வாசகர் கடிதங்கள் சில.அண்மையில் 'பதிவுகள்' இணைய இதழில் ஜானகி கார்த்திகேசன் பாலகிருஷ்ணனின்  'நனவிடை தோய்தல்: அழிக்கப்பட்ட யாழ். பல்லினப் பல்கலாச்சாரக் கட்டமைப்பு!' என்னும் கட்டுரையினை வெளியிட்டிருந்தோம். அதனை முகநூலிலும் பதிவு செய்திருந்தோம். அது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதை அறிய முடிகின்றது. அது பற்றித் தனக்கு வந்த கடிதங்கள் சிலவற்றை ஜானகி கார்த்திகேசன் பாலகிருஷ்ணன் அவர்கள் எமக்கு அனுப்பி வைத்துள்ளார். ஒரு பதிவுக்காக அவற்றை இங்கு பிரசுரிக்கின்றோம். இக்கடிதங்கள் யாவும் அக்டோபர் 15 அன்று அவருக்குக் கிடைத்தவையாகும்.


1.. ஜானகி, கட்டுரையை வாசிக்க எனக்கு நீண்ட நேரம் எடுத்தது. இக்கட்டுரையை எழுத உங்களுக்கு எவ்வளவு நாட்கள் எடுத்திருக்குமென என்னால் ஊகிக்க முடிகிறது. முதலில், உங்களது அபார ஞாபகசக்தி, வண்ணார்பண்ணை சூழல் சார்ந்த உங்களது ஈடுபாடு, பாடசாலை சார்ந்த திடமான உதாரணங்கள் ஆகியவற்றிற்கு எனது பாராட்டுதல்கள் (salute). இது நன்கு ஆராயப்பட்ட கட்டுரை. எதுவும் தவறு எனக் கூறத் தோற்றவில்லை. சில விடயங்களும் கதைகளும் எனது பாடசாலை நினைவுகளை முன்கொணர்ந்தன. முஸ்லிம் மக்களின் இடப்பெயர்வு மறக்க முடியாத சம்பவமும், நாம் தமிழர் அதையிட்டு வெட்கப்பட வேண்டியதுமான ஒரு நிகழ்வாகும். எங்கள் வகுப்பில் பல முஸ்லிம் மாணவியர் - சதக்கத்துல்லா குடும்பத்தினர் உட்பட - கல்வி கற்றனர். அவர்கள் அனைவரும் தமிழ் மொழியில் வல்லுனர்கள். ஆதலால் பாடசாலை வருடாந்த இதழ் அவர்களுடைய கட்டுரைகள் பலவற்றுடன் பிரசுரிக்கப்படும்.

எமது ஐந்து முச்சந்தி ஒரு பல்கலாச்சாரத்தின் உறைவிடம் என்பது எனது மனதிற்குத் தட்டவில்ல. நான் இப்போதான் உணர்கிறேன் எங்கள் வீட்டிற்கும் வயது முதிர்ந்த, தொள தொளவென பஜாமாவும், மேலங்கியும் அணிந்த வாடிக்கையான வியாபாரி ஒருவர், மைசூர் பாகும் மஸ்கெட்டும் கொண்டு வருவார். பழைய பேப்பர், உபயோகித்த போத்தல்கள் வாங்குபவர்கள் பலர் முஸ்லிம்கள். எங்கள் குடும்பம் பெரிது. ஆகவே ஆண்டு இறுதியில் எங்கள் நோட்டு புத்தகங்களை விற்று நிறையப் பணம் பெற்றோம். எனது நினைவில் ஒரு சில முஸ்லிம்களே செல்வந்தர். கைவிட்டு எண்ணக்கூடியவர்களே சமூகத்தில் அந்தஸ்த்தைப் பெற்றிருந்தனர். எப்படியான பிரமிக்கத்தக்க கவலையற்ற வாழ்க்கை எமக்கிருந்தது. நாமெல்லோரும் ஒரு குடும்பம் போல வாழ்ந்திருந்தோம்.

உங்கள் சாதனைக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்கள்.

திருமதி. கனகேஸ்வரி நடராஜா
வேம்படி மகளிர் பாடசாலை முந்நாள் மாணவி, ஆசிரியை,
யாழ் இந்து மகளிர் பாடசாலை ஆசிரியை
கனடாவிலுள்ள இளைப்பாறிய ஆசிரியர், கல்வி சம்பந்தமான கட்டுரைகள் எழுதுபவர்


2. அன்புடன் திருமதி ஜானகி கார்த்திகேசன் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம்!

உங்களது பதிவுகள் 'அழிக்கப்பட்ட யாழ் ... கட்டுரை வாசித்தேன். பல தகவல்களைத் தந்துள்ளது. நல்ல கட்டுரை. தொடர்ந்து எழுதுங்கள். நான் எஸ். அகஸ்தியரின் மகள். எனது தந்தை உங்கள் தந்தை குறித்து பேசியிருக்கிறார். இலங்கைக கம்யூனிஸ்ட் கட்சி யாழ் சங்கத் தவைராக எனது தந்தையும் செயற்பட்ட சிறிய ஞாபகம் வந்தது. ஆனைக்கோட்டையில் எங்கள் வீட்டில் கட்சிக்கூட்டங்கள் இடம்பெறும்போது உங்கள் அப்பா பற்றி பிரலாபித்து எனது தந்தை கதைப்பதுண்டு. நிச்சயமாக அவரது மகள் நீங்கள் என்றுதான் நினைக்கிறேன்.

நன்றி வணக்கம்
நவஜோதி, இலண்டன்


3. நான் இப்போதுதான் கட்டுரையை வாசித்து முடித்தேன். மிகவும் நம்பத்தகுந்ததும் மிகைப்படுத்தப்படாததுமாகும் (authentic). நான் யாழ் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது குறித்து மனம் வருந்தியிருக்கிறேன். அவர்கள் சிறு வியாபாரிகள். எங்கள் வீட்டிற்கு வந்து பழைய பேப்பர், உபயோகித்த போத்தல்கள் வாங்கிச் சென்ற முஸ்லிம்கள் பற்றி எப்போதும் நினைத்துப் பார்ப்பேன். தமது உரிமைக்காகப் போராடும் தமிழ் போராளிகள் என அழைக்கப்பட்டவர், அவர்களது ..... எமது சகோதர சகோதரிகளின், உரிமைகளைப் பொருட்படுத்தவில்லை. ஒரு மனதைப் பிசையும் சம்பவம். ஒக்டோபர் 15ம் திகதி நான் எனது தாயாருடன் கனடாவிற்கு வருவதற்கு நேர்முக பரீட்சைக்காக கொழும்பு வந்து விட்டேன். இது ஒக்டோபர் 30ம் திகதி நடந்திருக்கிறது. அந்த செய்தியை கொழும்பில் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்தக் கட்டுரையை எழுதிய உங்களுக்கு எனது பாராட்டுகள்.

நாங்களும் மொக்கன் கடை ஆட்டிறைச்சி கொத்து ரொட்டி சுவைத்திருக்கிறோம். எனது மாணவரொருவர் பொதுத்தராதரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்திற்கு 'சீ' எடுத்ததற்கு கொத்து ரொட்டி வாங்கி வந்து விருந்து தந்தார். அந்த நாட்களில் கணக்கியல் கற்பதற்கு ஆங்கிலப்பாடத்தில் 'சீ' எடுப்பது அவசியம்.

செல்வி. நல்லம்மா குழந்தைவேலு

யாழ் இந்து மகளிர் கல்லூரி முந்நாள் நீண்ட நாள் சேவையாற்றிய ஆசிரியை
கனடாவில் இளைப்பாறிய ஆசிரியை
முந்நாள் வண்ணார்பண்ணை வாசி


4. மனதைத் தொட்ட   ஜானகியின் ஆக்கம் - இது வலியில் பிறந்த அருமையான ஆக்கம்.

பார்சி மக்கள், மலே இனம், சோனகர் வரலாறு இவற்றை இன்றைய  ரொகின்கியரின் சோகக்கதையுடன்/ கனடா தேசத்தின் ஆதிக்குடிகளின் வரலாற்றுடன் தொ டர்புபடுத்தும் நல்லதோர் ஆய்வு. நாங்கள் அறிந்த சோனகர் தெரு அஞ்சு  முச்சந்தி - பாய் கடை / டயரம்ஸ் / ரொலரம்ஸ் -- பைஜாமா தரித்த / சாரம் அணிந்த/ முக்காடு போட்ட  எமது இனிய உறவுகளின் சோகவரலாறு--- வலிக்கும் நனவிடை தோய்தலாக எமது மக்களுக்கு  தமது  நிலத்தின் கதையை -- அழிக்கப்பட்ட யாழ். பல்லினப் பல்கலாச்சாரக் கட்டமைப்பு பற்றிக்  கூறும் - சிறந்த  ஆவணம். சுவாரசியத்துக்காக உண்மையைத் (Truth) தவறவிடுவதிலும் பார்க்க, உண்மைக்காக சுவாரசியத்தைத் தவறவிடுவதில் எனக்கு உடன்பாடு; ஆதிகுடிவாசிகளின் மதிக்கக்௯டிய வாழ்வியல் நம்பிக்கையே. அவர்கள் நம்புவது அதில் வாழும் உயிரினங்கள், மனிதர் உட்பட, இந்த நிலத்திற்கு உரிமையானவர்கள் (we belong to the land). எமது கடமை நிலத்தையும், நீரையும், ஆகாயத்தையும் பாதுகாப்பதேயல்லாது, உரிமை கோருவதல்ல என்று கூறுவர்; போன்ற வாசகங்கள் ஜானகியின் நேர்மையான மனிதநேயப் பண்பை விளக்குவன. தந்தையின் தெளிவான பார்வையை  /   நீதி நியாயத்தை  வலியுறுத்தும்  ஆற்றலை மகளிடம் பார்த்தபோது  "இவன் தந்தை என்நோற்றான் கொல் " என்னும் வள்ளுவரின் வாசகமும் மனதில் வந்தது. ஜானகியை பாராட்டுகிறோம்

அன்புடன்
புலம்பெயர்ந்த வாசகர் ஒருவர், ஆஸ்திரேலியா

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R