தேவகாந்தனின் 'சாம்பரில் திரண்ட சொற்கள்' பற்றி... - வ.ந.கிரிதரன் -

'சாம்பரில் திரண்ட சொற்கள்' எழுத்தாளர் தேவகாந்தனின் அண்மையில் வெளியான நாவல். 'தாய்வீடு' பத்திரிகையில் தொடராக வெளிவந்த நாவல் 'தாய்வீடு' பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. சிறப்பான வடிவமைப்புடன், ஓவியர் ஜீவாவின் அழகான ஓவியங்களுடன் வெளிவந்துள்ள நூல். ஒரு காலத்தில் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகளின் வெற்றிக்கு அவற்றில் வெளியான ஓவியங்களும் ஒரு காரணம். 'பொன்னியின் செல்வன்' நாவலில் எம்மையெல்லாம் கவர்ந்த பாத்திரமான வாணர் குலத்து வீரனான வல்லவரையன் வந்தியத்தேவனை . அவனை உயிர்த்துடிப்புடன் வரைந்த் ஓவியர்களான மணியம், வினு, மணியம் செல்வன், பத்மவாசன் ஆகியோரின் ஓவியங்கள் வாயிலாகத்தான் நினைவில் வைத்திருக்கின்றோம். 'கடல்புறா' நாவலின் நாயகன் இளையபல்லவன் என்றழைக்கப்படும் கருணாகரத்தொண்டைமானை ஓவியர் லதாவின் ஓவியங்கள் மூலம்தான் நினைவில் வைத்திருக்கின்றோம். 'ராணிமுத்து' வெளியீடாக வெளிவந்த மாத நாவல்களும் ஓவியங்களை உள்ளடக்கியே வெளிவந்தன. நாவல்களின் ஓவியங்களும் முக்கியமானவை. மேற்படி நாவலும் இவ்விதமே ஓவியங்களுடன் வெளியாகியிருப்பது வடிவமைப்புக்கு வனப்பைத்தருவதுடன், வாசிப்புக்கும் வளத்தைத்தருகின்றது..
இந்த நாவலின் பிரதான பாத்திரங்கள் - நடனசுந்தரமும் அவர் மனைவி சிவயோகமலரும்தாம். நடனசுந்தரம் சிறந்த ஓவியர். சிவயோகமலர் இசையில் ஆர்வம் மிக்கவள்.தஞ்சாவூர் சென்று வீணையில் தேர்ச்சி பெற்றுத்திரும்புகின்றாள். இளமையில் சில கணங்கள் நடனசுந்தரத்தைச் சிவயோகமலர் சிலிர்ப்படைய வைத்திருந்தாலும், அவ்வுணர்வுகள் தொடரவில்லை. அவளுக்கும் அவனில் இருந்தது வெறுப்பா, விருப்பா என்பதில் குழப்பம். அவளுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணம் குழம்பிய நிலையில், இருவரும் சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் திருமணப் பந்தத்தில் பிணைக்கப்படுகின்றார்கள். வாழ்கின்றார்கள். குழந்தைகள் பெற்று, அவர்கள் வாழ்க்கை நகர்கின்றது. இருவருமே அவர்களது சுய விருப்பங்களை, ஆர்வங்களைத் தொடர முடியாத வகையில் வாழ்க்கை நகர்கிறது. இறுதி வரையில் அவர்களால் தம் விருப்புக்குரிய துறைகளில் கவனம் செலுத்த முடியவில்லை. இவ்விதம் முதுமையில் அவர்களது வாழ்க்கை கனடாவில் தொடர்கிறது. தமிழர் ஒருவரின் வீட்டின் 'பேஸ்மண்டி'ல் வாடகைக்குக் குடிபெயர்கின்றார்கள். முதுமையில் உடல் உபாதைகளுக்கும், மனச்சிதைவுக்கும் உள்ளாகிய மனைவியைப் பராமரிக்கும் பொறுப்பில் நடனசுந்தரத்தின் இருப்பு இருக்கிறது. கதையின் ஆரம்பம் அங்கிருந்துதான் தொடங்குகின்றது. கடந்த காலச் சம்பவங்களை விபரித்துச் செல்வதே நாவலாகப் பரிணமிக்கின்றது.

நாங்கள் சென்ற அசகுசா என்ற இடத்தில் உள்ள புத்த கோயில் யப்பான் வருபவர்கள் எவரும் தவறவிடாது செல்லும் இடமாகும் இது டோக்கியோவில் உள்ளது . 30 மில்லியன் மக்கள் ஒவ்வொரு வருடமும் வந்து போவார்கள். முக்கியமான மட்டுமல்ல எல்லா நாட்களுமே உல்லாசப்பிரயாணிகளால் நிறைந்திருக்கும். அசகுசா என்பது புல்தரை என்ற கருத்தாகும் அக்காலத்தில் அப்படி இருந்திருக்கலாம். அருகில் ஆறு ஓடுகிறது தற்போது முழு இடமும் கடைவீதிகள், உணவகங்கள் நிரம்பி உள்ள இடமாகிறது.
இலக்கியங்கள் ஒவ்வொரு காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வு, வரலாறு, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை வெளிப்படுத்துவதாக அமைகின்றன. இலக்கியங்கள் வருங்கால சந்ததியினருக்கு உணர்த்திச் சென்ற அறநெறிகள் ஏராளம். அதில் சித்தர்களின் பாடல்களில் மக்கள் அறிந்துக் கொள்ளக்கூடிய நிலையாமை கருத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. அந்த வகையில் குதம்பைச் சித்தரின் பாடல்களில் காணப்படும் வாழ்வியல் நெறிமுறைகள் குறித்து ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான எட்னா எரிமலை கடந்த திங்கட்கிழமை ஜூன் மாதம் 2 ஆம் திகதி மதியம் போல மீண்டும் வெடித்ததாக இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் எட்னா ஆய்வகம் தெரிவித்துள்ளது. எரிமலை வெடித்தபோது பல கிலோ மீட்டர் தூரத்திற்குக் கரும்புகையோடு கலந்த தூசிகளும் கற்களும் பறந்ததால், அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் பயந்து போயிருந்தனர். எந்த நேரமும் விமானப் போக்குவரத்து தடைப்படலாம் என்ற பயத்தில் சில சுற்றுலாப் பயணிகள் சிசிலித் தீவைவிட்டு உடனே கிளம்பினார்கள்.


தமிழில் வாசிப்புக் கலாசாரத்தை வளர்த்தெடுத்ததில் வரலாற்று நாவல்களுக்கு முதன்மையான இடமுண்டு. கல்கி, சாண்டில்யன் வரிசை நாவல்களின் ஈர்ப்புக் காரணமாக அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களையே தமது பிள்ளைகளுக்குச் சூட்டுமளவிற்கு அந்நாவல்கள் வாசகர்களிடையே ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்தியிருந்தன.

இன்றைய உலகிலே முக்கியமாகப் பேசப்பட வேண்டிய ஒரு விடயம் உலக அமைதி. உலக அமைதி என்று சொல்லுகின்ற போது அது இடவாகு பெயராக அமைந்திருக்கின்றது. உலக மக்களின் அமைதியைக் குறிக்கின்றது. அதற்குள்ளாகவே உலக சமாதானமும் அடங்கி விடுகின்றது. உலகம் சமாதானமாக இருந்தாலேயே வாழுகின்ற ஒரு வாழ்க்கையை நிம்மதியாக நிறைவு செய்வோம். நாம் அன்பாலே உலகு செய்யவில்லை, வன்பாலேயே உலகு செய்திருக்கின்றோம். அனைத்து உயிர்களையும் ஒன்றாக நினைக்கும் பக்குவம் மனங்களுக்கிடையே ஏற்படாத காரணமே மனங்களைச் சிதைத்து உலகத்தின் அமைதியைக் கெடுக்கின்றது.
சென்னை திருச்சி ஸ்ரீ பாரதகலா குரு நடனமாமணி ஸ்ரீமதி பூர்ணா புஷ்கலா அவர்களின் பரத நாட்டிய நடனம் கொழும்பு கதிர்காமத்தில் எதிர்வரும் ஜுலை மாதம் 4 ஆம் தேதி கொழும்பிலும் 6 ஆம் தேதி கதிர்காமத்திலும் இடம்பெறவுள்ளது.

“ஆழ்கடலின் மிகப் பெரிய சுறா. கரையோரத்துச் சிறுமீன்களில் ஒன்றல்ல இவர்.”
ஏடுகளாய் இருந்தவற்றை எப்படியோ கண்டெடுத்து





அனுப்பும் படைப்புகளில் ஒழுங்காகத் தரிப்புக் குறிகள் இட்டு அனுப்புங்கள். முற்றுப்புள்ளி, கமா போன்ற தரிப்புக்குறிகள் அற்று வரும் படைப்புகள் நிராகரிக்கப்படும். ஒருங்குறிகளில் படைப்புகளை அனுப்புங்கள். இயலாதவர்கள் பாமினியிலும் அனுப்பலாம். படைப்புகளுடன் புகைப்படங்களை, படங்களை இணைத்து அனுப்புபவர்கள் அவற்றுக்கான உரிமை இல்லாதவிடத்து அவற்றை அனுப்ப வேண்டாம்.
லண்டனில் ‘சாஸ்வதம்’ என்ற நடனப் பள்ளியை 2018ஆம் ஆண்டில் ஆரம்பித்து அண்மையில் தமது ஏழாவது ஆண்டை நிறைவேற்றும் வகையில் மிகச் சிறப்பாக நடாத்தியிருந்தார்கள். லண்டன் பாரதிய வித்ய பவனில் இடம்பெற்ற இந்த நாட்டிய நிகழ்வில் எண்பதிற்கும் மேற்பட்ட பல்வகையான நாட்டியக் கலைஞர்கள் பங்கு பற்றிச் சிறப்பித்தமை அற்புதமான காட்சியாக ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டது.
ஈழத்து யாழ்ப்பாண மண்ணைக் கதைக்களமாகக் கொண்டு ஈழத்துக் கலைஞர்களால் யாழ் நூலக எரிப்பை நினைவூட்டும் வகையில் 31.05.2025 அன்று ‘தீப்பந்தம் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. AML US தயாரிப்பான இத்திரைப்படம் ராஜ் சிவராஜ் அவர்களின் இயக்கத்திலும் பூவன் மதீசனின் திரைக்கதையிலும் சிறப்புப் பெற்றுள்ளது.