கிளிம்மின் சரித்திரம் - கார்க்கியின் இறுதி நூல் ஓர் அறிமுகம்! (1) - ஜோதிகுமார் -

மக்ஸிம் கார்க்கியின் இறுதி நூலான, ‘கிளிம்மின் சரித்திரம்’ எனும் இப்பிரமாண்டமான பேரிலக்கியத்தின் நான்கு தொகுதிகளில், முதல் தொகுதி 1927 இல் வெளிவந்துள்ளது. இரண்டாம் தொகுதி 1928 இலும் மூன்றாம் தொகுதி 1930 இலும் 4ம் தொகுதி 1936 இற்கு பிறகேயும் அச்சேற்றப்பட்டுள்ளது. தன் வாழ்க்கையின் மொத்த சாரத்தை பிழிந்து தரும் நூலாகவும், தான் வாழ்வில் சந்தித்திருக்ககூடிய அனைத்து சவால்களிலும் ஆகப் பெரியதும் பலமிக்கதுமான சவால் என்றும், தன் வாழ்வின் இறுதிச் சாசனம் எனவும் கார்க்கியால் வரையறுக்கப்பட்ட இந்நூல் ஓர் 40 வருட கால ரஷ்ய வாழ்வின் குறுக்கு வெட்டு முகத்தையும், அதன் உக்கிரமான பல்வேறு திருப்பு முனைகளையும், அவற்றை ஓர் ‘நவ’ மனிதன் முகங் கொடுக்கும் விதத்தையும், அன்னியப்பட்ட, பண்பாட்டுக்கு எதிரான ஆனால் மேலோட்டமான பண்பாடு மூலாம் பூசப்பட்ட அவனது அந்தரங்க நகர்வுகளையும் நூல் இனங்காட்ட முனைகின்றது.
மக்கள் சாரிகள் உருவாக்கித் தந்த பிரமித்தியூஸ் போன்ற கட்டறுந்த வரலாற்று கட்டமைப்புகளின் பின், அத்தகைய ஒரு பாத்திரம் நவீன இலக்கியத்திலும் சாத்தியப்படுமா என்பது கார்க்கியின் வாழ்நாள் கேள்வியாக இருந்து வந்துள்ளது. தன் இறுதி காலத்தில் இவ்வரலாற்று பணியை, செய்து முடிக்க வேண்டிய பொறுப்பை வரலாறானது தன்மீதே சுமத்தியுள்ளது என்ற முடிவுக்கு அவர் வந்து சேர்கின்றார். பெரிதும் தயக்கத்துடனேயே தன் பேனையை தூக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அவர் ஆளாவதை, நூல் குறித்த அவரது குறிப்புகள் தெளிவுற வெளிக்கொணர்கின்றன. ஒரு கட்டத்தில், இப்பொழுது நான் பயப்படுவதெல்லாம் ஒரே ஒரு விடயத்தை பற்றி மாத்திரமே. அதாவது, நான் இந்நூலை எழுதி முடிப்பதற்கு முன் மரணம் என்னை அணுகிவிடுமோ என்ற ஒரே அச்சம் தான். இந்நூலை மனுகுலத்தின் இன்னுமொரு சாதனை என நாம் வகைப்படுத்தலாம் - இதில் உள்ளடங்கும் சாரத்தின் பல்வேறு பரிமாணங்களை சரியாக நாம் கையேந்த முடியுமானால்.




பெண் எப்போதும் ஆணை சார்ந்து வாழ்பவளாகவே இருந்திருக்கிறாள். கடந்த இருபது வருடங்களில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்றாலும், எழுத்தாளர் முருகபூபதி எழுதியிருக்கும் யாதுமாகி நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சாதனைப் பெண்கள் அரை நூற்றாண்டுக்கு முன்னர் பிறந்தவர்கள். எனவே அந்த காலகட்டத்தில் இது மிகப் பெரிய சாதனை என்றே பார்க்கப்படவேண்டும். இந்த புத்தகம் ஒரு ஆண் எழுதியது என்பது மிகப் பெரும் சிறப்பு. இந்த புத்தகத்திற்கு "யாதுமாகி" என்று மிகப் பொருத்தமான ஒரு பெயரை தெரிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. மிகவும் பொருத்தமான முகப்பு ஓவியம் வரைந்த திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம் அவர்களையும் இங்கே பாராட்டவேண்டும். நூலாசிரியரின் பாட்டி திருமதி தையலம்மா கார்த்திகேசு, மனைவி மாலதி இருவரும் இவர் எழுத்துலகில் தொடர்ந்து பணியாற்ற முக்கிய காரண கர்த்தாக்கள் என்பதை முருகபூபதி நன்றியோடு முன்னுரையில் நினைவு கூறுகிறார்.







சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்னர் 30-03-2017 இல் இந்த நூல் இலங்கையில் இலங்கை கிழக்குப் பல்கலைக் கழக மட்டக்களப்பு விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் முதல் முறையாக வெளியிடப்பட்டது . இந்த நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நாடகமும் அரங்கிலும் பயிலும் மாணவர்கள், நாடக ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். இந்த நூலுக்கு நான் எழுதிய தொகுப்புரையை இன்று முகநூலில் பதிவு செய்கிறேன். நாடக மாணவர்களுக்குப் பிரயோசனமாக இருக்கும் என்று நம்புகிறேன். இது ஒரு நீண்ட விபரமான பதிவு. ஆர்வமுள்ளவர்கள் வாசியுங்கள்.

“இலங்கையில் வாழும் நான்கு இனக்குழுக்களுள் மலையகச் சமூகமும் ஒன்று. மலையகத்தில் மூன்று பல்கலைக்கழகங்கள் (பேராதனை, ஊவா வெல்லச, சப்பிரகமுவ ) உண்டு. ஆனால், இங்கு மலையக மக்கள் சமூகம், வாழ்வியல், கலை, கலாசாரம் தொடர்பான கற்கை நெறிகளோ, அடையாளமோ எதுவுமில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்கிலங்கை பல்கலைக்கழகம் என்பன இலங்கைத் தமிழரின் அடையாளம் கொண்டவை. இராமநாதன் கலை அக்கடமி, விபுலாநந்தர் இசைக் கல்லூரி என்பன அத்தகையவை. அவ்வாறே தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம்களின் அடையாளம் உண்டு. சுருங்கக் கூறின், மலையக மக்களின் தனித்துவ அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் (சகல இன மாணவர்களும் பயிலும்) தேசியப் பாங்கான மலையகப் பல்கலைக்கழக கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.


" இதை கொஞ்சம் பாருங்க..... எப்படி இருக்கு?"
அதிர்வுகளையும் திடீர் பாய்ச்சல்களையும் அதிகம் தராத, ஆனால் உணர்வுகளை ஊடுருவும் வார்த்தைகளைக் கொண்டு, புலம் பெயர்ந்த மனிதர்களின் மனப் போராட்டங்களைக் கூறும் செம்மையான படைப்பாக, வ.ந.கிரிதரனின் கட்டடக் கா(கூ)ட்டு முயல்கள் என்னும் சிறுகதைத் தொகுப்பினை இனம் காணலாம்.
இத்தொகுப்பில் உள்ள பல கதைகளை (ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை, மான்ஹோல், பொந்துப்பறவைகள், கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள், சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை!, சுமணதாஸ் பாஸ்….) ஏற்கனவே வாசித்துவிட்டேன். இருப்பினும் தொகுப்பாக ஒருங்கு சேர்ந்து பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.
துடுப்பாட்டத்தில் ஓட்டங்களை எண்ணுவது போல, ரஸ்ய – உக்ரைன் யுத்தத்தில் நாட்களை எண்ண வேண்டிய துர்ப்பாக்கிய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கின்றது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது, கனடாவில் அந்தந்த நாட்டு ரசிகர்கள் தங்கள் நாட்டுக் கொடிகளைத் தங்கள் வண்டிகளில் பறக்கவிடுவது சாதாரண நிகழ்வாக இருக்கும். ஆனால் இம்முறை உக்ரைன் கொடிகளைப் பறக்க விட்டபடி செல்லும் பல வண்டிகளை வீதிகளில் காணமுடிகின்றது. இன்றுடன் யுத்தம் ஆரம்பித்து 27 நாட்களாகிவிட்டன. ரஸ்யா தனது ஆயுதப் பலத்தை மேற்கு நாடுகளுக்குக் காட்டுவதற்காக 18 ஆம் திகதி பரிட்சார்த்தமாக உக்ரைனில் மேற்கே உள்ள டெல்யாரின் என்ற கிராமத்தில் இருந்த இராணுவ ஆயுதக் களஞ்சியத்தை ‘கைப்பர்சோனிக் ஏவுகணை’ மூலம் தாக்கி அழித்திருக்கின்றது. இந்த ஏவுகணை ஒலியைவிட 5 மடங்கு வேகம் கொண்டதால், இந்த ஏவுகணையைத் தாக்கி அழிப்பது கடினமானது. அமெரிக்காவிடம் தற்போது இருக்கும் பாதுகாப்பு ராடர்களால் இதைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கலாம் என்று ஆய்வாளர் கருதுகின்றனர். இது போன்ற ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கக்கூடிய இரும்புக் கவசங்கள் கொண்ட 3 கப்பல்கள் அமெரிக்காவிடம் இருந்தாலும், இன்னும் அவை வெள்ளோட்டம் விடப்படவில்லை.
-




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









