கிளிம் வாழ்வின் மூன்றாம் தொகுதி: -தமிழ் இலக்கிய உலகை, முன்னிறுத்தி (5) - ஜோதிகுமார் -
5
கிளிம்மின் வாழ்வில், (இம்மூன்றாம் தொகுதியின் படி), குறுக்கிடக்கூடிய மூன்றாவது முக்கிய நபர் மரீனா எனும் பெண்மணியாவாள். இவளை சந்திக்கும் போது கிளிம்மின் மனநிலை அமைதி அற்றதாயும், உள் பிளவுகளின் கோரத்தாண்டவங்களால் துன்புறுவதாயும் வெறுமையின் பலிகடாவாகவும் இருக்கின்றது. ஓரு சூனியம் போன்ற தகிக்கும் வெறுமையின் வெளியில் இருந்து துன்புற்று வெளிவர முயற்சித்துக் கொண்டிருக்கின்றது அவன் மனம். அதேப்போன்று, சிந்தனைத் தளத்தில் அவன் தனக்குரிய தத்துவத்தை தேடிப் பற்றிக் கொள்ள அல்லது, உருவாக்கி கொள்ள அவன் பிராயத்தனம் செய்து கொண்டிருந்த தருணத்திலேயே மேற்படி மரீனாவுடனான சந்திப்பும் நடந்தேறுகிறது. மரீனா, பொதுவில், ஓரு மிகப் பெரிய – சரியாக சொன்னால் ஓரு பிரமாண்டமான ஆளுமைமிக்கவளாகத் திகழ்கின்றாள். தத்துவங்கள், அரசியல் இதைவிட முக்கியமாகத் தீவிர இலக்கிய பரீட்சயம் கொண்டவளாயும், இலக்கிய உலகின் தொடர்ச்சியான, ஆழ்ந்த அவதானிப்பு கொண்டவளாயும் இருப்பதை கிளிம் கண்டு கொள்கின்றான். ‘தேடல் கொண்டவர்களும், ஆன்ம விடுதலை அல்லது தூய ஆவியின் நிலை குறித்த விசாரிப்பு உள்ளவர்களும் என் கரிசனைக்கு உரிய மனிதர்களாவர்’ என்று அவள் தன்னை கிளிம்மிடம் வரையறுக்கின்றாள். கிளிம் ஆன்ம விடுதலை குறித்து சாடைமாடையாய் கேள்வியை எழுப்பியதுமே அவள் கூறுவாள்: “ஆன்மீகவாதிகள் இரண்டு வகைப்படுகின்றனர். ஒரு வகையினர் ர்நுனுழுNஐளுவுளு. அதாவது உச்சத்தைத் தொட்டு உள்ளம் கிளர்ச்சியுற்று, அந்த கிளர்ச்சியின் ஒரு கணத்துக்காய் வாழ்பவர்கள். (ஜெயமோகன் போன்றோர்களின் சித்தரிப்பில், விமானம் ஓடுவதை போல் ஓடுவதாகவும், பின் மேலெழுந்து – உச்சத்தை தொடுவது –ளுருடீடுஐஆநு– என்பது போல). மற்ற வகையினர் காந்தியைப் போல. ளுயுஊசுஐகுஐஊஐயுடு ஐ நோக்கி முன்னே ஓடுபவர்கள் - நீ எந்த வகை குறித்து கேட்கின்றாய் என்பது போல அவள் கிளிம்மை நோக்குவாள் அவள்.