பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பதிவுகள் இணைய இதழ்

வாசிப்பும், யோசிப்பும் 331: அஞ்சலி; அறிவுலகை ஆட்டி வைத்த அறிஞர்கள் மூவர்! நினைவு கூர்வோம்!;வவுனியா விக்கியின் மின்னஞ்சலொன்று!;சிங்கள விமர்சனம்!

E-mail Print PDF

அஞ்சலிஅண்மையில்  நியூசீலாந்தில் இரு மசூதிகளில் தொழுகைகளில் ஈடுபட்டிருந்த அப்பாவிப் பொதுமக்களைக் கண்மூடித்தனமாகச் சுட்டுக்கொன்றதுடன், அதனை இணையத்தில் நேரடி ஒளிபரப்பும் செய்திருக்கின்றான் நிறவெறி பிடித்த ஆஸ்திரேலிய வெறியனொருவன். எல்லா மதங்களிலும், மொழிகளிலும், இனங்களிலும் வெறியர்களிருக்கின்றார்கள். அதற்காக அவ்வெறியர்களின் இன, மத மற்றும் மொழி மக்களை ஒட்டுமொத்தமாகக் குற்றஞ்சாட்டுவதா? அதுதான் முஸ்லிம் மக்கள் விடயத்தில் நடந்துள்ளது. இவ்விதமான தொடுக்கப்படும் வன்முறைகள் கண்டு அஞ்சி விடாமல், தலை நிமிர்ந்து தம் நம்பிக்கைகளின் வழி பெருமையுடன் தொடர்ந்து பயணிப்பதே இவ்வெறியர்களுக்குக் கொடுக்கப்படும் தகுந்த பதிலடியாகும்.

இன்றைய தாக்குதல்களில் பலியாகிய மற்றும் காயமடைந்த முஸ்லிம் மக்கள அனைவருக்கும் எமது அஞ்சலி! அவர்களையிழந்து வாடும் உற்றார், உறவினர்கள் & நண்பர்கள் அனைவருக்கும் எம் ஆழ்ந்த இரங்கல்.


முகநூலும், எழுத்தாளர்களும்!

பொதுவாக தமிழ் இலக்கிய உலகிலுள்ள வளர்ந்த, இளம் எழுத்தாளர்களின் நிலை அல்லது செயற்பாடுகள் ஒருவரையொருவர் அங்கீகரிப்பதும், தூக்கி விடுவதுமாகவிருக்கும். இதனை நாம் 'முதுகு சொறிதல்' என்போம் . :-) இவ்விதமான அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர்கள் என்பவர்கள் பலருடன் உரையாடுகையில் அல்லது இவர்களது நேர்காணல்களில் முகநூல் பற்றிய பதிலொன்று பெரும்பாலும் ஒரே கருத்துள்ளதாக அமைந்திருப்பதைக் காண்கின்றேன். அவர்கள் கூறுவார்கள்: 'முகநூலா நான் அப்பக்கமே தலை வைத்துப் படுப்பதில்லை. அது வெட்டிப்பேச்சு பேசுபவர்களின் இடம். அங்கு இலக்கியம் படைக்க முடியாது.'

முகநூல் மேய்தல்

இவர்கள்  ஏன் முகநூலைக் கண்டு பயப்படுகின்றார்கள்? அடிப்படைக்காரணம்: அச்சூடகங்களில் இவர்கள் எழுதும் எதற்கும் இவர்களுக்கெதிரான எதிர்வினைகள் உடனடியாக வெளியாவதில்லை. வெளிவருகையிலும் எல்லாம் வெளியாவதில்லை. தணிக்கைக்குள்ளாகியே வெளியாவதுண்டு. எனவே இவர்களது கூற்றுகளுக்கு, நிலைப்பாடுகளுக்கு எதிரான எதிர்வினைகள் அதிகம் வெளிவராத நிலையில் இவர்களது இடம் தக்க வைத்துக்கொள்ளப்படுகின்றது. ஆனால் முகநூலில் இதற்கான சாத்தியங்களில்லை. இவர்களது படைப்புகளுக்கு, அல்லது கூற்றுகளுக்கான எதிர்வினைகள் உடனடியாகவே பதியப்படுகின்றன. ஆதரவான, எதிரான எதிர்வினைகள் அனைத்துமே உடனடியாகவே  முகநூலில் புரியப்படுகின்றன. ஒருவேளை அவற்றின் காரம் காரணமாக அப்படியானவர்களைத் தடை செய்தாலும், அவ்விதம் எதிர்வினை புரிபவர்கள் தம் எதிர்வினைகளைத் தம் பக்கத்தில் தொடர்வார்கள். ஆக ஒருபோதுமே உடனடியாக எழும் எதிர்வினைகளைத் தடுப்பதென்பது சாத்தியமிலை. இதனால்தான் இதுவரை அச்சூடகங்களில் முடி சூடா மன்னர்களாகக் கோலோச்சிக்கொண்டிருந்தவர்களுக்குத் தம் ஆட்சியினை ஆட்டங்காண வைத்து விடுகின்றது முகநூல் என்பதால்தான் முகநூல் பக்கமே வர நடுங்குகின்றார்கள். இலக்கிய உலகில் ஆஸ்தானப் படைப்பாளிகளாகத் தொடர்வதற்கு, எவ்விதக் கேள்விகளுமற்றுத் தொடர்வதற்கு முகநூல் தடையாக இருக்கின்றது என்பதால்தான் இவர்களுக்கு முகநூல் வேப்பங்காயாகக் கசக்கின்றது. ஒன்றைக் கவனிக்கவேண்டும்.

இவர்களில் பலர் ஆரம்பத்தில் இணைய இதழ்கள், வலைப்பதிவுகள் பற்றியும் பொதுவாக இணையம் பற்றியும் இவ்விதம்தான் கூறினார்கள். ஆனால் கடைசியில் அவற்றை ஏற்றுக்கொண்டு பாவிக்கத்தொடங்கி விட்டார்கள். இணையத்தின் பயனைப்புரிந்துகொண்டார்கள். அதே சமயம் இணைய இதழ்கள், வலைப்பதிவுகள் போன்றவற்றையும் ஒரளவுக்குத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்பதால அவற்றைப்பாவிக்கத்தொடங்கிவிட்டார்கள். ஆனால் முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் அவ்விதமான கட்டுப்பாடுகளுக்குச் சாத்தியமில்லை என்பதால் இன்னும் அவற்றுள் காலடியெடுத்து வைக்கத்தயங்குகின்றார்கள். ஆனால் முகநூல் போன்ற சமூக ஊடகங்களின் பயன்கள், தீமைகளைவிட அதிகமானவை. பாவிக்காமல் விடுவதால் இவர்கள் இழப்பவை அதிகமானவையே.

முகநூலின் முக்கிய பயன்களில் சில: கலை, இலக்கிய ஆளுமைகள் பலரை நண்பர்களாக்கி அவர்களுடனான உரையாடலைப் பயனுள்ளதாக்குகின்றது. அவர்களுடன் உரையாடுவதைச் சாத்தியமாக்குகின்றது. தம் படைப்புகளை அனைவருடனும் உடனுக்குடன் பகிர்ந்துகொண்டு அவைபற்றிய எதிர்வினைகளைப்பெற்றுக்கொள்ள வழி சமைக்கின்றது. உலகின் அனைத்துப்பகுதிகளிலுமுள்ளவர்கள் பலருடன் அவற்றைப் பகிர்ந்துகொள்வதை இலகுவாக்குகின்றது. இவ்விதம் கூறிக்கொண்டே போகலாம்.


அறிவுலகை ஆட்டி வைத்த அறிஞர்கள் மூவர்! நினைவு கூர்வோம்!

 ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன்கார்ல் மார்க்ஸ்இன்று இயற்பியல் அறிஞர் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் பிறந்த தினம். வெளி, நேரம் பற்றிய இவரது கோட்பாடுகள் அவை பற்றி அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து நிலவி வந்த கோட்பாடுகள் அனைத்தையும் தகர்த்தன. வெளி, நேரம் (காலம்) ஆகியவை இதுவரை காலமும் அறியப்பட்டிருந்தது போல் சுயாதீனமானவை அல்ல. அவையும் சார்பானவைதாம் என்பதை வெளிப்படுத்திய இவரது கோட்பாடுகள் அறிவியல் வரலாற்றில் அவை பற்றிய நிலவி வந்த அனைத்துக் கோட்பாடுகளையும் அடியோடு மாற்றி வைத்த புரட்சிகரக் கோட்பாடுகள். அதுவரை தனித்தனியாக அணுகப்பட்டு வந்த காலம், வெளி ஆகியவற்றைக் 'காலவெளி' ஆக்கியவர் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன். ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் பிறந்த தினம் மார்ச் 14.

அறிவியல் உலகை ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் அறிவியற்கொள்கைகள் ஆட்டி வைத்தனவென்றால் கார்ல் மார்க்ஸின் கோட்பாடுகளும் வரலாறு, சமுதாயம் பற்றிய கோட்பாடுகளை புதிய கோணத்தில் சிந்திக்க வைத்தன. சரித்திர வளர்ச்சியிலே சமுதாய விதிகளைக் கண்டறிந்தவை. அதனடிப்படையில் வர்க்கமற்ற மானுட சமுதாயம் பற்றிய புதிய சிந்தனைகளை விதைத்தவை. இவரது நினைவு தினம் மார்ச் 14.

ஸ்டீபன் ஹார்கிங் , அண்மைக்காலத்தில் எம்முடன் வாழ்ந்த தலைசிறந்த வானியற்பியற் துறை அறிஞர் ஸ்டீபன் ஹார்கிங். இளமைப்பருவத்தில் தனது இருபத்தியிரண்டாவது வயதில் 'மோட்டார் நியூரோன் டிசீஸ்' என்னும் ஒருவகையான நரம்பு நோயால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியே வாழ்வாக அமைந்து விட்ட நிலையிலும், சிறிது காலமே வாழ்வார் என்று மருத்துவர்களால் காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையிலும் இவற்றையெல்லாம் மீறி வாழ்ந்தவர். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்.ஐசக் நியூட்டன் வகித்த பதவியினை வகித்தவர். நவீன வானியற்பியற் துறைகளின் தந்தையான அல்பேர்ட் ஐன்ஸ்டைனின் சார்பியல் இயக்க மற்றும் கருந்துளைகள் பற்றிய ஆய்வில், சக்திச்சொட்டுப் பெளதிகத்தில் தன்னை ஈடுபடுத்தி மேலும் பல ஆய்வுகளைச் செய்தவர். அவற்றின் வாயிலாகப் பல முடிவுகளை, உண்மைகளை அறிய வைத்தவர். குறிப்பாகக் கருந்துளைகள் பற்றிய, நாம் வாழும் இப்பிரபஞ்சம் பற்றிய இவரது கோட்பாடுகள் நவீன வானியற்பியத்துறைக்கு வளம் சேர்ப்பவை. இவரது நினைவு தினம் மார்ச் 14.

வானியற்பியற் துறை அறிஞர் ஸ்டீபன் ஹார்கிங்

என் சிந்தையை விரிவு படுத்தியவை இவர்கள்தம் கோட்பாடுகள்,சிந்தனைகள். என் பிரியத்துக்குரிய மானுட வழிகாட்டிகள் இவர்கள்; அறிவியல் மேதைகள் இவர்கள். இருப்பு பற்றி, இருப்பின் இயங்குதளம் பற்றி விரிவான, தெளிவான சிந்தனையைத் தந்தவை இவர்கள்தம் சிந்தனைகளே! இவர்கள் மூவரையும் இத்தருணத்தில் நினைவு கூர்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். பெருமிதமடைகின்றேன்.


வவுனியா விக்கியின் மின்னஞ்சலொன்று!

விக்கி வவுனியாநண்பர் வவுனியா விக்கி (எழுத்தாளர்: ஸ்ரீராம் விக்னேஷ் Srirham Vignesh , நெல்லை, வீரவ நல்லூர் -தமிழகம்) மின்னஞ்சலொன்று அனுப்பியிருந்தார். அதிலவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:
\
"அன்புள்ள கிரி, சில நாட்களுக்கு முன், முக நூலில் ‘பாண்டி” விளையாட்டு பற்றி விவாதித்தோமே..... நினைவில் பாரும்....... இலங்கையில் பலகைக்கட்டையில், (இட்டலித் தட்டுப்போல) குழிகுழியாய் தோண்டித் தயார்செய்து, அதில் புளியங்கொட்டைகளைப் போட்டு விளையாடுவதையும், சிலர் சீமெந்து நிலத்தில்-சோக்குக் கட்டியால் வட்டம் வட்டமாய் றவுண்டு போட்டுவிட்டு புளியங்கொட்டை வைத்து விளையாடுவதையும், நான் பார்த்திருக்கின்றேன். அதனைப் “பாண்டி” விளையாட்டு எனச் சொல்வதையும் கேட்டிருக்கின்றேன். இந்த அனுபவத்தை நீரும் சந்தித்திருக்கலாம். ஆனால்,இங்கு திருமண நிகழ்வுகளில், “ நலுங்கு “ என்னும் பெயரில் ஒரு வைபவம் உண்டு. மணமக்களுக்கு கன்னத்தில், கையில் சந்தனம் தடவி கொண்டாடும் நிகழ்வு.

இதன் தொடர்ச்சியாக.....( திருமணம் முடிந்தபின்னர், மாலைவேளை நிகழ்ச்சியில்) ”பல்லாங்குழி” என்னும் பெயரில் மேலே சொன்ன விளையாட்டு நடைபெறும். “ நலுங்கு”என்றே பொதுவாகச் சொல்லிக்கொண்டு, மணமக்கள் இருவரும், விளையாடும் விளையாட்டுக்களில் “பூப்பந்து + தேங்காய் ஆகியவற்றை உருட்டி விளையாடிவிட்டு, (உள்ளே மணிகள் போட்ட வெங்கல அல்லது சில்வர் உருண்டைத் தேங்காயை) உருட்டுவார்கள். புளியங்கொட்டைக்குப் பதிலாக சோகியை போட்டு விளையாடுவார்கள். (உ+ம்: “சீவலப்பேரி பாண்டி” படத்தில் வரும்,”கீரை அறுக்கையிலே....” பாடலைக் கவனிக்கவும்.

இந்த நிகழ்ச்சிக்காக, பல்லாங்குழிப் பெட்டி உள்பட, திருமணவீட்டார் பெரும்பாலும், விலைகொடுத்து சொந்தமாகவே வாங்கி வைத்திருப்பார்கள். கனடாவில்கூட, இந்திய வம்சாவளித் தமிழர் வீட்டு, திருமண நிகழ்ச்சிகளில் நீர் இதனைக் கவனிக்கலாம். கடந்த புதன்கிழமை ஒரு திருமண நிகழ்ச்சிக்கு அவுட்டோர் சூட்டிங் (போட்டோகிராபிக்) போயிருந்தேன். பல்லாங்குழி பெட்டி, நலுங்குத் தேங்காய் ஆகியவற்றைப் பார்த்தவுடன் உமது நினைப்பு வந்தது.தனித்தனிய போட்டோ எடுத்துள்ளேன். இத்துடன் அனுப்புகின்றேன். திறந்த நிலையில், பூட்டிய நிலையில், சோகி போடுவது, நலுங்குத் தேங்காய் ஆகியன தனித்தனிப் படமாக, உமது பிரத்தியோகப் பார்வைக்காக.மேற்கொண்டு சில தகவல்கள்.......
முதலில்,(மணமக்கள் எதிர் எதிரே சுமார் ஒரு மீற்றர் இடைவெளிவிட்டு உட்கார்ந்துகொண்டு) அதாவது,கிழக்கு-மேற்கு அல்லது வடக்கு-தெற்கு (அன்றய சூலம் பக்கத்தைத் தவிர்த்து) பக்கத்தில் உட்கார்ந்துகொள்வார்கள். தொடக்கத்தில்,ஒரு பூமாலையை பந்துபோல உருட்டி அதை தரையிலே வைத்து ஒருவர்பக்கம் ஒருவராக உருட்டுவார்கள். இது, “பூப்பந்து” எனப்படும். கொஞ்சநேரம் உருட்டிவிட்டு, அடுத்து தேங்காயை (குடும்பி நீக்கி) உருட்டுவார்கள். அதன் பின்புதான் ( நான் போட்டோவில் அனுப்பிய) தேங்காய் உருட்டப்படும். அப்போது, இருவருக்கும் மத்தியில், இந்த தேங்காயை வைத்துக்கொண்டு, மணமகன் ஒரு கையால் அழுத்திப்பிடிக்க, மணமகள் தனது இரு கரத்தாலும் அதனைப் பிடுங்கி எடுக்க வேண்டும். இதில், பார்வைக்கு பலப்பரீட்சை போலத் தோன்றினாலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் தன்மை, ஒருவரால் மற்றவரின் கெளரவம் காக்கப்படும் சூழல்.... போன்றவையும் அடங்கும். இதனையடுத்து, குடத்துக்குள் மோதிரத்தைப் போட்டுவிட்டு எடுத்தல் (இது இலங்கையிலும் உண்டு.) அடுத்து, அப்பளம் உடைத்தல்...... இதற்கு அப்பளத்தைப் பொரிக்காமல், அடுப்பிலே கல்லில் வைத்து சுட்ட அப்பளம் பயன்படுத்துவார்கள். அதாவது, ஒருவர் மாறி ஒருவர் உட்கார்ந்திருக்க, மற்றயவர் எழுந்து,அருகே சென்று, இருகையிலும் ஒவ்வொரு அப்பளத்தை வைத்துக்கொண்டு, உட்கார்ந்திருப்பவரின் தலைக்குமேலே சுழற்றிவிட்டு, இரண்டையும் ஒன்றாக அடித்து நொருக்கி,தலையிலே கொட்டுவார்கள்."


நல்லூர் ராஜதானி சிங்களத்தில்அண்மையில் சிங்கள மொழியில் ஜி.ஜி.சரத் ஆனந்தவின் மொழிபெயர்ப்பில், அகாச மீடியா வேர்க்ஸ் பதிப்பக வெளியீடாக வெளியான எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல் பற்றிய விமர்சனமொன்று 'A SRI LANKAN ASSOCIATION' என்னும் சிங்கள மொழி வலைப்பதிவில் வெளியாகியுள்ளது. அதற்கான இணைப்பையும், அம்மொழிபெயர்ப்பையும் ஒரு தகவலுக்காக வழங்குகின்றேன். இவ்விமர்சனம் பற்றிய தகவலை அறியத்தந்த எழுத்தாளர் காத்யான அமரசிங்க அவர்களுக்கு நன்றி.

இச்சிங்கள விமர்சனத்தை எழுத்தாளர் திக்குவல்லை கமாலுக்கும் அனுப்பியிருந்தேன். அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார்:

"சுருக்கமாக--- வீடு,வாஸ்த்து அறிவியல் கோணத்தில் நூல் எழுதப்பட்டுள்ளது. வரலாற்றில் மக்கள் குடியிருப்பு,கலாசாரம் பற்றிய பதிவு.
* யாழ்.வைபவமாலை முதல் 90 வரையிலான எடுகோள்கள். 2009 பின் - தமிழர்க்கு வரலாறு,பூர்வீகம்,கலாசாரம்,தாயகம் இல்லை என்ற பரப்புரைகள். இதனூடாக அடையாள அழிப்பு,பௌத்த அடையாளங்களைப் புகுத்துதல்,ராணுவ முகாம். இந்நிலையில் தமிழர் வரலாற்றை வலியுறுத்தும் இந்நூல்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை முக்கியத்துவம் பெறுகிறது."

விமர்சனத்தின் சாரத்தை எடுத்துரைத்த அவருக்கு என் நன்றி.

https://lankanassociate.wordpress.com/2019/03/11/%e0%b6%b1%e0%b6%bd%e0%b7%8a%e0%b6%bd%e0%b7%96%e0%b6%bb%e0%b7%8a-%e0%b6%bb%e0%b7%8f%e0%b6%a2%e0%b6%b0%e0%b7%8f%e0%b6%b1%e0%b7%92%e0%b6%ba%e0%b7%9a-%e0%b6%b1%e0%b6%9c%e0%b6%bb-%e0%b7%83%e0%b7%90/?fbclid=IwAR37KvTkfpeLHcrOS_R4kKErRylyX3hIhkJm-c7CFlz3PrDE41T7F3J8nJw“නල්ලූර් රාජධානියේ නගර සැලැස්ම”: වී.එන් ගිරිදරන්.

අහස ප්‍රකාශනයක් ලෙස 2018 දී නිකුත් වී ඇති ජී. ජී. සරත් ආනන්ද විසින් සිංහලට පරිවර්තිත වී. එන්. ගිරිදරන්ගේ නල්ලූර් රාජධානියේ නගර සැලැස්ම කෘතිය පුරාතන පූර්ව-යුරෝපා යටත් විජිත උතුරේ බල සැකැස්ම හා නගර විහිදීම පිලිබඳව ප්‍රවේශ අධ්‍යයනයක් ලෙස යම් පිටුවහලක් කරගත හැකි කෘතියකි. ගිරිදරන් විසින් තම විශ්ව විද්‍යාල උපාධි අධ්‍යයනයක් ලෙස මුලින්ම සම්පාදනය කර ඇති මෙම කෘතියට අදාල ලියවිල්ල 1996 වසරේදී ග්‍රන්ථයක් ලෙස ඉන්දියාවේදී ප්‍රකාශයට පත්වුනු බව පරිවර්තකගේ සටහනේ දැක්වේ.

යාල්පානම් හි නල්ලූර්-කේන්ද්‍රිතව පැවතිය බවට මත පලකෙරෙන රාජ්‍යයක් පිලිබඳව පවතින විද්වත් මත, ආනුභූතික, ලිඛිත හා අලිඛිත සාක්ෂි ආදිය එකට සංස්ලේෂණය කරමින් ගිරිදරන් ගෘහ හා වාස්තු විද්‍යාඥයකුගේ කෝණයෙන් මෙම පුරාතන, භාගයකටත් වඩා වැළලී ගොස් ඇති ශිෂ්ටාචාරයට ප්‍රවේශ වෙයි. ශාස්ත්‍රීය අර්ථයෙන් ගත් විට ග්‍රන්ථයේ වැඩි බර තැබෙන්නේ ගෘහ නිර්මාණයට හා වාස්තු විද්‍යාත්මක අංශවලට වුවත් මෙවැනි ජනාවාස හා ශිෂ්ටාචාරයක් ගැන අඩු අවබෝධයක් ඇති උතුරේ අතීත ශිෂ්ටාචාරයෙන් දුරස්ථ අයෙකුට මෙම කෘතියෙන් එම අතීතය අවබෝධ කරගැනිමට ප්‍රවේශ මාර්ගයක් කපා දෙනු ඇත. මෙහිදී වඩා වැදගත් වනු ඇත්තේ ගිරිදරන් තම නිබන්ධනයේ පසුබිම සකස් කිරීමේදී යාල්පානම් ඉතිහාසය ගැන තොරතුරු කතාකෙරෙන යාල්ප්පාණ වෛපවමාලෛ වැනි පැරණි ග්‍රන්ථවල සිට නිබන්ධනය රචිත 90 දශකයේ මුල දක්වාවන ශාස්ත්‍රීය හා අශාස්ත්‍රීය මැදිහත්වීම් අඩංගුවන සේ සකසා ගත් සංකල්ප රාමුවයි. මේ තුල යාපන ශිෂ්ටාචාරය විනිවිද යන, එම පරාසයෙන් ඔබ්බට විහිදෙන ක්වේරෝස්ගේ ද කොන්ක්වෙස්ට් ඔෆ් සිලෝන් වැනි මැදිහත්වීම් ද ඇති අතර ඉන් වඩාත් බහුවිධිත මානයකට අවශ්‍ය ප්‍රවේශයක් ගිරිදරන් ලබාගෙන ඇත.

පශ්චාත්-2009 සමයේ වඩාත් විශ්වාසයෙන් කෙරෙන හා වඩාත් සාහසික ලෙස නැගී සිටින සිංහල බෞද්ධ ස්වෝත්තමවාදයේ එක් ව්‍යායාමයක් වන්නේ උතුරේ සම්ප්‍රදායික නිජබිමක් හෝ එය තම භූමිය කරගත් ශිෂ්ටාචාරයක් නොවුනු බව මතවාදිමය ලෙස වැපිරීමයි. පසු-යුධ සමය තුල උතුරෙන් හා නගෙනහිරින් මතුවුනු බුදු පිලිම වලට අමතරව මෙම ප්‍රදේශවල බලෙන් ගොඩනැගූ සිංහල සම්බුද්ධ වපසරියන් එම ප්‍රදේශ මත පැටවුනු මිලිටරිකරණයේම එක් මුහුණුවරක් ගනු ලැබීය. සමාජ මාධ්‍ය හා සම්ප්‍රදායික ජනමාධ්‍ය ද ඉතා සූක්ෂම හා උපායශීලී ලෙස යොදාගනිමින් ලාංකික ජන මනස තුල උතුරේ දෙමළ ඉතිහාසයක් නොතිබුනේය, එය ඉතා මෑතක ඇරඹි ඉන්දියානු ව්‍යාප්තියක් ය යන අදහස ක්‍රමානුකූලව රෝපණය කරගෙන යන අවදියක අප සිටිමු. මෙහිදී පැන නගින තවත් ගැටළුවක් වන්නේ මෙම ස්වෝත්තමවාදී ආන්තික මතවාදයන්ගේ බීජයන් තුලනය කිරීමට අවශ්‍ය ප්‍රතිමතය එම ආකාරයෙන්, එම මට්ටමින්, එම ජවයෙන් භූ-දේශපාලනික ලංකාව තුල ප්‍රසාරණය නොවීමයි. පසු-යුධ සමයේ කෙරෙමින් පවතින න්‍යායික හා චින්තනමය ගැටුමේදී ද්‍රවිඩ ජන අභිලාෂය, ඔවුන්ගේ ඉතිහාසය හා උරුමය සිංහල සමාජය තුල ස්ථාපනය කිරීමේ රික්තකය වඩාත් දැනෙමින් පවතී.

ගිරිදරන්

තම කෘතිය තුලදී ගිරිදරන් වැදගත් කරුණක් මතුකර සිටී. නිබන්ධනය මුලින් ලියන්නට ඇති 90 දශකයේදී පැති සටහනකට සමීප ස්වරයකින් ඔහු පවසා සිටින්නේ “ඓතිහාසික නටඹුන් ආරක්ෂා කිරීම සම්බන්ධව දමිළ ජාතිකයින් සාමාන්‍යයෙන් පසුගාමී කොටසක්” (55) බවත් නල්ලූර් ගැන අධ්‍යයනයම මීට හොඳම උදාහරණයත් බවත්ය. මෙම ප්‍රකාශය 1990 ගණන්වලදී කල එකක් වන අතර වර්තමානයේදී එහි අදාලත්වය වඩාත් ඛේදනීය ලෙස මතුවන්නක් වනු ඇත. මන්ද යත් ගිරිදරන්ගේ අදහසට අනුව දමිළ ජනතාවට නටඹුන් ආරක්ෂනයේ වැඩි ශක්‍යතාවයක් නැති වුවත් ලංකා රාජ්‍යයට හෝ එයින් වඩාත් වුවමනාවෙන් නියෝජනය කෙරෙන බහුතර සිංහල ජන සමාජයට මෙම නටඹුන් ගැන එම උනන්දුව වත් නැතැයි යෝජනා කල හැක. නැගී එන රණකාමී සිංහලොන්මාදී ජාතිකවාදය හමුවේ හා එම ප්‍රවාහය හා මානසිකව හා කායිකව එක් වී සිටින බලමුළු අභියස මෙම අතීත දමිළ නටඹුන් වළලා ම දැමීමට එම මතවාදයන් ක්‍රියාකරයි. යුද්ධය නිසා අඩපණව තිබෙන යාපන සමාජය මෙන්ම යුද්ධයේ අතුරුඵලයක් ලෙස පත් ඉරු මෙන් තීරු වී උතුරෙන් පිටමන්ව පිටුවහල්ව ලොව පුරා පැතිරී සිටින යාල්පානමට හා එහි ඉතිහාසයට, එහි උරුමයට හිතැති ශාස්ත්‍රීය ප්‍රවාහයන් ද මෙම පදනම් ආරක්ෂා කරගැනීමට හැකි තැනක සිටී යැයි සිතිය නොහැක. යුද්ධය විසින් මෙසේ ඇති කර ඇති ශාස්ත්‍රීය, සමාජ, සංස්කෘතික හා ආධ්‍යාත්මික හිස්තැන තුල එම අතීත ඉතිහාසයන් වල දැමීමටත්, පොදු ජන විඥානයෙන් ඒවා මක්කවා දැමීමටත් අවශ්‍ය වුන්ට වඩා රිසිසේ දුව පැනීමට අවශ්‍ය ඉඩ හසර විවර වී තිබේ.

ගිරිදරන්ගේ කෘතිය උතුරේ උරුමය තේරුම් ගැනීමේ ප්‍රවේශයක් පමණක් ලෙස ගත යුතු යැයි මා මුලින් යෝජනා කර සිටියේ මෙම හේතුව නිසයි. එය සිංහලට පරිවර්තනය කර තිබීමත්, එම හේතුව නිසාම එය සිංහල භාෂිත පාඨකයාට සම්මුඛ වීමත් මෙසේ සදහන් කිරීමේ හේතුවයි. උතුරේ අතීත උරුමය තේරුම් ගැනීමට අප සිංහලට නැගිය හැකි හා එම පාඨකයා හා බෙදාගත හැකි වෙනත් වඩා ගැඹුරු කෘති ද බොහෝ වේ. සාමාන්‍ය පාඨකයාට තේරුම්ගත හැකි සංවාදශීලී විලාසයකින් ලියා ඇති වඩා මෑත කාලයේ ලියවුනු, තවමත් ප්‍රධාන ධාරාවේ සංසරණය වන පොත් පවා බොහෝ වැදගත් වනු ඇත. ඉතිහාසය තුල වාර්ගික අනන්‍යතාවය විකාශනය, දමිළ භාෂාව, එම සංස්කෘතිය හා ශිෂ්ටාචාරයේ ක්‍රමික වෙනස්කම් හා ඒවා තුලනාත්මකව දකුණේ වුනු දේශපාලන හෙල්ලීම් හා ඉතිහාසයේදී සමාන්තර වුනු ආකාරය ආදී කරුණු මත පිහිටා මෙම දූපතේ ඉතිහාසය හා වර්තමානය තේරුම් ගැනීමට මෙම පියවර ඉතාමත් අත්‍යාවශ්‍ය වන අතර, දැනටමත් අප ප්‍රමාද වූවා වැඩිය.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Sunday, 17 March 2019 06:52  


'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46?single
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக  $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9?single

PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகளின் தோற்றம்/ நோக்கம்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.  வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.   வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்


பதிவுகள் - ISSN # 1481 - 2991

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


 

பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

Yes We Can
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46?single

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக  $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9?single

எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

THANK YOU!

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

மதுரைத் திட்டம்

மதுரைத்திட்டம்

Shami Accounting Services

charles_nirmalarajan5.jpg - 19.08 Kb

We provide complete accounting, federal and provincial tax services to individuals or businesses. Our objective is to continue to provide our clients with the highest level of service at the lowest possible fee tailor to your specific needs. Visit our site.

படிப்பகம்

உலக வானொலி