பதிவுகள் முகப்பு

அஞ்சலி: மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகம்மது மறைவு! ஆழ்ந்த இரங்கல்!

விவரங்கள்
- பதிவுகள்.காம் -
இலக்கியம்
26 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகம்மது அவர்கள் இன்று மறைந்ததாக அறிந்தோம்.  உலகத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். அவருக்குப் பதிவுகள் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. பதிவுகள் இணைய இதழில்  எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்கள்  ' சிங்கப்பூர்/மலேசிய எழுத்தாளர்கள் வரிசை 'யில் அறிமுகப்படுத்திய எழுத்தாளர் சை.பீர்முகம்மது பற்றிய குறிப்பையும், அறிமுகப்படுத்திய சை பீர்முகம்மது அவர்களின் சிறுகதையினையும்  அவர் நினைவாக மீள்பிரசுரம் செய்கின்றோம்.


 சிங்கப்பூர்/மலேசிய எழுத்தாளர்கள் வரிசை - 8!
அறிமுகம்: (மலேசியா) சை.பீர்முகம்மது   - ஜெயந்தி சங்கர் -

மலேசியத் தலைநகரான குவாலலம்பூரில் 1942ல் பிறந்த சை.பீர்முகம்மது 1959 முதல் எழுதி வருகிற மூத்த எழுத்தாளர்களுள் முக்கியமானவர். கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக இவர் ஏதோவொரு விதத்தில் தன்னை இலக்கியத்துடன் இணைத்துக் கொண்டு வந்திருக்கிறார். 12 வயதுமுதலே தன் எழுத்தார்வம் தொடங்கியதாகச் சொல்லும் இவர் மலேசியாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது ஏற்பட்ட வெடிச் சத்தத்துடன் பிறந்ததாக வேடிக்கையாகச் சொல்வார். தனது கட்டுமானத்துறை நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் இவர் தனது குடும்ப உணவகங்களையும் கவனித்துக் கொள்பவராக இருந்து வருகிறார்.

பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் போதான காலங்களில் சிங்கப்பூரின் தமிழ்முரசு இவருக்குப் படிக்கக் கிடைக்கும். அதில் மாணவர் மணி மன்றம் என்ற ஒருபகுதி ஒவ்வொரு திங்கட்கிழமையும் வரும். வீட்டில் 1954முதல் தொடர்ந்து வீட்டில் வாங்கியதால் விடாமல் வாசித்தார். மாணவர் மணிமன்றத்தில் நிறைய மாணவர்கள் எழுதினார்கள். தானும் எழுதிப்பார்த்தால் என்ன என்று யோசித்தவர் சின்னச்சின்ன கட்டுரைகள் எழுதி அனுப்பியிருக்கிறார். அதன்பிறகு பேச்சுப்போட்டிகளில் கலந்து பரிசுகளும் பெற்றார். பள்ளியில் சை.பீர்முகம்மது மட்டும் தான் இஸ்லாமியர். பெரும்பாலோர் யாழ்ப்பாணத்தமிழர்கள்.

மேலும் படிக்க ...

இலண்டனூடாக கங்காரு தேசம் - 4 - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
ஶ்ரீரஞ்சனி
25 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                 - கங்காருவும் கட்டுரையாசிரியரும் -

அடுத்த நாள், சாலையோரம் காரை நிறுத்திவிட்டு, சேற்று நிறத்தில் ஓடும் யாரா ஆற்றையும், வழியெங்கும் நீண்டுயர்ந்திருந்த மரங்களையும் பார்த்தபடி நடந்தும், Tramஇல் ஏறியும் இறங்கியும், வேறுபட்ட கட்டிட அமைப்புக்கள் நிறைந்த மெல்பேர்ன் நகரைச் சுற்றிப்பார்த்தபோது மூன்று விடயங்கள் எனக்கு அதிசயத்தைத் தந்தன. நகரின் மத்தியில் காரை நிறுத்துவதற்குப் பணம்செலுத்த வேண்டியிருக்கவில்லை, நகரின் மத்திக்குள் Tramஇல் இலவசமாகப் போக்குவரத்துச் செய்யமுடிந்தது, அத்துடன் இலவசமான இணையவசதிகள் சாலையோரத்தில் அங்கங்கேயிருந்தன. பின்னர் மதியவுணவுக்காக அருகிலிருந்த சரவணபவனுக்குப் போனோம். வட இந்திய உணவுகளை மட்டுமே அங்குண்ணலாம் என்றானபோது, சரவணபவன் என அவர்கள் பெயரிடாமலிருந்திருந்தால், நாங்கள் ஏமாந்திருக்க மாட்டோமே எனச் சலித்துக்கொள்ள மட்டுமே எங்களால் முடிந்தது.

அன்று மாலையில் என்னைச் சந்தித்த பூபதி அண்ணா, ATBC வானொலிக்காக எழுத்தாளர் கானா பிரபா என்னைப் பேட்டி காண்பதற்கான ஒழுங்குகளைச் செய்திருப்பதை ஞாபகப்படுத்திச் சென்றிருந்தார். மின்கணினிக்கூடாக என்னைப் பேட்டிகண்ட கானா பிரபா என்னைப் பற்றிய இலக்கிய விபரங்களை முன்பே சேகரித்து வைத்திருந்து வித்தியாசமாகவும் சிறப்பாகவும் அதனைச் செய்திருந்தார். மறுநாள், என் பாடசாலையான மகாஜனக் கல்லூரியின் ஆசிரியர்களில் ஒருவரான ரோகிணி ரீச்சரின் மகனும், எங்களின் அயல் வீட்டுக்காரருமான ராஜன், Twelve Apostles என்ற இடத்துக்கு என்னைக் கூட்டிப்போயிருந்தார்.

மேலும் படிக்க ...

தமிழ் இலக்கியத்தோட்ட ஏற்பாட்டில் எழுத்தாளர் ஜெயமோகனுடான சந்திப்பு!

விவரங்கள்
- தகவல்: த.சிவபாலு -
நிகழ்வுகள்
25 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

குறு நாவல் : கிராம விஜயம் (3) - கடல்புத்திரன் -

விவரங்கள்
Administrator
நாவல்
24 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் மூன்று: அன்னர் எங்கே?

"படிப்பைக் கொண்ட வேலையில் நாட்டம் அதிகமாக , அரசவேலையில் வசதிகள் எனஂற​ மானுக்குப் பினஂனால் ஓட​  கடல் தொழிலைச் செய்கிறவர்கள் அருகி விட்டது" என்று சங்கர் குறிப்பிடுறது அனஂனருக்கு   நினைவுக்கு வருகிறது . அப்ப தான் இவரும் ' சேர் , இங்கே சாதியம் என்பவை  பொய்   ' என  விளக்க முற்பட்டார் .  " நாடார்களின் போராட்டங்களும் ,விடுதலையும் " என்ற நூலை வாசிக்கும் வரையில் அவருக்கும் கூட பல​ விசயங்கள்  தெரிந்திருக்கவில்லை . பனம்தொழிலைச் செய்கிறவர்களும் , கடல்தொழில் செய்கிறவர்களும் உண்மையில் சாதியப் பிரிவினரே இல்லை . அவர்கள் பாண்டியகுலத்தையும் , சோழர் குலத்தையும் சேர்ந்த‌ ,   மக்கள் பிரிவினர் எனஂற உண்மை அவரை  ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது    .  ஒருகாலத்தில் , லெமூரியா , இந்தியாவை விட​     பெரிய நிலப்பரப்பைக்  கொண்ட​   ... நாடாக இருந்திருக்கிறது . அது , இனஂறு இந்து சமுத்திரத்தினுள் நீரினுள் மூழ்கிப் போய்க் கிடக்கிறது . பாண்டியரின் பொற்காலம்  அந்த நிலப்பரப்பிலே எழுந்து புதைந்து போய் இருக்கிறது .அந்த​ காலத்திலேயே பாண்டியருக்கும் , சோழர்களுக்கும் இடையில்  பகைமை கொடிவிட்டு படர்ந்திருக்கிறது . சேரர்கள் இருதரப்பிலும் மணத் தொடர்புகளை கொண்டு பகையை வளராது வைத்திருக்கிறார்கள். வெற்றி ,தோல்விகள்  சகஜம்  . பகை  குலங்களை நசிபட வைத்து தீண்டாச்சாதியாகவும் , ஒருபடி இறங்கிய( குறைந்த​) சாதியாகவும் ஆக்க வல்லவை . அந்த வரலாறையே அந்நூல் விபரிக்கிறது . கத்தியில் நினஂறு கூறுகிறது  போல​ கூறுகிறது .

மேலும் படிக்க ...

சுப்ரபாரதிமணியனின் புதிய நாவல் ' சிலுவை'

விவரங்கள்
- தகவல்: சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
24 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சுப்ரபாரதிமணியனின் 900 பக்க புதிய நாவல்  ' சிலுவை'  வெளியிடு சிக்கண்ணா அரசு கல்லூரியில் நடந்த முப்பெரும் விழாவில் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் வெளியிட சென்னையைச் சார்ந்த ஆவணப்பட இயக்குனர் ஆர். பி அமுதன் சிலுவை முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.சுப்ரபாரதிமணியனின் 100 வது நூலாகும் சிலுவை நாவல் நூலை அறிமுகப்படுத்தி பேராசிரியர் செங்கமுத்து உரையாற்றினார். ஆவணப்படங்கள் நிஜத்தன்மை கொண்டவை காலத்தின் ஆவணங்களாக விளங்குபவை . மக்களின் மனசாட்சியாக விளங்குபவை என்று கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் பேசுகையில் குறிப்பிட்டார். தலைமை: துறைத்தலைவர் பாலசுப்ரமணியம். 

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கின்றோம் : "அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல குரலிலும் தெரியவேண்டும்"! பி. எச். அப்துல் ஹமீதின் வாழ்வியல் அனுபவத்தை பேசும் 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்'! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
24 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மகாத்மா காந்தியின் சத்திய சோதனை இன்றளவும் பேசப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் உண்மையும் நேர்மையும் சத்தியமும் நினைவாற்றலும் இழையோடியிருந்தன.  அரை நூற்றாண்டுக்கும் மேலாக வானொலி – தொலைக்காட்சி அறிவிப்பாளராகவும், நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் , தொகுப்பாளராகவும் பணியாற்றிவந்திருக்கும் பி. எச். அப்துல் ஹமீத், தன்னை ஒரு சிறந்த எழுத்தாளனாகவும் நிரூபித்திருக்கிறார். எனினும், அவரிடம் இயல்பாகவே குடியிருக்கும் தன்னடக்கம், தானும் ஒரு எழுத்தாளன்தான் எனச்சொல்வதற்கு தடுக்கிறது.

"கடந்து வந்த பாதையை மறப்போமேயானால், செல்லும் பாதையும் இருட்டாகவே இருக்கும். "  என்று நான் எனது பதிவுகளில் அவ்வப்போது சொல்லி வந்திருக்கின்றேன். கடந்துவந்த பாதையை மறக்காமல் இருப்பதற்கு நினைவாற்றல் மிகவும் முக்கியம். அந்தப்பாதையில் ஒரு வழிப்போக்கனாகவே நடமாடியிருக்கும் அப்துல் ஹமீத், காய்தல் உவத்தல் இன்றி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்து, பொது சன ஊடகத்தில் எதிர்நோக்கப்பட்ட சவால்களையெல்லாம் சமாளித்து முன்னோக்கி வந்திருக்கிறார் என்பதற்கு இந்த நூல் சான்று பகர்கிறது.

மேலும் படிக்க ...

மனித சடலம் - சரகு (ஈரோடு) -

விவரங்கள்
- சரகு (ஈரோடு) -
கவிதை
24 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எல்லாவற்றையும் இழந்து நிற்கும்
மனித சடலத்திடமிருந்து
ஒரு முனகல் மட்டுமே வரும்..

அந்த முனகலும்
அவர்க்கு நெருக்கமானவர்க்கு
மட்டுமே தெரியும்..

கொடுமை எதுவென்றால்
அவரும் அதை
நிராகரிப்பார் ..

ஒரு பாலைவனத்தில்
கானல்நீர் பார்த்து
ஏமாந்து ஏமாந்து
பழக்கப்பட்ட
அந்த மனித சடலம்

இரத்தமும் சதையும்
நைந்துபோகும்வரை
அந்த நிராகரிப்பையும்
உண்மையென்று
எண்ணிக் கொள்ளும்.

மேலும் படிக்க ...

முனைவர் இர. மணிமேகலை கவிதைகள்!

விவரங்கள்
முனைவர் இர. மணிமேகலை, இணைப்பேராசிரியர்& தமிழ்த்துறைத்தலைவர், பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர்- 641004 தமிழகம், இந்தியா.
கவிதை
24 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வேட்கை

சிவப்புக்கம்பள விரிப்புகள்
உயரதிகாரிகளுக்கானவை.
மாப்பிள்ளை அழைப்பும் மகிழவே நிகழும்
மணவறை மலர்கள் மணம் சற்றே பரப்ப
இருமனங்கள் இணையும் தருணம்
பொருள் புரியா மந்திரங்கள் பாரதத்துக்கானவை.
கழுத்தில் மஞ்சள் மிளிரும் தாலியின் சரடு
வாழையிலை விருந்து குலதெய்வங்களை
விசாரித்து முடிகிறது.

நாவில் இனிப்பின் சுவை.
அதன்பின் அம்மாவின் முன்னோள்
பெரியம்மாவுடன் சந்திப்புக்குறிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க ...

கவிக்கு ஒரு கவி! - ம.ஆச்சின் -

விவரங்கள்
- ம.ஆச்சின் -
கவிதை
24 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிஞர். நா.முத்துக்குமார்  நினைவு தினக் கவிதை..

கவிக்கு ஒரு கவி!
அவையே முத்துக் கவி!
ஆழ்கடலில் கண்டெடுத்த முத்தே!
தமிழ்த் திரைக்குக் கிடைத்த
சிறந்த  சொத்தே,
உன் பாடலின் வரிகள்
மேகங்களைக் கலைக்கின்றன.
காதல் மழையைப் பொழிய வைக்கின்றன.
பொழிந்தது சாரல் மழையல்ல.
கவியின் கனிந்த, ஆழ்ந்த
காதல் வரிகள்,
நீ   செதுக்கிய வார்த்தைகள்
என் மனத்தை  உலுக்கும் சொல்லாடல்கள்.
நீ பாடிய பாட்டு,
என் மனதின் இன்பத்
தாலாட்டு,

மேலும் படிக்க ...

சிலுக்கு சிமிதா - நிழலும், நிஜமும்! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
23 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நடிகை சிலுக்கு சிமிதா பற்றி முகநூலில் செய்திகளைப் பார்த்தபின்னர்தான் புரிந்தது இன்று, செப்டம்பர் 23,  அவரது நினைவு தினமென்று.

அம்மா கனடாவுக்கு வந்த புதிதில் பாலச்சந்தரின் 'கையளவு மனசு'  தொலைக்காட்சித் தொடரை விரும்பிப் பார்ப்பா. அதில் கதாநாயகன் பிரகாஸ்ராஜ். நல்ல குணமுள்ள கதாநாயகன். அந்தப்பாத்திரமும், நடிகை கீதாவின் பாத்திரமும் அம்மாவுக்குப் பிடிக்கும்.
சிறந்த நடிகரான பிரகாஸ்ராஜை வில்லனாக்கி விட்டது தமிழ்ச் சினிமா. அதுதான் சிலுக்கு சிமிதாவுக்கும் நடந்தது. சிறந்த நடிகையான சிலுக்கைக் கவர்ச்சி நடிகையாக மாற்றி விட்டது தமிழ்ச் சினிமா.

சிறந்த நடிகர்கள் எந்தப் பாத்திரமானாலும் சிறப்பாக நடிப்பார்கள். பிரகாஸ்ராஜ், சிலுக்கு சிமிதா இருவருமே தமிழ்ச் சினிமா  தமக்குத்  தந்த வேடங்களில் சிறப்பாக நடித்தார்கள்.

மேலும் படிக்க ...

சிறுகதை: சாந்தா அக்கா! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
சிறுகதை
21 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'டேய் கேசவா, சாந்தா அக்கா செத்துப் போய்விட்டாவாம். தெரியுமா?'

சின்னம்மா  வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியிருந்தார். அவர் என் அம்மாவின் கடைசிச் சகோதரி. இன்னும் உயிருடனிருக்கும் சகோதரி. வயது எண்பதைத்தாண்டி விட்டது. பார்த்தால் ஐம்பதைத்தாண்டாத தோற்றம். மனுசி இன்னும் காலையில் ஒரு மணி நேரம் நடை , யோகா , மரக்கறிச் சாப்பாடு, நிறைய பழங்கள் என்று வாழும் மனுசி.

'என்ன  சின்னம்மா, சாந்தா அக்கா செத்துப் போய் விட்டாவா? எப்ப சின்னம்மா?'

"இன்றைக்குத்தான் விடிய ஜேர்மனியிலை போய்விட்டாவாம்."

"என்ன அவ ஜேர்மனியிலையா இருந்தவா? இவ்வளவு நாளும் நான் நினைச்சுக்கொண்டிருக்கிறன் அவ ஊரிலைத்தான் இன்னும் இருக்கிறா என்று. அவ எப்ப ஜேர்மனிக்குப் போனவா சின்னமா?"

மேலும் படிக்க ...

கொழும்புத் தமிழ்ச் சங்கம்: அன்னலட்சுமி இராஜதுரை சிறுகதைகள் நூல் வெளியீடு!

விவரங்கள்
Administrator
நிகழ்வுகள்
21 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

விம்பம்: நாவல், சிறுகதைக் கருத்தரங்கு!

விவரங்கள்
- தகவல்: சாந்தன் -
நிகழ்வுகள்
21 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இடம்: Trinity Center, East Avenue,London 
திகதி: 23.09.2023 
நேரம்: காலை 10.30 - மாலை 7.30

No More Tears Sister: Anatomy of Hope and Betrayal (2004)

விவரங்கள்
- ஊருலாத்தி -
அரசியல்
21 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ராஜனி திரணகமவின் நினைவு தினம் செப்டம்பர் 21!

சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், உடற் கூற்றியல் விரிவுரையாளரும், 'முறிந்த பனை' நூலின் ஆசிரியர்களில் ஒருவருமான ராஜனி திரணகமவின் நினைவுதினம் செப்டம்பர் 21. அவர் நினைவாக அவரைப்பற்றிக் கனடிய அரச திரைப்படக் கூட்டுத்தாபனத்தயாரிப்பான   No More Tears Sister: Anatomy of Hope and Betrayal (2004) என்னும் இத்திரைப்படத்தைப் பகிர்ந்துகொள்கின்றேன்.

கனடாத்தேசியத் திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் வெளியீடாக  சுயாதீனத் திரைப்படத்தயாரிப்பாளர் ஹெலென் கிளோடாவ்ஸ்கி (Helene Klodawsky) எழுதி, இயக்கிய ஆவணத்திரைப்படமே No More Tears Sister: Anatomy of Hope and Betrayal (2004) என்னும் ஆவணத்திரைப்படம். மனித உரிமைப்போராட்டச் செயற்பாட்டாளரும், மருத்துவ  உடற் கூற்றியல் விரிவுரையாளராகவுமிருந்த ராஜனி திரணகம பற்றிய ஆவணத்திரைப்படமிது.   இவர் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக  ஆசிரியர் சங்கத்தின்  ஸ்தாபர்களில் ஒருவர். ஏனையவர்கள் :  ராஜன் ஹூல், சிறிதரன், தயா சோமசுந்தரம். அவர்களுடன் இணைந்து 'The Broken Palmyra' ('முறிந்த பனை') என்னும் ஆவண நூலை எழுதி வெளியிட்டார்.

மேலும் படிக்க ...

இலண்டனூடாக கங்காரு தேசம் - 3 - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
ஶ்ரீரஞ்சனி
20 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும், அழகும் செழிப்பும் மிக்க இலங்கையில் பிறந்த எங்களை, அந்த நாட்டில் வாழவிடாமல் துரத்திய விடயங்கள் எங்களுக்கு ஆற்றொணா வேதனைகளையும் இழப்புகளையும் விளைவாக்கியிருந்தாலும்கூட, பல்வேறு நன்மைகளையும் செய்திருக்கின்றன என்பதை எவரும் மறுக்கமுடியாது.

உதாரணத்துக்கு, புலம்பெயர்ந்த நாடுகளில் எங்களுக்குக் கிடைத்திருக்கும் குடியுரிமை நாங்கள் வாழ்கின்ற நாடுகளுக்குள் மட்டுமன்றி, வெளியேயும் எங்களுக்குப் பல தரப்பட்ட அனுகூலங்களை அள்ளித்தந்திருக்கிறது. அவ்வகையில் உலகெங்கும் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் வசதியைப் பயன்படுத்தி அவுஸ்ரேலியாவுக்குப் போகவேண்டுமென்பதுதான் என் நீண்டநாள் கனவாக இருந்தது. என் உற்ற சினேகிதிகள், சகமாணவர்கள், அயலவர்கள் என மனதுக்கு நெருக்கமான பலர் வாழும் அவுஸ்ரேலியாவில்தான் சொந்தச் சகோதரங்களைவிட மேலான சகோதர வாஞ்சையுடன் பழகும் முருகபூபதி அண்ணாவும் வாழ்கிறார் என்பதும் அதன்மேலான மோகத்துக்கும் தாபத்துக்கும் காரணமெனலாம்.

கொள்ளுப்பிட்டி மெதடிஸ்ற் கல்லூரியில் நான் கற்பித்துக்கொண்டிருந்த காலங்களில், சில்லையூர் செல்வராஜன், கமலினி செல்வராஜன், யோகா பாலச்சந்திரன், ராஐ ஶ்ரீகாந்தன், சோமகாந்தன், பத்மா சோமகாந்தன் எனப் பல இலக்கியக்காரரின் அறிமுகம் கிடைத்திருந்தது. அவ்வகையில் அறிமுகமாகியிருந்த முருகபூபதி அண்ணாவுடனான உறவு அவர் என் அப்பாவின் மாணவர் என்ற முறையில் இன்னும் சற்று நெருங்கியதாகவே இருந்தது.

மேலும் படிக்க ...

சமயங்களின் பார்வையில் தமிழ்க் காப்பியங்கள் - ஓர் ஆய்வு! - முனைவர் ஆ.ஜெயகணேஷ், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஆனந்த் உயர் தொழில்நுட்ப நிறுவனம், கழிப்பட்டூர், சென்னை – 603103.-

விவரங்கள்
- முனைவர் ஆ.ஜெயகணேஷ், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஆனந்த் உயர் தொழில்நுட்ப நிறுவனம், கழிப்பட்டூர், சென்னை – 603103.-
ஆய்வு
20 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து தமிழில் காப்பியங்கள் தோன்றலாயின. தமிழில் முதன்முதலில் தோன்றியனவும், பிறமொழிகளிலிருந்து தமிழிற்கு வந்தனவும், சமயம் தழுவி எழுந்தனவும், தலபுராணங்களும் எனக் காப்பிய வரிசை தொடர்ந்து வருகின்றது. இக்காப்பியங்களில் பிற சமயங்களின் கருத்துகள் உள்ளன என்றும் பிற சமயங்களின் தாக்கத்தினால் உருவானவை என்றும் அறிஞர்கள் கூறுவர். எனவே, தமிழ்மொழியில் உள்ள காப்பியங்களை இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

தமிழ்மொழிக் காப்பியங்கள் பிற சமயங்களின் தாக்கத்தினால் தோன்றியவையா? என்பது இக்கட்டுரையின் சிக்கலாக அமைகிறது.

தமிழ்மொழிக் காப்பியங்களுள் சிலப்பதிகாரம், மணிமேகலை தவிர மற்ற காப்பியங்கள் பிற மொழியில் தோன்றியவை. அக்காப்பியங்களைத் தமிழ்மொழியில் மொழியாக்கம் செய்துள்ளனர் அல்லது தழுவி உள்ளனர். எனவே, தமிழ்மொழிக் காப்பியங்கள் பிற சமயங்களின் தாக்கத்தினால் தோன்றவில்லை என்பதே இக்கட்டுரையின் கருதுகோளாக உள்ளது.

காப்பியம் என்னும் சொல்

தமிழில் தொல்காப்பியம், காப்பியக் குடி, வெள்ளூர்த் தொல்காப்பியர், காப்பியஞ் சேந்தனார், காப்பியாற்றுக் காப்பியனார் முதலான பெயர்கள் காணப்படுகின்றன. இவை காப்பு + இயம் என்ற சொற்களின் சேர்க்கையாகக் கருதப்படுகின்றன. பழமரபுகளைக் காப்பது காப்பியம் எனக் கருத இடம் உண்டு. வடமொழியில் உள்ள காவ்யா என்னும் சொல்லிலிருந்துதான் இச்சொல் தோன்றியது என்பர் மூடர் கூட்டம். அக்கூட்டத்திற்கு முதலில் தோன்றிய மனிதன் தமிழன் என்றும் முதலில் தோன்றிய மொழி தமிழ் என்றும் முதலில் தோன்றிய படைப்புகளும் தமிழ்தான் என்றும் நன்கு தெரியும். இதற்கானச் சான்றுகளும் நாளுக்குநாள் நமக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றைத் தமிழ்ச் சான்றோர்களும் இங்கு எடுத்துக் கூறிக் கொண்டுதான் உள்ளனர். இன்னும் எத்தனைக் காலத்திற்கு இந்தப் பழைய கருத்துகளையே நாம் கூறிக் கொண்டிருப்பது? தமிழில் புதிய கருத்துகள் தோன்றி கொண்டே இருக்கின்றன. கருத்துகள் தோன்றதோன்ற அவற்றைத்தான் இங்கு எடுத்துக்காட்ட வேண்டும் அல்லது கூற வேண்டும். அதைவிடுத்து பழைய செய்தியைக் கூறுவதென்பது தர்மம் இல்லாதச் செயலாகும். தொல்காப்பியத்தின் காலம் இதுதான் என்று வரையறுத்துக் கூறமுடியாத நிலைதான் இங்குள்ளது. தமிழ்மொழியில் என்ன இருந்ததென்று ஆராய்ந்து கூற அறிவில்லார்க்கு, வடமொழியில் என்ன இருந்தது என அறிய முடிகிறது என்பது வேடிக்கையாக இருக்கிறது. எனவே, காப்பியம் என்னும் சொல் தமிழ்மொழிக்கே உரிய சொல் என இங்கு வலியுறுத்தப்படுகிறது.

மேலும் படிக்க ...

அமெரிக்கா - ஞானம் இலம்பேர்ட் -

விவரங்கள்
- ஞானம் இலம்பேர்ட் -
நூல் அறிமுகம்
17 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- ஸ்நேகா (தமிழ்நாடு) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடான வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (1996) சிறுகதைத்தொகுப்பு பற்றி 'டொரோண்டோ, கனடாவில் ஒர் இலக்கியக் கலந்துரையாடல் , தேடகம் அமைப்பின் ஏற்பாட்டில் தொண்ணூறுகளில் நடைபெற்றது. அதில்  கலந்துகொண்டு 'அமெரிக்கா' பற்றி உரையாற்றிய நாடகவியலாளரும் , கலை, இலக்கியத்திறனாய்வாளருமான ஞானம் இலம்பேட்டின் உரையின் முக்கிய பகுதிகள் இவை. -


சமூக நிகழ்வுகளை ஒரு தளத்தில் வைத்து அந்த நிகழ்வுகளுக்கு ஓர் உருவம் கொடுப்பதிலும், அவற்றைப் பல்லின ஆக்கங்கள் செய்வதிலும் எமக்குப் பெரும் பங்குண்டு.  அந்த நிகழ்வுகளுக்குக் கொடுத்த உருவம்தான் இந்த அமெரிக்கா என்ற இச்சிறு நூலாகும்.  இதிலுள்ள ஏழு சிறுகதைகளையும், குறுநாவலையும்  படிக்கிறபொழுது  Georgi Plekhanov இன் ஒரு கூற்று ஞாபகத்துக்கு வருகின்றது.  அவர் சொல்கிறார்:

"மனிதன் தன்னைச் சுற்றியுள்ள யதார்த்தத்தின் செல்வாக்கில் அனுபவித்துள்ள உண்ர்ச்சிகளையும், எண்ணங்களையும் தனக்குள் மீண்டும் எழச்செய்து அவற்றைத் திட்டவட்டமாக உருவங்களில் வெளியிடும்போது கலை பிறக்கிறது"

இங்குள்ள  ஏழு சிறுகதைகளிலும் தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவு, அந்த உறவு காரணமாக ஏற்பட்ட பிணக்குகள், அப்பிணக்குகள் காரணமாக ஏற்பட்ட சில அபிப்பிராயங்கள், அல்லது கருத்துகள் பற்றிய நண்பர் கிரிதரன் அவர்களின் கோட்பாடே மேலோங்கி நிற்கிறது.

மேலும் படிக்க ...

பிரம்ம சாமுண்டீஸ்வரி சிறுகதைத் தொகுப்பு வெளியீடு! - சுலோச்சனா அருண் -

விவரங்கள்
- சுலோச்சனா அருண் -
நூல் அறிமுகம்
17 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சிறுகதைத் தொகுப்பு வெளியீடும், பரிசளிப்பு விழாவும் சென்னை காந்தி மண்டபச் சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் யூலை 27 ஆம் திகதி 2023 மாலை 6:00 மணிக்கு, முனைவர் வவேசு அவர்களின் தலைமையில் ஆரம்பமாகிச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பிரபல எழுத்தாளர் சிவசங்கரி அவர்களும், மற்றும் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பலரும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் படிக்க ...

கனடாவில் பேராசிரியர் இ.பாலசுந்தரத்திற்குப் பாராட்டு விழா!

விவரங்கள்
Administrator
நிகழ்வுகள்
16 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சுவாமி விபுலானந்தர் கலை மன்றம் (கனடா )  கனடாவில் வாழும் காரைதீவைச் சேர்ந்த பேராசிரியர்  இளையதம்பி பாலசுந்தரம் அவர்களுக்குப் பாராட்டு விழாவினை  ஞாயிற்றுக் கிழமை  17.09.2023  அன்று நடத்தவுள்ளது.  இடம்- தமிழ் இசைக் கலாமன்றம், 1120 Tapscott Road, Scarborough. நாள் &  நேரம்: 17.09.2023 ஞாயிறு மாலை  5  மணி.

மேலும் படிக்க ...

அஞ்சலி: சிநேகா பெல்சின் (Sneha Belcin) - ஊருலாத்தி -

விவரங்கள்
- ஊருலாத்தி -
சமூகம்
16 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சிநேகா பெல்சின் (Sneha Belcin) பால், சாதி, உளவியற் பிரச்சினைகள் போன்றவற்றுக்காகக் குரல் கொடுத்த ஊடகவியலாளர்; சமூக, அரசியற் போராளி. டிஹிட்டல் ஊடகத் தயாரிப்பாளர்; திரைப்படத் தயாரிப்பாளர். இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணைந்து 'நீலம் புரடக்‌சன்ஸ்' நிறுவனத்தை உருவாக்கியவர். அதற்கான யு டியூப் சானல் மூலம் காணொளிகள் பலவற்றை வெளியிட்டவர்.

இளைய சமுதாயத்தின் முக்கிய குரலாக ஒலித்த இவர் , தனது 26ஆவது வயதில், 28.8.2023 அன்று தன் உயிரை மாய்த்துக்கொண்டது துரதிருஷ்ட்டமானது. உண்மையில் இவரது மறைவின் பின்னரே நான் இவரைப்பற்றி அறிந்து கொண்டேன்.

மேலும் படிக்க ...

நினைவு கூர்வோம்: கலை, இலக்கியத்திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன்!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
15 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
இன்று கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரனின் நினைவு தினம். என் வாழ்க்கையைப் பொறுத்தவரையில் மறக்க முடியாத ஆளுமைகளில் ஒருவர்.
 
என் இளமைப் பருவத்தில் பத்திரிகைகளில் , சஞ்சிகைகளில் அவரது கட்டுரைகளைப் பார்த்திருக்கின்றேன். படித்திருக்கின்றேன்.பின்னர் பல்கலைக்கழகக்காலகட்டத்தில் ஃபிளவர் றோட்டில் அமைந்திருந்த அமெரிக்கன் சென்டர் நூலகத்தில் அடிக்கடி பார்த்து வியந்திருக்கின்றேன். ஆனால் அவருடன் பழகும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கவில்லை. ஆனால் காலத்தின் மாற்றத்துடன் , இணையத்தின் வரவும், சமூக ஊடகங்களின் வரவும் அந்தக் குறையினையும் தீர்த்து வைத்தது.
மேலும் படிக்க ...

வாசிப்பும் யோசிப்பும் (379): வரதரின் 'இனி ஒரு புதுயுகம் பிறக்கும்' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
15 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சுடர் சஞ்சிகையின் சித்திரை 1977 இதழில் வெளியான 'இனி ஒரு புதுயுகம் பிறக்கும்'  சிறுகதை  கூறும் பொருள் காரணமாக மிகவும் முக்கியத்துவம் பெறும் சிறுகதைகளில் ஒன்று.  யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நடந்த அனர்த்தங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதையிது. வேறு யாரும் இவ்விதம் எழுதியதாகத் தெரியவில்லை. இக்கதையினை வாசித்தபோது எனக்கு அன்று நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. இக்கதையின் கதை சொல்லிக்கு ஏற்பட்ட அனுபவங்களையொத்த அனுபவங்களே எனக்கும் ஏற்பட்டன. பேராசிரியர் திருச்சி நயினார் முகம்மது உரையாற்றிக்கொண்டிருந்த சமயத்தில் பொலிசார் வந்து கூட்டத்தைக் குழப்பியதும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளைக் கூடியிருந்த மக்கள் மீது பிரயோகித்ததும், கோட்டையின் அகழிக்குள் குதித்து மீண்டதும் நினைவுக்கு வந்தன. கதை சொல்லிக்கும் இத்தகைய அனுபவங்கள் ஏற்பட்டதைக் கதை விபரிக்கின்றது.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 31: வ.ஐ.ச. ஜெயபாலன் படைப்புகள்: ஓர் உரையாடல்

விவரங்கள்
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
13 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

நினைவு கூர்வோம்: பாடகி ஸ்வர்ணலதா - 'போறாளே பொன்னுத்தாயி!'!

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
13 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
போறாளே பொன்னுத்தாயி
படம்: கருத்தம்மா. இயக்கம்: பாரதிராஜா. பாடகி:ஸ்வர்ணலதா. இசை: ஏ.ஆர்.ரகுமான். வரிகள்: கவிஞர் வைரமுத்து.
 
இன்று செப்டம்பர் 12,  பாடகி ஸ்வர்ணலதாவின் நினைவு தினம். என்ன குரல்! ஒரு தடவை கேட்டாலும் மறக்க முடியாத தனித்துவம் மிக்க குரல். மிகவும் சிரமமான நீண்ட வசனங்களை உள்ளடக்கிய பாடல்களையெல்லாம் மிகவும் இலகுவாகப் பாடிவிடுவார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, வங்கமொழி எனப் பன்மொழிகளிலும், 10,000ற்கும் அதிகமான பாடல்களைக் குறுகிய காலத்தில் பாடிப் புகழ் பெற்ற பாடகி.
மேலும் படிக்க ...

சுடர்' ஆசிரியர் கனகசிங்கமும் (ஓவியர் பொன்னரி), அவர்தம் ஓவியங்கள் சிலவும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
13 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

-  எழுத்தாளர், ஓவியர் 'பொன்னரி' கனகசிங்கம் -

எழுத்தாளர் தாமரைச்செல்வி தான் 'சுடர்' சஞ்சிகையில் எழுதத்தொடங்கிய காலத்தில் அதன் ஆசிரியராகவிருந்தவர் கனகசிங்கம் என்றும், அவரே அரி, பொன்னரி என்பன அவரது புனைபெயர்கள் என்றும் குறிப்பிட்டுப் பின்வருமாறு பதிவொன்றினைத் தனது முகநூற் பக்கத்தில் இட்டிருந்ததுடன், அண்மையில் ஆஸ்திரேலியாவின் நடந்த 'அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்க'த்தின் தமிழ் எழுத்தாளர் விழாவில் தான் முதன்முறைடாக அவரைச் சந்தித்ததாகவும் குறிப்பிட்டு அவருடனான புகைப்படமொன்றினையும் பகிர்ந்திருந்தார். அதனை நன்றியுடன் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.  கூடவே 'சுட'ரில்  வெளியான அவரது ஓவியங்கள் சிலவற்றையும் பகிர்ந்துகொள்கின்றேன்.

பத்திரிகைகள் , சஞ்சிகைகளின் ஆசிரியர்கள் எழுத்தாளர்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் ஆக்கபூர்வமாக இருப்பவர்கள். எழுத்தாளர்களின் ஆரம்பக் காலகட்டங்களில் அவர்களது ஆதரவும், ஊக்கமும் பெரிதும் முக்கியமானவை என்பதற்கோர் உதாரணம் 'சுடர்' ஆசிரியர் கனகசிங்கம்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. மெய்நிகர் சிறப்பு நிகழ்வு: பொன்விழா - தாமரைச்செல்வியின் எழுத்தும் வாழ்வும்!
  2. இலங்கை தேசிய சாகித்திய விழாவில் 'சாகித்தியரத்னா' விருது பெறும் எழுத்தாளர் க. சட்டநாதன் - முருகபூபதி -
  3. பேராதனைப் பல்கலைக்கழக ஆங்கில இலக்கியச் சங்க ஏற்பாட்டில் கவிதை வாசிப்பு மற்றும் உரையாடல்: வரலாறாகவும் ஜனநாயகமாகவும் கவிதை! - தகவல்: செல்லத்துரை சுதர்சன் -
  4. பெண்: சாதியா, வர்க்கமா அல்லது ஒடுக்கப்பட்ட பாலினமா? - மூலம்: எவேலின் ரீட் | ஆங்கிலவழித் தமிழில் : இர. மணிமேகலை, இணைப்பேராசிரியர் & துறைத்தலைவர், பூசாகோஅர. கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர் -641004, தமிழகம், இந்தியா -
  5. பாரதியார் நினைவு தினக் கவிதை: பாருலகில் நீ வரமாய் இருக்கின்றாய் பாரதியே ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், ஆஸ்திரேலியா -
  6. அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் விழாவில் படைப்பிலக்கியவாதி தாமரைச்செல்விக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! - முருகபூபதி -
  7. பாரதியாரின் நினைவாக: 'திக்குகள் எட்டும் சிதறி' மழைக்கவிதை! - வ.ந.கிரிதரன் -
  8. இலண்டன் ஊடாகக் கங்காரு தேசம் – 2 - ஶ்ரீரஞ்சனி -
  9. ஆய்வு: மா.சு.செளந்தரராசன் சிறுகதைகளில் மகள் பாத்திரப் படைப்பு! - பி.ஆர்.இலட்சுமி (முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்) , வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை-117. -
  10. 'எதிர்நீச்சல்' மாரிமுத்து திடீர் மறைவு! - ஊர்க்குருவி -
  11. அவுஸ்திரேலியா – சிட்னியில் 23 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா - முருகபூபதி -
  12. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் பற்றிய சானல் 4 வெளியிட்ட காணொளி! - ஊருலாத்தி -
  13. 'மாமன்னன்' விட்ட பிழையும், சரியும்! - ஊருலாத்தி -
  14. நீர்கொழும்பு மாண்மியம்- ஒரு சந்திப்பும் சில நினைவுகளும்! - பூங்கோதை -
பக்கம் 40 / 104
  • முதல்
  • முந்தைய
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • அடுத்த
  • கடைசி