மனுஸ்மிருதி ஒரு மேலோட்டப் பார்வை எழுப்பும் கேள்வி! - சேசாத்திரி ஶ்ரீதரன் -
- எழுத்தாளர் சேசாத்திரி ஶ்ரீதரன் அவர்கள் மனுஸ்மிருதி பற்றிய தனது கருத்துகளை இக்கட்டுரையில் எழுதியுள்ளார். இது பற்றிய உங்களின் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள். - பதிவுகள்.காம் -

மனுநூல் ஒரு நாட்டின் அல்லது நிருவாகத்தின் சட்டம் போன்றது அல்ல. அது தனிநபர் ஒழுக்கத்திற்கான இயமம், நியமம் (dos and dont's) போன்ற ஒழுக்க விதியை உரைப்பதே ஆகும். இது 12 அத்தியாயங்களில் 2,685 பாக்களாக உள்ளது. பிரம்மச்சரியம், கிருஹஸ்தாசிரமம், வானப்ரஸ்தம், சந்நியாசம் ஆகிய வாழ்வின் நால்வகை கூறுகளை எப்படி கடக்க வேண்டும் என்று விவரிக்கிறது. நால் வருணத்தார்க்கும் தனித்தனியாக உள்ள நடக்கை விதிகள் பற்றி விவரிக்கிறது.
நூலின் காலம்: எந்த ஒரு நூலுக்கும் காலக் கணிப்பு செய்வது மூக்கணாங் கயிறு போடுவது போன்றதாகும். அதை முன்பு மத நோக்கில் தப்பும் தவறுமாக செய்ததால் இன்று இந்நூல் குறித்து பல சச்சரவுகளுக்கு வழிவகுத்துள்ளது. இனி மனுநூலின் காலம் குறித்து ஆய்வோம். வேதங்கள் இருக்கு, யசுர், அதர்வணம் என மூன்றே ஆகும். இம்மூன்று வேதங்களின் கலவையாகவே சாம வேதம் நான்காவதாக பிற்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டது. இதை செய்தவர் சைமினி மகரிஷி. சாம வேதம் குறித்து இந்நூல் குறிப்பிடுவதால் இந்நூல் சைமினிக்கு பிற்பட்ட காலத்தில் தான் எழுந்திருக்க வேண்டும். புராணம், ஆரண்யம், உபநிடதம், வேதாந்தம்- மீமாம்சம் பற்றி இந்நூல் ஆங்காங்கே கூறுவதால் பாகவதம் இயற்றிய வாதராயண வியாசர், அவரது மாணாக்கர் சைமினி ஆகியோர் காலத்திற்கு கி.பி. 550-650 பிற்பட்டது இந்நூல் எனத் தெரிகிறது. அதன்படி இதை கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 8 ஆம் நூற்றாண்டு முற்பகுதி நூல் எனக் கொள்வதில் தவறில்லை. வியாசரின் புராண தெய்வங்களுக்கு நான்கு கைகள் உண்டு ஆனால் குப்தர் கால தெய்வச் சிலைகளில் இரண்டு கைகள் மட்டுமே உண்டு என்பதால் வியாசரின் காலம் கி. பி. 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி எனக் கொள்ளப்படுகிறது. புராணங்களை எழுதிய வாதராயண வியாசர் அதில் திருப்தி கொள்ளாமல் தான் ஆரண்யங்களை இயற்றினார் என்பது பொதுக் கருத்து. அவரது மாணாக்கர்கள் தான் உபநிடதங்களை உருவாக்கினர். இந்த புராணம், ஆரண்யம், உபநிடதம், வேதாந்தம் பற்றிய குறிப்பு இந்நூலின் காலக் கணிப்பிற்கு பெரிதும் உதவுகின்றன.



இந்திய தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் 55% முதல் 60% வரை தமிழ் மொழியில் உள்ளன. இந்திய தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட 100,000 கல்வெட்டுகளில் சுமார் 60,000 கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் இருந்ததையும் , கல்வெட்டும் பட்டியலில் தமிழ் மொழியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் தான் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. சில தமிழ் கல்வெட்டுகள் இந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும், இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல பர்மாவில் காணப்படும் அயல் மொழிகளில் எழுதப்பட்ட கல்வெட்டுகளின் பட்டியலில் தமிழும் ஒன்று. 

வ.ந கிரிதரன் கனடாவில் வாழ்ந்து வருகிறார். புலம்பெயர்ந்த ஈழப்படைப்பாளிகளில் ஒருவர். இலக்கியத்துறையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். பதிவுகள் இணைய இதழின் ஊடாக உலகில் வாழும் தமிழ்ப்படைப்பாளர்களின் படைப்புக்களை குவிமையப்படுத்தி வருகிறார். அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ பற்றி இக்கட்டுரை நோக்குகின்றது.
அமரர் பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்கள் இறுதிவரை, தன் உடல் நிலை இடம் கொடுக்கும் வரை எழுதிக்கொண்டிருந்தார். இங்கு அவர் நினைவாக அவர் என் முகநூல் பதிவுகளுக்கு எழுதிய எதிர்வினைகள், முகநூல் உரையாடலில் பகிர்ந்த கருத்துகள், அனுப்பிய மின்னஞ்சல்கள் ஆகியவற்றில் முக்கியமானவற்றைப் பகிர்ந்துகொள்கின்றேன். இவை ஒருவகையில் ஆவணங்களாகவும் இருக்குமென்பதால் இவ்விதம் பகிர்ந்துகொள்வது நல்லதேயென்றும் தோன்றுகின்றது.
தை பிறக்கப் போகுதடி தங்கமே தங்கம்




அவுஸ்திரேலியாவின் நியுவ் சவுத் வேல்ஸ் மாநிலத்தின் கிராவின் புறநகரின் ’புனித அந்தோனியார்’ ஆரம்பப்பள்ளிக்குள் நுழைந்த பிரியா, தன் மகள் கீர்த்தியின் முதலாம் வகுப்பை அடைந்ததும், “வாடா குஞ்சு, வீட்டைப் போகலாம்,” எனக் கீர்த்தியை அன்போடு தூக்கிக் கொஞ்சிய பிரியாவை உற்று நோக்கி புதிதாக பார்ப்பது போல் பார்த்தாள் கீர்த்தி. திரும்பி நன்சிக்கு பக்கத்தில் நின்ற அவளது தாயாரையும் பார்த்தாள். ”இன்றைக்கு என்ன செய்தீங்கள்? கைவேலை செய்தீங்களா?” எனக் கேட்டபடி நன்சியைத் தூக்கிக் கொண்டுபோன அவளது தாயையும். பிரியாவையும், மாறி மாறிப் பார்த்தாள். அவளது சின்ன மூளைக்கு எதுவுமே புரியாது குழம்பியது. அந்தச் சின்ன மூளைக்கு எதோ புரிகிற மாதிரி இருந்தது ஆனால் புரியாத மாதிரியும் இருந்தது.
கேள்வி: இதுவரை எத்தனை பாடல்களுக்கு இசையமைத்துள்ளீர்கள்?
83 கலவரத்தைத் தொடர்ந்து முதல் முதலாக அந்நிய நாடொன்றில், அமெரிக்காவின் உலகப்புகழ் பெற்ற நியூயோர்க் மாநகரில் அகதியாக அலைந்து கொண்டிருந்தபோது பட்டி தொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருந்த பாடகர்கள் நால்வர். அதனால் அப்பாடகர்கள் பற்றிய நினைவுகள் எழும்போதெல்லாம் எனக்கு அமெரிக்க மண்ணில் அகதியாக அலைந்து திரிந்த அந்த நாட்கள் நினைவுக்கு வந்து விடும். லயனல் ரிச்சி, சிந்தி லோப்பர், பில்லி ஜோயெல், மைக்கல் ஜாக்சன் இவர்கள்தாம் அப்பாடகர்கள். மைக்கல் ஜாக்சனின் 'திரில்ல'ரும் வெளியாகியிருந்த காலம். கறுப்பினப் பதின்ம வயதுச் சிறுவர்கள் ஆங்காங்கே நடைபாதைகளில் கசட் பிளேயரில் மைக்கல் ஜான்சனின் பாடல்களை ஒலிக்கவிட்டு உடம்மை வளைத்து, முறுக்கி, வெட்டி 'பிரேக் டான்ஸ்' ஆடுவார்கள்.

வட இலங்கையில் சப்த தீவுகளில் ஒன்றான நெடுந்தீவை பூர்வீகமாகக் கொண்டிருக்கும் எழுத்தாளர், அவ்வூரின் மற்றும் ஒரு பெயரையே தனது புனைபெயராக்கியும்கொண்டார். அவர்தான் 'ஆவூரான்' சந்திரன் நெடுந்தீவு பல விடயங்களில் புகழ்பெற்றது. உலகத் தமிழராய்ச்சிக்கு வித்திட்ட அருட்திரு. தணிநாயகம் அடிகளார் பிறந்த மண். அத்துடன் பல கலை, இலக்கியவாதிகளும் கல்விமான்களும் சமூகப்பணியாளர்களும் தோன்றிய பிரதேசம். இங்கு 1963 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி சண்முகம் – பொன்னம்மா தம்பதியருக்கு ஏழாவது பிள்ளையாக பிறந்திருக்கும் சந்திரன், இலக்கியப் பிரவேசம் செய்தபோது, ஊரின்மீதிருந்த அளவு கடந்த நேசத்தினால், உள்ளுருக்கு மட்டுமன்றி வெளியூருக்கெல்லாம் பசுவின் பாலை வழங்கிய தீவின் மற்றும் ஒரு பெயரையே புனைபெயராக்கிக் கொண்டவர். அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்த பின்னரும், நெடுந்தீவையும் அங்கு வாழும் மக்களையும் மறந்துவிடாமல், தன்னால் முடிந்த உதவிகளையும் அம்மக்களுக்கு – குறிப்பாக மாணவர் சமூகத்திற்கு வழங்கி வரும் ஒரு தன்னார்வத் தொண்டர். சமூகத்திற்காக பேசுவதும் சமூகத்தை பேசவைப்பதுமே ஒரு படைப்பாளியின் பிரதான நோக்கமாகவிருக்கும். அந்த நோக்கத்துடனேயே எழுத்துலகில் பிரவேசித்த காலம் முதல் அயர்ச்சியின்றி இயங்கி வருகின்றார். அதனால் எமது நெஞ்சத்துக்கும் நெருக்கமானார்.

" முதல் நாளைப் போல அதிகம் ஓடாமல் கிட்ட இருக்கிற சிறிய டவுண் பக்கம் போவோம் " என்றாள் பூமலர் . அவர்கள் சென்ற இடம் வூத்வில் . விவசாயப் பண்ணைகளிற்கு மையமாக இப்படி ஒரு சந்தைகடை ( ஃபாம் மார்க்கட்) , மற்றும் வேறு சில கடைகளும் சேர்ந்த தொகுதிகள் அங்காங்கே இருக்கின்றன . " நான் இந்த கடையிலே வந்து நல்ல காய்கறிகளை வாங்கிறேன் " என்றாள் பூமலர் . அந்த மார்க்கட் கடையில் வீட்டிற்கு வேண்டிய சகலப் பொருட்களும் நிறைந்த பெரிய கடையாக இருக்கிறது . எல்லாம் மனித தயாரிப்புடைய பழமைச் சாயல் . அவற்றை ரசனையோடு பார்த்தார்கள் லொப்ஸ்டர் இடுக்கிகள் தொங்கின்றன . நண்டு போன்ற (ஓடு) கோதுகளை உடைத்து சாப்பிடுவதற்கு உபயோகிக்கப்படுகிறது . இடுக்கிகளையும் வைக்கிறார்கள் . இங்கே , உணவகங்களில் லொப்ஸ்டர் பேகர் சன்விச்கள் கூட விற்கப் படுவதாக கேள்வி . 
கதை சிறப்பாகப் பின்னப்பட்டுள்ளது. கதையில் தனது தாய், தகப்பனுடன் 'டொராண்டோ'வில் வசிக்கும் சிந்து என்னும் சிறுமி யாழ்ப்பாணம் சென்று தைப்பொங்கலைக் கொண்டாடுகின்றார். இந்தக் கதை குழந்தைகளுக்காக எழுதப்பட்டுள்ள கதை. உலகின் எங்கும் வாழும் தமிழ்க்குழந்தைகளும் பொங்கல் நிகழ்வைப் பற்றிய காரணங்களை, விளக்கங்களை அறிந்துகொள்ளும் வகையில் , அவர்களுக்குப் புரியும் எளிமை கலந்த சரளமான இனிய நடையில் எழுதப்பட்டுள்ள கதை. 



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









