பதிவுகள் முகப்பு

சிறுகதை: இரக்கம்! - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சிறுகதை
09 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சசியின் கையிலிருந்த சிறு அட்டைத்துண்டைக்கூர்ந்து பார்த்தாள் அன்னபூரணி. அவள் முகம் இருளடைந்து தொங்கிப்போயிற்று. அவளின் கண்களிலிருந்து கரகரவென்று கண்ணீர் த்தும்பியது

“ என்னடி இது “ தப்பு நடந்து போச்சக்கா “

“ அடி பாவி மகளே இப்பிடி வந்து நிக்கறியாடி .. யாரு காரணம் . இந்தவீட்லே இருக்க விட்டதுதானா தப்பு “

“ அவசரப்படாதேக்கா.. உனக்கு அதிர்ச்சிதா உடனே என்னோட நல்லா சிரிச்சுப் பேசறது பாவா நெனப்புலே வர்றாரா. அதெல்லா இல்லெ ..இது க்கு என் பாய் பிரண்ட்தா காரணம் “

“ அய்யோ இதெ நான் உங்க பாவாகிட்ட மொத்ல்லே எப்பிடி மறைக்கிறது"

குளியலறைக்குள் சட்டென நுழைந்த அன்னபூரணி சசி கண்ணாடியைப்பார்த்தபடி நின்று கொண்டு 'பிரக்னன்சி கிட்'டைப்பார்த்துக்கொண்டிருந்ததைப்பார்த்து அதிர்ந்து போனாள். அது இரட்டைக்கோடுகளைக்காட்டியது.

சசி முன்னதாக் சிறுநீர் சொட்டுக்களை அதில் விட அது இரண்டு கோடுகளைக்காட்டியது. ஒற்றைக்கோடாய் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்தாள். ஆனால் அது அவளுக்கு அதிர்ச்சியைத்தான் தந்தது. காலையில் நானே பால் வாங்கப்போறன் என்று சசி கடைக்குக் கிளம்பிய பாவாவிடம் சொல்லி விட்டு சென்றாள். மருந்துக்கடையில் பிரக்னன்சி கிட்டை வாங்கினாள். அவசரகதியில் குளியறைக்குள் நுழைந்து சோதிக்க ஆரம்பித்து விட்டாள்.

சசியின் உடம்பில் வியர்வை வழிந்தோடியது. வலது மூலையில் கிடந்த பாவாவின் அழுக்குத்துணிகள் அருவருப்பூட்டின.சுவரில் தெரிந்த திட்டுத்திட்டான அழுக்கு அக்கா எவ்வளவு வேலையைத்தான் செய்வாள் என்ற யோசனையைத் தந்தது . அவளின் தனியார் நிறுவன வேலைக்குச் சென்றால் நாள் முழுவதும் போய் விடுகிறது எப்பவாவது ஞாயிறில் அருணோடு கொஞ்ச நேரம் இருக்க முடிகிறது. மற்றபடி அருணைச்சந்திப்பது அவளின் மதிய உணவு இடைவேளையில்தான் .

மேலும் படிக்க ...

பெருங்கதையில் உவமைகள்!  - மித்ரா -

விவரங்கள்
- மித்ரா -
இலக்கியம்
08 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை:
சொல்லப் புகுவதனைத் தக்க ஒப்புமை கொண்டு உணர்த்துவது உவமை. பேச்சிலும், எழுத்திலும் உவமையைக் கையாளாதவர் எவருமிலர் எனலாம். புலி போலப் பாய்ந்தான், மான்போல ஓடினாள் என எளிய மக்களும் உவமை கூறக் காண்கிறோம். அணிகட்கெல்லாம் தாயாக விளங்குவது உவமை அணியே… சொல்லப் புகும் கருத்து உவமையால் வலிவு பெறுகிறது.

பெருங்கதை உவமை:
பெருங்கதையில் நானூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் உவமைகள் ஆளப்பட்டுள்ளன. பெருங்கதையாகிய தங்க வளையலில் உவமைகளாயாகிய மணிக்கற்களைப் பொருத்தமுறப் பதித்து ஆசிரியர் ஒளி கூட்டியுள்ளார்.
ஒரே அடியில் உவமைகளை எடுத்தாண்டு உள்ளத்தைக் கொள்ளை கொள்வதில் கொங்குவேள் சிறப்பிடம் பெறுகிறார்.

பட்டும் படாப்பேச்சு:
ஒருவரிடம் பலர் வந்து ஒன்றை வேண்டும் போது அவர் கூறும் மறுமொழி, கேட்பவர் தங்கட்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கைக்கு இடம் தந்தும் அதே வேளை அவர் எவ்விதப் பிடியும் கொடுக்காமலும் பேசுவதற்குக் குரங்கு தன் குட்டியைத் தாங்குவது உவமையாகக் கூறப்பட்டுள்ளது. குட்டி தன்னை நன்றாகப் பற்றிக் கொள்ளத் தாய்க்குரங்கு இடந்தருகிறதேயன்றித் தான் குட்டியைப் பற்றிப் பிடிப்பதில்லை. இவ்வுவமையை ஆசிரியர் கொங்குவேள் பிரச்சோதனன் மூலம் பொருந்திக் காட்டுகிறார்.

மரனிவர் குரங்கின் மகக்கோட் போல
நிலைமையொடு தெரிதரு நீதியனாகி
ஆவது துணிதுணை ஆசையின் நிறீஇ
பிரச்சோதனன் பேசினான்.

மேலும் படிக்க ...

இந்திய இசைக்குயில் தன் கூவலை நிறுத்தியது! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
06 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற திரைப்படப் பாடகி லதா மங்கேஸ்கார் மறைந்த செய்தியினை அறிந்தேன். மிகப்பெரிய இழப்பு, ஆனால் அவரது இருப்பு கொண்டாடப்பட வேண்டிய நிறைவான இருப்பு. இனி அவர் தன் கானங்கள் மூலம் நம்மிருப்பில் , வருங்கால மானுட இருப்பில் நிலைத்து நிற்பார். ஆழ்ந்த இரங்கல்.

அவர் நினைவாக அபிமான் திரைப்படத்திலிருந்து  இரு பாடல்கள்:

1.  https://www.youtube.com/watch?v=QpfolokBUik

2. https://www.youtube.com/watch?v=59EJJrOzTWw

இலங்கை - பெப்ரவரி 4, 2022 : பால்மா இல்லாத சுதந்திரம்! - செ.சுதர்சன் -

விவரங்கள்
- செ.சுதர்சன் -
கவிதை
05 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மரியாதை வேட்டுகளின்போது
எழும் நச்சுப் புகையில்
பால்மா இல்லாத தேசத்தின்
கொடி சுமந்த
என் குழந்தைகள்
சோர்ந்து விழுந்தார்கள்... 

மேலும் படிக்க ...

மருத்துவர் பிரியாந்தினி கமலசிங்கத்துக்கேற்பட்ட மிரட்டல்களும், அவரது எதிர்வினையும் பற்றி...

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
05 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கண்டாவளை மருத்துவர் பிரியாந்தினி கமலசிங்கம் தனது முகநூற் பக்கத்தில் பதிவொன்றினை இட்டிருக்கின்றார். அவருக்கு ஏற்பட்ட மிரட்டல்கள் பற்றிய பதிவு. அவரது துணிச்சலை, சமுதாயப்பிரக்ஞையை வெளிப்படுத்தும் அதே சமயம் அதன் இறுதி வரிகள் கவலையையும் தரும் பதிவு.

"நிச்சயம் வெளியே கிளினக்கில் பேசன்ட் பார்க்கச்செல்கையில் என்னைக்கொல்வீர்கள். அன்றும் இதே சிரித்த முகத்துடன்  வாழ்க்கையை முழுதுமாக அனுபவித்த திருப்தியுடன் அரசியல் கலப்படமற்ற வைத்தியராக இறப்பேன்."

என்னும் வரிகள் மருத்துவர் ராஜினி திரணகமாவை நினைவூட்டுகின்றன. ராஜினி திரணகமாவுக்கு ஏற்பட்ட நிலை மீண்டும் பெண்ணொருவருக்கு ஏற்படக் கூடாது. அதற்கு யாரும் இடம் கொடுக்கக் கூடாது.

இவருக்கு நான் கூறுவது இதனைத்தான்:

"உங்களைப்போன்ற துணிச்சலும், அறிவும், சமுதாயப்பிரக்ஞையும் மிக்க இளையவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது. அதே நேரத்தில் உங்கள் மருத்துவத் தொழிலையும் நீங்கள் தொடரலாம். அரசியலில் வருவதன் மூலம் உங்களுக்கும் ஒரு மேலதிகப் பாதுகாப்பு கிடைக்கும். தற்போதுள்ள சூழலில் உங்களைப்போன்ற துணிச்சலும், ஆற்றலும், மக்கள் சேவையில் நாட்டமும் உள்ள இளையவர்கள் குறைவு. உங்களுக்குள் மருத்துவருடன் கூட சமூக, அரசியற் செயற்பாட்டாளரும் இருக்கிறார்கள். அதனால்தான் ஊழல்களுக்கெதிராக உங்களால் இவ்வளவு தூரம் துணிச்சலுடன் செயற்பட முடிகின்றது. நீங்கள் புதியதொரு சமூக நலன் பேணும் அமைப்பொன்றைக்கூட உருவாக்கலாம். அதன் கீழ் ஆயிரக்கணக்கில் பலர் அணி திரளும் சாத்தியமுண்டு. அவ்விதம் செய்தால் யாரும் தனிப்பட்டரீதியில் உங்களுக்குத் தொல்லை கொடுக்க மாட்டார்கள். மக்கள் ஆதரவும் உங்களுக்கு பாதுகாப்பரணாக விளங்கும்."

மேலும் படிக்க ...

நேர்காணல் பகுதி ஆறு (இறுதிப் பகுதி) : ஓவியர் வீரப்பன் சதானந்தனுடன் ஓர் உரையாடல்! - நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -

விவரங்கள்
- நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
05 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

கேள்வி: சென்றமுறை கதைக்கும் போது, தூரிகையானது நிறங்களில் எப்படி தோய்த்தெடுக்கப்படுகின்றதோ அதைவிட முக்கியமாக வாழ்வில் தோய்த்தெடுக்கப்பட வேண்டி இருக்கின்றது என கூறினீர்கள். அதாவது இவ்விரு அம்சங்களுமே ஒரு ஓவியத்தின் வெற்றியை அல்லது அதன் சாரத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுவதாக கூறினீர்கள். முக்கியமாக ஓவியத்தில் வெளிப்படும் கருப்பொருளானது ஓர் ஓவியரின் வாழ்க்கை யதார்த்தத்தை பிரதிபலித்தே ஆகும் என்பதனை பிக்காசோவின் ஓவியங்களை கொண்டு நீங்கள் வாதித்தீர்கள். இப்பின்னணியில் இளைய தலைமுறையினருக்கான உங்களின் செய்தி என்னபதில்: இளைய தலைமுறையினருக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு தகுதியுடையவன் என்று என்னை நான் கருதி கொள்ளவில்லை. ஆனால் இதை சொல்லலாம். அதாவது இளைய தலைமுறையினர் ஆழ்ந்து, மிக ஆழ்ந்து கடந்த கால ஓவிய பிரமாண்டங்களை கற்க வேண்டும். அது கொன்ஸ்டாபிளாக இருக்கலாம். அல்லது மொனேயாக இருக்கலாம். அல்லது பிக்காசோவாக இருக்கலாம். இது ஒரு துறை. ஆழமான, கண்டிப்பான, மிக பரந்த பரப்பிது. கடும் உழைப்பையும், அர்ரப்பணிப்பையும் கோரக்கூடியது இது.

மேலும் படிக்க ...

சிறுகதை: தொட்டால் சுடுவது..! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
சிறுகதை
03 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ரொரன்ரோ ஸ்கைடோம் வாசலில் ஒரே பரபரப்பாக இருந்தது. வானம் பார்த்த அந்தப் பிரமாண்டமான மண்டபத்தில் ஏ.ஆர். ரகுமானின் இன்னிசைவிருந்து இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாக இருந்தது. விளக்கை நோக்கி விட்டில் பூச்சிகள் வருவது போல இன்னிசையால் ஈர்க்கப்பட்டவர்கள் பல திசைகளிலும் இருந்து அங்கே வந்து குவிந்து கொண்டிருந்தனர்.

சிந்துஜா அந்த மண்டபத்தை இரண்டு தடவைகள் சுற்றி வந்து விட்டாள். ஸ்கைடோம் வாசலில் அவளது அறைத்தோழி ரமணியைச் சந்திப்பதாக இருந்தது. ஸ்கைடோமுக்கு எல்லாப் பக்கமும் வாசல் இருப்பதால் எந்த வாசலில் சந்திப்பது என்ற சந்தேகத்தில் தான் அவள் சுற்றி சுற்றி வந்தாள். கோயிலுக்குப் போனால்கூட ஒரு தடவை பிரகாரத்தைச் சுற்றிவர கஸ்டப்படுபவள் இன்று இந்த மண்டபத்தை இரண்டாவது தடவை சுற்றி வரும்போது இசையால் எவ்வளவு தூரம் கவரப் பட்டிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்த்தாள். ரமணியிடம் தான் இவளது டிக்கட்டும் இருந்தது. இவள் வேலை முடிந்து இங்கே வருவதாகவும் ரமணி இங்கே காத்திருப்பதாகவும் ஏற்பாடாகி இருந்தது. என்ன காரணத்தாலோ ரமணியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்னும் சொற்ப நேரத்தில் நிகழ்ச்சியை ஆரம்பிக்கப் போவதாக வேறு அறிவித்து விட்டார்கள். வேறு டிக்கட்டை வாங்கிக் கொண்டு உள்ளே போகலாம் என்றால் டிக்கட் எல்லாம் விற்பனையாகி விட்டதற்கான ‘சோல்ட் அவுட்’ என்ற அறிவிப்பு வாசலில் பளீச்பளீச் சென்று மின்னிக் கொண்டிருந்தது.

மேலும் படிக்க ...

ரஸ்யாவின் ஆளில்லாத நவீன போர் விமானம். - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
03 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இரண்டாம் உலகயுத்தத்தில் ஜெர்மனி, இத்தாலி, யப்பான் ஆகிய மூன்று நாடுகள் கூட்டுச் சேர்ந்து உலகத்தைத் தங்கள் வசப்படுத்தப் போராடியது ஞாபகம் இருக்கலாம். லட்சக்கணக்கான உயிர்களைக் காவு கொடுத்த அந்த யுத்தத்தின் முடிவு என்னவென்பதும் எல்லோருக்கும் தெரியும். அதேபோன்ற ஒரு நிலை இப்போது எற்பட்டிருக்கின்றது. ரஸ்யா, சீனா, ஈரான் ஆகிய மூன்று நாடுகள் ஒன்றாகக் கூட்டுச் சேர்ந்தது மட்டுமல்ல, நவீன தொழில் நுட்பத்தில் முன்னேறிய இரண்டு வல்லரசுகள் ஒன்று சேர்ந்திருக்கின்றன. நேட்டோ படைகள், கப்பல்கள் உக்கிரேனைப் பாதுகாக்க பால்டிக் நோக்கி ஒருபக்கம் முன்னேறிக்கொண்டிருக்க, அமெரிக்கா தனது படைகளைத் தயார் நிலையில் வைத்திருக்கின்றது. இந்த நிலையில் ரஸ்யா தனது ஆளில்லாத புதிய விமானத்தின் சாதனைகளை உலகிற்கு அறிவிக்க முற்பட்டிருக்கின்றது. எந்தவொரு விமானத்தையும் எதிர்கொண்டு அடித்து வீழ்த்தி விடுவோம் என்று மார்தட்டி நிற்கின்றது.

மேலும் படிக்க ...

மருத்துவர் பிரியாந்தினி கமலசிங்கத்துக்கு ஏற்பட்ட நிலை! - வ.ந.கிரிதரன்-

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
02 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கிளிநொச்சி கண்டாவளை MOH பிரியாந்தினி கமலசிங்கம் அவர்கள் பற்றிய செய்தியினை முகநூல் முகநூல் வாயிலாக அறிந்தேன். அண்மையில் கிளிநொச்சியில் மாணவர்கள் பலருக்குப் பொய்யாகக் கண்ணில் குறைபாடு உள்ளதாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளை விற்கவிருந்த செயற்பாட்டைப் பகிரங்கப்படுத்தியன் மூலம் மேற்படி மருத்துவ ஊழல் நடவடிக்கையில் ஈடுபடவிருந்தவர்களின் மிரட்டல்களுக்கு ஆளாகியிருக்கின்றார் இந்த மருத்துவர். அது பற்றி முகநூலில் வெளியாகியிருந்த ஊடகச் செய்திகளுக்கான இணைப்புகளைக் கீழே தந்துள்ளேன்.

மேலும் படிக்க ...

கணையாழி: பாரதியாரும் ருஷ்ய புரட்சி பற்றிய அவரது சிந்தனைகளும்!  - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
01 பிப்ரவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- கணையாழி சஞ்சிகையின் பெப்ருவரி 2022 இதழில் வெளியான எனது கட்டுரை.  கட்டுரையில் தவறுதலாக அக்டோபர் புரட்சி நடைபெற்ற ஆண்டு 2017 என்று அச்சாகியுள்ளது. இது எனது தட்டச்சுப்பிழை. அதனை 1917 என்று மாற்றி வாசிக்கவும். கணையாழி சஞ்சிகை மின்னிதழாக வெளியாகின்றது. மக்ஸ்டெர் இணையத்தளத்தில் சந்தா கட்டி அதனை வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள முகவரி: http://www.magzter.com/IN/Kanaiyazhi/Kanaiyazhi/Celebrity/


பாரதியாரின் எழுத்துகள் தேடல் மிக்கவை. தெளிவு மிக்கவை. மானுடப் பருவத்தின் பல்வேறு படிகளிலும் , மானுட அறிவின் வளர்ச்சிக்கேற்ப புதிய அர்த்தங்களைத் தந்து விரிந்து செல்பவை. அவரது வாழ்வு குறுகியது. அக்குறுகிய வாழ்வினுள் அவர் எழுதினார். மானுட இருப்பு பற்றிச் சிந்தித்தார். சக மானுடர்கள்தம் வாழ்க்கை, அவற்றின் தரம், பிரச்சினைகள், துயரம் , தீர்வு என்றெல்லாம் சிந்தித்தார். அந்நியராதிக்கத்தில் அடிமைப்பட்டுக்கிடந்த பிறந்த நாட்டின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தார். தான் வாழ்ந்த மானுட சமூகத்தின் வர்க்க விடுதலைக்காக, வர்ண விடுதலைக்காகச் சிந்தித்தார். எழுதினார். அத்துடன் எழுத்துடன் நின்று விடாது சமூக, அரசியல் மட்டத்தில் செயற்பட்டார். பிறநாட்டுப் படைப்புகளையெல்லாம் வாசித்தார். அவற்றிலிருந்து அறிந்தவற்றைத் தன் சிந்தனைத் தேடலுக்குட்படுத்தினார். அத்தேடலினூடு தானடைந்த ஞானத்தைக் கட்டுரைகளாக்கினார். கவிதைகளாக்கினார்.

என்னைப்பொறுத்தவரையில் அவரது படைப்புகள் மட்டுமல்ல வாழ்க்கையுமே ஒரு வழிகாட்டிதான். என்னிடம் எப்பொழுதுமே பாரதியாரின் கவிதைத்தொகுப்பு என் முன்னால் மேசையிலிருக்கும். அவ்வப்போது அதைப்பிரித்து வரிகள் சிலவற்றை வாசித்தாலே போதும். சோர்வு அகன்று விடும். இருப்பின் இன்பம் , அர்த்தம் புரிந்து விடும். பாரதியாரின் கவிதைத்தொகுப்பொன்றினை என் வாசிப்பின் ஆரம்பப்படிக்கட்டிலேயே அப்பா வாங்கித் தந்திருந்தார். {கூடவே புலியூர்க் கேசிகனின் சங்க இலக்கியப் பொழிப்புரை நூல்களும் கூடவே ராஜாஜியின் சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணம்), வியாசர் விருந்து (மகாபாரதம்) நூல்களையும் வாங்கித் தந்திருந்தார். இராமாயணனும், மகாபாரதமும் ஒவ்வொருவர் வீட்டிலிருக்க வேண்டுமென்பது அவரது கருத்து. அதனாலேயே குழந்தைகள் ஐவருக்கும் அக்காப்பியங்களிலிருந்தே பெயர்களையும் சூட்டினார். சசிரேகா, கிரிதரன், பாலமுரளி, மைதிலி, தேவகி என்பது அவர் எங்களுக்கு வைத்த பெயர்கள் என்றால் அவர் இவ்விடயத்தில் எவ்வளவுதூரம் ஆர்வமாகவிருந்தார் என்பதைப் புலப்படுத்தும். )

என்னை மிகவும் அதிசயிக்க வைத்த ஒரு விடயம். பாரதியார் தன் கவனத்தைக் கம்யூனிச அமைப்பின் மீது, அதற்கான ஆயுதப் புரட்சியின் மீது திருப்பியதுதான். அக்டோபர் 1917இல்தான் ருஷியாவில் புரட்சி நடைபெற்று உலகின் கவனத்தை ஈர்த்தது. பாரதியாரின் கவனத்தையும் அது ஈர்த்தது. அது பற்றி அவர் நிறையவே சிந்தித்திருக்கின்றார். அதன் நன்மை, தீமைகளைப்பற்றித் தனது எழுத்துகளில் தர்க்கித்திருக்கின்றார். அது அவர் வாழ்ந்த சூழலில் மகத்தானதொரு விடயமாக எனக்குத் தென்படுகின்றது.

மேலும் படிக்க ...

சிறந்த நூல்களுக்கு ஐம்பது ஆயிரம் ரூபா பரிசு பெறும் இலங்கை எழுத்தாளர்கள் ! மறைந்த ஈழத்து இலக்கிய ஆளுமைகளின் நினைவாக வழங்கப்படுகிறது !! - தகவல்: அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் . -

விவரங்கள்
- தகவல்: அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் . -
நிகழ்வுகள்
31 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில், கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் வெளியான நூல்களில் சிறந்தவற்றை தேர்வுசெய்து, அவற்றை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கத் தீர்மானித்திருந்தது.

இந்தத் தீர்மானத்திற்கு அமைவாக குறிப்பிட்ட இரண்டு ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் வெளியான சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை , மொழிபெயர்ப்பு முதலான ஐந்து துறைகளில் வெளியான நூல்கள், அவற்றை எழுதிய எழுத்தாளர்களிடமிருந்து கோரப்பட்டிருந்தன. அதன்பிரகாரம் கிடைக்கப்பெற்ற நூல்களை தேர்ந்த இலக்கிய வாசகர்கள் படித்து, பரிந்துரை செய்தவற்றிலிருந்து இறுதிக்கட்டத் தேர்வில் சிறந்த நூலாக தெரிவானவற்றுக்கு பரிசில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மொழிபெயர்ப்புத் துறையில் ஒரே ஒரு நூலே போட்டிக்கு வந்தமையால், இனிவரும் ஆண்டுகளில் நடத்தவிருக்கும் போட்டியில் அதனை பரிசீலிப்பது என முடிவாகியிருக்கிறது.

மேலும் படிக்க ...

அரசியல் ஆய்வு: மோடிக்கான கடிதம், 13ம் திருத்தம், இலங்கை-இந்திய ஊடகங்களின் நிலைப்பாடுகள். - யோ.திருக்குமரன் -

விவரங்கள்
- யோ.திருக்குமரன் -
அரசியல்
30 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1

தினக்குரலின் பொங்கல் வெள்ளி இதழ் (14.01.2022) தனது தலைப்பு செய்தியாக, (கொட்டை எழுத்துக்களில்) பின்வரும் செய்தியை தீட்டியிருந்தது: “மோடிக்கான கடிதம் முற்றாக மாற்றம்” கடிதம் இறுதியாக்கப்பட்டு, தினங்கள் கழிந்த நிலையில், மேற்படி ‘கொட்டை எழுத்தை’, ‘தலைப்பு செய்தியாக’ வாசிக்கும் வாசகனில், மேற்படி செய்தி பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்துவதாகவே இருக்கும். ஆனால், இதனைவிட அடுத்த அடியே, செய்தியாளரின் மரண அடி கொடுக்கும் அவாவினை பேசுவதாய் இருந்தது: “இதனை செய்தது தமிழரசு கட்சியே – சுமந்திரன்”

கிட்டத்தட்ட, மூன்று பத்திகளாக (Columns) ஓடிய, 71 வரிகொண்ட, மேற்படி செய்தியில், சுமந்திரனால் ஆற்றப்பட்டதாக கூறப்படும் கூற்றை, முழுமையாக வாசித்து பார்த்தால், இக்கூற்றின் 71 வரிகளில், கடைசி ஆறே ஆறு வரிகள் மாத்திரமே இக்கடித தயாரிப்பில் தமிழரசு கட்சி இடைநடுவே ஈடுபட தொடங்கியது என்பதும், இடைநடுவே ஏற்பட்ட அத்தகைய பங்களிப்பை தொடர்ந்து, கடித அமைப்பின் நோக்கம் - அதன் கோரிக்கை – அதன் தலையங்கம் - இவை மாற்றம் கண்டன என்பனவும், மேற்படி செய்தியில் சுமந்திரன் ஆற்றிய கூற்று கூறப்பட்டிருந்தது.

அதாவது, இந்நீண்ட அறிக்கையின் கடைசி மூன்றே மூன்று வரிகளில் மாத்திரமே தமிழரசு கட்சி, அறிக்கையில், இடைநடுவே செய்த, நோக்கம்-கோரிக்கை–தலையங்கம் வெளிப்படுத்தப்பட்டு இருந்தன. தமிழரசு கட்சி போன்ற கட்சியானது இடைநடுவே சேர்ந்த பின், - இம்மாற்றங்கள், எதிர்ப்பார்க்கக்கூடிய ஒன்றே. இது ஒரு புறம் இருக்க, இதன் மிகுதி பகுதியான, 65 வரிகளும் பின்வரும் விடயங்களை விஸ்தாரமாக விவாதித்தன.

மேலும் படிக்க ...

அறிமுகக் குறிப்பு: க.தணிகாசலத்தின் 'பிரம்படி' - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
நூல் அறிமுகம்
30 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

க.தணிகாசலத்தின் 'பிரம்படி'. தேசிய கலை இலக்கிய பேரவைக்காக சென்னை புக்ஸ் வெளியிட்ட இச்சிறுகதைத் தொகுதியை நூலகம் இணையத்தளத்தில் கண்டேன். எழுத்தாளர் க.தணிகாசலம் எழுதி , தாயகம் சஞ்சிகையில் வெளியான சிறுகதைகளிவை, இன்னும் முழுமையாக இத்தொகுப்பை நான் வாசிக்கவில்லை. ஆனால் வாசித்த சிறுகதைகளின் அடிப்படையில் இத்தொகுப்பை முக்கியமானதொரு தொகுப்பாக என்னால் உணர முடிகின்றது.

மேலும் படிக்க ...

காணொளி: மக்கள் மனம் நிறைந்த மல்லிகை டொமினிக்ஜீவா - லண்டன் காணொளி - தயாரிப்பு லண்டன் எஸ்.கே. ராஜென் - தகவல்.முருகபூபதி -

விவரங்கள்
Administrator
கலை
29 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மக்கள் மனம் நிறைந்த மல்லிகை டொமினிக்ஜீவா - லண்டன் காணொளி - தயாரிப்பு லண்டன் எஸ்.கே. ராஜென்

https://www.youtube.com/watch?v=OfXStXFhDYc

கவிஞரே! மீண்டு வருக!

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
28 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் கொரோனாப் பாதிப்பால கிண்டிவனம் கிங்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியினை முகநூல் மூலம் அறிந்தேன். கவிஞர் ஜெயபாலன் மிகவிரைவில் பூரண நலத்துடன் மீண்டிட வேண்டுமென்று வேண்டிக்கொள்கின்றேன்.
 
வாழ்க்கையில் சவால்களை நம்பிக்கையுடன், துணிவுடன் எதிர்நோக்குபவர் ஜெயபாலன். அவரது அந்த ஆளுமை அவரை விரைவிலேயே இப்பாதிப்பிலிருந்தும் மீட்டு வரும்.

எதிர்வரும் சனிக்கிழமை, பேராசிரியர் சிவசேகரத்துடனான சந்திப்பு நிகழ்வும், அதற்கான Zoom இணைப்பும்! - எம்.பெளசர் -

விவரங்கள்
- எம்.பெளசர் -
நிகழ்வுகள்
28 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87604318200?pwd=Y1FOdW1zWnZyZXRyOUVNaVVFOUs2dz09

Meeting ID: 876 0431 8200
Passcode: 122791

மேலும் படிக்க ...

(தொடர் கட்டுரை) ஜெயமோகனின் வெள்ளையானை நகர்த்தும் அரசியல் (8 & 9) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
27 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

8

ஆங்கிலேயர் ஆட்சியின் மீது இந்திய மக்களுக்கு ஏற்பட்ட ஆத்திரங்களின் பிரதிபலனாய் பல்வேறு எழுச்சிகள் இந்தியாவில் நடந்தேறுகின்றன. 1857 முதல் 1859 வரை நடந்த சிப்பாய் கலகம் முதல் (8லட்சம் மக்களை பலி கொண்ட இக்கிளர்ச்சி கங்கை-யமுனை நகரங்களிலும் அவத்தை, புந்தல்காண்ட், அலிகார், லக்னோ, கான்பூல், அலகாபாத் போன்ற நகரங்களில் வரி கட்டாமலும் காலணியாட்சி அதிகாரிகளை விரட்டியடித்தும் பதிலுக்கு தத்தம் நிர்வாக அமைப்புகளை நியமித்தும்) பின் 1876-1878இல் நடந்தேறிய உப்பு வரி எதிர்ப்பு போராட்டம் மேலும் 1889 இல் சென்னை மாகாணத்தின் கோதாவாரி ஆற்றின் கரையில் நடந்தேறிய ராம்பா விவசாயிகளின் கிளர்ச்சி இவை அனைத்திலும் இந்திய மிதவாத சக்திகள், ஆங்கிலேயரின் நண்பர்களாகவே செயல்பட தலைப்பட்டனர். அவர்களின் நலன்கள் ஆங்கிலேய நலன்களுடன் பிண்ணி பிணைந்ததாய் இருந்தன. எனவேத்தான் இவர்களுக்கு சுதேசியம் என்பது முக்கியமற்று போனது.

வெள்ளையானை கூறுகின்றது:

“டியூக்கின் உதடுகள் திறந்ததும் எய்டன் நிறுத்தினான்… நீ சொன்னது சரித்தான்… இந்த சந்தர்ப்பத்தில் நம்முடைய மொத்த நீதியுணர்வும் சோதிக்கப்படுகின்றது… நம்முடைய யதார்த்தமும் நம்மை சோதிக்கின்றது… நம்முடைய யதார்த்தம் மதராசையோ அல்லது இந்தியாவையோ மட்டும் கருத்தில் கொள்வதல்ல. நாம் உலகம் முழுவதை கருத்தில் கொண்டு சிந்திக்க வேண்டியிருக்கிறது…” (பக்கம் - 264)

அண்மையில் பி.ஜே.பி யின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமித்ஷாவும், பா.ஜ.க வானது இலங்கையிலும் நேபாளிலும் தோற்றுவிக்கப்படும் என அறிவித்திருந்தார்.

மேலும் படிக்க ...

ஜனவரி 28! மல்லிகை ஜீவா மறைந்து இன்றுடன் ஓராண்டு ! ஜீவாவை நினைவுகூரும் புதிய இரண்டு நூல்கள் ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
27 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

யாழ்ப்பாணத்தில் சாதாரண மத்திய தரக் குடும்பத்தில் பிறந்து, உயர்கல்வியை பெறுவதற்குரிய வாய்ப்பு வசதிகளை இழந்து, அறிஞர்களினதும் முற்போக்கு எழுத்தாளர்களினதும் நூல்களை வாசித்துப்பெற்ற அனுபவங்களினாலேயே மேதையாக வலம்வந்து, ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்திருக்கும் மல்லிகை ஜீவா, கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் தமது 93 வயதில் மறைந்தார்.

மேலும் படிக்க ...

வாசிப்பு அனுபவம் :  முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை! இலங்கைத் தலைநகரின் கதையை கூறும் நூல் !  - ஜோதிமணி சிவலிங்கம் -

விவரங்கள்
- ஜோதிமணி சிவலிங்கம் -
நூல் அறிமுகம்
25 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியாவில் முப்பது வருடங்களுக்கும் மேலாக வதியும் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் ஈழத்து இலக்கிய உலகில் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர். மல்லிகை ஜீவா அவர்களால் அரை நூற்றாண்டுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட இலக்கியவாதி, ஊடகவியலாளர். சிறுகதை, நாவல் முதலான துறைகளில் இலங்கையில் இரண்டு தடவை தேசிய சாகித்திய விருதுகள் பெற்றவர். இதுவரையில் 25 நூல்களை எழுதியிருக்கும் முருகபூபதியின் மற்றும் ஒரு வரவுதான் நடந்தாய் வாழி களனி கங்கை. இதனை கொழும்பில் குமரன் புத்தக இல்லம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.

கிழக்கிலங்கையில் திரு. பூபாலரத்தினம் சீவகன் அவர்கள் வெளியிட்டு வரும் அரங்கம் வார இதழில் வெளியானதே நடந்தாய் வாழி களனி கங்கை தொடர். தற்போது நூலுருப்பெற்றுள்து. கணத்திற்குக் கணம் மாறிக்கொண்டிருக்கும் இப்பூவுலகில் இந் நூலானது கடந்து போன காலங்களையும், அக்காலத்தில் நடந்த சம்பவங்களையும் எமது கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றது. அத்துடன் இந்நூலில் இடம்பெற்றுள்ள பல நிகழ்வுகள் நம்மை எமது முந்திய காலத்திற்கும் அழைத்துச் செல்கிறது. உதாரணத்திற்கு வீரகேசரி, லேக் ஹவுஸ் (Lake house) , ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முதலான செய்தி ஊடகங்கள் சார்ந்தனவற்றின் வரலாறுகளாகும்.

பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் இலங்கைத் தலைநகரில் நடந்த பல சம்பவங்களையும் இந்நூல் நினைவுபடுத்துகின்றது. களனி கங்கையின் ஆரம்பப் பெயர் கல்யாணி என்பதையும் நாளடைவில் அது களனி என மாற்றம் அடைந்ததையும் நூலாசிரியர் கூறியுள்ளார். அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்த குதிரைப் பந்தயம், சூதாட்டம் பற்றியும் கூறியபோதுதான் அக்காலத்தைய கசினோ பற்றிய வரலாறு புரிந்தது.

மேலும் படிக்க ...

முனைவர் சுனில் ஜோகியின் நீலகிரிப் பாடகர் பற்றிய புதினம் 'மாதி'!

விவரங்கள்
Administrator
நிகழ்வுகள்
25 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
முனைவர் சுனில் ஜோகி அவர்களைப் பதிவுகள் வாசகர்கள் நன்கறிவார்கள். நீலகரிப் படகர்களைப்பற்றிய அவரது ஆய்வுக்கட்டுரைகள் பல பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளன. இப்பொழுது மகிழ்ச்சியான தகவலொன்றை அவர் அனுப்பியுள்ளார். நீலகிரிப் படகர் இன மக்களைப் பற்றி 'மாதி' என்னும் புதினமொன்றினை இயற்றுயுள்ளார் என்னும் தகவலே அது. கூடவே மகிழ்ச்சியை அதிகரிக்க இன்னுமொரு தகவலையும் பகிர்ந்துள்ளார். அப்புதினம் தற்போது பரிசல் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள தகவல்தான் அது. நூலினை வாங்க விரும்பினால் பின்வரும் இணைய முகவரியுடன் தொடர்புகொள்ளுங்கள்: நாவல் 'மாதி' 
மேலும் படிக்க ...

ந. பிச்சமூர்த்தியின் மரபு மனமும் நவீன தெறிப்பும் - முனைவர் ம இராமச்சந்திரன் -

விவரங்கள்
- முனைவர் ம இராமச்சந்திரன் -
இலக்கியம்
24 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

நவீன தமிழ் இலக்கியத்தின் தொடக்கக் காலத்தில் பலர் கதைகளைச் சிறுகதையாக்க முயன்றனர். ஆங்கில இலக்கிய வாசிப்பு அவர்களைக் கதை கூறுதல் என்ற மேம்போக்கான மனநிலையிலிருந்து விடுவித்துப் படைப்பூக்க மனநிலைக்குக் கொண்டு செல்லவும் பரிசீலனை செய்யவும் விமர்சிக்கவும் தூண்டுகோலாக இருந்தது. கதை கூறும் முறை எந்தப் புள்ளியில் இலக்கியமாகப் பரிணமிக்கிறது என்ற தேடுதலும் கண்டடைதலும் பெரும் சவாலாக இருந்தது. 'மணிக்கொடி எழுத்தாளர்கள்' என்று பிறகு அடையாளம் காணப்பட்ட அல்லது தங்களை அவ்வாறு எண்ணிக்கொண்ட தொடக்கக் கால எழுத்தாளர்கள் இந்தத் தடுமாற்றத்தில் சிக்கிக் கொள்ளாமல் முயற்சிகளைச் செய்து கொண்டே இருந்தனர்.

சமூகத்தில் நிகழும் அனைத்து விதமான நடைமுறைகளையும் உற்று நோக்கிக்கொண்டு, புதிய வரவுகளை வாசித்துக் கொண்டு, மரபிலிருந்து நவீனத்திற்கு மாற்றிக்கொண்டு என இலக்கியத்தை நோக்கி நகர்த்தி செல்ல படாதபாடுபட்டனர். பலர் அதில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி பெற்றனர். சிலர் மொழியாலும் உள்ளடக்கச் சிறப்பாலும் புதுமையில் நீந்தி விளையாடினர். இவ்வாறு சீரிய இயக்கப் போக்கால் தனக்கான இலக்கியத்தையும் இலக்கிய வடிவத்தையும் பெற்றுக்கொண்டு சிறுகதை செம்மாந்து நின்றது. இந்தத் தொடக்கக் கால முயற்சிகளில் முக்கியமானவர் ந. பிச்சமூர்த்தி.

இலக்கிய வரலாற்றில் ந.பிச்சமூர்த்தி தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று போற்றப்படும் நிலையில் இவரின் சிறுகதை பங்களிப்புக் குறித்த கேள்வி எழுகிறது. இக்காலத்தில் வ. வே. சு. ஐயர் சிறுகதையின் வடிவ நேர்த்தியிலும் கதை கட்டமைப்பிலும் வெற்றி பெற்றுச் சிறுகதைக்குத் தந்தையாகி விட்டிருந்தார். ஆகையால் கதை என்பது இலக்கியமாக மாறி சிறுகதை என்ற வடிவத்தைப் பெற்றுவிட்டது. ஆனால் இவ்வடிவம் இன்றும் சோதனை முயற்சியிலேயே இருந்துவந்தது. அச்சோதனை முயற்சி இரண்டு போக்குகளைக் கொண்டதாக இருந்தது. புதுமைப்பித்தன் தனக்கென ஏற்படுத்திக் கொண்ட கதைக்களமும் கதை மொழியும் புதுமையானதாகவும் விமர்சனங்களையும் மரபு உடைப்பையும் ஏற்படுத்துவதாகவும் இருந்தன.

மேலும் படிக்க ...

காணொளி: நாவல் என்றால் என்ன? - ஜெயமோகன் -

விவரங்கள்
Administrator
நிகழ்வுகள்
22 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்நிகழ்வுகள் பகுதியில் கலை, இலக்கிய நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புகளுடன், யு டியூப்ப்பில் வெளியாகும் கலை, இலக்கியக் காணொளிகளையும் அவ்வப்போது பகிர்ந்துகொள்ள பதிவுகள்,காம் முடிவு செய்துள்ளது. அவ்வப்போது இத்தகைய காணொளிகளின் முக்கியத்துவம் கருதி அவை பகிர்ந்துகொள்ளப்படும். அந்த வகையில் எழுத்தாளர் ஜெயமோகனின் நாவல் பற்றிய உரையினை உள்ளடக்கிய இக்காணொளி இங்கு பகிர்ந்துகொள்ளப்படுகின்றது.  - பதிவுகள்.காம் -


நாவல் பற்றிய  எழுத்தாளர் ஜெயமோகனின் உரை:

https://www.youtube.com/watch?v=hpW2tr5OmfA

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் பற்றிய எழுத்தாளர் ஜெயமோகனின் கூற்றுகள் பற்றி... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
21 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஜனவரி 19  எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் பிறந்தநாள். அவருக்கு எனது தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவரைப்பற்றி விகடனின் பேசலாம் யு டியூப் சானலில் எழுத்தாளர் ஜெயமோகனின் 'சங்கச் சித்திரங்கள் எப்படி எழுதினேன்?' என்னும் பெயரில் வெளியான நேர்காணற் காணொளி கண்டேன். அதில் ஜெயமோகன் அ.முத்துலிங்கம் பற்றிப் பின்வருமாறு கூறியிருந்தார்:

"தமிழ் உருவாக்கிய முக்கியமான பத்து எழுத்தாளர்களில் அவர் ஒருவர். இலங்கை உருவாக்கிய மகத்தான எழுத்தாளர்."

ஜெயமோகனின் விமர்சனப் பார்வையில் இவ்விதமான முக்கியமானதோர் இடத்தைப்பிடித்துள்ள எழுத்தாளர் அவர். ஆனால் ஜெயமோகனின் மேற்படி கூற்றில் எனக்குப் பெரிதும் உடன்பாடில்லை. 'தமிழ் உருவாக்கிய முக்கியமான எழுத்தாளர்களில் அவர் ஒருவர். இலங்கை உருவாக்கிய சிறந்த எழுத்தாளர்களில் அவர் ஒருவர்.' என்று ஜெயமோகன் கூறியிருந்தால் அதனை ஏற்றுக்கொள்வதில் எனக்குச் சிரமமில்லை.

ஜெயமோகன் அதிகமாக வாசிப்பவர். அதிகமாக எழுதுபவர். அவரது வாசிப்பும், எழுத்து வேகமும் பிரமிக்க வைப்பவை. அவர் இப்படிக் கூறியிருப்பதை அவ்வளவு இலேசாக ஒதுக்கிப் போய்விட முடியாது.  ஜெயமோகனின் தனிப்பட்ட கருத்தாக மட்டுமே என்னால் இதனை எடுத்துக்கொள்ள முடியும். அவரது சுய வாசிப்பு, சுய சிந்தனைக்கேற்ப அவர் வந்தடைந்த கருத்தாக மட்டுமே என்னால் கருத முடியும். அதற்கு மேல் ஜெயமோகனின் கூற்றை ஒட்டுமொத்தமாக இலக்கியப்பங்களிப்பில் அ.மு.வின் பங்களிப்பை வெளிப்படுத்தும் கூற்றாக என்னால் கருத முடியவில்லை.

மேலும் படிக்க ...

பேசலாம் வாங்க: சங்க சித்திரங்கள் எப்படி எழுதினேன்? - ஜெயமோகன் - பட்டிமன்றம் ராஜா & பாரதி பாஸ்கர்

விவரங்கள்
Administrator
முகநூல் குறிப்புகள்
21 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பேசலாம் வாங்க: சங்க சித்திரங்கள் எப்படி எழுதினேன்? - ஜெயமோகன் - பட்டிமன்றம் ராஜா & பாரதி பாஸ்கர்.

https://www.youtube.com/watch?v=LyI8xaTA1cQ

சிவசேகரம் கவிதைகள் (1970- 2020) பன்முகப் பார்வைகள்! - தகவல்: எம்.பெளசர் -

விவரங்கள்
- தகவல்: எம்.பெளசர் -
நிகழ்வுகள்
21 ஜனவரி 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Time: Jan 22, 2022 02:30 PM London, ,3.30 PM Europe ,8.00 PM Sri Lanka & India, 9.30 AM Canada

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/82214331642?pwd=ekxjdXNndDdSeXdQZER1cUFaOFIyZz09

Meeting ID: 822 1433 1642
Passcode: 462013


மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. நம்மவர் பேசுகிறார்: நடன நர்த்தகி, கலை, இலக்கிய ஆய்வாளர், வானொலி ஊடகவியலாளர் கலாநிதி கார்த்திகா கணேசர் ( பவளவிழா நாயகி ) அவர்களுடன் உரையாடல் - முருகபூபதி -
  2. தேனீ இணைய இதழின் ஆசிரியர் ஜெமினி கெங்காதரன் ஓராண்டு நினைவேந்தல்!  - தகவல் : முருகபூபதி -
  3. அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது வ.ந.கிரிதரனின் 'கணையாழிக் கட்டுரைகள்'! -
  4. (தொடர் கட்டுரை) ஜெயமோகனின் வெள்ளையானை நகர்த்தும் அரசியல் (7) - ஜோதிகுமார் -
  5. தொடர் நாவல்: கலிங்கு (2012: 7- 10) - தேவகாந்தன் -
  6. வ.ந.கிரிதரனின் நேரம்: அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டைனின் சார்பியற் கோட்பாடுகள் வெளி , நேரம் மற்றும் ஈர்ப்பு விசை பற்றிக் கூறும் விளக்கங்களை அறிந்துகொள்வோம்! - வ.ந.கிரிதரன் -
  7. சிறுவர் நாடகம்: புலம்பெயர்ந்த மண்ணில் பொங்கலோ பொங்கல்..! - பிரதியாக்கம், இயக்கம் : குரு அரவிந்தன் -
  8. அனைவருக்கும் 'பதிவுக'ளின் பொங்கல் நல்வாழ்த்துகள்!
  9. அஞ்சலிக்குறிப்பு : ஊடகவியலாளர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார் விடைபெற்றார் !  - முருகபூபதி -
  10. தைப்பொங்கல் தமிழர்களின் திருநாள்!  - குரு அரவிந்தன் -
  11. கவிதை: தினமுமே பொங்கலாய் ஆக்கிடுவோம் வாரீர் !  -      மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா,  மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்,  மெல்பேண், அவுஸ்திரேலியா -
  12. வ.ந.கிரிதரனின் நேரம்: எனது 'குடிவரவாளன்' நூல் அறிமுகக் குறிப்பு!
  13. நூல் அறிமுகம்: ‘சிதரால் திருச்சாரணத்து மலை’ சமணப்பள்ளி - முனைவர் இர.ஜோதி மீனா , உதவிப் பேராசிரியர், மொழித்துறை, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 641028. -
  14. சிறுகதை:  துலக்கம்    -  கன்பரா யோகன் -
பக்கம் 81 / 104
  • முதல்
  • முந்தைய
  • 76
  • 77
  • 78
  • 79
  • 80
  • 81
  • 82
  • 83
  • 84
  • 85
  • அடுத்த
  • கடைசி