பதிவுகள் முகப்பு

பெரியார் - அம்பேத்கர் ஓவியப் போட்டி!

விவரங்கள்
- நாளைவிடியும் அரசெழிலன்
நிகழ்வுகள்
17 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

ஓவியப் போட்டி: 'நாளை விடியும்' இதழின் சார்பில் நடத்தப்பெறும் பெரியார் - அம்பேத்கர் நினைவு நாள் (திசம்பர் - 24 திசம்பர் - 6) ஓவியப்போட்டி..

ஓவிய உள்ளடக்கம்:
பெரியார்,  அம்பேத்கர் இருவரையும் இணைத்தவாறு, சேர்ந்து இருக்கும் வகையில் முகம் மட்டுமே, மார்பளவோ, அல்லது முழுமையாகவோ
கருப்பு - வெள்ளைக் கோட்டோவியமாக வரைந்து, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, வரைந்தவரின் பெயர், தெளிவான அஞ்சல் முகவரி (postal address) அலைப்பேசி எண் ஆகிய விவரங்களுடன் 15.01.2025 க்குள் அனுப்புங்கள்.

மேலும் படிக்க ...

ஜெயமோகனின் ‘ரப்பர்’ நாவல் முன்னகர்த்தும் அரசியல்! (1) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
17 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1

தமிழ் இலக்கிய வரலாற்றில் வெங்கட்சுவாமிநாதன், கா.நா.சு., அசோகமித்திரன், பாலகுமாரன் போன்ற நீண்ட ஓர் பட்டியல் இருந்திருந்தாலும், தமது அரசியல் பாத்திரத்தை நன்கு பிரக்ஞையுடன் தெளிவுற வகுத்துக்கொண்டவராக ஜெயமோகனைக் குறிப்பிடலாம். முக்கியமாக ஒரு சாதீய இந்தியச் சமூகத்தின் பின்னணியில்.

தனது முதல் நாவலான ரப்பரின் முன்னுரையில் அவர் பின்வருமாறு குறிப்பிடுவார் : “என் இருப்பை நியாயப்படுத்திக் கொள்ள இயலாது என்று தோன்றியபோதுதான் நான் எழுத ஆரம்பித்தேன்”

ஆனால், இவரது இருப்புதான் யாது – அது சொல்லவரும் சேதியின் அரசியல் என்ன என்பது ரப்பர் நாவலை நிதானித்துப் படிக்கும்போது விடுவிக்கப்படுகின்றது.

இவரே ஓரிடத்தில் கூறுமாப்போல், “பிற்பாடு இது வளர்ந்து பல முகங்களைப்பெற்று” இருந்தாலும் இம்முதல் நாவலில் காணக்கிட்டும் இவரது அரசியல், அர்த்தப்பூர்வமானது என்றாகின்றது. பிற்காலத்தில், இவர் தனது இந்தியச் சாதீயச் சமூகத்தையும், உழைப்பாளிகள் சார்பான வேறு இலக்கியங்களையும், கூர்மையாக அவதானித்த பின், அவற்றை ஒன்றில் இருந்து வேறாக, வேறுபடுத்தி, தனித்தனியே பிரித்து வைப்பதில் உள்ள முக்கியத்துத்தை, அதாவது தணிந்த சாதிய வகுப்பினரை மேலும் பிளவுப்படுத்திக் கொள்வதில் உள்ள அரசியல் முக்கியத்துவத்தை அல்லது இன்னும் வேறுவகையில், ராணுவத்தினரை அல்லது படையினரை, உழைப்பாளி மக்களுடன் கைகோர்க்க விடாது, அவர்களையும் வேறுபடுத்தி, அந்நியப்படுத்தி விடுவதிலுள்ள ஆழமான நலன்களை அல்லது ஜெயகாந்தன் முதலானோர் முன்வைத்த சாதிய ஒற்றுமைகளை அல்லது முற்போக்குப் பிராமணர்கள் உள்ளிட்ட சக்திகளின் உள்ளீர்ப்பை உழைக்கும் மக்களின் ஒன்றிணைப்பிலிருந்து கத்தரித்து விடுவதிலுள்ள நன்மைகளைத் தெளிவுறப்பார்க்கும் ஆற்றல் கொண்டவராய், இவர் பிற்காலத்தில் பரிணமித்திருக்கக்கூடும்.

மேலும் படிக்க ...

நனவிடை தோய்தல் 6 - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்: சிரிப்பழகன்! -இந்து.லிங்கேஸ்-

விவரங்கள்
-இந்து.லிங்கேஸ்-
இலக்கியம்
16 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 - எழுபதுகளில் யாழ் சுப்பிரமணியம் பூங்காவில். வலது கோடியில் இருப்பவர் ரஞ்சித். -

எம்மண்ணின் விடியல் என்பது அத்தனை பேரழகு! விரிந்த மொட்டுக்களின் வாசத்தை அள்ளிவரும் தென்றல்.பல்லவி சரணமாக பவனிவரும் பறவைகளின் சங்கீதம். உயிரை உருக்கும் பெருமாள் கோயில் சுப்ரபாதம்.வானத்தில் துள்ளிக்குதித்து கடலுக்குள் விழுந்து எழுந்து,பனைகளுள் ஒளித்து மறையும் சூரிய உதயம். அடுப்படியில் சுண்டக்காய்ச்சிய ஆட்டுப் பாலின் வாசமும், சாமியறைச் சாம்பிராணி வாசமும் போர்வைக்குள் முடங்கிக்கிடந்த என்னை மெல்லத்தட்டி எழுப்பும்.முகங்கழுவி அடுப்படிக்குள் கால்வைத்தால் சுடச்சுட ஆட்டுப்பால் தேநீரை அம்மா தர,அது தொண்டைக்குள்ளால் உள்ளிறங்க இந்த விடியலின் அழகும்,ஆட்டுப்பால் தேநீரின் சுவையும் பரவசப்படுத்தும் மனசுக்குள் புகுந்து புதுக்கவிதை எழுதும்.அப்படித்தான் ஆரம்பிக்கும் அந்த நாளின் புதுவரவு. நல்லூரும் கொடியேறிவிட்டால் இந்த நாட்கள் எமக்கு ஆட்டமும்,கொண்டாட்டமும்தான்!

தன்னை அழகாய் உடுத்திவரும் சிவந்த அந்தி. அதற்கு பொருத்தமாய் பட்டுப்பாவாடை சட்டை.கூந்தல் நிறைய கனகாம்பரம் அல்லது மல்லிகை.வெள்ளிக்கொலுசு கட்டி உலாவந்த கன்னியரின் பாதங்கள் இசைக்கும் மெளனராகம்.காத்திருந்த இளங்காளையரின் எண்ணங்கள் பட்டாம் பூச்சியாய்ப் பறக்க, குளிர்ச்சியான கோயில் வீதியின் மணலும், வானத்தில் நட்சத்திரங்களின் அழகும் பொற்கால நினைவாய் இன்றும் இணைந்து நனவுடை தோய்கின்றது.

மேலும் படிக்க ...

Nun other than ஆவணப்படம்! அருட்சகோதரி, அரசியல் செயற்பாட்டாளராக மாறிய கதை! சித்ரா லயனல்போப்பகேயின் வாழ்வும் வலிகளும்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
அரசியல்
14 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் சமூக, அரசியல், மனித உரிமைச்செயற்பாட்டாளரும், அவ்வாறே கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக இயங்கிவருபவரும், மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் செயலாளருமான தோழர் லயனல் போப்பகேயின் அன்புத்துணைவியாருமான சகோதரி சித்ரா லயனல் போப்பகேயின் வாழ்வையும்பணிகளையும்சித்திரிக்கும் ஆவணப்படம்தான் Nun other than .

மெல்பன் Darebin Inter cultural centre இல் அண்மையில் திரையிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை பார்ப்பதற்கு எனது இரண்டாவது மகள் பிரியாவுடன் சென்றிருந்தேன். அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான செல்வத்துரை ரவீந்திரனும் அவரது துணைவியார் திருமதி ஜெஸி ரவீந்திரனும் வந்திருந்தனர். எம்மைத்தவிர ஏனையோர் பிற சமூகத்தினர்தான்.

ஒரு மத்தியதரக்குடும்பத்தில் பிறந்து அருட்சகோதரியாக மாறி , மதம் சார்ந்த பணிகளுடன் சமூகப்பணிகளும் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றும் சீர்மியத் தொண்டராகவும் இயங்கிய சித்ரா, எவ்வாறு மனித உரிமை ஆர்வலராக மாறினார், மக்கள் விடுதலை முன்னணியின் பிரசித்திபெற்ற விடுதலைக்கீதம் இசை நிகழ்ச்சியில் ஒரு பாடகியாக இணைந்தார், அத்துடன், மனித நேயம் மிக்க புரட்சியாளரான தோழர் லயனல் போப்பகேயின் காதல் மனைவியானார், அதனைத் தொடர்ந்து 1978 – 1983 காலப்பகுதியில் இலங்கையில் தோன்றிய அரசியல் அடக்குமுறை நெருக்கடிகளை அவர் எவ்வாறு எதிர்கெண்டார் முதலான செய்திகளை Nun other than ஆவணப்படம் சித்திரிக்கிறது.

மேலும் படிக்க ...

கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனுக்கு அகவை 80! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

விவரங்கள்
- வ.ந.கி -
இலக்கியம்
14 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு இன்று பிறந்தநாள். கவிஞருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.  கவிஞருடன் அதிகம் பழகும் வாய்ப்பு கிட்டாதபோதும் சந்தித்த, பழகிய, உரையாடிய தருணங்கள் இன்னும் பசுமையாக நினைவிலுள்ளன.

முதன் முதலாக அவரைச் சந்தித்தது எனது நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வுக்காக யாழ்ப்பாண வைபவமாலை நூலைத்  தேடியபோது அவரிடம் இருப்பதையறிந்து அவர் இல்லம் சென்றபோது. அக்காலகட்டத்தில் யாழ்நகரில் ஓரிரு தினங்கள் சைக்கிளில் அலைந்திருக்கின்றோம்.

அதன் பின்னர் அவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது, லங்கா கார்டியனில் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். அக்காலகட்டத்தில் ஓரிரவு அவரை பொரளையில் சந்தித்தேன். மருதானை வரையில் என்னுடன் உரையாடியபடியே ஆமர் வீதி வரை மட்டக்குளிய பஸ்ஸில்  வந்தார். அதனையும் மறக்க முடியாது.

அதன் பின்னர் கனடா வந்திருந்தபோதும் சந்தித்தேன். அவரை அடிக்கடி சந்திக்காதிருந்தாலும் அவருடன் தொடர்ந்து இணையத்தொழில் நுட்பம் மூலம் தொடர்பில் இருந்து  வருகின்றேன்.

இன்று அவரது பிறந்தநாளையொட்டி அவரது புகழ் பெற்ற கவிதைகளில் ஒன்றான 'நீலம்' கவிதையைப் பகிர்ந்துகொள்கின்றேன்.

மேலும் படிக்க ...

நனவிடை தோய்தல் (5): - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்: நட்பு - இந்து லிங்கேஸ் -

விவரங்கள்
- இந்து லிங்கேஸ் -
இலக்கியம்
12 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

140எனக்கும்'கிரி'க்குமான நட்பை இன்று நினைத்தாலும்; "இது எப்படி சாத்தியமானது?" என்று இன்றும் நான் வியந்தும்,மகிழ்ந்தும் போகின்றேன்! முதன்முறையாக பள்ளிக்கூடம் போகின்றேன். முதலாம் வகுப்பு.முதலாம் நாள்.அம்மாகூட்டிப்போகிறா.அழுகை, அழுகையாக வருது.பயமா இருக்கு. இதனால் அம்மாவின்கையை இன்னமும் அழுத்தமாக பிடித்துக்கொள்கின்றேன். அம்மாவை விட்டிட்டிருக்கவேணும்.அதுதான் அழுகை.யாரோடோ இருக்கவேணும்.அதுதான் பயம். அழுகையும் வராமல், பயமும் வராமல் "இஞ்சை எனக்குப்பக்கத்தில இருக்கலாம்"என்று ஒருவன் இடம் தந்தான்.அவன் என் மனதில் இடமானான். அவன்தான் என் உயிர் நண்பன் 'ஜோர்ஜ்'.

"குட்டி"என்று செல்லமாய் அழைக்கும் இவனுக்கு'கிரி'சொந்த மச்சான்.குட்டியால் கிரி அறிமுகமானார்.நண்பர்கள் கூட்டமாய் கே.கே.எஸ் வீதியிலுள்ள பன்றிக்கொட்டுப்பிள்ளையார் கோயில் அருகே இருக்கும் 'ஆச்சி' வீட்டின் முன்வாசலில் கூடி நிற்போம்.குட்டிக்கு அப்பம்மா.கிரிக்கு அம்மம்மாவான ஆச்சி வீடு. எப்போதுமே ஆரவாரம் நிறைந்த,எம்மைக்கலகலவென காக்கைக்கூட்டங்களாய் ஒன்றுசேர்ந்து மனச்சோர்வின்றி எண்ணக்கிடக்கைகளால் சிறகடித்துப்பறக்க வாழ்வுதந்தது

மேலும் படிக்க ...

களத்தில்.... - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
சிறுகதை
12 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


1.

சின்னக்கா , அவரது பெயர் சியாமளா, அவரின் புதல்வர் தோழர் குருநாதிக்கு பதினாறு வயதிற்கு மேலே இராது . அக்காவிற்கு அந்த  மித்திரனின் மீது அபார நம்பிக்கை . காரணம் அவன் அவருக்குப் பிடித்த  லகஷ்மி ஆசிரியையின் புத்திரன் . அந்த கிராமத்தில் , ஆசிரியையை யாருக்குத் தான் பிடிக்காது . சரஸ்வதியின் (கல்வி) முகம் . பள்ளிக்கூடத்தில் முகத்தை பார்த்த மாத்திரத்திலே  புரிந்து கொண்டு " சாப்பிட்டாயா? "என விசாரிக்கும் எம்ஜிஆரின்பண்பு. பள்ளிக்குப் பிறம்பான நேரங்களில் கிராமத்திலிலுள்ள ...மாணவரின் வீட்டிற்கும் சென்று கதைக்கும் அன்பு . மாணவரின் பெற்றோருக்கு  ஆலோசனைகள் வேறு  கூறுவார் . அங்கே , வறிய நிலையில் இருப்பவர் அவர் மூலமாகவும் வேலையற்ற காலங்களில் மற்றைய ஆசிரியர்கள் வீடுகளிற்கும் சென்று மா, மிளகாய்த்தூள் ....  இடித்தல்  முதலான வேலைகள் ,பரஸ்பர உதவிகளைப் பெறுகிறார்கள் . விவசாயிகள் வாசிகசாலைகளிற்கு விலைச்சலில்  சிறிதளவு நெல்... கொடுக்கிறதும்  இடம் பெறுகிறது . கொடுக்கிறதில் உள்ள நெகிழ்ச்சியில் ஒரு வளர்ச்சி ஏற்படும் என்கிறார்கள் . காந்தி வழி . அவ்விடத்துப்பெடியள் அவற்றைப் பகிர்கிறார்கள் . இவரைப் பார்த்து மற்ற ஆசிரியரும்  கூட  ...மாணவர் வீடுகளிற்குச் சென்று விசாரிக்கிறதெல்லாம் இடம் பெறுகிறது  என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் . இது ஒரு காலத்தில் உடைத்து விடுமா?சமூக சுவகளை  தகர்த்து விடுமா ?

அவனுடைய இயக்கம்  தாமரையில் குருநாதி சேர்ந்த போது அவன் பார்த்துக் கொள்வான் என்று தைரியமாக இருந்தார் . ‘ஆசிரிய மரியாதையை இயக்கத்திற்கு பயன்படுத்துறேன் என்ற உறுத்தல் அவனுக்கும்  இருக்கவே செய்தது . அவன் சேர்ந்த போதிருந்த பொறுப்பாளர் ரஞ்சன் அவர் பகுதியைச் சேர்ந்தவர் . அவருடைய வட்டத்  தோழர்கள்  பாண்டி , அன்டன் , கேதீஸ்...,,அவன்  .அதிலே கேதீஸ் குருநாதிக்கு அண்ணன் முறை . அண்ணனுக்குப் பின்னால் எப்பவும் அவர்களுடனேயே இழுபட்டுக் கொண்டிருந்தான்.இயக்கத்திலிருந்தாலும் அன்றாடம் காய்ச்சிகள் . அவனை விட  ரஞ்சன் உட்பட மற்றவர்களும் நகரவேலைக்கும் போய்க் கொண்டிருந்தவர்கள் .

மேலும் படிக்க ...

நுஃமானிசம் : முற்றுப்பெறாத விவாதங்கள் - ஈழக்கவி -

விவரங்கள்
- ஈழக்கவி -
ஆய்வு
12 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- பேராசிரியர் எம். ஏ. நுஃமானுக்கு 2024இல் வயது 80. அதன் நிமித்தம் எழுதப்பட்ட ஈழக்கவியின் சிறப்புக் கட்டுரை -

நுஃமான் என்ற பெயர் நான் ஏழாம் எட்டாம் வகுப்புகளில் கற்கின்ற காலத்தில் எனக்குள் பதியமாயிற்று. எழுபதுகளின் நடுப்பகுதியில் என்னிரு சகோதரிகளும் கொழும்பு, யாழ் பல்கலைக்கழ கங்களில் பயின்றுக்கொண்டிருந்தனர். பல்கலைக்கழக விடுமுறையின் போது அவர்கள் வீட்டுக்கு வந்தால் பல்கலைக்கழக சங்கதிகள் பற்றி கதைப்பார்கள். குறிப்பாக குசினியில் வேலை செய்கின்ற பொழுது இலக்கியம் (கவிதை, நாவல்), சினிமா, அரசியல் என்று இன்னோரன்ன விடங்கள் பற்றி விமர்சனப்பூர்வமாக விவாதிப்பார்கள். நான் “ஒரு கண்விடுக்காத ஒரு பூனைக்குட்டியாய்” (நுஃமான் கவி வரி) ஓர் ஓரமாக நின்று இவற்றினை கேட்டுக்கொண்டிருப்பேன். யாழ் பல்கலைக்கழகத்தில் பயின்றுக் கொண்டிருந்த என் இளைய சகோதரி (மும்தாஜ் பேகம்) ‘நுஃமான்’ என்ற பெயரை அடிக்கடி பயன்படுத்துவதனை அவதானித்திருக்கிறேன். அவரது தமிழ் கற்பிக்கும் நுட்பம் பற்றியும் அவரது கவிதைகள் பற்றியும் அவர் தமிழ்பெயர்த்த பலஸ்தீன கவிதைகள் பற்றியும் சிலாகித்து பேசக்கேட்டிருக்கிறேன். இப்படித்தான் நுஃமான் என்ற பெயரையும் அவரது புலமைத்துவத்தையும் அறியமுடிந்தது. அக்காலம் தொட்டு இன்று வரை ஒரு தவிர்க்க இயலாமையுடன் நுஃமான் அவர்களது எழுத்துக்களை வாசித்துவருகின்றேன். அவரது பிரதிகளை படிப்பது, அவை பற்றி எழுதுவது, அவற்றினை அடுத்தவர்களுக்கு அறிமுகம் செய்வது என் விருப்புக்குரியதாயிற்று. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக என்னிடம் தமிழ் கற்கின்ற மாணாக்கருக்கு (உயர்தரம், பட்டப் படிப்பு) பேராசிரியர் நுஃமான் அவர்களது “அடிப்படைத் தமிழ் இலக்கணம்” என்ற நூலை வாங்க வைத்திருக்கிறேன். நுஃமான் அவர்களது எழுத்துக்களை தொடர்ச்சியாக படிக்கையில் அவை எனக்குள் ஒரு இசமாக/ இயமாக பரிமாணமடைந்து, நுஃமானிசமாக பரிணமித்துநிற்கின்றது. ‘முற்றுப்பெறாத விவாதங்கள்’ (2023) என்ற நேர்காணல் தொகுப்பில் ‘நுஃமானிசத்தை’ அவரது வாக்குமூலமாக நோக்க முடிகின்றது.

ism என்ற ஆங்கிலப் பதம் இயல் அல்லது வாதம் என தமிழ் பெயர்க்கப்படுகிறது. இசம் படைப்பின் மூன்று அம்சங்களான காலம், வெளி, பாத்திரங்கள் (மேற்கத்திய இலக்கியத்தின் இலக்கிய வரையறைகளைப் பேசும் அரிஸ்டோடிலின் (Aristotle; 384-322 BC) கவிதையியல் (Poetics) காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றும் முக்கியமானவை என்கிறது) என்பன ஒரு படைப்பிற்குள் எவ்வாறு இருக்க வேண்டும் எனப் பேசுகின்றது. மனிதனை அல்லது மனிதனின் சாராம்சத்தை எவ்வாறு படைத்துக் காட்ட வேண்டும் என்று பேசுவதில் தான் இசங்கள் வேறுபடுகின்றன. உலகெங்கிலும் படைப்புரீதியாகவும் படைப்பு சார்ந்த சித்தாந்தங்கள் ரீதியாகவும் பிரமிக்கத்தக்க மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன. மார்க்சிசம், யதார்த்தம், சோஷலிஸ யதார்த்தம், மிகை யதார்த்தம், மாயாஜால யதார்த்தம், இருத்தலியம், ஃபிராய்டியம், அமைப்பியல், பின் அமைப்பியல், நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்’று பலவித கருத்தாக்கங்கள்/ இசங்கள் இலக்கிய உலகைப் பெருமளவு மாற்றங்களுக்கு உள்ளாக்கியப்படி இருக்கின்றன. இலக்கிய ரீதியாக முக்கியமானதாகக் கருதப்படக்கூடிய எல்லா மொழிகளிலும் இந்த மாற்றங்களை உணர்த்தும் பதிவுகள் இருக்கின்றன. தமிழும் இதற்கு விதிவிலக்கு அல்ல. தமிழ்ப் படைப்புலகம் வெளிக்காற்றை சுவாசிக்கவோ மாற்றங்களுக்கு உள்ளாகவோ இல்லை என்று சொல்லிவிட முடியாது என்கிறார் அரவிந்தன். மேலும் அவரது விளக்கம் பின்வருமாறு அமைந்துள்ளது. ஆனால் பாதிப்புகள், மாற்றங்கள் எல்லாமே ஒரு சிறிய வட்டத்திற்குள் அல்லது சில சிறிய வட்டங்களுக்குள் அடங்கியிருக்கிறது. இந்த வட்டத்தை (அல்லது வட்டங்களை) சேர்ந்தவர்கள் மண்டையை உடைத்துக் கொண்டு யோசிப்பதும் விவாதிப்பதும் (சில சமயம் இந்த விவாதங்கள் சண்டைகளாக மாறுவதும்) படைப்புகளில் இவை ஏற்படுத்தும் தாக்கங்களும் தமிழ்ச் சமூகத்தின் மிகப் பெரும்பாலான பகுதிகளைச் சென்று அடையவேயில்லை. பசுவய்யாவின் (சுந்தர ராமசாமி) கொள்கை கவிதை கூறுவது போலத்தான் இருக்கிறது தமிழ்ச் சூழல்.

மேலும் படிக்க ...

நனவிடை தோய்தல் (4) - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் : 'டபிள் டெக்கர் பஸ்' பயணம் - இந்து லிங்கேஸ் -

விவரங்கள்
-இந்து.லிங்கேஸ் -
இலக்கியம்
10 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கீரிமலையிலிருந்து ஒவ்வொரு மணித்தியாலத்துக்கு ஒன்றென  புறப்பட்டஇ.போ.ச769 லைனில ஒன்று இப்ப யாழ்ப்பாணத்தில தரித்து நிற்குது.அது இனி வெளிக்கிட்டால் சாவகச்சேரி வந்து கொடிகாமம் போகும்.  பிரிட்டிஷ்காரன் கொடுத்த டபிள் டெக்கர் பஸ். தந்தை செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம் வாழ்ந்து அகிம்சைவழி அரசியல் சூடு பிடித்துப்போய் காற்றின் குளிர்மையில கனவுகள் பூத்த காலமது..

பஸ் வெளிக்கிடுது. மேல்தட்டில இடம் பிடிச்சாச்சு.ஒரு மூலையில யன்னல்பக்கமா இருந்தா வடிவா ஊர் மனைகளையும், மரங்களையும், வடிவான நாச்சார் வீடுகளையும் ரசிச்சுக்கொண்டு போகலாம்.அங்கே இருந்தா அந்த முக்கால் மணித்தியாலத்துக்கு மனச்சிக்கல் எல்லாம் மறந்துபோகும்.ஓடிற பஸ்ஸின்ர வேகத்தில புழுதி கிளம்பி போறவாற சனங்கள் நிண்டு கண்களைப் பிசுக்குவது தெரியுது. மண்ணும் சேர்ந்து கிளம்ப காத்தில பாவாடை பறந்திடுமோ என்ற பயத்தில சட்டென இறுக்கிப்பிடிக்கும் பெண்கள். குடும்பமே கதியென அடுப்பின் வெக்கைக்குள் சிறை கொண்ட தாய்க்குலம் சுதந்திரக் காற்றை அணுகி கொடிகளில தோய்த்த உடுப்பைக் காயப்போட்டுக் கொண்டு அண்ணாந்து பஸ்ஸைத்தான் அவர்களின் கண்கள் ஆவலாய் மேயுது. எனக்கு  இவையெல்லாம் வேடிக்கை.இடையில யாராவது இறங்கவேண்டுமென்றால் பெல்லை அடிக்க வேணும். அந்தச்சத்தம் மட்டும் வெள்ளைக்காரன், வெள்ளைக்காரன்தான் என்று என்ர காதுக்குள்ள கத்தும். கண்ணை மூடி அயந்துபோனாலும் அந்த ஊர் தன் பெயரை பலாப்பழ, மாம்பழ வாசத்திலேயே தட்டி எழுப்பிப்போடும் .

மேலும் படிக்க ...

ஆரோக்கியமான செயற்பாட்டினை வரவேற்போம்! -நந்திவர்மப்பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப்பல்லவன் -
அரசியல்
10 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                             அமைச்சர் விஜித ஹேரத்

அண்மையில் இலங்கையின் பாராளுமன்றத்தில் வடகிழக்கில் நிகழ்ந்த மாவீரர் நாள் நிகழ்வுகளை மையமாக வைத்து தென்னிலங்கை அரசியல்வாதிகளான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சரத் வீரசேகர் ஆகியோர் மீண்டும் இனவாதத்தைக் கையிலெடுத்து அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசைக் கடுமையாகச் சாடினர். அநுரவின் அரசு தமிழர் சார்பான அரசு என்பது போன்றதொரு தோற்றப்பாட்டினை எழுப்புவதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைப்பதற்குக் கடும் முயற்சியெடுத்தனர். இதனை அநுர அரசு முளையிலேயே கிள்ளி எறிந்தது வரவேற்கத்தக்கது.

இலங்கையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உடனேயே இனவாத அரசியல்வாதிகளை எதிர்கொண்டு தக்க பதிலடி கொடுத்தார். இவ்விதம் இனவாதத்தைத் தூண்டியவர்களை இனவாதிகள் என்றார். நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக நடைபெறும் நினைவு கூரல்களைச் செய்யும் உரிமை நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு. அவற்றைத்  தடுக்க முடியாது. சட்டங்களை மீறுபவர்களைக் காவல்துறை கையாளும் என்று அவர் தனது பதிலடியில் தெரிவித்திருந்தார். இதன் மூலம் இனவாத அரசியல்வாதிகளின் திட்டம் முளையிலேயே முறியடிக்கப்பட்டது.

மேலும் படிக்க ...

சிறுகதை: சீத்துவக்கேடு - எஸ். அகஸ்தியர் -

விவரங்கள்
- எஸ். அகஸ்தியர் -
சிறுகதை
09 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் நினைவு தினம் டிசம்பர் 8. அதனையொட்டி வெளியாகும் அவரது சிறுகதை  எழுத்தாளர் எஸ்.அகஸ்தியரின் முக்கியமான நாவலாக நாம்  கருதுவது 'மண்ணில் தெரியுதொரு  தோற்றம்' நாவலையே.   வீரகேசரி பிரசுர நாவலாக வெளியான நாவல்.  வர்க்க விடுதலைக்காகத்  தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஜானகி என்னும் பெண் போராளி பற்றிய நாவல்.  நாவலை வாசிக்க 


உவ அஞ்சாறு பெட்டையள அடுக்கடுக்காப் பெத்துப்போட்டாவாக்கும் அதுதான் ‘வெப்பியா’ரத்தில பெருமையடிக்கிறா. அந்தக் காலத்திலேயே ‘அஞ்சு பிள்ளையளைப் பெத்தா அரசனும் ஆண்டியாவா’னென்டு இன்னும் மொருதன் பாடியிருக்கிறான். இந்தக் காலத்தில் எப்படியிருக்கும்.

‘சீவன் போக முன்னம் பிள்ளையள் வந்து தாயின்ர கண்ணில் முழிக்குங்களென்டு நான் நம்பேல’

இவள்பாவி என்ன, எடுத்தாப்போல ‘சகுனி’ யாட்டம் சொல்கிறாள்.

‘அது பாவம் மனுசி பெத்ததுகளைக் கடைசியாப் பாத்திட்டுக் கண் மூடவெண்டு கொட்டுக்க சிவனை வைச்சுக்கொண்டு படுற பாட்டைக் கண் குடுத்துப் பாக்கக் கறுமமாக் கிடக்கு’

கள்ளி, மனிசியில உருகுமாப் போல சும்மா சாட்டுக்கு மாய வித்தை காட்டுறாள்.

‘அது சரி, தந்தி எப்ப குடுத்ததாக்கும்?’

‘வேளையோட குடுத்திருப்பினம் தானே?’

‘அக்காள், வாய் புளிக்குது, உந்த வெத்திலைத் தட்டத்தை இஞ்சாலையும் ஒருக்கா அரக்கிவிடு’

மேலும் படிக்க ...

நனவிடை தோய்தல் (3) - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்: மழைக்காலமும், மார்கழிக் காலைப்பொழுதுகளும்! -இந்து.லிங்கேஸ் -

விவரங்கள்
-இந்து.லிங்கேஸ் -
இலக்கியம்
09 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

ஒவியம் AI

கூதல் விறைத்த காலமது.மழை விடாது பெய்துகொண்டிருந்த பகலது .பள்ளிகள், கல்லூரிகளென மெல்ல மெல்ல நிரம்பிய வெள்ளம் ஓடிவந்து வகுப்புகளுக்குள் புகுந்து கால்களால் குளிரேறி உடம்புகளை நடுங்க வைத்துக் கொண்டிருந்த பொழுதது. 'வெய்யோன்' கண்களை மூடியபடி கார்மேகத்துடன் கட்டுண்டு கிடந்த மார்கழித் திங்களது. எம்மண்ணும்,மக்களும் உசாரின்றி போர்வைக்குள் முடங்கிக்கிடந்த மழைக்காலமது. எது எதுவாகினும் குளிர்காற்று வந்து அரசமரத்தையும், ஆலமரத்தையும் ஆரத்தழுவி,கடைசியில் எம்மையும் முத்தமிட்டுச்சென்ற பரவச விடியலது. இந்தப்பரவசத்தில்தான் நாம் பல பிரச்சனைகளையும் கடந்து பள்ளி, கல்லூரியென வெள்ளத்தைக்கிழித்துக்கொண்டே சைக்கிள் ஓடிப்படிக்கச்சென்றோம்.

பஸ்ஸில் வந்தவர்கள் நனைந்து, நடுங்கி விறைத்து வகுப்பிற்குள் நுழைந்ததையும் மறக்க முடியுமா? சில வகுப்பறைகள் நித்தம் நிறையாமல் போனதும் இந்த மார்கழியில் தான். காற்சட்டையும்,சேட்டுமாய் வெறுங்கால்களுடன் மழைவெள்ளக்காடுகளைக்கடந்து கல்லூரிகளில் கால்வைத்தவைத்தவர்களுக்கு அந்த அனுபவம் புரியும். காலையில் தோய்ந்து,தோய்ந்து பால்காரர்கள்கூட தமது உழைப்பை கஷ்டப்பட்டு கண்ணியமாக ஒப்பேற்றிக்கடந்து சென்றதையும் எம்மால் மறக்கமுடியாது.

பாடசாலைகளின் ஓட்டைக் கூரைகளிலிருந்து ஒழுக்குகள் வகுப்புகளுக்குள் விழ மேசைகள் வாங்குகளை அரக்கிவிட்டு பாடங்களைத்தொடங்கியதையும் எம்மால் மறக்கமுடியாது.

மேலும் படிக்க ...

சிலப்பதிகாரம் காட்டிநிற்கும் புரட்சிச் சிந்தனைகள் - மகாதேவஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
இலக்கியம்
07 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சிலம்பின் சிறப்பு

 சிலப்பதிகாரத்தை ஏன் படிக்க வேண்டும்? சிலப்பதிகாரத்தில் அப்படி என்னதான் பொதிந்து கிடக்கிறது ! சிலப்பதிகாரத்தைவிட வேறு காப்பியங்கள் தமிழில் சிறந்து விளங்கவில்லையா ? என்றெல்லாம் எம க்குமுன்னே பல ஐயங்கள் வந்து நிற்கும் . சிலப்பதிகாரத்தைப் பற்றிய சிறப்பும் அதன் சிந்தனைகருத் துக்களும் சரியான முறையில் எம்மிடம் புகுந்துவிடுமானால் இப்படியான ஐயம் எழுவதற்கே இடமில் லாமல் போய்விடும் என்பது எனது மனக்கருத்தாகும்.தமிழில் வந்த முதல்காப்பியமாக சிலப்பதிகாரமே விளங்குகிறது.

இயற்றமிழ் , இசைத்தமிழ் , நாடகத்தமிழ் ,  மூன்றையும் கொண்ட முதல் தமிழ் காப்பியம் என்னும் பெருமையையும் கொண்டு நிற்கிறது. சேர, சோழ, பாண்டிய, நாடுகளான முத்தமிழ் நாட்டினையும் முழுமைபெறச் செய்த காப்பியமாகவும் அமைந்திருக்கிறது.இலக்கிய உன்னதத்தை வெளிப்படுத்தும் காப்பியமாகவும் இருக்கிறது.

       தமிழர்களின் பன்முகப்பட்ட சமூகப் பண்பாட்டினைக்  காட்டி நிற்கும் காப்பியமாகவும் திகழ்கிறது. வாழ்வியல் நெறிகள், வழிபாட்டு முறைகள், கலைகள், அரசுமுறைகள்,நீதி நிர்வாகம், பெண்களின் சமு தாய நிலை, என்று பலவற்றைக் காட்டி நிற்கும் காப்பியமாக சிலப்பதிகாரம் திகழ்கிறது எனலாம். இக் காப்பியத்தை புரட்சிக் காப்பியம், குடிமக்கள் காப்பியம், சமுதாயக் காப்பியம், வரலாற்றுக் காப்பியம், தேசியக் காப்பியம், நாடகம் காப்பியம் என்றெல்லாம் பன்முகப் பார்வையில் நின்றும் பாராட்டப்படும் நிலையும் காணப்படுகிறது. இதனால் காலத்தை வென்று நிற்கும் காப்பியமாக சிலப்பதிகாரம் இருக்கி றது என்பது மறுத்துவிட முடியாத உண்மையெனலாம்.

    இதனால் அன்றோ தேசியக்கவி பாரதி " நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் " என்று விதந்தோதி நின்றார் போலும் ! பாரதியின் வாக்கு எத்தனை வலிமையும் பெறுமதியுமானது என்பதிலிருந்தே சிலப்பின் சிறப்புப் புலனாகி நிற்கிறதல்லவா ! சிலப்பதிகாரம் தமிழ் தேசியக் காப்பி யம். சிலப்பதிகாரம் தமிழின் சொத்தாக நிற்கும் காப்பியம். சிலம்பைப் படித்தால் சிந்தனை வளரும் ! சிலம்பை நினைத்தால் பெருமிதம் நிலைக்கும் !

மேலும் படிக்க ...

நனவிடை தோய்தல் (2) - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்: சீனிக்குட்டி- மணியம் பேக்கரி.சண்முகநாதன் கடை. ஐயாத்துரை கடை. சங்கக்கடை. - இந்து லிங்கேஷ் -

விவரங்கள்
- இந்து லிங்கேஷ் -
இலக்கியம்
06 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இந்து லிங்கேஷ் நினைவு கூரும் இந்த நனவிடை தோய்தல் முக்கியமானது. இதில் அவர் நினைவு கூரும் சீனி என்னும் சீனிக்குட்டி யாழ் இந்துவைப் பற்றி நினைத்தால் நினைவில் சிறகடிக்கும் முக்கியமானதோர் ஆளுமை. -


சங்கக்கடையின்ர இடது பக்கமா, ஒதுக்குப்புறமா,ஒரு மூலையில குமாரம்மானின்ர இருப்பிடம். நறுக்குப் புகையிலைத்துண்டு, வெத்திலை பாக்கு,பல்லி முட்டாய்,அரி நெல்லி,தோடம்பழ இனிப்பு என்றபடி சின்ன வியாபார மூலையது.குமாரம்மான் சேட்டுப்போட்டு நான் பார்த்ததில்லை.எப்போதும் சாரமும்,அவரது வண்டியும் அவர் கைகளில் பாக்கு வெட்டியுமாக வாங்கிலில் இருந்துகொண்டு பாக்குச்சீவிய காட்சிதான் இன்றும் அவர் நினைவாக! சின்னதாய் ஒரு மேசையில சப்பட்டைப்போத்தல்களுக்குள்ளே அரி நெல்லி,பல்லி முட்டை, தோடம்பழ இனிப்பென கண்ணைக்கவருகிறமாதிரி இவையெல்லாம் வெயிலுக்கு மின்னிக்கொண்டிருக்கும்.எங்கட கையில 10 சதம்,ஆக மிஞ்சிப்பார்த்தா 5 சதம்தான் வீட்டில தருவீனம். அதுக்கு குமாரம்மான் சரியா எண்ணி எதாவது தருவார்.பல்லி முட்டை தந்தால் அது வாயில கடிபட சீரகமும் சேர்ந்து அது வேற லெவல்.

அடுத்தநாள் உப்புத்தண்ணிக்குள்ள போட்ட அரி நெல்லி வாங்குவம்.ஒரு கடி கடிக்க அதுவும் வரண்ட தொண்டைக்கு ஊறிக்கிடந்த உப்பும் சுள்ளாப்பா இறங்கி வாய்க்குள்ள பாத்திகட்டி நெல்லிச்சாறாய் ஓடும்.தேகம் சிலுசிலுக்கும். அந்த அரிவரிபடிச்ச இளங்கன்று வயசில சுவைக்க குமாரம்மானின் தோடம்பழ இனிப்பு வாய்க்குள்ள சேர்ந்து கரைஞ்சு தித்தித்த அந்த ருசியும் இன்னும் மனசுக்குள் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டே யிருக்கின்றது. ஒருபக்கம் பாண்,பணிஸ் வாசம்.பேக்கரி மூலையில கொட்டிக்குவிஞ்சுகிடக்கும் உமி, மாக்கழிவுகளைக்கூட மாடுகள் வந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதும்கூட அதிலிருந்து நீராவிபோல காத்தில 'மா' பறக்குமே அந்தக்காட்சிதான் இந்தப்பெயர்போன சந்தியின் அன்றைய மெய்யழகு!

மேலும் படிக்க ...

நனவிடைதோய்தற் குறிப்புகள்: டிசம்பர் 06 – பேராசிரியர் க. கைலாசபதி (1933- 1982) நினைவு தினம்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
05 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நம்மிடத்தில் – நம்மவர்களைப் பற்றிய எதிர்பார்ப்பு ஒன்று உண்டு. அவருக்கு கடிதம் எழுதினேன் – பதிலே இல்லை. கடிதமா ? ஐயோ – எழுத நேரம் எங்கே கிடைக்கிறது. அமர்ந்து கடிதம் எழுதுவதற்கு நேரம் தேடி போராடுகின்றோம். கோபிக்க வேண்டாம். உங்கள் கடிதம் கிடைத்தது. பதில் எழுத முடியாமல் போய்விட்டது. அவ்வளவு பிஸி. இவ்வாறு உரையாடுபவர்களை நாம் பார்த்திருக்கின்றோம். இந்த நிலைமை முன்புதான். ஆனால், தற்போது நாம் வேறு ஒரு யுகத்தில் வாழ்கின்றோம். முன்னைய யுகம் எப்பொழுது?

மி.மு. காலத்தில். அதென்ன மி.மு? மின்னஞ்சலுக்கு முன்னர் நாம் வாழ்ந்த காலத்தில். தற்பொழுது மி.பி. காலத்தில் வாழ்கின்றோம். அதாவது மின்னஞ்சலுக்கு பிற்பட்ட காலத்தில். மின்னஞ்சல் தந்த கொடைகள் முகநூல் – டுவிட்டர் – இன்ஸ்டகிராம். ஸ்கைப். இனிவரும் காலத்தில் மேலும் புதிய சாதனங்கள் வரலாம். ஆனால் – இந்த மென்பொருள் சாதனங்கள் எல்லாம் வருவதற்கு முன்பே இந்தப்பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்ட சமாதானங்களைக் கூறி தப்பிப் பிழைக்காமல் – தனக்கு வரும் கடிதங்களுக்கெல்லாம் தளராமல் பதில் கடிதம் எழுதிய ஒருவர் நம் மத்தியில் வாழ்ந்து மறைந்தார் என்பதை எத்தனை பேர் அறிந்திருப்பார்கள்?.

அவர்தான் பேராசிரியர் கைலாசபதி. கடிதம் எழுதுவதும் ஒரு கலைதான் என உணர்த்திய இலக்கிய வாதியாக அவரை நான் இனம் காண்கின்றேன்.

மேலும் படிக்க ...

தேன்பொழுது - சிரித்திரன் நேர்காணல்களின் தொகுப்பு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
04 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் ஓரு அலைபேசி அழைப்பு வந்திருந்தது. என் அலைபேசி இலக்கத்தை கலை, இலக்கிய ஆர்வலரும், அறிவியல் எழுத்தாளருமான நா.பத்மநாப ஐயரிடமிருந்து பெற்றதாகவும் , அண்மையில் நான் எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் சிரித்திரனில் வெளியான 'சங்கீதப் பிசாசு' சிறுவர் நாவலின் அத்தியாயங்களுடன், ஆரம்பக் காலத்துச் சிரித்திரன் இதழின் அட்டைப்படங்களையும் உள்ளடக்கி முகநூலில் பகிர்ந்திருந்த பதிவினை அவர் தன்னுடன் பகிர்ந்திருந்ததாகவும், தான் மருத்துவர் கனக சுகுமார் என்றும் தெரிவித்தார்.

எனக்கு அவரது பெயர் உடனடியாக நினைவில் வரவில்லை. நான் முன்னர் அறிந்திருந்ததாகவும் நினைவிலில்லை. அப்பொழுதுதான் அவர் கூறினார் சிரித்திரனில் வெளியான நேர்காணல்கள்  பலவற்றைத் தானும் சட்டத்தரணி பொன் பூலோகசிங்கமுமே கண்டு எழுதிவந்ததாகக் கூறினார். உடனடியாக நினைவுக்கு வந்தார்.

சிரித்திரனில் வெளியான நேர்காணல்கள் பலவற்றை நான் விரும்பி வாசித்தவன். இசை (நாதஸ்வர, தவில், வயலின், மிருதங்கம்), ஓவியம், எழுத்து (கவிதை, புனைகதை),நாட்டியம் , நாடகம் எனப் பல்துறைகளில் சிறந்து விளங்கிய கலைஞர்கள் பலருடன் கண்ட நேர்காணல்கள் அவை. மிகவும் முக்கியமான ஆவணங்கள் அவை. எம்.ஏ.நுஃமான், பாலேந்திரா, ஆனந்தராணி பாலேந்திரா, அ.மாற்கு, சிரித்திரன் ஆசிரியர் சுந்தர், என்.கே.பத்மநாதன் , சி.மெளனகுரு, தனதேவி சுப்பையா, குழந்தை சண்முகலிங்கம், நந்தி, மாத்தளை வடிவேலன், சி.வி.வேலுப்பிள்ளை எனப் பலருடன் நடத்திய நேர்காணால்கள் அவை. கலைஞர்கள் இவர்களைப்பற்றி அறிவதற்கு மட்டுமல்ல ஆய்வுகள் மேற்கொள்வதற்கும் உறுதுணையானவை.

மேலும் படிக்க ...

அஞ்சலி: 'சித்திரா' மரியதாஸ் - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
04 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                       - 'சித்திரா' மரியதாஸ் -

எழுத்தாளர் சிவராசா கருணாகரன் யாழ் சித்திரா அச்சக உரிமையாளராக எண்பதுகளில் அறியப்பட்ட 'சித்திரா' மரியதாஸ் அவர்கள் 8.11.2024 மறைந்த செய்தியினைப் பற்றிய குறிப்பினைப் பகிர்ந்திருந்தார். இவர் இழப்பால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.

'சித்திரா' மரியதாஸ் அவர்களுடனான எனது தொடர்பு மிகவும் குறுகியது, ஆனால் நினைவில் நிலைத்து நிற்பது. 1980/1981 காலகட்டத்துக்குரிய மொறட்டுவைத் தமிழ்ச் சங்கத்தின் இதழான 'நுட்பம்' சஞ்சிகையின் இதழாசிரியர் குழுத்தலைவராக இருந்த சமயம், அதற்கு ஆக்கங்கள் தேடி யாழ் பல்கலைக்கழகத்துக்கும் சென்றிருந்தேன். அங்கு அப்பொழுது பணியாற்றிக்கொண்டிருந்த விரிவுரையாளர் மு.நித்தியானத்தனைச் சந்தித்தேன்.

அப்பொழுது அவர் யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த மலையகத் தமிழ் மாணவர்களின் அமைப்பொன்று வெளியிட்ட தமிழ்ச் சஞ்சிகையொன்றினைக் காட்டினார். அதன் வடிவமைப்பு, அச்சமைப்பு பிடித்துப்போகவே அதை அச்சடித்த அச்சகம் பற்றிக் கேட்டேன். அப்பொழுதுதான் அவர் சித்திரா அச்சகம் பற்றிக் குறிப்பிட்டார். அங்கே நுட்பம் சன்சிகையினை அச்சடிப்பதற்கு முடிவு செய்தேன்.

மேலும் படிக்க ...

ஈழத்தில் நாட்டுக்கூத்துக் கலை! - த.சிவபாலு பி.இடி சிறப்பு, எம்.ஏ -

விவரங்கள்
! - த.சிவபாலு பி.இடி சிறப்பு, எம்.ஏ -
ஆய்வு
03 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கிராமியக் கலை வடிவங்கள் பல்வேறு வகையினவாக தொன்று தொட்டு மக்களிடையே பயின்று வந்துள்ளமை நாம் அறிந்ததே. கூத்து என்னும் பதம் தமிழில் மிக நீண்ட காலமாக நிலவி வருகின்றது. திருமூலரின் திருமந்திரத்திலும். திருக்குறளிலும் தொல்காப்பியத்திலும் இச்சொல்லாடலைக் காணமுடிகின்றது. தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இடையே பல்வேறு வகைகளில் தொடர்புகள் பேணப்பட்டு வந்துள்ளன. கலை, கலாச்சார பண்பாட்டு விழுமியங்களில் ஒற்றுமை பேணப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் இடவேறுபாடு காரணமாக பிரதேசத்திற்கான தனித்துவமும் பேணப்படுகின்றது. தமிழால் இணைந்துள்ள நிலைமையை நாம் எல்லாக் கலைகளிலும் காணமுடியும்.

'கூத்தாட்ட அவைக் குழாத்து அற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று' – குறள் 332

திருவள்ளுவர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழர் மத்தியில் கூத்துக்கலை முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதற்கு இந்தத் திருக்குறளே போதுமானது. கூத்து இடம்பெறும் அவைக் குழாம் என வரும் உவமானம் மக்கள் பெருந்தொகையாகக் சேர்ந்து கண்டு களித்துள்ளனர் என்பது விளக்கம். எனின் தமிழர் சமூகம் கூத்தாட்டத்தில் எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தனர் என்பது வெளிப்படை.

மேலும் படிக்க ...

நனவிடை தோய்தல் (1) - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்: யாழ் இந்து மைதான வைரவர் -இந்து.லிங்கேஸ் (ஜேர்மனி) -

விவரங்கள்
-இந்து.லிங்கேஸ் (ஜேர்மனி) -
இலக்கியம்
03 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

யாழ்.இந்துக்கல்லூரிக்குள் 70களில் இளவட்டங்களாக காலடி எடுத்துவைத்த பொற்காலம்.இந்துவின் மைதானத்துடன் உறவாடியபடி பச்சைப்பசேலென முப்பெரும் மரங்களுடன் நாமும் ஒன்றிப்பிணைந்து,ஒட்டுண்டு கிடந்த காலமது.மரங்கள் பகிர்ந்த நிழல்களே எமக்கான இளைப்பாறும் கூடுகள்.நீட்டி நிமிர்ந்து சாய்ந்து சல்லாபிக்க தோள்தந்த மதில்கள்.காற்று அள்ளி வந்து மைதான மணலை எம்மில் தூவி,முகங்களை வருடிவிட்டுப்போன கணங்கள்கூட நினைவிலிருந்து அழியாத கோலங்கள் அவை.

கல்லூரி மணி அடித்து ஓயும்.வெள்ளியென்றால் அந்த மணியோசை மனசைப்பரவசப்படுத்தும்.2 நாட்கள் விடுமுறை என்ற சந்தோசமது.தவிர,அன்று மாலை எமது மைதானத்தில் கிரிக்கெட் மச்சென்றால் அந்தக்குதூகலம் இன்னும் ஒருபடி மேல. நல்ல இடம்பிடிக்க ஓடிவந்து,மதில்களில் பாய்ந்து ஏறியிருந்து ரசித்த அன்றைய துடுப்பாட்டப்போட்டிகளின் வெற்றிகள் மனத்திரைக்குள் கறுப்புவெள்ளைக்காட்சிப்படிமங்களாக ஓடிக்கொண்டேயிருக்கின்றன.வெள்ளி இருள,மச்சும் முடிய புத்தகங்களுடன் வீட்டுக்குச்சென்று அந்த இனிய நாளை அரங்கேற்றியதையும் இளம்பருவத்தை அனுபவித்த எவராலும் மறக்க முடியாது.

"சீக்கிரமா விடியாதா சனி?"

விடிந்தவுடன்;காலைச்சாப்பாட்டை முடித்துவிட்டு சைக்கிளை எடுத்து கால்கள் மிதிக்க,கிரவுண்ட் நோக்கி சைக்கிள் பறக்கும்.

மேலும் படிக்க ...

ஈழத்தின் சிறார் இலக்கியம் குறித்த மதிப்பீட்டில் கவிஞர் இக்பால் அலியின் வகிபாகம்: ஓர் ஆய்வு! - பேராசிரியர் ஜமாஹீர், பேராதனை பல்கலைக்கழகம் -

விவரங்கள்
- பேராசிரியர் ஜமாஹீர், பேராதனை பல்கலைக்கழகம் -
ஆய்வு
03 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                         - கவிஞர் இக்பால் அலி -

ஆய்வுச் சுருக்கம்

ஈழத்தின் சிறார் இலக்கியப் பரப்பில் கவிஞர் இக்பால் அலியின் வகிபாகத்தைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ‘இக்பால் அலியின் சிறார் இலக்கியத்தின் பாடுபொருள் மற்றும் எடுத்துரைப்பு பிற சிறார் இலக்கியங்களிலிருந்து வேறுபடுகிறது.’ என்ற கருதுகோளினைக் கொன்டு இக் கட்டுரை அமைகிறது. இக்கட்டுரைக்கு இதுவரை வெளிவந்துள்ள இக்பால் அலியின் சிறார் பாடல்கள் கொண்ட நூல்களை முதன்மைத் தரவுகளாகவும் இப்பாடல் நூல்களுடன் தொடர்புடைய திறனாய்வுகள், கட்டுரைகள் மற்றும் ஆய்வேடுகள் துணைமைத் தரவுகளாகவும் அமைகின்றன. கட்டுரையானது விபரிப்பு மற்றும் உள்ளடக்கப் பகுப்பாய்வு முறையியல்களைப் பின்பற்றியும் விளக்கப்படுகின்றது. ஈழத்து சிறார் இலக்கியத்தின் வழி மனித குலத்தின் மேம்பாடுதான் இக்பால் அலியின் வலியுறுத்தல் என்பதே இக்கட்டுரையின் முடிவாகும்.

பிரதான சொற்கள்: சிறார் இலக்கியம், அன்பு பெருக, மூன்று சக்கரக்காரன், குரங்குத் தம்பி, செல்லக் குட்டி

அறிமுகம்

இக்பால் அலி 1984ஆம் ஆண்டு முதல் இலக்கிய படைப்பாக்க முயற்சிகளில் ஈடுபட்டு வரும் ஒரு கவிஞர், எழுத்தாளர்இ ஊடகவியலாளர், மானுட சமத்துவச் சிந்தனையை கலை இலக்கியங்களின் வழி முன்னெடுத்து வருபவர். இவர் இலங்கை சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும் தொழில் நிமித்தம் காரணமாக பறகஹதெனிய மற்றும் கண்டியை வாசிப்பிடமாகவும் கொண்டவர். இலக்கிய உலகிற்கு இக்பால் அலியை அறிமுகம் செய்தவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் துரைமனோகரன் ஆவார். குறிப்பாகஇ பேராசிரியர் துரைமனோகரன் எழுதிய ‘இலங்கையின் இலக்கிய வளர்ச்சி’ என்ற நூலிலும் இக்பால் அலி வெளிக்கொணர்ந்த பல நூல்களுக்கு அவர் எழுதிய அணிந்துரைகளிலும் இதனை அறியலாம்.

மேலும் படிக்க ...

கவிஞர் திருமாவளவனுடன் ஓர் உரையாடல்! - ஆதவன் கதிரேசர்பிள்ளை -

விவரங்கள்
- ஆதவன் கதிரேசர்பிள்ளை -
நேர்காணல்
02 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் ஆதவன் கதிரேசர்பிள்ளை கவிஞர் திருமாவளவனுடன் முகநூல் மெசஞ்சரில் நடத்திய உரையாடல்களின் தொகுப்பொன்றை இமேஜ் வடிவில் அனுப்பியிருந்தார். துண்டு துண்டுகளாக, தாறுமாறாக, குழம்பிக் கிடந்த துண்டுகளிலிருந்து ஓரளவுக்கு விளங்கும் வகையில் பொருத்தியுள்ளேன். பிழை , திருத்தம் எவற்றையும் செய்யவில்லை. அப்படியே வெளியாகின்றது. இதனை வாசித்து , ஒழுங்காக்கும் பொறுப்பு ஆதவனுடையது. எதிர்காலத்தில் இமேஜ் வடிவில் அனுப்பாமல் எழுத்து வடிவில் அனுப்புங்கள். அலைபேசியிலுள்ள மெசஞ்சர் செய்திகளை அப்படியே மின்னஞ்சலுக்கு அனுப்பலாம. அதன் மூலம் தட்டச்சு செய்யும் பணியில் நேரம் மிஞ்சும். கவனத்தில் ஆதவன் எடுப்பாராக. - வ.ந.கி , பதிவுகள்.காம் -


திருமாவளவன் - வணக்கம் ஆதவன்

ஆதவன் - எம் எப்படியுள்ளீர்கள்? கலைச்செல்வன் தான் போய்த் தொலைந்தான். என் அழகிய தோழன்.

திருமாவளவன் - நான் ஒரு தடவை அவனூடாக

ஆதவன் -

லாச்சப்பல் முன்றலில் நினைவிருக்கு

திருமாவளவன் - ஓம்.. எப்படியிருக்கிறீர்கள்?

ஆதவன் -

நிறையப் பயணம்
செய்கிறேன். நிறைய வாசிக்கிறேன்.

திருமாவளவன் -  எனது  தொகுப்புகள் பார்த்திருக்கிறீர்களா?


ஆதவன் -

இங்கே இருக்கிறது பழையவை. புதியவை படித்திலேன். அனுப்புக.

மேலும் படிக்க ...

அஞ்சலி : எழுத்தாளர் சாமக்கோடாங்கி ரவி ( வழக்கறிஞர் ரவி ). - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
01 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சாமக்கோடாங்கி ரவி என்ற பெயரில்25 க்கும் மேற்பட்ட சிறுகதைகள்100 க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். திருப்பூர் இலக்கிய விருது நிகழ்வு ஒருங்கிணைப்பாளராக பல சாதனைகள் புரிந்தவர்.

மூத்த வழக்கறிஞர் திரு ரவி அவர்கள்  27/11/24 எதிர்பாராத விதமாக உடற்பயிற்சி மையத்தில் கீழே விழுந்ததனால் ஏற்பட்ட. தலைக்காயத்தின் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் காலமாகிவிட்டார் எனும் துயர செய்தியை அறிந்து வேதனையுறுகின்றோம் .

திருப்பூர் இலக்கிய விருதுக்காக வந்த நூல்கள் அவர் முகவரியில் இருந்ததை சென்ற வாரம் பெற்று கொண்ட போது எல்லாம் கொடுத்து விட்டேன்.எல்லாம் முடிந்தது என்றார். எல்லாமுமாக முடித்து கொண்டார். கடைசி சந்திப்பு... அவை கடைசி வார்த்தைகள்

போய் விட்டாயா ரவி?  சமீபமாய் தங்கள் உடல் பரும்ன் குறைக்க ஜீம்முக்கு போவதாகச் சொன்னீர்கள்.வீட்டுக்கதவு அடைபட ஏமாற்றத்துடன் திரும்பினேன் பலதரம்.

இன்று பூட்டப்பட்ட கதவை பார்த்து கண்ணீர் வடித்தேன். ஓசோ..புதுமைப்பித்தன் முதல் பலரது படைப்புகள் பற்றிய பேச்சு... இசை...முதல் வீட்டு பிராணிகள் வளர்ப்பு வரை எல்லாம் பேசியிருக்கிறோம்... அனுபவ பேச்சு. ..

மேலும் படிக்க ...

சாகித்திய ரத்னா விருது பெற்ற பெண் ஆளுமை ' யாழ்நங்கை' அன்னலட்சுமி இராஜதுரை - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
29 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையில் அண்மைக்காலத்தில் சில அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. நீண்ட இடைவெளிக்குப்பின்னர் ஒரு பெண் பிரதமராகியிரு;க்கிறார். அவர்தான் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய. அத்துடன் இருபதிற்கும் மேற்பட்ட பெண்கள் இலங்கை நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவாகியிருக்கிறார்கள். இச்செய்திகளின் பின்னணியில் தற்போது மற்றும் ஒரு இலக்கியச் செய்தி வெளியாகியிருக்கிறது.

நாம் அன்னக்கா என பாசமுடன் அழைக்கும் இலங்கையின் மூத்த படைப்பாளியும் பத்திரிகையாளருமான திருமதி அன்னலட்சுமி இராஜதுரை அவர்களுக்கு இம்முறை சாகித்திய ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது. செய்தி அறிந்தவுடன், அவரைத் தொடர்புகொண்டு வாழ்த்தியதையடுத்து அவர் பற்றிய இந்தக்குறிப்புகளை எழுதுகின்றேன்.

இதற்கு முன்னர் இந்த உயரிய தேசிய விருது தமிழர் தரப்பில் ஆண்களுக்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறது. இம்முறை இந்த கௌரவத்திற்கு ஒரு தமிழ்ப்பெண் ஆளுமை தெரிவாகியிருக்கிறார். இவரை பரிந்துரைத்தவர்களுக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்.

ஒரு பெண் ஏழுதசாப்தங்களுக்கும் மேலாக தொடர்ந்தும் ஊடகத்துறையில் நிலைத்து நிற்கிறார் என்றால், அவர் யார்...? என்ற கேள்வியைத்தான் முன்னைய - இன்றைய தலைமுறை வாசகர்கள் விழியுயர்த்திக் கேட்பார்கள். அப்படி ஒருவர் தமிழ்ப் பெண்ணாக தமிழ் ஊடகத்துறையில் அமைதியாக பணிதொடருவதென்பது மிகப்பெரிய ஆச்சரியம். சாதனை.

மேலும் படிக்க ...

சு.சமுத்திரத்தின் நெருப்புத் தடயங்கள் - புதின உத்தியும் மொழிநடையும்! முனைவர் கோ.வெங்கடகிருஷ்ணன், இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி),வாணியம்பாடி -635 752 -

விவரங்கள்
- முனைவர் கோ.வெங்கடகிருஷ்ணன், இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி),வாணியம்பாடி -635 752 -
ஆய்வு
27 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

இலக்கியங்கள் அவையவை தோன்றிய காலத்துச் சமுதாயத்தை வெளிக்கொணர்ந்து காட்டும் காலக்கண்ணாடிகள் எனலாம். இவ்வகையில் புதின இலக்கியமும் தான் தோன்றிய காலத்துச் சமுதாயத்தைப் படம்பிடித்துக் காட்டத் தவறவில்லை. இப்புதின இலக்கியம் தன் காலச் சமுதாயத்து நிகழ்ச்சிகளைக் கூறுவதன் வாயிலாக வருங்காலச் சமுதாயத்தைத் திருத்த அல்லது நல்வழிச் செலுத்த முனைகின்றது. தற்காலத்துப் புதின ஆசிரியர்கள் பலருள்ளும் சு.சமுத்திரம் சமுதாய சிக்கலை இலைமைறை காய்ப்போல் அல்லாமல், அங்கை நெல்லியெனப் பளிச்சிடக் கொணர்வதை அறிந்தேன். என் உணர்வுக்கு ஏற்றாற் போலவே அவருடய வேரில் பழுத்த பலாவும் சாகித்திய அகாடமி பரிசைப் பெற்றது. அவருடைய இன்னொரு நூலாகிய நெருப்புத் தடயங்கள் என் நினைவுக்கு வந்தது. நெருப்புத் தடயமும் வேரில்பழுத்த பலாவைப் போலவே சிறந்தது என எண்ணியதால், அப்புதினத்தின் சிறப்புக் கூறுகளான உரையாடல், மொழி நடை போன்றவை கதையில் எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் அவ்வாறு அமைய வேண்டியதன் அவசியம் என்ன என்பதையும், அது ‘நெருப்புத் தடயங்கள்’ என்னும் புதினத்தில் எங்ஙனம் அமைந்துள்ளது என்பதையும் ஆராய்ந்து விளக்கிக் கூறுவதே இவ்வாய்வின் நோக்கம்.

உரையாடல்

உலகம் இன்று துடிப்புடன் இயங்குகிறது என்றால் அதன் முக்கியகாரணம் ஒருவர் ஒருவரோடு மேற்கொள்ளும் கருத்துப் பரிமாற்றமே ஆகும். இந்தக் கருத்துப் பரிமாற்றம் உரையாடல்கள் மூலந்தான் நடைபெறுகிறது. அன்றாட மனித வாழ்வில் எவ்வாறு உரையாடல் இன்றியமையாத ஒரு இடத்தைப் பெறுகிறதோ அதுபோல் மனிதனால் படைக்கப்படும் அனைத்து இலக்கி;யங்களிலும் உரையாடல் அவசியமாகிறது. ஏனென்றால் இலக்கியம் என்பது, தான் வாழும் சமுதாயச் சூழல்களால் பாதிக்கப்பட்ட மனிதனால் அச்சமுதாயத்திலுள்ள பிற மக்களுக்காக அச்சமுதாயத்தை உணர்ச்சி மிக்க வார்த்தகளால் படைத்துக் காட்டுவதாகும்.

இலக்கியங்களில் வரும் உரையாடல்கள் பல வகையாக இருக்கும். சில இடங்களில் பாத்திரங்கள் தங்களுக்குள் உரையாடுவதாக அமையும். வேறு சில இடங்களில் பாத்திரங்களோடு உரையாடுவதாய் அமையும். இன்னும் சில இடங்களில் பாத்திரங்களுக்கும் வாசகர்களுக்கும் இடையில் உரையாடல் அமைவதாய் இருக்கும். இப்படி அமையும் உரையாடல்கள் இலக்கியத்தின் சிறப்புக்குத் துணை செய்ய வேண்டும். புதினத்தில் இடம்பெறும் உரையாடல்,

மேலும் படிக்க ...

திருப்பூர் இலக்கிய விருதுகள் 2024 : 1/12/24

விவரங்கள்
- தகவல்: சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
27 நவம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

16வது ஆண்டில்.. இதுவரை சுமார் 350 படைப்பாளிகளுக்கு எளிமையாக இந்த திருப்பூர் இலக்கிய விருது கடந்த 16 ஆண்டுகளில் வழங்கப்பட்டு இருக்கிறது. அவர் இல்லை இவர் இல்லை என்று சொல்பவர்கள் அவர்களும் இவர்களும் முன்பே இடம்பெற்றிருக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளலாம்

இந்த ஆண்டும் வழக்கமாக எளிமையாக ஒரு நூலகத்தில் நடைபெறுகிறது. 50 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலவாணி தரும் நகரத்தில் பின்னலாடை மூலம் வருமானம் கிடைக்கும் நகரத்தில் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்சர்கள் கிடைப்பதில்லை. இந்த முறையும் முயன்றோம். நகரத்தின் முக்கிய 8 பிரமுகர்களுக்கு ( ஓரளவு அறிமுகமானவர்கள் ) கடிதங்கள் அனுப்பினோம் .யாரும் பதில் அளிக்கவில்லை எளிமையாக வழக்கம் போல் நடத்துகிறோம்.

 இதை இதைப் பற்றி விமர்சிப்பவர்கள், அவதூறாய் பேசுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள் ஆதரவு தருவார்கள் அதிகம் இல்லை கூட இருப்பவர்களுக்கு கூட உதவி செய்ய மனவருவதில்லை இவர்களெல்லாம் கால வெள்ளத்தில் சாதாரண குப்பைகளாக கால வெள்ளத்தில் ஒதுக்கி வைக்கப்படுவார்கள்

 நகரத்தின் வியாபார வளர்ச்சியுடன் கலை இலக்கிய வளர்ச்சியும் இருந்தால் தான நகரத்தின் முழு வளர்ச்சியும் வெளியே தெரியும் அந்த வகையில் தமிழ் இலக்கிய பரப்பில் உள்ள சில எளிமையான படைப்பாளிகளை கௌரவம் படுத்தும் இந்த விழா எளிமையானது.சாதாரண  எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் போலவே ஆடம்பரமான எழுத்துக்கள் வரிசையாக எழுத்தாளர்கள் உள்ளார்கள். அவர்கள் மத்தியில் எளிமையான எழுத்துக்களுக்கு கவுரவமாக  கடந்த 16 ஆண்டுகளாய் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது

 இதைத் தவிர 20 ஆண்டுகளாய் பெண் எழுத்தாளர்களுக்கான சக்தி விருது மற்றும் குறும்பட கலைஞர்களுக்கான குறும்பட விருது ஆகியவையும் நடந்து வருகின்றன என்பதையும் கவனத்தில் கொண்டு வருகிறோம். கனவு 38ம் ஆண்டில் தன் இலக்கிய இதழைக்கொண்டு வரும் நேரத்தில் இந்த நிகழ்வுகளையும் , மாதக் கூட்டங்கள் தவிர முன்னெடுத்து வருகிறது.  எளிமையானப் படைப்பாளிகளை எளிமையான விழாவில் வாழ்த்துவோம். வாருங்கள்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. சிறுகதை; இழப்பு - குரு அரவிந்தன் -
  2. குருவிக்கூடு நாவல் பற்றிய பார்வை - திருமதி. ஜெகதீஸ்வரி மகேந்திரன், ஜெர்மனி -
  3. வரலாற்று ஆவணம்: எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் மறைவைத் தெரிவிக்கும் தினகரன், வீரகேசரி பத்திரிகைச் செய்திகள்!
  4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் (A.N.Kandasamy) டிரிபியூன் ஆங்கிலக் கட்டுரைகள்! - வ.ந.கிரிதரன் -
  5. பதிப்பாளர் 'ஜீவநதி' பரணீதரனின் ஓர் அனுபவம்: ஈழத்து எழுத்தாளர்கள், புத்தகம் போட்டவர்கள், போட இருப்பவர்கள் அனைவரும் படிக்கவேண்டிய குறிப்பு! - வ.ந.கிரிதரன் -
  6. மனப்பிறழ்வு (Schizophrenia) - ஶ்ரீரஞ்சனி -
  7. காவிரி டெல்டா திருவாரூரும் பாலஸ்தீனமும்! தமுஎகச திருவாரூர் திரைப்பட விழா 2024! - சுப்ரபாரதிமணியன் -
  8. ரவி அல்லது கவிதைகள் இரண்டு!
  9. அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு - ஒரு கலைத் தரிசனம்! (பகுதி 3) - ஜோதிகுமார் -
  10. அமேசன் - கிண்டில் பதிப்பாக வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' & 'என்னை ஆட்கொண்ட மகாகவி'
  11. அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு - ஒரு கலைத் தரிசனம்! (பகுதி 2) - ஜோதிகுமார் -
  12. அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு - ஒரு கலைத் தரிசனம்! (பகுதி 1) - ஜோதிகுமார் -
  13. வரலாறு காடுகளை பூக்க வைக்கும்! பாடா அஞ்சலி! - வ.ஐ.ச.ஜெயபாலன் -
  14. கவிதை: நான் நானாக.. - வ.ந.கிரிதரன் -
பக்கம் 12 / 104
  • முதல்
  • முந்தைய
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • அடுத்த
  • கடைசி