அம்மாவுக்கு தூக்குத்தண்டனை உறுதியாகிவிட்டது.

எத்தனையோ வக்கீல்களுடன் கலந்து பேசினோம். எவ்வளவோ பணத்தைச் செலவு செய்துவிட்டோம். ஆனால், ஒட்டுமொத்தமாக அவர்களிடமிருந்து வந்த ஒரே பதில்...,

“என் மூத்தபையனைக் கொலை பண்ணினது நான்தான்.... நான்தான் கொண்ணேன்..... என் கையாலதான் கொண்ணேன்..... பெத்து, பால்குடுத்து வளத்த நானே பால்ல வெசத்த வெச்சுக் கொண்ணேன்.................
கோர்ட்டில வெச்சு ஜட்ஜு ஐயாவும், எதுக்காகக் கொன்னீங்கன்னு எத்தனதடவை கேட்டபோதிலும், கீறல் விழுந்த இசைத்தட்டுப்போல இதைத்தான் சொன்னாங்க.... காரணத்த சொல்லவேயில்லை......”

“என்னய வெச்சுக் காலத்தையும், கோர்ட்டையும் வேஸ்ட் பண்ணாதீங்க..... நான்தான் கொலைபண்ணினேன்னு ஒத்துக்கிட்டேனே..... சட்டுப்புட்டுண்ணு தீர்ப்பைச் சொல்லி தூக்கில போட்டிடுங்கய்யா..... எனக்கு ஒண்ணும் மூளைக்கோளாறோ பைத்தியமோ இல்லை...... நல்ல தெளிவாத்தான் இருக்கேன்..... சந்தேகமாயிருந்தா என்னய கொண்டுபோயி திரும்பத்திரும்ப, ஒண்ணுக்கு நாலு தரக்கான்னாலும் செக்கப்பு பண்ணிப் பாத்திருங்கையா...... நிதானமான சூழல்லதான் அவனைக் கொண்ணேன்.......”

புதிதாகத்தொடர்பு கொள்வதற்காக நான் தேடிச்செல்லும் வக்கீல்கள்கூட, நான் சொல்வதற்குமுன், என் ஜாதகத்தையே என்முன்னிலையில் எடுத்துப்போட்டார்கள்.

“நாங்க அறிஞ்சவரையில உங்க அண்ணன் கொஞ்சம் முரட்டுத்தமும், குடிப்பழக்கமும் உள்ள ஆளுண்ணு தெரியவந்திச்சு.….. உங்களுக்கு எட்டு வயசும், உங்க அண்ணனுக்கு பத்து வயசும் இருக்கிறப்போ, உங்கப்பா மாடிவீடு ஒண்ணில கொத்தனாரு வேலை பாக்கிறப்போ தவறிக் கீழை விழுந்து ஆஸ்பிட்டல்ல கெடந்து எறந்து போனதாகவும், சாகிறப்போ ரண்டு பசங்களையும் நல்லபடியா, எந்தவொரு கெட்டபேரும் இல்லாம வாழச் சொல்லிக்குடுத்து வளத்து மனிசனாக்கணும்னு உங்கம்மாகிட்ட சத்தியம் வாங்கிக்கிட்டதாகவும்……..

அண்ணேல்லயிருந்து படாத பாடெல்லாம் பட்டு உங்கம்மா உங்க ரண்டுபேரையும் வளத்ததாகவும், உங்கண்ணன் சிட்டை வட்டிக்கு பணம் குடுத்து சம்பாதிக்கிறதாகவும், ஒரு வருசத்துக்கு முன்னாலைதான் கலியாணம் பண்ணிக்கிட்டதாகவும், அந்தப் பொண்ணுகூட இப்போ முழுகாம இருக்கிறதாகவும், ரெண்டாவது பையனான நீங்க பில்டிங் கான்ராக்ட் வேலை பாக்கிறதாகவும், உங்கம்மா உங்களுக்கும் பொண்ணு பாக்கிறதாகவும் ஏற்கனவே அறிஞ்சுகிட்டோம்…..

அப்பிடியிருக்கும்போ பெத்த தாயே எப்பிடி வெசத்த வச்சு கொண்ணாங்ன்னுதான் தெரியலையே.....

கோர்ட்டில கேட்டப்பவும் காரணத்த சொல்லாம, நான்தான் கொண்ணேன்..... என்னய தூக்கில போடுங்கன்னு, சொன்னதையே சொல்லிக்கிட்டிருக்காங்க.......

சட்டப்படி கோர்ட்டு மூலமா செக்கப்பு பண்ணிப் பாத்தப்ப கூட, அவங்க மனோநிலைகூட ரொம்பத் தெளிவாத்தான் இருக்கிண்னு ரிப்போட் வந்திருக்கு.....

இதுக்கும் மேல கோர்ட்டுத்தான் என்னபண்ண முடியும் சொல்லுங்க .....”

அண்ணன் கொல்லப்பட்ட அன்றய தினத்தை நினைத்துப் பார்க்கின்றேன்…..

சம்பவம் நடப்பதற்கு முன், நாலைந்து நாட்களாக அம்மாவின் போக்கே வித்தியாசமாக இருந்தது. யாரோடும் கலகலப்பாக பேசவில்லை.

அண்ணனோடும், என்னோடும் மட்டுமல்ல. நான்குமாத கருவான தனது குடும்பவாரிசை வயிற்றிலே சுமந்துகொண்டிருக்கும் தனது மூத்த மருமகளோடுந்தான்

சம்பவம் நடந்த அன்று, காலை ஒன்பது மணிக்கெல்லாம் நான் கான்ராக்ட் வேலை பார்க்கும் சைடுக்குக் கிளம்பிவிட்டேன்.

பத்து மணிக்கு அம்மாவிடமிருந்து போன் வந்தது.

“என்னம்மா…. இப்பத்தானே வீட்டிலயிருந்து கிளம்பி வந்தேன்….. அதுக்குள்ளை என்னது…..”

எந்தவொரு பதற்றமும் இல்லாமல் பேசினாங்க அம்மா.

“உங்க அண்ணன் செத்துப்போய்ட்டான்….. சீக்கிரமா வா…..”

தூக்கிவாரிப் போட்டது எனக்கு.

“என்னம்மா….. பேசிறே…..! என்னமோ வயசு முத்திப்போயி இந்தா, அந்தான்னு இழுத்துக்கிட்டு கெடக்கிறவங்க செத்தப்ப பேசிறமாதிரிப் பேசிறே…..”

“ ஆமாடா…. இழுத்துக்கிட்டு கெடக்கிறவங்க செத்தாக்கூட, மனசில பதைப்பு இருக்கும்…. ஆனா, அவன் சாவணும்னுதான் பால்ல வெசத்தைக் கலந்துகுடுத்து நான்தான் கொண்ணேன்….. கெழட்டுப்பய கேள்வி கேக்கிறமாதிரி கேட்டுகிட்டிருக்காத….. நான் போலீசுக்கும் போன் போட்டிட்டேன்…. அவங்க வந்ததுக்கு அப்புறமா எதுவும் பேச முடியாது….. ஓங்கிட்ட முக்கியமான பொறுப்பு ஒண்ணைக் குடுக்கணும்…. சீக்கிரமா வா…..”

போலீஸ் வருவதற்குமுன் நான் வீட்டுக்கு வந்துவிட்டேன். ஊரிலுள்ள மக்களெல்லாம் எங்கள் வீட்டு முற்றத்தில் கூடிவிட்டனர்.

அம்மாவின் முகத்திலே எந்தவித பதற்றமும் இல்லை. வந்திருக்கும் கூட்டத்தில், முக்கியமாக பெண்கள் சிலர் சத்தமாகவே திட்டினார்கள்.

“அடி பாதகத்தி….. பெத்த புள்ளைய இப்பிடியொருத்தி கொல்லுவாளா…. அதுவும் அவனைக் கட்டிக்கிட்டவ மாசமா இருக்கிறதைக்கூட நெனைச்சுப்பாக்காம இப்பிடிப் பண்ணிப்புட்டாளே பாதகத்தி….. பாருங்கடி அந்தப் புள்ளைய…. அழுது,அழுது திராணியத்துப்போயி சுருண்டு கெடக்கிறா…..”

பேச்சுக்கள், வசைகள் தொடர்ந்தன.

அம்மா எனது கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு, நடு முற்றத்துக்கு வந்தாங்க.

“இப்பிடி வா…. இப்போ நான் பேசிறத கவனமாய் கேளு…. இப்ப நான் பேசிறது எல்லாரு காதிலையும் வெளட்டும்….. கொலை பண்ணினா அதிகபட்ச தண்டணை தூக்குண்ணு எனக்கும் தெரியும்….. அதுக்கான நாளை, நான் ஆவலோட காத்துக்கிட்டுத்தான் இருக்கேன்….. என்னய பெயில்ல எடுக்கவோ, இல்லை வக்கீல் வெச்சு எனக்காக வாதாடவோ யாரும் கனவிலகூட நெனெக்க வேண்டாம்….
இப்பிடியெல்லாம் பேசிறவ, பேசாம அதே வெசத்த பால்ல போட்டு, தானும் குடிச்சு செத்திருக்கவேண்டியதுதானே…. அப்பிடியெல்லாம், எல்லாருமே பேசலாம்….. அதுக்கும் முன்னால முடிக்கவேண்டிய பொறுப்பு ஒண்ணு எனக்கு இருக்கு…..”

சொல்லிவிட்டு ஒருகணம் அமைதியானாங்க அம்மா….

அடுத்து அவங்க வாயிலிருந்து என்ன வரப்போகிறது, என்பதை நான் மட்டுமல்ல, அனைவரும் எதிர்பார்த்தோம்.

அம்மாவின் பார்வை என்மீது நிலைகுத்தியது.

“என்னோட மருமக இனியும் இந்த வீட்டிலதான் மருமகளா இருக்கணும்….. உனக்கிண்ணு வேறை எந்த வாழ்க்கையும் நீ தேடக்கூடாது…. அவளுக்கு நீதான் வாழ்வு குடுக்கணும்…. அவ வயித்துப் புள்ளைக்கு எப்பவும் நீயே அப்பனாய் இருக்கணும்….. இது உன் அம்மாமேல சத்தியம்…. அப்பாமேல சத்தியம்….. ஆண்டவன்மேல சத்தியம்….. நிக்கிறவங்க அத்தனை பேருமே சாட்சி……”

போலீஸ்வண்டி வந்தது. அம்மாவே எதிர்கொண்டாங்க.

தொடர்ந்து ஆம்பூலன்ஸ் வண்டி, மரண விசாரணை அதிகாரிகள், புகைப்படப் பிடிப்பாளர்கள்,பத்திரிகைக்காரர்கள் அனைவரும் வந்துவிட்டனர். விசாரணைகள் ஆரம்பமாயின.

எல்லாம் நடந்தனவே தவிர, கொலைக்கான காரணத்தை அம்மாவிடமிருந்து அறிய முடியவில்லை.

“அவன் வாழக்கூடாது..... அதுதான் கொண்ணேன்..... அவனைப் பெத்து வளத்ததால நானும் வாழக்கூடாது..... என்னையும் தூக்கில போட்டுடுங்க.....”

இது மட்டுமே அம்மாவின் பதில்.

மரண விசாரணைகள் முடிந்து, அண்ணன் பிணத்தை எங்களிடம் ஒப்படைக்கும்போது, பிற்பகல் ஐந்துமணி ஆகிவிட்டது.

அம்மா தூக்கிலிடப்பட, இன்னும் எட்டே நாட்கள்தான் உள்ளன. இன்று வெள்ளிக்கிழமை. அடுத்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஐந்து மணிக்குத் தண்டணை நிறைவேற்றம். இனி எனக்கு அம்மா என்று ஒரு உறவு இந்த உலகத்தில் இருக்கப்போவதில்லை.

என் உடம்பிற்குள் உலுக்கிக்கொண்டிருக்கும் பதற்றம்….. எண்பது வயதைக் கண்டவர்களிடம் தெரியும் நடுக்கம்…..!

வாழ்ந்த காலங்கள்.... குறைகள் தெரியாமல் வளர்த்த விதங்கள்..... எங்களை வளர்ப்பதற்காக பட்ட வேதனைகள் பற்றி பக்கத்துவீட்டு ஆச்சி சொன்ன சம்பவ அடுக்குகள்....

எல்லாமே சுழன்று, சுழன்று என்னைத் தூக்கிலிட்டன.

ஒரு நடைப்பிணமாக நடமாடிக்கொண்டிருந்தேன் நான்.

எங்கம்மாவும், அப்பாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள்.

அப்பா வசதியான குடும்பம். அம்மா குடும்பமோ சுமார்.

அப்பாவோடு கூடப்பொறந்தவங்க நாலுபேரு. அப்பாதான் கடைசிப்பிள்ளை. அதாவது, தாத்தாவின் செல்லப்பிள்ளை.

அந்தக்காலத்தில எங்க தாத்தாவும், அவங்ககூட சேந்தவங்களும் தூத்துக்குடி வழியா கொழும்புக்குப்போய் அங்கை, ஒரு கடையில வேலைபாத்தாங்களாம்.

அதுக்கப்புறமா, சொந்தமா கடைவெச்சு, முன்னேறிப் பணம்சேர்த்து திரும்பிவந்து, வீடு, காணி, தோட்டம், துரவு ண்ணு……

எங்கப்பா குடும்பத்தை “கொழும்புக்காரர் குடும்பம்”னுதான் சொல்லுவாங்களாம்.

நாலுகாசு சம்பாதிச்ச உடனை, ரொம்பபேருக்கு திமிரு வர்ரது சகஜந்தானே. அந்தப் பட்டியல்ல எங்க தாத்தாவும் சேர்ந்ததில் தப்பில்லையே.

எங்கப்பா, எங்கம்மாவை காதலிப்பதை அறிந்து, சாமியாட்டம் ஆடிவிட்டாராம் தாத்தா.

அப்பாவை வீட்டுக்குள் பூட்டிவைப்பது…. அடியாள் வைத்து அம்மா குடும்பத்தாருக்கு கொலை மிரட்டல் அச்சுறுத்தல் தருவது போன்ற “பணக்கார முறுக்கு” வேலைகளையும் செய்தார்.

பல வசதியான குடும்பத்தவர்கள் தங்களது பெண்ணுக்கு எங்கப்பாவை கேட்டுவந்தார்களாம்.

செல்லப் பையன் திருமணத்தை தன் விருப்பத்திற்கேற்ப சிறப்பாகச் செய்ய வேண்டுமென விரும்பிய தாத்தாவுக்கு, எங்கப்பாவின் மனவுறுதி வேதனையைத் தந்தது.

“என் பேச்சைக் கேட்காவிட்டால், என் சொத்திலிருந்து ஒரு பைசாகூட உனக்குத் தரமாட்டேன்…..”

அப்பாமீது தாத்தாவினால் ஏவப்பட்ட கடைசி ஆயுதம் இது.

“அவளையே நெனைச்ச நெஞ்சில வேறை எவளையும் வைக்க முடியாதுப்பா….. உன் சொத்துகளை நீயே வெச்சு அழு….. அவளே எனக்குப் பெரிய சொத்துதாம்பா…..”

இதை அறிந்தபோது, எங்கம்மா சிலிர்த்துப் போனாங்க…..!

ஆனந்தக் கண்ணீர் என்பது என்னவென்று அன்றுதான் உணர்ந்ததாக இப்பவும் பேசுவாங்க….!

அம்மாவைத் திருமணம் செய்தபின், குடும்பச் செலவுக்காக எங்கப்பா பார்க்காத வேலையே இல்லை.

கொதிக்கின்ற வெய்யிலில், கொத்தனாருக்கு கையாளாகக்கூட வேலை பார்த்தார். கல்லையும், மண்ணையும் சுமந்து சுமந்து கையிலே கொப்புளங்களோடும், சிவப்பேறிய கண்டல்களோடும் ஒருபிடி சோறை அள்ளி உண்பதற்கே சங்கடப்படும்போது, அந்த காயங்களைப் பார்த்துப் பார்த்து, உகுக்கும் கண்ணீரையே மருந்தாக்குவாங்க அம்மா.

“ஏய்யா…. உனக்கென்ன தலையெழுத்தாய்யா…… எம்புட்டுப் பெரிய குடும்பத்தில பொறந்து, இந்தப் பாவிமவளுக்காக இந்தச் சீரழிவு படணும்னு…..

போன செம்மத்தில ஏங்கிட்ட கடன்பட்டியா…..

வேணாம்யா….. நீ போயி உங்க குடும்பத்தோட சேந்து நல்லாயிருயா….. எங்கேயிருந்தாலும் ஓன்நெனப்போட நான் வாழ்ந்துக்கிறேன்…..”

அப்பாவின் நெஞ்சிலே முகம்புதைத்து அழுதாங்களாம் அம்மா.

அப்பா ஆறுதல் சொல்லுவாங்களாம்.

“அடி மக்கு….. என்ன பேச்சுப் பேசுறே…… சரிடி….. நான் போறேன்…..உன்னைய விட்டுப் போகணும்…. அவ்வளவுதானே…… இந்த ஒலகத்த விட்டே போறேண்டி….. ஏன்னா, எனக்கு இந்த ஒலகமே நீதானேடி…..”

“அப்பிடியெல்லாம் சொல்லாதையா….. நீ ஸ்ரீராமன்யா….. நான் ஓம்மடியில தலையெ வெச்சு உசிரை விடணும்யா….. ஓம்மனச நோகடிக்கிறமாதிரி பேசினதுக்கு என்னய மன்னிச்சுக்கய்யா….. இனி இப்பிடிப் பேசமாட்டேன்….. பேசவேமாட்டேன்…”

எனது கண்முன்னாலேயே இந்தச் சம்பவத்தை அவ்வப்போ பத்துத் தடவைக்குமேல் சொல்லியிருக்காங்க அம்மா.

பக்கத்து வீட்டுக்கார ஆச்சிகூட ஒருநாள் அம்மாவிடம் கேட்டேவிட்டாள்.

“ஒனக்கும் ஓம்புருசனுக்கும் இடையிலயுள்ள அந்நியோன்னியத்தை பெத்த புள்ளைங்க முன்னாடியா சொல்லுவே…..”

“கண்டிப்பா சொல்லணும் ஆச்சி….. ஏன்னா ஏம்புருசன் ஸ்ரீராமனா வாழ்ந்த மனுசன்…. ரொம்ப வசதியான எடங்களிலயெல்லாமிருந்து சொகபோகமான வாழ்க்கையெல்லாம் வந்தப்பகூட, என்னய தவிர வேற எவளையுமே நெனெச்சும் பாக்க முடியாதுண்ணு மறுத்துப்பேசி, எனக்காக படாத பாடெல்லாம் பட்ட மனிசனை, ஏம்புள்ளைங்க மட்டுமில்ல…. மனிசனா வாழக்கூடியவங்க எல்லாருமே முன் உதாரணமாக எடுத்துக்கிறதில தப்பில்லை…. அதனால, இதை இப்ப மட்டுமில்லை….. இனியும் சொல்லுவேன்…..’’

சொல்லும்போது, எங்கம்மா முகத்திலே பிரகாசம் தெரியும்.

எங்கப்பா இறந்தபோது நடந்த முக்கிய சம்பவம், என் நினைப்பில் மிதக்கிறது.

அதுவரை எங்கப்பாவைத் தண்ணீர் தெளிச்சு விட்டிருந்த தாத்தா, அப்பா இறந்த வீட்டுக்கு மற்றய பிள்ளைகள் உறவுகள் சூழ வந்து, அப்பாவின் உடலைத் தமது வீட்டுக்கு கொண்டுசெல்ல முயன்றார்.

எங்கம்மா விடவில்லை. அக்கம் பக்கத்தாரும் கடுமையான எதிர்ப்பில் இறங்கவே, முடியாத பட்சத்தில் “பிள்ளைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு நீயும் வா” என அம்மாவிடம் கேட்டனர்.

“ஒங்க புள்ளை கஷ்டப்படுறப்போ வராத பரிவும், பாசமும் இப்ப செத்துக் கெடக்கிறப்ப பொங்கிவழிஞ்சு மருமகமேலையும், பேரப்பசங்க மேலையும் கொட்டுதோ.... எந்தக்காலத்திலையும் ஏம்புருசன் ஸ்ரீராமன்தான்..... ஆனா, சத்தியமா நீங்க தசரதன் இல்ல..... இந்த ஸ்ரீராமனுக்கு வாழக் குடுத்துவெக்காத ஒங்க வீடு எங்களுக்கு மட்டும் அயோத்தியாவா இருக்கப்போகுது.... நிச்சயாமா இல்லை.... அதுவும் எங்களுக்கு ஒரு சுடுகாடுதான்.....”

நாளை மறுதினம், அம்மாவுக்குத் தூக்குத்தண்டணை.

கடைசி ஆசை என்ன என்று கேட்டபோது, இரண்டு ஆசைகளை எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.

முதலாவது ஆசை : தண்டணக்கு முதல்நாள் வியாழக்கிழமை சின்ன மகனோடும்,மருமகளோடும் பேசவேண்டும்....

இரண்டாவது ஆசை : அதை அவர்கள் பேசிவிட்டுப் புறப்படும்போது தெரிவிப்பேன்.....

வியாழக்கிழமை அம்மாவைப் பார்க்கப் புறப்படும்போது, சுமக்க முடியாத எடைகொண்ட பாறைகள் இரண்டை இருவர் நெஞ்சிலும் கட்டிக்கொண்டு, நடக்க முடியாத மாடுகள் வண்டியை இழுப்பதுபோன்ற உணர்வுடன் நடந்தோம்....

இல்லை இல்லை..... நகர்ந்தோம்.....!

உள்ளத்தில் தோன்றிய உணர்ச்சிகளுக்கு உருவம்கொடுத்துப் பார்க்க முயற்சித்தபோது, இந்தக் கண்கள் ஏன் இன்னும் குருடாகாமல் இருக்கின்றன என இரத்தக்கண்ணீர் சிந்தியது இதயம்......

உதிரத்தைப் பாலாக்கி ஊட்டி உயிர்கொடுத்த மார்புகளும்....

”மகனே”எனச் சொல்லி, அணைத்து நெற்றியிலும், கன்னத்திலும் முத்தமிட்ட நாவும், இதழ்களும்......

அள்ளியெடுத்து அழுத்தி அணைத்து தலைசாய்ந்து படுக்கவைத்து நோகாமல் முதுகிலே தட்டி உறங்கவைத்த அன்புக்கரங்களும்.... தோள்களும்..... பாசத்தால் செய்த நெஞ்சும்.....

பாதையிலே நான் நடந்தால் பாதங்கள் வலிக்குமென்று, சிற்றிடையில் இருக்கவைத்து சிரித்துவிடச் சவாரிதந்த செழுமை வேகமும்.....

கருவான நாள்முதலாய் காணும்பத்து மாதங்களும்..... பக்குவமாய் பத்தியங்கள்.... பலகோவில் வேண்டுதல்கள்....அத்தனையும் கைக்கொண்டு ஆக்கிவிட்ட கருப்பையும்....

அத்தனையும் தீயாலே அழிந்துவிடப் போகிறதே.....!

அதிகாரிகள்குறிப்பிட்டு அறிவித்தல் தந்தபடி, அதிகாலைஆறு மணிக்கெல்லாம் நாங்கள் சென்று சந்தித்தபோது அவர்கள்,

“சார்..... முதல்ல உங்களை மட்டுந்தான் சந்திக்கணும்னு உங்கம்மா சொல்லுறாங்க.... அப்புறமா மேடத்துகிட்ட பேசிறதா சொன்னாங்க.... அதனால, நீங்க போயி உங்கம்மாவ பாத்துப் பேசியிட்டு வாங்க.....”

சொல்லிவிட்டு பெண் அதிகாரி ஒருவரை அழைத்தார்.

“இந்த அம்மாவை வெயிட்டிங் ரூம்ல உக்கார வையுங்க.....”

நான் சென்று அம்மாவைத் தூரத்தில்வைத்துப் பார்த்தபோதே அதிர்ந்தேன்.

குளித்து, அழகாகத் தலை நீவி, வெள்ளைச் சேலையில் தேவதைபோல பளபளத்தாங்க.

தூக்குத் தண்டணைக்கு ஆளாகப்போகும் கவலை எதுவும் இல்லாமல் அவங்க முகம், அன்று மலர்ந்த ரோஜாபோல் பிரகாசித்தது.

அம்மாவை அணுகியபோது, தொடர்ந்து தன்பின்னால் வரும்படி சைகை காட்டிவிட்டு நடந்தாங்க.

பின்தொடர்ந்தேன் நான். அருகே சிறைக்காவலர் ஒருவரும் வந்தார்.

கட்டிடத்தின் பின்புறத்தே பெரியதொரு விளையாட்டு மைதானம் காணப்பட்டது. அங்கே யாருமில்லை.

சிறைக்காவலர் என்னிடம் கூறினார்.

“சார்.....நான் இங்கே வெயிட் பண்ணுறேன்..... நீங்க உங்கம்மாகூட பேசிட்டு வாங்க.....”

அம்மா மைதானத்தின் மத்திக்கு வந்தாங்க. நானும் அருகே போய் நின்றேன்.

நிமிர்ந்து என்னைப் பார்த்தாங்க அம்மா.

“ஏன் இந்த எடத்துக்கு வந்தோம் தெரியுமா? வெட்டவெளி எடத்தில வெச்சு மெதுவா பேசிறப்ப அதை யாராலும் ஒட்டுக்கேக்கக்கூட முடியாது....”

தொடர்ந்து அம்மாவையே பேசவிட்டு அமைதியாக நின்றேன்.

“வீட்டிலயிருந்து உன்கூட வந்தது யாரு.....”

“அண்ணிதான் வந்திருக்காங்கம்மா......”

“நல்லா யோசனைபண்ணிச் சொல்லு.... வேறை யாரும் வரல்ல......”

“ஓ..... அதைக் கேட்டீங்களா..... அண்ணி வயித்தில அண்ணனோட  குழந்தையும் வந்திருக்கு.....”

“கொஞ்சம் தெளிவாச் சொல்லு......”

“அண்ணி வயித்தில அண்ணனோட குழந்தையும்.......”

நான் பேசி முடிக்கவில்லை.

மறுகணம்.....

“பளார்....” என்று ஒரு அறை கன்னத்தில் விழுந்தது.

அதிர்ச்சியில் நிலைகுலைந்து நின்றேன்.

“இப்ப சொல்லுடா..... அண்ணன் குழந்தையாடா அது.....”

என்னாலே என்னைக் கட்டுப்படுத்த முடியாதபடி உடம்பிலே உதறல் எடுத்தது. வியர்வையால் சட்டையே தொப்பையாகியது. அவமானத்தால் தலை கவிழ்ந்தது.

“அம்மாவை நிமிந்து பாக்கவே முடியல்ல.... இல்லியாடா.....”

நிற்க முடியவில்லை. கீழே புல்தரையில் உட்கார்ந்தேன். அம்மாவும் உட்கார்ந்தாங்க.

“என் நெலமையில வேறையொரு தாயாயிருந்தா, உன்னோட அண்ணனுக்கு வச்ச வெசத்த உனக்கு வெச்சிருப்பா.....உங்கப்பா அடிக்கடி சொல்லுவாங்க , ஆத்திரப்பட்டு ஆராஞ்சு பாக்காமல் எடுக்கிற முடிவு தப்பான வெளைவைத் தரும்.... அது, தப்பு பண்ணினவனைத் தப்பிக்க விட்டிடும்னு.....அந்த மனுசன் இந்த ஒலகத்த விட்டுப் போனாலும் எனக்குள்ள வாழ்ந்துகிட்டிருந்து என்னய சரியா வழிநடத்திவாறாரு.....”

என்னைப்பொறுத்தவரைகொல்லப்படவேண்டியவன் நான்தான். அப்படியானால், அண்ணனை அம்மா கொன்றது எதற்காக.....?

கேட்பதற்கு தைரியம் வரவில்லை. அம்மா புரிந்துகொண்டாங்க.

“நீ என்ன நெனைக்கிறேன்னு புரியிது..... ஓம் பொண்டாட்டி.... அதுதாண்டா, ஊருலகத்துக்கு ஒங்க அண்ணி..... ஒங்க அண்ணனைக் கட்டிக்கிறத்துக்கு முன்னாடி, நீங்க ரெண்டுபேரும் லவ்வு பண்ணினீங்களா.....”

இனியும் மறைக்க ஏதும் இல்லை. உண்மைகள் தெரிந்துவிட்டன.

மனத்தில் தைரியத்தை வரவைத்துக்கொண்டு அம்மாவின் முகத்தை நோக்கினேன்.

“ஆமாம்மா...... ஒண்ணரை வருசத்துக்கு முன்னாடி டவுணில பெரிய ஒரு காம்பிளெக்ஸ் கட்டுவேலை நடந்திச்சு.... எட்டுமாசம் தொடர்ச்சியா நடந்திச்சு..... அதில ஒரு சைடை நான் கன்ராக்ட் எடுத்திருந்தேன்.... அந்த சைடிலதான் இந்தப்பொண்ணும் வேலை பாத்திச்சு.....”

“அப்ப உண்டான லவ்வு......”

“ஆமாம்மா....”

“ரொம்பநாளா பண்ணியிருக்கே..... ஆனா அதை ஏன் ஏங்கிட்ட சொல்லல......”

இந்தக் கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை. இதற்கு என்ன பதில் சொல்வதெனவும் தெரியவில்லை. தடுமாறினேன்.

“ ஓ..... பெத்த ஆத்தாகிட்ட இதைப்போயி எப்பிடிச் சொல்லண்ணு வெக்கம்....பயம்....அப்பிடித்தானே.....”

தொடர்ந்து மெளனித்தேன்.

“எருமைமாட்டு மவனே..... நான் ஒங்க ரெண்டுபேருகிட்டயும் ஒரு அம்மா மாதிரியாடா பழகிட்டிருந்தேன்..... ஒரு பிரெண்ட் மாதிரியெல்லாடா பழகினேன்....

உங்கப்பாவும், நானும் லவ்வு பண்ணித்தான் கட்டிக்கிட்டோம், அதனால எம்புட்டோ கஷ்டப்பட்டோம்னு எத்தனைதடவை திரும்பத்திரும்ப சொல்லியிருக்கேன்......

அப்பிடியானவ ஓங்காதலுக்கு எப்பிடிடா தடையா இருப்பேன்னு முடிவுபண்ணினே.....

ஆரம்பத்திலேயே நீ இதை சொல்லியிருந்தா நேரகாலத்துக்கு சரியான ஏற்பாடெல்லாம் பண்ணி, எல்லாத்தையும் நல்லபடியா முடிச்சிருப்பேனே....

சரி.... அதை விடு..... காதலிச்ச நீ இருக்கிறப்போ, ஊடையில உங்க அண்ணன் எப்பிடி வந்தான்..... உன்னய லவ்வு பண்ணிப்புட்டு, அவனைக் கட்டிக்க இந்தப்பொண்ணு எப்பிடிச் சம்மதிச்சா....”

இதற்கான விளக்கத்தை எந்தப்பக்கமிருந்து ஆரம்பிப்பது என்று யோசித்துவிட்டுக் கேட்டேன்.

“இந்தப் பொண்ணை அண்ணன் கட்டும்போது, எங்க யாருக்காச்சும் தெரியுமா....”

“உங்கண்ணன் யாருக்குத்தான் சொன்னான்....அவனே பாத்தான், பேசினான், கட்டிக்கிட்டான்.... வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்திட்டான்..... அம்மா, அப்பா இல்லாத ஒரு அனாதைப் பொண்ணுன்னான்..... நெலமையைக் கேட்டு நானும் இரக்கப்பட்டேன்.....”

“நல்லா யோசிச்சுப் பாருங்கம்மா..... அந்த டைம்ல நானும் ஊர்ல இல்லை.... ஒரு காண்ராக்ட் சமாச்சாரமா வெளியூர் போயிருந்தேன்..... ஊருக்கு வந்தப்ப நடந்த சமாச்சாரத்த கடைத்தெருவிலயே அறிஞ்சேன்..... வீட்டுக்கு வந்தவேளையில அண்ணன் வெளியில போயிருந்தான்.... அண்ணி சமையல்கட்டிலதான் இருக்கா.... கூப்பிடுறேன்னு சொல்லி, ஏம்மா.... ஓங் கொழுந்தன் வந்திருக்கான்னு சொல்லி நீங்கதான் கூப்பிட்டீங்க.....

இந்தா வந்திடுறேன் அத்தை ன்னு சொல்லிக்கிட்டு வெளிய வந்தவ, என்னய

பாத்த கையோட செலையாட்டம் நிண்ணதையும் அவ கண்ணுரண்டும் கலங்கியதையும் கவனிச்சிங்களா.....”

“கவனிச்சேன்.... யோசிச்சேன்.....எதையும் காட்டிக்க வேணாம்....பாத்துக்கலாம்னு சைலண்ட் ஆனேன்..... அப்போ நீகூட ஒன் சைட்டில வேலைபாத்த பொண்ணுன்னு

சொல்லி சமாளிச்சாய் இல்லியா.....”

“சமாளிச்சது நெசந்தாம்மா..... ஆனா, அவ என்சைடில வேலை பாத்ததும் நெசந்தாம்மா.... அதுக்கப்புறம் என்னய தனியா சந்திச்சு அழுதா....தன்னோட வாழ்க்கையில அண்ணன் விழுந்ததுக்கு காரணத்தயும் சொன்னா....

அந்தக் கன்ராவிய ஏம்மா கேக்கிறே..... அந்தப் பொண்ணோட அப்பன் ஒரு குடிகாரன்..... சூதாடி...... அவங்க அம்மா ஒரு ஊதாரி....

அதே நேரம் புருசனும், பொண்டாட்டியுமா மாத்தி மாத்தி அண்ணன்கிட்ட எக்கச்சக்கமா துட்டுப் புடுங்கியிருக்காங்க.....

வீட்டில சம்பாதிக்கிறதே இந்தப் பொண்ணு ஒருத்திதான்..... பணத்தை கட்டமுடியாததால, எங்க பொண்ணைக் கட்டிக்குங்கன்னு சொல்லிப்புட்டாங்க..... இதுதான் சான்சுன்னு இவனும் கட்டிக்கிட்டான்......”

இப்போது அம்மா அமைதியாக கேட்டாங்க.

”எப்பிடியோ..... அவ உன் அண்ணனுக்கு பொண்டாட்டி ஆகிட்டா.... அவளைப்போய் தொடுறத்துக்கு உனக்கு எப்பிடிடா மனசு வந்திச்சு.....”

“அதுக்கு முதல்காரணமே அண்ணன்தாம்மா.....”

ஒருகணம் அம்மா அமைதியானாங்க. கண்களை மூடி ஏதோ சிந்திச்சாங்க.

“ கூட்டிக் கழிச்சுப் பாத்தா கணக்குச் சரியிருக்கும்னு, சினிமா படங்களிலகூட சொல்லுவாங்க.... ஒருபக்கம் நான் பாத்த கணக்கு..... மத்தப்பக்கம் நீ சொல்ற கணக்கு.... மொத்த எமவுண்டு ஒண்ணுபோலதான் தெரியிது....”

எனகுள் சிறு குழப்பம்.

“என்னம்மா சொல்றீங்க.... கூட்டல்,கழித்தல்,கணக்கு, எமவுண்டுண்ணு.... எனக்கு ஒண்ணுமே புரியல......”

“அதைக் கடைசில சொல்லுறேன்.... இப்போ நீ பேசு..... ஏன்னா, நான் எடுத்த முடிவிலயும் ஏதாச்சும் சின்னத் தப்பு இருக்குமோன்னு மனக்குழப்பத்தோட உசிர விடவேணாம்.... சரிசரி.... மேல சொல்லு......”

ஏதோ ஒரு தயக்கம். வாய்க்கு வராமல் எனக்குள்ளே ஏதோ உருட்டியது.

“என்னதான் இருந்தாலும் மேல்கொண்டு பேசப்போவது, ஒரு தாயும், மகனும் பேசக்கூடிய பேச்சா.....”

வெறுமையான புன்னகையொன்றை வீசியபடியே பேசினாங்க அம்மா.

“புரியிதப்பா.... உங்க வயசைக் கடந்துதான் அம்மாவும் வந்திருக்கேன்..... எனக்கு இப்ப தேவையானது பரிபூரணமான உண்மை.... நாளைக்கு நான் சாகப்போறேன்னு கவலைப்படலை...... உங்கப்பாவை சந்திக்கப்போறேன், அவருகூட கலந்துக்கப் போறேன்ன சந்தோச மெதப்பில இருக்கேன்.....

ஏண்டி இப்பிடிப் பண்ணினேன்னு கேட்டாருன்னா, என்பக்கத்து ஞாயத்த சொல்றப்ப நீ இப்போ சொல்லப்போற சமாச்சாரங்களும் ஒரு சாட்சியாய் இருக்குமில்லியா..... இனிமேல் நான் கேக்கவும் முடியாது.....நீ சொல்லவும் முடியாது.... நடந்ததை அப்பிடியே சொல்லு......”

எனக்குள் கொஞ்சம் இறுக்கத்தைச் சேர்த்துக்கொண்டேன்.

இப்போது நான் சொல்லப்போவதெல்லாம் எனது மரணவாக்குமூலம் போன்றது. இங்கே பொய்யுக்கும், புனைவுக்கும் இடமில்லை.

அதேவேளை என் தாயோடு பேசப்போவதால், அந்தப் பேச்சின் கோணத்தில் புனிதமும், வார்த்தைகளில் கண்ணியமும் அவசியம் என்பதை தீர்மானித்தேன்.

“அண்ணன், அந்தப் பொண்ணைக் கட்டிக்கிட்டானே தவிர,அவகூட ஒருநாளாவது புருசனா வாழ்ந்தது கிடையாது…..”

“கழுதைப்பயல் அப்புறமா எதுக்கு சம்மதிச்சு அவளைக் கட்டிக்கிட்டான்…..”

கோபமாகக் கேட்டாங்க அம்மா.

“டென்சன் ஆகாதீங்க அம்மா…. ஏற்கனவே ஒருதடவை அண்ணனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகி, ஆறு மாசத்துக்குமேல வார்டில கெடந்தானே…..”

“அதுநடந்து மூணுவருசம் ஆகிரிச்சே….. அதுக்கப்புறம் அவன் நல்லாத்தானே இருந்தான்…..”

“இருந்தது வாஸ்தவம்தாம்மா….. ஆக்ஸிடெண்ட் ஆகின டைம்லயே டாக்டர் சொல்லியிருக்காரு….

மேரேஜ் பண்ணுறத கொஞ்சம் யோசிச்சுப் பண்ணுங்க சார்…. ஏன்னா, தண்டு வடத்தில அடிபட்டிருக்கு….. அதனால கவனம் னு தெளிவாத்தான் சொல்லியிருக்காரு….

அதேவேளை கலியாணம்னு ஒண்ணு பண்ணாம இருந்தா, வயசு ஏறஏற சொசைட்டில தனக்கிண்ணு மதிப்பு போயிடும், ஒவ்வொருத்தரும் ஒவ்வொருமாதிரி பேசுவாங்க….

அதனால சும்மா பொம்மைக்காச்சும் ஒருத்தி பொண்டாட்டின்னு இருக்கணும்….. அதேவேளை அம்மா,அப்பா ஸ்ரெடியா உள்ள குடும்பத்தில பொண்ணு எடுத்தா ஒருநேரத்தில அவளுக்கு மனசு வெறுத்துப்போயி இவனை விட்டிட்டும் தாய்வீட்டுக்குப் போயிடலாம்…. இல்லே தப்பான முடிவேதும் எடுத்துக்கலாம்….

அதனால, அம்மா அப்பா இல்லாத பொண்ணாகவோ, அப்பிடி இருந்தாலும் இவளுக்கு எந்தவிதத்திலும் பிரயோசனமில்லாதவங்களாக இருந்தா பிரச்சினை இல்லைன்னு முடிவோட யாருக்குமே சொல்லாம பொண்ணு தேடிக்கிட்டிருந்தான்….

இளிச்சவாய் சிறுக்கி இவள் கெடைச்சா…..”

மீண்டும் கண்களைமூடி சில நொடிகள் மெளனமாகி, கண் திறந்தாங்க அம்மா.

“இரு….. மிச்சத்தை நான் சுருக்கமா சொல்றேன்….

தனக்கிண்ணு பொண்டாட்டி, புள்ளை…. அதனால நிரந்தரமான சமூக அந்தஸ்து…..இத்தனையும் வெளியுலகத்து களங்கம் இல்லாமல் வீட்டுக்குள்ளையிருந்தே கிடைக்கணும்…. அதுக்கு உன்னய யூஸ் பண்ணிக்கிட்டான் உங்கண்ணன்…..

இதில வேடிக்கை என்னண்ணா நீங்க ரண்டுபேரும் ஏற்கனவே லவ்வு பண்ணின சமாச்சாரம் உங்கண்ணனுக்கு தெரியாது….. அந்தப் பொண்ணு, அதுவும் நீ மனசாரக் காதலிச்ச பொண்ணு, பகல்ல அவனுக்குப் பொண்டாட்டி…. நைட்டில உனக்குப் பொண்டாட்டி…..அப்பிடித்தானே…..”

கோபம் பொங்கியது அம்மாவுக்கு.

“அம்மா….. ஒண்ணுமட்டும் உறுதியம்மா…. இந்த வாழ்க்கையில அந்தப் பொண்ணுக்கு துளியளவுகூட விருப்பமில்லைம்மா…. நீ இந்த வாழ்க்கை முறைக்கு சம்மதிக்கல்லைன்னா, என் பொண்டாட்டிகூட வாழ எனக்குப் புடிக்கல….. அதனால லெட்டர் எழுதி வெச்சிட்டு செத்துப்போயிடுவேன்னு மெரட்டியிருக்காரு….. அந்தப் பொண்ணும் வேறை வழியில்லாம ஒத்துக்கிட்டா….

இது அப்பட்டமான உண்மையம்மா….. உங்கமேல சத்தியம்….. தெய்வமா வாழும் அப்பாமேல சத்தியம்….. கருவாயிருக்கிற என் குழந்தை மேல……..”

சொல்லி முடிப்பதற்குள்…..

அடுத்த “பளார்….” கன்னத்தில் விழுந்தது.

“வாயை மூடுடா ராஸ்கல்…. புள்ளை மேலயாடா சத்தியம் பண்ணுறே…..விட்டா பேரப்புள்ளை, பூட்டப்புள்ளைண்ணு வரிசையா எல்லாத்தையும் ஏலம்போட்டுக் கூப்பிட்டிடுவே போல இருக்கு…..

இந்த அறை நீ எத்தனை பொறப்பு எடுத்தாலும் நெனைப்பில இருக்கணும்…..”

என் கண்ணிலிருந்து பொலபொலவெனக் கண்ணீர் கொட்டியது. அருகே உட்கார்ந்திருந்த அம்மாவின் மடியினிலே முகம் புதைத்தேன்.

எத்தனை பிறவிகள் எடுத்தாலும், இப்படியொரு பாக்கியம் கிடைக்குமா….

குலுங்கிக் குலுங்கி அழுதேன். சில நொடிப்பொழுக்குமுன் என் கன்னத்தில் அறைந்த கை, இப்போது எனது தலையைக் கோதிக்கொண்டிருந்தது.

சின்னவயதில் எங்களைத் தூங்கவைக்க அம்மா கையாளும் நுட்பம்.

அப்போது நாங்கள் அனுபவித்த சுகம், தூக்கம் அல்ல….. சொர்க்கம்…..!

இப்போது அம்மாவின் குரல், மெதுவாக வெளிவந்தது.

“எந்திரிப்பா..... டைம் ஆகுது..... ஜெயிலர் வேற வெயிட் பண்ணுறாங்க...... அம்மா பேசவேண்டிய சமாச்சாரம் இன்னும் பேசல்ல.....”

சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, எழுந்து உட்கார்ந்து அம்மாவின் முகத்தையே பார்த்தேன்.

என் கண்ணில் குழம்பிநின்ற கண்ணீர்ச் சகதியை தன் கைகளால் துடைத்துவிட்ட அம்மா, தன் சேலை முந்தானையால் என் முகத்தை துடைத்துவிட்டாங்க.

அதே வாடை....

ஆமாம்..... சிறுவயதில் அம்மாவின் அரவணப்பில் தூங்க முடியாத பட்சத்தில், அம்மா கழைந்துபோட்ட சேலையை எடுத்து, திரட்டி உருட்டி நெஞ்சோடு இறுக்கமாக அணத்துக்கொண்டு தூங்கும்போது, அந்தச் சேலையிலிருந்து வந்ததே ஒருவித வாடை.....

அதே வாடை......

எத்தனை கோடிகள் கொடுத்தாலும், எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இனி எனக்குக் கிடைக்கப்போவதில்லை.

கண்களில் கண்ணீரும் வற்றிவிட்டது. நாளை அம்மாவை எரித்துச் சாம்பலாக்கப்போகும் தீயோ என் நெஞ்சுக்குள்ளே இப்போதே பற்றிவிட்டது.

அதன் அனல்க்காற்று பெருமூச்சாக வெளிப்பட்டது.

“ போதும் போதும்.... நீ விடுற பெருமூச்சில இப்பவே எரிஞ்சிடுவேன் போல இருக்கு.....”

சொல்லிவிட்டுச் சிரிச்சாங்க. நானோ சிரிப்பதுபோல நடித்தேன்.

அம்மாவின் முகம் சீரியஸ் ஆகியது.

அப்படியான வேளைகளில், பக்கத்திலிருப்பவர் பற்றி எதுவும் கவனிக்க மாட்டாங்க.

“உங்கண்ணனைக் கொல்லுறத்துக்கு நாலுநாளைக்கு முன்னாடி, நைட்டு பதினொரு மணியிருக்கும்..... அம்மா அவசரமா பாத்ரூம் போகவேண்ண்டியிருந்திச்சு..... பைப்பிலயும் தண்ணி வரல்ல.....தொட்டியிலயும் சாயந்திரம் தண்ணி புடிச்சுவெக்க மறந்திட்டேன்.....

மாடியிலயுள்ள பாத்ரூமுக்கு போகலாம்னு மெதுவா படியேறி வந்தேன்.... வழக்கமா உள்ரூம்ல உங்கண்ணனும், பொண்டாட்டியும்.....

வெளி வராண்டால நீயும் தூங்குவீங்கன்னு ஏற்கனவே எனக்குத் தெரியும்.....

அந்த டைம்ல உள்ரூம் கதவைத் திறந்து உங்கண்ணன் வெளிய வந்தான்.... நீயும் படுத்திருந்த பாயைவிட்டு எந்திரிச்சே.....

ஏதோ அவசரமா ஏதாச்சும் பேசவந்திருப்பான்னு நெனைச்சேன்..... ஆனா, வந்தவன் எதுவுமே பேசல்ல.....

உன்பாயில அவன் படுத்துக்கிட்டான்..... அவன் படுத்த ரூமுக்குள்ள நீபோயி கதவைத் தாழ்ப்பா போட்டுக்கிட்டே......

இதுக்குமேல என்னவிளக்கம் வேணும்....

உங்கப்பா நேரிலவந்து எனக்குச் செருப்பால அடிச்சதுபோல இருந்திச்சு.....!

மூணு நாளா பைத்தியம் புடிக்காத கொறை ஒண்ணுதான்..... என்னால முடியல்லை....

நீயும், உன் அண்ணனும் வீட்டில இல்லாத டைமா பாத்து, வெளிக்கதவு, யன்னல் எல்லாத்தையும் அடைச்சிட்டு அவளைக் கிச்சன் ரூமுக்குள்ள கூட்டிப்போயி, செவிட்டில ரண்டு அப்பு அப்பிக் கேட்டேன்....

இம்புட்டு நேரமும் நீ சொன்னியே..... இதை அப்பிடியே நூல் வெலகாம சொன்னா.....

நான் கேட்டது.... நீ சொன்னது..... எதைப்பத்தியும் யாருகிட்டையும் பேசக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிக்கிட்டேன்.....

ஒருவேள, உங்கண்ணன் வெளியூரு போயிருக்கிற டைமில இப்பிடியொரு சம்பவத்தை நான் பாத்திருந்தா..... உங்கண்ணனுக்குப்பதிலா நீ போயிருப்பே.....

பாவி..... படுபாவிப் பயல்......தன்னோட அந்தஸ்த்துக்கும், பகட்டுக்குமாக ஒரு அப்பாவிப் பொண்ணோட வாழ்க்கையை பலியாக்கிப்புட்டானேன்னு கொதிச்சே போனேன்.....

வெளியில உள்ளவங்க, உங்க வீட்டுக்காரர் பேரு என்னண்ணு கேக்கிறப்போ, அவளும் உங்கண்ணன் பேரைச் சொல்றப்போ..... அவள் மனச்சாட்சி எம்புட்டுப் பெரிய துடிப்பைக் குடுக்கும் சொல்லு.....

இது ஒருநாள் ரெண்டுநாள் இல்லை..... வாழும் வரைக்கும் இதே வலியோட வாழணும்.....

வாழ்வா அது.... சாவைவிட நரகமானது....!

“ஒருவேளை.... அவளைப் பெத்தவங்க மட்டும் மனிச ஜென்மங்களாயிருந்தா, அவங்க காலடியில போய் விழுந்து கதறி, டைவர்ஸ்சுக்குகூட முயற்சி பண்ணலாம்....

ஆனா, இவளோட ஆத்தாளும், அப்பனும் வேறை எவங்கிட்டையாச்சும் துட்டை வாங்கிக் குடிச்சிட்டு, அவங்கூட இவளைச் சேத்துவெச்சு அசிங்கமாக்கியிருவாங்க....

இயல்பிலையே இவள் தப்பான பொண்ணாயிருந்தா, எதுக்காக கட்டிட வேலைக்குப்போயி, கல்லும் மண்ணும் சுமந்து, கஷ்டப்படணும்..... பேசாம எவன்கூடவாச்சும் ஓடிப்போயிருப்பாளே.....

அடுத்தது நானு..... அவளை யாருண்ணு கேட்டா, மருமக ண்ணு சொல்லித் தப்பிக்கலாம்..... பெரியவன் பொண்டாட்டியா, சின்னவன் பொண்டாட்டியான்னு கேட்டா என்ன சொல்ல.....

பெரியவன் பொண்டாட்டின்னு பொய்யைச் சொல்லி மனச்சாச்சிக்குத் துரோகம் பண்ணவா..... இல்லே, சின்னவன் பொண்டாட்டின்னு சொல்லி, குடும்பத்துக்கே கேவலம் வைக்கவா.....

ஒரு ஸ்ரீராமனுக்கு வாழ்க்கைப்பட்டு, உத்தமியா வாழ்ந்து, அந்த உத்தமனோட புள்ளைங்களை வயித்தில சொமந்த நான், தப்பான வழியில பொறக்கப்போற கொழந்தைக்கு பாட்டீன்னு எப்பிடி ஒத்துக்க முடியும்....

ஒன்னையைப் பொறுத்தவரையில, ஒங்கண்ணனுக்கு பொண்டாட்டியா வந்தவ, படிதாண்டிப்போயி பாவம் பண்ணினா, குடும்பத்துக்கே அவமானம்னு நெனைச்சே.... சரியோ, தப்போ எந்தப் பாவமானாலும், நம்ம வீட்டுக்குள்ளயே இருக்கட்டும்னு நெனைச்சே..... ஓகே.....

இப்போ ஒனக்கும் ஒரு கலியாணம், காட்சி ஆகிரிச்சிண்ணு வை..... அதுக்கப்புறம், இந்தப் பொண்ணை எப்பிடிக் கவனிப்பே....

அப்பிடி ஒண்ணு நடந்திச்சிண்ணு வை... ஒனக்குப் பொண்டாட்டியா வர்ரவளே ஒங்க ரெண்டுபேரையும் கொண்ணுபுடுவா....

தவறினா, ஒன்னய கட்டிக்கிட்டு வர்ரவ ஒங்க ரெண்டு பேராலையும், சாகடிக்கப் படுவா.... உண்மைதானே.....!

ஒனக்கு கலியாணமே ஆகாமல் இருந்தா, ஊர்ச் சனங்கலெல்லாம் கேக்கிற கேள்விக்கு பதில்சொல்ல முடியாம நான் சாவணும்....

அதேவேளை, இவளையும் உன்னையும் வெச்சு ஊரே தூத்தி கல்லறையும் கட்டிடுவாங்க.....

அடுத்தபடியா.....

பெரிய சபைகள் கூடுற எடத்தில வெச்சு ஒங்கண்ணன், அவளப் பொண்டாடின்னு பக்கத்தில உக்கார வைப்பான்..... ஓம்புள்ளைய தன்னோட புள்ளைண்ணு சொல்லி அட்டகாசம் பண்ணுவான்.....

இது எல்லாத்தையும்விட மோசமான ஒரு சம்பவம் நடக்கும்....!

கஷ்டப்பட்டுக் கதைஎழுதின ஒரு எழுத்தாளனோட கதையைத் திருடி, வேறை ஒருத்தன் தன்னோடை பேரைப்போட்டு, அது தன்னாலே எழுதப்பட்ட கதைன்னு தம்பட்டம் அடிக்கிறப்போ, உண்மையான எழுத்தாளனோட மனசில உண்டாகிற வலியைப்போல, தன்னோட குழந்தைக்கு அடுத்தவன் பேரை இன்னிஷலா பதிவு பண்றப்போ வாற வலியானது வேதனையைத் தரும்.....!

இந்த நெலமை வர்ரப்போ நீயும், அவளும் சேந்து உங்கண்ணனைப் போட்டுத்தள்ளக்கூடிய சூழ்நெலையும் வரலாம்.....

இந்தக் கொழந்தை பொறந்த கையோட, அதை ஓங் கையில தூக்கி வெச்சுக்கிட்டு, ரெண்டே ரெண்டு நிமிசம் அதோட முகத்தையே பாரு.....

அப்புறமா இது எங்கண்ணன் கொழந்தைன்னு சொல்லியிடு பாக்கலாம்....

உன்னால சொல்ல முடிஞ்சிட்டா உங்கம்மா, உங்கப்பனுக்குப் பொண்டாட்டி இல்லை..... தெரிஞ்சிக்க.....

இதுவரைக்கும் வந்த பிரச்சினைகளுக்கும், அவன் உசிரோடை இருந்திருந்தா இனிச் சந்திக்கப்போற பிரச்சினைகளுக்கும் மூலகாரணமே ஒங்கண்ணன்தான்.....

இப்ப சொல்லுப்பா....

சந்தர்ப்ப சூழ்நிலையால ஒரு தப்புக்கு துணைபோன நீ.... மூக்கைப் புடிச்சா வாயைத் தொறக்கவே தெரியாத அந்த அப்பாவிப் புள்ளை..... அவ வயித்தில வளந்துகிட்டிருக்கிற எந்தவொரு பாவமும் அறியாத குழந்தை.....

எல்லாரோடை வாழ்க்கையும் ஒங்கண்ணனால வம்பாகணுமா.....

இதுக்கு மேலையும் இவனை வெச்சுப் பாக்கணுமா.....

இதனாலதான் உங்கம்மா ஒரு கொலைகாரி ஆனா..... தண்டனைய விட்டு தப்பணும்னா, அல்லது தண்டணைய குறைக்கணும்னா நடந்த உண்மையை கோர்ட்டில சொல்லி, குடும்ப மானத்தையே விக்கணும்....

தூக்கில தொங்கி சாகப்போறேனேன்னு நான் கவலைப்படல்ல.... இப்பிடியான ஒரு அயோக்கியப் பையனைப் பெத்ததுக்காக கிடைச்ச தண்டணைன்னு சந்தோசப்படுறேன்......

ஏற்கனவே சொன்னமாதிரி உங்கப்பாகூட சேரப்போறேன்னு சந்தோசப்படுறேன்.....

நீயும், என்னோட மருமகளும் ஊராரோட கேலிப்பேச்சு எதுவும் கேக்காம வாழணும்னுதான் வீட்டிலவெச்சு சனங்க முன்னாடி, அந்தப் புள்ளைக்கு வாழ்வு குடுக்கணும், அவ வயித்துக் கொழந்தைக்கு அப்பனா இருக்கணும்னு சொன்னேன்..... நான் பொய்யாய் ஒண்ணும் சொல்லலியே.....”

முகம் மலர்ந்து சிரித்தாங்க அம்மா.

“நல்லா கேட்டுக்கப்பா.... அம்மா என்ன காரணத்துக்காக கொலை பண்ணினாங்க... எதுக்காக மறைச்சாங்கன்னு உனக்கு மட்டுந்தான் தெரியும்.... நாளைக்கு அதிகாலைக்கு மேல அம்மாவும் இருக்கமாட்டேன்....

நீயும் ஒலகத்தில வாழும்வரைக்கும் இந்த உண்மைங்க உனக்குள்ளேயே இருக்கிறமாதிரிப் பாத்துக்க....

ஓம் பொண்டாட்டி கேட்டாலும், அம்மா எதுவுமே சொல்லல்ல ன்னு சாதிச்சுப்புடு.... அப்புறம் தனிப்பட்ட மொறையில கிச்சன் ரூமில வெச்சு அவகிட்ட பேசினதுபத்தி, நான் சொன்னதாக காட்டிக்காதை....

ஒருவேளை அவளாகச் சொன்னா அப்பிடியான்னு கேட்டுக்க....

என் மருமக நல்ல பொண்ணு.... எந்த சூழலிலும் அவ மனசு நோகிறமாதிரி நடந்துக்காத.... முக்கியமா அவளுக்குத் துரோகம் பண்ணாம வாழு.... அவளுக்காகவே வாழு....”

அம்மா எழுந்து நடந்தாங்க. பின்தொடர்ந்தேன் நான்.

சிறைக் காவலரை அண்மித்தபோது, அவரும் தனது கண்களைத் துடைத்துக்கொண்டிருந்தார்.

அம்மா அவரைப்பார்த்து சிரித்தபடியே கேட்டாங்க.

“என்னசார்.... நீங்க எதுக்கு அழுதீங்க.....”

“ஒண்ணுமில்லைம்மா.... ஒங்க புள்ளை, ஒங்க மடியில படுத்துக் கெடந்ததைப் பாத்தப்போ....எனக்கு எங்கம்மா ஞாபகம் வந்திரிச்சு....”

மருமகளைப் பார்த்ததும் கட்டி அணைத்துக்கொண்டாங்க அம்மா.

கதறியழும் அவளின் கண்ணீரைத் துடைத்து நெற்றியில் முத்தமிட்டாங்க.

அடுத்து மருமகளிடமிருந்து தயக்கத்துடன் குரல் வெளிப்பட்டது.

“அத்தை எங்களுக்கொரு ஆசை.... அதுக்கு உங்க பர்மிசன் வேணும்......”

“எதுக்குத் தயங்குறே....கேளும்மா.....”

“பெண்குழந்தை பொறந்தா உங்கபேரை வெச்சுக்கலாமா....”

“ஒருவேளை பையனாயிருந்தா என்னம்மா பண்ணுவே....”

சிரித்துக்கொண்டே கேட்டாங்க அம்மா.

“நிச்சயமா மாமா பேரைத்தான் வைப்போம்.....

“அப்பிடீன்னா டபிள் ஓகே.... என்னோட ரெண்டாவது ஆசையும்

அதுதாம்மா....”

கலகலவென சத்தமாகச் சிரித்தாங்க அம்மா.

நாங்களும் அவங்ககூட சேர்ந்து சிரிப்பதுபோல நடித்தோம்.

--------------------------------

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here