தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (1) - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் ஒன்று: நகரத்து அணில்!
மாதவன் தான் வசித்து வந்த கட்டக்காட்டு விருட்சக் கூட்டிலிருந்து வெளியில் இறங்கினான். எதிரே 'டொரோண்டோ' மாநகர் விரிந்து கிடந்தது. தெற்காகத் திரும்பிப் பார்த்தான். தொலைவில் உயர்ந்த கட்டடங்கள் தெரிந்தன. 'கனடா வாத்து'க் கூட்டமொன்று V வடிவில் பறந்துகொண்டிருந்தது. சிட்டுக்குருவிகள் சில கூட்டமாகக் கடுகிச் சிறகடித்து மறைந்தன. அவன் வசித்து வந்த தொடர்மாடிக் கட்டடத்திற்கு அருகிலிருந்த மேப்பிள் இலை மரமொன்றிலிருந்து மெல்ல மெல்ல இறங்கிய கறுப்பு அணிலொன்று புஸ் புஸ்ஸென்று வளர்ந்திருந்த வாலை ஆட்டியபடி மெல்ல அவனைச் சிறிது நேரம் உற்றுப்பார்த்தது. பின் ஏதோ திருப்தி அடைந்ததுபோல் தன் காரியத்தில் மூழ்கி விட்டது. புல் மண்டிக்கிடந்த தரையில் உனவு தேடும் அதன் வேலையில் மூழ்கிவிட்டது. மாதவன் சிறிது நேரம் அதன் அசைவுகளைப் பார்த்து நின்றான். ஒரு கணம் அந்த அணில் பற்றிய சிந்தனைகள் அவன் சிந்தையில் ஓடின. இந்த அணிலின் இருப்பு எவ்வளவு சிறியது என்று நினைத்துக்கொண்டான். இந்த மரம்,இதனைச் சுற்றியுள்ள சிறு பிரதேசம் .. இவையே இதன் உலகம். மரத்திலுள்ள கூடும், மரத்தைச் சுற்றியுள்ள அயலுமே அதன் உலகம். ஒவ்வொரு நாளும் தன் இருப்புக்காக உணவு தேடுவதே அதன் முக்கிய பணி. அவ்விதம் இருப்பைத்தக்க வைப்பதற்கு முயற்சி செய்கையில் அதனைப் பலியெடுத்துத் தம் இருப்பைத்தக்க வைக்கும் ஏனைய உயிரினங்களிடமிருந்து தன்னைக் காப்பாற்ற அது மிகவும் எசசரிக்கையுடன் இருக்க வேண்டும். பார்வைக்கு மிகவும் எளிமையாகத் தென்படும் அதன் வாழ்க்கை அவ்வளவு எளிதானதில்லை என்று ஒருமுறை தனக்குள் எண்ணிக்கொண்டான் அவன். அந்த எண்ணத்துடன் மீண்டும் அந்த அணில்மேல் பார்வையைத் திருப்பியபொழுது இப்போது அந்த அணில் அவனது இதயத்தை மிக நெருங்கி வந்து விட்டிருந்தது.
இதற்கிடையில் மாடப்புறாக்கள் சில அணிலுக்கு அண்மையில் பறந்து வந்தமர்ந்து இரை தேடத்தொடங்கின. அப்புறாக்களைத் தொடர்ந்து சிட்டுக்குருவிகள் சிலவும் பறந்து வந்து புறாக்களின் அருகாமையில் இரைதேடத்தொடங்கின. புறாக்களுக்கும் ,சிட்டுக்குருவிகளுக்குமிடையில் ஒருவித நட்புரீதியிலான புரிந்துணர்வு, அன்பு இருப்பதாக அவன் இவ்விதம் அவற்றை ஒன்று சேரக் காண்கையில் உணர்வதுண்டு. சிட்டுக்குருவிகள் அமைதியான சுபாவம் மிக்க புறாக்களின் அருகாமையில் ஒருவித பாதுகாப்பு கலந்த உணர்வினை உணரக்கூடுமென்றும் அவனுக்குத் தோன்றியது. இச்சமயம் பார்த்து சீ கல் என அழைக்கப்படும் வெண்ணிறக் கடற்பறவைகள் சில கீச்சிட்டபடி சிறகடித்துப் பறந்தன.


ரணில் விக்ரமசிங்க அவர்கள் பொறுப்பேற்ற நாள் முதலாய், முஸ்லீம் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் யாவும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்துள்ளதாகவே பார்க்கப்படுகின்றது. உதாரணமாக, முஸ்லீம் தீவிரவாதத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டதின் கீழ் கைதான பலரும் இன்று விடுவிக்கபட்டே உள்ளனர்.

இலங்கைத் தலைநகரில் ஒன்பது தசாப்தங்களுக்கு முன்னர் தோன்றியிருக்கும் தினகரன் பத்திரிகைக்கு இந்த ஆண்டு, இம்மாதம் 92 ஆவது பிறந்த தினம்! குறிப்பிட்ட தொண்ணூறு ஆண்டுகளுக்குள், இலங்கையில் நேர்ந்த அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களையெல்லாம் ஊடகப்பெருவெளியில் தொடர்ந்தும் பதிவுசெய்து வந்திருக்கும் தினகரன், தென்கிழக்காசியாவில் குறிப்பிடத்தகுந்த நாளேடாகவும் பரிமளிக்கிறது.
அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 36 வருடங்களாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதி அனுசரணையில், மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் வதியும் ஆதரவற்ற மாணவர்களுக்கான நிதி உதவி வழங்கல் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை பாண்டிருப்பில் நடைபெற்றது.
கரிசல் இலக்கியத்தின் வழியாகக் கிராமிய மக்களின் எளிய வாழ்வியலைத் தம் எழுத்தின் வழியாக வெளிப்படுத்தியவர் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி. இவர் தமது 21வது வயதில் தனது முதல் சிறுகதையான ‘பரிசு’ எனும் சிறுகதையினை எழுதினார். அச்சிறுகதை செம்மலர் இதழில் வெளியானது. இதைத் தொடர்ந்து அவரது சிறுகதைகள் கல்கி, ஆனந்தவிகடன் போன்ற ஜனரஞ்சக இதழ்களில் வெளிவரத் தொடங்கின. இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகளையும் ஆறு நாவல்களையும், ஆறு குறுநாவல்களையும், ஒரு கட்டுரைத் தொகுப்பையும் எழுதித் தமிழன்னைக்கு அணிசெய்துள்ள இவருக்கு மின்சாரப்பூ சிறுகதைத் தொகுப்புக்காக 2008 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. எழுத்தாளர்களுக்குச் சமூகம் மற்றும் அரசியல் பார்வை தேவை என்பதை வலியுறுத்தும் இவர், நுட்பமான அரசியல் அறிவாளியாக விளங்கியதுடன் தீவிர இடதுசாரி சிந்தனையாளராகவும் இயங்கியுள்ளார். இத்தகைய சமூக சிந்தைனை கொண்ட படைப்பாளியான மேலாண்மை பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் காணப்படும் குடும்பம் குறித்தான கருத்தியல்களை, உறவுகளை, சிந்தனைகளை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


இந்து சமுத்திரக் கப்பற் பாதையின் மத்தியில் அமையும் தீவாகவும், தென்மேல் மற்றும் வடகீழ்ப் பருவக்காற்றுக் காலங்களில் கப்பல்களைப் பாதுகாப்பாக நிறுத்திவைக்கக்கூடிய திருகோணமலைத் துறைமுகம் முதலாய இயற்கைத் துறைமுகங்கள் கொண்டதாகவும் அமையும் பல அம்சங்கள் இலங்கையின் கேந்திரநிலையின் முதன்மையைப் புலப்படுத்தும். இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகிய வட மாகாணமானது, கிழக்கு மாகாணம் போலவே, தமிழர்களின் பூர்வீக வாழிடம். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களைக் கொண்டது வட மாகாணம். இவற்றுள், யாழ்ப்பாணம் நீங்கிய ஏனைய ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய நிலப்பகுதியே, வன்னி அல்லது வன்னிப் பெருநிலப்பரப்பு. வட மாகாணத்தின் தலைநகரம் யாழ்ப்பாணம்.
திருப்பூர் சக்தி விருதுகளை ஆண்டுதோறும் சிறந்த பெண் படைப்பாளிகளுக்கு வழங்கி வருகிறோம். கலை இலக்கிய முயற்சிகளுக்காகவும், சமூக மேம்பாட்டுப்பணிக்காகவும் பல்வேறு துறைகளிலும் இவ்வாண்டும் இவ்விருது வழங்கப்பட உள்ளது. பெண் படைப்பாளிகள் கடந்த இரு ஆண்டுகளில் வந்த நூல்களின் இரு பிரதிகளை( எல்லா பிரிவு படைப்பாக்க நூல்களையும் ) அனுப்பலாம். பிற துறை சார்ந்தவர்கள் பற்றிய விபரக்குறிப்புகளையும் அனுப்பலாம். 31 மார்ச், 2024க்குள் அனுப்பித்தர வேண்டுகிறோம்.










'
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









