நனவிடை தோய்தல் குறிப்புகள் ! - முருகபூபதி -
இன்று நவம்பர் 26 ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. நினைவுதினம்!

இலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. யாழ்ப்பாணம் நல்லூரில் 1932 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 04 ஆம் திகதி பிறந்தார். அவுஸ்திரேலியாவில் சிட்னியில் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி மறைந்தார். இன்று அவரது நினைவு தினம் !
எஸ்.பொ. குறித்த நினைவுகளை இங்கு நனவிடை தோய்தலாக பதிவுசெய்கின்றேன். நனவிடை தோய்தல் என்ற சொற்பதத்தையும் அவர்தான் தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர். எஸ்.பொ. அவர்களை 1972 ஆம் ஆண்டு, எனது இலக்கியப்பிரவேச தொடக்க காலத்தில்தான் முதல் முதலில் கொழும்பு ஆட்டுப்பட்டித்தெருவில் ரெயின்போ அச்சகத்தில் சந்தித்தேன். அதன்பிறகு கொழும்பில் பல இலக்கியக்கூட்டங்களிலும் சந்தித்திருக்கின்றேன். எஸ்.பொ. மஹாகவி உருத்திரமூர்த்தி, இரசிகமணி கனக செந்திநாதன் , கலைஞர் ஏ.ரி. பொன்னுத்துரை உட்பட பல இலக்கியவாதிகள் எமது நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடத்திய தமிழ் விழாவிற்கு வருகை தந்த காலப்பகுதியில் எனக்கு எட்டு வயதுப்பராயம்.
அந்த வயதிலேயே அவரது நகைச்சுவையான பேச்சை கேட்டுள்ளேன். மீண்டும் அவரைச்சந்தித்து பேசும்போது எனது வயது 21. அதன்பின்னர் கொழும்பு -07 இல் அமைந்திருந்த கல்வி வெளியீட்டுத்திணைக்களத்திலும் விவேகானந்தா வித்தியாலயத்திலும் அடிக்கடி சந்தித்து உரையாடியிருக்கின்றேன். அவர் இந்த வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்றினார்.
எஸ்.பொ. 1980 களில் நைஜீரியாவுக்கு தொழில் நிமித்தம் புறப்பட்ட வேளையில் கொழும்பு - ஜம்பட்டா வீதியில் மலையக நாடகக் கலைஞரும் அவள் ஒரு ஜீவநதி திரைப்படத்தின் தயாரிப்பாளரும் வசனகர்த்தாவுமான மாத்தளை கார்த்திகேசுவின் இல்லத்தில் எஸ்.பொ.வுக்காக நடந்த பிரிவுபசார நிகழ்வில் உரையாற்றினேன்.
மீண்டும் அவரை சில வருடங்களின் பின்னர் 1985 இல் ஒரு விஜயதசமி நாளில் வீரகேசரியில் நடந்த வைபவத்தின்பொழுது என்னைச்சந்திக்க வந்த எஸ்.பொ.வின் ஆபிரிக்க அனுபவங்கள் பற்றிய நேர்காணலை எழுதி வெளியிட்டேன். 1987 இல் நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர் - 1989 இல் எனது இரண்டாவது சிறுகதைத்தொகுதி சமாந்தரங்கள் நூலின் வெளியீட்டு விழாவை ( 25 ஜூன் 1989 ) மெல்பனில் நடத்தியபொழுது சிட்னியில் மூத்த புதல்வர் டொக்டர் அநுராவிடம் அவர் வந்திருப்பது அறிந்து, அவரை பிரதம பேச்சாளராக அழைத்தேன். அன்றைய நிகழ்வே அவர் அவுஸ்திரேலியாவில் முதல் முதலில் தோன்றிய இலக்கிய பொது நிகழ்வு.


எஸ்.பொ என்னும் பெயர் எழுத்துலகில் ஒரு முத்திரை எனலாம்.அவரின் முத்திரை எழுத்துக்கள் அத்தனையும் தமிழ் இலக்கியப்பரப்பில் தனியான இடத்தினைத் தொட்டு நிற்கிறது என்பதை அவரை விமர்சிப்பவர்களும் ஏற்றுக்கொள்ளுவார்கள். 1947 இல் கவிதை மூலமாக எழுத்துத் துறைக்குள் புகுந்து - சிறுகதை, நாவல் விமர்சனம், கட்டுரை, உருவகக்கதை, மொழிபெயர்ப்பு , நாடகம், என அவரின் ஆற்றல் பரந்துவிரிந்து செல்வதையும் காண்கி றோம். எஸ்.பொ என்னும் பெயரைக் கேட்டாலே பலருக்கும் ஒருவித பயம் ஏற்படுவது உண்டு. அவரின் காரசாரமான அஞ்சாத விமர்சன மேயாகும்.எழுத்திலோ பேச்சிலோ பயங்காட்டாத தனிப்பட்ட ஒருவராக இவர் இருந்தார். இதுவே அவரின் தனித்துவமும் பலமாகவும் பலவீனமாகவும் இருந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
கேள்வி: சென்றமுறை உங்களை கவர்ந்த உலக ஓவியர்களின் வரிசையில் பலரையும் குறிப்பிட்டிருந்தீர்கள். அதில் முதலாவதாக இடம் பிடித்திருந்தவர் ஜோன் கொன்ஸ்டபில். அவரைப் பற்றி வாதிப்பதற்கு முன் இரண்டு கேள்விகள் உண்டு. முதலாவதாக, நீங்கள் குறிப்பிட்ட, ஓவியர்களின் பெரும்பாலான ஓவியங்கள் ரவிவர்மா காலத்து ஓவியங்களில் இருந்து வித்தியாசப்பட்டிருக்கின்றன. முக்கியமாக, வான்கோவின் ஓவியம் மிக மிக வித்தியாசப்பட்டு காணப்படுகின்றது. இவற்றை ரசிப்பதற்கு அல்லது இவற்றின் உள்ளார்ந்த மதிப்பை சரியாக போற்றுவதற்கு தனியான ஒரு கற்கை – அல்லது பயிற்சி, தேவையானது என்று கருதுகின்றீர்களா?
அண்மையில் நான் வாசித்த புனைகதை 'தரணி'. இதுவொரு சிங்கள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. சிங்கள இலக்கிய உலகில் நன்கறியப்பட்ட எழுத்தாளர்களிலொருவர் கத்யானா அமரசிங்ஹ. புனைகதை, கவிதை, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் பன்முகத்திறமை மிக்கவர் இவர். அத்துடன் ஊடகத்துறையிலும் தீவிரமாகச் செயற்படும் சமூக, அரசியற் செயற்பாட்டாளர். இலங்கையின் சமகால சமூக, அரசியற் பிரச்சினைகளில் மிகுந்த தெளிவு மிக்கவர். அவற்றை இன, மத, மொழி ரீதியாக அணுகாமல், மானுடப்பிரச்சினைகளாக அணுகுமொருவர். இதனை இவர் எழுதி அண்மையில் வெளிவந்த 'தரணி' நாவலிலும் காணலாம். இந்நாவல் இலங்கையில் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தோழர் குட்டி ‘தீப்பொறி’, ‘தமிழீழ மக்கள் கட்சி’, மற்றும் ‘மே 18 இயக்கம்’ போன்ற அமைப்புகளுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து செயற்பட்டவர். அமைப்பின் ஒவ்வொரு முன்னெடுப்புகளிலும் தீவிரமாக தன்னை வெளிப்படுத்தியவர். அமைப்பிற்காக லண்டனில் மாத்திரமன்றி, ஏனைய ஐரோப்பிய தலைநகரங்களிலும் பணியாற்றியவர்.
உள்ளத்துள்ளே நிறைவான மகிழ்ச்சிமழை பொழிந்ததனால், இரவு முழுவதும் வெளியே பொழிந்து ஓய்ந்த மழைகூட பெரிதாகத் தெரியவில்லை.
- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்! - பதிவுகள்.காம் -
கீரிமலைக் கடற்கரை சுனாமி வந்து போனது போல அமைதியாக இருந்தது. அலைகளின் ஆர்ப்பரிப்பைத்தவிர, அங்கே மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கவில்லை. எங்கிருந்தோ பறந்து வந்த மீன் கொத்திப் பறவை ஒன்று சட்டென்று தண்ணீரில் மூழ்கி எதையோ கொத்திச் சென்றது. சுதந்திரமாய்ச் சிறகடித்து வானத்தில் பறக்கும் கடற்கொக்குகளைக் கூட இன்று காணக் கிடைக்கவில்லை. அஸ்தி கரைப்பதற்காக கீரிமலைக் கடலில் தலை மூழ்கி எழுந்தபோது இதுவரை அடக்கிவைத்த எனது துயரம் தன்னிச்சையாகப் பீறிட்டு வெடித்தது. கிரிகைகள் செய்யும்போது துயரத்தை வெளிக்காட்டக் கூடாது என்பதால் கிரிகைகள் செய்த சமயாச்சாரியின் முன்னால் இதுவரை அடக்கி வைத்த துயரம் தண்ணீரில் ஒவ்வொரு முறையும் தலைமூழ்கி எழுந்தபோது என்னையறியாமலே வெடித்துச் சிதறியது. ஆற்றாமையின் வெளிப்பாடாய் இருக்கலாம், ஏனோ வடதிசையைப் பார்த்து ஓவென்று அழவேண்டும் போலவும் இருந்தது. என் கண்ணீரைப் பாக்குநீரணை தனதாக்கிக் கொண்டபோது, ஆர்ப்பரித்த ஓயாத அலைகளின் ஆரவாரத்தில் என் அழுகைச் சத்தமும் அதற்குள் அடங்கிப் போயிற்று.
வெளியே காற்று அனலாக வீசிக்கொண்டிருந்தது

மறு யுகம் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள 'வாழ்வின் பின் நோக்கிய பயணமிது' நூலை வாசித்தேன். இந்நூல் எனக்குக் கிடைப்பதற்கு வழி செய்த நண்பரும், சமூக, அரசியற் செயற்பாட்டாளருமான எல்லாளனுக்கு நன்றி. சிவகாமி, யாழினி என்னும் இரண்டு முன்னாட் பெண் போராளிகளின் போராட்ட அனுபவங்களைக் கூறும் நூல். சிவகாமியின் போராட்ட அனுபவங்கள் படர்க்கையில் விபரிக்கப்பட்டுள்ளன. இவரது அனுபவங்களே 48 பக்கங்களைக் கொண்ட இச்சிறு நூலின் பிரதான பகுதியாக அமைகின்றது.






பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









