காதலர்தம் உணர்வுகளின் வெளிப்பாடு Ye Zulf Kaisi Hai - ஊர்க்குருவி -
அனில்தாவனும் ஜெயாபாதுரியும் நடித்த இத்திரைப்படப்பாடல்ச் Ye Zulf Kaisi Hai , எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. காரணம் மொழியல்ல. நடிப்பு. காதல்கொண்ட உள்ளங்களின் உணர்வுகளை, செயல்களை மிகச்சிறப்பாகத் தம் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் அனில்தாவனும், ஜெயாபாதுரியும். அடுத்த வீட்டு பெண்ணைப்போல் தோற்றமளிக்கும் எளிமையான தோற்றம் மிக்க ஜெயாபாதுரி சிறந்த நடிகைகளில் ஒருவர். பாத்திர உளவியலை உள் வாங்கி , உணர்வுகளை அளவாக வெளிப்படுத்தி நடிப்பதில் வல்லவர். காதலர்களின் உளவியலைத் தம் நடிப்பால் வெளிப்படுத்தியிருக்கும் இப்பாடல் என்னை மட்டுமல்ல கேட்பவர் அனைவரையும் கவர்வதில் வியப்புண்டோ? - https://www.youtube.com/watch?v=uVFd3T6Kcdo


கனடாவில் கோடைகாலம் வந்தால் நூல் வெளியீட்டு விழாக்கள் தொடர்ந்து நடைபெறுவதுண்டு. அணிந்துரை அல்லது வாழ்த்துரை எழுதவோ அல்லது வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றவோ சில எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களைக் கொண்டு வந்து தருவதுண்டு. அப்படி என்னிடம் சமீபத்தில் கிடைத்த அந்த நூல்களை எப்படியாவது ஆவணப் படுத்திவிட வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. எனக்குக் கிடைத்த நூல்களை மட்டும், சர்வதேச ஆர்வலர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதாலும், மற்றும் அடுத்த தலைமுறையினருக்குப் பயன்படும் என்பதாலும் இங்கு ஆவணப்படுத்துகின்றேன்.
கொழும்பில் என்னை ஓர் இளைஞர் தேடி வந்தார். “கலாநிதி சபா" ஜெயராசா உங்களிடம் அனுப்பினார். இலக்கிய முன்னோடி அ.ந. கந்தசாமியைப் பற்றிய குறிப்புகளைத் தந்துதவ வேண்டும், அ.ந. கந்தசாமியைப் பற்றிய பல்கலைக்கழக ஆய்வுக்கு குறிப்புகள் தேவை என்றார். அந்தப் பல்கலைக் கழக மாணவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தினகரன் வார மஞ்சரியில் சில வாரங்கள் தொடராக எழுதிய அறிஞர் அ.ந. கந்தசாமியைப் பற்றிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்ற கட்டுரையையும், மற்றும் அ.ந.க.வை பற்றி எழுதிய மற்றும் குறிப்புகளையும் கொடுத்து அனுப்பினேன்.
என்னை மிகவும் கவர்ந்த, பாதித்த இலக்கியவாதியென்றால் முதலில் நான் கருதுவது மகாகவி பாரதியாரைத்தான். முரண்பாடுகளற்ற மனிதர்கள் யாருளர். பாரதியிடமும் முரண்பாடுகளுள்ளனதாம். ஆனால் அவை அவரது அறிவுத் தாகமெடுத்த உள்ளத்தின் கேள்விகளின் பரிணாம வரலாற்றின் விளைவுகள். குறுகிய கால வாழ்வினுள் அவர் மானுட வாழ்வின் அனைத்து விடயங்களைப்பற்றியும் சிந்தித்தார். கேள்விகளையெழுப்பினார். அவற்றுக்குரிய விடைகளைத் தன் ஞானத்துக்கேற்ப அறிய முயற்சி செய்தார். இவற்றைத்தாம் அவரது எழுத்துகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.
நான்கு நாட்களுக்கு முன் அதிரடியாக ஒரு செய்தி மின்னஞ்சல் பெட்டிக்குள் விழுந்திருந்தது. வாசிப்பதற்கு முன்னரே படங்கள் உள்ளடக்கத்தின் பெரும்பாகத்தை வெளிப்படுத்தி விட்டன. தலைப்பு அசத்தலாக இருந்தாலும் தலைக் கதிரையில் இருந்தவரைக் கண்டதும் சப்பென்று போய்விட்டது. ஆனாலும் முயற்சிகளின் நோக்கம் நல்லதாயின் அவை ஆராயப்பட வேண்டும் என்பதில் சம்மதம் உண்டென்ற படியால் உள்ளே சென்றேன்.
பத்து மாதம் சுமந்தேன் - உன்;
தமிழ்நாடு தஞ்சாவூர் பல்கலைக் கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறையில் , சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை நிறுவியுள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி இருக்கை வாயிலாக வழங்கப்படும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச்சேர்ந்த இலக்கியப்படைப்பாளிகளுக்கான கரிகாற்சோழன் விருதுகள் வழங்கும் விழா கடந்த 05 ஆம் திகதி நடைபெற்றது.

நான் இலக்கியம் வாசிப்பது குறைவு. கிரிதரனின் புத்தக வெளியீட்டில் வாங்கிய புத்தகங்களின் பகுதிகளை சென்ற இரவுதான் வாசிக்க முடிந்தது. எனது மனதில் எழுந்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.
யோகரட்னம் அவர்களுக்கு நன்றி. - பதிவுகள்.காம் -


கருணை யோகன் என அழைக்கப்படும் பேராசிரியர் செ.யோகராஜா இன்று மதியம் காலமானார். கேன்சர் நோய் என அறிய ப்பட்டு அவர் மகரம ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப் பட்டார். சென்ற மாதம் நான் மட்டக் களப்பு சென்றபோது வீடு தேடி வந்து பல மணி நேரம் உரையாடிச் சென்றார். நோயாளியைப் போல தோற்றமளித்த. அவரைப் பார்த்து 'உடனடியாக வைத்தியரிடம் செல்லுங்கள்" என்று கூறினேன்.

Statement by the Prime Minister on the National Day of Remembrance and Action on Violence Against Women


சிவ ஆரூரன் சிறைக்குள்ளிருந்து இலக்கியம் படைத்தவர். தனது சிறைக்காலத்தை வாசிப்பு எழுத்து என மாற்றி நம்பிக்கையை விதைத்தவர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என பல்துறைகளிலும் ஈடுபட்டு வருபவர். சமூக இயங்கியலை வெளிப்படுத்தும் பல நாவல்களைத் தந்தவர். சிறந்த நாவலுக்கான விருதுகளை மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் பெற்றவர். ஜீவநதி வெளியீடாக 2022 இல் வெளிவந்த ‘ஊமை மோகம்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.


கடந்த ஜூலை மாதம் நடுப்பகுதியில் நான் இலங்கையில் நின்றபோது, கொழும்பில் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு அவர்களைச் சந்தித்தேன்.