பயனுள்ள மீள்பிரசுரம்: போருற்ற உலகு! - பா.ரவீந்திரன் -
[ நல்லதொரு கட்டுரை. தற்போது நடைபெறும் ருஷ்யா & உக்ரைன் மோதலைப் புரிந்துகொள்ள உதவும் கட்டுரை. உக்ரைன் தன் பூகோள கேந்திர முக்கியத்துவத்தைக் கவனத்தில் எடுக்காது பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதும், நேட்டோ நாடுகள் வார்சோ நாடுகளின்கூட்டணி கலைக்கப்பட்ட பின்னரும் ருஷ்யாவுக்கெதிரான விஸ்தரிப்பினை அதிகரித்து வந்ததும் இம்மோதலுக்கு முக்கிய காரணங்கள். போருக்கான காரணங்கள் எவையாயிருப்பினும் பாதிக்கப்படுவது உக்ரைன் நாட்டு அப்பாவி மக்களும், உக்ரைன், ருஷ்யாப் போர்வீரர்களும்தாம். விரைவில் யுத்தம் முடிவுக்கு வரட்டும். உக்ரைன் நடுநிலை நாடாக இருப்பது இம்மோதலை முடிவுக்குக் கொண்டு வரும். - பதிவுகள்.காம்]

யுத்தம் எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. யுத்தம் என்பது சண்டை மட்டுமல்ல. பெரும் உயிரழிவுகளையும் அங்கவீனமுறும் மக்கள் கூட்டத்தையும் உளவியல் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. அத்தோடு, அது பொருளாதார அழிவுகளை ஏற்படுத்துகிறது. பண்பாடுகளை அதன் விழுமியங்களை மரபுகளை சிதைத்துவிடுகிறது. இயற்கை வளங்களை அழிக்கிறது. இவ்வாறாக ஒரு சமூகத்தை அதன் மரபுத் தொடர்ச்சியிலிருந்து, இயல்பான வளர்ச்சிநிலையிலிருந்து முறித்து முடமாக்குகிறது. எனவே யுத்தத்துக்கு எதிராக நிற்றல் எனபது மிக அடிப்படையானது.
போருக்கு எதிராக நிற்றல் என்பது போரை அதை நிகழ்த்துபவர்மீதும் அதை உருவாக்கி நலன்பெறும் திட்டமிட்ட நாடுகள், சக்திகள் மீதுமான கூட்டு எதிர்ப்பாக இருக்க வேண்டும். ஆனால் நடப்பது அந்த நிலையை உருவாக்குபவர்களின் சக்திமிக்க ஊடகங்களும் குயுக்திகளும் மக்களை மூளைச்சலவை செய்து தம்மை காப்பாறிக்கொள்கின்றன. இந்தப் போரில் மேற்குலகினதும் அமெரிக்காவினதும் பெரும் பாத்திரத்தை மீறி ரசியாவுக்கு மட்டும் விரல் நீட்டுவது பகுதியளவே சரியாக இருக்கும். (இதை போரை ஆதரித்தல் என மொழியெர்க்காமல் இருந்தால் சரிதான்).
உக்ரைன் யுத்தத்தில் ரசியா படைகள் உட்புகுந்ததால் அதுவே குவிமையப்படுத்தப்படுவது நிகழ்கிறது. ஆனால் நாம் அதற்குள் மட்டும் நின்றுவிட முடியாது. இந் நிலை வரலாற்று ரீதியில் எப்படி நிகழ்ந்தது என்ற பார்வையையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதுவே எமது போரெதிர்ப்பு மனநிலையை ஆரோக்கியமாக வளர்த்துச் செல்லும்.


தற்போதுள்ள அரசியல்வாதிகளில் மிகுந்த அரசியல் ஞானம் மிக்கவராக (கல்வி, அரசியல்) இவரை என்னால் அடையாளம் காண முடியும். இவர் மார்க்சிய அறிஞர்களில் ஒருவர். எண்பதுகளில் இவரது மார்க்சியக் கட்டுரைகளை 'குமரன் ' சஞ்சிகையில் வாசித்திருக்கின்றேன். ஆனால் இவர் தற்போது இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கியமானவர்களில் ஒருவர் அல்லர். இவர் தற்போது தனது அனுபவங்களைக் கடைந்தெடுத்து உருவான ஞானத்தை வெளிப்படுத்தும் எண்ணங்களை வெளிப்படுததி வருகின்றார்.
“ அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா " எனும் இந்த வாசகம் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி அவர்கள் ஒரு திரைப்படத்தில் பேசி எமையெல்லாம் சிரிக்க வைத்தார். எதற்காக இந்நேரத்தில் நான் இதைக் கூறுகிறேன் என்று நீங்கள் எண்ணலாம். இன்றைய இங்கிலாந்தின் அரசியல் அரங்கத்தில் மேடையேறும் காட்சிகளுக்கும் இவ்வாசகத்துக்கும் பொருத்தமிருக்கும் எனும் எனது பிரதிபலிப்பே அதற்குக் காரணமாகும். ப்ரெக்ஸிட் எனும் படகில் ஏறி தனது அரசியல் பயணத்தின் இலட்சியமான பிரதமர் எனும் பதவியைத் தனதாக்கிக் கொண்டார் எமது பிரதமர் பொரிஸ் ஜோன்சன். மிகவும் உற்சாகத்துடன் ப்ரெக்ஸிட் எனும் சிக்கலுக்குத் தீர்வு கண்டு விட்டேன் என்ற கோஷத்துடன் ஓரளவு மக்கள் ஆதரவுடன் இடைத்தேர்தலைச் சந்தித்த அவர் 80 பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சியமைத்துக் கொண்டார்.
கண்டாவளை மருத்துவர் பிரியாந்தினி கமலசிங்கம் தனது முகநூற் பக்கத்தில் பதிவொன்றினை இட்டிருக்கின்றார். அவருக்கு ஏற்பட்ட மிரட்டல்கள் பற்றிய பதிவு. அவரது துணிச்சலை, சமுதாயப்பிரக்ஞையை வெளிப்படுத்தும் அதே சமயம் அதன் இறுதி வரிகள் கவலையையும் தரும் பதிவு.
தேனீ இணைய இதழ் ஆசிரியரும் , சமூக ,அரசியல் செயற்பாட்டாளருமான 'ஜெமினி கங்காதரன்' அவர்கள் மறைந்த செய்தியினை முகநூல் நண்பர்கள் மூலம் அறிந்தேன். துயருற்றேன். தனி ஒருவராக, தன் உழைப்பை முழுமையாக வழங்கி இணைய இதழொன்றினை நடத்துவதிலுள்ள சிரமங்களையும், கடும் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பினையும் நான் அறிவேன்.அதனால் அவர் மேல் வேறெந்த விடயத்தையும் விட மிகுந்த மதிப்புண்டு. அண்மையில் பதிவுகள் இணைய இதழில் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் ஜெமினி அவர்கள் பற்றி எழுதியபோதுதான் முதன் முதலில் அவர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததை அறிந்தேன். அக்கட்டுரையினை இங்கும் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டேன்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஓருவரும் சர்வதேச ரீதியாக மதிக்கப்படும் ''மாஓ பாதை” கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிரேஸ்ட ஆலோசகராக விளங்கியவருமான தோழர் என். சண்முகதாசன் பிறந்து நூறாண்டுகளாகின்றன. இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோதே பல்கலைக்கழகப் படிப்பைமுடித்து வெளியேறி கட்சியின் முழுநேர ஊழியனாகச் சேர்ந்துகொண்ட தோழர் நா. சண்முகதாசனின் அரசியல் வாழ்வு இலங்கைப் பொதுவுடமை இயக்கத்துடன் சமாந்தரமானது. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஸ்ராலின் – ரொட்ஸ்கி தத்துவார்த்தப் பிரச்சினை எழுந்தபோதும் பின்னரும் ஸ்ராலின் கொள்கைகளை வலியுறுத்தி முன்னெடுத்து தோழர் சண் புகழ்பெற்றார். அன்று வலிமைமிக்க தொழிற்சங்கமாக விளங்கிய இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக விளங்கினார். 1953 -ம் ஆண்டு ஆட்சியை ஆட்டங்காணவைத்த 'கர்த்தாலை' வெற்றிகரமாக நடாத்த முக்கிய பங்களித்தவர்.
'மீண்டுமொரு தலித் இனத்து பதின்ம வயதுப் பெண்ணொருத்தியை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நான்கு பேர் கூட்டாகப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கி, முதுகெலும்பை உடைத்து, நாக்கை அறுத்து, கால்களை அடித்து , உடைத்துத் துன்புறுத்தியுள்ளனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப்பெண் இறந்திருக்கின்றார். பொலிசார் அப்பெண்ணின் குடும்பத்தவருக்குக் கூட அறிவிக்காமல் அப்பெண்ணின் உடலை எரித்து இறுதிச்சடங்கை முடித்துள்ளார்கள். '
இலங்கையில் நிலவும் அரசியற் சூழல் திருப்தி தருவதாகவில்லை. ஏற்கனவே நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. சத்தியாக்கிரகங்கள், ஹர்த்தால்கள் என்று ஆரம்பித்து , ஆயுதப்போராட்டத்தில் தொடர்ந்து பேரழிவுடன் முள்ளி வாய்க்காலில் முடிவடைந்த யுத்தம்தான் நினைவுக்கு வருகின்றது. இன்று யுத்தம் முடிந்து 11 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அனைவரும் கடந்த காலத்தை மறந்துவிட்டார்களோ என்று நினைக்கத்தோன்றுகின்றது. மீண்டும் அரசியல்வாதிகள் தம் இருப்பைத் தக்க வைப்பதற்காக உணர்ச்சி அரசியலில் இறங்கி விட்டார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது. மீண்டும் நிலை பழைய யுத்தச்சூழலுக்குச் செல்லாமலிருக்க வேண்டுமென்றால் பின்வரும் விடயங்கள் நடைபெற வேண்டும்:

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









