செல்வச்சந்நிதியும் சித்தர்களும் - ஒர் ஆரம்ப உசாவல் - கலாநிதி சு. குணேஸ்வரன் -

- சமாதிகள் அமைந்திருக்கும் சூழல் -
அறிமுகம்
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் தொன்மையும் அருட்பெருமையும் வாய்ந்தது. இவ் ஆலய வரலாற்றுடன் சித்தர்களும் இணைத்துப் பேசப்படுகின்றனர். செல்வச்சந்நிதிக்கு அருகில் தெற்குப் புறமாக கரும்பாவளியில் அமைந்துள்ள சித்தர்களின் சமாதிகள் இவற்றை உறுதி செய்கின்றன. செல்வச்சந்நிதி ஆலயத்தின் தொன்மை, அதன் வழிபாட்டு முறை, அங்கு வாழ்ந்த சித்தர்கள், அவர்களின் சமாதிகள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
ஆரம்பகாலத்தில் ஆலயத்தின் அருகே ஓடிய ஆறு ‘வல்லியாறு’ என அழைக்கப்பட்டது. இது சோழர் வரலாற்றுக்குப் பின்னரே ‘தொண்டைமானாறு’ என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டது. ‘படைக்கோயில்’ ஆகிய கதிர்காமத்துடன் தொடர்புபடுத்தி சந்நிதியும் நோக்கப்படுவதன் ஊடாக வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொடக்கம் முருக வழிபாடு இங்கு நிலவி வந்துள்ளமையை இப்பிரதேசத்தின் இயற்கைச் சூழமைவும் வெளிப்படுத்துகின்றது.
ஈழத்தில் உள்ள முருகன் கோயில்களில் ஆகமமரபு சார்ந்தும் ஆகமமரபு சாராமலும் இரண்டு வகையான வழிபாட்டு மரபுகள் நிலவி வந்துள்ளன. கதிர்காமம், செல்வச்சந்நிதி, மண்டூர் கந்தசாமி ஆகியவை ஆகம மரபு சாராத பூசை முறைகளைக் கொண்டமைந்தவை. செல்வச்சந்நிதியில் அந்தணர் மரபல்லாதவர்கள் பூசை செய்கின்றனர். கதிர்காமத்தில் சிங்கள வேடுவர் பரம்பரையினர் பூசை செய்கின்றனர். இவர்கள் ‘கப்புறாளைமார்’ என அழைக்கப்படுவர். “மட்டக்களப்பு மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் இன்னுமொரு முருகன் ஆலயம் சித்தாண்டிக் கந்தசுவாமி கோயிலாகும். இதுவும் ஒரு திருப்படைக் கோயிலாகும். இக்கோயிலை ஆரம்பத்தில் வேடுவரும், பின்னர் சித்தர் எனப்படும் ஆண்டியும் வழிபாடு செய்து வந்தமையினால் சித்தாண்டி எனப் பெயர் பெற்றதாக ஒரு ஐதீகம் நிலவுகின்றது.” (1) இவ்வகையில் இம்மூன்று முருகன் கோயில்களிலும் ஆகமம் சாராத வழிபாட்டு மரபு நிலவி வருவதோடு அவை அந்தணர் அல்லாதவர்களால் பூசை செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடற்பாலது.


வானில் நிகழும் பல்வேறு விதமான செயல்பாட்டினை ஆராயும் இயலே ’வானியல்’ என்று அழைத்தனர். பண்டைய தமிழர்கள் வானியல் அறிவு நிரம்பப் பெற்று இருந்தனர் என்பதை பழந்தமிழ் இலக்கியங்களின் வழி அறிய முடிகிறது. வானத்தில் நாள்தோறும் நிகழ்கின்ற வானியல் நிகழ்வுகளையும், மாற்றங்களையும், கூர்ந்து கவனித்து வானியல் தொடர்பான சிந்தனைகளை இவ்வுலகத்திற்கு எடுத்து இயம்பினார்கள். கணியன் பூங்குன்றனார், கணிமேதாவியார், பக்குடுக்கை நக்கண்ணையார் போன்ற புலவர்கள் வானியல் துறையில் சிறந்து விளங்கினர். வானில் ஏற்படும் மாறுபாடுகள் குறித்துக் கம்பராமாயணத்தில் கூறப்பட்டிருந்தாலும் சந்திர கிரகணம், சூரிய கிரகணம் குறித்துக் கம்பர் கூறியுள்ள கருத்துக்களை ஆராய்வோம்.
சொற்கள் அற்ற தொடர் அமைப்பே தகவல்தொடர்பியல் கூறாக அமைகின்றது. இதில் தன்னுடைய கருத்துக்கள், எண்ணங்கள், மனநிலை, அறிவு, நடத்தை போன்றவற்றை மற்றவரிடம் தெரிவிக்க இச்செய்தி பரிமாற்ற புலப்பாட்டு முறைமைகளைக் கையாளுகின்றோம். மேலும் உடலலைசவுகள், உணர்ச்சி வெளிப்பாடுகள், குரலொலி போன்றவற்றின் மூலம் நேரடியாகவோ, தனியாகவோ (அல்லது) கூட்டமாகவோ செய்திகள் பரிமாற்றப்படுகின்றன. இது குறியீட்டு அடிப்படையில் படமாகவோ, சொற்களாகவோ, உடலசைவாகவோ இடம்பெறும். அடுத்தவரின் மனதைப் பாதிக்கச் செய்யும் செயல்முறைகள் இங்கு மிகுதிபட அமைகின்றன. ஆதியில்மனிதன் சீழ்க்கை ஒலி எழுப்புதல், கூவியழைத்தல், புகை எழுப்புதல், பறையடித்தல், மணியடித்தல், தீயம்புகளை வானில் எறிதல் போன்றவற்றின் வாயிலாகத் தனது கருத்தை எடுத்தியம்பினான். காலமாற்றத்தால் தகவல் தொடர்பியல் வழி இணையத்தின் வழி செய்திகள் விரைவில் பரிமாற்றப்பட்டு வருகின்றது. ‘திருக்கைலாய ஞான உலாவில்’ இடம்பெறும் தலைவியின் மனநிலை செய்திப் பரிமாற்ற அடிப்படையில் ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகின்றது.


ஒர் உலகப் புகழ் பெற்ற மனிதனின் வாழ்க்கை வரலாற்றை மிகத் தெளிவாகவும் புனைவுக்குரிய பாங்குடனும் நகர்த்தும் பாங்கு சிறப்பாக அமைந்துள்ளது. “பல்லாயிரக் கணக்கான பல இலட்சக் கணக்கான மக்களைக் கொன்றொழித்து அவர்களது சொத்து, சுகம் அனைத்தையும் அழித்து தனியொருவனின் அகம்பாவத்தை ஆணவத்தை வெற்றியென்று கொண்டாடியவர்களை வீரர்கள் என்று வரலாற்றில் வரைந்து வைத்தவர்கள் சாதித்தது என்ன? வெறும் ஜாலமாக முடிந்து ஒரு பிடி மண்ணிலும் கலவாமல் மறைந்து போனது அலெக்சாண்டரின் ஆணவம்” கணிசமான நாடகப் பிரதிகள் போர் குறித்தவையாக அமைந்திருப்பதனால் இக்கூற்று பொருந்துவதாகவே அமைந்துள்ளது.



இலக்கியம் என்பது மனிதனைப் பற்றியும் இயற்கையைப் பற்றியும் வெளியாகும் வெறும் சொல் மட்டும் இல்லை. மனித வாழ்வு எத்தனை அளவெல்லாம் விரிவடைய முடியுமோ அதனை விளக்கிக் காட்டும் மெய்யுரை. அழகான மனோநிலைகள். அரிதரிதான உணர்ச்சிகள், மகத்தான கனவுகள், ஆழ்ந்தகன்ற சித்தாந்தம், அறிவரிய இலட்சியம் போன்றவைகளை உள்ளடக்கிய அமுதசுரபியே இலக்கியம். இலக்கியத்தைப் படைக்க விரும்பும் படைப்பாளிகள் சமூகத்தில் காணலாகும் ஏற்றத்தாழ்வுகள், குறைநிறைகள், வாழ்க்கைப் போக்குகள் ஆகிய பலவற்றையும் கண்டு அவற்றைத் தமது சொந்தப்பட்டறிவோடு இணைத்துக் கூறுவர். இவ்வகையில், மிகச் சிறந்து விளங்கியவர் மேலாண்மை பொன்னுச்சாமி ஆவார். இவர் எழுதிய சிறுகதைகளில் பெண்களின் அவல நிலைகளை எடுத்துக்காட்டுகிறார். இவர் பொருளாதாரத்தின் பங்களிப்புதான் பெண்ணுரிமையின் முதல் படிக்கட்டு. எந்தெந்தச்சமூகங்களில் பெண்கள் உழைப்பதற்கு ஊக்கப்படுத்தப்படுகிறார்களோ அந்தச் சமூகங்களின் பொருாதாரம் விரைவாக வளரும். சமூக நீதியின் முதல் விதை அப்போதுதான் முளைக்கும் என்று சொல்லுகின்றார். இவர் தமது சிறுகதை இலக்கியங்களில் காலந்தோறும் உழைக்கும் பெண்களை படம் பிடித்து காட்டுவதை விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.



நான் முதன் முதலில் எழுத்தாளர் மாஸ்டர் சிவலிங்கத்தை அறிந்து கொண்டது எழுபதுகளில் அவர் சிந்தாமணியின் வாரவெளியீட்டில் வெளியான சிறுவர் சிந்தாமணியில் எழுதிய சிறுவர் புனைகதைகள் மூலம்தான். அழகான ஓவியங்களுடன் பிரசுரமான் அக்கதைகள் மூலம் என்னை மிகவும் கவர்ந்து விட்டார் மாஸ்டர் சிவலிங்கம். அவரது எழுத்து நடையும், உலகின் பல பாகங்களிலிருந்தும் பெற்ற கதைகளை அவர் சிறுவர்களுக்காக எழுதிய பாங்கும் எனக்கு அவரைத் தமிழகத்தின் சிறுவர் இலக்கியத்துக்கு மிகப்பெரும் பங்களிப்பு செய்தவரான வாண்டுமாமாவுடன் ஒப்பிட வைத்தன். உண்மையில் அவர் என்னைப்பொறுத்தவரையில் ஈழத்து வாண்டுமாமாதான்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









