எழுத்தாளர் நந்தினி சேவியர் நினைவாக.... - வ.ந.கி -
எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்களின் பிறந்தநாள் மே 25. அதனையொட்டி நான் எழுதிய குறிப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளின் தொகுப்பிது. முகநூல் எனக்கு நண்பராக்கிய மூத்த கலை,இலக்கிய ஆளுமைகளில் ஒருவர். இருந்தவரையில் விடாமல் இயங்கிக்கொண்டிருந்தார். அவரது விடா முயற்சியும், கொண்ட கொள்கை தவறாத உறுதிமிகு மனநிலையும் என்னை மிகவும் கவர்ந்தவை.
தனது எழுத்துகளைச் சமூகச் சீர்கேடுகளைச் சுட்டெரிக்கும் போர் வாளாகப் பாவித்தவர் அவர். எப்பொழுதுமே தான் நம்பும் கோட்பாடுகள் விடயத்தில் , குறிப்பாக மார்க்சியக் கருத்துகள் விடயத்தில், சமரசம் செய்து கொள்ளாதவர். சமூக, அரசியுல் & பொருளியல் விடுதலைக்கான மார்க்சியக் கருத்துகள் ரீதியில் அமைந்த போராட்டம், அதனுடன் இணைந்த தீண்டாமைக்கெதிரான போராட்டம் என்பவற்றில் தெளிவான, உறுதியான கருத்துகளைக் கொண்டிருந்தார்.
இன்னுமொரு விடயமும் என்னை மிகவும் கவர்ந்தது. தான் வாசித்த, தனக்குப்பிடித்த இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் பற்றிய விபரங்களைச் சுருக்கக் குறிப்புகள் மூலம் ஆவணப்படுத்தியவர் அவர்.சிலர் அக்குறிப்புகளை உதாசீனப்படுத்தினர். அவை விமர்சனங்களல்ல என்றும் கிண்டல் செய்தனர். ஆனால் அவர்கள் அவற்றின் நோக்கத்தை, முக்கியத்துவத்தைக் காணத்தவறி யானை பார்த்த குருடர்கள் என்பேன். அவற்றின் மூலம் அவர் எழுத்தாளர்கள் பலரை ஆவணப்படுத்தியுள்ளார். அதுதான் அவரது நோக்கமும் கூட. அதனைக் காணத்தவறியவர்கள்தாம் அவற்றில் குற்றம் குறை கண்டார்கள். ஆனால் அதற்காக அவர் அதனை நிறுத்தவில்லை. தொடர்ந்தும் அறிமுகப் படுத்திக்கொண்டேயிருந்தார். இலங்கைத் தமிழ் இலக்கிய ஆய்வுகளுக்கு உதவும் ஆவணக்குறிப்புகளாக அவை எப்போதுமிருக்கும்.
அவரது முகநூற் குறிப்புகளும் முக்கியமானவை. அவற்றினூடு அவரது சினிமா, இலக்கியம், அரசியல் பற்றிய எண்ண ஊட்டங்களை அறிய முடியும். அவை நிச்சயம் ஆவணப்படுத்த வேண்டிய பதிவுகள்.




வரலாற்றுப் புகழ் வாய்ந்த எத்தனையோ கடிதங்கள் உலகில் பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப் படுகின்றன. இலங்கையின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்திய காலிமுகத் திடல் 'அறகலய' எனப்படும் அறப்போராட்டம் நடைபெற்ற தீர்க்கமான காலகட்டம் ஒன்றில், வணக்கத்துக்குரிய அருட்தந்தை செபமாலை அன்புராசா அடிகளாரால் எழுதப்பட்ட முப்பது கடிதங்களும் இவ்வாறே முக்கியத்துவம் பெறவேண்டியவை. 2022 ம் ஆண்டு ஏப்ரல் 14 ம் திகதி தொடக்கம் 2022 .07. 16ம் திகதிவரை அவரது முகநூலில் 'அன்புள்ள ஆரியசிங்க...' எனும் தலைப்புடன் தமிழில் எழுதப்பட்ட இக் கடிதங்கள் இன்று சிங்கள மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்புகளுடன் நூலுருவாகி உள்ளமை மகிழ்ச்சிகுரியது. 
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ( 1970 களில் ), மல்லிகை இதழில் தெணியானின் எழுத்துக்களை படித்துக்கொண்டிருந்தேன். 1973 ஆம் ஆண்டு அவரது 'விடிவை நோக்கி' நாவல், வீரகேசரி பிரசுரமாக வெளிவந்தது. அச்சமயம் நான் வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபர். எமது இலக்கிய வட்டத்தின் சார்பில் இந்த நாவலுக்கு எங்கள் ஊரில் ஒரு அறிமுகவிழாவை ஏற்பாடு செய்வதற்கு , மல்லிகை ஜீவா மூலம் தெணியானுக்கு தகவல் அனுப்பியிருந்தேன். தெணியான் தன்னுடன் இரண்டு நண்பர்களை அழைத்து வந்திருந்தார். அவர்கள்: கிளார்க்கர் அய்யா என்ற இராஜேந்திரம், சதானந்தன் மாஸ்டர். எங்கு சென்றாலும் இவர்கள் மூவரும் ஒன்றாகத்தான் பயணிப்பார்கள் என்ற செய்தியையும் அப்போது அறிந்துகொண்டேன்.
என் பால்ய, பதின்மப் பருவத்தில் எதிர்பட்ட அழியாத கோலங்களாக நிலைத்து விட்ட ஆளுமைகளில் ஒருவர் விஜயன் சிதம்பரப்பிள்ளை (வண்ணார்பண்ணை) . கொரோனாப் பெருந்தொற்றின் ஆரம்பத்தில் பிரான்ஸில் அதற்குப் பலியானவர்களில் ஒருவர். முன்னாள் வடகிழக்கு மாகாண அமைச்சரும், அரசியல் அறிஞருமான வரதராஜா பெருமாளின் முகநூற் பதிவொன்றின் மூலமே அவரது மறைவு பற்றியும், அவர் பிரான்ஸில் வசித்தது பற்றியும் அறிந்துகொண்டேன். அப்பொழுது 'அஞ்சலி: விஜயன் சிதம்பரப்பிள்ளை (பிரான்ஸ்)' என்னும் முகநூற் பதிவொன்றினையும் இட்டிருந்தேன். அண்மையில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அவரது சகோதரர் யோகநாதன் சிதம்பரப்பிள்ளை (Yoganathan Sithamparapillai) விஜயனின் நினைவு மலரை அனுப்பியிருந்தார். சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள நினைவு மலர்.


1980களின் தொடக்கத்தில், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில், க.பொ.த. உயர் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் சிலர், ஒரு புதிய காற்றாக இலக்கிய உலகில் பிரவேசித்தார்கள். ‘புதுசு’ என்ற சஞ்சிகை ஒன்றையும் (1980–1987) வெளியிடத் தொடங்கினார்கள். இவர்கள் எல்லோரும் முளைக்கும்போதே, இடதுசாரிச் சார்புடையவர்கள். தோழர் விசுவானந்ததேவனின் தமிழீழத் தேசிய விடுதலை முன்னணியால் கவரப்பட்டவர்கள். அவர்களுள் ஒருவர்தான் இளவாலை விஜயேந்திரன்.
நூல்களை வாசிப்பது என்பது எம்மை மேம்படுத்திக் கொள்வதற்கும் அறிவாந்தவர்களாக எம்மை ஆக்கிக் கொள்வதற்கும் மிக முக்கியமானது என்று கருதுகின்றேன். முன்பெல்லாம் சாமானிய மனிதர்கள்தாம் இலக்கியங்களைப் படைத்தார்கள் என்று அறிகிறோம். கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை எனப் பல்வேறு இலக்கிய வடிவங்களை படைத்திருக்கிறார்கள். அத்தகைய இலக்கிய வகைகளைப் பார்த்தாலும் நாவல் என்ற இலக்கிய வாகனம் மிகப் பிரதானமாகக் கொண்டாடப்பட்டு வருவதை என்னால் அவதானிக்க முடிகின்றது. 100 ஆண்டுகள் கால வரலாற்றைக் கொண்டது எமது தமிழ் நாவல் என அறியமுகின்றது. தனி மனித வாழ்க்கையையும் அவனின் அனுபவங்களையும் - வரலாற்றையும் இணைக்கின்ற ஒரு பாலமாக நாவல்கள் அமைவதை நான் பார்த்திருக்கின்றேன்.




முன்னுரை










பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









