவை இனி கரும் ஈர்ப்பு மையங்கள் என்றே அழைக்கப் படும்.
"மனிதன் சூழ்நிலையின் கைதி" என்றொரு கூற்று நிலவுகின்றது. கூர்ந்து கவனிப்போமாயின் மனிதரின் வாழ்வின் பெரும்பாலான படிகளை நிர்ணயிப்பது அவர் வாழும் சமுதாயத்தில் நிலவிடும் புறச்சூழல்தான். இச் சூழலின் தாக்கம் அல்லது பாதிப்பு ஒவ்வொரு மனிதரின் மீதும் ஒரே விதமான தாக்கத்தினை வெளிப்படுத்துவதில்லை. மாறாக அவரது உடனடிச் சூழலான குடும்பச் சூழல், அவரது அகச்சூழல், என்பவற்றிற்கேற்பவே இப்பாதிப்பும் அவரிடத்தில் ஏற்படுத்தும் விளைவுகளும் இருந்து விடுகின்றன. வர்க்கங்களால், ஏற்றத்தாழ்வுகளால் பிளவுண்டு கிடக்கும் புறச்சூழல் மனிதரில் ஏற்படுத்தும் பாதிப்புகள் மிகவும் வலியவை. பெரும்பாலான தெளிவுள்ள மனிதர்களே இச்சூழலின் தாக்குதல்களிற்கு ஈடுகொடுக்க முடியாமல் நீரோட்டத்தில் அள்ளுப்பட்டுச் செல்லும் கட்டையைப் போல் அள்ளுண்டு போகும்போது சாதாரணமனிதர்களின் நிலை என்ன? இத்தகைய பாதிப்புகளிலிருந்து தப்பிப் பிழைத்த ஒருசிலரே சூழலை மீறிய சரித்திர புருஷர்களாக, மானிட வழிகாட்டிகளாக உருவாகுகின்றார்கள்.
இரவு நேரங்களில் அண்ணாந்து விரிந்து கிடக்கும் ஆகாயத்தைப் பாருங்கள். கோடிக் கணக்கில் பரந்து கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை, கிரகங்களை உபகிரகங்களைக் கவனியுங்கள். அதே சமயம் இன்னும் ஒன்றையும் மனதிலே ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு செக்கனும் பிரமாண்டமானதொரு வேகத்தில் விரிந்து கொண்டிருக்கும் பிரபஞ்சமொன்றின் சிறியதொரு கோணத்தில் விரைந்து கொண்டிருக்கும் சிறியதொரு கோளொன்றில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதே அது. நெஞ்சினைப் பிரமிக்க வைத்து விடுகின்றதல்லவா! அப்படியானால் நம்மால் ஏனிந்த வேகத்தை உணர முடியவில்லை? மூடியதொரு புகையிரதத்தினுள் இருக்குமொருவருக்கு எவ்விதம் புகையிரதம் வேகமாகச் செல்வது தெரியாதோ அது போன்றதொரு நிலையில் தான் எம்முடைய நிலையும். பூமியைச் சுற்றிப் படர்ந்திருக்கும் வாயு மண்டலம்தான் எம்மை மூடிய புகையிரத்தைனைப் போல் இக்கோளினை வைத்திருக்கின்றது. அதனால் தான் எம்மால் எமது வேகத்தைக் கூட உணர முடியாமலிருக்கின்றது. இன்னும் ஒரு காரணம் - எம்மைச் சுற்றியுள்ள சுடர்களுக்கும், கிரகங்களுக்குமிடையிலான தொலைவு மிக மிக அதிகமானது. இத் தொலைவும் எமது வேகத்தினை உணரமுடியாதிருப்பதற்கு இன்னுமொரு காரணம். புகைவண்டியினுள் விரையும் ஒருவருக்கு அருகில் தெரியும் காட்சிகள் வேகமாகச் செல்வது போலும், மிகத் தொலைவிலுள்ள காட்சிகள் ஆறுதலாக அசைவது போலவும் தெரிவதற்கு அடிப்படைக் காரணம் தொலைவு தான்.
நாம் வாழும் இந்த உலகம், வான், மதி, சுடர், இவற்றையெல்லாம் உள்ளடக்கிய நமது பிரபஞ்சம் இவை யாவுமே எப்பொழுதும் எந்நெஞ்சில் பெரும் பிரமிப்பினையும், பல்வேறு வகைப்பட்ட வினாக்களையும் ஏற்படுத்தி விடுவது வழக்கம். முப்பரிமாண உலகினுள் கைதிகளாக வளைய வந்துகொண்டிருக்கும் நாம், இம்மண்ணில் நாமே உருவாக்கிய அமைப்புகள் ஏற்படுத்தும் தாக்கங்களுக்குள் சிக்கி, அவற்றுக்கு ஈடுகொடுத்துத் தப்பிப் பிழைப்பதிலேயே எம் வாழ்நாளைக் கழித்து முடிந்து விடுகின்றோம். இத்தகையதொரு நிலையில் இப்பிரபஞ்சத்தின் தோற்றம், அமைப்பு, முடிவு பற்றிய வினாக்கள், அவை பற்றிய நினைவுகள், எண்ணங்கள் எல்லாமே எப்பொழுதுமே என் நெஞ்சில் ஒருவித தண்மையான உணர்வினை ஏற்படுத்தி விடுவது வழக்கம். சகல விதமான மன அழுத்தங்களிலிருந்தும் என்னை விடுபட இவை பெரிதும் உதவுகின்றன. இதற்காகவே நகரவாழ்வின், நாகரிக வாழ்வின் இறுக்கத்தினிலிருந்தும் விடுபடுவதற்காக நேரம் கிடைக்கும் போதிலெல்லாம் இரவினில் தொலைவினில் சிரிக்கும் நட்சத்திரக் கன்னியரின் கண்சிமிட்டலில், வெண்மதிப் பெண்ணின் பேரழகில் என்னை மறந்து விடுவேன்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









