பதிவுகள் - ISSN 1481 - 2991

  • Increase font size
  • Default font size
  • Decrease font size


'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ்.  'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட)  பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெருக்கிட முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.


பதிவுகள்.காம்    இணைய இதழ்  -   "அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"   -     ஆசிரியர்; வ.ந.கிரிதரன்அழகியல் நோக்கில் க.நா.சுவின் நாவல்களில் பெயரமைப்பு உத்தி

E-mail Print PDF

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?'செய்யுள் மொழியால் சீர்புனைந்து யாப்பின்
அவ்வகை தானே அழகெனப்படுமே"1 (தொல் செய்யுளியல் 1492 நூற்பா)

அழகு என்பது செய்யுள் உறுப்புகளில் ஒன்று. செய்யுளுக்குரிய சொல்லால் சீரைப் புனைந்து தொகுத்து வருவது அழகு என்று தொல்காப்பியம் கூறுகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேலைநாட்டில் (இரஷ்யாவில்) பல கலைக் கோட்பாடுகள் உருவாகின. அவற்றுள் அழகியலும் ஒன்றாகும். அழகியலில் 'என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைவிட எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதே அழகியலின் அடிப்படை".2 (தி.சு. நடராசன், தமிழ் அழகியல்) தமிழில் அழகியலை முருகியல் என்றும் அழைப்பர் இது ஆங்கிலத்தில் ஈஸ்தடிக்ஸ் (யுநளவாநவiஉள) என்று வழங்கப்படுகிறது. இதனை பொற்கோ, 'அழகியல் அல்லது முருகியல் என்ற சொல்லால் குறிக்கப்படுகின்ற துறை இன்றைய சூழலில் நமக்குப் பெரிதும் புதியது என்றாலும் அணி இலக்கணமும் இலக்கணங்களில் பல்வேறு சூழல்களில் பேசப்பட்டிருக்கின்ற  பொருள்கோளும் நடையியலும் அழகியலுக்கு நெருக்கமானவை என்று நாம் குறிப்பிடுதல் பொருந்தும்"3 என்று ஆராய்ச்சி நெறிமுறைகள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அழகு என்பதற்கு திரு, அம், அணி, ஏர், நோக்கு, ஐ, காமர், தகை, மதன், மைந்து, மா, பொற்பு, பொலிவு, சீர், வடிவு, கோலம், வண்ணம், கவின், முருகு, வனப்பு, எழில் எனும்  பல பொருள்கள் உள்ளன. முருகு என்பது தொன்மை வாய்ந்த ஒரு தமிழ்ச்சொல். ஈஸ்தடிக்ஸ் எனும் ஆங்கில சொல்லிற்கு தமிழில் புலனுணர்வு, உணர்வுக்காட்சி, கலையுணர்வுக்கூறு என்ற பொருள்களும் உள்ளன.  மேலும், முருகு எனும் சொல் கலித்தொகை,  ஐங்குறுநூறு, புறம்.4, திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, பரிபாடல், சிலப்பதிகாரம் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது. முருகு என்பது பலபொருள் குறிக்கும் சொல். சிறப்பாகக் குறிக்கத்தக்கன நான்கு. அவை,

அ) மனம் ஆ) இளமை இ)கடவுட்டன்மை  ஈ) அழகு என்பன.
‘கை புனைந்தியற்றா கவின்பெறு வனப்பு|4 (திருமுருகாற்றுப் படை)
‘சுருங்க சொல்லல், விளங்க வைத்தல்......
நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்தல்|5 (நன்னூல், பத்து அழகுகள், நூற்பா 13)

என்பன அழகு குறித்துப் பேசப்படும் நூல்கள். மேலும்;, திரு.வி.கவின் முருகன் அல்லது அழகு நூலும், பாரதிதாசனின் அழகின் சிரிப்பும், வாணிதாசனின் எழிலோவியம் நூலும் அழகு என்ற பெயரில் அமைந்த நூல்கள், மேலும், அழகு குறித்து திருவாசகம் - சித்தம் அழகியார் என்றும், குமரகுருபரர் ‘அழகு ஒழுக| எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய திறனாய்வில் அழகியல் என்பது உருவம், உள்ளடக்கம் இரண்டைப் பற்றியதாகும். இவற்றில் எது முக்கியமானது? எது முதன்மையானது? என்பது நீண்ட காலமாக இருந்துவரும் விவாதம்.

க.நா.சு என்று அழைக்கப்படும் கந்தாடை நாராயணசாமி சுப்பிரமண்யம் என்பவர் விமரிசனக்கலை எனும் நூலில் விமரிசனத்தின் எல்லைகள், தமிழில் வசனநடை, நல்ல வசனம், இலக்கியத்தில் உருவங்கள், மொழிபெயர்ப்பு, இலக்கிய ஆசிரியனும் வாசகனும் என்று உருவம் குறித்தான அழகியலைப் பதிவு செய்துள்ளதால் அவரை, பூரணச்சந்திரன் தமிழ் இலக்கியத்திறனாய்வு வரலாறு|6 எனும் நூலில் க.நா.சு தனிநிலை உருவ அழகியலாளர் என்று பதிவு செய்துள்ளார். அந்த ஒரு நூலை மட்டுமே வைத்துக் கொண்டு  அவரை உருவ அழகியலாளர் என்று கூறுவது பொருத்தமா? விமரிசனங்களைத் தொடர்ந்து அவருடைய படைப்புகள் குறிப்பாக நாவல்கள் உருவம், உள்ளடக்கம் இரண்டையும் முதன்மைப்படுத்துகிறதா? (அ) உருவத்தை மட்டும் முதன்மைப்படுத்துகிறதா என்பதே ஆய்வுச்சிக்கலாகக் கொள்ளப்படுகிறது.

க.நா.சு அழகியலாளர் வரிசையில் முதன்மையாக வருபவர்: மிக முக்கியமானவர்: டி.கே.சிக்கு அடுத்தப்படியாக ரசனையில் தனக்கென ஒரு இலக்கியக் குழுவை உண்டாக்கியவர்: இவரின் நாவல்கள் உருவம், உள்ளடக்கம் இரண்டையும் முதன்மைப்படுத்தி அழகியல் தன்மையில் அமைந்துள்ளது என்பதையே ஆய்வுக் கருதுகோளாகக் கொண்டு ‘அழகியல் நோக்கில் க.நா.சு வின் நாவல்களில் பெயரமைப்பு உத்தி| எனும் தலைப்பு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அழகியல் என்பது பரந்த தளத்தில் இயங்குகின்ற ஒன்று, கலையோடு தொடர்பு கொள்ளும் வரையில் பொதுவான  கலைக்கோட்பாடுகளை உருவாக்க முனைகிறது. இலக்கியத் திறனாய்வில், அழகியல் அணுகுமுறை (யுநளவாநவiஉ யிpசழயஉh) புகழ்பெற்றதும் பழமையானதுமான ஓர் அணுகுமுறையாகும். மேலும், வரையறுக்கப்பட்ட எந்தவிதக் கட்டுப்பாடுகளுக்கும் உட்படாமல் மனரீதியான ரசனைகளையும், அவற்றின் வெளிப்பாட்டையும் பதிவு செய்வதால், பலராலும் இவ்வணுகுமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அழகியல் என்பதனை ரசனை என்றும் குறிக்கலாம். ஒரு சாதாரண மனிதனுக்குத் திறனாய்வுத்திறன் இல்லாவிட்டாலும், ஒரு படைப்பை ரசிக்கும் திறனாவது இருக்கும்: இருக்க வேண்டும். இந்த ரசனைப் பல்வேறு திறனாய்வுகளுக்கு அவனை இட்டுச் செல்லும். இது மொழியால் அமைவதல்ல: மனதால் அமைவது.

அழகியல் என்பது கலைப்படைப்பின் அழகினை அனுபவிக்கும் ஒவ்வொரு வாசகருக்குள்ளும் ஒரு மனமகிழ்வு, மனஅமைதி, ரசிப்புத் தன்மை உருவாகியிருப்பதைக் குறிக்கின்றது. அழகியலில் ரசனை இருப்பதால் படைப்பவரைவிட படிப்பவரின் பங்கீட்டை வெளிக்காட்டுகின்றது. இதற்குக் காரணம் படிப்பவரின் வாழ்க்கை அனுபவங்கள், அவர் படிக்கும் படைப்பிலே சந்திக்கும் அனுபவங்களோடு ஒத்துப்போவதுதான் எனலாம். வாசகர் ஒருவர் தன் நிஜ வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை, படைப்பாளி ஒருவர் தம் படைப்பில் படைத்துள்ளார் எனில், அதைப் படிக்கும் வாசகர் ஓர் இனிய அனுபவத்தைப் பெறுவார் என்பதில் வியப்பில்லை.

அந்த வகையில், க.நா.சு நாவல்களின் மூலம் தன் முழுவாழ்க்கையையும் காண முயலுவதாகக் கூறுகிறார். மேலும் 'நாவல் கலை என்பது அனுபவத்தை ஒட்டியது. அனுபவங்களுக்கு எப்படி முடிவு கிடையாதோ அப்படியே நாவல்களுக்கும் முடிவு கிடையாது"7 என்கிறார். (தமிழில் நாவல்கலை, க.நா.சு)

க.நா.சு வின் நாவல்களில் பெயரமைப்பு உத்தி:
யுக்தி எனும் சமஸ்கிருதச் சொல் தமிழில் உத்தி என வழங்கப்படுகிறது. இது தமிழில் ஷபொருந்தும் முறை| மற்றும் ஒரு நூலாசிரியன் தன் கருத்தை வெளிப்படுத்த கடைப்பிடிக்கும் முறை என்று சொல்லப்படுகிறது. மேலும், 'உத்தி என்பது ஒரு செயல் அதிக அளவு பலனை அளிப்பதற்கு ஏதுவாக உருவாக்கப்படும்  "திறமையான வழிமுறை மனிதன் ஒன்றைச் செயல்படுத்துவதற்கு உரிய திறமையான திட்டம்" 8 என்றும் கூறப்பட்டுள்ளது. நாவலாசிரியர்கள் குறிப்பாகத் தங்களுடைய நாவல்களுக்குப் பல்வேறுபட்ட உத்திகளை கையாண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  "இலக்கியத்தில் உள்ளடக்கத்திற்கு ஏற்ற வடிவத்தைப் பயன்படுத்தும் முறை உத்தி  என்று சொல்லப்படுகிறது. நாவல்கள் பெரும்பாலும் நனவோடை உத்தியாகவே பயன்படுத்தப்படுகிறது" என்று க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி சொல்கிறது.

உத்தியின் வகைகள்:
உத்தியைக் குறித்து தொல்காப்பியர், 1610 வது நூற்பாவில், நூலின் உத்திகளாக,         'ஒத்தகாட்சி உத்திவகை விரிப்பின்
நுதலியது அறிதல் முதல் உய்த்துக்கொண்டு
உணர்த்தலோடு மெய்ப்பட நாடிக்" 9
என்று தொல்காப்பியர் கூறுகிறார்.

பவனந்தி முனிவர் நன்னூல் எழுத்ததிகாரத்தில் ஷநுதலிப்புகுதல் முதல் உய்த்துணர வைப்பு|10 முடிய முப்பத்திரண்டு உத்திகளை எடுத்துக் கூறியுள்ளார். இவற்றில் சொற்பொருள் விரித்தல்,9 ஏதுவின் முடித்தல்,12 மாட்டெறிந்து ஒழுகல்14 எடுத்த மொழியின் எய்த வைத்தல் 25 எனும் நான்கு உத்திகள் மட்டும் க.நா.சு வின் நாவல்களில் இடம்பெற்றுள்ளது. இலக்கியத்திற்கு குறிப்பாக நாவல்களுக்குப் பயன்படுத்தப்படும் உத்திகளை உத்தியின் வகைகளை, அ) குறிப்புப்பொருள் உத்தி ஆ) பெயரமைப்பு உத்தி இ) தொடக்கம் முடிவு உத்தி ஈ) பின்னோக்கு உத்தி (நினைவோடை உத்தி) உ) குறியீட்டு உத்தி ஊ) விஞ்ஞான உத்தி என்று வகைப்படுத்தலாம். இவற்றில் பெயரமைப்பு உத்தியை மட்டுமே இக்கட்டுரை  ஆராய முற்படுகிறது.
பெயரமைப்பு உத்தி:

நாவல்களின் பெயரமைப்பைக் கொண்டு சொல்லப்படும் உத்தி பெயரமைப்பு உத்தி.; பெயரமைப்பு உத்தியைப் பயன்படுத்தி நாவலை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவை,

1) சமுதாயநிலை உணர்த்தும் பெயர்களைக் கொண்ட நாவல்கள்
2) கதைமாந்தர்களின் பெயரால் அமையும் நாவல்கள்
3) நல்ல குறிப்புப் பொருளைத் தம்முள் கொண்ட நாவல்கள்
4) பொதுவான பெயர்களால் அமைந்த நாவல்கள் என்பன.11
(இரா. மோகன், மு.வ. வின் நாவல்கள், இ. பதிப்பு 2008, ஆகஸ்ட்,2011,ப. 143.)

க.நா.சுவின் நாவல்களும் பெயரமைப்பு உத்தி அழகியலும்:
க.நா.சு சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, விமரிசனம், நாவல்கள் என்று பல தளங்களில் இயங்கியவராக இருந்தாலும் நாவல்களில்தான் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார். க.நா.சு 1940 களில்தான் நாவல்கள் எழுதுவதில் ஆர்வத்தினை செலுத்தியதாகக் குறிப்புகள் உள்ளன. இதுவரை க.நா.சு முப்பத்தேழு நாவல்கள் படைத்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதில் ஆய்விற்கு கிடைத்தவை பதினாறு நாவல்கள் மட்டுமே இப்பதினாறு நாவல்களின் பெயரமைப்பை மட்டும்  முதன்மை ஆதாரமாகக் கொண்டு ஆய்வு  நகர்த்தப்பட்டுள்ளது.

க.நா.சு வின் முதல் நாவல் பசி. இது 1942இல் வெளியிடப்பட்டுள்ளது. இவர் மொழிபெயர்த்த நட்ஹாம்சனின் பசி வேறு. பசி நாவல் வேறு. பசி என்பதை இரண்டாகக் கூறுகின்றனர் 1) அறிவுப் பசி 2) காமப் பசி. ஆனால், பொதுத்தன்மையில் உணவு உண்ண வேண்டும் என்கிற உணர்வே பசியாகக் கருதப்படுகிறது. இத்தகைய பசி அதிக நாட்டத்தினாலும் மிகுந்த விருப்பத்தினாலும் உண்டாகுவது (ர்ரபெசல கழச ளவசநபெவா: ளவசழபெ னநளசைந) என்கின்றனர்.

பசி என்னும் இந்நாவலில் சாமா என்ற பிராமண பட்டதாரி இளைஞன் தன்னுடன் பயின்ற ராஜி என்ற விதவை பெண்ணை மறுமணம் செய்துகொள்ள நினைப்பதையும், அதனால் ஏற்படும் சிக்கல்களையும் க.நா.சு கூறியுள்ளார். பசி எனும் தலைப்பிற்கு விதவையின் மறுமணத்தை மையப்படுத்தியுள்ளார். இந்நாவல்  சாமாவின் பசி (வேட்கை) என்ன என்பதை முதன்மைப்படுத்துகிறது. பசி என்பது மனிதனுக்கு ஏற்படும் ஓர் உணர்வு என்பதால் சமுதாயத்தின் நிலை உணர்த்தும் பெயரமைப்பில் இந்நாவலை அடக்கலாம். மேலும், பசி எனும் சொல்லின் பொருளை தெளிவுபட விளங்குமாறு விரித்துரைத்தலால் ஷசொற்பொருள் விரித்தல்| எனும் உத்தி இடம்பெற்றுள்ளது.

சர்மாவின் உயில் 1945இல் வெளியிடப்பட்டது. க.நா.சு இந்நாவலை பசி நாவலுக்கு முன்பு எழுதியிருந்தாலும் 1945ல்தான் புத்தகமாக வெளிவந்தது. உயில் என்பது ஒருவர் தன் மரணத்துக்குப் பிறகு தன்னுடைய சொத்துகள் இன்னாரைச் சேர வேண்டும் என்று தன் விருப்பத்தின் பேரில் எழுதும் சட்டபூர்வமான பத்திரம் (டுயளவ றடைட யனெ வநளவயஅநவெ) . இந்நாவலில் குழந்தையில்லாத பெண்ணின் (விதவை) பிரச்சனைக்குத் தீர்வாக (சொத்துகளைப் பாதுகாக்க) விதவை திருமணத்தை முன்னிருத்தும் கதைக்கருவை கொண்ட நாவலைப் படைத்துள்ளார். சர்மா என்பவர் கதைமாந்தர். இது கதைமாந்தரின் பெயரால் அமைந்துள்ளது. ஏதுவின் முடித்தல் எனும் உத்தி இடம்பெற்றுள்ளது. அதாவது சர்மாவின் உயில் என்பதற்கு முன்னரே காரணம் கூறாமல் கூறியவற்றைப் பின்னர் காரணம் காட்டி முடிப்பது.

பொய்த்தேவு 1946இல் வெளிவந்துள்ளது. க.நா.சுவிற்கு அதிக பேரும், புகழும் வாங்கித் தந்த நாவலாக இதைக் கருதுகின்றனர். பொய்த்தேவு என்பது பொய்யான பொம்மை.  பொய் என்பது நம்பிக்கை, எண்ணம் முதலியவை நிறைவேறாமல் போதல். ஒருவர் இருக்கும் நிலைக்கு மாறாகப் பிறரை நம்பச் செய்வதற்காகக் கூறப்படுவது: உண்மையல்லாதது.

பொய்த்தேவு என்பதே ஒரு பொய்யான சொல்லாடலாகக் கொடுத்துள்ள உருவம். சோமு என்கிற ஏழைச்சிறுவன் மளிகை எமர்சன்ட் சோமு முதலியாராக மாறுவதையும், பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கை என்ற சோமு முதலியார் இறுதியில் ஆன்மீகத் தேடலோடு இறப்பதையும் கூறும் நாவல். இந்நாவலில் சோமு முதலியை முதலில் அறிவுள்ளவனாகவும், பணம் சம்பாதிப்பவனாகவும் காட்டிவிட்டு இறுதியில் ஆன்மீகத் தேடலோடு ஊரே தெரியாத சாலை ஓரத்தில் இறப்பவனாகக் காட்டியுள்ளார். குறிப்புப் பொருளைத்  தம்முள் கொண்ட நாவலாக இதைப் பார்க்க முடிகிறது. மேலும், சொற்பொருள் விரித்தல் எனும் உத்தி இந்நாவலில் இருப்பதை உணரமுடிகிறது. பொய்த்தேவு எனும் சொல்லின் பொருளைத் தெளிவுபட விளங்குமாறு விரித்துரைத்தல் என்று சொல்வதாக அறியப்பட்டுள்ளது.

எழுபேர் எனும் இந்நாவல் 1946இல் வெளிவந்துள்ளது.  ஏழு நபர்களைப் பற்றி கூறுகிறது. ஏழுபேர் எனும் தலைப்பு பெயரமைப்பில் பொருந்தியுள்ளது. ஒரு வீதியி;ல் புதிதாகக் குடியேறிய ஓர் இளைஞன் அருகி;ல் உள்ள ஒரு குடும்பத்தில் விலைமாது பெண் ஒருத்தியை மணக்க நினைப்பதைப் பற்றிள கூறும் நாவல் ஏழுபேர். இந்த நாவலின் ஊடாகச் சில திரைப்படங்கள் நினைவிற்கு வருகின்றன. (தனுஷ் நடித்த புதுப்பேட்டை, சங்கீதா நடித்த லட்சுமி  திரைப்படங்கள். இப்படங்களில் விலைமாதுக்களை மணக்க நினைக்கும் கதாநாயகனின்; சீர்திருத்த முயற்சிகளை, சீர்த்திருத்தப்; படங்களாகக்  காட்டுகிறது. இந்நாவலுக்குப் பிறகுதான் அத்திரைப்படங்கள் 2000க்குப் பிறகு தோன்றியிருக்கின்றன. குறிப்பாக, எண்ணிக்கையில் ஏழுபேர் என்று வெளிப்படையாக அமைந்திருந்தாலும் விலைமாது பெண்ணை மணத்தல் எனும் சீர்திருத்த கருத்தை குறிப்புப்பொருளாகத் தம்முள் கொண்டுள்ளதால் குறிப்புப் பொருளைத் தம்முள் கொண்ட நாவலாகக் கருதமுடிகிறது. ஒன்றற்குரிய இலக்கணம் மற்றவற்றோடு தொடர்புபடுத்திக் கூறுவதால் 'மாட்டெறிந்து ஒழுகல்' எனும் உத்தி இடம்பெற்றுள்ளது.

ஒருநாள் எனும் இந்நாவல் 1946 இல் வெளிவந்துள்ளது. ஒருநாள் என்பதற்கு 24 மணி நேரம். ஒரு காலஅளவு. அண்ணாவின் ஓர் இரவு ஒரே இரவில் எழுதப்பட்டுள்ளது. புதுமைப்பித்தனின் ஒருநாள் கழிந்தது ஒருநாள் நகர்வதைக் கூறுகிறது. க.நா.சு வின் ஒருநாள் ஒரு நாளில் நடந்த சுவாரசியமான சம்பவங்களைக் கூறுகிறது. மேஜர் மூர்;த்தி என்பவர் நேதாஜியின் இராணுவத்தில பணிப்புரிந்த பிறகு சாத்தனூர் கிராமத்திற்கு வருவதையும், அங்கு ஒரு பெண்ணுடன் காதல் புரிவதையும், வாழ்வின் யதார்த்தத்தைப் (காதல், திருமணம்) புரிந்துகொள்வதையும் விவரிக்கும் நாவல். ஒருநாள் என்பது பொதுவான பெயர். இது பொதுவான பெயர்களால் அமைந்த நாவலுக்குள் அடங்கும். சொற்பொருள்விரித்தல் எனும் உத்தி இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வாழ்ந்தவர் கெட்டால் எனும் நாவல் 1951 இல் வெளிவந்துள்ளது. செல்வநிலை மாறி வறுமைநிலைக்கு உள்ளான  வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று க்ரியா அகராதி கூறுகிறது. இந்நாவலில் மம்மேலியார்கள் எனப்படுபவர்கள் பணக்காரர்களாக இருந்தவர்கள். அவர்கள் ஏழைகளாக மாறுவதையும், அந்த ஏழ்மையிலும்  அவர்கள் தங்களின் ஆடம்பரத்தை குறைத்துக்கொள்ள முடியாமல் துன்பப்படும் நிலையையும் பார்க்க முடிகிறது. வாழ்ந்தவர் கெட்டால் என்பது சமுதாயத்தில் வாழ்ந்தவர்கள் என்று சமுதாய நிலை உணர்த்தும் பெயர்களைக் கொண்டுள்ளது. இவற்றிலும் மாட்டெறிந்தொழுகல் எனும் உத்தி இடம்பெற்றிருப்பதை அறிய முடிகிறது.

சமூகச்சித்திரம் இந்நாவல் 1953இல் வெளியிடப்பட்டுள்ளது.
1. சமூகம் என்பது இரு பிரிவுகளை உடையது. 1. சமுதாயம் (ளுழஉநைவல) 2. சாதி (ஊயளவந) சித்திரம் என்பது தூரிகை...எழுதுகோல், நிறப்பூச்சு முதலியவற்றால் வரையப்படும் கலை அழகு உள்ள படம் (அ) ஓவியம் (Piஉவரசந ழக யசவளைவ ஏயடரந)
2. சமுதாயம் மற்றும் சாதி சார்ந்து ஒரு எழுத்தாளர் எழுத்தால், பேச்சால் தரப்படும் விவரணைதான் சமூகச்சித்திரம் என்று பெயர் அமைக்கப்பட்டுள்ளது.
3. புகழ்பெற்ற நடிகர்கள் நடித்த வண்ணச் சித்திரம் என மூன்று நிலைகளில் சமூகச் சித்திரம் எனும் பெயரை அமைக்கலாம். இருப்பினும், க.நா.சு சமூகத்தில் நிகழும் ஒரு நிகழ்வை தன் எழுத்தால் அழகியலாக்கியுள்ளார்.
தந்தையற்ற சரோஜா என்ற பெண், தனது கல்லூரி ஆசிரியர் நாராயணன் என்பவனை திருமணம் செய்து கொள்ள நினைக்கும்போது அவளுக்கு ஏற்படும் குழப்பங்களையும,; காதல் நிகழ்ச்சிகளையும் கூறும் நாவலாக இதைப் படைத்துள்ளார். இது சமுதாயத்தின் அவலங்களை உணர்த்தும் நிலையில் உள்ளது. ஏனெனில் குருவையே திருமணம் செய்துகொள்ள நினைப்பது சமுதாயத்தின் நிலை உணர்த்தும் பெயர்களை கொண்ட நாவலுக்குள் அடக்கப்பட்டுள்ளது. சொற்பொருள் விரித்தல் எனும் உத்தி இடம்பெற்றுள்ளது.

அசுரகணம் 1956இல் வெளியிடப்பட்டுள்ளது. தேவர், அசுரர் போன்றவர்களைக் குறித்து வரும் பிரிவு: வகை என்று வகைப்படுத்தலாம். கண நேரத்தில் தோன்றும் அசுரத்தன்மையைக் கூறுவது. ராமன் என்ற கல்லூரி இளைஞனுக்கு ஏற்படும் காதலையும் அக்காதலால் அவனுக்கு ஏற்படும் உளவியல் பிரச்சனைகளையும் கூறும் நாவல் அசுரகணம்.

ராமனுக்கு கண நேரத்தில் தோன்றும் அசுரத்தன்மையைக் கூறுவதால் இது அசுரகணம் எனும் பெயரைக் குறிப்பாக வெளியிடுகிறது. குறிப்பாக தன் காதலியின் தாயாக இருப்பவளை சூர்பனகையாகக் கருதுவது. இந்நாவலுக்குள் பல கற்பனைக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளமையால் குறிப்புப்பொருளைத் தம்முள் கொண்ட நாவலுக்குள் அடக்கப்பட்டுள்ளது. ஏதுவின் முடித்தல் எனும் உத்தி இடம்பெற்றுள்ளது.

நளினி எனும் இந்நாவலும் 1956இல் வெளிவந்துள்ளது. நளினி என்பதை நளினமானவள் எனும் பெயராலும் குறிப்பிடலாம். 'நளினம் என்பது இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 1. பெண்ணின் அசைவுகளில் அல்லது தோற்றத்தில் உள்ள மனத்தைக் கவரும் மென்மை. (ழுக றழஅநn'ள யிpநயசயnஉந யுஉவழைn). 2. ஒருவர் வேலையைச் செய்வதில் ஏற்படுத்திக் கொள்ளும் நேர்த்தி, லாவகம்"  (புசநயவகரட அழஎநஅநவெ)  என்றும் சொல்லப்படுகிறது.

க.நா.சு இநநாவலின,; பெயரமைப்பில் பெண்ணின் அசைவுகளி;ல் அல்லது தோற்றத்தில் உள்ள மனத்தைக் கவரும் மென்மையைக் அழகியலாகப் படைத்திருப்பதை அறியமுடிகிறது. ஆனால், மென்மையானதாக இந்நாவலின் கதைப்போக்கை அமைக்கவில்லை. சித்தியின் கொடுமையினால் துன்பப்படும் நளினி என்ற சிறுமியின் சிறுவயது வாழ்வு. தனக்கு நேர்ந்த கணவன் திருடன் எனத் தெரிந்த அடுத்த நாளே கணவனைப் பிரிந்து செல்லும் உணர்வுத் தூண்டல் என இரண்டையும் பதிவு செய்துள்ளார். தனக்கு நேரும் எந்த அவலத்தையும் பொருத்துக்கொள்ள முடியாத மென்மையான பெண் (நளினி) என்பதை அடையாளப்படுத்தியுள்ளார். பெண்ணிற்கான பிரச்சனைகள் இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.  கதைமாந்தரின் பெயரால் அமைந்துள்ளது. எடுத்தமொழியின் எய்த வைத்தல் எனும் உத்தி இடம்பெற்றுள்ளது.

ஆட்கொல்லி இந்நாவல் 1957இல் வெளிவந்துள்ளது. ஆட்கொல்லி என்பதற்கு இரண்டு பொருள் உண்டு. 1. விலங்கின் பெயரடையாக வரும்போது. மனிதர்களைக் கொன்றுத் தின்னக்கூடிய விலங்கு. 2. நோயைக் குறித்து வரும்போது மரணத்தை விளைவிக்கும் அளவுக்கு கடுமை வாய்ந்தது: உயிர்க்கொல்லி: ஆட்கொல்லி நோயாகும். (முடைடநச னளைநயளந).

பணமே பிரதானம் எனக் ;கருதும் வேங்கடாசலம், ஜானகி தம்பதியினர் உறவினர்களையும் நண்பர்களையும் பணத்திற்காக ஏமாற்றியவர்கள். இவர்கள் ஆட்கொல்லிகள் எனச் சுட்டிக்காட்டுவதோடு நிறுத்திவிடாமல் இவர்களின் பிள்ளை திருமணத்திற்கு நண்பர்கள் உறவினர்கள் என யாரும் இல்லாத வெறுமையையும் கூறியுள்ளார். நீதி உரைக்கும் தன்மை இந்நாவலில் வெளிப்படுகிறது. (நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம்.) ஆட்கொல்லி எனும் குறிப்புப்பொருளைத் தம்முள் கொண்ட நாவல். ஒன்றற்குக் கூறிய இலக்கணம் அதனைப் பெறுவதற்குரிய பிறவற்றோடு தொடர்புபடுத்திக் கூறுதல் எனும் முறைப்படி மாட்டெறிந்தொழுகல் எனும் உத்தி கையாளப்பட்டுள்ளது. பெரிய மனிதன் இந்நாவல் 1959இல் வெளிவந்துள்ளது. தகுதி, மதிப்பு, அந்தஸ்து  போன்றவற்றில் மேல்நிலைக் கொண்ட மனிதனை பெரியமனிதன் என்ற பெயரால் அழைக்கின்றோம். மேலும், பிறர் எதிர்பாராதவகையில் சிறப்பாக அல்லது சாமர்த்தியமாகக் காரியங்கள் செய்த ஒருவரைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுவது (பெரிய ஆள் - ஊடநஎநச ழக பசநயவ பரல). தாராளமாக உதவும் மனப்பாங்கு உடையவர்களையும் பிறரின் குற்றம் குறைகளைப் பெரிதுப்படுத்தாதவர்களையும் பெரியமனம் உடையவர்கள், பெரிய மனிதர்கள் என்ற பெயரால் அழைக்கின்றோம்;.

க.நா.சுவின் பெரிய மனிதன் என்னும் நாவல் பெரிய மனிதனாகச் சமூகத்தில் மதிக்கப்படும் ஒருவனைப்;பற்றியது. அவன் தன்னைப்பற்றிய சுய விமரிசனத்தின் மூலம்  வெளிவருகிறான். அதனால்  அவனின் பெரிய மனிதன் என்ற முகமூடியில் ஒளிந்திருக்கும் குற்றங்களும் போலித்தனங்களும்  வெளிக்காட்டப்பட்டு அவன் எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சனைகளைக் கூறுகிறது. 'தவறுகளை அதிகம் செய்பவன்தான் பெரியமனிதனாகிறான்"  என்று க.நா.சு கொடுக்கும் விளக்கம் ஏற்புடையதாக இருந்தாலும் ஏதோ ஒரு குறிப்புப் பொருளை (தவறு செய்பவன்தான் பெரியமனிதன்) இந்நாவலுக்குள் அடக்கியிருப்பதாக உணரமுடிகிறது. பெரிய மனிதன் எனும் சொல்லின் பொருளைத் தெளிவுபட விளங்குமாறு விரித்துரைத்தலால் சொற்பொருள் விரித்தல் எனும் உத்தி இடம்பெற்றுள்ளது.

தாமஸ் வந்தார் இந்நாவலில் தாமஸ் எனும் கிறித்தவர் தன் மதத்தைப் பரப்ப சாத்தனூர் வந்தார் என்பதைக் குறிப்பிட இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது. வந்தார் என்பதை வந்தேறி எனும் சொல்லாடலால் குறிக்கலாம். வந்தேறி என்னும் சொல்லிற்கு, ஒரு இடம், நாடு முதலியவற்றில் நீண்ட காலமாக வசித்து வராமல் இடையில் வந்து குடியேறிய ஒருவர் அல்லது ஒரு இனம் என்று பொருள் உண்டு. இந்நாவலை வரலாற்று அடிப்படையிலான புனைவை கூறும் நாவலாகக் கருதமுடிகிறது. ஏனெனில் திருவள்ளுவரை சமணர் என்றும், தாமஸை கிறித்தவர் என்றும் கருதி, கிறித்துவ சமய பரப்பாளரான புனித தாமஸ{ம் திருவள்ளுவரும் சந்தித்துக் கொண்டனர் என்பதை தாமஸ் வந்தார் என்று ஒரு அழகியலாகப் பதிவு செய்துள்ளார் க.நா.சு.

இந்நாவல் தாமஸ் எனும் கதைமாந்தரின் பெயரால் அமைந்துள்ளதால் இதை கதைமாந்தர்களின் பெயரால் அமையும் நாவலாகக் கருதமுடிகிறது. ~எடுத்தமொழியின் எய்த வைத்தல்| எனும் உத்தி இந்நாவலின் பெயரமைப்பில் கையாளப்பட்டு;ள்ளது. அதாவது தான் சொல்லும் இலக்கணத்தை தான் எடுத்துக்காட்டிய இலக்கியத்தில் பொருந்தும்படி செய்தல் எனலாம்.

அவதூதர் எனும் நாவலும் தூது எனும் பெயரமைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது. தூது என்பது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செய்திகளைப் பரப்ப, பகிர (அன்னம், கிளி, புறா இவற்றின் மூலம் ) தூது இருந்தது. தமிழ்விடு தூது, நெஞ்சுவிடு தூது, விறலிவிடு தூது முதலான பல தூது இலக்கியங்கியங்களைக் கூறலாம். ஆனால், க.நா.சு தூதராக ஒருவரைப் படைத்திருப்பது அவருக்கான படைப்பாக்க அழகியலை உணர்த்துகிறது. அவதூதர் என்னும் பெயருக்கு ~பழி, களங்கம் ஏற்படாவண்ணமும், ஏற்படும் படியாகவும் குறிப்பிட்ட பணிக்காக ஒரு நாட்டின் பிரதிநிதியாக மற்றொரு நாட்டுக்கு அனுப்பப்படும் நபர் அவதூதர்| என்பது அகராதி தரும் பொருள்.

க.நா.சு சாத்தனூர் கிராமத்தில் அற்புதங்கள் பலவற்றை நிகழ்த்தும் ஒருவரின் அற்புதங்களையும், அதன்வழியே சாத்தனூர் மக்களின் குணாதிசயங்களையும் கூறும் நாவலாக 'அவதூதர்" எனும் நாவலைப் படைத்திருப்பதாக உணரமுடிகிறது. இந்நாவலும் கதைமாந்தர்களின் பெயரால் அமைந்திருப்பதால் கதைமாந்தர்களின் பெயரால் அமையும் நாவலுக்குள் அடக்கலாம்;. சாத்தனூர் மக்களுக்காகச் சில அற்புதங்களை நிகழ்த்துவதற்காக இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட தூதர் என்று வரையறுக்க முடிகிறது.  அவதூதர் எனும் பெயரமைப்பிற்குச் சொற்பொருள் விரித்தல், ஏதுவின் முடித்தல் எனும் இரு உத்திகளுக்குள் அடக்கலாம். அவதூதர் எனும் சொல்லின் பொருளை தெளிவுபட விளங்குமாறு விரித்துரைத்தலாலும், அவதூதர் என்பதற்கு காரணம் கூறாமல் பின்னர் காரணம் காட்டி நிறுவுவதலாலும் இவ்விரு உத்திகளை கூறுவதாக  உணரமுடிகிறது.

அவரவர்பாடு எனும் இந்நாவல் 1963 இல் எழுதப்பட்டுள்ளது. ஆணோ, பெண்ணோ ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக அவரவர் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு. (ழுநெ'ள சுநளிழளெiடிடைவைல டிரளiநௌள)  அத்தகைய பொறுப்பு அவரவர் அனுபவிக்கும் சிரமமாகவும் இருக்கலாம், துன்பமாகவும் இருக்கலாம். (ழுநெ'ள டழவ in டகைந)  என்பது அவரவர்பாடு நாவலுக்கு அகராதி தரும் பொருள்.

இந்நாவலின் ஊடாக வியாபார உலகில் மனிதர்கள் எல்லாம் அவரவர்பாடு என்று ஒருவரைவிட்டு ஒருவர் ஒதுங்கியே இருந்துவிடுவார்களே தவிர, வேறு எதுவும் செய்ய மாட்டார்கள். எவருடைய கொலை, கொள்ளைக்கும் யாரும் தலையிடமாட்டார்கள் என்பதை  இந்நாவலில் உணரமுடிந்தது. அவரவர்பாடு எனும் பெயரமைப்பிற்கே ஏதோ ஒரு மர்மம் நாவலில் பொதிந்திருப்பதை அறியமுடிகிறது. எழுத்தாளன் ஒருவனிடம் கொலையாளியும், காவல்துறை பணியாளரும் கொலையைப் பற்றி விவரிப்பது விவரணையாக அழகியலாக அமைந்துள்ளது. நினைவோடை எனப்படும் பின்னோக்கு உத்தி இடம்பெற்றுள்ளது. சமுதாயத்தில் நிகழும் கொலை சம்பவங்களை யதார்த்தங்களாகப் பதிவு செய்திருப்பதால் சமுதாயநிலை உணர்த்தும் பெயர்களைக் கொண்ட நாவலாகக் கருதமுடிகிறது. மேலும், ஒன்றிற்கு கூறிய இலக்கணம், அதனைப் பெறுவதற்குரிய மற்றவற்றோடு தொடர்புப்படுத்திக் கூறுவதால் 'மாட்டெறிந்தொழுகல்" எனும் உத்தி இடம்பெற்றுள்ளதை அறியமுடிகிறது.
கோதை சிரித்தாள் நாவல் 1986இல் வெளியிடப்பட்டுள்ளது. கோதை எனும் பெண் சிரித்தாள் என்பது இதன் பொருள். ஆனால், வெளிநாட்டிலிருந்து சொந்த கிராமத்திற்கு வரும் ராமானுஜன் என்ற விஞ்ஞானியின் வாழ்வையும், கிராமத்தில் கோதை என்ற பெண்ணுடன் இணைந்து ராமானுஜன் மேற்கொள்ளும் கல்வி சீர்திருத்தத்தையும் விவரிக்கும் நாவலாக இதைக் கருதமுடிகிறது.     இந்நாவல்  பெண் கல்வியை முதன்மைப்படுத்துகிறது: கல்வி சீர்திருத்தத்தைப் பேசுகிறது கோதை என்ற பெண்ணின் இலட்சியம் பற்றி பேசப்பட்டுள்ளது.    கோதை என்ற கதைமாந்தரின் பெயரால் கோதை சிரித்தாள் என்று அமைந்துள்ளதால் கதைமாந்தர்களின் பெயரால் அமையும் நாவலாகக் கருதமுடிகிறது. சொல்லின் பொருள் தெளிவுபட விளங்குமாறு விரித்துரைத்தலால் சொற்பொருள் விரித்தல் எனும் உத்தி கையாளப்பட்டு;ள்ளது இந்நாவலுக்காக க.நா.சு தமிழக அரசின் விருதைப் பெற்றுள்ளார்.

பித்தப்பூ  இந்நாவல் 1984இல் எழுதப்பட்டுள்ளது. இது க.நா.சு வின் கடைசி நாவல். பித்தம் என்பதை பைத்தியம் என்னும் பெயரமைப்பாலும்; அழைக்கலாம். ஒன்றின் மேல் அல்லது ஒருவரின் மேல் கொண்ட தீவிர விருப்பம் பைத்தியம்(அ) பித்தம் என்று அகராதி கூறுகிறது. மேலும், பித்தம் என்பதற்கு ஜீரணம், பார்வை, உணர்ச்சிகளில் சமநிலை ஆகியவற்றுக்கு காரணமாக இருக்கும் உடலின் மூன்;று சக்திகளில் ஒன்று என்றும் கூறுகிறது. (யு அயn றாழ ளை அயன ழn ளவசநபெவா).

இந்நாவல் விபத்தொன்றினால் மனநிலை பாதிப்படைந்த தியாகு என்ற இளைஞனின் வாழ்வையும், அதன் வழியே சுயம் மறைக்கப்பட்டு வாழும் மனிதர்களின் உளவியல் பிரச்சனைகளையும் கூறுவதாக க.நா.சு பித்தப்பூவைப் படைத்திருப்பதாக உணரமுடிகிறது.

பித்தப்பூ என்பது ஏதோ ஒரு குறிப்புப்பொருளை உள்ளடக்கியுள்ளது.  குறிப்பாகத் தியாகு என்பவனின் வாழ்க்கையைத் தம்முள் கொண்டுள்ளதால் இதை குறிப்புப் பொருளைக் கொண்ட நாவலாக வகைப்படுத்தலாம். இந்நாவலின் பெயரமைப்பின் விளக்கத்தை நாவலுக்குள் காரணம் கூறாமல் கூறியவற்றைப் பின்னர் காட்டி நிறுவுதலால் இது ஏதுவின் முடித்தல் எனும் உத்தியைக் கையாண்டு உள்ளதை அறியமுடிகிறது.

இறுதியாக,
*   க.நா.சு வின் நாவல்கள் பெயரமைப்பிற்கான உத்தியைப் பெற்றிருப்பதுடன்            அழகியல் தன்மையுடன் உருவம், உள்ளடக்கத்திற்கேற்ப அமைந்திருக்கிறது.
*ழூ நாவல் வாசிப்பின் ஊடாக, ஆன்மீகத்தேடல், பெரியமனிதன் முகமூடியில்             ஒளிந்திருக்கும் குற்றங்கள், பணத்தினால் (பணத்தாசையால்) நண்பர்,     உறவினர்கள்     இல்லாமையால் ஏற்பட்ட வெறுமையான உணர்வு, கணவன் திருடன்     எனத்     தெரிந்தவுடனே அவனைவிட்டுப் பிரிந்துச் செல்லும் ஆர்வத் தூண்டல், சுயம்     மறைக்கப்பட்டு வாழும் மனிதனின் உளவியல் பிரச்சனை, தந்தையற்ற பெண் கல்லூரி     ஆசிரியரைத் திருமணம் செய்து கொள்ளுதல், விதவையைத் திருமணம் செய்து     கொள்ள நினைத்தல், வரலாற்று அடிப்படையிலான புனைவு, வாழ்வின் யதார்த்தம்,     மனமகிழ்விற்காக ஆடம்பரத்தைக் குறைத்துக் கொள்ளாமல் மனம்போன போக்கில்     வாழ்வது, பெயரமைப்பிலே பல கொலைகளின் மர்மங்களை பதிவு செய்திருப்பது,     விலைமாது பெண்ணை மணக்க நினைப்பது, விதவைப் பெண்ணை மறுமணம் செய்து     கொள்ளத் தூண்டும்  பசி, ராமன் என்ற கல்லூரி இளைஞனுக்கு ஏற்படும் மனரீதியான     உளவியல் பிரச்சனை, அற்புதங்கள் நிகழ்த்தும் அவதூதர், கிராமப் பெண்ணுடன்     இணைந்து செய்யும கல்வி சீர்திருத்தம் எனப் பலவகையான அழகியல் கூறுகள்     க.நா.சு வின் நாவல்களில்  இருப்பதாக இக்கட்டுரை பதிவு செய்கிறது.
* அழகியலும், பெயரமைப்பும் மட்டுமின்றி உளவியல், பெண்ணியம், சமூகவியல்     எனும் பல கோட்பாடுகள் அடிப்படையிலும் க.நா.சு வின் நாவல்கள் ஆராயப்பட     வேண்டும் என்பதை இக்கட்டுரை முன்வைக்கிறது.
* க.நா.சு உருவவியல் அழகியலாளர் மட்டுமின்றி அவரின் நாவல்கள் வழி ரசனையும்     கலந்த பொதுவான தனிநிலை அழகியலாளர் என்பது இக்கட்டுரையின் வாயிலாக     உணர்த்தப்படுகிறது.
* பசி, சர்மாவின் உயில், பொய்த்தேவு, ஏழுபேர், ஒருநாள், வாழ்ந்தவர் கெட்டால்,     சமூகச்சித்திரம், அசுரகணம், நளினி, ஆட்கொல்லி, பெரிய மனிதன், தாமஸ் வந்தார்,     அவதூதர், அவரவர்பாடு, கோதை சிரித்தாள், பித்தப்பூ எனும் பதினாறு நாவல்களின்     பாடுபொருளும், சொல்லாடலும், இந்நாவல்களின் பெயரமைப்புகளும் அழகியலாக     ஆராயப்பட்டுள்ளன.
* ஒரு படைப்பாளனுக்கு இருக்கும் உத்தி என்று சொல்லக்கூடிய திறமையான     திட்டமும், திறமையான வழிமுறையுமே படைப்பாளனை அவனின் அடுத்த     ஆக்கத்திற்கு வழிவகுக்கும்.
* படைப்பின்மீதான வாசகனின் பங்கீடும் அனுபவமுமே ஒரு படைப்பினை வாசகனால்     பல கோணங்களில் பார்க்கத்தூண்டும். அத்தூண்டலின் சிறுமுயற்சிதான் இக்கட்டுரை.
* அழகியல், அழகு குறித்த விளக்கம், அழகியல் இடம்பெற்றுள்ள இலக்கியங்கள்,     உத்தி, உத்தியின் வரையறை, பெயரமைப்பு உத்தி, உத்தியின் வகைகள்     போன்றவற்றை ஒன்று சேர்த்து அறிய 'அழகியல் நோக்கில் க.நா.சு வின் நாவல்களில்     பெயரமைப்பு உத்தி" எனும் இக்கட்டுரை ஆய்வுமுறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

துணை நூல்கள்
1. தி.சு. நடராசன், தமிழ் அழகியல், காலச்சுவடு பதிப்பகம்.
2. பொற்கோ, ஆராய்ச்சி நெறிமுறைகள்,
3. திருமுருகாற்றுப்படை, நியூசெஞ்சுரிபுக் ஹவுஸ்
4. நன்னூல், எழுத்ததிகாரம்,
5. க்ரியாவின் தற்காலத் தமிழகராதி, க்ரியா வெளியீடு, திருந்திய பதிப்பு.
6. க. பூரணச்சந்திரன், தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு, தமிழ்ப் பல்கலைக்கழகம்.
7. க.நா.சு, நாவல் கலை,
8. க.நா.சுவின் நாவல்கள்
(பசி, சர்மாவின் உயில், பொய்த்தேவு, ஏழுபேர், ஒருநாள், வாழ்ந்தவர் கெட்டால், சமூகச்சித்திரம், அசுரகணம், நளினி, ஆட்கொல்லி, பெரிய மனிதன், தாமஸ் வந்தார், அவதூதர், அவரவர்பாடு, கோதை சிரித்தாள், பித்தப்பூ)
9. அழகியல் கோட்பாடுகள், இணையத்தளம்.
10. க.நா.சு, விமரிசனக்கலை, காவ்யா பதிப்பகம்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

* கட்டுரையாளர் - - த. இலட்சுமன், முனைவர்பட்ட ஆய்வாளர, சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி 14 -

Last Updated on Monday, 08 January 2018 20:39  


'

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகளின் தோற்றம்/ நோக்கம்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

'பதிவுகள் இதழுக்கான
சந்தா அன்பளிப்பு! 

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

'பதிவுகள்' இணைய இதழ்
விளம்பரங்கள்

'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ்.  'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட)  பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.

'பதிவுகள்' இணைய இதழில்
வரி விளம்பரங்கள்.

'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ்.  'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப்  பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.

பதிவுகள் விளம்பரம்

பதிவுகள் வரி விளம்பரம்

மரண அறிவித்தல்கள்

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

நீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.
இலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.

'ஓவியா' பதிப்பக விபரங்கள்:
Oviya Pathippagam

17-16-5A, K.K.Nagar,
Batlagundua - 642 202
Tamil Nadu, India

Phone: 04543 - 26 26 86
Cell: 766 755 711 4, 96 2 96 52 6 52
email: oviyapathippagam@gmail.com | vathilaipraba@gmail.com

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

 

 

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.  வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.   வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்

Wikileaks


பதிவுகள் (Pathivukal- Online Tamil Magazine)

பதிவுகள் வரி விளம்பரம்
'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46?single

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக  $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9?single

எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

பதிவுகள் விளம்பரம்


'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.  'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.
பதிவுகள் விளம்பரம்

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46?single

பதிவுகள் வரி விளம்பரம்

'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.

'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ்.  'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப்  பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம்.  அதற்கான கட்டணம் $25  (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர்  Pay Pal மூலம்  'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.


'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு! 

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய  டொலர்களை   நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,
மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &
திருமண வாழ்த்துகள்.

'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ்.  'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட)  பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம்.  'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப்  Pay Pal மூலம்  'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.

'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.

'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ்.  'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப்  பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம்.  அதற்கான கட்டணம் $25  (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர்  Pay Pal மூலம்  'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.

பதிவுகள் விளம்பரம்

பதிவுகள் வரி விளம்பரம்

 

Canadian Aboriginals

வரி விளம்பரங்கள்

 

Canada

The Government of Canada's primary internet site for the international audience. Whether you are travelling or immigrating to Canada, preparing to do business in Canada. more..

ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர்...

'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து  வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -

'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள்  ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

Yes We Can

மின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..

 

மங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.   வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

கூகுளில் தேடுங்கள்

Custom Search

உங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்

Shami Accounting Services

charles_nirmalarajan5.jpg - 19.08 Kb

We provide complete accounting, federal and provincial tax services to individuals or businesses. Our objective is to continue to provide our clients with the highest level of service at the lowest possible fee tailor to your specific needs. Visit our site.

Brian Greene

Brian Greene (born February 9, 1963) is an American theoretical physicist
Brian Greene (born February 9, 1963) is an American theoretical physicist and string theorist. He has been a professor at Columbia University since 1996. Greene has worked on mirror symmetry, relating two different Calabi-Yau manifolds (concretely, relating the conifold to one of its orbifolds). He also described the flop transition, a mild form of topology change, showing that topology in string theory can change at the conifold point... Read More


வெற்றியின் இரகசியங்கள்

"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும்! இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி! இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள்! இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்!" - அறிஞர் அ.ந.கந்தசாமி -

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.